Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

படையினர் முன் உள்ள அடுத்த தெரிவு என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படையினர் முன் உள்ள அடுத்த தெரிவு என்ன?

-அருஸ் (வேல்ஸ்)-

விடுதலைப் புலிகளுக்கு முன்னுள்ள தெரிவுகள் என்ன? என்பதுதான் தற்போது இராணுவ ஆய்வாளர்கள் சிலரின் ஆராய்ச்சி. அதாவது, அவர்கள் வலிந்த பெரும் சமரை நடத்தப் போகின்றனரா அல்லது கடுமையான தற்காப்புச் சமரை நடத்தப் போகின்றனரா? போன்றவையே தற்போது முன்னிறுத்தி ஆராயப்பட்டு வருகின்றன. விடுதலைப் புலிகள் இந்த இரு உத்திகளில் ஒன்றைத் தான் கடைப்பிடிக்க வேண்டும் என்ற முடிவுக்கும் அவர்கள் வந்துள்ளனர்.

ஆனால், இந்த இரு உத்திகளில் ஒன்றின் அடிப்படையில் தான் செயற்பட வேண்டும் என்ற அழுத்தம் விடுதலைப் புலிகளுக்கு கிடையாது. அதாவது, அரசியல் அழுத்தங்களோ, முடிந்து போகும் அல்லது பறிபோகும் பதவிக்காலங்களோ அவர்களிடம் இல்லை. சுருக்கமாக சொல்லப் போனால் அவர்களின் நடவடிக்கைகளில் அரசியல் தலையீடுகள் இருப்பதில்லை மாறாக விடுதலையின் குறிக்கோள் மட்டும் இருக்கும்.

மேலும், அவர்கள் தாக்குதல் சமரை அல்லது தற்பாதுகாப்பு சமரை மட்டுமே நடத்த வேண்டும் என்ற தன்மையை மட்டுமே கொண்டு இயங்குவதில்லை. தேவை ஏற்படும் போது இரு சமரையும் எதிர்கொள்ளும் ஆற்றல்களையும் அவர்கள் வெளிப்படுத்துவதுண்டு. அதனை கடந்த காலங்களில் நிரூபித்தும் இருக்கின்றனர்.

உதாரணமாக, ஜெயசிக்குறு படை நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் முறியடிப்புச் சமரை நடத்திக் கொண்டிருந்தவேளை 1998 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கிளிநொச்சி படைத்தளம் வலிந்த தாக்குதல் மூலம் அழிக்கப்பட்டமை நினைவிருக்கலாம். அதாவது, வலிந்த தாக்குதலையா அல்லது தற்காப்புச் சமரையா நடத்த வேண்டும் என்பதை களநிலைமைகளைப் பொறுத்தே அவர்களே தீர்மானிப்பதுண்டு.

ஆனால், தற்போதைய முக்கிய கேள்வி என்னவெனில், விடுதலைப் புலிகளின் முன்னுள்ள தெரிவுகளை விட படையினரின் முன்னுள்ள அடுத்த தெரிவுகள் என்ன என்பதுதான். கிழக்கு முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளதாக கொண்டாடிய பின்னர் அம்பாறையின் கஞ்சிகுடிச்சாறு காட்டுப்பகுதிகளில் மோதல்கள் நடந்துள்ளன. அவை தவிர கிழக்கின் பாதுகாப்புக்களை எந்த இடத்திலும் தளர்த்த முடியாத நிலையிலும் படையினர் உள்ளனர். கிழக்கை கைப்பற்றி விடுதலைப் புலிகளை வெளியேற்றிவிட்டு வடக்கை நோக்கி படையினரை நகர்த்தலாம் என்ற அரசாங்கத்தின் உத்திகள் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளன.

30,000 இராணுவத்தினரை படையில் சேர்த்து கிழக்கை தக்கவைத்துக் கொண்டு வடக்கு நோக்கிய படைநடவடிக்கையை ஆரம் பிக்கலாம் என்ற திட்டத்திற்கும் பல நெருக்கடிகள் உண்டு. அவ்வளவு பெரும் தொகையில் படையில் இணைய இளைஞர்கள் முன் வருவார்களா என்பது ஒருபுறமிருக்க, சேர்க்கும் படையினரை பராமரிக்க தேவையான நிதி வளங்களும் அரசுக்கு போதாது.

