Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

5ஜி சேவை இந்தியாவில் இன்று தொடக்கம்: இனி மொபைல் சேவை எப்படி வேகம் பிடிக்கும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

5ஜி சேவை இந்தியாவில் இன்று தொடக்கம்: இனி மொபைல் சேவை எப்படி வேகம் பிடிக்கும்?

1 செப்டெம்பர் 2022
புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

5ஜி இணைய சேவை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்று முதல் 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோதி இன்று தொடக்கி வைத்தார். இன்று முதல், நாட்டின் முக்கிய பெரு நகரங்களில் 5ஜி நெட்வொர்க் இணைப்பு கிடைக்கும்.

டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெறும் 6வது இந்திய கைபேசி மாநாட்டை சனிக்கிழமை தொடங்கி வைக்கும் பிரதமர், 5ஜி சேவையையும் அறிமுகப்படுத்தினார்.

5ஜி சேவை அறிமுகமாகப் போகும் சூழலில், அது பற்றிய பல கேள்விகள் வாடிக்கையாளர்கள் மத்தியிலும் மக்கள் மனங்களிலும் எழுந்துள்ளன. எடுத்துக்காட்டாக, தற்போது 4ஜி சேவை அல்லது 3ஜி சேவை பெறும் வாடிக்கையாளர் தங்கள் திறன்பேசியிலேயே 5ஜி சேவையைப் பெறமுடியுமா அல்லது இதற்காக அவர்கள் தங்கள் திறன்பேசியை மாற்றவேண்டுமா, புதிய சிம் கார்டு வாங்கவேண்டுமா என்பன போன்ற கேள்விகள் மக்கள் மனங்களில் எழுந்துள்ளன.

இது போன்ற சில கேள்விகளையும் அவற்றுக்கான பதில்களையும் இங்கே வழங்குகிறோம்.

 

1. 5G என்றால் என்ன?

5ஜி என்பது 5-ம் தலைமுறை தொலைத்தொடர்பு சேவை. 4ஜி சேவை மொபைல் பிராட்பேண்டை சாத்தியப்படுத்திய நிலையில், 5ஜி தொழில் நுட்பத்தில் இணைய வேகம் மேலும் அதிகமாக இருக்கும் என்பது உண்மை. ஆனால், 5ஜி என்பது இணைய வேகம் தொடர்பானது மட்டுமே அல்ல. லேட்டன்சி என்று அறியப்படும், தரவுப் பறிமாற்றம் தொடங்குவதற்கு முன்பு நிலவும் சில நொடி தமாதம் 5ஜி தொழில்நுட்பத்தில் கிட்டத்தட்ட இருக்கவே இருக்காது என்று கூறப்படுகிறது.

பல்வேறு கருவிகள், பொருள்களையும் இணைக்கும் வகையில் 5 ஜி தொழில்நுடம் இருக்கும். அந்த வகையில் மருத்துவம், போக்குவரத்து போன்ற பல துறைகளில் இந்த தொழில்நுட்பத்தின் தாக்கம் இருக்கும்.

2. 5ஜி தொழில்நுட்பத்தில் இணைய வேகம் எவ்வளவு?

பிபிசி தமிழ் செய்தியாளர் சாய்ராம் ஜெயராமன் 5ஜி குறித்து எழுதிய கட்டுரையில், "5ஜி தொழில்நுட்பத்தில் இணையதள வேகம் எவ்வளவு இருக்கும் என்று தெரிந்துகொள்வதற்கு முன்னர், இந்தியாவில் சராசரி 4ஜி வேகம் குறித்து தெரிந்துகொள்வோம்.

உலகம் முழுவதும் 4ஜி தொழில்நுட்பத்திற்கென குறிப்பிட்ட அலைவரிசையும், தரமும், சராசரி வேகமும் நிர்ணயிக்கப் பட்டிருந்தாலும், ஒவ்வொரு நாடுகளுக்கிடையேயும் இணையதள வேகத்தில் பெரும் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கிறது.

