Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஓமானில் 150 இலங்கை பெண்கள் அடிமைகளாக விற்பனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

150 இலங்கை பெண்கள் அடிமைகளாக விற்பனை

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இலங்கையிலிருந்து டுபாய் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து ஓமான் நாட்டில் தாங்கள்  அடிமைகளாக விற்கப்பட்டுள்ளதாகவும் தங்களை மீட்டெடுக்குமாறும் கோரி, ஓமானிலிருந்து 150க்கும் மேற்பட்ட பெண்கள் அவலக் குரல் எழுப்பி மன்றாடியுள்ளனர்.

இந்த விடயம் சம்பந்தமாக பாதிக்கப்பட்டு நிர்க்கதி நிலையில் உள்ளதாகக் கூறப்படும் வீட்டுப் பணிப்பெண்கள் அங்கிருந்து தகவல்களை அனுப்பி வைத்துள்ளதுடன், காணொளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

அவர்களால் வெளியிடப்பட்ட தகவல்களில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் பெண்கள் ஜனாதிபதியிடம் உருக்கமாக இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.

அதில் அவர்கள் தெரிவிப்பதாவது, ஓமான் நாட்டில் நிர்க்கதியாகிய நிலையில் இலங்கைக்கு திரும்ப முடியாமல் தினமும் கண்ணீருடன் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் இலங்கைப் பெண்கள் 150 பேரின் துயரக் கதையை இதனூடாக இலங்கை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அரசாங்கத்துக்கும் தூதரகங்களுக்கும் அறிவிக்கிறோம்.

இலங்கையிலுள்ள முகவரும் இங்கே ஓமான் நாட்டிலுள்ள  முகவரும் எங்களை ஏமாற்றி சுற்றுலா விசாவில் அழைத்து வந்து எங்களை இங்கே ஓமானில் விற்று விட்டார்கள். இதனால் நாங்கள் இப்போது அடிமைகளாக இங்கே அகப்பட்டுக் கொண்டுள்ளோம்.

இந்த முகவர்கள், எங்கள் ஒவ்வொருவர் சார்பாகவும் சுமார் 18 இலட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டே எங்களை அடிமைகளாக விற்றிருக்கிறார்கள்.

கையில் பாஸ்போட்டும் இல்லை. அதனையும் பறித்துக் கொண்டார்கள். அதனால் நாங்கள் எங்களது நாட்டுக்குத் திரும்ப முடியாதுள்ளது. தொடர்பாடல் எதுவுமே இல்லாமல் தொடர்பு கொள்ளக் கூடிய அலைபேசிகள் எதுவுமே நாம் பாவிக்க முடியாது மறுக்கப்பட்டுள்ளோம்

எங்களது துயரங்களை ஏறெடுத்துப் பாருங்கள், எமது தாய் தந்தையர், சகோதரர்கள், பிள்ளைகள் அவர்களது நிலைமை அவர்கள் என்ன ஆனார்கள் என்பது கூட எமக்குத் தெரியாது. ஏனென்றால் எங்களுக்குத் தொடர்பு கொள்ளும் எல்லா வழிகளும் மறுக்கப்பட்டு விட்டன.

சம்பளம் இல்லை. சாப்பாட்டுக்கு வழியில்லை. சவர்க்காரம் வாங்கக் வாங்கக் கூட கையில் காசு இல்லை. நாங்கள் பரம ஏழைகள் என்றபடியால்தான் இங்கு வீட்டுப் பணிப்பெண்களாக வந்தோம்.

நாங்கள் அனைவரும் பெண்கள். இங்கே சுகாதார வசதிகளும் பாதுகாப்பும் அற்ற சூழ்நிலையில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளோம். மாற்றிக் கொள்ள ஆடைகள் கூட இல்லாது அவஸ்தைப் படுகின்றோம்

நோயுள்ள பெண்கள் இங்கே கடும் துயரத்தோடு காலங் கழிக்கிறார்கள். சிலர் எழுந்திருக்க முடியாத நிலையில் உடல் உபாதைகளுக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளார்கள்.

