Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

மனைவிக்கு பயந்து பனைமரத்தில் வாழ்க்கை..

உத்தரபிரதேசத்தின் 'மவு' மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம் பிரவேஷ். இவருக்கும் இவரது மனைவிகும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. பலமுறை பொறுத்துப்பார்த்த அவர், பின்னர் பொறுக்கமுடியாமல் விபரீத முடிவு ஒன்றினை எடுத்துள்ளார்.

அதன்படி ஒருநாள் மனைவியோடு சண்டை ஏற்பட்டதும், வீட்டின் அருகே இருக்கும் பனை மரத்தில் ஏறியவர், அங்கேயே தங்கியுள்ளார். 'எப்படி என்றாலும் அவர் இறங்கத்தானே வேண்டும்' என்று காத்திருந்த மனைவி, அவர் இறங்காமல் போகமே கடும் வருத்தமடைந்துள்ளார்.

FotoJet_2022_08_27T175216_757_166160325816x9.webp?auto=format,compress&format=webp&w=720&dpr=1.0

இயற்கை உபாதை கழிக்க மட்டும் கீழே இறங்கும் ராம் பிரவேஷ், மற்ற நேரங்களில் பனைமரத்திலேயே இருந்து வருகிறார். அவருக்கான உணவை அவர் தந்தை வின்சுராம் மேலே அனுப்பி வந்துள்ளார். மரத்தில் இருந்து இறங்குமாறு ராம் பிரவேஷிடம் பல முறை கிராமத்தினர் கூறியும் மனைவிக்கு பயந்து அவர் மரத்திலிருந்து இறங்க மறுத்துள்ளார்.

இதனால் கிராமத்தினர் இதுகுறித்து போலிஸில் புகார் அளித்துள்ளனர். போலிஸார் வந்து பேசியும் பலன் ஏதும் இல்லாததால் சம்பவத்தை வீடியோ பதிவாக எடுத்து வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் இருக்கும் பனைமரம் கிராமத்தின் நடுப்பகுதியில் இருப்பதால் அது கிராமத்தினருக்கு கடும் அசௌகரியத்தை கொடுத்துள்ளது.

இது தொடர்பாக கூறிய அந்த கிராம தலைவர், "கிராமத்தின் நடுவில் இருக்கும் பனைமரத்தில் 1 மாதமாக அவர் இருப்பது பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பெரும் அசௌகரியத்தை கொடுத்துள்ளது. இதன் காரணமாகவே அவர் மீது புகார் கொடுத்திருக்கிறோம். விரைவில் அவர் கீழே இறங்குவார் என நம்புகிறோம்" என்று கூறியுள்ளனர்.

கலைஞர் செய்திகள்



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.