Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆர்ட்டெமிஸ்: நிலவுக்கு முதல் பயணம் செல்ல தயாராகும் நாசாவின் ராட்சத ராக்கெட்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ட்டெமிஸ்: நிலவுக்கு முதல் பயணம் செல்ல தயாராகும் நாசாவின் ராட்சத ராக்கெட்

  • ஜொனாதன் அமோஸ்
  • அறிவியல் செய்தியாளர்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

விண்வெளி ஏவுதள அமைப்பு என்பது சந்திரனின் ஆய்வுக்கான புதிய சகாப்தத்தின் புதிய ராக்கெட் ஆகும்

பட மூலாதாரம்,NASA

 

படக்குறிப்பு,

விண்வெளி ஏவுதள அமைப்பு என்பது சந்திரனின் ஆய்வுக்கான புதிய சகாப்தத்தின் புதிய ராக்கெட் ஆகும்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தனது புதிய ராட்சத நிலவு ராக்கெட்டை அதன் முதல் பயணத்திற்காக தயார்படுத்திவருகிறது.

ஸ்பேஸ் லான்ச் சிஸ்டம் (எஸ்எல்எஸ்) என அழைக்கப்படும் இந்த வாகனம், ஆகஸ்ட் 29 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள விண்வெளி பயணத்திற்காக, ப்ஃளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள 39B ஏவுதளத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த முதல் சோதனைப்பயணத்தில் விண்வெளிவீரர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால் எதிர்கால பயணங்கள், 50 ஆண்டுகளுக்குப்பிறகு முதல் முறையாக சந்திரனின் மேற்பரப்புக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும்.

சுமார் 100 மீட்டர்(328 அடி) உயரமான SLS, ஒரு பெரிய டிராக்டரில் ஏவுதளத்திற்கு கொண்டுசெல்லப்படுகிறது.

 

உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை மாலை கென்னடியில் உள்ள அதன் கட்டுமான இடத்தில் இருந்து அது நகரத் தொடங்கியது. ஆனால் மணிக்கு 1 கிமீ( 1 மைலுக்கும் குறைவு) வேகத்தில், 6.7 கிமீ (4.2 மைல்) பயணத்தை முடிக்க அதற்கு 8-10 மணிநேரம் ஆகலாம்.

 

மனிதர்கள் யாரும் இந்த ராக்கெட்டில் இருக்கமாட்டார்கள். ஆனால் சென்சார்கள் நிறைந்த , மனித உருவ பொம்மைகள்(Mannequins)பயணத்தின் போது நிலைமைகளைப் பதிவு செய்யும்

பட மூலாதாரம்,NASA

 

படக்குறிப்பு,

மனிதர்கள் யாரும் இந்த ராக்கெட்டில் இருக்கமாட்டார்கள். ஆனால் சென்சார்கள் நிறைந்த , மனித உருவ பொம்மைகள்(Mannequins)பயணத்தின் போது நிலைமைகளைப் பதிவு செய்யும்

நாசாவிற்கு இது ஒரு முக்கிய தருணமாகும். சந்திரனில் மனிதன் கடைசியாக காலடி பதித்த அப்பல்லோ 17 இன் அரை நூற்றாண்டு ஆண்டு நிறைவை நாசா, டிசம்பர் மாதம் கொண்டாடவுள்ளது.

நவீன காலத்திற்கு ஏற்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் தனது புதிய ஆர்ட்டெமிஸ் திட்டத்துடன் மீண்டும் களத்திற்கு திரும்பப்போவதாக நாசா கூறியுள்ளது. (ஆர்டெமிஸ், கிரேக்க கடவுள் அப்போலோவின் இரட்டை சகோதரி மற்றும் சந்திரக் கடவுளும் ஆகும்).

2030 களில் அல்லது அதற்குப்பிறகு மிக விரைவில் விண்வெளி வீரர்களுடன் செவ்வாய் கிரகத்திற்குச் செல்வதற்கான ஒரு வழியாக, சந்திரனுக்கான இந்தப் பயணத்தை நாசா பார்க்கிறது.

 

அப்போலோவின் Saturn V ராக்கெட்டுகளை விட 15% அதிகமான உந்துசக்தியை SLS கொண்டிருக்கும்.

 

படக்குறிப்பு,

அப்போலோவின் Saturn V ராக்கெட்டுகளை விட 15% அதிகமான உந்துசக்தியை SLS கொண்டிருக்கும்.

அப்போலோவின் Saturn V ராக்கெட்டுகளை விட 15% அதிகமான உந்துசக்தியை SLS கொண்டிருக்கும். இந்த கூடுதல் சக்தியுடன் மேலும் மேம்பாடுகளின் இணைப்பு காரணமாக, பூமியின் வெகுதொலைவுக்கு அப்பால் விண்வெளி வீரர்களை அனுப்புவது மட்டுமல்லாமல், அதிக உபகரணங்கள் மற்றும் சரக்குகளை கொண்டுசெல்ல முடிவதால் குழுவினர் அதிக காலத்திற்கு பூமியில் இருந்து தள்ளி வாழமுடியும்.

க்ரூ காப்ஸ்யூல், திறனில் ஒரு படி மேலே உள்ளது. ஓரியன் என்று அழைக்கப்படும் இது, 1960கள் மற்றும் 70களில் இருந்த கமாண்ட் மாட்யூல்களைக் காட்டிலும் அகலமானது. 5 மீ (16.5 அடி) அகலத்தில் இருக்கும் இந்த காப்ஸ்யூல் ஒரு மீட்டர் கூடுதல் அகலம் கொண்டுள்ளது.

"மனிதகுலம் எப்போது சந்திரனுக்கு மீண்டும் திரும்பும் என்று கனவு காணும் நம் அனைவருக்கும் ஒரு செய்தி.' மக்களே, நாம் மீண்டும் அங்கே செல்ல இருக்கிறோம். அந்தப் பயணம், எங்கள் பயணம், ஆர்ட்டெமிஸ் 1 மூலம் தொடங்குகிறது," என்று நாசாவின் நிர்வாகி பில் நெல்சன் கூறினார்.

"விண்வெளி வீரர்களுடன் ஆர்ட்டெமிஸ் 2 இன் பயணம் இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு 2024 இல் இருக்கும். ஆர்ட்டெமிஸ் 3 இன் முதல் தரையிறக்கம் 2025 இல் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் பிபிசி நியூஸிடம் தெரிவித்தார்.

