Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தினம் ஒரு கவிதை

Featured Replies

  • தொடங்கியவர்

இன்றைய கவிதை 17.08.2007

புலித்தமிழடா எம் ஈழத்தமிழ் !

உரத்த தமிழ்

உணர்ச்சித்தமிழ்

உலகத்தமிழ்

உறவாடிடும் தமிழ்

கறுத்த தோலுடன்

களமாடி வெல்லும்

புலித்தமிழடா எம் தமிழ்

வாழும்போதும்

வீழும்போதும்

அடக்கும்போதும்

அடங்கும்போதும்

வீரம் பறைசாற்றும்

விண்ணுயர்ந்த தமிழடா

எம் புலித்தமிழ்

ஆழிக்கடல் அழித்தாலும்

ஆகாயம் இடிந்து மறைந்தாலும்

அன்னியரால் களவு போனாலும்

அடையாளம் மாறாத

மானத்தமிழடா - அது

எம் அண்ணன் காட்டிய

புலித்தமிழடா !

பகைதலையெடுக்க

தலைவனாய் வந்தவன்

தனயனாய் என்னை வளர்த்தவன்

தமிழினை ஊனாக்கி

வீரப்பால் ஊட்டி

வீரியத்துடன் எதிரியழிக்க

வித்தைகள் பல

காட்டி வைத்தவன் - எம்

புலித்தமிழடா

ஈழத்தமிழடா !

Edited by Paranee

  • தொடங்கியவர்

இன்றைய கவிதை 20.08.2007

புரியவில்லை !

கனவுகள் கண்டு வந்தேன்

கடமையை மறந்து நின்றேன்

அவசர உலகினிலே

அந்தரத்தில் பறந்து நின்றேன்

விண்ணைத்தொடத்துடிக்கும்

விலைவாசி கண்டு

மண்ணைத்தொட்டு கெஞ்சுகின்றேன்

மரியாதை காப்பாற்றென்று

சுயநலம் தலைக்கேறியதால்

சுயமிழந்து அலைகின்றேன்

பிறர்நலம் அறியாமல்

பித்தனாய் பிதற்றுகின்றேன்

அறியாமை சூழ்ந்ததனால்

அகவிருளில் வாழ்கின்றேன்

ஓளித்தீபம் ஏற்ற இவ்வுலகில்

ஒரு தீக்குச்சி எங்குண்டோ ?

பொய்சொல்லி மாள்கின்றேன்

மெய்யென்ற பொய்யிற்காய் - தினம்

கைசேரும் பணத்தினையும்

கருமியாய் சேர்க்கின்றேன்

சாபம்தான் என்வாழ்வை

சடுதியிலே மாற்றியதோ ?

மோகம்தான் என்நெஞ்சை

முள்முள்ளாய் குத்தியதோ ?

ஞாபகத்தில் ஏதுமில்லை

நான்யாரோ புரியவில்லை

வழுக்கை விழுந்த வாலிபத்தை - தினம்

வலி;ந்து வலி;ந்து தேடுகின்றேன்

Edited by Paranee

கண்கள் விரித்து

கவிதை சொன்னவள் நீ..

முன்னும் பின்னும் வந்து

முடிவு கேட்டவள் நீ

சிரிப்பால் சிந்தை புகுந்து

சீர்குலைத்தவள் நீ

ஜென்மங்கள் ஏழும்

இணைபிரியேனென்று உரைத்தவள் நீ

நீ இன்றி இவ்வுலகில்

வாழ்வில்லை என்று உறுதி சொன்னவள் நீ

இதழ்களால் இதழ்களை

இறுக்கி இழுத்து

இப்படியே இறந்து போவோமா என்றவள் நீ

வார்த்தையால் கடிந்ததற்கு

வரிவரியாய் சூடுபோட்டு

வலியில் துடித்தவள் நீ

எனக்கு பிடிக்காத வண்ணச்

சட்டையைக் கிழித்து எறிந்தவள் நீ

ஆனால் நீ..இன்று

இன்னொருவன் மனைவி..

என்னை மறுத்ததும்..

உன் மனதிற்கு

ஒப்பாதவனை மணந்ததும்..

இன்னும் ஏனென

எனக்குப் புரியவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் அன்பே புரியவில்லை!!.

இன்னும் புரியாமல் இன்றும்

தவிக்கின்றேன்! அந்த நாள்

ஏனடா வந்தது?!

என் செல்லக் கன்னம் தொட்டு

வண்ணக் கவிதை மெட்டு!

நீ படிக்க! நான் இரசிக்க!

மெய் மறந்து நாம் கிடக்க!

எப்படி வந்தான் என்

அண்ணன் அங்கு?!!

புரியவில்லை அன்பே!

