Jump to content

ஆவணப்பட போஸ்டர் சர்ச்சை: வாயில் சிகரெட், கையில் எல்ஜிபிடி கொடியுடன் 'காளி' - சர்ச்சை குறித்து என்ன சொல்கிறார் லீனா மணிமேகலை?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆவணப்பட போஸ்டர் சர்ச்சை: வாயில் சிகரெட், கையில் எல்ஜிபிடி கொடியுடன் 'காளி' - சர்ச்சை குறித்து என்ன சொல்கிறார் லீனா மணிமேகலை?

  • நந்தினி வெள்ளைச்சாமி
  • பிபிசி தமிழ்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

இயக்குனர் லீனா மணிமேகலை

பட மூலாதாரம்,@LEENAMANIMEKALI

கவிஞர், ஆவணப்பட இயக்குநர், சுயாதீன திரைப்பட இயக்குநர் என பன்முகம் கொண்ட லீனா மணிமேகலை, பாலியல் - சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் ஈழப்போராட்டங்கள் குறித்தும் திரைப்படங்களையும், ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார். இவருடைய 'மாடத்தி, 'செங்கடல்' போன்ற திரைப்படங்கள் சர்வதேச கவனம் பெற்றன. சர்வதேச அளவிலான பல்வேறு திரைப்பட விழாக்களில் இத்திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன. பல்வேறு சர்வதேச விருதுகளையும் லீனா மணிமேகலை பெற்றுள்ளார்.

இந்நிலையில், தான் இயக்கியுள்ள 'காளி' என்கிற நிகழ்த்து ஆவணப்படத்தின் (Performance Documentary) 'பர்ஸ்ட் லுக்' போஸ்டரை சமீபத்தில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதுதான் தற்போதைய சர்ச்சையின் மையமாக உள்ளது. அந்த போஸ்டரில் 'காளி' போன்று வேடமணிந்துள்ள பெண், தன் வாயில் சிகரெட்டுடன், கையில் பால்புதுமையினர் (LGBT) கொடியை பிடித்திருப்பது போன்று உள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இந்த போஸ்டர் வெளியிடப்பட்ட சில மணிநேரங்களிலேயே அதற்கான எதிர்வினைகள் வெளிவரத் தொடங்கின. 'ArrestLeenaManimekalai' என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் தற்போது டிரெண்டாகிவருகிறது. இந்த போஸ்டர் இந்து மதத்தை அவமதிப்பதாகவும், லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, ஹரியாணா பாஜகவின் மாநில பொறுப்பாளர் அருண் யாதவ், இதுகுறித்து வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், இந்த ஆவணப்படம் தடை செய்யப்பட வேண்டும் என்றும், அனைவரும் இந்து மத உணர்வுகளை மதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அவரது வீடியோவை ரீட்வீட் செய்து பலரும் ArrestLeenaManimekalai என்ற ஹேஷ்டேகை பதிவிட்டு வருகின்றனர்.

விஷ்வ இந்து பரிஷத் தலைவர்களுள் ஒருவரான பிராச்சி சாத்வி, தன் ட்விட்டர் பக்கத்தில், "இந்துக்களே விழித்திருங்கள், இந்து மதத்திற்கு எதிரான இயக்குநரை புறக்கணியுங்கள்" என பதிவிட்டுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Wake Up Hindus .

Boycott Anti Hindu Film Director .