போர் முடிந்ததும் எஞ்சியுள்ள படையினரை கலைத்துவிடலாம் என்பதெல்லாம் இலங்கையின் வரலாற்றில் எப்போதும் பொருந்தியதில்லை. மேலும் போரில் கொல்லப்படும், காயமடையும், தப்பியோடும் படையினரின் எண்ணிக்கைகளையும் மீறி சேர்க்கப்படும் படையினர் அரசாங்கத்தின் படைச்சேர்ப்பு இலக்கை அடைவார்களா என்பதும் சந்தேகமே.

பல பத்தாயிரம் படையினர் கடுமையான சூட்டு ஆதரவுடன் கிழக்கை கைப்பற்றியமை அரசின் இராணுவ வெற்றிகள் என்ற கோசத்தை கடந்து மிகவும் வியப்பான கணிப்புக்களை படை வட்டாரங்களில் ஏற்படுத்தியிருக்கும். ஏனெனில் இவ்வளவு தொகையான படையினர், சிறப்பு படையினர், சூடுவலு என்பன முன்னர் பல தடவை கிழக்கை படையினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த போது பயன்படுத்தப்படவில்லை.

எனவேதான் வடபோர் முனை மீதான அச்சங்கள் தென்னிலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதற்கு சான்று பகருவதைப் பேலவே மடுவிற்கு கிழக்குப்புறமுள்ள களமுனையும் அமைந்துள்ளது.

முழு இலங்கையிலும் உள்ள பாதுகாப்பு அரண்களின் பலத்தை கருதினால் வடபோர் முனையின் நாகர்கோவில் தொடக்கம் முகமாலை, கிளாலி வரையிலான பகுதியே இலங்கையிலேயே மிகவும் பாதுகாப்பு மிக்க பகுதியாக கருதுப்படுகிறது.

இந்த களமுனையில் இராணுவத்தின் பகுதியிலும், விடுதலைப் புலிகளின் பகுதியிலும் அவர்களின் பலப்படுத்தல்கள் மிகவும் காத்திரமானவை. 2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முகமாலையில் ஏற்பட்ட சமரும் அதனை உணர்த்தியிருந்தது. இதற்கு அடுத்தபடியாக வவுனியா ஓமந்தை முன்னரங்கு, மணலாறுக் களமுனை, மன்னார் என வடபோர் முனையின் முன்னரங்குகள் எல்லாம் மிகவும் பலம் வாய்ந்தவை என்பது வெளிப்படையானவை.

ஆனாலும் பரந்த எல்லைகளைக் கொண்ட மன்னார் களமுனையில் விடுதலைப் புலிகளின் பலம் சிதறலடைந்திருக்கும் என்ற கணிப்புடன்தான் அண்மைய காலங்களில் புதிதாக உருவாக்கப்பட்ட 57 ஆவது படையணியும், 56 ஆவது படையணியின் ஒரு பகுதியும், 53 ஆவது படையணியின் சிறப்பு கொமோண்டோ அணியும் இணைந்து 16 இற்கு மேற்பட்ட படை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருந்தன.

இந்த அணியினரின் நடவடிக்கைகள் மீதான எதிர்ச்சமர், விளாத்திக்குளம், முள்ளிக்குளம் மீதான வலிந்த தாக்குதல் என்பன வடபோர் முனையின் உக்கிரம் தொடர்பான சரியான கணிப்புக்களை படைத்தரப்பால் மேற்கொள்ள முடியாதிருந்தன.

எனவேதான் வடபோர் முனை மற்றும் விடுதலைப் புலிகளின் போரியல் உத்திகள் தொடர்பாக பலவிதமான ஊகங்களை படைத்தரப்பும், அரசு சார்பு ஊடகங்களும் முன்வைத்து வருகின்றன. விடுதலைப் புலிகளின் உத்திகள், நகர்வுகள் என்ன என்பது தொடர்பாக தமது ஊகங்களை வெளியிடும் இவர்கள் படையினரின் அடுத்த நகர்வு எதுவாக இருக்கும் என்பது தொடர்பான நிலையை வெற்றிடமாகவே விட்டுள்ளனர்.

