Jump to content

பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? பாம்புகள் பழிவாங்குமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? பாம்புகள் பழிவாங்குமா?

  • பிரஷாந்த்
  • பிபிசி தமிழ்
8 மணி நேரங்களுக்கு முன்னர்
 

பாம்புகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாம்பு கடித்தால் உடனே நாம் என்ன செய்ய வேண்டும்? பாம்புகளால் பழிவாங்க முடியுமா? பாம்புக்கடிக்கான சிகிச்சைமுறைகள் என்ன?

இந்த கேள்விகளுக்கான பதில்களை இந்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.

பாம்புக்கடியால் ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் ஏற்படுகின்ற உயிரிழப்பில் பாதி எண்ணிக்கை இந்தியாவில் பதிவாகிறது.

2017-ம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு, பாம்புக்கடியை புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களின் பட்டியலில் முன்னிலை படுத்தியுள்ளது.

 

இதற்கு சில முக்கியமான காரணங்கள் உண்டு. இறப்புகளைப் பற்றிய போதுமான தரவுகள் இல்லாமை, பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்வகள் பெரும்பாலும் கட்டுக்கதைகளை நம்பி தவறான சிகிச்சைகளை எடுப்பது, பாம்பு விஷ எதிர்ப்பு மருந்துகளின் பற்றாக்குறை. பாம்புக்கடி விவகாரத்துல இது போன்று பல்வேறு சவால்கள் உண்டு.

இந்தியாவில் பாம்புக்கடியால் எத்தனை பேர் உயிரிழக்கின்றனர்?

ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் ஐம்பது லட்சம் பேர் பாம்புக்கடியை எதிர்கொள்வதாகவும் அதில் கிட்டத்தட்ட இருபத்து ஏழு லட்சம் விஷமுள்ள பாம்புக்கடிகள் என்றும் உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 81 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் வரை பாம்புக்கடியால் இறப்பதாக பல்வேறு அறிக்கைகள் மூலமாக தெரிய வந்துள்ளது.

பெரும்பாலான பாம்புக்கடிகள் பதிவு செய்யப்படுவதே இல்லை, ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவம் அல்லாத சிகிச்சை முறையை தேடி செல்கிறார்கள் அல்லது போதுமான மருத்துவ வசதிகள் அவர்களுக்கு கிடைப்பது இல்லை.

இந்தியாவில் இரண்டாயிரமாவது ஆண்டு முதல் 2019-வது ஆண்டு வரை 12 லட்சம் பேர் பாம்புக்கடியால் இறந்திருப்பதாக 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது. அதாவது சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 58 ஆயிரம் உயிர்கள் பாம்புக்கடியால் பறிபோகிறது.

இந்தியாவில் நிலவும் மூட நம்பிக்கைகள் என்ன?

பாம்புகள் மற்றும் பாம்புக்கடி தொடர்பாக இந்தியாவில் பல்வேறு மூடநம்பிக்கைகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கடவுள் வழிபாடு

 

பாம்புகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பொதுவாக இந்தியாவில் உள்ள சில சமூகங்கள் பாம்புகளை கடவுளாக வழிபடுகிறார்கள். தங்களின் விவசாய நிலங்களை பாதுகாப்பதற்கு கடவுள் பாம்புகளை அனுப்பி வைத்துள்ளதாக பழங்குடி சமூகங்கள் நம்புகிறார்கள்.

மேலும், பாம்புகள் தொடர்பாக இந்த சமூகங்கள் மத்தியில் நிலவும் சில நம்பிக்கைகள் பாம்புக்கடி உயிரிழப்புகள் அதிகரிப்பதற்கு காரணமாக இருப்பதாக இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்ட மருத்துவர் ராஹு கஜ்பியே தெரிவிக்கிறார்.

பாம்புகள் பழிவாங்குமா?