Retweet Maximum And Demand #ArrestLeenaManimekalai https://t.co/Zx1zyT6dlo

— Dr. Prachi Sadhvi (@Sadhvi_prachi) July 3, 2022

Twitter பதிவின் முடிவு, 2

மேலும், இயக்குனர் அஷோக் பண்டிட், ஹரியாணா பாஜகவின் சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் ஹரிஷ் ஷர்மா உள்ளிட்டோரும் தங்களின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கங்களில் இந்த போஸ்டருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

லீனா மணிமேகலையின் காளி

பட மூலாதாரம்,@LEENAMANIMEKALI/TWITTER

நூபுர் ஷர்மா விவகாரம், அதைத்தொடர்ந்து உதய்பூரில் நிகழ்ந்துள்ள கொலை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் இந்தியாவில் பல விவாதங்களை எழுப்பியுள்ள வேளையில், நாடு முழுவதும் பல்வேறு பெயர்களிலும் வடிவங்களிலும் வணங்கப்படும் 'காளி' ஏன் சர்ச்சையின் மையமாக்கியுள்ளார்? கனடாவில் உள்ள இயக்குனர் லீனா மணிமேகலை இந்த ஆவணப்படம் குறித்தும் அதைத்தொடர்ந்த சர்ச்சை குறித்தும் பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார்:

'காளி' எனும் நிகழ்த்துக்கலை ஆவணப்படத்தின் போஸ்டரில் பெண் தெய்வம் கையில் சிகரெட் மற்றும் கையில் 'பால்புதுமையினர்' கொடியையும் பிடித்திருக்கிறார்... 'காளி' இதன்மூலம் சொல்ல வருவது என்ன?

என்னைப் பொருத்தவரை "காளி" பேராற்றல் கொண்ட, கட்டற்ற, அசுரத்தனம் என்று கருதப்படுவதையெல்லாம் காலில் போட்டு மிதிக்கிற, தீமையின் தலைகளையெல்லாம் ஒட்ட நறுக்கி கெட்ட ரத்தமாக ஓடவிடுகிற துடியான ஆதி மனுஷி. அப்படி ஒரு மனுஷி ஒரு மாலை நேரம் எனக்குள் இறங்கி டொரோண்டோ மாநகர வீதிகளில் வலம் வந்தால் என்ன நடக்கும் என்பதை நிகழ்த்திக் காட்டும் படம் தான் காளி.

நான் பால்புதுமையராகவும், திரைப்படங்களை இயக்கும் பெண்ணாகவும் இருப்பதாலும் எனக்குள் இறங்கும் காளி, பால்புதுமையர் கொடியையும் கேமராவையும் பிடித்திருக்கிறார். என்ன செய்ய?.

என் மேல் இறங்கும் காளி கனடாவில் வாழும் பழங்குடி மக்களோடும், ஆப்பிரிக்க, ஆசிய, யூத, பாரசீக இனங்களை சேர்ந்த மக்களோடும் கலந்து மனித நேயத்தைக் கொண்டாடி மகிழ்ச்சியாக இருக்கிறார். கனடாவில் கஞ்சா சட்டப்பூர்வமானது என்றாலும் விலை அதிகம். பூங்காவில் படுத்துறங்கும் கனடாவின் வீடற்ற ஏழை கறுப்பின உழைக்கும் மக்களிடம் காளியை உபசரிக்க ஒரு சிகரெட் தான் இருக்கிறது. அதை அன்புடன் ஏற்றுக் கொள்கிறார் காளி.

 

லீனா மணிமேகலை

பட மூலாதாரம்,@LEENAMANIMEKALI/TWITTER

இந்த போஸ்டர் இந்துக்கடவுளை அவமதிப்பதாகவும் மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும் கூறி, ட்விட்டரில் 'ArrestLeenaManimekalai' என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருவதை பார்த்தீர்களா? இதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள்?

இந்திய அரசாங்கம் மத அடிப்படைவாத எதேச்சதிகார அரசாங்கம். சமூக செயற்பாட்டாளர்களையும், பத்திரிகையாளர்களையும், தெருவில் இறங்கிப் போராடும் மாணவர்களையும், கலைஞர்களையும் நசுக்குவதை முழுநேர வேலையாக வைத்திருக்கும் இந்த அரசாங்கத்திற்குப் பெயர் மக்களாட்சி அல்ல, பாசிசம். சிறுபான்மையினரை ஒடுக்கி மதத்தின் பெயரால் மக்களைப் பிரித்து துண்டுதுண்டாக்கி நாட்டை மெல்ல மெல்ல திறந்தவெளி இன அழிப்பு கூடமாக்கி கொண்டிருக்கும் இந்த நாசகார கும்பல் கையில் சிக்கி இந்தியாவின் ஆன்மா தனது இறுதி சுவாசத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறது.