 

நொடிக்கு 7ஜிபி வேகம்; 5ஜி தொழில்நுட்பம் உங்களுக்கு தேவையா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அந்த வகையில் பார்க்கும்போது, உலகிலேயே அதிகபட்சமாக சிங்கப்பூரில் 4ஜி எல்டிஇ பயன்பாட்டாளர்களுக்கு சராசரியாக 44 எம்பிபிஎஸ் வேகம் கிடைப்பதாகவும், இந்தியாவை பொறுத்தவரை சராசரியாக 9.31 எம்பிபிஎஸ் வேகம் இருப்பதாகவும் ஓபன்சிக்னல் என்னும் சர்வதேச கம்பியில்லா இணைய வேக ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது.

இந்நிலையில், 5ஜி தொழில்நுட்பத்தில் எவ்வளவு வேகத்தை எதிர்பார்க்கலாம் என்று அமெரிக்காவை சேர்ந்த ரேடியோ அலைக்கற்றைகள் குறித்த ஆராய்ச்சியாளரான கதிரவன் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது, "வேகம் என்று நாம் சொல்ல வருவது கம்பியில்லாத ரேடியோ தொடர்பாடலில் அலைக்கற்றையின் அகலமாகப் பார்க்கப்படுகின்றது.

இன்று புழக்கத்தில் இருக்கும் 3ஜி அல்லது 4ஜி ஆகிய தொடர்பாடல் முறைமைகள் பயன்படுத்தும் அதிர்வெண்கள் 3 கிகாவுக்கும் குறைவானவை. 5ஜியிலோ 30 கிகா வாக்கில் ரேடியோ அதிர்வெண்களைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். ஆற்றின் வெள்ளம் 5ஜி என்றால் முந்தையவை கால்வாய் நீர். அதிகமாக வெள்ளம் ஓடும் ஆறுபோல நாம் பார்க்கலாம்.

30 கிகா மைய அதிர்வெண்ணில் 3 கிகா வேகத்துக்கு தொடர்பாட முடிவதற்கு சமம். 3 கிகா இன்றைய அதிர்வெண்ணில் 300 மெகா வேகம் போன்றது. 10-20 மடங்கு இன்றைய வேகத்திலும் அதிகமாகத் தொடர்பாடலாம்" என்று அவர் கூறினார்.

உலகின் முன்னணி திறன்பேசி சிப் தயாரிப்பு நிறுவனமான குவால்காம், 5ஜி தொழில்நுட்பத்தில், அதிகபட்சமாக ஒரு நொடிக்கு 7ஜிபிபிஎஸ் பதிவிறக்க வேகமும், 3ஜிபிபிஎஸ் பதிவேற்ற வேகமும் இருக்குமென்று கூறுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

3. எந்த ஃபோன்களில் 5G செயல்படும்?

கிட்டத்தட்ட அனைத்து பிராண்டுகளும் 5ஜி சேவையை வழங்கக் கூடிய திறன்பேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளன. ஆனால், 4ஜி திறன்பேசிகளில் இந்த சேவையின் பலனை நீங்கள் பெற இயலாது. அதற்கு உங்களிடம் குறைந்தபட்சம் 5ஜி திறன்பேசி இருக்க வேண்டும். தற்போது 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டுள்ளதால், புதிய செல்பேசிகளில் 5ஜி அலைக்கற்றை வசதி வருமா என நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

4. அப்படியானால் நீங்கள் புதிய போன் வாங்க வேண்டுமா?

தற்போதைய செல்பேசியின் சமீபத்திய அறிமுகத்தைப் பொறுத்து இது அமையும். ஏற்கெனவே 3ஜி சேவைக்கான வாய்ப்பை பெற்றுள்ள பழைய செல்பேசியில் 4ஜி சேவை இயங்காது. அதுபோலவே, 3ஜி சேவை செல்பேசிகளில் 5ஜி சேவையை பெற முடியாது. உங்களிடம் 5ஜி நெட்வொர்க்கை பெறக் கூடிய செல்பேசி அல்லது திறன்பேசி இருந்தால் புதிதாக திறன்பேசி வாங்கும் தேவை இருக்காது.

ஒரு சில பிராண்டுகளில் 4G / 3G உடன் 5G விருப்பம் இருக்கும். இதைச் செய்ய நீங்கள் சிஸ்டம்> நெட்வொர்க்> மொபைல் நெட்வொர்க்> நெட்வொர்க் பயன்முறைக்குச் செல்ல வேண்டும். அதுவே 5G வசதி செல்பேசியில் இல்லை என்றால், நீங்கள் புதிய திறன்பேசியை வாங்கினால் மட்டுமே புதிய சேவையின் பலனை அனுபவிக்க முடியும்.

