Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆதித்த கரிகாலன் உண்மையில் கொன்றது யார்? Aditya Karikalan Death Mystery Revealed | Deep Talks Deepan

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

ஆதித்த கரிகாலன் உண்மையில் கொன்றது யார்? Aditya Karikalan Death Mystery Revealed | Deep Talks Deepan

 

வழமையாக நான் யூட்டியூப் பதிவுகளை குறிப்பாக வரலாறு சம்பந்தமான பதிவுகளை கரிச்சுகொட்டுவேன்🤣. ஆனால் உண்மையிலேயே இது “பராவாவில்லை ரகம்”.

ஆனால் ரவிதாசனும் ஏனைய இருவரும் உத்தம சோழன் காலத்தில்தான் கண்டு பிடிக்க பட்டனர் என்பது ஆதாரபூர்வமாக நிறுவபட கூடியதாக தெரியவில்லை.

அவர்கள் தண்டிக்கபட்டதாக கூறும் கல்வெட்டு ராஜராஜன் காலத்துக்குரியதே. அதற்கு முன்பே, உத்தம சோழன் ஆட்சியில் அவர்கள் கண்டுபிடிக்க பட்டார்கள் என்பதற்கு ஆதராம் இருக்கிறதா? அறிந்தோர் சொல்லவும்.

எனக்கு உத்தம சோழன் மீதுதான் சந்தேகம்.

அநிருத்த பிரம்மராயருக்கு பின், உத்தம சோழன் கொலையாளிகளில் ஒருவரை பிரதம அதிகாரி ஆக்கினான் என்பதும். 16 வருடம் பட்டத்து இளவரசனின் கொலை மர்மம் துலங்காமல் இருந்தது என்பதும், ராஜராஜன் ஆட்டி கட்டில் ஏறியதும் கொலையாளிகள் தண்டிக்கபட்டனர் என்பதும் உத்தம சோழன் நோக்கி கையை காட்டுகிறது.

அடுத்து உத்தம சோழனுக்கு கொலை செய்ய முகாந்திரம் இருந்தது. கண்டராதித்தனின் மகனாக அவரே வந்திருக்க வேண்டிய பட்டத்துக்கு, ஆதித்தன் வருகிறார்.

உத்த சோழன் தான் கொலையை செய்தார் எனில் ஏன், ராஜராஜன்,

1. அவருக்கு பட்டத்தை விட்டு கொடுத்தார்?

2. ஏன் கொலையாளிகளை கொல்லாமல் விட்டார் என்ற கேள்விகள் எழுகிறன.

ஒன்றில் ராஜராஜன் இதை உத்தம சோழன் செய்திருப்பார் என நம்பவில்லை, அறியவில்லை 

அல்லது

சோழ வம்சத்தில் பட்டத்துக்காக சகோதர கொலை நடந்தது என்பதை பதிவு செய்ய அவர் விரும்பாமல் போகலாம்.

ஆனால் இந்த கொலைக்கான பழி தீர்தலாகவே காந்தளூர் சம்ஹாரத்தை நிகழ்த்தினார் என நான் நம்புகிறேன். 

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சதியால் கொல்லப்பட்ட சோழ இளவரசர் 'ஆதித்த கரிகாலன்' பற்றி புதிய கல்வெட்டு கூறுவது என்ன?

ஆதித்த கரிகாலன்
படக்குறிப்பு,சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆதித்த கரிகாலன் கால கல்வெட்டு கட்டுரை தகவல்
  • எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 9 ஜூன் 2024, 08:18 GMT
    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

கடல் கடந்து நாடுகளை வென்ற சோழர்களின் வரலாற்றில் ராஜ ராஜ சோழன் ஆட்சி முறை, ராஜேந்திர சோழனின் வெற்றிகள் தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகின்றன. அதற்கு இணையாக, பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலனின் மர்ம மரணம் பற்றி வரலாற்று ஆர்வலர்கள், பேராசிரியர்கள் மட்டுமின்றி சாமானியர்களும் கூட இன்றளவும் விவாதிக்கிறார்கள்.

இதற்கு பொன்னியின் செல்வன் நாவலும், திரைப்படமும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல. சோழர் வரலாற்றில் மன்னருக்கு இணையான அதிகாரங்களுடன் இளவரசர் ஆதித்த கரிகாலன் வலம் வந்தார் என்பதற்கான கல்வெட்டுகள் தொடர்ச்சியாக கிடைத்து வருகின்றன. அந்த வரிசையில், விழுப்புரம் மாவட்டம் அருகே ஏமப்பூர் கோவிலில் ஆதித்த கரிகாலனின் கல்வெட்டு சில நாட்களுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்டது.