அதாவது கிழக்கிற்கு பின்னர் அரசின் நகர்வுகள் என்ன? வடபோர் முனையில் அவர்கள் கடைப்பிடிக்கப் போகும் உத்திகள் என்ன? மீண்டும் ஒரு ஜெயசிக்குறு போன்ற நடவடிக்கையை இலங்கை அரசால் தாங்க முடியுமா? என்பன போன்றவை அடிப்படையான கேள்விகள்.

2001 ஆம் ஆண்டு உருவான படைவலுச் சமவலுவை வெளிநாட்டு சக்தி ஒன்றின் இராணுவத் தலையீடு இலகுவாக மாற்றிவிடக் கூடும் என்ற கருத்து போர் நிறுத்தகாலத்தில் ஏற்பட்டிருந்தது. இது ரணிலின் நகர்வுகள் தொடர்பான சந்தேகங்கள் எழுந்த போது தீவிரமாக சிந்திக்கப்பட்ட ஒன்று.

ஆனால், நேரடியான தலையீடுகளை தவிர்த்த ஓரு சில ஆசிய மற்றும் மேற்குலக நாடுகள் நேரடியற்ற படைக்கல உதவிகள் மற்றும் பயிற்சிகள், ஆலோசனைகள் போன்றவை மூலம் படைச் சமவலுவை மாற்றியமைக்க முற்பட்டதையே பிரகடனப் படுத்தப்படாத நாலாம் கட்ட ஈழப்போர் எடுத்துக்காட்டியுள்ளது.

எனினும் அந்த நகர்வுகளில் இருந்து விடுதலைப் புலிகள் தம்மை காத்துக் கொண்டது அரசினதும் அதற்கு ஒத்தாசை புரிந்தவர்களினதும் அடுத்த கட்ட நடைவடிக்கைகளில் பெரும் தேக்கநிலையை உருவாக்கியுள்ளது.

தற்போது படையினர் மத்தியில் உள்ள தெரிவுகள் இரண்டு தான். ஒன்று யாழ். குடாவை தற்காப்புச் சமர் மூலம் தக்கவைப்பது, இரண்டாவது வன்னியில் உள்ள விடுதலைப் புலிகளின் கவனத்தை திசை திருப்பும் முகமாக மட்டுப்படுத்தப்பட்ட படை நடைவடிக்கைகளை மேற்கொள்வது.

அதன் முன்னோடியாகவே பலப்படுத்தப்பட்ட நாகர்கோவில் முகமாலை, கிளாலி அச்சு அதன் பின்தளங்களிலும் மேலும் தொடர்ந்து பலப்படுத்தப்பட்டு வருகின்றது. முகமாலை தொடக்கம் கொடிகாமம் வரையிலும் இராணுவ வலயமாகவே காட்சி தருவதுடன், எண்ணுக்கணக்கற்ற காவல ரண்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

புதிதாக உருவாக்கப்பட்ட கவசத்தாக்குதல் படையணியும் வரணி பின்தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது முகமாலை முன்னரங்கு தகர்ந்து விடாது பாதுகாப்பதில் படைத்தரப்பு மிகவும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.

விடுதலைப் புலிகளிடம் தற்போது உள்ள 130 மி.மீ, 122 மி.மீ, 152 மி.மீ பீரங்கிகளின் சுடு வலுவானது, அவர்கள் வரணிப் பகுதிவரை முன்நகர்ந்தால் யாழ். குடாநாட்டின் பலாலி, கங்கேசன்துறை போன்ற பலமான பின்தளங்களின் செயற்பாடுகளை முடக்கப் போதுமானது. இது படையினருக்கான விநியோகங்களிலும் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம் என்பது படையினரின் கணிப்பு.

வன்னிக் களமுனையை பொறுத்த வரையில் வலிந்த தாக்குதல்கள், கடுமையான வான் தாக்குதல்கள் போன்றவற்றின் மூலம் விடுதலைப் புலிகளுக்கு தொடர்ச்சியான நெருக்கடிகளை கொடுப்பதுடன் அவர்களின் கவனத்தையும் திருப்ப படைத்தரப்பு முயன்று வருகின்றது. அதன் ஒரு அங்கமாகவே வன்னிப் பகுதிக்கான இராணுவத்தின் கட்டளைப் பீடங்கள் மற்றும் களநிலைத் தளபதிகள் மத்தியிலும் பெரும் மாற்றங்களை அரசு மேற்கொண்டுள்ளது.