பாம்புகள் பழிவாங்குவதற்காக மனிதர்களை தேடி வந்து கொல்லும் என்று பல இந்திய சினிமாக்களில் காட்டப்பட்டதுண்டு. இது ஒரு மோசமான கட்டுக்கதைனு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கியமாக ஒருத்தர் ஒரு நாகப்பாம்பை அடித்து கொன்றுவிட்டால் அந்த பாம்பின் துணை அடித்து கொன்னவர தேடி வந்து பழிவாங்கும்னு பழங்குடி சமூகங்கள் நம்புவதாகவும், ஆனால் இது மோசமான கட்டுக்கதைனு மருத்துவர் கஜ்பியே தெரிவிக்கிறார். இது போன்ற சில மூட நம்பிக்கைகள் மற்றும் நிறுவப்படாத மருத்துவ சிகிச்சைகள் இந்தியாவின் சில இடங்களில் இன்னும் கடைபிடிக்கப்படுகிறது.

கடிபட்ட இடங்களில் வாய் வைத்து உறிதல்

இந்தியாவின் சில இடங்கள்ள பாம்பு கடித்தால் மருத்துவர்களை பார்க்காமல் மந்திரவாதிகளை பார்ப்பதுண்டு.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

அது மட்டும் அல்லாமல் முதலுதவி செய்வதாக நினைத்து மந்திரங்களை ஓதுவது மற்றும் நிறுவப்படாத மூலிகைகளை பயன்படுத்தும் பழக்கமும் பரவலாக உண்டு.

பாம்புக் கடித்த இடத்தை அறுத்துவிட்டு வாய் வைத்து உறிஞ்சி விஷத்தை எடுக்குறமாதிரி பல திரைப்படக் காட்சிகள் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த மாதிரி நிச்சயம் செய்யக்கூடாது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் பதிவாகும் பாம்புக்கடி எண்ணிக்கையில் 70 சதவீதம் விஷமற்ற பாம்புகள், 30 சதவீதம் விஷமுள்ள பாம்புகள் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாம்புக் கடித்த உடனே அருகில் இருக்கும் மருத்துவனைக்கு செல்ல வேண்டும்.

மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னதாக வேறு ஏதேனும் உணவோ அல்லது மாற்று மருந்துகளையோ உட்கொள்ளக் கூடாது.

கடிபட்டவர் தானாக நடந்தோ அல்லது வண்டியை ஓட்டி கொண்டோ மருத்துவமனைக்கு போக கூடாது. அவசர ஊர்தியோ அல்லது வேறு விதமான வாகனத்தில் பாதுகாப்பாக போக வேண்டும். பாம்பு கடிபட்ட இடத்தில் இருந்து காலனிகள், மோதிரம், நகைகள் மற்றும் இறுக்கமான ஆடைகள் இருந்தால் அதை கண்டிப்பாக அகற்ற வேண்டும்.

 

snakes

பட மூலாதாரம்,GETTY IMAGES

காயங்களை கழுவுதல், கீறி விடுதல், துணியை வத்து இறுக்கமாக கட்டுதல், ஏதேனும் மூலிகைகள பயன்படுத்துதல், என்று செய்வதால் ஏற்படும் நன்மைகளை விட தீமைகள் தான் அதிகம்.

குறிப்பாக, பாம்பு கடித்த உடனே ஒரு நபர் மாற்று மருத்துவம் என்ற பெயரில் நேரத்தை வீணடிக்காமல் உடனே மருத்துவமனைக்கு செல்வதுதான் சரியான வழிமுறை என்று நிபுணர்கள் உறுதியா தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் போதுமான மருந்துகள் உள்ளதா?

முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்று சொல்கின்ற மாதிரி பாம்பு விஷத்த முறிப்பதற்கும் பாம்போட விஷம் தான் பயன்படுத்தப்படுகின்றது. பாம்புகளில் இருந்து எடுக்கப்படும் விஷத்தை வைத்துதான் விஷ முறிவு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

1895-ம் ஆண்டு, இந்திய நாகப்பாம்பு விஷத்திற்கு எதிராக பிரெஞ்சு மருத்துவர் ஆல்பர்ட் கால்மேட் முதல் விஷ எதிர்ப்பு மருந்தை உருவாக்கினார்.

ஆனால், இந்தியாவில் விஷ எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்துவதில் இரண்டு முக்கியமான சவால்கள் இருப்பதாக மருத்துவர் ஷர்மா தெரிவிக்கிறார்.

