Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில். உயிரிழந்தவர்களின் பெயரில் போலி உறுதி முடிப்பு! சட்டத்தரணி கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் போதைப்பொருளுடன் மூவர் கைது – ஒருவர் தப்பியோட்டம்!

யாழில். உயிரிழந்தவர்களின் பெயரில் போலி உறுதி முடிப்பு! சட்டத்தரணி கைது!

யாழ்ப்பாணம் – அராலி வீதியில் போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவரும் முன்னாள் பாடசாலை அதிபரும் பொலிஸ் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.

அராலி வீதி – பொம்மைவெளி பகுதியில் உள்ள காணி ஒன்று அதன் இறந்து விட்ட உரிமையாளர்களான தம்பதியின் போலிக் கையொப்பங்கள் மூலம் நிறைவேற்றப்பட்ட உறுதியினால் மோசடியாக உரிமை மாற்றம் செய்யப்பட்டது.

அது தொடர்பாக யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை நடத்தி பொலிஸார், கடந்த மாதம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்கைத் தொடுத்து சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்து மன்றில் முற்படுத்தினர்.
பொலிஸாரின் புலன் விசாரணைகள் நிறைவடையாத நிலையில் சந்தேக நபர் கடந்த ஒரு மாதமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் வழக்கு நீதிமன்றில் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது தமது புலன்விசாரணை தொடர்பான தொடர் அறிக்கையை பொலிஸ் தரப்பு தாக்கல் செய்தது.

மோசடியில் சம்பந்தப்பட்ட ஏனைய சந்தேக நபர்கள் ஏன் இன்னமும் கைது செய்யப்படவில்லை என்று மன்று கேள்வி எழுப்பியது.

சந்தேக நபர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா புலன் விசாரணை தொடர்பில் பொலிஸ் தரப்பிற்கு எதிராக சரமாரியான குற்றச்சாட்டுக்களை நீதிமன்றில் முன்வைத்தார்.

சந்தேக நபர் சார்பாக முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்கள் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து கட்டளை ஒன்றை வழங்கிய மேலதிக நீதிவான் வழக்கு நடவடிக்கைகளின் பதிவு யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும், அதன் மீதான அவரின் அறிக்கை வெள்ளிக்கிழமை மன்றில் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சட்டத்துக்குப் புறம்பாக உறுதியை நிறைவேற்றி மோசடிக்கு உடந்தையாக இருந்த சட்டத்தரணி இன்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்குடன் தொடர்புடைய மற்றைய சந்தேக நபரான யாழ்ப்பாணம் பிரபல கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றி கையூட்டு பெற்ற குற்றச்சாட்டில் சிக்கிக்கொண்டு பதவியில் இடைநிறுத்தப்பட்ட ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

இருவரும் நாளைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை, இந்த வழக்குடன் தொடர்புடைய வர்த்தகர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1309961

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

சட்டத்துக்குப் புறம்பாக உறுதியை நிறைவேற்றி மோசடிக்கு உடந்தையாக இருந்த சட்டத்தரணி இன்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

குறித்த சட்டத்தரணியின் பெயரை குறிப்பிடடால் நாங்களும் அவரை அணுக இலகுவாக இருக்கும்.

5 hours ago, தமிழ் சிறி said:

மற்றைய சந்தேக நபரான யாழ்ப்பாணம் பிரபல கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றி கையூட்டு பெற்ற குற்றச்சாட்டில் சிக்கிக்கொண்டு பதவியில் இடைநிறுத்தப்பட்ட ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

 படித்தவர்கள் செய்யும் வேலையா இது? இவர்கள் மாணவர்களுக்கு எப்படி வழிகாட்டுவார்கள்? மாணவர்களை எப்படி குறைகூற முடியும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

குறித்த சட்டத்தரணியின் பெயரை குறிப்பிடடால் நாங்களும் அவரை அணுக இலகுவாக இருக்கும்.

 படித்தவர்கள் செய்யும் வேலையா இது? இவர்கள் மாணவர்களுக்கு எப்படி வழிகாட்டுவார்கள்? மாணவர்களை எப்படி குறைகூற முடியும்?