 

5ஜி சேவை

பட மூலாதாரம்,SOPA IMAGES

5. புதிய சிம் கார்டும் வேண்டுமா?

இல்லை, 5G சேவைக்கு நீங்கள் புதிய சிம் கார்டை வாங்க வேண்டியதில்லை. உங்கள் தற்போதைய சிம் கார்டில் 5G இணைப்புக்கான வசதி கிடைக்கும். நீங்கள் புதிய சிம் கார்டை வாங்கும்போது சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உங்களுக்கு 5ஜி சிம் வழங்கவும் வாய்ப்புள்ளது.

6. 5ஜி டேட்டா பிளான் கட்டணம் அதிகமாக இருக்குமா?

5ஜி திட்டங்களின் கட்டணம் எவ்வளவு வரம்புக்குள் இருக்க வேண்டும் என்பதை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இன்னும் வெளியிடவில்லை. ஆனால் 4ஜியை விட அதிகம் பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். இது பற்றிய உறுதியான தகவல்கள் தற்போதைக்கு இல்லை.

7. இணைய வேகத்தை தவிர்த்து 5ஜியின் முக்கியத்துவங்கள் என்னென்ன?

1ஜி முதல் 4ஜி வரையிலான தொழில்நுட்ப மேம்பாடு, சாதாரண கம்பியில்லா குரல்வழி அழைப்புகளை மேற்கொள்வதிலிருந்து தொடங்கி, அதிவேக இணைதள பயன்பாடு வரை பல்வேறு மாற்றங்களை நமது வாழ்க்கையில் புகுத்தியுள்ளது.

அந்த வகையில் 5ஜி தொழில்நுட்பம் முன்னெப்போதும் இல்லாத வகையிலான மாற்றங்களை திறன்பேசி பயன்பாடு மட்டுமின்றி மற்றனைத்து துறைகளிலும் ஏற்படுத்தும் என்று தொழில்நுட்பவியலாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

 

நொடிக்கு 7ஜிபி வேகம்; 5ஜி தொழில்நுட்பம் உங்களுக்கு தேவையா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

உதாரணமாக, 5ஜி தொழில்நுட்பத்தை வாகனங்களில் புகுத்துவதன் மூலம், ஒரு குறிப்பிட்ட சாலையில் சென்றுக்கொண்டிருக்கும் அனைத்து வாகனங்களும் ஒன்றோடொன்று தகவல்களை பரிமாறிக்கொண்டு விபத்துகள் ஏற்படுவதையும், எரிபொருள் வீணாவதையும் தவிர்க்க முடியும். அதுமட்டுமின்றி 'இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்' எனப்படும் பொருள்களுக்கான இணையம், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றறிதல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நகரங்களின் பாதுகாப்பு, எரிசக்தி சேமிப்பு, சுற்றுச்சூழல் மேலாண்மை, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் துல்லியத்தை புகுத்த முடியும்.

அதுமட்டுமின்றி, மறைநிகர் ரியாலிட்டி, ஆகுமெண்டட் ரியாலிட்டி போன்ற தொழில்நுட்பங்களை மையமாக கொண்ட விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த நேரலை நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், செயலிகளின் பயன்பாட்டை எளிதாக்கும்.

8. 5ஜி வசதியை அணுகுவதால் என்ன மாறும்?

5ஜி நெட்வொர்க் வந்த பிறகு, ஒரே நாளில் எந்த மாற்றமும் நிகழாது. வாடிக்கையாளருக்கு ஒரே ஆதாயமாக சிறந்த தரத்தில் அழைப்புகளை பெற முடியும். 5ஜி அலைக்கற்றை உள்ள நகரங்களில் சிறந்த இணைப்பைப் பெறத் தொடங்குவீர்கள். இது தவிர இணைய வேகம் அதிகரிக்கும். 4ஜியில் 100எம்பிபிஎஸ் வேகத்தைப் பெற்றால், 5ஜியில் 1ஜிபிபிஎஸ் வேகத்தை வசதியாக பெறுவீர்கள்.

9. வைஃபை தேவை முடிவுக்கு வருமா?