நாங்கள் இங்கே வந்தது எமது வறுமையைப் போக்கவும் பொருளாதார நெருக்கடியிலுள்ள இலங்கை நாட்டுக்கு டொலர் வருமானத்தைப் பெற்றுக் கொடுப்பதற்குமாகும்.

ஆனால் பெரும் தியாகத்தின் மத்தியில் எங்களது தாயை தந்தையை கணவனை, பிள்ளைகளைப் உறவுகளைப் பிரிந்து வந்து குடும்பத்துக்கும் நாட்டுக்கும் உதவி செய்ய வந்த எங்களை இங்கே அடிமைகளாக விற்று எங்களை அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.

இது சம்பந்தமாக நாங்கள் இங்கே துயரம் தாங்க முடியாமல் கடந்த 26 ஆம் திகதி ஆர்ப்பாட்டமும் செய்தோம் அதற்கும் எந்தத் தீர்வும் இல்லை. இங்குள்ள இலங்கைத் தூதரகமோ, இந்ந நாட்டு அரசாங்கமோ, எவருமே கண்டு கொள்ளவில்லை.

நவம்பர் 1ஆம் திகதி தொழில் நீதிமன்றத்துக்கும் சென்றோம். ஆனால். அங்கும் எங்கள் சார்பாக நீதி வழங்கப்படவில்லை. நீதிமன்றம்  நாங்கள் பெற்றுக் கொண்ட 18 இலட்சம் ரூபாய் பணத்தையும் கட்டிவிட்டு போகுமாறு கேட்கிறார்கள்.

உண்மையில் இலங்கையிலுள்ள பணிப்பெண்களை இங்கே அழைத்து வரும்பொழுது இலங்கை முகவர்கள், எங்களுக்கு ஒரு இலட்சம் அல்லது இரண்டு இலட்சத்தை மாத்திரம் தந்து விட்டு மிகுதிப் பணத்தை இரு நாடுகளிலுமுள்ள முகவர்கள் சுருட்டிக் கொள்கிறார்கள்.

இது ஒரு மோசடியும் மனிதக் கடத்தலும் அடிமை வியாபாரமுமாகும். எனவே மனித உரிமை அமைப்புக்கள், பெண்ணுரிமை அமைப்புக்கள் இந்த  மோசடியை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எங்களை இந்தத் துயரத்தில் இருந்து மீட்டெடுத்து எங்களது உறவுகளுடன் எங்களைச் சேர்ப்பிக்க வேண்டும்.

இல்லாவிட்டால் இப்பொழுது அடிமைகளாக விற்கப்பட்டு நடுத்தெருவில் நிற்கும் 150 பேரைப் போல இன்னும் பல நூற்றுக் கணக்கான பெண்கள் அடிமைகளாக இலங்கையிலிருந்து கொண்டு வரப்பட்டு விற்கப்படுவார்கள்.

இனிமேல் சுற்றுலா வீசாவில் எந்த இலங்கைப் பெண்ணும் இந்த நாட்டுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக வர வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/150-இலங்கை-பெண்கள்-அடிமைகளாக-விற்பனை/150-306944

 

  • கருத்துக்கள உறவுகள்

ஓமானில் ஏலம் விடப்பட்டு விற்கப்படும் இலங்கைப் பெண்கள் விபசாரத்தில் - பொலிஸ் பேச்சாளர்

By VISHNU

10 NOV, 2022 | 03:37 PM
image

வீட்டுப் பணிப் பெண்களாகப் பணி புரிய ஓமானுக்குச் செல்லும் இலங்கைப் பெண்களை ஏலம் விடப்பட்டு, விற்கப்படும் ஆட்கடத்தல் கும்பல் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கையில்,

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவர் தலைமையிலான குழுவினர் ஓமானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

பல வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் இளம் பெண்களையும் பெண்களையும் வீட்டுப் பணிப் பெண்களாக அனுப்புவதாக அவர்களிடம் உறுதியளித்து ஓமானுக்கு அனுப்புகின்றன, மேலும் அவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாட்டுகளுக்குள்  நுழைய சுற்றுலா விசாவே பயன்படுத்துகின்றனர்.