அந்த கல்வெட்டில் ஆதித்த கரிகாலன் குறித்து என்ன கூறப்பட்டுள்ளது? என்பது குறித்து விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் ரமேஷ் நம்மிடம் விரிவாக விளக்கம் அளித்தார். அத்துடன், ஆதித்த கரிகாலன் ஆட்சிக்குட்பட்டிருந்த விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி பகுதிகளில் கிடைத்த கல்வெட்டுகள் ஆதித்த கரிகாலன் குறித்து கூறும் செய்திகள் என்ன என்றும் அவர் விளக்கம் தந்தார்.

சோழர் வரலாறு

ஏமப்பூர் கல்வெட்டு கூறுவது என்ன?

சோழர் காலத்தில் பெரும்பாலும் மன்னர்களின் பெயரை முன்னிலைப்படுத்தியே கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டன என்ற போதிலும் இளவரசர் ஆதித்த கரிகாலனின் பெயர் தாங்கிய கல்வெட்டுகள் மன்னருக்கு இணையாகவே பொறிக்கப்பட்டுள்ளன என்கிறார் பேராசிரியர் ரமேஷ்.

விழுப்புரம் அருகே ஏமப்பூரில் கல்வெட்டு "ஸ்வஸ்தி ஸ்ரீ வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி" என்று தொடங்குகிறது.

இதுகுறித்து விளக்கிய பேராசிரியர் ரமேஷ், "ஆதித்த கரிகாலன் ஆட்சியின் நான்காவது ஆண்டான பொது ஆண்டு 960 -ல் பொறிக்கப்பட்ட இந்த கல்வெட்டு திருமுனைப்பாடி நாட்டில் ஏமப்பேரூர் நாட்டு என்று இந்த ஊரை அழைக்கிறது. இது ஒரு நாட்டின் தலைமையிடமாக விளங்கி இருக்கிறது. ஏமப்பேரூர் என்பதே தற்போது ஏமப்பூர் என்று மருவி அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த கோவில் மூலவருக்கு (இறைவனுக்கு) காலம் முழுவதும் (சந்திரன்- சூரியன் உள்ள வரை ) விளக்கு ஏற்றுவதற்காக 96 ஆடுகளை இந்த கோவில் அறங்காவலர் பான் மகேஸ்வரர் என்பவரிடம் வழங்கப்பட்டதை கல்வெட்டு தெரிவிக்கின்றது" என்றார்.

“இந்தக் கல்வெட்டு ஆதித்த கரிகாலனின் ஆட்சியைப் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது என்ற அவர், ஆதித்த கரிகாலன் இப்பகுதியை ஆட்சி புரிந்ததையும் இதன் மூலம் அறிய முடிவதாக கூறினார்.

ஆனைமங்கல செப்பேடு

ஆதித்த கரிகாலன்
படக்குறிப்பு,ஏமப்பேரூர் என்பதே தற்போது ஏமப்பூர் என்று மருவி அழைக்கப்பட்டு வருகிறது.

"சுந்தர சோழன் தன் மூத்த மகனான பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலனுக்கு தொண்டை மண்டலம், திருமுனைப்பாடி ஆகிய பகுதிகளை ஆளும் உரிமையை வழங்கி இருக்கிறார். எனவே தான் இப்பகுதியில் ஆதித்த கரிகாலனின் கல்வெட்டுகள் கிடைக்கின்றன" என்று அவர் கூறினார்.

சிறு வயதிலேயே வீரத்துடன் விளங்கிய ஆதித்த கரிகாலன், பாண்டிய மன்னன் வீர பாண்டியனைப் போரில் வென்றான் என்பதைக் குறிக்கும் வகையில், "இளைஞனான ஆதித்தியன் மனுகுலத்தின் ஒளி போன்றவன் மதங்கொண்ட யானைகளோடு சிங்கக் குட்டி விளையாடுவது போன்று வீரபாண்டியனுடன் இவன் போர் செய்தான்," என்கிறது ஆனைமங்கலச் செப்பேடு. இந்த கிராமம் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ் வேளூர் அருகே உள்ளது.

"ஆதித்த கரிகாலன், பாண்டிய மன்னன் வீரபாண்டியனை போரில் தோற்கடித்து அவன் தலையை வெட்டி கொண்டு வந்து தஞ்சை அரண்மனை முன்பு செருகி வைத்தான் என்று திருவாலங்காடு, எசாலம், லெய்டன் ஆகிய செப்பேடுகள் கூறுகின்றன. எனவே இவன் வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பர கேசரி என்று அழைக்கப்பட்டான். பெரும்பாலான கல்வெட்டுகளில் ஆதித்த கரிகாலன் இந்த பெயரில்தான் குறிப்பிடப்பட்டுள்ளார். ஏமப்பூர் கல்வெட்டிலும் இது உறுதிப்படுத்தப்படுகிறது" என்று கூறிய பேராசிரியர் ரமேஷ், அதை படித்தும் காண்பித்தார்.