 

SLS அதன் ஏவுதளத்திற்கு வந்தவுடன், விண்வெளி பயணத்திற்கு அதை தயார் செய்ய பொறியாளர்களுக்கு சுமார் ஒன்றரை வாரங்கள் மட்டுமே இருக்கும்.

 

படக்குறிப்பு,

SLS அதன் ஏவுதளத்திற்கு வந்தவுடன், விண்வெளி பயணத்திற்கு அதை தயார் செய்ய பொறியாளர்களுக்கு சுமார் ஒன்றரை வாரங்கள் மட்டுமே இருக்கும்.

ஆர்டெமிஸ்ஸின் மூன்றாவது பயணத்தில் நிலவின் மேற்பரப்பில் முதல்முறையாக ஒரு பெண் விண்வெளிவீரர் கால்பதிப்பார் என்று நாசா உறுதியளித்துள்ளது.

SLS அதன் ஏவுதளத்திற்கு வந்தவுடன், விண்வெளி பயணத்திற்கு அதை தயார் செய்ய பொறியாளர்களுக்கு சுமார் ஒன்றரை வாரங்கள் மட்டுமே இருக்கும்.

ஆகஸ்ட் 29 ஆம் தேதி தொடங்கி மூன்று சாத்தியமான ஏவும் வாய்ப்புகள் உள்ளன.

தொழில்நுட்பச் சிக்கல்கள் அல்லது சீரற்ற காலநிலை காரணமாக இந்த தேதியில் ராக்கெட்டை ஏவ முடியாவிட்டால் செப்டம்பர் 2 வெள்ளிக்கிழமை மீண்டும் முயற்சி செய்யப்படும். அது தோல்வியுற்றால், செப்டம்பர் 5 திங்கட்கிழமை மற்றொரு முயற்சியை மேற்கொள்ளலாம்.

கலிஃபோர்னியாவிற்கு அப்பால் பசிபிக் பெருங்கடலில் ராக்கெட்டை திருப்பிகொண்டுவருவதற்கு முன்பாக, சந்திரனின் பின்புறத்தில் ஓரியனை சுழன்று செல்லச்செய்வதே இந்தப்பயணத்தின் நோக்கமாகும்.

பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும்போது ஏற்படும் வெப்பத்தை காப்ஸ்யூலில் உள்ள வெப்பக் கவசம் தாங்குமா என்று சரிபார்ப்பதே சோதனை ஓட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

 

கூம்பு வடிவ ஓரியன் காப்ஸ்யூல், ஐரோப்பிய சர்வீஸ் மாட்யூல் மூலம் விண்வெளியில் தள்ளப்படுகிறது

பட மூலாதாரம்,ESA

 

படக்குறிப்பு,

கூம்பு வடிவ ஓரியன் காப்ஸ்யூல், ஐரோப்பிய சர்வீஸ் மாட்யூல் மூலம் விண்வெளியில் தள்ளப்படுகிறது

"ஐரோப்பாவில் உள்ள 10 க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் பங்களிப்பில் பணியாற்றி வருகின்றன. இது எங்களுக்கு மிகவும் முக்கியமான தருணம்" என்று ஏர்பஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சியான் கிளீவர் விளக்கினார்.

"ஐரோப்பிய சர்வீஸ் மாட்யூல் என்பது வெறும் பேலோட் அல்ல. அது வெறும் உபகரணமல்ல. இது மிகவும் முக்கியமான உறுப்பு. ஏனென்றால் இது இல்லாமல் ஓரியன் சந்திரனை அடைய முடியாது."

நாசா SLS ஐ உருவாக்கிக் கொண்டிருக்கும் அதே நேரம், அமெரிக்க ராக்கெட் தொழிலதிபர் எலோன் மஸ்க், டெக்சாஸில் உள்ள தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில், அதைவிடப்பெரிய வாகனத்தை உருவாக்கி வருகிறார்.

அவர் தனது ராட்சத ராக்கெட்டை ஸ்டார்ஷிப் என்று அழைக்கிறார். மேலும் விண்வெளி வீரர்களை சந்திரனின் மேற்பரப்பிற்கு கொண்டு செல்ல ஓரியன் உடன் அதை இணைப்பதன் மூலம் எதிர்கால ஆர்ட்டெமிஸ் பயணங்களில் இது ஒரு முக்கிய பங்கை வகிக்கும் என்கிறார் அவர்.

 

சந்திரனில் காலடி பதித்த கடைசி மனிதர்: ஜீன் செர்னான் 1972 டிசம்பரில் அப்பல்லோ 17 பயணத்திற்கு தலைமை வகித்தார்.

பட மூலாதாரம்,NASA

 

படக்குறிப்பு,

சந்திரனில் காலடி பதித்த கடைசி மனிதர்: ஜீன் செர்னான் 1972 டிசம்பரில் அப்பல்லோ 17 பயணத்திற்கு தலைமை வகித்தார்.

SLS ஐப் போலவே, ஸ்டார்ஷிப்பும் இன்னும் சோதனை ஓட்டத்தை முடிக்கவில்லை. SLS போலல்லாமல் ஸ்டார்ஷிப், முற்றிலும் மீண்டும் பயன்படுத்தக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இதை பயன்படுத்துவது கணிசமாக மலிவானதாக இருக்கக்கூடும்.

நாசா திட்டங்களை தணிக்கை செய்யும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலுவலகத்தின் சமீபத்திய மதிப்பீட்டில், முதல் நான்கு SLS பயணங்கள் ஒவ்வொன்றையும் செயல்படுத்த 4 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக செலவாகும் என்றும் இதை "தொடர்வது கடினம்" என்றும் கூறப்பட்டுள்ளது.

 

நாசா - ஆர்ட்டெமிஸ்

பட மூலாதாரம்,ESA

தொழில் ஒப்பந்தத்தில் செய்யப்படும் மாற்றங்கள் எதிர்கால உற்பத்திச் செலவுகளை கணிசமாகக் குறைக்கும் என்று நாசா தெரிவித்தது. https://www.bbc.com/tamil/science-62579650

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ட்டெமிஸ்-1: சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் நாசாவின் புதிய திட்டம் இன்று சோதனை - விண்வெளியில் புதிய சகாப்தம்

6 மணி நேரங்களுக்கு முன்னர்
 

நாசா - ஆர்ட்டெமிஸ்-1

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஆர்ட்டெமிஸ்-1 திட்டத்தை இன்று சோதனை செய்ய உள்ளது. இது சந்திர ஆய்வில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக இருக்கும். ஆர்ட்டெமிஸ்-1, மனிதனை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்லும் முயற்சியின் முதல் படி.

