Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேரரின் ஆடம்பரக் காரும் அரசியல் சர்ச்சையும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேரரின் ஆடம்பரக் காரும் அரசியல் சர்ச்சையும்

இன்று நாட்டு மக்களை எண்ணற்ற பிரச்சினைகள் திணறடித்துக் கொண்டிருக்கின்றன. இந்தப் பிரச்சினைகளில் எந்தவொன்றையுமே தணிப்பதற்கான வழிவகைகளைக் காண்பதற்கு வக்கில்லாத அரசியல்வாதிகள் தங்களது சந்தர்ப்பவாத கட்சி அரசியலை நடத்துவதற்கு கூட, மக்களின் குறைந்த பட்ச ஆதரவையேனும் பெறுவதற்கு பயன்படுத்தக்கூடிய பிரச்சினை எதுவென்பதை தெரிவுசெய்ய முடியாதவர்களாக இருக்கும் பரிதாபத்தைக் காண்கின்றோம். தீர்வையின்றி வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருக்கும் அனுமதிப் பத்திரத்தை ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவரான எல்லாவல மெத்தானந்த தேரர் துஷ்பிரயோகம் செய்ததாக எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த குற்றச்சாட்டை அடுத்து தென்னிலங்கை அரசியலில் மூண்டிருக்கும் சர்ச்சை குறித்து மக்களுக்கு எந்தளவுக்கு கரிசனை இருக்கிறதோ தெரியவில்லை. ஆனால், அரசியல்வாதிகள் அந்தச் சர்ச்சையை தணியவிடுவதற்குத் தயாராயில்லை. இந்த விவகாரம் தொடர்பில் தினமும் கொழும்பில் செய்தியாளர்கள் மகாநாடுகள் நடத்தப்பட்ட வண்ணமேயிருக்கின்றன.

எல்லாவல மெத்தானந்த தேரரிடமிருந்து ஆடம்பரக் காரை கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் வர்த்தகரான ஹேமந்த நிஷாந்த என்பவர் கடந்தவாரம் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தின் பின்னணியில் ஜாதிக ஹெல உறுமய இருப்பதாக விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டியிருக்கும் அதேவேளை, தங்களுக்கு எதிராக ஆட்கடத்தல் குற்றச்சாட்டைச் சுமத்தியமைக்காக விக்கிரமசிங்கவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்போவதாக ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த அமைச்சர் சம்பிக ரணவக்கவும் பிரசாரச் செயலாளர் உதய கம்மன்பிலவும் தெரிவித்திருக்கிறார்கள். ஜாதிக ஹெல உறுமய மீது சேறு பூசும் பிரசாரங்களின் ஒரு பகுதியாக வர்த்தகர் நிஷாந்த கடத்தல் நாடகத்தை ஐக்கிய தேசியக் கட்சிஅரங்கேற்றியதாகவும் அவ்விருவரும் குற்றஞ் சாட்டியிருக்கிறார்கள். பாராளுமன்றச் சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி எல்லாவெல மெத்தானந்த தேரரினால் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஆடம்பர பென்ஸ் காரில் அதைப் பயன்படுத்தும் வர்த்தகர் நிஷாந்த சகிதம் எதிர்க் கட்சித் தலைவர் பௌத்த வழிபாட்டுத் தலமொன்றுக்கு சென்று திரும்பிய காட்சியை கடந்தவாரம் பத்திரிகைகளில் காணக்கூடியதாக இருந்தது.