அவ்வாறு ஓமானை சென்றடைந்ததும் அவர்களின் வயது மற்றும் தோற்றம்  ஆகியவற்றுக்கு  ஏற்ப வரிசைப்படுத்தப்பட்டு, ஏலம் விடப்பட்டு  பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக விற்கப்படுவதை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/139646

  • கருத்துக்கள உறவுகள்

ஓமானில் மட்டுமல்ல, Middle East முழுக்க இதே நிலைமைதான், பாக்கி கூட Sri Lanka என்றால் சிரிக்கும் நிலைமை அங்கு

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

ஓமானில் மட்டுமல்ல, Middle East முழுக்க இதே நிலைமைதான், பாக்கி கூட Sri Lanka என்றால் சிரிக்கும் நிலைமை அங்கு

சில பாக்கிகள்  அவர்களை வைத்திருக்கிறான் என்பது வேதனை அது மட்டுமல்லாமல் சில பெண்கள் வெளிநாட்டில இருந்து வந்து குழந்தை பெற்றுக்கொண்ட சம்பவங்களும் நடந்துள்ளன 

பணிப்பெண்களாக சென்றவர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுற்றுலா வீசா மூலம் செல்ல இனி தடை

சுற்றுலா வீசா மூலம், வீட்டு வேலை மற்றும் திறன்சாரா துறைகளில் தொழிலுக்காக, பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்தத் தீர்மானம் நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளது.

இதேவேளை, சுற்றுலா வீசா மூலம், தொழில்வாய்ப்புக்காக வெளிநாடு செல்ல முயற்சித்த 586 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

இந்த ஆண்டின், இதுவரையான காலப்பகுதியில், சுற்றுலா வீசாவைப் பயன்படுத்தி, அவர்கள் வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்கு செல்ல முயற்சித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. R

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/சுற்றுலா-வீசா-மூலம்-செல்ல-இனி-தடை/175-307214

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஏராளன் said:

ஓமானில் ஏலம் விடப்பட்டு விற்கப்படும் இலங்கைப் பெண்கள் விபசாரத்தில் - பொலிஸ் பேச்சாளர்

 

May be a cartoon

  • கருத்துக்கள உறவுகள்

அபுதாபியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்கள் -ஆள்கடத்தல் கும்பல் குறித்த புதிய தகவல்

By RAJEEBAN

17 NOV, 2022 | 11:56 AM
image

அபுதாபியில் சிக்குண்டுள்ள இலங்கை பெண்கள் இலங்கையை சேர்ந்த பிரபல தம்பதிகளிடம் உதவி கோரியுள்ளதை தொடர்ந்து ஆள்கடத்தல் கும்பல் குறித்த தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

இலங்கையின் பிரபலமான தம்பதியினரிடம் பணியாளாக பணியாற்றிய பெண்ணொருவர் ஓமானிற்கு பணிப்பெண்ணாக செல்வதாக தெரிவித்து சென்றுள்ளார்.

சில நாட்களின் பின்னர் தனது மகளை தொடர்புகொண்டுள்ள அவர் தன்னையும் 16 பெண்களையும் அறையொன்றில் அடைத்துவைத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

house_maid.jpg

தன்னுடைய கடவுச்சீட்டு கையடக்தொலைபேசியையும் அறையில் உள்ள ஏனைய பெண்களினது கடவுச்சீட்டுகளையும் கையடக்க தொலைபேசகளையும் பறித்து வைத்துள்ளனர் எனவும் அவர் தனது மகளிற்கு தெரிவித்துள்ளார்.

மறைத்து வைத்திருந்த தொலைபேசியை பயன்படுத்தி அவர் தனது மகளை தொடர்புகொண்டுள்ளார்.