எனினும் படையினர் முன் உள்ள இந்த இரு உத்திகளில் தென்னிலங்கையின் அரசியல் நெருக்கடிகள், நிதி நெருக்கடி, வாழ்க்கைச்செலவு அதிகரிப்புக்கள் என்பனவும் கிழக்கின் எதிர்கால நிலையும் காத்திரமான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

கிழக்கில் தீவிரமடையப் போகும் கெரில்லா போர் முறையை எதிர்கொள்வதும் படையினருக்கு இலகுவானதாக இருக்கப்போவதில்லை. ஏனெனில் கெரில்லா போர் முறைக்கு படையினரை அதிகளவில் முடக்கும் ஆளுமை உள்ளது.

இதற்கான அண்மைக்கால உதாரணமாக கடந்த ஜூலை மாதம் 31 ஆம் நாள் நள்ளிரவுடன் வட அயர்லாந்தில் தனது படை நடவடிக்கைகளை முற்றாக பிரித்தானிய இராணுவம் நிறுத்தியுள்ளதை குறிப்பிடலாம். வட அயர்லாந்தில் இறுதியாக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த பிரித்தானிய இராணுவத்தின் 39 ஆவது இலகு காலாட் பிரிகேட் தனது நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதுடன் படை நடவடிக்கைகள் முற்றாக முடிவுக்கு வந்துள்ளன.

ஏறத்தாழ 38 வருடங்கள் 300,000 படையினர் கெரில்லாக்களுக்கு எதிரான சமரில் ஈடுபட்டிருந்த போதும், அங்கு நடைபெற்ற மோதல்களின் தீவிரத்தை விட அதனால் முடக்கப்பட்ட மற்றும் சீரழிக்கப்பட்ட படையினரின் வளங்கள் தான் அதிகம்.

எனவே கிழக்கும் படையினரின் வளங்களை முடக்கும் மற்றும் சீரழிக்கும் தந்திரமாகவே தற்போது நோக்கப்படுகின்றது. படையினரின் தற்போதைய படைபலம், களநிலைமைகள், விடுதலைப் புலிகளின் பலம், போரியல் உத்திகளை போன்றவற்றை கருதும் போது ஒன்று தெளிவானது எந்த ஒரு களமுனையில் படையினர் முடங்கிப் போனாலும் அது எதிர்கால போரின் போக்கையே முற்றாக மாற்றவல்லது.

அதாவது, முதலில் போருக்கு செல்வது அல்லது முதலில் அரைகுறை வெற்றிகளை கொண்டாடுவது என்பவற்றிற்கு அப்பால் யாரிடம் தரமான போரியல் உத்திகள் உள்ளன என்பதே இறுதி வெற்றியை பெரும்பாலும் தீர்மானிப்பவையாக அமைவதுண்டு.

'போரில் வெற்றியீட்டுபவர்கள் முதலில் தாம் வகுக்கும் திட்டங்களில் வெற்றியீட்டிய பின்னரே போருக்கு செல்வார்கள், ஆனால் தோற்பவர்கள் போருக்கு சென்ற பின்னர் அங்கிருந்து வெற்றியை தேடுபவர்கள்" என்ற சீன போரியல் மேதை சன் சூவின் (ளுரn வுணர) கருத்தும் அதனையே பிரதிபலித்து நிற்கின்ன?

நன்றி தமிழ்நாதம்

ஆனால், இந்த இரு உத்திகளில் ஒன்றின் அடிப்படையில் தான் செயற்பட வேண்டும் என்ற அழுத்தம் விடுதலைப் புலிகளுக்கு கிடையாது. அதாவது, அரசியல் அழுத்தங்களோ, முடிந்து போகும் அல்லது பறிபோகும் பதவிக்காலங்களோ அவர்களிடம் இல்லை. சுருக்கமாக சொல்லப் போனால் அவர்களின் நடவடிக்கைகளில் அரசியல் தலையீடுகள் இருப்பதில்லை மாறாக விடுதலையின் குறிக்கோள் மட்டும் இருக்கும்[/size].

