Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு கிழக்குக் கொலைகளுக்காக ஒருவரையாவது கைது செய்தீர்களா? நேற்று நாடாளுமன்றத்தில் சிறிகாந்தா நா.உ. சீற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்குக் கொலைகளுக்காக ஒருவரையாவது கைது செய்தீர்களா? நேற்று நாடாளுமன்றத்தில் சிறிகாந்தா நா.உ. சீற்றம்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்து அன்றாடம் மோசமாக இடம்பெற்றுவரும் கொலைகள் தொடர்பாக இதுவரை எவராவது ஒருவரைப் பொலிஸார் கைது செய் துள்ளனரா? அங்கே துணைப்படை என்ற பெயரில் ஆயுதங்களுடன் நடமாடும் அரச கைக்கூலிகளுக்கு கொலை செய்வதற்கான "லைசென்ஸ்' வழங்கப்பட்டிருக்கின்றது .

இப்படி நேற்று நாடாளுமன்றில் சீற்றத்துடன் கூறினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறிகாந்தா.

குற்றவியல் சட்டக் கோவைகள் திருத்தச் சட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இப்படிக் கூறினார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:

இன்று நாட்டில் சட்டமும் ஒழுங்கும் கேலிக்கூத்தாகி விட்டன. இப்படியான ஒரு நிலையில் குற்றவியல் சட்டக் கோவையில் திருத்தம் செய்வது அர்த்தமற்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தினசரி கொலைகள், கொள்ளைகள், பாலியல் வல்லுறவுகள் மோசமாக இடம்பெறுகின்றன.

ஊடகவியலாளர்கள் முதல் பாடசாலைச் சிறுமிகள் வரை கொல்லப்படுகின்றனர். கிழக்குத் தொண்டர் நிறுவன ஊழியர்கள் 17 பேர் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவற்றுக்காக இதுவரை எவராவது ஒருவரைக் கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தியுள்ளனரா?

ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் கடத்தப்படுகின்றனர். கொலை செய்யப்படுகின்றனர். பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இவற்றைச் செய்பவர்கள் யார்?

அங்கே ஆயுதங்களுடன் நடமாடும் ஈ. பி. டி. பி. , புளொட், ஈ. பி. ஆர். எல். எவ். ஆகிய அரச கைக்கூலிகள்தான் இவற்றைச் செய்கின்றனர் என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை.

இவர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தும் தைரியம் பொலிஸாருக்கு இல்லை. அங்கே கொல்லப்படுபவர்கள் அனைவரும் புலிகள் என்று முத்திரை குத்தப்படுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் கருணா அணியினர் இப்பொழுதும் ஆயுதங்களுடன் நடமாடுகின்றனர்.

அவர்களிடமிருந்து இப்பொழுது ஆயுதங்களைக் களைய முடியாது என்று அரசு கூறுவது வெட்கக்கேடானது.

இன்று பொலிஸ் நிலையங்களில் தமிழர்கள் தமது முறைப்பாடுகளை தமிழில் பதிய முடியவில்லை. அங்கே போய்த் தமிழர்கள் கூறுவது ஒன்று, ஆனால் அங்கே எழுதப்படுவது வேறொன்று.

இதனால் குற்றவாளிகள் தப்பிக்கொள்ள வழி வகுக்கப்படுகிறது. எனவே, நாட்டின் சகல பாகங்களிலும் உள்ள பொலிஸ் நிலையங்களிலும் தகுதி உடைய உரை பெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். என்றும் சிறீகாந்தா குறிப்பிட்டார்

- உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.