Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாரியாரும் நம் தாய்த்தமிழும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாரியாரும் நம் தாய்த்தமிழும்!

வாரியாருக்கு தமிழை பிடிக்காது, வடமொழியைத்தான் பிடிக்கும் என்று சிலர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். அவர்களுக்கான எதிர்வினையே இந்தப் பதிவு.

கிருபானந்த வாரியார் சொற்பொழிவு ஆற்றுவதில் வல்லவராக விளங்கினார். கம்பராமாயணம், கந்தபுராணம், மகாபாரதம், திருப்புகழ், திருவருட்பா, திருமுறைகள் இவருக்கு தண்ணீர் பட்டபாடு. இவர் தமிழ் சொற்பொழிவு ஆற்ற தொடங்கி விட்டால் போதும். கூட்டத்தில் உள்ளவர்கள் மகுடிக்கு அடங்கிய பாம்பு போல அப்படியே சொக்கி விடுவார்கள். சொற்பொழிவுக்கு இடை இடையே நகைச்சுவையை கலந்து பேசி மக்களை சிரிக்க வைத்து, சிந்திக்க செய்வது வாரியாரின் தனி பாணி. எதைச் சொன்னாலும் சுவையாக சொல்லும் திறமை படைத்தவர்.

கிருபானந்த வாரியார் தம் சொற்பொழிவில் ஒரு பாடலைப்பாடி இந்தப் பாடல் முழுவதும் ஒரு மாத்திரையிலேயே எழுதியிருக்கிறார் அருணகிரிநாதர் என்று சொன்னார். அந்தப் பாடலில் "அம்மை" என்று ஒரு சொல் வந்தது. சொற்பொழிவு முடிந்து திரும்புகையில் "சுவாமி! 'அம்மை' யில் வரும் 'ஐ' இரண்டு மாத்திரையாயிற்றே!" என்று ஒருவர் கேட்டார். அதற்கு உடனே வாரியார், "ஆம், 'ஐ' க்கு 2 மாத்திரை தான், ஆனால் இந்த 'ஐ'க்கு பெயர் ஐகாரக் குறுக்கம், எனவே ஒரு எழுத்து தான்" என்று விளக்கினார். இப்படி தமிழை கரைத்துக் குடித்த வாரியாரை வடமொழி ஆதரவாளர் என்று சிலர் சொல்வது நகைச்சுவையின் உச்சகட்டம்!

இலக்கணமே நன்கு படித்த பலருக்குத் தலைக்கனம். சிலரோ பயந்து ஓடுவார்கள். அதில் இந்த ஐகாரக் குறுக்கம், ஓகாரக்குறுக்கம், குற்றியலுகரம், குற்றியலிகரம், அளபெடை என்றால் போதும். அவ்வளவுதான். ஆளை விட்டாலே போதுமென்று பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடி ஒளிவர்! ஆனால் வாரியார் அப்படி அல்ல. தமிழின் அமுதத்தை முழுமையாகப் பருகியவர்.

வாரியார் சுவாமிகள் ஒரு தமிழ்ப் பெருங்கடல். நினைத்த பொழுதில் விரும்பிய கருத்தில் வெண்பாக்களை இலக்கணப் பிழையின்றி வடிக்கும் தெய்வத் தமிழர். யாராவது போய், மகளுக்கோ மகனுக்கோ கல்யாணம் என்றாலோ வீட்டு விசேசம் என்றாலோ அவர் உடனே அவர்களின் பெயர்களை வைத்தே வாழ்த்து வெண்பா எழுதும் திறமை கொண்டவர். இதனை அவரின் பக்தர்களிடமே கேட்டுத் தெளிவு பெறலாம்.

திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் பல்லாண்டு காலம் ஆசிரியராக இருந்து படைத்த திருப்புகழமிர்தம் என்னும் மாத இதழ்களைப் பற்றித் தெரியுமா இந்த வடமொழி ஆதரவாளர்களுக்கு? வாரியாரைப் போலத் தமிழை வாரி யார் தந்தார்? காரியார் மேகம் பொழியும் மழையைப் போல தமிழ் மழை பொழிந்தவர் வாரியார்.

