Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டுவிட்டர் தளத்தை... 44 பில்லியன் டொலர்கள் கொடுத்து வாங்கும் ஒப்பந்தத்தை, இரத்து செய்தார் எலான் மஸ்க்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டுவிட்டர் தளத்தை 44 பில்லியன் டொலர்கள் கொடுத்து வாங்கும் ஒப்பந்தத்தை இரத்து செய்தார் எலான் மஸ்க்!

டுவிட்டர் தளத்தை... 44 பில்லியன் டொலர்கள் கொடுத்து வாங்கும் ஒப்பந்தத்தை, இரத்து செய்தார் எலான் மஸ்க்!

முன்னணி சமூகவலைதளமான டுவிட்டர் தளத்தை 44 பில்லியன் டொலர்கள் கொடுத்து வாங்கும் ஒப்பந்தத்தை இரத்து செய்வதாக, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், உலகின் பணக்காரருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் தளத்தில் போலி அல்லது ஸ்பேம் கணக்குகள் பற்றிய தகவல்களை நிறுவனம் வழங்கவில்லை என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.

பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தில் தாக்கல் செய்ததில், மஸ்கின் வழக்கறிஞர்கள், போலி கணக்குகள் குறித்து சரியான தகவலை டுவிட்டர் நிறுவனம் தரவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், தனது பல்வேறு கேள்விகள், சந்தேகங்களுக்கும் டுவிட்டர் நிர்வாகம் சரியான விளக்கம் அளிக்கவில்லை என்று மஸ்க் புகார் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவு செய்ய எலான் மஸ்க் மீது வழக்கு தொடரப்போவதாக டுவிட்டர் நிறுவனமும் அறிவித்துள்ளது.

எலான் மஸ்கிற்கு டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டொலர்கள்; தொகைக்கு விற்பனை செய்ய டுவிட்டர் நிர்வாக குழு ஒப்புதல் அளித்தது. ஆனால் டுவிட்டரில் 20 – 50 சதவீதம் போலி கணக்குகள் இருப்பதாகவும், அதன் கணக்குகளை முடக்க உள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.

ஆனால், 5 சதவீதத்திற்கும் குறைவான போலி கணக்குகளே உள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்து வந்தது. இந்நிலையில், டுவிட்டர் சமூக வலைதள நிறுவனத்தை வாங்குவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தை எலான் மஸ்க் இரத்து செய்துள்ளார்.

https://athavannews.com/2022/1290396

  • கருத்துக்கள உறவுகள்

ஈலோன் மஸ்க்: ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவிலிருந்து பின்வாங்கியதன் காரணம் என்ன?

2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ட்விட்டர் சமூக வலைதள நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக உலகின் பெரும் பணக்காரரான ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். அந்த ஒப்பந்தத்தில் பல்வேறு விதிமீறல்கள் இருப்பதாக, அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஈலோன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிவித்தபின் நீண்ட காலமாக நடக்கும் கதையின் சமீபத்திய திருப்பம் இது.

ட்விட்டர் ஸ்பேம்கள் மற்றும் போலி கணக்குகள் குறித்த போதுமான தகவல்களை அந்நிறுவனம் வழங்கத் தவறியதால் தான் இம்முடிவிலிருந்து பின்வாங்குவதாக ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்த சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

"ஈலோன் மஸ்க் உடன் ஒத்துக்கொள்ளப்பட்ட தொகை மற்றும் விதிமுறைகளுடன் ஒப்பந்தத்தை செயல்படுத்த ட்விட்டர் இயக்குனர் குழு உறுதிபூண்டுள்ளது," என ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் பிரெட் டேய்லர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது, ட்விட்டர் நிறுவனம் மற்றும் ஈலோன் மஸ்க் என இரு தரப்புக்கு இடையில் சாத்தியமான நீண்ட சட்டப் போராட்டம் ஏற்பட உள்ளதை குறிப்பதாக உள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் 100 கோடி ரூபாய் பிரேக் அப் கட்டணமும் (ஒப்பந்தத்திலிருந்து பின் வாங்கினால் செலுத்தப்படும் அபராதம்) அடங்கும்.