2001 ஆம் ஆண்டு உருவான படைவலுச் சமவலுவை வெளிநாட்டு சக்தி ஒன்றின் இராணுவத் தலையீடு இலகுவாக மாற்றிவிடக் கூடும் என்ற கருத்து போர் நிறுத்தகாலத்தில் ஏற்பட்டிருந்தது. இது ரணிலின் நகர்வுகள் தொடர்பான சந்தேகங்கள் எழுந்த போது தீவிரமாக சிந்திக்கப்பட்ட ஒன்று.

ஆனால், நேரடியான தலையீடுகளை தவிர்த்த ஓரு சில ஆசிய மற்றும் மேற்குலக நாடுகள் நேரடியற்ற படைக்கல உதவிகள் மற்றும் பயிற்சிகள், ஆலோசனைகள் போன்றவை மூலம் படைச் சமவலுவை மாற்றியமைக்க முற்பட்டதையே பிரகடனப் படுத்தப்படாத நாலாம் கட்ட ஈழப்போர் எடுத்துக்காட்டியுள்ளது.

"போரில் வெற்றியீட்டுபவர்கள் முதலில் தாம் வகுக்கும் திட்டங்களில் வெற்றியீட்டிய பின்னரே போருக்கு செல்வார்கள், ஆனால் தோற்பவர்கள் போருக்கு சென்ற பின்னர் அங்கிருந்து வெற்றியை தேடுபவர்கள்"

இதுதான் தமிழர் தலைமையின் இராணுவ, அரசியல் சாணக்கியம்.

:(:(:rolleyes: முதலில் போருக்கு செல்வது அல்லது முதலில் அரைகுறை வெற்றிகளை கொண்டாடுவது என்பவற்றிற்கு அப்பால் யாரிடம் தரமான போரியல் உத்திகள் உள்ளன என்பதே இறுதி வெற்றியை பெரும்பாலும் தீர்மானிப்பவையாக அமைவதுண்டு. :o:o:o

இதுதான் மகிந்த & C0. சா....கியம்.

Edited by தமிழினீ

  • கருத்துக்கள உறவுகள்

  • சர்வதேசத்திடம் உள்ள தெரிவு புலிகளைப் பலமிழக்கச் செய்து தமிழர்களுக்கு ஒரு அரைகுறைத் தீர்வைக் கொடுத்து இலங்கைத்தீவில் நடக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்.
  • சிங்கள அரசிடம் உள்ள தெரிவு தமிழ் மக்களைப் பூண்டோடு ஒழித்து அல்லது இலங்கைத் தீவை விட்டு விரட்டி எல்லாப் பகுதிகளையும் சிங்கள மயமாக்கி சிங்கள இனத்தின் இருப்பை உறுதி செய்யவேண்டும்.
  • தமிழர் முன்னுள்ள ஒரேயொரு தெரிவு அழுத்தங்களையும், அழிவுகளையும், அவலங்களையும் எதிர்கொண்டு தமிழீழத் தனியரசை உருவாக்கி எதிர்கால சந்ததியினரை தலைநிமிர்ந்து வாழவைக்கவேண்டும்.