மகள் பிரபல தம்பதியினரை தொடர்புகொண்டு இதனை தெரிவித்துள்ளார்

இந்த பெண்களில் அனேகமானவர்கள் ஹட்டனை சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

மகளின் தகவலை தொடர்ந்து வட்ஸ்அப்பினை பயன்படுத்தி தேடியவேளை குறிப்பிட்ட பெண்  அபுதாபியில் இருப்பது தெரியவந்துள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

.மேலும் அந்த தம்பதியினர் வட்ஸ் அப்பினை பயன்படுத்தி அந்த பெண்ணின் ஆவணங்களை பெற்றுக்கொண்டுள்ளனர் இந்த ஆவணங்களை ஆராய்ந்தவேளை குறிப்பிட்ட பெண் அபுதாபிக்கு விசிட் விசாவில் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

ஹட்டனில் உள்ள தரகர் மூலம் கட்டுகஸ்தோட்டையில் உள்ள முகவர் குறிப்பிட்ட பெண்ணை அனுப்பியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட முகவர் நிலையம் மருதானையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்திற்கு குறிப்பிட்ட பெண்ணின் விபரங்களை அனுப்பியமையும் அவர்கள் குறிப்பிட்ட பெண்ணை ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணிபுரிவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தில் பணிபுரிந்தமையும் தெரியவந்துள்ளது.

பலர் இந்த விடயத்தில் ஈடுபட்டுள்ளதால் முக்கிய நபரை கண்டுபிடிக்கமுடியவில்லைஇ என இந்த விடயம் குறித்து ஆராய்ந்து வரும் தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/140309

  • கருத்துக்கள உறவுகள்

12 இலங்கை பெண்கள் ஓமானில் பாலியல் தொழிலுக்காக பகிரங்க ஏலத்தில் விற்பனை - காவிந்த ஜயவர்தன

By T. SARANYA

17 NOV, 2022 | 03:45 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கையைச் சேர்ந்த 12 பெண்கள்  வீட்டுப்பணிக்காக அபுதாபிக்கு அழைத்து செல்லப்பட்டு  ஓமானில்  நடைபெற்ற விழாவொன்றில் பாலியல் தொழிலுக்காக பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நீதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தது.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன  விசேட கூற்றொன்றை  முன்வத்து அபுதாபியில் வீட்டுப்பணிப்பெண் தொழிலில் அமர்த்துவதாக தெரிவித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கையை சேர்ந்த 12 பெண்கள் ஓமானுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.  

ஓமானுக்கு அனுப்பிவைக்கப்பட்ட குறித்த பெண்கள் அங்கு நடைபெற்ற விழாவொன்றில் பாலியல் தொழிலுக்காக பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளனர்.

தமது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, தற்போதைய பொருளாதார பாதிப்பை தாங்கிக் கொள்ள முடியாத  தாய்மார்கள் மற்றும் சகோதரிகள்  வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பினை தேடிச்செல்கின்றனர். இந்த நிலையில்,? எமது நாட்டின் பொருளாதார நெருக்கடியினை சீர்செய்ய தன்மானத்தை அடகு வைக்க முடியாது.எனவே இது தொடர்பில் நீதி அமைச்சர் ஏன் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என  கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள், விதிமுறைகளையும் நியதிகளையும் மீறி செயற்படுகின்றன.  அதேபோன்றுதான் சிலரின் நடவடிக்கைகளினால் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றிருக்க ஏதுநிலை காணப்படுகின்றது.  ஆகையினால் குறித்த சம்பவம் தொடர்பில் அவதானம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொளப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/140361

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் ஒருவர் 17 லட்சத்திற்கு பெண்களை விற்கிறார்!

November 19, 2022

Oman.jpg?resize=726%2C512

சுற்றுலா விசாவில் ஓமானுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சில பெண்கள் பாலியல் நடவடிக்கைகளுக்காக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான அவ்வாறான 90 பெண்கள் தற்போது ஓமானிலுள்ள இலங்கை தூதரகத்தின் கண்காணிப்பில் பாதுகாப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தூதரகத்தினால் வாடகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட கட்டடமொன்றின் வீட்டிலேயே இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் 90 பெண்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அந்த வீட்டில் இல்லை என அங்கிருந்து வந்த பெண் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்கப்பட்ட பெண்கள் உள்ளிட்ட வெவ்வேறு துன்புறுத்தல்களுக்குள்ளான பெண்கள், தூதரகத்தின் கண்காணிப்பின் கீழுள்ள பாதுகாப்பு இல்லத்தில் மீண்டும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றமை இதன் மூலம் தெரியவந்துள்ளது.