இந்த ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் சிறப்பு, இது எப்படி செயல்படும் என்பது குறித்து இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

1972 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக நிலவில் மனிதர்களை தரையிறக்கும் நாசாவின் திட்டம் இந்த ஆர்ட்டெமிஸ். இதை அடைய புதிய விண்கலத்தையும், அதை விண்வெளிக்கு எடுத்துச் செல்ல புதிய ராக்கெட்டையும் உருவாக்கியுள்ளனர்.

விண்ணுக்குச் செல்லும் ராக்கெட்டின் கட்டமைப்பு

 
 

ராக்கெட்

ஆர்ட்டெமிஸ் திட்டத்தில் உள்ள அடிப்படையான சாதனம் அதன் ராக்கெட். இது எஸ்.எல்.எஸ் (SLS) எனப்படும் விண்வெளிக்கு ராக்கெட்டை செலுத்தும் கட்டமைப்பு (Space Launch System) ஆகும். இது பூமிக்கு அப்பால் ஒரு விண்கலத்தை அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாடர்ன் வி(Saturn V)க்கு பிறகு எஸ்.எல்.எஸ் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட்.

1960கள் மற்றும் 70களில் அப்பல்லோ நிலவுப் பயணங்களுக்கான ராக்கெட் சாட்டர்ன் வி. ஏவுதளத்தில் ஆர்ட்டெமிஸ் I ராக்கெட் 98 மீ (320 அடி) உயரத்தில் நிற்கும். இது பிரிட்டனில் பிக் பென் கடிகார கோபுரத்தை விட இரண்டு மீட்டர் அதிக உயரமாகும்.

 

ஆர்டெமிஸ்

சாட்டர்ன் ராக்கெட்டுகளைப் போல, இது பல அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ராக்கெட்டை பூமியிலிருந்து செலுத்தத் தேவையான அழுத்தத்தை ராக்கெட் பூஸ்டர்கள் கொடுக்கின்றன. ஒரு நொடிக்கு ஆறு டன் கன எரிபொருளைப் பயன்படுத்துகிறது. இரண்டு நிமிடங்களில் அவை வெளியேற்றப்பட்டு மைய நிலை ராக்கெட் பின்னர் எஸ்.எல்.எஸ் பூமியின் சுற்றுப்பாதையில் தள்ளும்.

மைய நிலை அடிப்படையில் இது ஒரு மாபெரும் எரிபொருள் கொள்கலனாகும். இது -180 செல்சியசை விட குளிரான திரவ வாயுவால் நிரப்பப்படுகிறது. இது கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் லிட்டர் (440,000 கேலன்கள்) திரவ ஹைட்ரஜனையும் 740,000 லிட்டர் (160,000 கேலன்கள்) திரவ ஆக்ஸிஜனையும் எட்டு நிமிடங்களில் எரித்துவிடும். எரிபொருள் வெளியேறியவுடன், மைய நிலை பிரிந்து, விரைவில் அடுத்த அடுக்கு இயந்திரங்கள் ஓரயன் கேப்சூலைச் சுற்றுப்பாதையில் செலுத்துகின்றன.

நிலவை நோக்கிய பயணம்

இப்போது ஓரயன் விண்கலம் சந்திரனுக்குச் செல்ல நிலைக்கு தயாராகி உள்ளது.

 

நாசா - ஆர்ட்டெமிஸ்-1

பட மூலாதாரம்,NASA

இந்த பயணத்திற்கு சில நாட்கள் எடுக்கும். மேலும் ஓரயன் 70,000 கிமீ (40,000 மைல்கள்) தொலைவில் உள்ள சுற்றுப்பாதையில் செல்ல அதன் த்ரஸ்டர்களைச் (thrusters) செலுத்தும் முன்பு, மேற்பரப்பில் இருந்து 100 கிமீ (60 மைல்) அருகில் வரும். அந்தப் பயணத்தைத் தொடங்க இறுதியாக ஓர் அடுக்கு உள்ளது. - இன்டரிம் கிரையோஜெனிக் ப்ரொபல்ஷன் ஸ்டேஜ் (ஐ.சி.பி.எஸ்) .

ஐ.சி.பி.எஸ். பூமியைச் சுற்றி ஓரயானை விரைவுபடுத்தி, நிலவின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி அதை விண்வெளிக்குத் தள்ளும். இந்தச் செயல்பாடு டிரான்ஸ்-லூனார் இஞ்சக்ஷன் என்று அழைக்கப்படுகிறது. ஓரயன் சந்திரனுக்குச் சென்றவுடன் ஐ.சி.பி.எஸ் பிரிந்துவிடும்.

ஓரியன் இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது: காப்ஸ்யூல் மற்றும் சர்விஸ் மாட்யூல்.

இரண்டும் சேர்ந்து சுமார் 8 மீட்டர் (26 அடி) நீளம் இருக்கும்

இந்த சர்விஸ் மாட்யூல் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியால் கட்டமைக்கப்பட்டுள்ளது. விண்கலத்தை இயக்குவதற்கான வழிகாட்டும் கணினிகள் மற்றும் த்ரஸ்டர்களை இது கொண்டிருக்கிறது.

 

நாசா - ஆர்ட்டெமிஸ்-1

பட மூலாதாரம்,GETTY IMAGES

காப்ஸ்யூல் என்பது மனிதர்கள் இருக்கும் இடம். எதிர்கால பயணங்களில் ஓரயன் நான்கு விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அழைத்துச் செல்லும். ஆனால் இப்போது முதல் கட்டமாக ஆர்ட்டெமிஸ் I-ல் சோதனை டம்மிகள் ஏற்றப்படும். அப்பல்லோவை விட இதன் உள்ளே உள்ள இடம் பெரியது. இது ஒரு நடுத்தர அளவிலான வேனில் இருக்கும் அளவிலானது.

அதிகபட்சமாக 21 நாட்கள் வரை குழுவினர் காப்ஸ்யூலில் தங்கலாம்.

இந்த முதல் ஆர்ட்டெமிஸ் திட்டம் மனிதர்கள் இல்லாமல் - 42 நாட்களுக்கு செயல்படும். நாசா கலத்தில் விண்வெளி வீரர்கள் இருக்கும் போது இருக்கும் வரம்புகளுக்கு அப்பாலும் இதை அழுத்தத்துக்கு உள்ளாக்கி ஓரயனைச் சோதனை செய்ய நாஸா விரும்புகிறது.

எல்லாம் சீராக நடந்தால், ஆர்ட்டெமிஸ் II இதேபோலத் தொடரும். ஆனால் அப்போது ஒரு குழுவினருடன் செல்லும்.

