Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் அமைக்கப்பட்ட விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களை அகற்றுமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் அமைக்கப்பட்ட விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களை அகற்றுமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கே .குமணன் 

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலை  ஆதி சிவன் அய்யனார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும்  அகற்றுமாறு குறித்த கட்டுமானங்களை அகற்றி நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும்  குறித்த  பகுதியில் ஆதி சிவன் அய்யனார் ஆலயத்தினர் தங்களுடைய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு எந்த விதத்திலும் தடை விதிக்க கூடாது எனவும் இந்த இடத்தில் அமைதி குலைவினை ஏற்படாத வகையில் பொலிஸார் உரிய பாதுகாப்பினையும்  வழங்க வேண்டும் எனவும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை இன்றையதினம்  முல்லைதீவு  நீதவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

IMG_2237.jpg

குருந்தூர்மலை தொடர்பான AR 673/18 என்ற குறித்த வழக்கு இன்று நீதிமன்றில் முல்லைதீவு நீதவான் நீதிமன்ற  நீதிபதி ரி.சரவணராஜா அவர்கள் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட்டபோது ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் மற்றும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் இவர்கள் சார்பில் சட்டத்தரணி வி எஸ் எஸ் தனஞ்சயன் மற்றும்  சிரேஸ்ட  சட்டத்தரணி கெங்காதரன் அவர்களும் முன்னிலையாகியதோடு எதிர்தரப்பிலே பொலிஸார் மன்றில் முன்னிலையாகினர். இதன்போது முல்லைதீவு நீதவான் நீதிமன்ற  நீதிபதி ரி.சரவணராஜா அவர்கள்  வழக்கினுடைய கட்டளையை இன்றைய தினம் வழங்கினார்.

IMG_2219.jpg

குறித்த கட்டளை தொடர்பில் இன்று நீதிமன்றத்தில் ஆதிசிவன் அய்யனார் ஆலய தமிழ் மக்கள் சார்பில் மன்றில் முன்னிலையாகிய சட்டத்தரணி வி எஸ் எஸ் தனஞ்சயன் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார் , 

IMG_4199.jpg

இன்றைய தினம் முல்லைத்தீவு நீதவான்  நீதிமன்றத்திலேயே AR 673/18 என்ற  குருந்தூர் மலை  தொடர்பான வழக்குக்கான கட்டளை  வழங்கப்பட்டது. இந்த வழக்கினுடைய கட்டளை  கௌரவ முல்லைதீவு நீதவான்  நீதிமன்ற நீதிபதி  ரி. சரவணராஜா அவர்களால் இன்று வழங்கப்பட்டுள்ளது.

IMG_4200.jpg

இந்த தீர்ப்பிலே இரு தரப்பு வாதங்களையும் உய்த்தறிந்த நீதிபதி  அவர்கள் புதிதாக குறுந்தூர்  மலை  பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற விகாரை, சிலைகள் மற்றும் சுருவங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களும்   அகற்றப்பட வேண்டும் எனவும் கட்டளை ஆக்கி இருக்கின்றார். மேலும் இந்த புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடங்களை அகற்றியதன் பின்னர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென முல்லைத்தீவு பொலிசாரக்கு நீதிமன்றம் கட்டளை வழங்கியிருக்கின்றது.

IMG_2389.jpg

மேலும் குறித்த பகுதியானது தொல்லியல் திணைக்களத்தின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக காணப்படுவதால் அந்த பிரதேசம் தொடர்பான விடயங்களை ஆய்வு செய்து அது தொடர்பாக அறிக்கையிடுமாறு தொல்லியல் துணைக்களத்துக்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் இந்த கட்டளையிலே பாரம்பரியமாக முல்லைத்தீவு குருந்தூர் மலையிலே ஆதி சிவன் அய்யனார் ஆலயத்தினர் தாம் செய்து வருகின்ற பூசை வழிபாடு நிகழ்வுகளை எந்த விதத்திலும் யாரும் தடுக்கக்கூடாது என்ற கட்டளையும் தொடர்ந்து அந்த இடத்திலேயே சமாதான குலைவு   ஏற்படாத வகையிலே பொலிசார் தமது பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் முல்லைத்தீவு  நீதவான்  நீதிமன்றம் கட்டளை வழங்கி இருக்கிறது என தெரிவித்தார்.