ஓமானில் பல்வேறு துன்புறுத்தல்களுக்குள்ளான பெண் ஒருவர் தற்போது அனுராதபுரத்தில் உள்ளார். ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் ஒருவர், பாதுகாப்பு இல்லத்தில் உள்ள பெண்களை பணத்திற்கு விற்பதாக அப்பெண் குற்றம் சாட்டினார்.

 

https://globaltamilnews.net/2022/183950/

ஓமான் ஆட்கடத்தல் வர்த்தகம்; பிரதான சந்தேகநபர் கைது

ஓமானில் ஆட்கடத்தல் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த சந்தர்ப்பத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

வத்தளை பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் மருதானை பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகமொன்றை நடத்திச் சென்றதன் ஊடாக, ஆட்கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். R

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/ஓமான்-ஆட்கடத்தல்-வர்த்தகம்-பிரதான-சந்தேகநபர்-கைது/175-307631

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பெண்களை ஓமனில் பாலியல் தொழிலுக்கு விற்பனை செய்வதாக அதிர்ச்சி தகவல்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரஞ்சன் அருண்பிரசாத்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 51 நிமிடங்களுக்கு முன்னர்
 

தினேஷ் குணவர்த்தன

பட மூலாதாரம்,DINESH GUNAWARDENA

 

படக்குறிப்பு,

தினேஷ் குணவர்த்தன

பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கை பெண்கள் சிலரை வேலை பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றி வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று அங்கே பாலியல் தொழில் உள்ளிட்ட சட்டவிரோத வேலைகளில்  ஈடுபடுத்துவதாக தற்போது தகவல்கள் வெளியாகிவருகின்றன என்கிறது இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களம்.   

 

குறிப்பாக ஓமனுக்கு அழைத்து செல்லப்பட்ட பெண்கள், அங்கு பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றமையை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தியது.

 

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை பெற்று தருவதாக கூறி, சுற்றுலா விசாவின் மூலம் ஓமனிற்கு பெண்களை அழைத்து சென்று, அங்கு ஆட்கடத்தல் வர்த்தகம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

 

இதையடுத்து, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கடத்தல், வர்த்தக விசாரணை மற்றும் சமுத்திர குற்றச் செயல் விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

 

இந்த பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் சமரநாயக்கவின் கண்காணிப்பின் கீழ் விசேட விசாரணை குழுவொன்று ஓமன் நோக்கி பயணித்துள்ளது.

ஓமனிலுள்ள பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 45 இலங்கை பெண்களிடம், குறித்த அதிகாரிகள் வாக்குமூலங்களை பதிவு செய்துக்கொண்டுள்ளனர். சுற்றுலா விசா மூலம் இலங்கையிலிருந்து அழைத்து செல்லப்பட்ட பெண்கள், பல்வேறு இன்னல்களை அனுபவித்து, அதன் பின்னர் தாம் கடமையாற்றிய வீடுகளிலிருந்து தப்பிச் சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு தமது தொழில் வழங்குநரிடமிருந்து தப்பிய பெண்களே இவ்வாறு பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களது கடவூச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை, இவர்களுக்கு வேலை வழங்கியவர்கள் பெற்றுக்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதனால், இந்தப் பெண்களுக்கு மீண்டும் தாயகம் திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாலியல் தொழிலில் ஈடுபடுத்தல், அதிக வேலைகளை பெற்றுக்கொள்ளுதல், துன்புறுத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இந்த பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளமை, விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

 

குற்ற விசாரணைத் திணைக்களம்

இலங்கையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிநிதிகளினாலேயே, குறித்த பெண்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கை பெண்கள் வரிசைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு, அந்த நாட்டு குடிமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கடத்தல், வர்த்தக விசாரணை மற்றும் சமுத்திர குற்றச் செயல் விசாரணை பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் சமரநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். மிகக் குறைந்த வயதுடைய பெண்களை 25 லட்சம் இலங்கை ரூபா வரை விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார். இலங்கை முகவர்களின் ஊடாக அங்குள்ள முகவர்கள், இலங்கை பெண்களை பொறுப்பேற்று, அதன் பின்னர் அவர்களை தமது அலுவலகங்களுக்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிய வருகின்றது. சுற்றுலா விசாவின் மூலம் செல்கின்றமையினால், அவர்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க முடியாத நிலைமை காணப்படுவதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, அரபு நாட்டவரை அழைத்து, குறித்த பெண்களை வரிசைகளில் நிறுத்தி அவர்களை விற்பனை செய்துள்ளமையும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கை அதிகாரிகளும் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தகவல்