கடந்த பதினேழு ஆண்டுகால கலை வாழ்க்கையில் கொலை மிரட்டல், வன்புணர்வு செய்யப்படுவாய்-ஆசிட் அடிக்கப்படுவாய் போன்ற அச்சுறுத்தல்கள், அரசியல் கைதுகள், சென்சார் தலையீடுகள், அவதூறுகள், போலீஸ் புகார்கள், அரசியல் கைதுகள், மீடூ இயக்கத்தில் இணைந்து பாலியல் அத்துமீறல்களைப் பற்றி பேசியதால் தொடுக்கப்பட்ட வழக்குகள், அதன் அடிப்படையில் பாஸ்போர்ட் முடக்கம், அதை முறியடிக்க போராட்டங்கள் - இப்படி எல்லாவற்றையும் பார்த்தாயிற்று. எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர் தான் என்றால் தரலாம்.

போஸ்டருக்காக மட்டுமே இத்தகைய சர்ச்சை ஏற்படும் என நினைத்தீர்களா? ஆவணப்படம் தடை செய்யப்பட வேண்டும் என கூறுவது குறித்து...

படைப்பூக்கத்தில் இருக்கும்போது எந்த நினைப்பும் எனக்குத் தடையாக இருப்பதை நான் அனுமதிப்பதில்லை. சுய தணிக்கையை விட மோசமான தடை கலைக்கு வேறெதுவும் இல்லை. படத்தைப் பார்த்தால் இந்த hashtag கொடூரர்களின் மனம் மாறுவதற்கு வாய்ப்புண்டு. அதனால் தான் தடை செய்ய விரும்புகிறார்கள். இந்த இன்டர்நெட் யுகத்தில் அரசாங்க ரகசியங்களையே எதேச்சிதிகாரங்களால் காப்பாற்ற முடியவில்லை. கலை எப்படியாவது மக்களைப் போய் சேர்ந்து விடும். என் முந்தையப் படைப்புகள், கவிதையாகட்டும், திரைப்படங்களாகட்டும், தடைகளை சந்தித்திருக்கின்றன. அதனால் அவை வாசிக்கப்படாமலோ, பார்க்கப்படாமலோ போனதில்லை.

 

லீனா மணிமேகலை

பட மூலாதாரம்,@LEENAMANIMEKALI/TWITTER

இந்திய பிரதமர், உள்துறை அமைச்சரையும் டேக் செய்து உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிலர் கூறிவருவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

இந்தியாவில் மோதியும் அமித்ஷாவும் வைப்பது தான் சட்டம். இது உலகத்திற்கே தெரிந்த விஷயம். அதற்காக, எல்லாரும் மூச்சையும் இயக்கத்தையும் நிறுத்திக் கொள்ள முடியுமா என்ன? பயத்தை அவர்கள் விதைக்கலாம். கலைஞர்கள் அதை அறுவடை செய்ய முடியாது.

நூபுர் ஷர்மா விவகாரத்தையடுத்து தேசிய அளவில் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், இந்த போஸ்டரால் ஏற்பட்டுள்ள சர்ச்சை தவிர்த்திருக்கக்கூடியதா? இந்த போஸ்டரை வெளியிடுவதற்கான தகுந்த நேரம் இதுவென்று கருதுகிறீர்களா?

