Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசத்தின் வீழ்ச்சி – கேடு விளைவிக்கும் ஆட்சிக்கு மாற்றிடு எங்கே உள்ளது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசத்தின் வீழ்ச்சி – கேடு விளைவிக்கும் ஆட்சிக்கு மாற்றிடு எங்கே உள்ளது?

 

ரங்க ஜெயசூரிய

———————————

தேசமொன்றின் பாரியதொரு  அழிவில் ஒப்பந்தம் ஒன்று  உள்ளதென்று  ஆடம் ஸ்மித் ஒருமுறை கூறியிருந்தார் – அதாவது நவீன அரசுகள்  வெளிப்புற மற்றும் உள்மட்ட  அழுத்தத்தைத் சிறப்பாக கையாளும்  அளவுக்கு உள்ளார்ந்த வலிமையானவை. ஒரு தேசத்தை சிதறடிக்க  கொள்கை வகுப்பாளர்களால் தீவிரமானதும்  தொடர்ச்சியானதுமான  குழப்பங்கள் தேவை. கோட்டாபய ராஜபக்ஷ ஒரு நாட்டை எப்படி வேகமாக அழிக்க முடியும் என்பதை காட்டியுள்ளார். இந்த எண்களைக் கவனியுங்கள்.

2020 ஆம் ஆண்டில் இலங்கையின் பெயரளவிலான தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 3600 அமெரிக்க டொலர்களாக இருந்தது, இது முந்தைய ஆண்டை விட சுமார் 200 அமெரிக்க டொலர்கள் குறைவாகும். இந்த ஆண்டின் முதல் பாதியில் ரூபாயின் மதிப்பு 80% குறைந்துள்ளதால், தற்போது தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, இந்தியா மற்றும் பங்களாதேஷின் அளவில் 2000 அமெரிக்க டொலர்களாக இருக்க வேண்டும். கொள்வனவு சக்தி  சமநிலையின் அடிப்படையில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, வாழ்க்கைத் தரத்தை அளவிடுவதற்கான மிகவும் துல்லியமான குறிகாட்டியாகும், இது இன்னும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம், இருப்பினும் உண்மையான இலக்கங்கள்  ஒரே இரவில் இரட்டிப்பாகின்றது. ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே, மே மாதத்தில் இலங்கையின் உண்மையான பணவீக்கத்தை 128% என மதிப்பிடுகிறார், இது ஜிம்பாப்வேக்கு அடுத்தபடியாக உள்ளது. (அதிகாரப்பூர்வ பணவீக்க விகிதம் 39.10%)

செலவழிக்கக்கூடிய வருமானத்தின் சரிவுடன், அடிப்படை சமூக குறிகாட்டிகளின் சரிவும் வருகிறது: குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருகிறது, பொதுவாக  பசி பரவலாக உள்ளது, மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளன மற்றும் மருத்துவமனைகளுக்கு பதிலாக மருத்துவர்களும் செவிலியர்களும் எரிபொருள் வரிசையில் தவிக்கின்றனர். பாடசாலைகள் மூடப்பட்டு, பொது போக்குவரத்து ஸ்தம்பித்து, எரிபொருள் இருக்கும் போது மட்டுமே செயல்படுகிறது . இரசாயன விவசாயத்திற்கு  தடை விதித்து ஒட்டுமொத்த விவசாயத் துறையையும் அழித்த ஜனாதிபதி இருக்கும் நாட்டில், அரசு ஊழியர்களை விவசாயம் செய்ய வைப்பதற்காக வெள்ளிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் மூடப்படுகின்றன.

உண்மையில், வீழ்ச்சியடைந்து வரும் சமூகத்தின் முழு  கோபத்தையும்  இலங்கை இன்னும் எதிர்கொள்ளவில்லை. ஏனெனில், பல தசாப்தங்களாகக் கட்டமைக்கப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு அல்லது கல்வி ஆகிய நிறுவனங்களின் உள்ளார்ந்த பலத்திலிருந்து நாடு இன்னும் அனுகூலத்தை பெறுகிறது. ஆயினும்கூட, இது வேறு எங்கும் நடந்தது போல (வெனிசுலாவில், லத்தீன் அமெரிக்காவின் செல்வந்த நாடான, ஹ்யூகோ சாவேஸ் நாட்டின் எண்ணெய் வளத்தை சில சமயங்களில் செலவழிக்க முடியாத சமூக நலனில் முதலீடு செய்தார், சமூக குறிகாட்டிகளில் விரைவான இலாபம் ஈட்டினாலும்) அத்தகைய உள்ளார்ந்த பலம் விரைவில்தீர்ந்துவிடும்.  கோட்டாபய ராஜபக்சவும் அவரது அரசாங்கமும் இலங்கையை அந்த திசையில் சீராகவும் வேகமாகவும் கொண்டு செல்கின்றன.