அடுத்த ஆர்ட்டெமிஸ் பயணத்தில் சுற்றுப்பாதையில் இருக்கும் விண்வெளி வீரர்கள் பூமியிலிருந்து மனிதர்கள் இதுவரை செல்லாத தூரத்தில் இருப்பார்கள்.

ஓரயன் விண்கலத்தின் நோக்கம் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் விண்வெளி வீரர்களைக் கொண்டு செல்வதுதான் ஆனால் அது அங்கு தரையிறங்க வடிவமைக்கப்படவில்லை.

எதிர்காலப் பயணங்களில், விண்வெளி வீரர்கள் கலத்தின் சுற்றுப்பாதையில் உள்ள லேண்டிங் க்ராஃப்டுக்கு மாறி மேற்பரப்பிற்குக் கொண்டு செல்லப்படுவார்கள்.

நாசாவுக்காக இந்தத் தரையிறங்கும் அமைப்பு ஸ்பேஸ் எக்ஸ் மூலம் கட்டமைக்கப்படுகிறது.

கேட்வே எனப்படும் சந்திரனைச் சுற்றி வரும் முதல் விண்வெளி நிலையத்திற்கான திட்டங்களும் உள்ளன.

 

நாசா - ஆர்ட்டெமிஸ்-1

பட மூலாதாரம்,GETTY IMAGES

எதிர்காலத்தில், ஓரியன் கேட்வேயுடன் இணைக்கப்பட்டு விண்வெளி வீரர்கள் லேண்டிங் க்ராஃப்டுக்கு மாற்றப்படுவார்கள். சந்திரனின் மேற்பரப்பில் அவர்களின் பணி முடிந்த பின், அவர்கள் மீண்டும் விண்வெளி நிலையத்திற்கு மாற்றப்பட்டு மீண்டும் ஓரயன் மூலம் பூமிக்கு வருவார்கள்.

பூமிக்குத் திரும்புவதற்கு, ஓரயன் சந்திரனைச் சுற்றி வேகத்தை அதிகரித்து, பூமியை நோக்கிப் பாயும்.

பூமியை நெருங்கும் போது, காப்ஸ்யூல், சர்விஸ் மாட்யூலிலிருந்து பிரிகிறது. காப்ஸ்யூல் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் போது ஒலியை விட 32 மடங்கு வேகத்தில் பயணிக்கும். வளிமண்டலம் காப்ஸ்யூலின் வேகத்தைக் குறைக்கும். ஆனால் ஹீட்ஷீல்ட் தோராயமாக 2,700C (5,000F) வெப்பநிலையில் இருந்து குழுவினரைப் பாதுகாக்க வேண்டும். இரண்டு மில்லியன் கிலோமீட்டர்கள் (1.3 மில்லியன் மைல்கள்) பயணித்த பிறகு, காப்ஸ்யூல் இறுதியாக பசிபிக் பெருங்கடலில் விழும்.

அமெரிக்கக் கடற்படையின் உதவியுடன், நாசா ஓரயன் கேப்சூலை மீட்டெடுத்து, தரவுகளை பகுப்பாய்வு செய்யும் பணியை வரும் மாதங்களில் மேற்கொள்ளும்.

2024 ஆம் ஆண்டில் நான்கு புதிய விண்வெளி வீரர்களுடன் SLS ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும் ஆர்ட்டெமிஸ் II க்காக காப்ஸ்யூலின் பாகங்கள் மீண்டும் பயன்படுத்தப்படும். பின்னர் 2025 ஆம் ஆண்டில், ஆர்ட்டெமிஸ் III நாசாவின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மனிதர்களை சந்திரனின் மேற்பரப்பிற்குக் கொண்டு செல்லும் பணியை நிறைவு செய்யும். https://www.bbc.com/tamil/science-62709037

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ட்டெமிஸ்: நிலவுக்கு செல்லும் நாசா ராக்கெட்டில் திடீர் கோளாறு - கடைசி நேர பரபரப்பு

43 நிமிடங்களுக்கு முன்னர்
 

நாசா ஆர்ட்டெமிஸ்

ஆர்ட்டெமிஸ் என்ற நாசாவின் ராக்கெட் நிலவுக்கு புறப்பட ஆயத்தமாக உள்ளது. பிரிட்டன் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 13.33 மணிக்கு இந்த ராக்கெட் ஃப்ளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஏவுவதற்கு தயாராக இருந்தது. ஆனால், உத்தேசிக்கப்பட்ட நேரத்தை விட தற்போது இந்த ராக்கெட் ஏவும் நேரம் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. என்ன காரணம்?

ராக்கெட்டின் உள்டாங்கியில் திரவ ஹைட்ரஜனையும் திர ஆக்சிஜனையும் இணைக்கும் டாங்கிகள் இணைப்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கடைசி நேரத்தில் கண்டறியப்பட்டது. அதை சீர்படுத்தும் பணியில் பொறியாளர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஆர்ட்டெமிஸ் 1 ஏவும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் மூன்றாவது எஞ்சினில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்யும் பணியில் குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் நாசா அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

நாசாவின் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட் ஆக அறியப்படும் ஸ்பேஸ் லான்ச் சிஸ்டம் (எஸ்எல்எஸ்), ஆளில்லா ஓரியன் விண்கலனை சந்திரனை சுற்றி அனுப்ப உள்ளது.

 

இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், 2025ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் தமது லட்சியக் கனவை 50 ஆண்டுகளுக்குப் பிறகு நாசா சாத்தியமாக்கும்.

அதுவும் சந்திரனில் முதல் வீராங்கனையை தரையிறக்க முடியும் என்று நாசா உறுதியாக நம்புகிறது. இந்த விண்வெளி நிகழ்வை தமது இணையதளத்திலும் சமூக ஊடக பக்கங்களிலும் காண நாசா ஏற்பாடு செய்துள்ளது.

இந்த விண்வெளி பயணத்தில் ஷான் ஆடு மற்றும் சில ஸ்னூப்பி பொம்மைகளை விண்வெளிக்கு நாசா அனுப்புகிறது.

 

சிவப்புக் கோடு

ஆர்ட்டெமிஸ் பயணம் எவ்வாறு இருக்கும்?