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் கடந்த 12.06.2022 (ஞாயிறு) அன்று, 'கபோக்' கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை அமைப்பதற்கும், அங்கு நீதிமன்ற கட்டளையை மீறி அமைக்கப்பட்ட விகாரையில் விசேட பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதைத் தொடர்ந்து அந்த முயற்சிகள் கைவிடப்பட்டிருந்தன.

இந் நிலையில் குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் மற்றும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர், 16.06.2022 அன்றைய தினம் குருந்தூர்மலை  தொடர்பில் ஏற்கனவே முல்லைத்தீவு நீதவான் நீதி மன்றில் தொடரப்பட்ட வழக்கினை நகர்த்தல் பத்திரம் அணைத்து, ஏற்கனவே நீதிமன்றம் வழங்கிய கட்டளையினை மதிக்காமல் அவமதிப்புச் செய்து, அங்கு அமைக்கப்பட்ட விகாரை தொடர்பிலும், போலீசார் தொடர்ச்சியாக இந்த வழக்கிலே நீதிமன்றிற்கு வழங்கவேண்டிய அறிக்கைகளை  வழங்காது, சட்டத்தை மீறிச் செயற்படுபவர்களுக்கு சார்பாகச் செயற்பட்டதையும் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகள் அனைவரும் இணைந்து மன்றில் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

அந்தவகையில் குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகம் மற்றும், பொலிசார் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆழ்ந்து அவதானித்த நீதவான்,  வழக்குத் தொடுனரான பொலிசார், குருந்தூர் மலையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக  23.06.2022  திகதியிட்டிருந்தார்.

குருந்தூர்மலை தொடர்பான AR 673/18 என்ற குறித்த வழக்கு, மீண்டும்  23.06.2022 அன்று இடம் பெற்றபோது பொலிஸார் இது தொடர்பான பூரணமான விளக்கத்தை அளிப்பதற்கு முடியாத சூழல்நிலையில் இருப்பதாகவும் மேலதிகமாக தமக்கு விளக்கமளிப்பதற்கும்   காலம் தேவை என கோரியிருந்தனர் இதனடிப்படையில் வழக்கு விசாணைகள் 30.07.2022  தினத்துக்கு தவணையிடப்பட்டிருந்தது.

பின்னர் 30.07.2022 அன்று முல்லைத்தீவு நீதவான் நீதி மன்றில் முல்லைத்தீவு நீதவான் நீதி மன்ற  நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் சார்பில்   சிரேஸ்ர சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகள் கெங்காதரன்,பரஞ்சோதி,தனஞ்சயன் உள்ளிட்ட   பலர்   முன்னிலையாகியிருந்தனர் இதேவேளை பொலிஸ் தரப்பில் விளக்கமளிப்பதற்காக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் லசந்த விதானகே முல்லைத்தீவு  மாவட்ட தலைமை பொலிஸ் பரிசோதகர் அமரசிங்க உள்ளிட்டவர்கள் மன்றில் சமூகமாகி விளக்கமளித்தனர்.

இரண்டு தரப்பு வாதங்கள் சமர்ப்பணங்களை   அவதானித்த நீதவான், கட்டளைக்காக இந்த வழக்கினை 14-07-2022 இன்றைய தினத்துக்கு  திகதியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
https://www.virakesari.lk/article/131476

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

வழக்கு விசாணைகள் 30.07.2022  தினத்துக்கு தவணையிடப்பட்டிருந்தது.

பின்னர் 30.07.2022 அன்று முல்லைத்தீவு நீதவான் நீதி மன்றில் முல்லைத்தீவு நீதவான் நீதி மன்ற  நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது .........