என் மனசெல்லாம் மரண

நொடிகள்! திரையில் காதல்

ஜோடி சேரத் தவம் கிடக்கும்

இவர்கள்!! ஏனடா எம் காதல்

புரிய மறுக்கின்றார்களா?இல்லை

புரிந்தும் நடிக்கின்றார்களா?!!

இன்னும் புரியவே இல்லை

எனக்கு!.

  • தொடங்கியவர்

இன்றைய கவிதை 21.08.2007

இரவுகள் விடிவதில்லை

ஓயாமல் நாய் குரைக்க

ஓலைப்பாயில் துடித்த நாட்கள்

காலடிச்சத்தத்தில்

கலைந்து கழிந்தது

வாலிப காலம்

எப்போது கதவு தட்டும்

இடிவீழ்ந்து என்னுயிர் அழியும்

விண்பாயும் எறிகணை

மண்தாவுமா ?

ஏக்கத்துடன் இறந்த நாட்கள்

வானுயர வீடுகட்டி

மரத்தடியில் உறங்கியதும்

பங்கருக்குள் பதுங்கியதும்

நம் ஈழத்தமிழனைப்போல்

யாரேனும் அனுபவித்தனரோ ?

சுகமான இரவுகள்

சொர்ப்பன இரவுகள்

காமத்தை வென்று நின்ற

கல்யாண இரவுகள்

எத்தனையோ கழிந்திருந்தும்

அன்றைய ராத்திரியில்

சிங்களக்காடையினால்

சிதைபட்ட நினைவுகள்

சிந்தையை விட்டகலவில்லை

இரவெல்லாம் சூரியன்

வெளுப்பாக்கியெறிந்தாலும்

வடுக்கள் இன்னும்

மறையவே இல்லை

அஞ்சியஞ்சி வாழ்கின்றோம்

அகதியாகி அன்னியமாகி

ஆண்டவனிடம் தஞ்சமாகி

அண்ணனின் நெஞ்சுறுதியால் - இன்றும்

திடத்துடன் வாழ்கின்றோம்

சூரியனும் ஓர்நாள்

வெட்கித்து நாணும்

விடியல் எம்வாசல்

விரைந்தே வந்தேகும்

Edited by Paranee

பச்சிளங்குழந்தை..

பாலுக்கழுகையில்.....

பெற்றிட்ட அன்னையின்

இரவுகள் விடிவதில்லை

காலையில்க் கேள்விகள்

எழுமென்ற நினைவில்

கடன்பட்ட மனிதன்

இரவுகள் விடிவதில்லை

அழகாய்க்குமரி..

அவிழ்த்திட்ட புன்னகை

அகத்தே நுழைய..

காளையவனின்

இரவுகள் விடிவதில்லை

மனதைத் தொட்டவன்

முத்தம் இட்டால்

மங்கையின் ஏட்டில்

இரவுகள் விடிவதில்லை

பரீட்சை முடிவு

நாளை என்றால்

படித்த மாணவன்

இரவுகள் விடிவதில்லை

தேர்தலினிறுதில் கதிரை

ஏறிடக் காத்து இருக்கும்...

மந்திரியாரின்

இரவுகள் விடிவதில்லை

திருமண பந்தக்

கடலுக்குள் குதித்து

முதலிரவிலின்பக் முத்துக்குளிக்கும்

புதுத்தம்பதியார்க்கும்

இரவுகள் விடிவதில்லை

மல்லிகை மணம் கமழும்

மாலையில் - என்

மெல்லிடை தேவதை

தென்றலின் தேரேறி

இதய - இல்லத்துள்

புகுந்திடுவாள் ......!

மனமெல்லாம் மணம் கமழும்

பூம் பாதம் நடை போட

சில்லென மனம் குளிரும்...

இடையிடையே...

இனம்புரியா இசையொன்று

எங்கிருந்தோ

என்னுள் இறங்கும்...!

இசைப் பா ள் அவள் எனை

இசைக்கும் ஏற்றபடி

இசைந்தும் ஆ(ட்)டிடுவாள் ...!

விழியோரம் நீர் திரண்டு

மணி...மணி யாய் உருவெடுத்து

அவள் பாதக் கொலுசாகும்...!