 

நாசா விண்வெளி திட்டம்

பட மூலாதாரம்,REUTERSCOPYRIGHT

ஸ்பேஸ் லான்ச் சிஸ்டம் (SLS) கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து ஏவப்படும் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட்டாக விளங்கும். காரணம், இது புறப்படும்போது ஏற்படக்கூடிய ஒலி மற்றும் அழுத்தம், ஏறக்குறைய 60 கான்கார்ட் சூப்பர்சோனிக் ஜெட் விமானங்களுக்கு சமமான உந்துதலை உருவாக்கும்.இந்த ராக்கெட் பூமியை விட்டு வெளியேறுவது ஒரு ஆரம்பம்தான்.8 நிமிடங்கள் மற்றும் 20 விநாடிகள் பறந்த பிறகு, இதன் பக்கவாட்டுப் பூஸ்டர்கள் மற்றும் முக்கிய கட்டத்தில் உள்ள ஓரியான் விண்கலனை அது உயரே உள்ள நீள்வட்ட பாதைக்கு அனுப்பும். பிறகு இயல்பாகவே அது மீண்டும் பூமியில் வந்து விழும்.

எனவே, சந்திரனின் திசையில் கலனை உயர்த்துவதற்கு முன், மேல் பகுதி அல்லது முக்கிய கட்ட பகுதி, சுற்றுப்பாதையை வட்டமிட வேண்டும்.

ஏவப்பட்ட இரண்டு மணி நேரம் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, ஓரியன் விண்கலன் மற்றும் அதன் பின்புற சேவை தொகுதி, மேல்-நிலையில் இருந்து பிரிக்கப்படும். பின்னர் அவை பாதையில் வட்டப்பாதையில் நிலையாக வேண்டும். அப்போது மணிக்கு 30 ஆயிரம் கிலோ மீட்டர் (19,000 மைல்) வேகத்தில் அது விண்வெளியில் செல்ல வேண்டும்.

 

சிவப்புக் கோடு

திட்டம் சாத்தியமாகாவிட்டால் என்ன ஆகும்?

 

நாசா ஆர்ட்டெமிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஃபுளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஆர்ட்டெமிஸ் I முதலில் உள்ளூர் நேரப்படி 08:33 மணிக்கு (13:33 BST) ஏவ திட்டமிடப்பட்டிருந்தாலும், தேவைப்பட்டால் உள்ளூர் நேரப்படி 10:33 (15:33 BST) வரை பின்னுக்குத் தள்ளப்படலாம். வானிலை அல்லது தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இந்த நேரத்தில் மாற்றம் ஏற்படலாம்.

இந்த நேரத்துக்குள் டேக்-ஆஃப் சாத்தியமில்லை என்றால், வேறு இரண்டு பின் தேதிகளில் ராக்கெட்டை ஏவும் திட்டத்தை செப்டம்பர் 2 அல்லது செப்டம்பர் 5இல் நடத்த நாசா திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் பெரும்பகுதி நாசாவின் ஃப்ளைட் டெர்மினேஷன் சிஸ்டம் (எஃப்டிஎஸ்) மூலம் இயக்கப்படுகிறது. ஆகஸ்ட் 18ஆம் தேதி எஸ்எல்எஸ்-இல் விண்கலன் நிறுவப்பட்ட நாளில் இருந்து இதில் உள்ள பேட்டரி 20 நாட்களுக்கு இயங்க சான்றளிக்கப்பட்டிருக்கிறது.

அதற்குள் டேக்-ஆஃப் சாத்தியமாகாவிட்டால், எஃப்டிஎஸ் முறை அகற்றப்பட்டு மாற்றப்பட வேண்டும்.

எவ்வாறாயினும், திட்டமிடப்பட்ட மூன்று தேதிகளில் ஏதேனும் ஒன்றில் டேக்-ஆஃப் நிச்சயமாக நடைபெறும் என்று நாசா அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். https://www.bbc.com/tamil/science-62714855

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

BREAKING: Artemis 1 Launch திடீர் நிறுத்தம்; நடந்தது என்ன? | NASA

 

  • கருத்துக்கள உறவுகள்

நாசாவின் ரொக்கெட் ஏவும் திட்டம் இறுதிநேரத்தில் இரத்து!

நாசாவின் ரொக்கெட் ஏவும் திட்டம், இறுதிநேரத்தில்... இரத்து!

நாசாவின் ரொக்கெட் நிலவுக்கு புறப்பட ஆயத்தமான இறுதி நேரத்தில், மூன்றாவது எஞ்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக விண்ணில் ஏவும் திட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரித்தானியா உள்ளூர் நேரப்படி பிற்பகல் 13.33 மணிக்கு இந்த ராக்கெட் ஃப்ளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஏவுவதற்கு தயாராக இருந்தது. ஆனால், உத்தேசிக்கப்பட்ட நேரத்தை விட அந்த ரொக்கெட் ஏவும் நேரம் தள்ளிவைக்கப்பட்டு வந்தது.

ரொக்கெட்டின் உள்டாங்கியில் திரவ ஹைட்ரஜனையும் திர ஆக்சிஜனையும் இணைக்கும் டாங்கிகள் இணைப்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கடைசி நேரத்தில் கண்டறியப்பட்டது. அதை சீர்படுத்தும் பணியில் பொறியாளர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அர்டெமிஸ்-1 ஏவும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் மூன்றாவது எஞ்சினில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்யும் பணியில் குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் நாசா அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறது.

நாசாவின் மிகவும் சக்திவாய்ந்த ரொக்கெட் ஆக அறியப்படும் ஸ்பேஸ் லான்ச் சிஸ்டம் (எஸ்எல்எஸ்), ஆளில்லா ஓரியன் விண்கலனை சந்திரனை சுற்றி அனுப்ப உள்ளது.

இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், 2025ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் தமது லட்சியக் கனவை 50 ஆண்டுகளுக்குப் பிறகு நாசா சாத்தியமாக்கும்.

அதுவும் சந்திரனில் முதல் வீராங்கனையை தரையிறக்க முடியும் என்று நாசா உறுதியாக நம்புகிறது. இந்த விண்வெளி நிகழ்வை தமது இணையதளத்திலும் சமூக ஊடக பக்கங்களிலும் காண நாசா ஏற்பாடு செய்துள்ளது.

