Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாத்தளையில் மகாத்மா காந்தியின் சிலை இனம் சிங்களவர்களால் நொருக்கப்பட்டது!

Featured Replies

மாத்தளையில் மகாத்மா காந்தியின் சிலை இனம் சிங்களவர்களால் நொருக்கப்பட்டது!

ஜ புதன்கிழமைஇ 29 ஆகஸ்ட் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ

மாத்தளையிலுள்ள மகாத்மா காந்தி ஞாபகார்த்த மண்டபத்தில் மக்களின் பார்வைக்கென கடந்த 20 ஆம் திகதி திறக்கப்பட்ட காந்தியின் உருவச்சிலை சிங்களவர்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. இச்சிலை வைக்கப்பட்டிருந்த ஞாபகார்த்தக் கட்டிடம் 1927 ஆம் ஆண்டு மாத்தளைக்கு மகாத்மா காந்தி மேற்கொண்டிருந்த விஜயத்தின் நினைவாக 1948 இல் அவரது அபிமானிகளால் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. 1983 இல் இடம்பெற்ற ஜூலை வன்செயலின் போதும் இக்கட்டிடம் முற்றாக சேதத்திற்குள்ளாகியிருந்தமை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுகளுக்குக் காந்தியும் தமிழர் என்ற நினைப்பு. இதைப் படமெடுத்து இந்து பத்திரிகையின்ர முன்பக்கத்தில போடவேணும்.

அட உயிரோட இருக்கும் போதுதான் காந்தியை சுட்டுக்கொன்றாங்கள் என்றால் சிலையைக் கூட விட்டு வைக்கிறாங்கள் இல்லை.. காந்தியா வாழ்ந்தா வாழ்க்கையில எவ்வளவு கஸ்டப்படவேணும் எண்டு இப்ப விளங்கிது தானே? :D அதான் நாங்கள் அப்படி வாழ முயற்சிக்கவில்லை.. ;)

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் காந்திய கோட்பாட்டின் முக்கியத்துவம்

[29 - ஆஉகுச்ட் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ]

கலாநிதி குமார் ரூபசிங்க

மகாத்மா காந்தி தென்னாபிரிக்காவில் ஆரம்பித்த சத்தியாக்கிரக போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடும் பொருட்டு இந்திய உயர்ஸ்தானிகராலயமும் சகவாழ்வுக்கான மன்றமும் இணைந்து எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதிவரை கொழும்பு தேசிய கலை அரங்கத்தில் புகைப்படக் கண்காட்சி ஒன்றை நடாத்தவிருக்கின்றன.

இந்த கண்காட்சியில் புதுடில்லியில் உள்ள காந்தி தேசிய நூதனசாலையினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட 350 புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்படும். இவை அனைத்தும் மாகத்மா காந்தியின் வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தும் வகையில் அமையும். அத்துடன், மகாத்மா காந்தி தொடர்பிலான ஆவணப்படங்கள் மற்றும் படங்கள் என்பனவும் கண்காட்சியில் காண்பிக்கப்படும். காந்தி, அகிம்சை மற்றும் தொடர்புடைய அரிய புத்தகங்களை வாங்குவதற்கான சந்தர்ப்பங்களும் பார்வையாளர்களுக்கு கிடைக்கவிருக்கின்றன.

1896 ஆம் ஆண்டு, தென்னாபிரிக்காவில் இந்தியர்களின் கட்டாய பதிவு சட்டத்திற்கெதிராக மகாத்மா காந்தி சத்தியாக்கிரக போராட்டத்தைத் தொடங்கினார். இந்த கண்காட்சியின் ஒரு தனித்துவமான அம்சம் என்ன வென்றால், மகாத்மா காந்தி பயன்படுத்திய உடைமைகளான, சாப்பாட்டுக்கோப்பை, கோப்பை, கண்ணாடி, கைப்பிடி மற்றும் பாதணிகள் என்பவை பார்வைக்கு வைக்கப்படும். இக் கண்காட்சி, மகாத்மா காந்தியின் கோட்பாடுகள் மற்றும் அவரது வாழ்க்கை என்பவற்றைப் பற்றி இலங்கையர்கள் அறிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக அமையும்.