ஜாதிக ஹெல உறுமயவுக்கு பெருமளவு நிதியுதவியைச் செய்த வர்த்தகர் ஒருவரின் பாவனைக்கு அந்த பென்ஸ் காரை கொடுத்து உதவியதாகவும் அவ்வாறு கொடுக்காவிட்டால் தனக்கென ஒரு ஆடம்பரக் காரை கொள்வனவு செய்வதற்காக அந்த வர்த்தகர் (ஜாதிக ஹெல உறுமயவுக்கு நன்கொடையாக வழங்குவதற்கு வைத்திருந்த) பெருந்தொகைப் பணத்தை வீணே செலவு செய்திருக்க வேண்டியிருந்திருக்கும் என்றும் அமைச்சர் சம்பிக ரணவக்கவும் உதயகம்மன் பிலவும் கூறியிருக்கிறார்கள். ஆனால், எல்லாவெல மெத்தானந்த தேரரின் பென்ஸ் காரை வைத்திருக்கும் வர்த்தகரின் பெயரை இவர்கள் இருவரும் செய்தியாளர் மகாநாட்டில் தெரிவிக்க மறுத்துவிட்டனர். கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட வர்த்தகர் நிஷாந்த எதிர்க் கட்சித் தலைவரின் அலுவலகத்துக்கு வந்து அவரிடம் சத்தியக் கடதாசியொன்றையும் கையளித்திருக்கிறார். அண்மைக்காலத்தில் இலங்கையில் எத்தனையோ பேர் கடத்தப்பட்டிருக்கிறார்கள். எத்தனையோ பேர் காணாமல்போயிருக்கிறார்கள். ஆனால், எல்லாவெல மெத்தானந்த தேரரின் வாகனம் தொடர்பான சர்ச்சையில் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படும் ஆட்கடத்தல் போன்றதொரு நாடகபாணிச் சம்பவமொன்றை அண்மைக் காலத்தில் நாம் காணவில்லை.

இந்த விவகாரத்தில் இன்னொரு சுவாரஸ்யமான அம்சத்தை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. எல்லாவெல மெத்தானந்த தேரர் பாராளுமன்ற சிறப்புரிமையை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சுமத்தியதன் மூலம் எதிர்க் கட்சித் தலைவர் விக்கிரமசிங்க ஒட்டுமொத்தத்தில் மகா சங்கத்தையே அவமதித்துவிட்டார் என்று அரசாங்கம் அவரைச் சாடியது. அதற்காக நாட்டின் பல பாகங்களிலும் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியதைக் கண்டோம். தீர்வையின்றி வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் வழங்கிய அனுமதிப்பத்திரத்தை விற்பனை செய்திருந்தால் அது சிறப்புரிமை துஷ்பிரயோகம் மாத்திரமல்ல, சுங்க கட்டளைச் சட்ட விதிகளின் பிரகாரம் தண்டனைக்குரிய குற்றமுமாகும். அத்தகைய சிறப்புரிமைத் துஷ்பிரயோகத்தையும் தண்டனைக்குரிய குற்றத்தையும் எல்லாவல மெத்தானந்த தேரரோ அல்லது அவரது கட்சியைச் சேர்ந்த பிக்கு எம்.பி. மார்களோ செய்திருக்கமாட்டார்கள் என்று மக்களுக்குக் காட்டுவதற்காகத்தான் எதிர்க் கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சுதந்திரக் கட்சியினர் ஆர்ப்பாட்டங்களைச் செய்தனர்.

ஆனால், அரசாங்கத்தின் பிரதான பேச்சாளர்களில் ஒருவராக விளங்கும் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே பெரும்பாலான எம்.பி.க்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட (தீர்வையின்றி வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான) அனுமதிப்பத்திரங்களை விற்பனை செய்திருக்கிறார்கள் என்று தெரிவித்திருப்பதை இப்போது காணக்கூடியதாக இருக்கிறது. `எல்லாவல மெத்தானந்த தேரர் மாத்திரமல்ல, நாங்களும் கூட, எமக்கு வழங்கப்பட்ட கார் அனுமதிப்பத்திரங்களை விற்றுவிட்டோம். 90 சதவீதமான ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.க்களும் 75 சதவீதமான எமது கட்சி எம்.பி.க்களும் அனுமதிப்பத்திரங்களை விற்றுவிட்டார்கள். எல்லாவெல மெத்தானந்த தேரருக்கு எதிராகக் குற்றஞ்சாட்டும் எதிர்க் கட்சித் தலைவர் விக்கிரமசிங்க நான்கு அனுமதிப்பத்திரங்களைப் பெற்றிருக்கிறார். அவற்றுக்கு நேர்ந்தது என்னவென்பதை அவர் பகிரங்கமாகக் கூறட்டும்' என்று குருநாகலையில் வார இறுதியில் நடைபெற்ற ஆளும்கட்சி பொதுக்கூட்டத்தில் பெர்னாண்டோ புள்ளே பேசியிருக்கிறார். இவர் மாத்திரமல்ல ஜாதிக ஹெல உறுமயவுக்கு சார்பான ஆங்கில, சிங்கள பத்திரிகைகளும் இத்தகைய குற்றச்சாட்டுகளை எதிர்க் கட்சித் தலைவர் மீதும் அவரது கட்சி எம்.பி.க்கள் மீதும் சுமத்த ஆரம்பித்திருக்கின்றன. கடந்த 20 வருடங்களாக பொதுஜன ஐக்கிய முன்னணியினரும் ஐக்கிய தேசியக் கட்சியினரும் வாகன இறக்குமதி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையை அப்பட்டமாக துஷ்பிரயோகம் செய்து வந்திருப்பதாக இந்தப் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன.