போலி கணக்குகள் குறித்த சர்ச்சை

ட்விட்டர் உடனான இந்த ஒப்பந்தம் "தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக" மே மாதம் அறிவித்த மஸ்க், ட்விட்டர் போலி கணக்குகள் மற்றும் ஸ்பேம்கள் குறித்த தரவுகளை அந்நிறுவனம் வழங்குவதற்காக தான் காத்திருப்பதாக தெரிவித்திருந்தார்.

ட்விட்டர் மொத்த பயனாளிகளில் ஸ்பேம் மற்றும் பாட் கணக்குகள் 5 சதவீதத்திற்கும் குறைவானவையே என அந்நிறுவனம் உறுதிபட தெரிவித்ததற்கான ஆதாரத்தை ஈலோன் மஸ்க் கேட்டிருந்தார்.

ஈலோன் மஸ்க் கேட்டிருந்த இத்தகவல்களை ட்விட்டர் நிறுவனம் தர தவறிவிட்டதாக, அமெரிக்க பாதுகாப்பு மற்றும் பரிமாற்ற ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த கடிதத்தில், ஈலோன் மஸ்க்கின் வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.

"மஸ்க்கின் வலியுறுத்தல்களை ட்விட்டர் நிறுவனம் சில சமயங்களில் புறக்கணித்துவிட்டது. சிலசமயங்களில் அவற்றை நியாயமற்றதாக தோன்றும் காரணங்களுக்காக நிராகரித்துவிட்டது. சில சமயங்களில் முழுமையற்ற அல்லது பயன்படாத தகவல்களை கொடுக்கும்போது இணங்குவதாக கூறியுள்ளது" என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம்,REUTERS

ட்விட்டர் ஸ்பேம் கணக்குகள் பெரிதளவிலானோருக்கு தகவல்கள் சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்டது, இவை ட்விட்டர் தளத்தை தவறாக கையாளும் வகையில் அமையப்பட்டது. சுமார் 10 லட்சம் ஸ்பேம் கணக்குகளை தினந்தோறும் நீக்கிவருவதாக, கடந்த செவ்வாய்க்கிழமை ட்விட்டர் நிறுவனம் தெரிவித்தது.

ட்விட்டரில் ஸ்பேம் அல்லது பாட் கணக்குகள் சுமார் 20 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாக இருப்பதாக ஈலோன் மஸ்க் நம்புகிறார்.

ஒப்பந்தத்தில் இருந்து விலகும் மஸ்க்கின் அறிவிப்புக்குப் பின் ட்விட்டர் பங்குகள் 7 சதவீதம் சரிந்தது.

அடுத்து என்ன நடக்கும்?

"ஈலோன் மஸ்க் ஏற்கெனவே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், இந்த கட்டத்தில் அவர் பின்வாங்க முடியுமா என்பது முற்றிலும் தெளிவாக இல்லை. ட்விட்டர் தங்கள் ஒப்பந்தத்தை மீறியதாக மஸ்க் நிரூபிக்க வேண்டும்.

மேலும், ட்விட்டர் நிறுவனத்துடனான இந்த ஒப்பந்தம், மஸ்க்கின் மற்ற நிறுவனங்களுடன் ஏற்படுத்தும் தாக்கமும் ஒரு காரனமாக உள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை வாங்க மஸ்க் விருப்பம் தெரிவித்ததிலிருந்து டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் குறிப்பிடத்தக்க அளவு சரிந்தது" என, பிபிசியின் வட அமெரிக்கா தொழில்நுட்ப செய்தியாளர் ஜேம்ஸ் கிளேட்டன் எழுதிய பகுப்பாய்வில் தெரிவித்துள்ளார்.

உலகின் பெரும் பணக்காரராக அறியப்படும் மஸ்க், ராக்கெட் தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா நிறுவனங்களின் நிறுவனர்.