"ஆன்மீக தமிழ்ப்பழம் அனைத்து நாட்டு தமிழர்களையும் கவலைக்குள்ளாக்கி இதோ தருவில் இருந்து உதிர்ந்து விட்டது. அந்த சிவந்த மேனியில் சினம் அரும்பி பார்த்ததில்லை. எதனையும் சிரித்த முகத்துடன் எதிர்கொள்ளும் இனிய இயல்புக்குச் சொந்தக்காரரான வாரியார், ஆன்மீகத் தமிழ்ப் பழமாக விளங்கி, என்றும் அழியாத புகழை நிலைநாட்டி விட்டு, இயற்கை தாயின் மடியில் விழுந்துவிட்டார்" என்றார் கருணாநிதி வாரியார் இறந்தபோது. தமிழ்ப் பெருங்கடல் என்று நாத்திகரான கருணாநிதியே போற்றிய அந்த ஆத்திகப் பெருங்கடல் வாரியார்.

வியாபாரிகளே, நிங்கள் உங்கள் கடையில் எந்தப் படத்தை வேண்டுமானாலும் மாட்டுங்கள்; ஆனால் கலப்படம் மட்டும் வேண்டாம்! - கிருபானாந்த வாரியார்.

"நேற்று" என்பது உடைந்த மண் பானை; "நாளை" என்பது மதில் மேல் பூனை; "இன்று" என்பது அழகிய ஒர் வீணை! - கிருபானாந்த வாரியார்.

இந்த இரண்டு வாசகங்களும் உணர்த்தும் கருத்துக்கள் ஆழமானவை, ஆனால் சொல்லிய விதமோ மிக மிக எளிதானவை. இதை சிந்திக்கும் பொழுது, நம்மை அறியாமல், நாமே உணர்கிறோம். நம் தமிழ் மொழிதான் எத்தனை அழகானது!" ஆனால் வடமொழியை ஆதரிக்கும் கழுதைகளுக்குத் தெரியுமா கற்பூர வாசனை?

ஒருமுறை வாரியார் சுவாமிகள் கூட்டத்தில் இருந்த ஒரு சிறுவனைப் பார்த்து, " முருகப் பெருமானின் தந்தை பெயர் என்ன?" என்று கேட்டார். சினிமா பார்த்த ஞாபகத்தில் அந்த சிறுவனும் உடனே "சிவாஜி" எனப் பதிலுரைத்தான். சுற்றியிருந்த மற்றவர்கள் அச்சிறுவனை கடிந்தனர். உடனே வாரியார், "அவன் சரியாகத்தானே கூறியுள்ளான், அவனை ஏன் கடிந்து கொள்கிறீர்கள்? பெரியவர்களை மரியாதையாக விளிக்கும் போது ஹிந்தியில் ஜீ என்று இறுதியில் சேர்த்து சொல்வது வழக்கம். அவ்வாறே இவனும் முருகனின் அப்பனை மரியாதையுடன் விளித்துள்ளான். அவன் சொன்னது சரியே" என்று சிவாஜிக்கு புது அர்த்தம் சொல்லி நிலைமையைச் சமாளித்தவர் வாரியார்.

வாரியார் அடிக்கடி சொல்வார். முந்துதமிழ் என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? தமிழ் முந்துமாம். எங்கே முந்தும்? ஒரு போட்டியில். தடித்த, கனமான எழுத்துகள் உள்ள வடமொழி இன்று பேச்சுப் பயன்பாட்டிலிருந்தே ஒழிந்து செத்துப்போன நிலை. ஆனால் முன்பிறந்த மூத்த பழைய மொழியான நம் தமிழ்.. இன்னமும் முடிந்த வரையில் தன்னுடைய தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொண்டு பேச்சு வழக்கிலும் உள்ளது. எழுத்து வழக்கிலும் உள்ளது. நாளுக்குநாள் அதன் மெருகு கூடிக்கொண்டே வருகிறது. ஒல்லியானவனும் கனமானவனும் ஒரு பந்தயத்தில் ஓடினால், கனமில்லாத ஒல்லியானவன் முந்துவான் அல்லவா? அதுபோல நம் தமிழ் எளிதில் முந்தும்! என்று தொடர்வார் தமிழ் பற்றாளர் வாரியார்

ஆக்கம் : பெரியர் தொண்டன் கருப்பு சதீஸ்

- வெப்பீழம்

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்புஜிக்கு நன்றி. :D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாரியாரும் நம் தாய்த்தமிழும்!

நம் தமிழ் மொழிதான் எத்தனை அழகானது!" ஆனால் வடமொழியை ஆதரிக்கும் கழுதைகளுக்குத் தெரியுமா கற்பூர வாசனை?