இரவுகள் விடிவதில்லை- என்

இதய தேவதையின்

இனிய நற் தாண்டவத்தால் ...! :P

Edited by gowrybalan

  • தொடங்கியவர்

இன்றைய கவிதை 22.08.2007

உறவாடி தொலைந்தது

தொலைத்துவிட்டு தவிக்கின்றேன்

தொலைந்த இடம் தெரியவில்லை

படுக்கையிலும் ஓன்றாகி

பாசறையிலும் தோளோடு தோளாகி

பழகிவந்தது - இன்று

பறித்தெடுத்து சென்றுவிட்டான்

அம்மா அழைத்தாலும்

அண்ணா தங்கை அழைத்தாலும்

அயராது உறவாடி - என்

அன்பை புரியவைத்தது

விலைகொடுத்து வாங்கவில்லை

அன்பின் விலையாக கிடைத்தது

அரிதென்று பலர் சொல்ல

அளவிலா மகிழ்வு தந்தது

பார்க்கும் விழிகளெல்லாம்

பொறாமை கொள்ளவைத்து

என்னை பரவசத்தில் வைத்து - இன்று

பரிதவிக்க வைத்து நிற்கின்றது

இன்னுமா புரியவில்லை

என்

கைத்தொலைபேசியைத்தான்

கைநழுவ விட்டுவிட்டு

கவலையுடன் இருக்கின்றேன்

Edited by Paranee

  • தொடங்கியவர்

(நேற்று) இன்றைய கவிதை 23.08.2007

கொல்லாதே !

ரகசியமாய் எனை

ரசித்தவளே

ராத்திரியில் என்

தூக்கம் பறித்தவளே

கனவாயும்

நினைவாயும்

எனக்குள் நிறைந்தவளே

கண்மூடினால்

கவிமழை செரிபவளே

பிரிந்தும் என்னை

பிழிபவளே

என்பெல்லாம்

காய்ச்சால்

ஏனடி எனக்கு

எப்போதும் உன்

பேச்சே எனக்கு

தப்பாமல் என்னோடு

கலந்துவிடு

தயங்காமல் உன்

காதல் உரைத்துவிடு

முப்பொழுதும் என்னோடு

ஊடலிடு

முடிவினிலினே

என் மார்பில் மூச்சைவிடு

ஒவ்வொரு உயிருக்கும்

உணர்வுகளுண்டு கொல்லாதே...

ஒவ்வொரு உயிருக்கும்

உறவுகள் உண்டு கொல்லாதே...

ஒவ்வொரு உயிருக்கும்

ஆசைகள் உண்டு கொல்லாதே...

ஒவ்வொரு உயிருக்கும்

இலட்சியம் உண்டு கொல்லாதே...

ஒவ்வொரு உயிருக்கும்

ஏக்கங்கள் உண்டு கொல்லாதே...

ஒவ்வொரு உயிருக்கும்

வலிகள் உண்டு கொல்லாதே...

ஒவ்வொரு உயிருக்கும்

வேதனை தெரியும் கொல்லாதே...

நீயும் மானிடன்தானே கொல்லாதே..

தாய் வயிற்றினின்றுதானே

பிறந்தாய் கொல்லாதே..

உன் தாய்போல் பெண்களைக்கொல்லாதே..

உன் தந்தைபோல் வயோதிபம் கொல்லாதே..

உன் குழந்தைபோல் மழலைகள் கொல்லாதே..

கொல்லாதே.. கொல்லாதே.

மனிதனாய்ப் பிறந்து மிருகமாய்.. மாறி

மனிதனை நீயே கொல்லாதே..

  • தொடங்கியவர்

இன்றைய கவிதை 24.08.2007

கவியே உன்னை கவராமல் போவேனா ?

வானவில்லின் மகளே

வர்ணங்கள் தருவாயா

மலர்களின் ராணியே

உன் மகரந்தம் தருவாயா

கனிகளின் தேவியே

உன் சுவையிதழ் தருவாயா

இயற்கையின் மகளே

உன் இளமையினை தருவாயா

பூக்கள் மறுத்தாலும்

ப+மி பிளந்தாலும்

பூவே உன் புன்னகை

திருடாமல் போவேனா ?

வானம் இடிந்தாலும்

என் வாலிபம் குறைந்தாலும்

வர்ணங்கள் வாங்காமல்

வாடிப்போவேனா ?

தீவிழுந்து இவ்வுலகழிந்தாலும்

கனியே உன்னிதழ்

கவராமல் போவேனா ?

உலகவெப்பத்தால் - நான்

உருக்குலைந்து போனாலும்

ஒருநொடி உன்மடியில்

உன்னழகு பருகாமல் போவேனா ?

மோகத்தின் அர்த்தம்

நீதானென்று முற்றாகப்புரிந்தபின்

மோட்சம் காணாமல் முடிந்துவோனோ ?

காலம் தன் சக்கரத்தால் - என்னை

தூக்கியெறிந்தாலும் கவியே

உன்னை தொடாமல் போவேனா ?

  • தொடங்கியவர்

இன்றைய கவிதை 31.08.2007

தண்டவாளம் இணைந்துகொண்டால். . .