இவ்வாறு தப்பிய நிலையில், ஓமனிலுள்ள பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பெண்ணொருவர், அந்த நாட்டுக்கான இலங்கை தூதரக அதிகாரி ஒருவரினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ள அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அறிவித்தலுக்கு அமைய, இவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த ஆட்கடத்தல் வலையமைப்பில் இலங்கை பிரதிநிதிகளும் அடங்குவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவிக்கின்றது. இதன்படி, பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது உள்ளிட்ட வெவ்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதற்கு குழுக்கள் இருப்பதாகவும் திணைக்களம் கூறுகின்றது. குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளும் இந்த வலையமைப்பில் அங்கம் பெற்றுக்கொண்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஏன் இந்த பெண்களை நாட்டிற்கு அழைத்து வர முடியவில்லை? இலங்கை பெண்களை சுற்றுலா விசா மூலம் அழைத்து சென்றுள்ளமையினால், அவர்களை உடனடியாக நாட்டிற்கு அழைத்து வர முடியவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன், சிலரது கடவூச்சீட்டுக்கள் உள்ளிட்ட ஆவணங்கள், தொழில் வழங்குநர்களிடம் காணப்படுகின்றமையும், அவர்களை உடனடியாக நாட்டிற்கு அழைத்து வர முடியாமைக்கு காரணம் என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

 

ஜெகத் புஷ்பகுமார

பட மூலாதாரம்,JAGATH PUSHPAKUMARA

பிரதான சந்தேகநபர் கைது

இந்த ஆட்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, சந்தேகநபர் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு, போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அபுதாபியிலிருந்து நாடு திரும்பிய 44 வயதான சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலை வாய்ப்பு அலுவலகமொன்றை நடத்திச் சென்றதன் ஊடாக, குறித்த நபர் ஆட்கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. ''நான் இந்த ஆட்கடத்தல் சம்பவத்துடன் தொடர்பில்லை. இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள 20 பெண்களிடம் கேட்டு பாருங்கள். அவர்கள் உண்மையை கூறுவார்கள்.  என்னை காப்பாற்றுவதற்காகவே அவர்கள் வருகைத் தந்துள்ளார்கள். அவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள்" என கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, அழைத்து செல்லப்படும் சந்தர்ப்பத்தில் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில், முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் எதிர்வரும் 24ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலா விசாவில் செல்லத் தடை

தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் சுற்றுலா விசாவில் செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேக்டர் அப்புஹாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஆட்கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக, தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கூறியுள்ளார்.

பிரதமரின் பதில்

ஓமன் மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள இவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட விசாரணை குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்த குழு இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும் என அவர் கூறுகிறார். இந்த செயற்பாடுகளின் முன்னேற்றத்தினாலேயே, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையோரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் என்ற விதத்தில் முன்னின்று செயற்பட்டு வருவதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/articles/cz583yd1z61o

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஏராளன் said:

இலங்கை அதிகாரிகளும் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தகவல்இவ்வாறு தப்பிய நிலையில், ஓமனிலுள்ள பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பெண்ணொருவர், அந்த நாட்டுக்கான இலங்கை தூதரக அதிகாரி ஒருவரினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

 சிங்களவனுக்கும் பாலியல் விளையாட்டுக்கும் மிக நெருங்கிய தொடர்பு.
இராணுவம், விளையாட்டு வீரர், தூதரக அதிகாரிகள்… என்று எல்லா இடமும்
காமம் தலைக்கேறி திரிகிறார்கள். 

