Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

5000 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களையும் 1000 க்கு மேற்பட்ட போராளிகளையும் பலி கொண்ட

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

5000 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களையும் 1000 க்கு மேற்பட்ட போராளிகளையும் பலி கொண்ட யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தாகி இன்றுடன் 2000 ஆயிரம் நாட்கள் நிறைவு.

ஜ செவ்வாய்கிழமைஇ 14 ஆகஸ்ட் 2007 ஸ ஜ றஞ்சன் ஸ

5000 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களையும் 1000 க்கு மேற்பட்ட போராளிகளையும் பலி கொண்ட யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தாகி இன்றுடன் 2000 ஆயிரம் நாட்கள் நிறைவடைகிறது. பல ஆயிரம் பொதுமக்கள் இன்றும் காணாமல் போனவர்களாகவே இலங்கை இருக்கும் நிலையில் உடன்படிக்கையை நம்பிய ஈழத்தமிழர்கள் இண்றும் அகதிகளாக நிர்கதியாகவே இருக்கும் நிலையில் உடன்படிக்கையின் நடுநிலையாளர்களான உலக சமூகம் தமிழ் மக்களின் அவலத்தில் வேடிக்கை பார்க்கின்றது. உடன்படிக்கை கைச்சாத்திடபட்டதை தொடர்ந்து முதன் முதலாக கிழாலி பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் மிது சிங்கள சிப்பாய் துப்பாக்கிப் பிரயோகம் செய்த யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு உலைவைத்தார். பின்னர் அதை ஒரு மன நோயாளியின் சம்பவமாக இலங்கை அரசு திரிவு படுத்தி சர்வதேச உலகத்தை ஏமாற்றியது. யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு முரணாக அனைத்து விடயங்களையும் இலங்கை அரசு படிப்படியாக செயற்படுத்த ஆரம்பித்தது. பெண் போராளிகளின் இடுப்ப பட்டியில் ஆரம்பமாகிய முறுகல் குரங்க பாஞ்சான் வரை சென்று கருணா குழுவினருக்கு அடைக்கலம் குடுப்பது என்பது வரை விரிந்து சென்றது. இராணுவ புலனாய்வு பிரிவுக்குள் இருக்கும் முஸ்லிம் உறப்பினர்களால் கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் மோதல்கள் முடக்கி விடபட்டது. இலங்கை அரசு வகை தொகை இண்றி யுத்தத்தினை மீறியுள்ள போதும் நோர்வே அரசையும் சர்வதேச உலகத்தையும் நம்பி தமது அரசியல் பணிக்கு வடக்கு கிழக்கு பகுதிக்கு அனுப்பட்ட போராளிகள் தமத உயிரை தியாகம் செய்யும் நிலைக்கு சென்றது. மொத்தத்தில் சார்வதேச உலகத்தால் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சமாதானம் எண்ற போர்வைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொறிக்குள் விடுதலைப் புலிகளை சிக்க வைக்கும் செயல்கள் அரங்கேறின. அவற்றில் சிலவற்றை மிகவும் சுருக்கி இங்க தருகிறோம்.

1) 10.03.2003 இலங்கை கடற்படையால் தமிழ் மக்களின் வணிக கப்பல் சர்வதேச கடற்பரப்பில் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி மூழ்கடிக்கப்பட்டது.

2) 21.04.2003

போர் நிறுத்த உடன்படிக்கையில் உள்ள சரத்துக்களை அமுல்படுத்துமாறு கோரி விடுதலைப்புலிகள் தமது தொடர்புகளை இலங்கை அரசிடம் இருந்து குறைத்துக் கொண்டனர்.

3) 30.05.2003

இலங்கை அரசாங்கத்தால் முன்வைக்கபட்ட உப்புச்சப்பற்ற தீர்வு தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டது.

4) 06.05.2003

போர் நிறுத்த உடன்படிக்கைக்கு எதிராக பாரிய இராணுவ முகாமை யாழ் நகரப்பகுதியில் இராணுவம் உருவாக்கியது இதனால் மக்கள் திரண்டெழுந்து ஆhப்;பாட்டத்தில் ஈடுபட்டனர்.

5) 20.06.2003

விடுதலைப் புலிகளின் யாழ் நல்லூர் காரியாலயம் இலங்கை இராணுவத்தின் கைக்குண்டு தாக்குதலுக்கு உள்ளானது.

6) 14.06.2003

விடுதலைப் பலிகளின் வணிக கலம் மீதான தாக்குதலை எதிர்த்து விடுதலைப்புலிகள் தமது கண்டனத்தை வெளியிட்டனர்

7) 01.06.2003

யாழ் சிதம்பரா கல்லூரி வளாகத்தில் இராணுவம் பாரிய முகாம் ஒன்றினை அமைத்துக்கொண்டது.