5ஜி வந்த பிறகு வைஃபை வசதி தேவைப்படாது. காரணம், வைஃபை சந்தையில் அது சில விளைவுகளை ஏற்படுத்தலாம், அதே சமயம், எல்லா இடங்களில் 5ஜி சேவை வழங்கப்படவில்லை என்பதால் வைஃபை வணிகம் 5ஜி வரவால் முடிவுக்கு வராது.

 

5ஜி சேவை

பட மூலாதாரம்,GETTY IMAGES

10. இந்தியாவில் முழுவதும் எப்போது சேவை கிடைக்கும்?

முதல் கட்டமாக, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த சேவையை நான்கு மெட்ரோ நகரங்களிலேயே தொடங்குகின்றன. படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் சேவை விரிவுபடுத்தப்படும். ஜியோ தனது 5ஜி சேவையை டிசம்பர் 2023க்குள் நாடு முழுவதும் விரிவுபடுத்தும் என்று கூறியிருக்கிறது.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

11. 4ஜி முடிவுக்கு வருமா?

5ஜி வந்த பிறகு 4ஜி சேவை முடிவுக்கு வரும் என பலரும் கருதுகின்றனர். இப்போது 4G மற்றும் 3G சேவையை இரண்டும் கிடைக்கவே செய்கிறது. அதுபோலவே, 4ஜி, 5G சேவை இரண்டும் கிடைக்கும்.

12. 5G புதிய உலகிற்கு வழி திறக்குமா?

தொலைத்தொடர்புத்துறையில் 5ஜி சேவை ஒரு புரட்சியாக பார்க்கப்படுகிறது. அதன் வருகையால், உங்களைச் சுற்றி பல மாற்றங்கள் நிகழலாம். உதாரணமாக, நீங்கள் முற்றிலும் மாறுபட்ட இணைய அனுபவத்தைப் பெறுவீர்கள். இத்துடன் ஐஓடி எனப்படும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் என்ற தேவை அதிகரிக்கும். உதாரணமாக, வீட்டில் பல IoT சாதனங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும். வைஃபை கேமராக்கள் முதல் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் வரை, இது வேகமாக விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதெல்லாம் ஒரே நாளில் நடக்காது. 5ஜி நிறைய புதிய விஷயங்களை கொண்டு வரும், ஆனால் இந்த விஷயங்கள் அனைவரையும் சென்றடைய நேரம் சில காலம் ஆகலாம்.

https://www.bbc.com/tamil/india-62744452

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

5ஜி நெட்வொர்க் அறிமுகம்: இந்தியாவில் இதன் தாக்கம் எப்படி இருக்கும்?

  • தில்நவாஸ் பாஷா
  • பிபிசி இந்தி சேவை
3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

நரேந்திர மோதி

பட மூலாதாரம்,@ASHWINIVAISHNAW

 

படக்குறிப்பு,

நரேந்திர மோதி

5ம் தலைமுறை தொலைத் தொடர்பு சேவையான 5ஜி நெட்வொர்க் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோதி இந்த சேவையைத் தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் இந்தியாவிலும் மிக வேகமான மொபைல் இணையத்தின் சகாப்தம் தொடங்கியுள்ளது.

அதிவேக இணையம் ஒவ்வொரு இந்தியரையும் சென்றடைய அதிக காலம் எடுக்காது என்று அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோதி கூறினார்.

 

இந்தத் தொழில்நுட்பம் வெறும் குரல் அழைப்புகள், வீடியோக்களை பார்ப்பதற்கு மட்டும் அல்ல, புதிய புரட்சிக்கு வழிவகுக்கும் என்று பிரதமர் கூறினார்.

ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி சேவை டிசம்பர் 2023க்குள் இந்தியா முழுவதும் கிடைக்கும் என்று அந்த கம்பெனியின் நிறுவனர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், பார்தி ஏர்டெல்லின் சுனில் மித்தல், ஏர்டெல் நிறுவனம் 5ஜி சேவைகளை அக்டோபர் 1, 2022 முதல் தொடங்குவதாகவும், மார்ச் 2024க்குள் அவை இந்தியா முழுவதும் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

 

लाल रेखा

10 ஜிபி வேகம்

முதற்கட்டமாக இந்தியாவின் அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, டெல்லி, காந்திநகர், குருகிராம் மற்றும் ஹைதராபாத் ஆகிய 8 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படும்.