கனடாவின் யோர்க் பல்கலைக்கழகம் சர்வதேச அரங்கில் திறம்பட இயங்கும் படைப்பாளியென என்னை வரவழைத்து உதவித்தொகை வழங்கி மேலதிக பயிற்சிக்கான களத்தையும் மாஸ்டர்ஸ் டிகிரிக்கான வாய்பையும் வழங்கியது. கனடாவில் சினிமா படிக்கும் கலைஞர்களுள் சிறந்தவர்களைத் தேர்நதெடுத்ததில் - டொரண்டோ மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகம் "பன்முக கலாசாரம்" பற்றிய படமொன்றை எடுக்கும் முகாமில் என்னை இணைத்தது. காளி உருவான கதை அது தான். இந்தப் படத்தை ஒடுக்க நினைப்பவர்கள் கலையோடு நில்லாமல் கல்விப்புலத்தையும் அவமதிக்கிறார்கள். ரொம்ப நாட்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இந்த உலகமும் மக்களும் சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.

மதம் குறித்த வெறுப்புணர்வு பேச்சுகளும், குற்றங்களும் அதிகமாகியுள்ள இந்த காலத்தில், ஒரு கலைஞராக நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? இந்த காலகட்டத்தில் 'கலை' என்பது உங்களை பொறுத்தவரை என்ன?

செய்வதற்கும் சாவதற்கும் இடையில் கலை ஊசலாடிக்கொண்டிருக்கிறது. எனக்கு அதைவிட பற்றிக் கொள்ள ஏதும் இல்லை.

https://www.bbc.com/tamil/india-62033556

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லீனா மணிமேகலை காளி பட சர்ச்சை: டெல்லி, உத்தர பிரதேச காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு

5 ஜூலை 2022, 08:45 GMT
 

லீனா மணிமேகலை

பட மூலாதாரம்,LEENA MANIMEKALAI

லீனா மணிமேகலையின் 'காளி' ஆவணப்படத்தின் போஸ்டர் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், அதன் ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை மீது டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தான் இயக்கியுள்ள 'காளி' என்கிற நிகழ்த்து ஆவணப்படத்தின் (Performance Documentary) 'ஃபர்ஸ்ட் லுக்' போஸ்டரை சமீபத்தில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் லீனா மணிமேகலை பதிவிட்டிருந்தார். இதுதான் தற்போதைய சர்ச்சையின் மையமாக உள்ளது.

அந்த போஸ்டரில் 'காளி' போன்று வேடமணிந்துள்ள பெண், தன் வாயில் சிகரெட்டுடன், கையில் பால்புதுமையினர் (LGBT) கொடியை பிடித்திருப்பது போன்று உள்ளது.

இந்த போஸ்டர் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே அதற்கான எதிர்வினைகள் வெளிவரத் தொடங்கின.

'ArrestLeenaManimekalai' என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் ஜூலை 4 அன்று டிரெண்டானது.

டெல்லி, உத்தர பிரதேசத்தில் வழக்குப்பதிவு

இந்நிலையில், 'காளி' ஆவணப்பட போஸ்டர் மத உணர்வுகளை புண்படுத்தியதாக இயக்குநர் லீனா மணிமேகலை மீது திங்கள்கிழமை (ஜூலை 4) டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் ஒருவர் அவருக்கு எதிரான புகாரை பதிவு செய்துள்ளார். காளி பட போஸ்டர் "மிகவும் ஆட்சேபனைக்குரியது" என்று அவர் கூறியிருக்கிறார்.

ஜூலை 2ஆம் தேதி லீனாவால் பகிரப்பட்ட சர்ச்சைக்குரிய போஸ்டர் தொடர்பான தமது புகாரில், ஆவணப்படத்தின் ஆட்சேபனைக்குரிய புகைப்படம் மற்றும் கிளிப்பிங்கை தடை செய்யுமாறு வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் கோரியுள்ளார்.

காளி தேவியின் வேடமிட்ட பெண் ஒருவர் சிகரெட் பிடிப்பது போன்ற அந்த போஸ்டர், இந்து சமூகத்தினரின் உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் புண்படுத்துவதாக அவர் வினீத் ஜிண்டால் கூறியுள்ளார்.