8) 24.07.2003

செல்லக்கிளி அம்மானின் நினைவுத்தூபியினை இலங்கை இராணுவம் அடித்து நொருக்க முற்பட்ட வேளை மக்கள் திரண்டெழுந்து தமது எதிர்ப்புணர்வலையை காட்டினர்.

9) 30-10-2003

தமிழ் மக்களின் இடைக்கால நிர்வாக சபைக்கான வரைபு முன்வைக்கப்பட்டது.

10) 31.10.2003

விடுதலைப் புலிகளின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல் நடாத்த வந்த இரண்டு சிங்கள இனத்தவர்கள் ஆயுதங்களுடன் வன்னியில் மடக்கி பிடிக்கபட்டனர்.

11) 14.10.2003

திராய்கேணி அம்பாறை பகுதியில் இராணுவத்தால் கொல்லபட்ட அப்பாவி தமிழ் மக்களின் எலும்புக் கூடுகள் மீட்கபட்டன.

12) 30.12.2003

யாழுக்கும் தீவகத்திற்குமான மக்கள் போக்குவரத்தில் இலங்கை இராணுவம் குறுக்கிட்டு பாரிய இடஞ்சல்களை எற்படுத்தி அவை மக்கள் போராட்டமாக உருவெடுக்கும் நிலை உருவானது.

13) 19.12.2003

இலங்கையின் வழமைக்கு மாறான அதிரடிப்பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டக்கு ஆளும் தரப்பும் எதிர் தரப்பும் கூட்டாக இனைந்து வாக்கு போட்ட பாரிய சந்தேகத்தை தமிழர் தரப்புக்கு உருவாக்கினர்.

14) 19.12.2003

கிழக்கு மாகாணத்தில் இராணுவ முகாம்களுக்கு அருகில் உள்ள வீடுகளை தமக்கு பணத்திற்கு விற்குமாறு விசேட அதிரடிப்படையினர் தமிழ் மக்களை மிரட்டியதால் மக்களுக்கும் படையினருக்கும் இடையில் பாரிய முறுகல் ஏற்பட்டது.

15) 17.01.2004

யாழ் மறவன்புலவு பகுதியில் மக்கள் குடியிருப்பதற்கு இராணுவம் அனுமதி மறுத்து வந்தது.

16) 15.01.2004

கும்புறுமுலை இராணுவ முகாமிற்கு அருகில் இருந்த தமிழ் குடும்பங்கள் இராணுவத்தினரால் விரட்டப்பட்டனர்.

17) 06.01.2004

தமிழ் ஊடகவியலாளன் பலாலி இராணுவ முகாமில் இராணுவத்தினரால் கடுமையாக மிரட்டப்பட்டார்.

18) 04.01.2004

விறகு பொறுக்க சென்ற அப்பாவி பொதுமக்கள் இராணுவத்தினரால் கடுமையாக தாக்கபட்டனர். இந்த சம்பவம் கிழக்கிலங்கையில் நடைபெற்றது.

19) 30.03.2004

தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளன் ராஜன் சத்தியமூர்த்தி இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

20) 27.04.2004 நான்கு அங்கவீனர்களான போராளிகள் உட்பட 7 போராளிகள் கோரமான முறையில் கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தின் ஊடுருவல் பிரிவினரால் கொல்லபட்டனர்.

21) 01.06.2004

மட்டகளப்பில் பத்திரிகையாளன் நடேசன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

22) 18.08.2004

உவர்மலை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை இராணுவம் தடுத்து நிறுத்தியது.

23) 08.09.2004

புல்லுமலை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம் மீது இலங்கை இராணுவம் பாரிய தாக்குதலை நடாத்தியது.

24) 24.11.2004

மன்னார் பகுதியில் தமிழீழ தேசியக் கொடியினை இராணுவம் கட்டாயத்தின் பேரில் இறக்கியதால் பல சிக்கல்கள் உருவானது.

25) 18.11.2004

அனுராதபரம் பகுதியில் இராணுவம் அப்பாவி தமிழ் பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டது.

26) 16-11-2004

வாழைச்சேனை பகுதியில் போராளி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

27) 18.11.2004

மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவம் தாக்குதலை நடாத்தியது.

28) 23-02-2005

கல்முனை நலன்பரி நிலையத்தில் இருந்த தமிழ் பெண்கள் இராணுவத்தினரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகினர்.