மார்ச் 2023 க்குள் நாட்டின் அனைத்து நகர்ப்புறங்களிலும் தனது 5ஜி சேவைகள் தொடங்கும் என்று பார்தி ஏர்டெல் தெரிவித்துள்ளது.

இந்திய தகவல் தொடர்பு அமைச்சகம், 2035 ஆம் ஆண்டில், நாட்டின் பொருளாதாரத்தில் 5ஜி-யின் தாக்கம் $450 பில்லியன் வரை இருக்கும் என்று தெரிவிக்கிறது.

5ஜி இணைப்பின் மூலம், வினாடிக்கு 10 ஜிபி என்ற வேகம் எட்டப்படும். தற்போது 4ஜி நெட்வொர்க்கில் ஒரு நொடிக்கு அதிகபட்சமாக 100 எம்பிபிஎஸ் அளவே இருக்கிறது

இந்தியாவில் சுமார் 10 கோடி மொபைல் பயனர்கள் 5ஜி-யில் இணையத் தயாராக உள்ளனர் என்றும் இந்த நுகர்வோரிடம் 5ஜிக்குத் தேவையான தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றன என்றும் அடுத்த 12 மாதங்களுக்குள் வேகமான இணையத்துடன் இணைய விரும்புகிறார்கள் என்றும் எரிக்சன் நுகர்வோர் ஆய்வகத்தின் அறிக்கை கூறுகிறது.

இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, நகர்ப்புற நுகர்வோரின் கருத்துகளை உள்ளடக்கியது. இந்த ஆய்வின் படி, 5ஜிக்கான தயார் நிலை உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம் காணப்படுகிறது. பிரிட்டன், ஐக்கிய அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் சந்தைகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் 5ஜி நெட்வொர்க்குகளுக்கு மாறுவதற்கு நுகர்வோரின் விருப்பம் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

 

लाल रेखा

வேகம் தவிர வேறு என்ன மாற்றம் வரும்?

 

5जी

பட மூலாதாரம்,AVISHEK DAS/SOPA IMAGES/LIGHTROCKET VIA GETTY IMAG

ஆனால் 5ஜி-யின் தாக்கம் இத்துடன் நிற்காது. இது இன்னும் நிறைய மாற்றங்களைக் கொண்டு வரும். குறிப்பாக மருத்துவம், கல்வி, உற்பத்தி மற்றும் அறிவியல் துறைகளில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

 

लाल रेखा

2014 இல் 5ஜியை உருவாக்குவதற்கான முயற்சிகள் தொடங்கியபோது, இங்கிலாந்தின் சர்ரே பல்கலைக்கழகத்தில் உள்ள 5ஜி கண்டுபிடிப்பு மையத்தின் ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான பேராசிரியர் ரஹீம் தஃபாஜோலி பிபிசியிடம் கூறுகையில், "5ஜி எல்லாவற்றையும் வியத்தகு முறையில் தலைகீழாக மாற்றும்" என்றார்.

தொலைத்தொடர்பு விவகாரங்களுக்கான ஆலோசகர் மகேஷ் உப்பல் கூறுகையில், "5ஜி நெட்வொர்க்கின் மிகப்பெரிய நன்மை உற்பத்தித் துறையில் இருக்கும். ஸ்மார்ட் நகரங்களை ஒன்றோடொன்று இணைக்க முடியும், மருத்துவர்கள் தொலைவில் இருந்து அறுவை சிகிச்சை செய்ய முடியும் மற்றும் ஓட்டுநர்கள் இல்லாமல் சாலைகளில் வாகனங்களை இயக்க முடியும்." என்று விவரித்தார்.

5ஜி முன் உள்ள சவால்கள்

5ஜி நெட்வொர்க்கை இரண்டு வழிகளில் இயக்க முடியும். முதலில், இதற்கென தனி நெட்வொர்க் அமைக்க வேண்டும், அதற்கு ஸ்டாண்ட் அலோன் நெட்வொர்க் என்று பெயர். இரண்டாவதாக ஏற்கனவே நிறுவப்பட்ட வலைப்பின்னலை பயன்படுத்த வேண்டும், இது நான் ஸ்டாண்ட் அலோன் நெட்வொர்க் என்று அழைக்கப்படுகிறது.