தேசத்தின் இந்த  வீழ்ச்சி தடுக்கப்பட வேண்டும். தற்போது இலங்கை இரட்டை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. ஒன்று அரசியல் நெருக்கடியாகும் .  தேசத்தின் துன்பத்தில் , ஜனாதிபதி கோட்டாபய  அவநம்பிக்கையுடன்  அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டதன் காரணமாக ஏற்பட்டது. இரண்டாவது பொருளாதார நெருக்கடி, இது இறுதி அழிவுக்கான பரிமாணத்துடன்  வேகமாக மோசமடைந்து வருகிறது. அவநம்பிக்கையான ஒட்டுவேலை தீர்வுகளுக்குப் பிறகு, அரசியல் நெருக்கடியைத் தீர்க்காமல் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண முடியாது என்பது இப்போது தெளிவாக இருக்க வேண்டும். ஆயினும்கூட, உடைந்த அரசை சரி செய்ய முயற்சிப்பதில் கோத்தபய இலங்கைக்கு மிகப்பெரிய இடையூறாக  இருக்கிறார்.

முதலாவதாக, கோட்டாபய ராஜபக்சவின் தலைமை இலங்கை மக்கள் மத்தியில்  எந்த நம்பிக்கையையும் ஏற்படுத்தவில்லை. தற்போதைய பொருளாதார அவலத்தை உருவாக்கிய முக்கிய கதாநாயகன். அதிகரித்து வரும் வரும் பசியைக் கவனியுங்கள் என  மனிதாபிமானப் பேரழிவைப் பற்றி ஐ.நா எச்சரிக்கிறது. கடுமையான உணவு நெருக்கடியானது அந்நி யச் செலாவணி நெருக்கடியின் விளைவாக அவசியமில்லை. நுகர்வோர் பொருட்கள் இலங்கையின் மொத்த இறக்குமதியில் 20%க்கும் குறைவாகவே உள்ளன. (இடைநிலை பொருட்கள் மற்றும் மூலதன பொருட்கள் முறையே 57% மற்றும் 23% ஆகும்). இலங்கையில் உள்நாட்டு உணவுத் தொழிற்துறை செயற்படுவதுடன், பிரதான உணவுப்  பொருளான  அரிசியில் நாடு ஏறக்குறைய தன்னிறைவு பெற்றிருந்தது. இரசாயன உரங்களுக்கு ஒரே இரவில் தடை விதித்ததன் மூலம் உள்ளூர் விவசாயத் துறையை கோட்டாபய சீரழித்ததன் விளைவாக நாட்டில் பசி அதிகமாக உள்ளது. அவர் 1.8 மில்லியன் விவசாயக் குடும்பங்களை வறுமையிலும், ஒட்டுமொத்த தேசத்தையும் பட்டினியின் அச்சுறுத்தலுக்குள்ளும் தள்ளியுள்ளார் . இப்போது உணவு உற்பத்தியை அதிகரிக்க அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்துவது வெறும் நகைச்சுவை மட்டுமல்ல,  இந்த நாட்டில் ஒரு கொள்கை மற்றும் முன்னோக்கு அரசியல் தலைமை இல்லாததை வெளிப்படுத்துகிறது.

இரண்டாவதாக, ஜப்பான் முதல் வளைகுடா நாடுகள் வரையிலான இலங்கையின் பெரும்பாலான பாரம்பரிய நண்பர்களுடன் அவர் உறவுப் பாலங்களை தகர்த்துள்ளார். ஒரு காலத்தில் ராஜபக்ச ஆட்சியின் நட்பாக  இருந்த சீனா கூட இலங்கையுடனான தனது உறவுகளில் அவரை ஒரு தடையாக  கருதுகிறது,  அமெரிக்காவும்  ஐரோப்பிய ஒன்றியமும் இறுதி வெற்றியில் திருப்தியடைந்து  கொண்டிருக்கின்றன.