அதேபோன்று, டெல்லி காவல்துறையின் சிறப்பு ஐ.எஃப்.எஸ்.ஓ பிரிவும் லீனா மணிமேகலை மீது ஐபிசி 153 ஏ மற்றும் 295ஏ ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

மேலும், உத்தர பிரதேசத்திலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. லக்னோவில் உள்ள ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்தில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உதவி ஆணையர் அகிலேஷ் சிங் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

இதுதவிர, லீனா மணிமேகலையின் 'காளி' ஆவணப்படம் திரையிடப்படும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் இந்த "ஆத்திரமூட்டும் வகையிலான" போஸ்டரை திரும்பப் பெறுமாறு திங்கள்கிழமை இரவு, கனடாவிலுள்ள இந்திய உயர் ஆணையரகம் கேட்டுக்கொண்டது.

மேலும், இந்த போஸ்டர் தொடர்பாக "கனடாவில் உள்ள இந்து சமூகத்தின் தலைவர்கள் தெரிவித்துள்ள புகார்கள்" குறித்தும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய உயர் ஆணையரகம் தெரிவித்துள்ளது.

என்ன சொல்கிறார் லீனா மணிமேகலை?

இந்த சர்ச்சை தொடர்பாக, பிபிசி தமிழுக்கு லீனா மணிமேகலை அளித்திருந்த பேட்டியில், "என்னைப் பொருத்தவரை "காளி" பேராற்றல் கொண்ட, கட்டற்ற, அசுரத்தனம் என்று கருதப்படுவதையெல்லாம் காலில் போட்டு மிதிக்கிற, தீமையின் தலைகளையெல்லாம் ஒட்ட நறுக்கி கெட்ட ரத்தமாக ஓடவிடுகிற துடியான ஆதி மனுஷி. அப்படி ஒரு மனுஷி ஒரு மாலை நேரம் எனக்குள் இறங்கி டொரோண்டோ மாநகர வீதிகளில் வலம் வந்தால் என்ன நடக்கும் என்பதை நிகழ்த்திக் காட்டும் படம் தான் காளி.

நான் பால்புதுமையராகவும், திரைப்படங்களை இயக்கும் பெண்ணாக இருப்பதாலும் எனக்குள் இறங்கும் காளி, பால்புதுமையர் கொடியையும் கேமராவையும் பிடித்திருக்கிறார்.

பூங்காவில் படுத்துறங்கும் கனடாவின் வீடற்ற ஏழை கருப்பின உழைக்கும் மக்களிடம் காளியை உபசரிக்க ஒரு சிகரெட் தான் இருக்கிறது. அதை அன்புடன் ஏற்றுக் கொள்கிறார் காளி" என ஆவணப்படம் குறித்து விளக்கினார்.

 

காளி ஆவணப்படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

யார் இந்த லீனா மணிமேகலை?

கவிஞர், ஆவணப்பட இயக்குநர், சுயாதீன திரைப்பட இயக்குநர் என பன்முகம் கொண்ட லீனா மணிமேகலை, பாலியல் - சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் ஈழப்போராட்டங்கள் குறித்தும் திரைப்படங்களையும், ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இவருடைய 'மாடத்தி, 'செங்கடல்' போன்ற திரைப்படங்கள் சர்வதேச கவனம் பெற்றிருக்கின்றன. சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இவரது படங்கள் திரையிடப்பட்டுள்ளன. பல்வேறு சர்வதேச விருதுகளையும் லீனா மணிமேகலை பெற்றுள்ளார்.

தற்போது, கனடாவில் திரைப்பட தயாரிப்பு குறித்து படித்து வருகிறார். "கனடாவின் யோர்க் பல்கலைக்கழகம் சர்வதேச அரங்கில் திறம்பட இயங்கும் படைப்பாளியென என்னை வரவழைத்து உதவித்தொகை வழங்கி மேலதிக பயிற்சிக்கான களத்தையும் மாஸ்டர்ஸ் டிகிரிக்கான வாய்ப்பையும் வழங்கியது" என, பிபிசி தமிழிடம் லீனா மணிமேகலை தெரிவித்தார்.