இந்த விண்வெளி பயணத்தில் ஷான் ஆடு (உருவகப்படுத்தப்பட்ட பொம்மை ஆடு) மற்றும் சில ஸ்னூப்பி பொம்மைகளை விண்வெளிக்கு நாசா அனுப்புகிறது.

https://athavannews.com/2022/1296644

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ட்டெமிஸ்-1: சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் நாசாவின் சோதனை வெற்றி - விண்வெளியில் புதிய சகாப்தம்

29 ஆகஸ்ட் 2022
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

Artemis I Launch

பட மூலாதாரம்,NASA/JOEL KOWSK

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவால் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஆர்ட்டெமிஸ்-1 திட்டத்தின் விண்கலம் இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

நாசாவின் ஸ்பேஸ் லான்ச் வெஹிகில் (NASA SLS) ராக்கெட் மூலம் ஓரியான் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு நடத்தப்பட்ட சோதனை வெற்றிகரமாக அமைந்தது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னெடி விண்வெளி மையத்தில் இந்த சோதனை இன்று நடத்தப்பட்டது.

ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் தலா ஒரு முறை என ஏற்கெனவே இரண்டு முறை திட்டமிடப்பட்டு இந்த சோதனை தள்ளிவைக்கப்பட்டது.

இன்றைய சோதனை ஏவலில் மனிதர்கள் இல்லை என்றாலும், 100 மீட்டர் உயரமுள்ள இந்த ராக்கெட் வருங்காலங்களில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டங்களில் பயன்படுத்தப்படும்.

 

ஆர்ட்டெமிஸ்-1 சந்திரன் ஆய்வில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக இருக்கும். ஆர்டெமிஸ்-1, மனிதனை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்லும் முயற்சியின் முதல் படி.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இந்த ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் சிறப்பு, இது எப்படி செயல்படும் என்பது குறித்து இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

1972 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக நிலவில் மனிதர்களை தரையிறக்கும் நாசாவின் திட்டம் இந்த ஆர்ட்டெமிஸ். இதை அடைய புதிய விண்கலத்தையும் அதை விண்வெளிக்கு எடுத்துச் செல்ல புதிய ராக்கெட்டையும் உருவாக்கியுள்ளனர்.

விண்ணுக்குச் செல்லும் ராக்கெட்டின் கட்டமைப்பு

 

ராக்கெட்

ஆர்ட்டெமிஸ் திட்டத்தில் உள்ள அடிப்படையான சாதனம் அதன் ராக்கெட். இது எஸ்.எல்.எஸ் (SLS) எனப்படும் விண்வெளிக்கு ராக்கெட்டை செலுத்தும் கட்டமைப்பு (Space Launch System) ஆகும். இது பூமிக்கு அப்பால் ஒரு விண்கலத்தை அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாடர்ன்-வி (Saturn V) ராக்கெட்டுக்கு பிறகு எஸ்.எல்.எஸ் மிகவும் சக்தி வாய்ந்த ராக்கெட் ஆகும்.

1960கள் மற்றும் 70களில் அப்பல்லோ நிலவுப் பயணங்களுக்கான ராக்கெட் சாட்டர்ன் வி. ஏவுதளத்தில் ஆர்டெமிஸ் I ராக்கெட் 98 மீ (320 அடி) உயரத்தில் நிற்கும். இது பிரிட்டனில் பிக் பென் கடிகார கோபுரத்தை விட இரண்டு மீட்டர் அதிக உயரம் கொண்டது.

 

ஆர்டெமிஸ்

சாட்டர்ன் ராக்கெட்டுகளைப் போல, இது பல அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ராக்கெட்டை பூமியிலிருந்து செலுத்தத் தேவையான அழுத்தத்தை ராக்கெட் பூஸ்டர்கள் கொடுக்கின்றன. ஒரு நொடிக்கு ஆறு டன் கன எரிபொருளைப் பயன்படுத்துகிறது. இரண்டு நிமிடங்களில் அவை வெளியேற்றப்பட்டு மைய நிலை ராக்கெட் பின்னர் எஸ்.எல்.எஸ் பூமியின் சுற்றுப்பாதையில் தள்ளும்.

மைய நிலை அடிப்படையில் இது ஒரு மாபெரும் எரிபொருள் கொள்கலன். இது -180 செல்சியசை விட குளிரான திரவ வாயுவால் நிரப்பப்படுகிறது. இது கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் லிட்டர் (440,000 கேலன்கள்) திரவ ஹைட்ரஜனையும் 740,000 லிட்டர் (160,000 கேலன்கள்) திரவ ஆக்ஸிஜனையும் எட்டு நிமிடங்களில் எரித்துவிடும். எரிபொருள் வெளியேறியவுடன், மைய நிலை பிரிந்து, விரைவில் அடுத்த அடுக்கு இயந்திரங்கள் ஓரியான் கேப்சூலை சுற்றுப்பாதையில் செலுத்துகின்றன.

நிலவை நோக்கிய பயணம்

இப்போது ஓரியான் விண்கலம் சந்திரனுக்குச் செல்ல தயாராகி உள்ளது.

 

நாசா - ஆர்ட்டெமிஸ்-1

பட மூலாதாரம்,NASA

இந்த பயணத்திற்கு சில நாட்கள் எடுக்கும். மேலும் ஓரியான் 70,000 கிமீ (40,000 மைல்கள்) தொலைவில் உள்ள சுற்றுப்பாதையில் செல்ல அதன் த்ரஸ்டர்களை (thrusters) செலுத்தும் முன்பு, மேற்பரப்பில் இருந்து 100 கிமீ (60 மைல்) அருகில் வரும். அந்தப் பயணத்தைத் தொடங்க இறுதியாக ஓர் அடுக்கு உள்ளது. இன்டரிம் கிரையோஜெனிக் புரொபல்ஷன் ஸ்டேஜ் (ஐ.சி.பி.எஸ்).

ஐ.சி.பி.எஸ். பூமியைச் சுற்றி ஓரியானை விரைவுபடுத்தி, நிலவின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி அதை விண்வெளிக்குத் தள்ளும். இந்தச் செயல்பாடு டிரான்ஸ்-லூனார் இஞ்சக்ஷன் என்று அழைக்கப்படுகிறது. ஓரியான் சந்திரனுக்குச் சென்றவுடன் ஐ.சி.பி.எஸ் பிரிந்துவிடும்.

ஓரியான் இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது: காப்ஸ்யூல் மற்றும் சர்விஸ் மாட்யூல்.

இரண்டும் சேர்ந்து சுமார் 8 மீட்டர் (26 அடி) நீளம் இருக்கும்.

இந்த சர்விஸ் மாட்யூல் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியால் கட்டமைக்கப்பட்டுள்ளது. விண்கலத்தை இயக்குவதற்கான வழிகாட்டும் கணினிகள் மற்றும் த்ரஸ்டர்களை இது கொண்டுள்ளது.