 

ட்விட்டர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ட்விட்டர் நிறுவனம் தனது உரிமையின் கீழ் வந்ததும் ட்விட்டரின் விதிகளை தளர்த்துவதாக உறுதியளித்தார்.

ட்விட்டரில் சில கணக்குகளை முடக்குவது குறிப்பாக, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கணக்கை முடக்கியது உள்ளிட்டவற்றை நீண்ட காலமாக விமர்சித்துவந்தார்.

ட்விட்டர் நிறுவனம் பயனர்களுக்கு ட்வீட்களை எவ்வாறு வழங்குகிறது என்பதில் அதிக வெளிப்படைத்தன்மை வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார், இது தற்போது சிலரை விளம்பரப்படுத்தவும் பரந்த பார்வையாளர்களை வழங்கவும் அனுமதிக்கிறது.

https://www.bbc.com/tamil/global-62104017

  • கருத்துக்கள உறவுகள்

ஈலான் மாஸ்க் தனது வியாபார புத்தியை வெளிப்படையாகவே காட்டி வருகின்றார். இது எங்கே போய் முடியுமோ. டுவிட்டர் விடயத்தில் இந்த மனுசன் ஆழம் தெரியாமல் காலை வைக்க வாய்ப்பு இல்லை.

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

ட்விட்டரை வாங்கும் ஈலோன் மஸ்க்: எதிர்காலத்தில் அவரது ‘X’ செயலி என்னவாக இருக்கும்?

5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவது தொடர்பாக, அந்நிறுவனத்திற்கும் ஈலோன் மஸ்கிற்கும் இடையேயான பேச்சுவார்த்தை நீதிமன்றம் வரை சென்று இழுபறியில் இருந்த நிலையில், அண்மையில் ட்விட்டர் நிறுவனத்திடம் ஈலோன் மஸ்கின் வழக்கறிஞர் அளித்த கடிதம் மூலம் இந்த விவகாரம் முடிவை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது.

அந்த கடிதத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க ஈலோன் மஸ்க் விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவது, X என்ற "எவரிதிங் ஆப்" செயலியை உருவாக்குவதை துரிதப்படுத்தும் என கடந்த புதன்கிழமையன்று ஈலோன் மஸ்க் பதிவிட்டிருந்த ஒரு ட்வீட் பேசுபொருளானது.

ட்விட்டரை ஈலோன் மஸ்க் வாங்குவது தொடர்பான இந்த விவகாரம் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. ட்விட்டர் நிறுவனத்தின் கணிசமான பங்குகளை ஈலோன் மஸ்க் வாங்கியிருந்த நிலையில், அவரை முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட குழுவில் சேர அந்நிறுவனம் அழைப்பு விடுத்தது. முதலில் அதை ஏற்றுக்கொண்ட ஈலோன் மஸ்க், பின்னர் மறுத்து விட்டார். அதனைத் தொடர்ந்து, ட்விட்டர் நிறுவனத்தை மொத்தமாக வாங்க அவர் விருப்பம் தெரிவித்தார்.

முதலில், ஈலோன் மஸ்க்கிடம் அதிக பங்குகள் குவிவதைத் தடுக்க முயற்சி எடுத்த ட்விட்டர் நிறுவனம், பின்னர் மொத்த நிறுவனத்தையும் கையகப்படுத்துவதற்காக அவர் கொடுக்க முன்வந்த 44 பில்லியன் அமெரிக்க டாலரை ஏற்க முடிவெடுத்தது.

 

அதன் பிறகு, ட்விட்டரில் உள்ள போலி கணக்குகளின் எண்ணிக்கை அந்நிறுவனம் கூறியதைவிட அதிகம் என ஈலோன் மஸ்க் கூற, ஒப்பந்தம் கையெழுத்தாவதில் இழுபறி நீடித்தது.

பின்னர், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவில் இருந்து பின்வாங்குவதாக ஈலோன் மஸ்க் அறிவித்தார்.