சென்ற தலைமுறை மனிதர்களுக்கும்,
இப்போதுள்ள பல மனிதர்களுக்கும்... பல வித்தியாசங்கள்.
அது... படித்தவனாக இருந்தாலும், படியாதவனாக இருந்தாலும் எல்லாம் ஒண்டு தான். 
சுயநலம், குறுக்கு வழி முன்னேற்றங்களிலேயே அவர்களது கவனம் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

சென்ற தலைமுறை மனிதர்களுக்கும்,
இப்போதுள்ள பல மனிதர்களுக்கும்... பல வித்தியாசங்கள்.
அது... படித்தவனாக இருந்தாலும், படியாதவனாக இருந்தாலும் எல்லாம் ஒண்டு தான். 
சுயநலம், குறுக்கு வழி முன்னேற்றங்களிலேயே அவர்களது கவனம் உள்ளது.

ம்ம், நான் உங்களுடன் ஒத்துப்போகிறேன். முன்னையவர்கள் மனச்சாட்சி, கடின உழைப்பு,ஒழுக்கம், பிறர்நலம், தர்மத்துக்கு பயந்து, சமூக வரையறை என்று வாழ்ந்தவர்கள், மற்றவரையும் மதித்து வாழ்ந்தார்கள். இப்போ உடல் வளையாமல், நோகாமல், மற்றவர்களை ஏமாற்றி, வருத்தி தமது சுகம், பெயர் மட்டும் பெரிதாக மதிக்கிறார்கள் மற்றவரை மிதிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணம் – அராலி வீதியில் போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவரும் முன்னாள் பாடசாலை அதிபரும் பொலிஸ் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.

உதென்ன பெரிய வேலை???? உயிரோட இருக்கவே கள்ள உறுதி முடிக்கிறாங்கள் எண்டால் யோசிச்சு பாருங்கோவன்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, satan said:

படித்தவர்கள் செய்யும் வேலையா இது? இவர்கள் மாணவர்களுக்கு எப்படி வழிகாட்டுவார்கள்? மாணவர்களை எப்படி குறைகூற முடியும்?

படிப்பிக்கும் புத்திசாலி தனத்துக்கும் வேறுபாடு உண்டு பாஸ் ஒருத்தன் படித்து முடித்து விட்டால் அவன் முழு அறிவாளி அல்ல இப்படி நான் சொல்லவில்லை Richard P. Feynman சொல்கிறார் "Never confuse education with intelligence, you can have a PhD and still be an idiot.”

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பிற்கும் பழக்கவழக்கத்திற்கும் இடையில் தொடர்பில்லை, கல்வி அறிவை வளர்க்க, தேடலை உருவாக்குகிறது, பணம், பட்டம், பதவி பெற உதவுகிறது, சிலசமயம் சம்பந்தப்பட்டவர்  விரும்பினால்  சரியாக சிந்திக்க வழி காட்டும். பழக்க வழக்கம்; பிறப்பில், உறவாடும் சமுதாயத்தில் உருவாகுகிறது என்பது எனது தனிப்பட்ட எண்ணம். அதற்கு ஆதாரமில்லை என்னிடத்தில், படித்தவனிடத்தில் அதை தேடி கண்ட அனுபவம்.  படித்தவனிடத்தில் பண்பை விட, மற்றவர்களை, நம்பினோரை  ஏமாற்றும் தந்திரம் நிறைந்திருக்கிறது. அவர்களது படிப்பு அறிவற்றவர்ளை, ஏதிலிகளை அவர்கள் பக்கம் இழுக்க, கவர, நம்பிக்கை வைக்க உதவும் தூண்டிலாகிறது. இங்கு இவர் தனது பதவியையே மதிப்பிழக்க வைத்து விட்டார் தனது ஈனச்செயலால், இல்லை ....... இவரது கல்வியும், பதவியும் மற்றவரை ஏமாற்ற உதவியுள்ளது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு!

யாழில் காணி மோசடி குற்றச்சாட்டில் கைதான சட்டத்தரணி உள்ளிட்ட 9 பேருக்கும் விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் மாநகர் அராலி வீதியில் காணி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, சட்டத்தரணி மற்றும் முன்னாள் பாடசாலை அதிபர் உட்பட 9 பேரையும் எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள 9 சந்தேக நபர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி, மூத்த சட்டத்தரணிகள் உள்பட 20இற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகி முன்வைத்த பிணை விண்ணப்பம் மீது எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என மன்று தவணையிட்டது.

