Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோடிக்கணக்கான பண மோசடி : திலினியை 4 இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை : 1000 கோடியை தாண்டுமாம்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திலினி விவகாரம் - ஜீவன்குமாரதுங்கவிடம் விசாரணை

By RAJEEBAN

08 NOV, 2022 | 04:33 PM
image

திலினி பிரியமாலி விவகாரம் தொடர்பில் முன்னாள் பிரதியமைச்சர் ஜீவன் குமாரதுங்க அவரது மனைவி  ,நடிகை சங்கீதா வீரரட்ண ஆகியோரை சிஐடியினர் விசாரணை செய்துள்ளனர்.

ஜீவன்குமாரதுங்கவையும் அவரது மனைவியையும் சனிக்கிழமை  சிஐடிக்கு அழைத்து விசாரணைக்கு உட்படுத்தியதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அவர்களிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது சங்கீத வீரரட்ணவிடமிருந்து  திங்கட்கிழமை வாக்குமூலத்தை பெற்றுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

thilini__1_.jpg

சிஐடியினர் ஐந்து மணித்தியாலங்களிற்கு மேல் அவர்களிடமிருந்து வாக்குமூலங்களை பெற்றுள்ளனர்.

அவர்களுடைய வர்த்தக நடவடிக்கைகள்  ஜீவன்குமாரதுங்க இயக்கிய படத்திற்கு ( ஜீவா) பிரியமாலி பணம் வழங்கியமை உட்பட பல விடயங்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுத்ததாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மோசடி மூலம் பெற்ற பணத்தை சினிமாவில் திலினி செலவிட்டாரா என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.

https://www.virakesari.lk/article/139474

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திலினி பிரியமாலியின் 4 வங்கிக் கணக்குகள் தொடர்பில் அறிக்கை கோரும் நீதிமன்றம்!

By DIGITAL DESK 2

11 NOV, 2022 | 11:41 AM
image

 

திகோ குழுமத்தின் உரிமையாளரான திலினி பிரியமாலிக்குச் சொந்தமான நான்கு தனியார் வங்கிக் கணக்குகள் தொடர்பான விரிவான அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் திலினி கமகே தனியார் வங்கிகளின் முகாமையாளர்களுக்கு வியாழக்கிழமை (10) உத்தரவிட்டார். 

 

Alleged massive financial fraud Thico Group owner Thilini Priyamali  remanded - Front Page | Daily Mirror

மொரட்டுவையில் உள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரிடமிருந்து நான்கு கோடி ரூபா பணம்  மோசடி செய்யப்பட்ட   சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம்  முன்வைத்த கோரிக்கையை கவனத்தில் கொண்டே  நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சந்தேக நபரான  திலினி பிரியமாலி, முறைப்பாட்டாளரான வர்த்தகருக்கு  டொலர்களை தருவதாகக் கூறி  குறித்த தொகையை பெற்றுக் கொண்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில்  அறிக்கை செய்திருந்தனர்.

https://www.virakesari.lk/article/139713

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திலினி பிரியமாலி விவகாரம்: ஞானசார தேரரிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம்!

By VISHNU

13 NOV, 2022 | 10:52 AM
image

திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியின் பாரிய நிதி மோசடி தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம் கலகொடஅத்தே ஞானசார தேரரிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் 12 ஆம் திகதி சனிக்கிழமை வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

ஞானசார தேரரிடம்   குற்றப் புலனாய்வு திணைக்களம் சுமார் மூன்று மணித்தியாலங்கள் வாக்குமூலங்களை  பதிவு செய்துள்ளதாக திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த  விவகாரம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின்போது  ஞானசார தேரர் தொடர்பான உரையாடல்கள் பதிவாகியுள்ளதால், அவர் அழைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/139857

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திலினி பிரியமாலி உட்படலானோருக்கு 30 ஆம் திகதி வரை விளக்கமறியல்!

By T. SARANYA

16 NOV, 2022 | 04:41 PM
image

திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி  பிரியமாலி, அவரது  கணவர் எனக் கூறப்படும்  இசுரு பண்டார, கிரிஷ் குழுமத்தின் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன, பொரளை சிறிசுமண தேரர் உள்ளிட்ட ஐவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் ஸ்கைப் தொழில்நுட்பத்தினூடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே  நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இதன்படி அவர்கள் அனைவரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (16) உத்தரவிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/140256

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திலினி பிரியமாலி மீது பாலியல் துன்புறுத்தல் : உண்மைகளை ஆராய்ந்து வருவதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

By T. SARANYA

08 DEC, 2022 | 04:00 PM
image

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி பாலியல் துன்புறுத்தலுக்கு  உட்படுத்தப்பட்டமை தொடர்பில் உண்மைகளை ஆராய்ந்து வருவதாக சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர்  விஜேதாச ராஜபக்க்ஷ  தெரிவித்துள்ளார்.

