Jump to content

குளிர்சாதனப் பெட்டி


Recommended Posts

பதியப்பட்டது

குளிர்சாதனப் பெட்டி

அட்சரம் (இதழ் - 4)

டிசம்பர் 2002-பிப்ரவரி 2003

ஆசிரியர் - எஸ். ராமகிருஷ்ணன்

தமிழ் புனைவியலின் வரைபடம் என்ற முழக்கத்தை முகப்பில் தாங்கிவரும் `அட்சரம்' என்ற சிற்றிதழ் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் முயற்சியில் வெளிவருகிறது. புனைக்கதைகளுள் புதிய வடிவங்களை புகுத்தும் பல கதைகளை இச்சிற்றிதழ் இந்த இதழில் வழங்கியுள்ளது. பின் நவீனத்தில் அல்லது கற்பனாதீத தொர்த்த வகையைச் சேர்ந்த எழுத்துக்கள் லத்தீன் அமெரிக்காவிற்கு வெளியே எப்படி வளர்ந்து வருகிறது என்பதை இந்த இதழின் "சிறப்புப்பகுதி" என்ற மொழிபெயர்ப்பு கதைகள் உணர்த்தும். இந்தப் பகுதியிலிருந்து இசபல் ஸாஜ்ஃபெர் எழுதிய "குளிர்சாதனப் பெட்டி" என்ற பிரஞ்சுக் கதையை வாசகர்களுக்குத் தருகிறோம்)

குளிர்சாதனப் பெட்டி

-இசபெல் ஸாஜ்ஃபெர் ஃப்ரான்ஸ்

என்னுடைய பாட்டி இறந்துவிட்ட பிறகு, அவள் ஒரு இடுகாட்டிற்குப் போக மறுத்தாள். நாங்கள் என்ன சொல்ல இயலும்?

குளிர்சாதனப் பெட்டியிலிருந்த கீழ்தள அடுக்குகளை அகற்றிவிட்டு, அங்கே அவளை இடுப்புப் பகுதியிலிருந்து நேராய் நிமிர்த்தி காய்கறி வைக்கும் ட்ரேயில் பொருத்தி வைத்தோம். நாங்கள் கைப்பிடியை இழுத்துத் திறக்கும் போதெல்லாம் அவள் புன்சிரிப்பாய்க் கேட்பாள் - ஹாய், எப்படியிருக்கிறாய் இன்று? நாங்கள் குளிர்சாதனப் பெட்டியின் கதவைத் திறந்து வைத்தபடி, அவளோடு அளவளாவியபடியே காலை உணவை உட்கொள்வோம்.

அவளால் பெரிய பிரச்சனை எதுவுமில்லை. ஒரே ஒரு கஷ்டம் அவள் ஆக்கிரமித்துக் கொண்ட இடம்தான். அவளுடைய உணர்வுகளைப் புண்படுத்த விருப்பமில்லை என்றாலும் எங்களுக்கு உணவுப் பொருட்களையும், பானங்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய தேவையிருந்தது. அவளுக்குத் தெரியாமல் இரண்டாவது குளிர்சாதனப் பெட்டியொன்றை வாங்கி வந்தோம். அதை உபயோகப்படுத்தத் தொடங்கினோம். ஆனால் அது குறித்து அவளுக்கு சந்தேகம் உண்டாக அதிக நாளாகவில்லை. எங்கே போயிருந்தீர்கள்? என்று கேட்டாள் அவள். எனக்கு உங்களை உளவு பார்க்க விருப்பமொன்றுமில்லை.

ஆனால் ஒரு முழு நாள் உங்களைக் காணவில்லையென்றால் எனக்குக் கவலையாகி விடுகிறது என்று அழுதாள். நாங்கள் அவளை அணைத்துக் கொண்டோம். அவள் கழுவப்படாத கீரையாய் வாடையடித்தாள்.

என்னுடைய பெற்றோர்கள் பிரிந்துவிட முடிவு செய்தார்கள். அம்மா, மெஜோரடாவில் உள்ள ஆசிரமம் ஒன்றுக்குச் சென்றாள். அப்பா நியூயார்க் நகருக்குக் குடி பெயர்ந்தார். என்னுடைய சகோதரன் கல்லூரிக்குச் செல்ல, நான் தனியாகப் பாட்டியுடன் வீட்டில் தங்கியிருந்தேன். ஒரு நாள் இரவு என்னுடைய ஆண் நண்பன் அவள் இருக்கும் குளிர்சாதனப் பெட்டியைத் தவறுதலாகத் திறந்துவிட பயந்து போய் வீறிட்டு அலறினாள் அவள்.

அவனும் பயத்தில் அலறினான். அவனிடம் அவளைப் பற்றி நான் கட்டாயம் கூறியிருந்திருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. அதற்குப் பிறகு அவன் என்னைத் தேடி என் இடத்திற்கு ஒரு போதும் வரவேயில்லை. அம்மா ஆண்களை வீட்டில் அங்குமிங்கும் அலைய அனுமதிப்பது தொடர்பாக பாட்டி எனக்கு ஒரு நீண்ட உரையாற்றினாள். ஆனால் நான் அதை காது கொடுத்துக் கேட்கவில்லை. அவள் முகத்திலறைவதாய் குளிர்சாதனப் பெட்டியின் கதவை படீரெனச் சாத்தினேன். இது என்னைக் கொடூர மனுஷியாய்ப் புரிய வைத்தாலும் சரி, அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் அந்த வீட்டைவிட்டு வெளியேறிவிட்டேன். அக்கம்பக்கத்தார் உள்ளே வந்து மெஜோராடோவிலிருந்து அம்மா திரும்பி வரும்வரை பாட்டியைப் பார்த்துக் கொண்டார்கள்.

Posted

பாட்டி இறந்தபின்னும் இவர்களை பிரிந்திட விரும்பவில்லை ... இவர்களுடன் இருந்திட விரும்பினா...

இவர்களும் அன்பாய்தான் இருந்தார்கள்........ இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் பிரிவுகள் சில தவிர்க்கப் படக்கூடாதவை....

.....வித்தியாசமான சிந்தனையில் மொழிபெயர்ப்புக் கதை.......இணைப்புக்கு நன்றி.....

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.