நீதிமன்றத்தில் வழக்கு

 

ஈலோன் மஸ்க மற்றும் ட்விட்டர் செயலதிகாரி பராக் அகர்வால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எந்தவித முன்யோசனையும் இல்லாமல் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் ஈலோன் மஸ்க் இறங்கியதாக ஊகங்கள் எழுந்தன. இதற்கான தொகையையும் தன்னுடைய மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் சில பங்குகளையும் விற்று நிதி திரட்ட ஈலோன் மஸ்க் முடிவு செய்திருந்தது, அந்த நிறுவனத்தின் முதலீட்டாளர்களை அச்சம் கொள்ளச் செய்ததோடு, இறுதியில் அந்த முடிவில் இருந்து அவரைப் பின்வாங்கவும் செய்தது.

இரு வாரங்களுக்குள்ளாகவே இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் எதிர்கொண்டனர். ட்விட்டர் விற்பனையை நிறைவு செய்ய ட்விட்டர் நிர்வாகம் கட்டாயப்படுத்தியது. இந்த ஒப்பந்தத்தில் இருந்து எந்தவொரு தரப்பும் வெளியேறினால் மற்றொரு தரப்பிற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையும் அந்த ஒப்பந்தத்தில் முன்னரே குறிப்பிடப்பட்டிருந்தது.

ஈலோன் மஸ்க் மற்றும் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் இடையேயான கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்திய தனிப்பட்ட செய்திகள் மற்றும் அதைத் தீர்த்து வைக்க ட்விட்டர் நிறுவனர் ஜாக் டோர்சி எடுத்த முயற்சிகள் உட்பட சில தனிப்பட்ட விஷயங்கள் நீதிமன்ற ஆவணங்கள் மூலம் தெரியவந்தன.

எல்லாவற்றுக்குமான X செயலி

 

ட்விட்டர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"X எவரிதிங் செயலி" குறித்த அவரது ட்விட்டை பார்க்கையில், சீன செயலியான'WeChat' போன்ற செயலியை உருவாக்க ஈலோன் மஸ்க் முயற்சிப்பதாகத் தெரிகிறது. செய்தி அனுப்புதல், சமூக வலைத்தளம், பணம் அனுப்புதல், உணவு ஆர்டர் செய்வது உட்பட பல வசதிகளை உள்ளடக்கியது 'WeChat'.

300 மில்லியன் வரையிலான மாதாந்திரப் பயனர்களைக் கொண்டுள்ள ட்விட்டர் நிறுவனம், அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் மிகச்சிறியதே. அதேபோல, டிக்டாக், இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்கள் போல அதிவேகமான வளர்ச்சியை எப்போதும் ட்விட்டர் கண்டதில்லை. அரசியல்வாதிகள், உலகத் தலைவர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர ட்விட்டரை பரவலாகப் பயன்படுத்துவதால் அது செல்வாக்குமிக்கதாகக் கருதப்படுகிறது.

ட்விட்டரை வாங்குவதற்கான விருப்பத்தை ஈலோன் மஸ்க் முதலில் தெரிவித்தபோது, ட்விட்டர் தளத்தை அதிகப்படியான கருத்து சுதந்திரத்திற்கும் மிதவாதத்திற்குமான தளமாக மாற்ற விரும்புவதாகத் தெரிவித்திருந்தார்.

ஈலோன் மஸ்க் வழக்கறிஞரின் கடிதம் குறித்த தகவல் வெளியானதும், ட்விட்டரின் பங்குகள் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. ட்விட்டர் தளத்தை முற்றிலும் மாறுபட்ட களமாக ஈலோன் மஸ்க் மாற்ற நினைக்கலாம். அது ஒருவேளை, தற்போதுள்ள பயனர்களை அந்நியப்படுத்தலாம். அதேநேரத்தில் புதிய பயனர் கூட்டத்தையும் கொண்டு வரலாம்.

https://www.bbc.com/tamil/global-63194642

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.