இந்தியாவில் மதக்கடவுள்களை திரையில் சித்தரிக்கும் விதம் எப்போதும் 'சென்சிட்டிவ்' விஷயமாகவே கருதப்படுகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு பாலிவுட் திரைப்படமான 'ஆங்ரி இந்தியன் காடசஸ்' (Angry Indian Goddesses) திரைப்படத்தில் தணிக்கை வாரியம் சில காட்சிகளை நீக்கியது.

மதம் சார்ந்த சித்தரிப்புகளுக்காக பல திரைப்பட இயக்குநர்கள் எதிர்ப்பை சந்தித்துள்ளனர்.

லீனா மனிமேகலையின் திரை கையாடல்களில் பெண் தெய்வங்கள் குறித்த குறியீடுகள் மீண்டும் மீண்டும் காட்டப்பட்டுள்ளன. அவருடைய தேவதைகள் (Goddesses) ஆவணப்படத்தில், ஒப்பாரி பாடும் பெண், இடுகாடுகளில் கைவிடப்பட்ட பிணங்களை அப்புறப்படுத்தும் பெண், மீனவப் பெண் என அசாதாரண வேலைகளை செய்யும் சாமானிய பெண்களின் வாழ்வை ஆவணப்படுத்தியிருப்பார். 2019ஆம் ஆண்டு வெளியான 'மாடத்தி' திரைப்படத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண், எப்படி தெய்வமாக, அழியாதவளாக மாறுகிறாள் என்பதே கதையின் அடிப்படையாகும்.

இதனிடையே, தமிழ் திரைப்பட இயக்குநர் சுசி கணேசன் மீது 2018ஆம் ஆண்டில் பாலியல் புகாரை தெரிவித்திருந்தார் லீனா மணிமேகலை. இதுதொடர்பாக, சுசி கணேசன் தொடர்ந்த அவதூறு வழக்கில், சுசி கணேசனுக்கு எதிராக, உண்மைக்குப் புறம்பான, ஆதாரமற்ற கருத்துகளை வெளியிட லீனா மணிமேகலைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. 'காளி' ஆவணப்பட சர்ச்சையில் லீனா மணிமேகலை சிக்கியுள்ள நிலையில், இன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது.

 