கடந்த ஜனவரி 29 ஆம் 30 ஆம் திகதிகளில் இந்திய தேசிய காங்கிரஸினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட 21 ஆம் நூற்றாண்டில் "சமாதானம், அகிம்சை மற்றும் வலுவூட்டல்" என்பவை தொடர்பிலான காந்திய கோட்பாடுகள் எனும் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர்களுடன் நடாத்திய சந்திப்பின் விளைவே இந்த காந்தி புகைப்படக் கண்காட்சியாகும். 1986 இல் காந்தியினால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டத்தை கொண்டாடும் வகையில் இம் மாநாடு நடைபெற்றிருந்தது. யதார்த்த அரசியலிலே பயங்கரமும் வன்முறையும் நிறைந்திருக்கும் இன்றைய உலகத்திற்கு மகாத்மா காந்தியின் சத்தியாக்கிரக போராட்டம் மற்றும் அதன் பொருள் என்பன பொருத்தமானது தான் என்றும், இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் இன்று நாம் எதிர்கொண்டு வரும் பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கெதிரான நடவடிக்கைகளில் எவ்வாறு, காந்தியின் சத்தியாக்கிரக கொள்கைகளை பிரயோகிப்பது என்றும், இம் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

காந்தியின் செல்வாக்கு

உலக வரலாற்றின் மறுவடிவ உருவாக்கத்தில் காந்தியின் உயரிய ஆதிக்கம் இருந்தது என்பதில் கேள்விக்கு இடமில்லை. இந்தியாவிலே சுதந்திரம் மற்றும் விடுதலை என்பவற்றுக்கான ஒரு எழுச்சிக்குரியவராக காந்தி இருந்தார். இதனை மையப்படுத்தியே இந்திய தேசிய காங்கிரஸ் அமைந்திருந்தது. பிரித்தானிய காலனியாதிக்கத்திற்கெதிரான போராட்டத்திலே, காந்தியின் சத்தியாக்கிரக சர்வோதய மற்றும் சுவராஜ் (சுயாட்சி) ஆகிய கோட்பாடுகள் பெரும் செல்வாக்கை கொண்டிருந்ததுடன், இந்தியாவில் ஒரு நிலையான பெறுமதியை கொண்டிருப்பதிலும் செல்வாக்கு செலுத்தியிருந்தன.

காந்தி ஒரு கொள்கையை மட்டும் முன்மொழிந்திருக்கவில்லை. எதனைக் கூறினாரோ அதன்படி வாழ்ந்தும் காட்டியதுடன் உள் மனதின் மீது கவனம் செலுத்தினார், காந்தியின் போதனைகளும் உதாரணங்களும் இந்தியாவில் மில்லியன் கணக்கான மக்களை எழுச்சிப் படுத்தியதுடன், அதன் உள்ளூர் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்திற்கும் பெருமை சேர்த்தது. காந்தியினூடாக இந்தியா தனது சொந்த பெறுமதிகளின் ஈர்ப்பின் மையத்தை கண்டு பிடிக்கக் கூடியதாக இருந்துள்ளது.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியது போல, எந்தக் கோட்பாடுகளுக்காக மகாத்மா காந்தி நினைவு கூரப்படுகிறாரோ அவை சர்வதேச இலட்சியங்களின் அடிப்படையிலானவை. எமது மனதிலே பல்வேறு சிந்தனைகளின் போராட்டம் நடைபெறுகிறது, ஆனால், அவற்றுள் சிலவே எமது இதயத்தை தொடுகின்றன. கடந்த நூற்றாண்டிலே பல்வேறு அரசியல் கோட்பாடுகள் வந்து போயிருக்கின்றன. அவற்றுள் சில, சந்தேகத்திற்குரிய வருகைகளாகவும் ஏனையவை மோசமான விளைவுகளுடன் கூடியவைகளாகவும் இருந்துள்ளன. நான் நம்புகின்ற ஒரு அரசியல் கோட்பாடானது, இந்த மானுட சமூகம் சமாதானத்தை தேடுகின்றவரையில் எமது சமூகங்களில் சமாதானத்தை தேடுகின்ற வரையில், நாடுகளுக்குமிடையில் சமாதானத்தை தேடுகின்ற வரையிலும் மற்றும் இயற்கையுடன் சமாதானத்தை தேடுகின்ற வரையிலும் தொடர்ந்து பொருந்தமானதாகவே இருக்கும். அது, மகாத்மா காந்தியுடன் தொடர்புடைய எண்ணக்கருக்களும் பெறுமதிகளும் தான். காந்தி உலகம் பூராகவும் செல்வாக்கை செலுத்தினார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தென்னாபிரிக்காவில், வெள்ளையர்களுக்கெதிரான ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் ஆரம்ப கால போராட்டத்தில் நெல்சன் மண்டேலாவை, மகாத்மா காந்தியின் செல்வாக்கு ஆட்கொண்டிருந்தது. போராட்டத்தின் இறுதிக் காலத்திலேயே நிறவெறி அரசாங்கத்தின் மோசமான வன்முறைக் கட்டவிழ்ப்புகளுக்கெதிராக, மட்டுப்படுத்தப்பட்ட வன்முறை நடவடிக்கைகளில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஈடுபட்டிருந்தது.