இருப்பினும், உலகில் எங்கெல்லாம் நான் ஸ்டாண்ட் அலோன் நெட்வொர்க் மூலம் 5 ஜி தொடங்கப்பட்டதோ, அங்கெல்லாம் கூட ஸ்டாண்ட் அலோன் நெட்வொர்க் மூலம் இணைக்கப்பட வேண்டியுள்ளது.

5G வேகத்திற்கான வழியைத் திறந்து விட, ரேடியோ நெட்வொர்க் புதிய கட்டமைப்புகளை உருவாக்கவேண்டியிருக்கும். நெட்வொர்க் வழங்குநர் நிறுவனங்களும் 3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்க்குகள் முன்பு போலவே இயங்குவதை உறுதிசெய்ய வேண்டும்.

 

2024 மார்ச் மாதத்துக்குள் தங்கள் 5ஜி சேவை இந்தியா முழுவதும் சென்று சேரும் என்கிறது ஏர்டெல் நிறுவனம்.

பட மூலாதாரம்,PACIFIC PRESS

 

படக்குறிப்பு,

2024 மார்ச் மாதத்துக்குள் தங்கள் 5ஜி சேவை இந்தியா முழுவதும் சென்று சேரும் என்கிறது ஏர்டெல் நிறுவனம்.

மகேஷ் உப்பல், "5G தொழில்நுட்பம் ஒரு புதிய தொழில்நுட்பம். இது விலை உயர்ந்தது. இதற்கு அதிக முதலீடு தேவைப்படுகிறது. அதன் நெட்வொர்க்கை அமைக்க அதிக எண்ணிக்கையிலான டவர்கள் தேவைப்படும். இந்த நெட்வொர்க்கை வெளியிடுவதற்கு அதிக செலவு மற்றும் நேரம் எடுக்கும். 5ஜி அமைப்பதில் பல சவால்கள் உள்ளன." என்கிறார்.

மேலும் கூறும் அவர், "5ஜி நெட்வொர்க் விரிவாக்கத்தில் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று வயர்லெஸ் தொழில்நுட்பத்தை புவியியல் ரீதியாக விரிவுபடுத்துவது, இரண்டாவதாக, அதன் பயன்பாட்டை அதிகரிப்பது. நெட்வொர்க்கை விரிவாக்குவதில் சிக்கல்கள் இருக்கும். பல வகையான அனுமதிகள் தேவைப்படும். இந்தியாவில் அதன் பயன்பாடு மேலும் அதிகரிக்க நேரம் ஆகலாம்." என்கிறார்.

5ஜி மொபைலை வாங்கவோ அல்லது அதன் விலையுயர்ந்த டேட்டா கட்டணத்தைச் செலுத்தவோ முடியாத ஒரு பெரிய வாடிக்கையாளர் பிரிவு இந்தியாவில் இருப்பது ஒரு மிகப்பெரிய சவால்.

"பயனர்களின் பார்வையில் இருந்து பார்த்தால், அவர்களுக்கும் 5ஜி சப்போர்ட் செய்யும் சாதனம் தேவை. பொதுவாக 5G போன்கள் இருபதாயிரம் ரூபாய் வரை ஆகும். அவற்றை எல்லோரும் வாங்க முடியாது. ஒருவேளை 5ஜி மொபைல்களின் விலை பிற்காலத்தில் குறையலாம்." என்றும் மகேஷ் உப்பல் விளக்குகிறார்.

சாமானியர்களின் வாழ்வில் தாக்கம்

 

5ஜி

பட மூலாதாரம்,THINKSTOCK

இந்தியாவில் தற்போது 4ஜி நெட்வொர்க் உள்ளது, அதில் வீடியோ அழைப்புகளை எளிதாகச் செய்ய முடியும். இணையத்தில் திரைப்படங்களைப் பார்க்க முடியும். இத்தகைய சூழ்நிலையில், சாதாரண வாடிக்கையாளருக்கு 5ஜி மூலம் என்ன மாற்றம் வரும் என்ற கேள்வி எழுகிறது.

இதற்கு பதிலளிக்கும் மகேஷ் உப்பல், "குறுகிய காலத்தில், 5ஜி சாதாரண பயனர்களுக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது, ஆனால் இணையத்தில் உலாவுதல் வேகமாக இருக்கும்." என்று கூறுகிறார்.