லீனா மணிமேகலை

பட மூலாதாரம்,@LEENAMANIMEKALI/TWITTER

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிரித்தானிய நேரப்படி நாளை திங்கள் (24 ஜூன்) இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் சுற்றுப் குழுப் போட்டிகளில் முன்னணியில் வரும் அணிகளின் வரிசைப்படி அல்லாது ஏற்கனவே குறிக்கப்பட்ட நிலைகளின்படி போட்டிகள் நடாத்தப்படுவதால் யாழ்களப் போட்டியாளர்கள் சிலரது கணிப்புக்கள், குறிப்பாக குழு B மற்றும் குழு C, குழம்பியுள்ளன. எனவே புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும். போட்டியில் வெற்றிபெறும் அணியைச் சரியாகக் கணித்திருந்தால் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும் போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், கணிப்புக்கள் தவறாக அமைந்திருக்கும் பட்சத்தில், சுப்பர் சுற்றுப் போட்டிகளில் இங்கிலாந்து (B1) அல்லது அவுஸ்திரேலியா (B2) விளையாடி வென்றால் இரண்டு அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணித்தவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும், தோற்றால் புள்ளிகள் இல்லை. அதே போன்று ஆப்கானிஸ்தான் (C1) அல்லது மேற்கிந்தியத் தீவுகள் (C2) விளையாடி வென்றால் இரண்டு அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணித்தவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும், தோற்றால் புள்ளிகள் இல்லை. போட்டியில் ஈடுபடும் அணிகளைச் சரியாகக் கணித்திருந்தும், வெல்லும் எனக் கணித்த அணி தோற்றால் புள்ளிகள் கிடைக்காது சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளுக்கு தகுதியடையாத அணிகளை வெல்லும் எனக் கணித்திருந்தால் புள்ளிகள் கிடையாது போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது.   யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:   62)    சுப்பர் 8: குழு 2: திங்கள் ஜூன் 24: 1:30 AM, அன்ரிகுவா, மேற்கிந்தியத் தீவுகள் (C2) எதிர் தென்னாபிரிக்கா (D1)  WI  எதிர்  SA   நான்கு போட்டியில் உள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். 11 பேர் போட்டியில் உள்ள தென்னாபிரிக்கா வெல்லும் எனக் கணித்துள்ளனர். மேற்கிந்தியத் தீவுகள் வென்றால் இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் வெல்லும் எனக் கணித்த @suvy ஐயாவுக்குப் புள்ளிகள் கிடைக்கும். சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத சிறிலங்கா, நியூஸிலாந்து அணிகளைத் தெரிவு செய்த ஏழு பேருக்குப் புள்ளிகள் கிடையாது. போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் SA வீரப் பையன்26 SL சுவி AFG நிலாமதி NZ குமாரசாமி SA தியா NZ தமிழ் சிறி NZ புலவர் SA P.S.பிரபா WI நுணாவிலான் SA பிரபா USA SA வாதவூரான் SL ஏராளன் SA கிருபன் SA ரசோதரன் NZ அஹஸ்தியன் WI கந்தப்பு SA வாத்தியார் WI எப்போதும் தமிழன் SA நந்தன் SA நீர்வேலியான் WI கல்யாணி NZ கோஷான் சே SA   இப் போட்டியில் எவர் புள்ளிகளை எடுப்பார்கள்?         63)    சுப்பர் 8: குழு 1: திங்கள் ஜூன் 24: 3:30 PM, செயின்ற் லூஷியா, அவுஸ்திரேலியா (B2) எதிர் இந்தியா (A1)    AUS  எதிர்  IND   11 பேர் போட்டியில் உள்ள இந்திய அணி வெல்லும் எனவும், 05 பேர் போட்டியில் உள்ள அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்.  இப்போட்டியில் அவுஸ்திரேலியா வென்றால், இங்கிலாந்து வெல்லும் எனக் கணித்த இருவருக்கும் புள்ளிகள் கிடைக்கும். சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத பாகிஸ்தான் அணியைத் தெரிவு செய்த 05 பேருக்குப் புள்ளிகள் கிடையாது. போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் IND வீரப் பையன்26 IND சுவி IND நிலாமதி IND குமாரசாமி IND தியா PAK தமிழ் சிறி IND புலவர் PAK P.S.பிரபா ENG நுணாவிலான் PAK பிரபா USA ENG வாதவூரான் IND ஏராளன் PAK கிருபன் AUS ரசோதரன் IND அஹஸ்தியன் AUS கந்தப்பு IND வாத்தியார் AUS எப்போதும் தமிழன் AUS நந்தன் PAK நீர்வேலியான் IND கல்யாணி IND கோஷான் சே AUS   இப் போட்டியில் யார் புள்ளிகளைப் பெறுவார்கள்?
    • கந்தையா57 ஐயா! உங்கள் வாழ்த்துக்கு நன்றி ஐயா!! இது என்கணிப்பு அல்ல, கூக்கிள் ஆண்டவர் மேற்கொண்டு தந்த கணிப்பு என்பதைக் குறிப்பிட்டும் உள்ளேன். ஆண்டவர்மேல் குற்றம் கண்டு, மறுபடியும் முதுகில் பிரம்படி வாங்கிக் கொடுத்து உலக மானிடர் அனைவர் முதுகிலும் இரண்டாவது தழும்பையும் ஏற்படுத்த என்மனம்  ஒப்பவில்லை ஐயா!!🤔😟
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.