 

நாசா - ஆர்ட்டெமிஸ்-1

பட மூலாதாரம்,GETTY IMAGES

கேப்ஸ்யூல் என்பது மனிதர்கள் இருக்கும் இடம். எதிர்கால பயணங்களில் ஓரியான் நான்கு விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அழைத்துச் செல்லும். ஆனால் இப்போது முதல் கட்டமாக ஆர்ட்டெமிஸ் I-ல் சோதனை டம்மிகள் ஏற்றப்பட்டுள்ளது. அப்பல்லோவை விட இதன் உள்ளே இருக்கும் இடம் பெரியது. இது ஒரு நடுத்தர அளவிலான வேனில் இருக்கும் அளவைக் கொண்டது.

அதிகபட்சமாக 21 நாட்கள் வரை குழுவினர் கேப்ஸ்யூலில் தங்கலாம்.

இந்த முதல் ஆர்ட்டெமிஸ் திட்டம் மனிதர்கள் இல்லாமல் 42 நாட்களுக்கு செயல்படும். நாசா கலத்தில் விண்வெளி வீரர்கள் இருப்பதற்கான வரம்புகளுக்கு அப்பாலும் இதை அழுத்தத்திற்கு உள்ளாக்கி ஓரியானை சோதனை செய்ய நாசா விரும்புகிறது.

எல்லாம் சீராக நடந்தால், ஆர்டெமிஸ- II இதேபோலத் தொடரும். ஆனால் அப்போது ஒரு விண்வெளி வீரர்கள் குழுவினருடன் செல்லும்.

அடுத்த ஆர்ட்டெமிஸ் பயணத்தில் சுற்றுப்பாதையில் இருக்கும் விண்வெளி வீரர்கள் பூமியிலிருந்து மனிதர்கள் இதுவரை செல்லாத தூரத்தில் இருப்பார்கள்.

ஓரியான் விண்கலத்தின் நோக்கம் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் விண்வெளி வீரர்களைக் கொண்டு செல்வதுதான். ஆனால் அது அங்கு தரையிறங்க வடிவமைக்கப்படவில்லை.

எதிர்காலப் பயணங்களில், விண்வெளி வீரர்கள் கலத்தின் சுற்றுப்பாதையில் உள்ள லேண்டிங் க்ராஃப்டுக்கு மாற்றப்பட்டு மேற்பரப்பிற்குக் கொண்டு செல்லப்படுவார்கள்.

நாசாவுக்காக இந்தத் தரையிறங்கும் அமைப்பு ஸ்பேஸ் எக்ஸ் மூலம் கட்டமைக்கப்படுகிறது. கேட்வே எனப்படும் சந்திரனைச் சுற்றி வரும் முதல் விண்வெளி நிலையத்திற்கான திட்டங்களும் உள்ளன.

 

நாசா - ஆர்ட்டெமிஸ்-1

பட மூலாதாரம்,GETTY IMAGES

எதிர்காலத்தில், ஓரியான் கேட்வே உடன் இணைக்கப்பட்டு விண்வெளி வீரர்கள் லேண்டிங் க்ராஃப்டுக்கு மாற்றப்படுவார்கள். சந்திரனின் மேற்பரப்பில் அவர்களின் பணி முடிந்த பின், அவர்கள் மீண்டும் விண்வெளி நிலையத்திற்கு மாற்றப்பட்டு மீண்டும் ஓரியன் மூலம் பூமிக்கு வருவார்கள்.

பூமிக்குத் திரும்புவதற்கு, ஓரியான் சந்திரனைச் சுற்றி வேகத்தை அதிகரித்து, பூமியை நோக்கிப் பாயும்.

பூமியை நெருங்கும் போது, கேப்ஸ்யூல், சர்விஸ் மாட்யூலில் இருந்து பிரிகிறது. கேப்ஸ்யூல் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் போது ஒலியை விட 32 மடங்கு வேகத்தில் பயணிக்கும். வளிமண்டலம் கேப்ஸ்யூலின் வேகத்தைக் குறைக்கும். ஆனால் ஹீட்ஷீல்ட் தோராயமாக 2,700C (5,000F) வெப்பநிலையில் இருந்து குழுவினரைப் பாதுகாக்க வேண்டும். இரண்டு மில்லியன் கிலோமீட்டர்கள் (1.3 மில்லியன் மைல்கள்) பயணித்த பிறகு, கேப்ஸ்யூல் இறுதியாக பசிபிக் பெருங்கடலில் விழும்.

அமெரிக்கக் கடற்படையின் உதவியுடன், நாசா ஓரியான் கேப்சூலை மீட்டெடுத்து, தரவுகளைப் பகுப்பாய்வு செய்யும் பணியை வரும் மாதங்களில் மேற்கொள்ளும்.

2024 ஆம் ஆண்டில் நான்கு புதிய விண்வெளி வீரர்களுடன் SLS ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும் ஆர்ட்டெமிஸ் II திட்டத்திற்காக கேப்ஸ்யூலின் பாகங்கள் மீண்டும் பயன்படுத்தப்படும். பின்னர் 2025ஆம் ஆண்டில், ஆர்ட்டெமிஸ் III நாசாவின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மனிதர்களை சந்திரனின் மேற்பரப்பிற்குக் கொண்டு செல்லும் பணியை நிறைவு செய்யும்.

https://www.bbc.com/tamil/science-62709037

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Blastoff! NASA's Artemis 1 moon rocket launches on historic first mission

 

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ட்டெமிஸ்-1: நிலவில் இருந்து பூமிக்கு திரும்பும் ஓரியான் விண்கலம் என்ன வேகத்தில் வரும்?

ஓரியான் விண்கலம்

பட மூலாதாரம்,NASA

 
படக்குறிப்பு,

கடலின் மேற்பரப்பில் இருந்து யு.எஸ்.எஸ் போர்ட்லேண்ட் கப்பலின் அடி தளத்துக்குள் ஓரியான் விண்கலம் செலுத்தப்படும்

3 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தனது ஓரியான் விண்கலத்தை நிலவில் இருந்து மீண்டும் பூமிக்கு கொண்டு வர தயாராக உள்ளது.

சந்திரனைச் சுற்றி மூன்று வார பயணத்தை மேற்கொண்டுள்ள ஓரியான் விண்கலம், கலிஃபோர்னியாவிற்கு அருகே உள்ள பசிஃபிக் பெருங்கடலின் ஒரு பகுதிக்கு இன்னும் சில மணி நேரங்களில் வந்தடைய உள்ளது.