ஆனால் புறக்கணிக்க முடியாத பல நன்மைகள் 5ஜி-யால் விளையும். அதன் மிகப்பெரிய நன்மை ஆட்டோமேஷன் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இருக்கும்.

"ஆனால் நீண்ட காலத்திற்கு, 5ஜி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உற்பத்தித் துறை, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் புரட்சி ஏற்படும். உற்பத்தி அலகுகளில் தானியங்கி வாகனங்களை இயக்க முடியும். மருத்துவர்களால் தொலைவில் இருந்தும் அறுவை சிகிச்சை முடியும். "

"இதுவரை பொதுவாக மனிதர்களுக்கிடையேயான தகவல்தொடர்பு இருந்தது. ஆனால் இப்போது இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு, அதிவேகத்தில் நிகழ்நேரத்தில் தரவைப் பகிரும், இது கிட்டத்தட்ட எல்லா துறைகளுக்கும் பயனளிக்கும்." என்று மகேஷ் உப்பல் விவரிக்கிறார்.

 

लाल रेखा

5ஜி சிறப்பு அம்சங்கள்

 

5ஜி

பட மூலாதாரம்,DEBARCHAN CHATTERJEE/NURPHOTO VIA GETTY IMAGES

• 5ஜி என்றால் ஐந்தாம் தலைமுறை மொபைல் இணையம். ஐந்தாவது தலைமுறை மொபைல் நெட்வொர்க்கை உருவாக்குவதற்கான முயற்சிகள் 2013 ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் இதன் அறிமுகம் தொடங்கியது.

• சாம்சங் 2013 இல் 5ஜி நெட்வொர்க்கை சோதனை செய்தபோது, அதன் வேகம் 1 Gbps ஆக இருந்தது. சராசரி பதிவிறக்க வேகம் 700 Mbps ஆக உள்ள 5ஜி நெட்வொர்க் இப்போது 70 நாடுகளில் இயங்குகிறது.

• 5ஜி அலைக்கற்றை மூலம் தரவுகள் மிக அதிக வேகத்தில் ரேடியோ அலைகள் வழியாகப் பயணிக்கும்.

• எளிதாகப் புரியும் வகையில் சொல்ல வேண்டுமானால், இதை சூப்பர்ஃபாஸ்ட் இணையம் என்று அழைக்கலாம், இது 4ஜி இணைய வேகத்தை விட நூறு மடங்கு வேகமாக இருக்கும்.

• 5ஜி இணையத்திற்கு மாறிவிட்டால், செயலிகள் பாதியில் செயலிழக்காது என்றும் வீடியோ பஃபர் ஆகாது என்றும் முடிவில்லா பதிவிறக்க அடையாளக் குறியுடன் போராட வேண்டியிருக்காது என்று பலரும் நம்பியிருக்கிறார்கள்.

 

लाल रेखा

எல்லோரையும் சென்றடையுமா 5ஜி?

 

மொபைல் பயன்படுத்துவோர்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிவேக இணையத்தை வழங்க இந்திய அரசு விரும்புவதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

இந்திய தொலைத்தொடர்புத் துறையில் மிகப்பெரிய நிறுவனமான ஜியோ, 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 5ஜி நெட்வொர்க் அளிக்க உள்ளதாகக் கூறுகிறது.

அதே நேரத்தில், பார்தி ஏர்டெல் மார்ச் 2024 க்குள் நாடு முழுவதும் தங்கள் 5ஜி சேவை சென்று சேரும் என்கிறது.

ஆனால் இந்தியாவில் தற்போதுள்ள 4ஜி நெட்வொர்க்கில் கூட பல இடங்களில் சிக்கல்கள் உள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் உண்மையில் சாமானியர்களைச் சென்றடையுமா என்பதுதான் கேள்வி.