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஓமான் மனிதக் கடத்தல் விவகாரங்கள் : இதுவரை கைதான 7 பேருக்கும் பிணை ; வெளிநாடு செல்ல தடை

By T. SARANYA

13 DEC, 2022 | 05:05 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

வேலை வாங்கி தருவதாக கூறி, இலங்கையில் இருந்து பெண்களை சுற்றுலா விசாவில் வரவழைத்து ஓமானில் விபசார நடவடிக்கைகள் உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாக கூறப்படும்  ஆள் கடத்தல் சம்பவத்தை மையப்படுத்தி சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் செயற்படும் மனிதக் கடத்தல், கடத்தல்கள் குறித்த விசாரணை மற்றும் கடல்சார் குற்றவியல் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட, ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் 3 ஆம் செயலர் ஈ.குஷான் உள்ளிட்ட 7 பேரையும் பிணையில் விடுவிக்க நீதிமன்றம்  இன்று (13) உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்று (13) கொழும்பு பிரதான நீதிவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போதே விளக்கமறியலில் இருந்து மன்றில் ஆஜர் செய்யப்பட்ட  குறித்த 7 பேரையும் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

தரகர்களில் ஒருவராக செயற்பட்டதாக கூறப்படும்  அவிசாவளை - புவக்பிட்டியவைச் சேர்ந்த  பாலகிருஷ்ணன் குகனேஷ்வரன், வத்தளை மற்றும் தெஹிவளை  பகுதிகளை சேர்ந்த  44 வயதான மருதானையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிலையம் நடாத்தும் மொஹம்மட் றிஸ்மி மொஹம்மட் இன்சாப், ஆட்கடத்தலுடன் நேரடி தொடர்புபட்டதாக கூறப்பட்ட தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த ஆஷா திஸாநாயக்க, ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் 3 ஆம் செயலர்  எதிரிசாரிகே குஷான் இடைத் தரகர்களான அஜித் குமார சமரகோன்,  யோகா எனும் யோகேந்திரன், உப முகவரான தெளபீக் மொஹம்மட் நெளபர் ஆகியோரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து சந்தேக நபர்களினதும் வெளிநாட்டு பயணங்களை தடை செய்த நீதிவான்,  ஒவ்வொரு மாதமும் இறுதி  ஞாயிறன்று முற்பகல் 9.00 மணிக்கும் நண்பகல் 12.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் சந்தேக நபர்கள் சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் செயற்படும் மனிதக் கடத்தல், கடத்தல்கள் குறித்த விசாரணை மற்றும் கடல்சார் குற்றவியல் புலனாய்வு பிரிவில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டார்.

இன்றையதினம் மன்றில் விடயங்களை முன் வைத்த  மனிதக் கடத்தல், கடத்தல்கள் குறித்த விசாரணை மற்றும் கடல்சார் குற்றவியல் புலனாய்வு பிரிவு அதிகாரிகள்,  இந்த சம்பவத்துடன் தொடர்புடைய  இலங்கையில் இருக்கும் 24 தரகர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்களில் மூவர்  ஏற்கனவே கைது செய்யப்பட்ட 7 பேரில் உள்ளடங்குவதாகவும் குறிப்பிட்டனர்.

இந்த விவகாரத்தில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க விசாரணையாளர்கள் குழுவொன்று ஓமான் தூதரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மன்றில் குறிப்பிட்டனர்.

இதுவரையான விசாரணைகளில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான 45 பெண்களின் வாக்கு மூலங்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

தூதரகத்தினால் வாடகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட கட்டடமொன்றின் வீட்டிலேயே இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  'சுரக்ஷா' எனும் அந்த பாதுகாப்பு இல்லத்தில் சுமார்  90 பெண்கள் வரை தங்கவைக்கப்பட்டிருந்ததாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணையாளர்கள் குறிப்பிட்டனர்.

இந்நிலையிலேயே விடயங்களை ஆராய்ந்த நீதிவான் நத்தன மரசிங்க, சந்தேக நபர்களுக்கு பிணையளித்த பின்னர் வழக்கை எதிர்வரும் 2023 ஜனவரி 24 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

https://www.virakesari.lk/article/143023

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.