இதேவேளை, திலினி பிரியமாலி  சிறை வைக்கப்பட்டுள்ள பெண்கள் அறைக்கு அருகில் சிறைக்காவலர்களின் எண்ணிகை அதிகரிக்கப்பட்டுள்ளது.  

மேலும், திலினி பிரியமாலியின் சிறை அறைக்குள் சிறைச்சாலை  வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கு மட்டுமே செல்ல அனுமதி உள்ளதாக சிறைச்சாலை வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/142550

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜானகிக்கு பிணை : திலினிக்கு விளக்கமறியல்!

By DIGITAL DESK 2

13 DEC, 2022 | 03:20 PM
image

 

நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (டிச.13) உத்தரவிட்டுள்ளது.

திலினி பிரியமாலிக்கு எதிரான ஏழு வழக்குகளில், தலா 50,000 ரூபா மற்றும் 3,5,000,00 ரொக்கப் பிணை மற்றும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான 14 பிணைப் பத்திரங்களின் கீழ் அவரை விடுவிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதுடன், ஒரு வழக்கில் பிணை வழங்க  மறுக்கப்பட்டதனையடுத்து பிரியமாலியை வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டப்பட்டது. 

இதேவேளை,  இதே சம்பவம்  தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜானகி சிறிவர்தனவுக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுகளுக்காக தலா ஐம்பதாயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான நான்கு சரீரப் பிணைகளிலும் அவரை விடுதலை செய்ய நீதி உத்தரவிட்டது.

https://www.virakesari.lk/article/143015

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திலினி பிரியமாலியை பிணையில் விடுவித்தது கோட்டை நீதிமன்றம்!

By DIGITAL DESK 5

16 DEC, 2022 | 11:59 AM
image

பாரிய பண மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியை 50,000  ரூபா ரொக்கம் மற்றும் 10  இலட்சம் ரூபா பெறுமதியான  இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே இன்று (16) உத்தரவிட்டுள்ளார். 

சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்த நீதிமன்றம், ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி வரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு நிபந்தனை விதித்தார்.

வெளிநாட்டு பயணத்தடை தொடர்பான உத்தரவை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறு  உத்தரவிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/143266

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செல்வந்தர்களை மையப்படுத்திய பண மோசடி : வீடு திரும்பினார் திலினி பிரியமாலி

By DIGITAL DESK 2

27 DEC, 2022 | 08:42 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

செல்வந்தர்களை மையப்படுத்தி கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் திலினி பிரியமாலி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  

50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில்  அவரை கடந்த 16ஆம் திகதி  விடுவித்த கோட்டை நீதிவான் திலின கமகே, அவரது வெளிநாட்டு பயணங்களை தடை செய்தும் உத்தரவிட்டார்.

அத்துடன் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிறன்று சி.ஐ.டி.யில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.

இந் நிலையில், செவ்வாய்கிழமை (டிச.  27)  பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து கையொப்பமிட்ட திலினி  பிரியமாலி,  விளக்கமறியலில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

கோட்டை நீதிமன்றுக்கு சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று அழைத்து வரப்பட்ட திலினி பிரியமாலினி, கையெழுத்திட்டதன் பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கே அழைத்து செல்லப்ப்ட்டிருந்தார். அவர் சிறையில் தொலைபேசி பயன்படுத்திய  விவகார விசாரணை நடப்பதால் இவ்வாறு அவர் அழைத்து செல்லப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும் பின்னர் அவர் சிறைச்சாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலி, அனைத்து வழக்குகளிலும் பிணையில் இருப்பதால் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதாக சிறைச்சாலை  ஊடகப் பேச்சாளரும் மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

'அனைத்து வழக்குகள் தொடர்பிலும் அவருக்கு  பிணையில்  செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலையில் தொலைபேசி வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் விசாரணை நடக்கும் நிலையில் அது தொடர்பில் மாவட்ட நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. அதன் காரணமாகவே அவர் விடுவிக்கப்பட்டார்' என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன  ஏகநாயக்க குறிப்பிட்டார்.

முன்னதாக இதே மோசடி விவகாரத்தை மையபப்டுத்தி  7 வழக்குகளில் கோட்டை நீதிமன்றம் கடந்த 13ஆம் திகதி பிணையளித்தது.

எனினும் ஒரு வழக்கில் அவருக்கு பிணையளிக்க மறுத்த நீதிவான் திலின கமகே, அவரை  அவ்வழக்கு தொடர்பில்  கடந்த  16ஆம் திகதி பிணையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/144277

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஏராளன் said:

வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலி, அனைத்து வழக்குகளிலும் பிணையில் இருப்பதால் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதாக சிறைச்சாலை  ஊடகப் பேச்சாளரும் மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இனி என்ன... சுருட்டிய ஆயிரம் கோடி ரூபாயும், அவ்வளவு தான்.
இவருக்குப் பின் அரசியல்வாதிகள், பிக்குகள் இருக்கும் போது,
அவர் இனி சுதந்திர பறவை. 
இதுதான்... நம் நாட்டு சட்டம். 