அவரது ஆட்சி எவ்வளவு தனிமைப்படுத்தப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள, புதிய பொருட்களை இறக்குமதி செய்ய எந்த வழியும் இல்லாமல், வரும் நாட்களில் நாட்டில் அனைத்து எரிபொருள்களும் தீர்ந்துவிடும் என்பதைக் கவனியுங்கள். இந்திய கடன் வரியிலிருந்து எரிபொருள் ஒதுக்கீட்டை நாடு செலவழித்த பிறகு, குறுகிய கால உதவிக்காக விருப்பமுள்ள வெளிநாட்டுப் பங்காளிஇடம் பெற்றுக் கொள்வதற்கான ஆற்றலுடன் அவரது  அரசாங்கம் இருக்கவில்லை. முஸ்லீம்களுக்கு எதிரான  பிரச்சாரத்தின் மூலம் அவரது ஆட்சி சாத்தியமான வளைகுடா பங்காளிகளை பகைத்தது. ஜப்பானிய நிதியுதவியுடன் கூடிய இலகு ரயில் திட்டத்திற்கு  தடை விதித்ததால் டோக்கியோ 3 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான அவரது கோரிக்கைக்கு பதிலளிக்கவில்லை என்பதை   புரிந்துகொள்ள முடிகிறது.

சர்வதேச சமூகத்தின் செல்வந்தர்களால் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் வெறுக்கப்படும் ஒரு தலைவரால், இலங்கை அதற்குத் தகுதியான சர்வதேச நன்மதிப்பைப் பெற வாய்ப்பில்லை. இது சர்வதேச உதவிக்கான நாட்டின் வேண்டுகோளையும், கடன் மறுசீரமைப்புக்கான பேச்சுக்களையும் சிதைக்கிறது. தோல்வியடைந்த தலைவராக இருந்து வெளியேற விரும்பவில்லை என ஜனாதிபதி கூறுகிறார். அவர் சீர் செய்ய முடியாத  மற்றும் மாற்ற முடியாத அளவிற்கு  தோல்வியடைந்துள்ளர்.

அரசியல் எதிரணி  எங்கே?

கோட்டாபய ஒரு பொறுப்பு கூற வேண்டியவராக உள்ளார்.  இருப்பினும், துரதிருஷ்டவசமாக, ஒரு செயல்படும் மாற்றிடு   இன்னும் மழுப்பலாக உள்ளது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி  (SJB) அரசாங்கத்தை சீண்டுவதற்காக ஊடக மாநாடுகள் மற்றும் செய்தி வெளியீடுகளில் தனது ஆற்றலைச் செலவிடுகிறது. சஜித் பிரேமதாச சொற்பொழிவுகளில் சிறந்து விளங்கினாலும் பொறுப்பை ஏற்பதில் அதிக அக்கறை காட்டுவதில்லை. ஜே.வி.பி இரண்டு பிரதான கட்சிகளும் மதிப்பிழந்து அதிகாரத்தைக் கோரும் வரை காத்திருக்கிறது. அரசியல் எதிர்க்கட்சி – SJB மற்றும் JVP  ஆகியன ஒரு மாற்று அரசாங்கத்திற்கான மாதிரியையோ அல்லது திட்டத்தையோ வழங்கவில்லை.

இந்த வெற்றிடத்தை கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்கிரமசிங்க இருவரும் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஐக்கிய மக்கள் சக்தி, JVP மற்றும் பிற பங்குதாரர்கள் ஒரு நிழல் அரசாங்கம் மற்றும் உடனடி பொருளாதார நெருக்கடிகள் மற்றும் நடுத்தர மற்றும் நீண்ட கால பொருளாதார மறுசீரமைப்பை நிவர்த்தி செய்வதற்கான ஒரு செயல் திட்டத்தை முன்வைத்தால் அது அவர்களுக்கு உதவியிருக்கும். அத்தகைய தோரணையானது, தற்போதைய அரசியல் வெற்றிடத்தை ஓரளவு தணித்து, அவர்கள் மீது பொதுமக்களின் நம்பிக்கையை தூண்டும். அது அவர்களின் உதவிக்கான நிபந்தனையாக அரசியல் மாற்றத்தைக் கோருவதற்கு சர்வதேச சமூகத்தை ஊக்குவிக்கும்.
ஒரு மாற்று அரசியல் தலைமையின் வெற்றிடமும் நடந்துகொண்டிருக்கும் மக்கள் போராட்டத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோட்டாபய ராஜபக்சவுக்குப் பிறகு பதவிக்கு  வருவதற்கு நடைமுறை மாற்று எதுவும் இல்லை என்றால், அவர் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையில் சிறிதும் அர்த்தமில்லை.
வரவிருக்கும் மாதங்களில், பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடையும், , IMF மற்றும் நன்கொடை நாடுகளிடமிருந்து கணிசமான உதவிகள் வந்த பிறகுதான் பொருளாதாரம் மீண்டு வரும். கோட்டாபய ராஜபக்சவின்  ஆட்சிக்கு மாற்றாக செயல்படுவதற்கான பொறுப்பை ஏற்க  கூட்டுக்  எதிர்க்கட்சி  முன்வர வேண்டும் .

டெய்லி மிரர்.

https://thinakkural.lk/article/187481

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.