இன்று திகதி 15.07.2022.
ஆகவே மேற்குறித்த 30.07.2022 என்ற திகதி 30.06.2022 என இருப்பது தான் சரி என எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

இனி…. புத்தபிக்குகள், இராணுவம், சிங்கள மக்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.
கோத்தா அரசில்,   தமிழர் பகுதியில் கட்டப் பட்ட…. அனைத்து விகாரைகளும் அகற்றப் பட வேண்டும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அதுமட்டுமில்ல, போர் வெற்றித்தூபிகளும் அகற்றப்படும். அதைப்பார்த்து அவர்கள் வெதும்பி, வெடக்கப்படவேண்டும். போர்க்கதாநாயகன் துரத்தப்பட்டபின் தூபிகள் மட்டுமெதற்கு?

நாட்டை அடகு வைத்த அவமானச்சின்னங்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்

போர் கதாநாயகர்கள் துரத்தப்பட்டதற்கு காரணம் பட்டினி, விலையேற்றம், பொருளாதாரப் பின்னடைவே அன்றி வேறு ஒன்றும் இல்லை.. 

எல்லோரும் மும்முரமாக கொழும்பில் நடப்பதை கவனிப்பதால், இந்த தீர்ப்பிற்காக எதிர்வினை எப்படி வரும் என்பதை இன்னமும் கொஞ்ச நாட்களில் தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

போர் கதாநாயகர்கள் துரத்தப்பட்டதற்கு காரணம் பட்டினி, விலையேற்றம், பொருளாதாரப் பின்னடைவே அன்றி வேறு ஒன்றும் இல்லை.. 

எல்லோரும் மும்முரமாக கொழும்பில் நடப்பதை கவனிப்பதால், இந்த தீர்ப்பிற்காக எதிர்வினை எப்படி வரும் என்பதை இன்னமும் கொஞ்ச நாட்களில் தெரியும். 

இனவாதிகள் இத்தீர்ப்பினைப் பாவித்து தமிழருக்கெதிரான பிரச்சாரத்தை முன்னெடுக்கலாம். பெருமளவு சிங்களவர்கள் இதற்கு ஆதரவு தராவிட்டாலும்கூட, ராணுவமும், பிக்குகளும் இதுகுறித்து நிச்சயம் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள்.

ஆனால், இந்தத் தீர்ப்பு எதுவுமே இனவாதிகளுக்கு ஒரு பொருட்டாக இருக்கப்போவதில்லை என்பதே உண்மை. இந்த விகாரைகூட நீதிமன்றத்தின் தடையினையும் மீறியே கட்டப்பட்டு வருகிறது.

தமிழர்கள் இதனை அடித்து நொறுக்கினால் அன்றி, இது நிற்கப்போவதில்லை. ஆனால், அவ்வாறான ஒரு செயற்பாடு  தமிழர்கள் பலர் உயிரிழப்பதிலேயே சென்று முடியும்.

ஆனாலும் அரச, ராணுவ, பெளத்த பயங்கரவாதிகளுக்கு எதிரான மிகவும் துணிச்சலான தீர்ப்பு இதுவென்பது உண்மைதான்!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ராஜ பக்ஸர்களின் வீழ்ச்சி எதையோ சொல்ல வருகிறது. காலிமுகத்திடலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சாத்தியமாகுமா? ஆகிச்சே! எந்த நேரமும் எதுவும் நடக்கலாம், எல்லாநேரமும் சிறுபான்மையினர் என்பதற்காக கண்ணீர் விடவும், ரத்தம் சிந்தவும் கடவுள் விடமாட்டார். ஒரு கொடூரனை எதிர்க்க முடியாமல்  அடங்கி ஒடுங்கி இருந்தவர்கள், ஒரே நாளில் நாடே திரண்டு  அடித்து விரட்ட முடிந்ததென்றால் முடியாதது என்று எதுவும் இல்லை. நினையாத நேரத்தில், நம்ப முடியாத காரியங்களை நடத்தி முடிப்பவர் இறைவன். அதை விதி, காலம் என்று எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம் கடவுள் நம்பிக்கையில்லாதவர். இவற்றை வகுத்தவர் இறைவன், அவை அவரின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிகின்றன. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.