மகேஷ் உப்பல், "4ஜி-யில் சிக்கல்கள் இருந்தால், 5ஜி-யிலும் நிச்சயம் இருக்கும். ஏனெனில் 5ஜி க்கு அதிக அடர்த்தியான நெட்வொர்க் தேவைப்படும். இப்போது ஆபரேட்டர்களின் முன்னுரிமை, கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும். ஆரம்பத்தில் தொழில்துறையில் கவனம் செலுத்த வேண்டும். சாமானியர்களை சென்றடைய அதிக நேரம் எடுக்கலாம்," என்று அவர் கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/india-63109408

  • கருத்துக்கள உறவுகள்

5G க்கும் நரேந்திர மோடிக்கும் என்ன தொடர்?

BBC தமிழ் பார்ப்பனியத்தின் ஊதுகுழலாகி வெகு நாட்களாகிறது. 

ஏராளன் BBC க்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோல வேறு ஊடகங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கலாமே? 

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Kapithan said:

 

ஏராளன் BBC க்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோல வேறு ஊடகங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கலாமே? 

bbc தமிழ் எமக்கு எதிர் அதனால் இங்கு இணைக்காமல் விட்டால் அந்த தே...... ஊடகம் என்ன எழுதுகின்றது என்பது எமக்கு தெரியாமல் குண்டு சட்டிக்குள் குதிரை ஓடவேண்டி வரும் அது ஆரோக்கியமான ஒன்றல்ல அதனால் ஏராளன்க்கு நன்றி சொல்லனும் . 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

5G க்கும் நரேந்திர மோடிக்கும் என்ன தொடர்?

BBC தமிழ் பார்ப்பனியத்தின் ஊதுகுழலாகி வெகு நாட்களாகிறது. 

ஏராளன் BBC க்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோல வேறு ஊடகங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கலாமே? 

 

11 minutes ago, பெருமாள் said:

bbc தமிழ் எமக்கு எதிர் அதனால் இங்கு இணைக்காமல் விட்டால் அந்த தே...... ஊடகம் என்ன எழுதுகின்றது என்பது எமக்கு தெரியாமல் குண்டு சட்டிக்குள் குதிரை ஓடவேண்டி வரும் அது ஆரோக்கியமான ஒன்றல்ல அதனால் ஏராளன்க்கு நன்றி சொல்லனும் . 

நீண்ட காலமாக யாழில் பிபிசி இன் இணைப்புகள் எதையும் காணமுடிவதில்லை.

ஏராளன் மாத்திரமே எந்த நாளும் இணைத்து உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

நீண்ட காலமாக யாழில் பிபிசி இன் இணைப்புகள் எதையும் காணமுடிவதில்லை.

ஏராளன் மாத்திரமே எந்த நாளும் இணைத்து உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

நல்ல விடயம் தானே தமிழ்bbcikku போற கூட்டம் யாழில் வருவது ?

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பெருமாள் said:

bbc தமிழ் எமக்கு எதிர் அதனால் இங்கு இணைக்காமல் விட்டால் அந்த தே...... ஊடகம் என்ன எழுதுகின்றது என்பது எமக்கு தெரியாமல் குண்டு சட்டிக்குள் குதிரை ஓடவேண்டி வரும் அது ஆரோக்கியமான ஒன்றல்ல அதனால் ஏராளன்க்கு நன்றி சொல்லனும் . 

அதனை இணைக்க வேண்டாம் என்று கூறவில்லைய. BBC யை மட்டும் இணைப்பதோடு நிற்க வேண்டாம் என்றுதான்  கூறினேன். 

😉

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

அதனை இணைக்க வேண்டாம் என்று கூறவில்லைய. BBC யை மட்டும் இணைப்பதோடு நிற்க வேண்டாம் என்றுதான்  கூறினேன். 

அப்படியா நல்லது .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/10/2022 at 01:22, Kapithan said:

5G க்கும் நரேந்திர மோடிக்கும் என்ன தொடர்?

BBC தமிழ் பார்ப்பனியத்தின் ஊதுகுழலாகி வெகு நாட்களாகிறது. 

ஏராளன் BBC க்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோல வேறு ஊடகங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கலாமே? 

அதை இந்தியாவில் தொடக்கி வைப்பது அவராம்.

 

On 3/10/2022 at 02:48, Kapithan said:

அதனை இணைக்க வேண்டாம் என்று கூறவில்லைய. BBC யை மட்டும் இணைப்பதோடு நிற்க வேண்டாம் என்றுதான்  கூறினேன். 

😉

இப்ப வீரகேசரி இணைய செய்திகளும் இணைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.