எந்த நொடி என்னிதயம்

வலி உணர்கின்றதோ

எந்த நொடி வலி மறைகின்றதோ

எந்தச்சூரியன் என்

விழிநிலவிற்கு வெளிச்சம் தந்ததோ

எந்தச்சூரியன் என்விழியை

குருடாக்கியதோ

அந்த வண்ணநிலவை

என் வாழ்வின் வசந்தத்தை

தங்க ரதத்தை

தரம் குறையாமல்

தைத்திங்களில்

கண்டுகொண்டேன்

காற்று மண்டலம்

மூர்ச்சையாகி

கனவுலகத்தினுள்

பிரவேசித்தேன்

நிஜமா ?

கிள்ளிப்பார்த்து

ஜயம் தெளிந்தேன்

ஊர் பிரிந்து

உறவறுந்து

உலகெல்லாம் அலைந்து

பனி மழை பாராமல்

சுடும் வெயில் தாங்காமல்

துவண்டு துடித்து

யாரிற்காக உயிர் காத்தேனோ !

கண்டுகொண்டேன்

கண்குளிரக் கண்டுகொண்டேன்

கண்களிற்குள் கைதும் செய்தேன்

தேவதையை தேரில் ஏற்றி

தேவலோகம் அழைத்துச்சென்றேன்

மண்ணுலகை விட்டொதுங்கி

விண்ணுலகை வீடாக்கினேன்

விண்மீன்களை தினம் புசித்து

என்

பெண்மீனையும் தினம் ரசித்தேன்

Edited by Paranee

  • தொடங்கியவர்

சிறு திருத்தம். நேரப்பற்றாக்குறை காரணமாக தினம் ஓரு கவிதை இன்று முதல் வாரம் ஓரு கவிதையாக மாற்றம் அடைகின்றது. அதற்காக இனி மாதம் ஓரு கவிதையாக மாறுமா ? என்று நக்கலடிக்ககூடாது.

இந்த வாரக்கவிதை 07.09.2007

தாயும் தமிழுமாய் . .

தினம் ஓரு புது வர்ணமாய்

நான் ஓளிர மாட்டேன்

தீண்டாமல் உன்னுடலை

நான் மறைய மாட்டேன்

கனவென்னும் புதையலினுள்

நான் விழவும் மாட்டேன்

வீழ்ந்தாலும் வெளியேறி

வெற்றியீட்டி நிற்பேன்

ஆயுள் முடிவதற்குள்

ஆகாயம் தொடுவேன்

அகங்காரம் இதுவல்ல

அடிமனதின் சத்தியம்

தேசத்தை மிளிரவைக்க

தீமைகளை ஓழிப்பேன்

தீண்டாமை மாற்றி - அங்கு

தேசியத்தை வைப்பேன்

கண்டவுடன் கைகூப்பி

கயவனையும் வளைப்பேன்

அவன் கருநாகமாக நின்றால்

கருவிலேயே அழிப்பேன்

தமிழ் என்றால் என் மூச்சை

தரத்தயங்கமாட்டேன்

தமிழ்காக்க பிறர் மூச்சை

தயங்காமல் பறிப்பேன்

தாயிற்காய் என்வாழ்வை

சிரம்தாழ்த்தி கொடுப்பேன்

தாயின்றி நானில்லை

தமிழின்றி என் பெயரில்லை

என் தாயும் தமிழும் ஒன்று..

தாய் என்னைப் பெற்றெடுத்தாள்..

தமிழ் என்னைத் தத்தெடுத்தது..

தாய் உதிரத்தோரோடு கலந்ததால்...

உடல் நோகும் போதெல்லாம்

அவரை நினைப்பேன் அழைப்பேன்..

தமிழ் உயிரோடு கலந்ததால்..

உயிர் நோகும் போதெல்லாம்..

தமிழை நினைக்காமலே அழைப்பேன்..

வேற்று நாட்டு ஜீவனத்தில்

வேலைப்பழுவில்.. தமிழை மறந்தேன்..

தாயை மறந்தேன் என்று சொல்வோர்கள்

ஏன் சாப்பிட மறப்பதில்லை

ஏன்..தூங்க மறப்பதில்லை

தமிழை வேற்றுமொழிக் கரையான்கள்..

வேகமாய் அரிக்கிறது..

பிள்ளை நிலாக்கள்.தமிழ்பபெருமை மறந்தது..

அம்மாவைத் தவிக்கவிட்டால்போல்..

தமிழையும் தவிக்கவிட்டு..

நாடகமும் நாட்டியமும்..

ஆங்கில உரையோடு..

அழகு பூசிப் போலி அம்மாக்களாய்..

நரக வாழக்கை

அம்மா..

உன்னையும்..

உயிரான தமிழையும் எப்படிக் காப்பாற்றுவேன்?.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.