எல்லாவெல மெத்தானந்த தேரரின் கார் தொடர்பான சர்ச்சை இதுகாலவரை தீர்வையற்ற கார் இறக்குமதியிலும் விற்பனையிலும் தங்களது சிறப்புரிமையைத் துஷ்பிரயோகம் செய்திருக்கும் ஏராளமான எம்.பி. க்களின் ஊழல் மோசடிகளை அம்பலத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது போலத் தெரிகிறது. ஒரு ஆடம்பரக் கார் விற்பனை விவகாரத்தை விசாரணை செய்ய பாராளுமன்றத் தெரிவுக் குழுவை நியமிக்க வேண்டுமென்று தான் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார். இப்போது பார்த்தால் பாராளுமன்ற உறுப்பினர்களில் எத்தனை பேர் ஆடம்பரக்கார்களை விற்பனை செய்து ஊழல் செய்திருக்கிறார்கள் என்பதை ஆராய தெரிவுக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் போலத் தோன்றுகிறது. தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் பரவலாக எம்.பி.க்களினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கின்றன என்று குருநாகல் கூட்டத்தில் தெரிவித்த அமைச்சர் பெர்னாண்டோபுள்ளே, எல்லாவெல மெத்தானந்த தேரரின் விவகாரத்தை பெரிதுபடுத்தத் தேவையில்லை என்ற தொனியிலா அவ்வாறு பேசினார் என்பதை அறிய விரும்புகின்றோம். இலஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் பரவலாக இடம்பெறுகிறது என்பதற்காக அதை பொருட்படுத்தாமல் விட்டுவிடலாம் என்று அரசாங்கத்தரப்பினர் வாதிடுவார்களா? ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் முரண்பட்டுக் கொண்டு அரசாங்கத்தைவிட்டு வெளியேறிய முன்னாள் அமைச்சர் ஷ்ரீபதி சூரியாராச்சி ஒரேயொரு அரச வாகனத்தை துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றஞ்சாட்டி அவரைக் கைது செய்து வழக்குத் தொடுத்த அரசாங்கத்தில் தான் அமைச்சராக இருப்பதை பெர்னாண்டோ புள்ளே மறந்து செயற்படக்கூடாது. ஒட்டுமொத்தத்தில் சிறப்புரிமைகள் துஷ்பிரயோகமும் ஊழல் மோசடிகள், முறைகேடுகளும் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை சர்வசாதாரணம், இதையெல்லாம் பொருட்படுத்த வேண்டாம் என்று பெர்னாண்டோ புள்ளே கேட்காமல் இருந்தால் அதுவே போதும்.

-தினக்குரல்

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

மெர்சிடஸ் பென்ஸ் C 220 ரகம் விலை 260 இலட்சம். வரி விலக்கு 135 இலட்சம். பா.உ கொடுக்கப்படுவது 125 இலட்சத்திற்கு. மக்களின் வரிப்பணம்??? நாடு உருப்படுமா?

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.