இன்னமும் சிறிது காலத்திற்கு தமிழீழத்தின் நிழலரசை கொண்டு தமது நிர்வாகத்திறனை வெளிப்படுத்தும் போது சில சக்திகள் தமிழீழத்தை அங்கீகரிக்கக் கூடும். அங்கீகாரத்திற்காக பொறுத்திருக்க வேண்டிய காலமும் இதுதான். இது ஒரு தந்திரோபாயக் காத்திருப்பு. புலத்தில் உள்ளவர்களையும் இவ்வாறான நகர்வுகளிலேயே ஈடுபடும்படி புலிகள் கூறியிருப்பது இதன் ஓரு பக்கத் தெரிவாகவே கருதப்பட வேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளுக்கு முன்னுள்ள தெரிவுகள் என்ன? என்பதுதான் தற்போது இராணுவ ஆய்வாளர்கள் சிலரின் ஆராய்ச்சி. அதாவது அவர்கள் வலிந்த பெரும் சமரை நடத்தப் போகின்றனரா அல்லது கடுமையான தற்காப்புச் சமரை நடத்தப் போகின்றனரா? போன்றவையே தற்போது முன்னிறுத்தி ஆராயப்பட்டு வருகின்றன. விடுதலைப் புலிகள் இந்த இரு உத்திகளில் ஒன்றைத் தான் கடைப்பிடிக்க வேண்டும் என்ற முடிவுக்கும் அவர்கள் வந்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் உத்திகள் என்பது எவரினாலுமே ஊகிக்க முடியாத ஒரு விடயம். இருந்தாலும் பத்திரிகைக்கு விளம்பரம் நோக்கமாகவும்..ஒரு சிலர் மக்களை குழப்பும் முகமாகவும் வேறுபட்ட ஆய்வுகளை முன்வைத்து வருகின்றனர்.

ஸ்ரீலங்கா படைத்தரப்பினரைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகளின் பொறுமைப் போக்கையிட்டு மிகவும் குழம்பி, பயபீதியில் இருக்கின்றனர் என்பது அரசுத்தரப்புக்கு நன்றாகத் தெரியும்.

இவர்களை உசார் படுத்தவே சிறு சிறு வெற்றியையும் பெரிசு படுத்தி விளம்பரப் படுத்துகின்றனர்.

வடபோர் முனை மற்றும் விடுதலைப் புலிகளின் போரியல் உத்திகள் தொடர்பாக பலவிதமான ஊகங்களை படைத்தரப்பும்இ அரசு சார்பு ஊடகங்களும் முன்வைத்து வருகின்றன. விடுதலைப் புலிகளின் உத்திகள்இ நகர்வுகள் என்ன என்பது தொடர்பாக தமது ஊகங்களை வெளியிடும் இவர்கள் படையினரின் அடுத்த நகர்வு எதுவாக இருக்கும் என்பது தொடர்பான நிலையை வெற்றிடமாகவே விட்டுள்ளனர்.

உண்மையில் இது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Heavy fighting in the seas off Pulmoaddai - LTTE

[TamilNet, Sunday, 12 August 2007, 23:02 GMT]

Three Sri Lanka Navy Fast Attack Crafts (FACs) were damaged and more than 20 Dvora gunboats were chased away by the Sea Tigers, the naval force of the Liberation Tigers of Tamileelam (LTTE), towards Trincomalee port Sunday night after a fierce sea battle off Pulmoaddai that lasted from 10:00 p.m. till 2:30 a.m. Monday, according to Sea Tiger officials in Vanni. Three Sea Tiger fighters were killed in action in the battle.

More than 20 Israeli-built Dvora FACs were "chased away to Trincomalee port after 4 hours of fierce fighting," a Sea Tiger official told TamilNet.

Sri Lankan military engaged in heavy artillery firing towards sea from their positions in Kokki'laay, Kokkuththoduvaay and Pulmoaddai.

A simillar battle off the Pulmoaddai seas was reported a month ago, on 08 July 2007 in the same location.

Previous articles:

12.08.07 LTTE fires mortars towards Weli Oya, says SLA

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திங்கள் 13-08-2007 06:18 மணி தமிழீழம் ஜசெந்தமிழ்ஸ

புல்மோட்டை கடலில் கடும் மோதல் : 3 டோறா சேதம்

திருமலை புல்மோட்டை கடற்பரப்பில் ஞாயிறு இரவு 10.00 மணிமுதல் அதிகாலை 2.30 மணிவரை விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா கடற்படையினருக்கும் இடையே கடும் கடற்சமர் இடம்பெற்றுள்ளது. சுமார் 20 க்கு மேற்பட்ட சிறீலங்கா கடற்படை டோரா அதிவேக படகுகள் மோதல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

சுமார் நான்கு மணிநேரம் இடம்பெற்ற இத்தாக்குதலில் 3 அதிவேக டோராபீரங்கிப்படகுகள் சேதமடைந்துள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சமரில் மூன்று விடுதலைப்புலிகள் வீரச்சாவடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.