  • 5 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் திலினி பிரியமாலியை மருத்துவ அறிக்கையுடன் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு!

Published By: DIGITAL DESK 3

05 JUN, 2023 | 11:43 AM
image
 

வாகனம் ஒன்றை  வழங்குவதாக உறுதியளித்து மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரிடமிருந்து 80 இலட்சம் ரூபாவை பெற்று மோசடி செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள    திலினி பிரியமாலிக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி  ஆதித்ய பட்ட பெந்தி முன்னிலையில் இன்று திங்கட்கிழமை  (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது  குற்றம்சாட்டப்பட்டுள்ள  திலினி பிரியமாலி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுகயீனம் காரணமாக திலினி பிரியமாலி  கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.

இதனையடுத்து , வழக்கை ஆகஸ்ட் 11ஆம் திகதி  மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் ஏற்றுக் கொள்ளப்பட்ட மருத்துவ அறிக்கையுடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

https://www.virakesari.lk/article/156943

  • 6 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மோசடி வழக்கிலிருந்து திலினி பிரியமாலியை விடுதலை செய்த கொழும்பு மேல் நீதிமன்றம்!

12 DEC, 2023 | 01:22 PM
image

வெற்றுக் கணக்கில் காசோலைகளை வழங்கி 80 இலட்சம் ரூபா பெறுமதியான வாகனத்தை பெற்றுக் கொண்ட மோசடி வழக்கிலிருந்து திலினி பிரியமாலியை விடுவித்து விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று திங்கட்கிழமை (11) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பெத்தபண்டிகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, அரசு தரப்பு வழக்கறிஞர் மற்றும் தரப்பு சட்டத்தரணிகளின் வாதங்களை பரிசீலித்த நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

2010 ஆம் ஆண்டு மாத்தறை பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 8 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனத்தை பெற்றுக்கொண்டு பணமில்லாத கணக்கிலிருந்து பெறுமதியான காசோலைகளை வழங்கி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

https://www.virakesari.lk/article/171528

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெற்றுக் கணக்கில் காசோலைகளை வழங்கி 80 இலட்சம் ரூபா பெறுமதியான வாகனத்தை பெற்றுக் கொண்ட மோசடி வழக்கிலிருந்து திலினி பிரியமாலியை விடுவித்து விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

  • கருத்துக்கள உறவுகள்
On 7/11/2022 at 14:47, ஏராளன் said:

ஆசீர்வாத பூஜைக்காக மந்திரவாதிக்கு 80 மில்லியன் வழங்கிய திலினி, ஜானகி!

By T. SARANYA

07 NOV, 2022 | 12:12 PM
image

திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலி மற்றும் கிறிஸ் குழுமத்தின் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோர் 80 மில்லியன் ரூபாவை  தமக்கான ஆசீர்வாத  பூஜை க்காக,  மந்திரவாதி ஒருவருக்கு   வழங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கொழும்பு மேலதிக நீதிவான்  ஷிலானி பெரேரா முன்னிலையில் அறிக்கையாச் சமர்ப்பித்துள்ளது.

மேலும்,  முறைப்பாடு  செய்தவர்களிடமிருந்து திலினி பிரியமாலி பெற்ற பணம், கிறிஸ் குழும அலுவலகத்தில் வைத்து  ஜானகி சிறிவர்தனவுக்கு வழங்கப்பட்டமை குறித்த உண்மைகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக  குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/139333

எத்தனை விசாரணைகள் வந்தாலும் ஒன்றும்நடக்கப்போவதில்லை. பொதுவாக சொல்வதென்றால் அரசியல்வாதிகள், உயர் மடடத்தில் உள்ள எல்லோருமே ஊழல்வாதிகள்தான்.

அவர்கள் கொள்ளையடித்தார்கள் என்று நிரூபித்தாலும்கூட அங்கு ஒன்றும் நடக்கப்போவதில்லை. சிறைக்கு சென்றாலும் ஜனாதிபதி மன்னிப்பு கொடுத்து விடுவார்.

இலங்கைவங்குரோத்து அடைய இவர்கள்தான் காரணம் என்று உச்ச நீதிமன்றமே சொன்னாலும் அவர்களுக்கு கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்யும் நாடும் இதுதான்.

உச்ச நீதி மன்றத்தை  மதிக்காத , சடடத்தை மதிக்காத நாடும் இதுதான். அதாவது இந்த விசாரணையின் முடிவு பூச்சியம்தான்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.