யாழ்ப்பாணம் மாநகர் அராலி வீதி – பொம்மைவெளி பகுதியில் உள்ள காணி ஒன்று அதன் இறந்து விட்ட உரிமையாளர்களான தம்பதியின் போலிக் கையொப்பங்கள் மூலம் நிறைவேற்றப்பட்ட உறுதியினால் மோசடியாக உரிமை மாற்றம் செய்யப்பட்டது. அது தொடர்பாக யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை நடத்தி பொலிஸார், கடந்த மாதம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்கைத் தொடுத்து சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்து மன்றில் முற்படுத்தினர்.

பொலிஸாரின் புலன் விசாரணைகள் நிறைவடையாத நிலையில் சந்தேக நபர் கடந்த ஒரு மாதமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1310102

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில். இறந்தவர்களின் பெயரில் காணி உறுதி முடிப்பு! – ஒருவர் விளக்கமறியலில்

யாழில். போலி உறுதி விவகாரத்தில் சட்டத்தரணிக்கு பிணை – ஏனையோர் தொடர்ந்தும் மறியலில்!

யாழ்ப்பாணம் மாநகர் அராலி வீதியில் போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் விளக்கமறியரில் வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணியை நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்க யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் கட்டளையிட்டார்.

யாழ்ப்பாணம் மாநகர் அராலி வீதி – பொம்மைவெளி பகுதியில் உள்ள காணி ஒன்று அதன் இறந்து விட்ட உரிமையாளர்களான தம்பதியின் போலிக் கையொப்பங்கள் மூலம் நிறைவேற்றப்பட்ட உறுதியினால் மோசடியாக உரிமை மாற்றம் செய்யப்பட்டது. அது தொடர்பாக யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட, சட்டத்தரணி உள்ளிட்ட 9 சந்தேக நபர்களும் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

சந்தேக நபர்கள் சார்பான பிணை விண்ணப்பத்தை ஆராய்ந்து வரும் 21ஆம் திகதி கட்டளை வழங்கப்படும் என்று தவணையிட்ட மன்று அன்றுவரை சந்தேக நபர்கள் 9 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில் சட்டத்தரணி சார்பில் இன்றைய தினம் திங்கட்கிழமை நகர்த்தல் பத்திரத்தை முன்வைத்து ஆதரித்த சட்டத்தரணி, கலாநிதி குமாரவடிவேல் குருபரன் பிணை விண்ணப்பத்தை முன்வைத்து மேலதிக காரணங்களை மன்றில் சமர்ப்பித்தார்.

“சட்டத்தரணி பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்கு உள்பட்டவர். அவரது சிகிச்சை தொடர்பான மருத்துவ சான்றிதழ்கள் மன்றின் கவனத்துக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.

அவர் எந்த வகையிலும் இந்த வழக்கின் விசாரணைகளுக்கு இடையூறாகவோ தடையாகவோ ஒருபோதும் செயற்படமாட்டார். சட்டத்தரணி என்ற வகையில் அவர் இந்த மோசடி தொடர்பான உண்மையைக் கண்டறியந்து நீதியை நிலைநாட்ட ஒத்துழைப்பு வழங்குவார் என்பதை அவர் சார்பில் உறுதிபட மன்றிடம் முன்வைக்கின்றோம்.

அவர் பிணையில் உள்ள காலப்பகுதியில் நீதி பரிபாலனத்திலயோ பொலிஸ் விசாரணைகளிலோ தலையீடு செய்யமாட்டார் என்ற அடிப்படையிலேயே பொலிஸாரின் விண்ணப்பங்களும் அமைந்துள்ளதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இந்தகைய காரணங்களின் அடிப்படையில் அவரை பிணை விடுவிப்பதற்கான கட்டளையை ஆக்குமாறு கோருகின்றோம்” என சட்டத்தரணி, கலாநிதி கு.குருபரன் சமர்ப்பணம் செய்தார்.
சந்தேக நபர் சார்பான சமர்ப்பணத்தை ஆராய்ந்த மன்று சட்டத்தரணியை நிபந்தனையுடனான பிணையில் செல்ல அனுமதியளித்தது.

அதேவேளை ஏனைய 08 பேரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் 21ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.