ஒருமுறை வாரியார் சுவாமிகள் கூட்டத்தில் இருந்த ஒரு சிறுவனைப் பார்த்து, " முருகப் பெருமானின் தந்தை பெயர் என்ன?" என்று கேட்டார். சினிமா பார்த்த ஞாபகத்தில் அந்த சிறுவனும் உடனே " சிவாஜி" எனப் பதிலுரைத்தான். சுற்றியிருந்த மற்றவர்கள் அச்சிறுவனை கடிந்தனர். உடனே வாரியார், "அவன் சரியாகத்தானே கூறியுள்ளான், அவனை ஏன் கடிந்து கொள்கிறீர்கள்? பெரியவர்களை மரியாதையாக விளிக்கும் போது ஹிந்தியில் ஜீ என்று இறுதியில் சேர்த்து சொல்வது வழக்கம். அவ்வாறே இவனும் முருகனின் அப்பனை மரியாதையுடன் விளித்துள்ளான். அவன் சொன்னது சரியே" என்று சிவாஜிக்கு புது அர்த்தம் சொல்லி நிலைமையைச் சமாளித்தவர் வாரியார்.

ஆக்கம் : பெரியர் தொண்டன் கருப்பு சதீஸ்

- வெப்பீழம்

இந்த கருத்துக்கு சுகன் அண்ணா பதில் கூறுவார்கள்.

B)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுகனண்னை வரமாட்டார் பதில் தரமாட்டார். "வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் "ஒளவையார் எழுதிய மூதுரை எண்டு தெரியாதவர், அதிலயிருந்த சில வரிகளான "துப்பார் திருமேனி தும்பிக்கையான்பாதம் தப்பாமல் சார்பார் தமக்கு" என்ற வரிகளை எடுத்து தாறுமாறா சொல்லைப் பிரிச்சு அடுக்கி மூலிகையெண்டு பேரும் குடுத்து சில்மால் பண்ணுறவர், தான் ஆத்திகனுமில்ல நாத்திகனுமில்லையெண்டு இடையில பாழயத்தம்மன் எண்டு பினயிறவர் திருமுருக கிருபானந்த வாரியாருடைய சிவன் பார்வையைப்பற்றி எழுத வருவாரோ?

:D

Edited by Aadhi

  • 5 weeks later...

கிருபானந்த வாரியார் சொற்பொழிவு as mp-3 free download

அரிச்சந்திரன்

முதற்பாகம் 30:53 நிமிடம் 12,976,000 bytes

http://www.bestsharing.com/files/2ETaL9293...Hari_1.mp3.html

இறுதிபாகம் 31:08 நிமிடம் 13,078,528 bytes

http://www.bestsharing.com/files/glKieZi29...Hari_2.mp3.html

================== ================== ==================

பெண்ணின் பெருமை

முதல் பாகம் 6,184,960 bytes, 883 seconds(14.43)

http://www.bestsharing.com/files/ZJIvn2937...umai_1.mp3.html

இறுதி பாகம் 6,338,560 bytes, 905 seconds (15.05)

http://www.bestsharing.com/files/jLry9zq29...umai_2.mp3.html

கந்தன் கருனை

முதல் பாகம் http://www.bestsharing.com/files/LtT9K2y29...unai_1.mp3.html

இறுதி பாகம் http://www.bestsharing.com/files/OkA5W2946...unai_2.mp3.html

தாயுமானவர்

முதல் பாகம் http://www.bestsharing.com/files/v0c6fE294...avar_1.mp3.html

இறுதி பாகம் http://www.bestsharing.com/files/MIeLx2946...avar_2.mp3.html

பிரகலாதர்

முதல் பாகம் http://www.bestsharing.com/files/ClMBWj295...thar_1.mp3.html

இறுதி பாகம் http://www.bestsharing.com/files/Lj0HBM295...thar_2.mp3.html

வள்ளி திருமணம்.

முதல் பாகம் http://www.bestsharing.com/files/AGqye5x29...anam_1.mp3.html

இறுதி பாகம் http://www.bestsharing.com/files/wnkTb2951...anam_2.mp3.html

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10292 posted by asho

வாரியார் பற்றிய இனிய பல தகவல்களைத் தந்த கந்தப்புவிற்கும் தேவப்பிரியாவிற்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.