29) 24.02.2005

கிளாலி பகுதி ஊடாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் இராணுவத்தினர் ஊடுருவ முற்பட்டதால் பாரிய மோதல் உருவாகியது.

30) 13.02.2005

மன்னார் பகுதியில் பொலிசாரால் தமிழ் இளைஞன் ஒருவர் கோரமான முறையில் சித்திரவதைக்கு உள்ளானார்.

31) 11.02.2005

தமிழீழத்தின் கிழக்கு பிராந்திய அரசியல்துறை பொறுப்பாளன் கௌசல்யன் கோரமான முறையில் அவரடைய சகாக்களுடன் கொல்லப்பட்டார்.

32) 07.02.2005

மட்டகளப்பில் விசேட அதிரடிப்படையினர் இளைஞர் மீது தாக்குதல் நடாத்தினர்.

33) 07.02.2005

லிங்க நகர் பகுதியில் இருந்து 113 தமிழ் குடும்பத்தை இராணுவம் வெளியேற்றும் வேலைகளில் ஈடுபட்டு வந்தது.

34) 29.04.2005 பிரபல ஊடகவியலாளன் தாராகி என அழைக்கப்படும் சிவராம் கொல்லப்பட்டார்.

35) 26.05.2005

பொத்துவில் பகுதியில் புதிய புத்த கோவில் ஒன்று அமைக்கப்பட்டது.

36) 23.05.2005

திருமலை நகரப்பகுதியில் புதிய புத்த கோவில் ஒன்று அமைக்கப்பட்டது.

37) 22.05.2005

பெரிய கல்லாற்றில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் காரியாலயம் இராணுவத்தால் தாக்கப்பட்டது.

38) 08.05.2005

பாசையூர் மீனவர்கள் மீது இராணுவம் தாக்குதல் நடாத்தியது.

39) 29.06.2005

அம்பாறையில் பத்திரிகை விநியோகத்தர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

40) 26.06.2005

தமிழீழ விடுதலைப் புலிகளின் வாகனம் மீது வெலிகந்தை பகுதியில் தாக்குதல் நடாத்தபட்டது.

41) 25-06-2005

பொத்துவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காரியாலயம் இராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளானது.

42) 22.06.2005

மட்டகளப்பு வாழைச்சேனை பகுதியில் விடுதலைப் புலிகளின் காரியாலயம் இராணுவத்தால் சேதமாக்கப்பட்டது.

43) 19.06.2005

தமிழீழ விடுதலைப் புலிகளின் மன்னார் அலுவலகம் இராணுவத்தால் தாக்கப்பட்டது.

44) 03.06.2005

70 பாடசாலை மாணவர்கள் பயணம் செய்த பேருந்து மீது இராணுவம் கிளைமோர் தாக்குதலை நடாத்தியது.

45) 10.07.2005

உப்பு வெளி பகுதியில் இரண்டு விடுதலைப் புலிகள் உட்பட இரு பொதுமக்கள் இராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டனர்

46) 03.07.2005

மீன்பிடிக்க சென்ற குருநகர் மீனவன் கடற்படையால் சுட்டுக் கொல்லபட்டு மின்சார வேலியில் தூக்கி வீசப்பட்டார்.

47) 26.08.2005

அவசரகாலச்சட்டம் மீண்டும் இலங்கையில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

48) 23.08.2005

யாழ் மாதகல் பகுதியிலும் பாலாலி மருத்துவமனைக்கு அருகிலும் பாரிய பௌத்த கோவில் இரண்டு இராணுவத்தால் உருவாக்கபட்டது.

49) 30.09.2005

ஈழநாதம் பத்திரிக்கை விநியோகஸ்தர் மட்டகளப்பில் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

50) 29.10.2005

கொழும்பில் இருந்து தமிழ் இளைஞர்களை வெளியேறுமாறு இலங்கை பொலிசார் மிரட்டல்களை விடுத்து வந்தனர்.

51) 11.10.2005

சுண்டிக்குளம் பகுதியில் மீன்படிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடாத்தியது.

52) 11-10-2005

திருநெல்வெலி சந்தியில் அப்பாவி தமிழ் பொதுமகன் இராணுவத்தால் சுட்டுகொல்லப்பட்டார்.

53) 25-12-2005

08 அப்பாவி பொதுமக்கள் சுமார் 6 மணி நேரத்தில் இராணவத்தால் யாழ் நகரப்பகுதியில் சுட்டுக் கொல்லபட்டனர்.

54) 26-12-2006

பேசாலைபகுதியில் 4 அப்பாவி பொதுமக்களின் பிணங்கள்; மீட்கப்பட்டது. இவர்கள் இராணுவத்தால் கடத்தி செல்லபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

55) 26-12-2005

வங்காலை பகுதியில் மீனவர்கள் மீது இராணுவம் பாரிய தாக்குதலை மேற்கொண்டது.

