Jump to content

நந்திக்கடல் ஆற்று நீர் பெருங்கடலில் வெட்டிவிடப்பட்டது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நந்திக்கடல் ஆற்று நீர் பெருங்கடலில் வெட்டிவிடப்பட்டது

09 NOV, 2022 | 07:12 PM
image
 
GPTempDownload__5_.jpg
 
GPTempDownload__4_.jpg
 
GPTempDownload__1_.jpg

கே .குமணன் 

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக  பெய்த கனமழையின் காரணமாக வட்டுவாகல் நந்திக் கடல் நீர் நிரம்பி காணப்படுகிறது.

நந்திக்கடல் ஆறு இவ்வாறு நீர்நிரம்பிக்காணப்படுவதால், வட்டுவாகல் பாலத்தை நீர் மூடி பாய்ந்து வருவதோடு போக்குவரத்தில்  அபாயம் காணப்படுகின்றது.

இந்நிலையில் நந்திக்கடல் ஆற்றினுள் மேலதிகமாகத் தேங்கியுள்ள நீரினை கடலில்  வெட்டிவிடும் செயற்பாடு (09) இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை பாரம்பரியமாக விசேட பூசை வழிபாடுகளுடன் குறித்த நந்திக்கடல் ஆற்றில் மேலதிகமாக தேங்கியுள்ள நீர், பெருங்கடலில் வெட்டி விடப்பட்டது.

மேலும் இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டசெயலர் க.விமலநாதன், மேலதிக அரசாங்க அதிபர் கனகேஸ்வரன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் குணபாலன்(காணி) முல்லைத்தீவுமாவட்ட அனர்த்தமுகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எஸ்.லிங்கேஸ்வரகுமார், கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலர் திருமதி உமாமகள் மணிவண்ணன், கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உத்தியோகத்தர்கள், முல்லைத்தீவுமாவட்ட கடற்றொழில் சமாசம், சம்மேளனம் என்பவற்றின் பிரதிநிதிகள், மீனவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/139575

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட்டுவாகல் முகத்துவாரம் வெட்டப்பட்டு நீர் முல்லைக் கடலில் சங்கமித்தது!

வட்டுவாகல் முகத்துவாரம் வெட்டப்பட்டு நீர் முல்லைக் கடலில் சங்கமித்தது!

முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைய நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக நந்திக்கடல் நீரேரியின் நீர்மட்டம் அதிகரித்து வட்டுவாகல் பாலத்திற்கு மேலாக நீர் பாய ஆரம்பித்துள்ளது.

இதனை கருத்திற்கொண்டு கடந்த வியாழக்கிழமை மாவட்ட செயலகத்தில் குறித்த விடயம் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் மற்றும் நேற்று மாலை 3.00மணிக்கு மாவட்ட நீரியல் மற்றும் கடற்றொழில் வள அலுவலகத்தில் மீனவ, விவசாய பிரதிநிதிகளிற்கிடையிலான சந்திப்பில் எட்டப்பட்ட முடிவுகள் மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்தியதன் பிரகாரம் வட்டுவாகல் முகத்துவார பகுதி நேற்று (புதன்கிழமை) மாலை 5.00மணியளவில் முல்லைத்தீவு கடலுடன் வெட்டி இணைக்கப்பட்டுள்ளது.

தாழ்நிலங்கள் மற்றும் பெரும்போகத்திற்காக விதைக்கப்பட்டுள்ள பல வயல்களும் வெள்ளத்தில் மூழ்குவதாக பொதுமக்களும், விவசாயிகளும் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க நந்திக்கடலுடன் சங்கமிக்கும் பகுதியான வட்டுவாகல் முகத்துவார பகுதியே இவ்வாறு வெட்டப்பட்டு கடலுடன் சங்கமிக்க விடப்பட்டுள்ளது.

இதன்போது பாரம்பரிய வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டுவருகின்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து, பெக்கோ இயந்திரம் கொண்டு குறித்த முகத்துவார பகுதி வெட்டப்பட்டு கடலில் நீர் கலக்கவிடப்பட்டுள்ளது.

இதன் மூலமாக குறித்த பிரதேசத்தின் வயல் நிலங்களில் புகும் நீரினை கட்டுப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது குறித்த இடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்) க.கனகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.குணபாலன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் லிங்கேஸ்வரகுமார், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள், விவசாய மீனவ சங்க அங்கத்தவர்கள், உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பிரசன்னமாகி இருந்தனர்.

313415370_1205125020043272_5586618224961318407_n-600x400.jpg

314400404_1205129043376203_811743494614421507_n-600x400.jpg

https://athavannews.com/2022/1309843

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

314400404_1205129043376203_811743494614421507_n-600x400.jpg

இந்தப்  பொலிஸ்காரர்.... சப்பாத்தில் மண் படாமல், எவ்வளவு அழகாக 
இந்தப் பெரிய  வாய்க்காலை  வெட்டிய 💪 திறமையை பாராட்ட வேண்டும் போல் உள்ளது. 👍
இப்படியான திறமைசாலிகள் எல்லாம்.. ஸ்ரீலங்காவில்,
அதுகும் நமது தமிழ் மண்ணில் கடமை ஆற்றுவது,  நமக்கு எல்லாம் பெருமை. 😎
வாழ்க அவர் பணி, வளர்க அவர் சேவை. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்வெட்டியவர்கள் அருகில் நிக்கிறார்கள், அவர் படத்துக்கு மண்வெட்டி பிடிக்கிறார் கண்டியளோ! நீங்கள் சிரிக்க சொன்னீர்களோ, சிந்திக்க சொன்னீர்களோ தெரியாது? இதுதான் உலக நடப்பு.  கஷ்ரப்பட்டவனை  ஓரங்கட்டி நோகாமல் நடிப்பவன் பெயர் தட்டிக்கொண்டு போவான்!

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.