கிருகானந்தவாரியர் எங்கட ஊருக்கும் ஒருக்கா வந்தவர். உவர் உப்படித்தான் கேள்வி கேப்பார் என்டு கேள்விப்பட்டு நானும் சமயப்புத்தகத்தை எடுத்துப் படிக்க அதை பார்த்து ஏங்கிப்போன என்னை பெத்த அப்பர் ஏங்கிப்போய் குசினிக்க போய் அம்மாவிடம் ரகசியமா " என்னடி நீ பெத்த அசைவம் சைவப்புத்தகத்தொட நிக்குது" என்டு கேட்டது மறக்கல.

வழமையா பள்ளிக்கூடத்தில் நடக்கிற மாதிரி நானும் பதில் சொல்லல. வாரியார் சரியாக பதில் சொல்லும் குழந்தைகளுக்கு அன்பாக கொடுக்கும் சிறுபுத்தக பரீசும் கிடைக்கல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Aadhi Posted Aug 19 2007, 10:32 AM

சுகனண்னை வரமாட்டார் பதில் தரமாட்டார். "வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் "ஒளவையார் எழுதிய மூதுரை எண்டு தெரியாதவர், அதிலயிருந்த சில வரிகளான "துப்பார் திருமேனி தும்பிக்கையான்பாதம் தப்பாமல் சார்பார் தமக்கு" என்ற வரிகளை எடுத்து தாறுமாறா சொல்லைப் பிரிச்சு அடுக்கி மூலிகையெண்டு பேரும் குடுத்து சில்மால் பண்ணுறவர், தான் ஆத்திகனுமில்ல நாத்திகனுமில்லையெண்டு இடையில பாழயத்தம்மன் எண்டு பினயிறவர் திருமுருக கிருபானந்த வாரியாருடைய சிவன் பார்வையைப்பற்றி எழுத வருவாரோ?

biggrin.gif

*******************

color="#FF0000"]"துப்பார் திருமேனி தும்பிக்கையான்பாதம் தப்பாமல் சார்பார் தமக்கு"

இன்று வலைச்சுற்றில் வந்த வேளை மேற்படியான கூற்றைக் காணுற்றேன். இதில் சுகன் கூறிய கருத்துத்தான் பொருத்தமானது. இதனை பேராசிரியர் பெரியார்தாசன் தனது உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வுரையைக் கேட்டுப்பாருங்கள்:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=26462

  • கருத்துக்கள உறவுகள்

துப்பார் திருமேனி தும்பிக்கையான்பாதம் தப்பாமல் சார்பார் தமக்கு"

இன்று வலைச்சுற்றில் வந்த வேளை மேற்படியான கூற்றைக் காணுற்றேன். இதில் சுகன் கூறிய கருத்துத்தான் பொருத்தமானது. இதனை பேராசிரியர் பெரியார்தாசன் தனது உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வுரையைக் கேட்டுப்பாருங்கள்

யார் பிரித்து எழுதினாலும் பிழை பிழை தானே? அரைகுறையாகப் படித்துவிட்டு பிரித்து எழுதி, விளையாட்டுக் காட்டுவது என்பது யாழ்களத்திற்குப் புதிதில்லையே. சித்தர்க்ள் வாழ்ந்தார்களாம். அவர்களைத் தான் கும்பிட்டார்களாம் என்று எழுதுகின்றார்கள். அந்தச் சித்தர்கள் அனைவருமே கடவுள் பக்தர்களாகத் தான் இருந்தார்கள் என்பது தான் வரலாறு.

பெரியார்தாசன் பேராசிரியரா? அவரது பேச்சை யாரோ முன்பு இணைத்தார்கள். படிப்பறிவில்லாதவன் கூட அப்படி நாகரீகமில்லாமல் கதைக்கமாட்டான்.

பெரியார்தாசன் படிப்பறிவில்லாதவனாக இருக்கட்டும் அவரின் கருத்துகள் ஒவ்வொன்றும் அற்புதமானவை

கிருபானந்த வாரியார் சொற்பொழிவு as mp-3 free download வள்ளலார் அவர்கள் பற்றிய சொற்பொழிவு

http://www.vallalar.org/WebComponents/Sign...CategoryId=7002

வள்ளலார் அவர்கள் பற்றிய சொற்பொழிவு

மேலும் பல அறிஞர்கள் வள்ளலார் பற்றிய சொற்பொழிவு

இலவச பதிவு அவசியம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.