 

snake

பட மூலாதாரம்,GETTY IMAGES

மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடு இருப்பதகாவும், விஷ முறிவு மருந்துகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு போறதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும் மருத்துவர் ஷர்மா கூறுகிறார்.

இதுமட்டும் இல்லாமல், நோயாளிக்கு எவ்வளவு மருந்து கொடுக்க வேண்டும் என்பது போன்ற போதுமான விழிப்புணர்வு இல்லை. மருத்துவ ஊழியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படவில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கியமான நான்கு பாம்புகள்

நீங்கள் பார்க்கும் எல்லா பாம்புகளுக்கும் விஷம் இருக்காது.

இந்தியாவில் கிட்டத்தட்ட 300 பாம்பு இனங்கள் உள்ளன. அதுல அறுபது வகையான பாம்புகள் தான் விஷமிக்கவை. அதில் குறிப்பா நான்கு பாம்புகள் தான் பெரும்பாலான பாதிப்புகளுக்கு காரணம்.

கண்ணாடி விரியன்

இந்தியாவில் காணப்படும் மிகவும் ஆபத்தான பாம்புகளில் கண்ணாடி விரியனும் ஒன்று. கண்ணாடி விரியனின் தலை முக்கோண வடிவத்தில் காணப்படும். மேலும் 'வி' வடிவத்திலான வெள்ளைநிறக் கோடும் காணப்படும். கண்ணாடி விரியன் பொதுவாக புல் மற்றும் புதர் நிறைந்த பகுதிகளில் காணப்படும்.

கட்டு விரியன்

 

பாம்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

அடுத்ததாக கட்டு விரியன் பாம்பு. இந்த பாம்பு பொதுவாக இரவு நேரத்தில்தான் அதிகமாக தென்படும். சற்று கறுமை நிறமான இதன் உடம்பில் இருக்கும் வெள்ளை நிற பட்டைகள் மூலம் இதை அடையாளப்படுத்தலாம்.

இந்திய நாகம்

நாகப்பாம்பு வெவ்வேறு வகையான நிறங்கள் மற்றும் தகவமைப்புகளை கொண்டிருக்கும். காடுகள், சமவெளிகள் மற்றும் விவசாய நிலங்களில் இது பொதுவாக காணப்படும். மேலும், மக்கள் நெருக்கம் அதிகமான நகர்ப்புறங்களிலும் இதை பார்க்க முடியும்.

சுருட்டை விரியன்

இறுதியாக சுருட்டை விரியன் பாம்பு, இதடோ வடிவம் சிறியதாக இருந்தாலும் அதோட தாக்கும் திறன் மிகவும் ஆபத்தானது. விரியன் வகைப் பாம்புகளில் சுருட்டை விரியன் பாம்புகள் பொதுவாக வளர்ச்சியில் சிறிய அளவிலேயே காணப்படும். ஆனா, இதன் விஷம் மிகவும் கொடூரமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

பாம்பு கடிச்ச உடனையே பதட்டப்படாம உடனடியாக மருத்துவமனைக்கு செல்வது சிறந்த முடிவாக இருக்கும். மொத்தத்தில் பாம்புகளிடம் இருந்து மக்களைக் காப்பாற்றவும் அதே நேரத்துல பாம்புகளின் அழிவை கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் தேவையானதாக உள்ளது.

https://www.bbc.com/tamil/science-62289118

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பு கடித்த மனிதர்கள் பற்றி நிறைய சொல்லியிருக்கு, கடித்த பாம்புகளின் நிலைமை பற்றி எதுவும் சொல்ல வில்லை......கட்டுரை ஒருபக்க சார்பாக இருக்கின்றது......!  😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

பாம்பு கடித்த மனிதர்கள் பற்றி நிறைய சொல்லியிருக்கு, கடித்த பாம்புகளின் நிலைமை பற்றி எதுவும் சொல்ல வில்லை......கட்டுரை ஒருபக்க சார்பாக இருக்கின்றது......!  😁

மனிதர்கள் கண்ணில் பட்டால் நேரே சொர்க்கம் தானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? இந்தியாவில் நிலவும் மூடநம்பிக்கைகள் என்ன? | Myths about Snakes

 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.