 

திட்டமிட்டபடி எல்லாம் சரியாக நடந்தால், பாராசூட் உதவியுடன் கடலில் இந்த விண்கலம் இறங்கும் நிகழ்வு உள்ளூர் நேரப்படி ஞாயிறு காலை சுமார் 09:40 மணிக்கு நிகழும். (இந்திய / இலங்கை நேரப்படி ஞாயிறு இரவு 11.10 மணி)

 

சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஆர்ட்டெமிஸ்-1 திட்டத்தின் ஓரியா விண்கலம் நவம்பர் 16ஆம் தேதி நாசாவால் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

நாசாவின் ஸ்பேஸ் லான்ச் வெஹிகில் (NASA SLS) ராக்கெட் மூலம் ஓரியான் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு நடத்தப்பட்ட சோதனை வெற்றிகரமாக அமைந்தது.

 

இது சோதனை முயற்சி என்பதால், இந்த விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் யாரும் பயணிக்கவில்லை. இந்த ஆர்ட்டெமிஸ் திட்ட விண்கலம் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்தால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் விண்வெளி வீரர்களோடு நிலவுக்கு பயணம் மேற்கொள்ளும் திட்டமுள்ளது.

ஆர்ட்டெமிஸ் திட்டம் மூலம் 50 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்பு, நிலவுக்கு விண்வெளி வீரர்களை கொண்டு செல்ல நாசா திட்டமிடுகிறது. அதாவது 1972ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக நிலவில் மனிதர்களை தரையிறக்கும் நாசாவின் திட்டம் இந்த ஆர்ட்டெமிஸ்.

ஆர்ட்டெமிஸ்-1

பட மூலாதாரம்,NASA

 
படக்குறிப்பு,

படத்தின் இடதுபுறம் தெரியும் ஓரியான் விண்கலத்தை முன்னோக்கி செலுத்தும் கருவிகளைக் கொண்ட பகுதி ஐரோப்பிய விண்வெளி முகமையால் வழங்கப்பட்டது

அப்போலோ 17 திட்டம் மூலம் நாசா 1972ஆம் ஆண்டு கடைசியாக மனிதர்களை பூமிக்கு அனுப்பியது. 1972 டிசம்பர் 11ஆம் தேதி அப்போலோ 17 திட்டத்தின் மூலம் நிலவுக்குச் சென்ற விண்வெளி வீரர்கள் பூமிக்கு வந்தனர்.

இப்போது சரியாக 50 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் நிலவுக்குச் சென்ற ஓரியான் விண்கலம் பூமிக்குத் திரும்புகிறது.

ஓரியான் என்ன வேகத்தில் பூமிக்கு வரும்?

ஓரியான் விண்கலம்

ஓரியான் விண்கலம் பூமிக்கு வரும் திசை வேகம் மிகவும் வேகமாக இருக்கும். இது மணிக்கு 40,000 கி.மீ வேகத்தில் பூமியின் வளிமண்டலத்தைத் தொடும். இது ஒலியின் வேகத்தை விட 32 மடங்கு அதிகம்.

ஓரியான் விண்கலத்தின் பூமியை நோக்கிய மேற்பரப்பில் உண்டாகும் உராய்வு மற்றும் அழுத்தம் காரணமாக, அதன் வெப்பம் 3,000 டிகிரி செல்சியஸ் வரை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வளவு வெப்பத்தை ஓரியானின் மேற்பரப்பை மூடும் கவசம் தங்குவதும் மிகவும் அவசியம். அப்போதுதான் இந்த விண்கலம் மூலம் வருங்காலங்களில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப முடியும்.

2014ஆம் ஆண்டிலேயே மனிதர்கள் இல்லாமல் ஓரியான் விண்கலத்தை ஏவி நாசா ஒரு முறை சோதனை செய்துள்ளது. ஆனால், அந்த சோதனையின்போது விண்கலம் பூமிக்கு திரும்பிய நேரத்தில் அதன் திசைவேகம் மற்றும் வெப்பம் இப்போதைய அளவைவிடவும் மிகவும் குறைவாகவே இருந்தது.

https://www.bbc.com/tamil/articles/c1r32e5834yo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ட்டெமிஸ்-1: நிலவில் இருந்து பூமிக்கு திரும்பிய ஓரியான் விண்கலம் - அடுத்த இலக்கு செவ்வாய்

ஓரியான் விண்கலம்

பட மூலாதாரம்,EPA

11 டிசம்பர் 2022
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தனது ஓரியான் விண்கலத்தை நிலவில் இருந்து மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து தரையிறக்கியுள்ளது.

சந்திரனைச் சுற்றி மூன்று வார பயணத்தை மேற்கொண்ட ஓரியான் விண்கலம், கலிஃபோர்னியாவிற்கு அருகே உள்ள பசிஃபிக் பெருங்கடலின் ஒரு பகுதியில் இறங்கியது.

சந்திரனைச் சுற்றி 26 நாள் பயணத்திற்குப் பிறகு, ஓரியான் விண்கலம் பூமிக்குத் திரும்பியுள்ளது.

சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஆர்ட்டெமிஸ்-1 திட்டத்தின் ஓரியா விண்கலம் நவம்பர் 16ஆம் தேதி நாசாவால் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

நாசாவின் ஸ்பேஸ் லான்ச் வெஹிகில் (NASA SLS) ராக்கெட் மூலம் ஓரியான் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு நடத்தப்பட்ட சோதனை வெற்றிகரமாக அமைந்தது.

 

இது சோதனை முயற்சி என்பதால், இந்த விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் யாரும் பயணிக்கவில்லை.

நாசா ஓரியனுடன் மிகவும் சிக்கலான பயணங்களைத் திட்டமிடுகிறது. 2024இன் பிற்பகுதியில் அந்தப் பயணங்கள் தொடங்கும். மேலும், 2025 அல்லது 2026இல், மனிதர்களை மீண்டும் சந்திர மேற்பரப்பிற்குக் கொண்டு செல்லும் முயற்சியும் இதில் அடங்கும்.

ஆர்ட்டெமிஸ் திட்டம் மூலம் 50 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்பு, நிலவுக்கு விண்வெளி வீரர்களைக் கொண்டு செல்ல நாசா திட்டமிடுகிறது. அதாவது 1972ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக நிலவில் மனிதர்களைத் தரையிறக்கும் நாசாவின் திட்டம் இந்த ஆர்ட்டெமிஸ்.

நாசாவின் இந்தப் புதிய திட்டத்திற்கு கிரேக்க புராணங்களில் அப்பல்லோவின் சகோதரியாக அறியப்படும் ஆர்ட்டெமிஸ் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c1r32e5834yo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.