ஆதித்த கரிகாலன்
 

ஏரி பராமரிப்பு கல்வெட்டு

திருக்கோயிலூர் வட்டம், பொ.மெய்யூர் கிராமத்தில் மயிலாடும்பாறையில் உள்ள கல்வெட்டில் ஆதித்த கரிகாலன் ”வீரபாண்டியனைத் தலைகொண்ட கோப்பரகேசரி” எனக் குறிப்பிடப்படுகிறார்.

தொடர்ந்து அந்த கல்வெட்டில் "ஒளக் கண்டனாகிய சிங்க முத்தரையன் என்பவன் ஊருக்கான ஏரியைப் பராமரிப்பதற்காக அரைக்(காணி) நிலம் வரி நீக்கிக் கொடுத்ததோடு ஏரியின் மேலைப் பகுதியில் கல்லால் ஆகிய தூம்பும் செய்து கொடுத்துள்ளான்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏரியைப் பராமரிக்க அளிக்கப்படும் நிலக்கொடை “ஏரிப்பட்டி” என்று குறிப்பிடப்படுகிறது. ”பட்டி” என்பது நிலத்தைக் குறிக்கும் என்று கல்வெட்டு செய்தியையும் அவர் விளக்கிக் கூறினார்.

தொடர்ந்து பேராசிரியர் ரமேஷ் கூறுகையில் "ஆதித்த கரிகாலனின் ஆட்சி காலம்.கி.பி. 957-969 ஆகும். ஆதித்த கரிகாலன் இரண்டாம் பராந்தக சோழனின் மூத்த மகன் ஆவார். இவர் காஞ்சிபுரத்தை (தொண்டை நாடு பகுதி) தலைநகராக கொண்டு சோழ சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியை ஆட்சி செய்து வந்தார். பாண்டியன் தலைகொண்டவன், வீரபாண்டிய தலை கொண்ட பரகேசரிவர்மன் என்று புனைப் பெயர்களால் அழைக்கப்பட்ட ஆதித்த கரிகாலன் மிக வலிமை வாய்ந்த இளவரசர் ஆவார்." என்று கூறினார்.

ஆதித்த கரிகாலன் மர்ம மரணம்

"கி.பி. 966- ல் ஆதித்த கரிகாலன் பட்டத்து இளவரசராக பட்டம் சூட்டப்பட்டார். ஆனால், அடுத்த 3 ஆண்டுகளிலேயே, அதாவது கி.பி. 969இல் அவர் கொல்லப்பட்டார். இந்த சோகம் தாங்காமல் அடுத்த சில மாதங்களிலேயே ஆதித்த கரிகாலனின் தந்தையான சுந்தர சோழன் உயிரிழந்தார்" என்று ஆதித்த கரிகாலனின் பேராசிரியர் ரமேஷ் வரலாற்றை விவரித்தார்.

 
ஆதித்த கரிகாலன்
படக்குறிப்பு,ஆதித்த கரிகாலனின் ஆட்சி காலம்.கி.பி. 957-969 என்று கூறுகிறார் பேராசிரியர் ரமேஷ்.

ஆதித்த கரிகாலன் கொலை பற்றிய கல்வெட்டு

ஆதித்த கரிகாலன் சதியால் கொல்லப்பட்டார் என்பதை காட்டுமன்னார்கோவில் அருகில் உள்ள உடையார்குடி ஆனந்தீஸ்வரர் கோவில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. ஆனாலும் எதற்காக அவர் கொல்லப்பட்டார் என்று முழு தகவலும் கிடைக்கவில்லை. ஆனால் குற்றவாளிகள் பெயர்களை அவர்களின் நிலத்தை கையகப்படுத்தியது குறித்த இக்கல்வெட்டு செய்தியால் அறியலாம்.

"ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வந்த இரண்டாவது ஆண்டில் பொறிக்கப்பட்ட இந்த கல்வெட்டு, ஆதித்த கரிகாலன் கொலையில் தொடர்புடையவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை, விற்பனை செய்ய அனுமதி அளிக்கிறது. ஆனால் ஆதித்த கரிகாலனை எதற்காக கொலை செய்தார்கள், யார் அவர்களுக்கு பின்புலமாக இருந்து செயல்பட்டது போன்ற தகவல்கள் அதில் இல்லை." என்று பேராசிரியர் ரமேஷ் கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/c0xx4z4ey06o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.