56) 03-01-2006

திருகோணமலையில் 5 பாடசாலை மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல இருந்த காலத்தில் படுகொலை செய்யப்பட்டார்கள்.

57) 16-01-2006

மானிப்பாய் பகுதியில் ஒரே குடும்பத்தை சோர்ந்த 7 பேர் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.

58) 20-05-2006

புதூர் பகுதியில் 5 பொதுமக்கள் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள்.

59) 25-05-2006

திருகோணமலை மூதூர் பகுதியில் தமிழ் மக்களின் குடியிருப்புக்களை நோக்கி இராணுவம் தாக்குதல்களை நடாத்தியது.

60) 05-05-2006

நெல்லியடி பகதியில் முச்சக்கரவண்டியில் சென்ற 7 அப்பாவி இளைஞர்கள் இராணுவத்தால் படுகொலை செய்யப்படார்கள்.

61) 14-05-2006

அல்லைப்பிட்டி பகுதியில் 13 பொதுமக்கள் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள்.

62) 08-05-2006

மந்துவில் பகுதியில் உள்ள இந்து ஆலயத்தில் வேலை செய்துகொண்டிருந்த 8 ஊழியர்கள் இராணுவத்தால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர்.

63) 09-06-2006

வங்காலை பகுதியில் அப்பாவி பொதுமக்கள் தூக்கில் இடப்பட்டு கொல்லப்பட்டார்கள் இராணுவமே இந்த கொடிய செயலில் ஈடுபட்டது.

64) 04-08-2006

17 தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் மூதூர் பகுதியில் கொலை செய்யப்பட்டார்கள்.

65) 03-08-2006

திருகோணமலை மூதூரில் அமைந்துள்ள முஸ்லீம் பாடசாலைமீது இராணுவத்தினர் மல்ரி பரல் எறிகணைத்தாக்குதலை நடாத்தினார்கள்.

66) 08-08-2006

நெடுங்கேணி பகுதியில் மருத்துவ வாகனம் மீது இராணுவத்தினர் கிளைமோர் தாக்குதலை நடாத்தி இருந்தனர்.

67) 11-15-08-2006 அல்லைப்பிட்டி பிலிப் மேரி மாதா ஆலயத்தில் தங்கி இருந்த பல பொதுமக்கள் இலங்கை இராணுவத்தால் சுட்டுகொல்லப்பட்டார்கள்.

68) 14-08-2006

வல்லிபுரம் இளம் பாடசாலைமாணவிகள் மீது இலங்கை அரசின் விமானப்படை விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தின.

69) 01-09-2006

பூவரசம்குளம் பகுதியில் 16 அப்பாவி தமிழ் இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு வீசி எறியப்பட்டிருந்தார்கள்.

70) 19-09-2006

10 முஸ்லீம் மக்கள் கோரமான முறையில் விசேட அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

71) 11-10-2006

புதுக்குடியிருப்பு பகுதியில் 4 கிபிர் விமானங்கள் போட்ட 19 குண்டுகளில் ஒரு சிறு குழந்தை கொல்லபட்டதுடன் 16 பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.

72) 02-11-2006

கிளிநொச்சி மருத்துவமனை பகுதி மீது குண்டுத்தாக்குதல் நடாத்தபட்டது.

73) 08-11-2006

கதிரவெளி பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட தொடர் எறிகணைத்தாக்குதலில் 45 பொதுமக்கள் கொல்லபட்டு 125 பொதுமக்கள் படுகாயம் அடைந்தனர்.

74) 09-12-2006

வம்மிவெட்டவான் பகுதியில் இராணவத்தினர் மேற்கொண்ட செல் தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் 20 பொதுமக்கள் படுகாயமடைந்து இறந்தனர்.

75) 10-12-2006

பால்சேனை பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட கோர தாண்டவத்தில் 19 பொதுமக்களும் சுமார் 8 சிறுவர்களும் கொல்லப்பட்டனர்.

76) 02-01-2007

மன்னார் படகுத்துறை கிராமம் மீது இராணுவம் மேற்கொண்ட கிபிர் தாக்குதலில் 15 அப்பாவி பொதுமக்கள் கோரமான முறையில் கொல்லப்பட்டார்கள்.

77) 08-01-07

வாகரை மருத்துவமனை மீது இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 5 பொதுமக்கள் கொல்லபட்டு 12 பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.

http://nitharsanam.com/?art=24129

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.