பேராயர் டெஸ்மன் டுட்டு மற்றும் ஏனைய பலர் காந்தியின் கொள்கைகளினால் கவரப்பட்டிருந்தனர். அத்துடன், காந்தியின் கொள்கையானது, வன்முறையற்ற ஒரு மாற்றம் தொடர்பில் டிகிளார்க் மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோர் இறுதித் தீர்வு திட்டத்தில் ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதை நிர்ணயம் செய்தது. யதார்த்த அரசியல் தென்னாபிரிக்காவிலே ஒரு இரத்தக் களரியை தவிர்த்தது. அமெரிக்காவிலே, வெள்ளையர்களுக்கெதிரான கறுப்பின மக்களின் சலிப்பு, கோபம் என்பவற்றை தனது அகிம்சை வழிமுறைகளினூடாக ஒரு ஆக்கபூர்வமான ஈடுபாட்டை மேற்கொள்ள வைப்பதற்கு முடிந்த மார்டின் லூதர் கிங்கையும் காந்தியின் செல்வாக்கு அதேயளவிற்கு ஆட்கொண்டிருந்தது. காந்தி மற்றும் அவரது போதனைகள் என்பவை சோவியத் ஆதிக்கத்திற்கெதிராக கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் `வெல்வெட்" புரட்சியிலும் ஆதிக்கம் செலுத்தியிருந்தது.

எவ்வாறெனினும், மதிக்கப்படுவதற்கும், புகழப்படுவதற்குமான ஒரு உருவகமாக காந்தி தொடர்ந்தும் இருப்பாரா அல்லது, 21 ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு இசைவாக்கம் செய்யப்படக் கூடியதாக, காந்தியின் போதனைகள் மற்றும் செயற்பாடுகள், ஆன்மீகம் மற்றும் சமூக வழி நடத்தல் என்பவை அமைய முடியுமா? காந்திய கொள்கையுடன் இருந்து வந்த மாக்ஸிய தத்துவமானது அதன் முடிவுக்கு வந்து விட்டது. காந்தி பொல்ஸெசிக் புரட்சியுடன் முரண்பட்ட போது, "சமத்துவத்திற்கான போராட்டத்தில் பொல்ஸெசிக் புரட்சியானது பெரும் நம்பிக்கையை காட்டியிருக்கிறது, ஆனால் பெறுபேறை நாம் பார்ப்பதற்கு இன்னமும் 50 வருடங்கள் காத்திருக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இன்று சோவியத் ஒன்றியமானது சின்னாபின்னமாகிப் போயிருப்பதுடன், சோவியத், எதிர்ப்பு இயக்கத்தின் முன்னணி உறுப்பினர்களாக போலந்தின் லீச் வலேசா மற்றும் செக்கோஸிலா வோக்கியாவின் வக்லவ் ஹவல் போன்ற காந்திய வாதிகள் இருந்தனர்.

கேள்வி என்ன வென்றால், அடக்கு முறை மற்றும் சமத்துவம் என்பவற்றுக்கெதிராக இளைய தலைமுறை காந்திய வழிமுறைகளை பின்பற்றுமா இல்லையா என்பது தான். எமது தனிப்பட்ட மற்றும் தேசத்தின் இலக்குகளின் அவசியங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு, காந்தியப் பெறுமதிகள் ஒரு பெறுமதியான திட்ட முன்னெடுப்பை வழங்க முடியுமா, எவ்வாறு காந்தியின் பெறுமதிகள் இளையோர்களை ஒரு சமூக மாற்றத்தை நோக்கி கிளர்ச்சியூட்ட முடியும் என்பதே இன்றைய சவால்.

இந்தியா மற்றும் காந்தியின் சத்தியாக்கிரக போராட்டம் என்பவற்றின் பின்னணியில், இலங்கையின் எதிர்காலம் குறித்து பிரதிபலிப்பது பொருத்தமானதாக இருக்கலாம். பிரிட்டிஸிடமிருந்து இலங்கையானது மிக இலகுவாக சுதந்திரம் பெற்றது.

எமது அக்காலத்து தலைவர்கள் மேற்கத்தைய வர்க்க ஆளுகைக் குட்பட்டிருந்தார்கள். காந்தியின் போதனைகளால் பலர் ஈர்க்கப்பட்டிருந்தபோதிலும், இலங்கை ஒரு போதுமே ஒரு காந்தியை கொண்டிருக்கவில்லை. பொல்ஸெசிக் புரட்சியில் தனது தோற்றத்தை கொண்டிருந்த மாக்ஸிய மற்றும் ட்ரொஸ்கைட் இடதுசாரி இயக்கங்களில் இருந்தே சமூக மாற்றத்திற்கான எமது அடிப்படை மூலம் வந்தது. வன்முறை மற்றும் அழிவு என்பற்றின் மீது நம்பிக்கை கொண்ட நம்பிக்கை மற்றும் சிறப்புரிமை பெற்ற மேல்வர்க்கத்தினருக்கெதிரான சாதாரண மக்களின் பொப்பூலிஸ போராட்டம் என்பவற்றின் கலவைக்குரிய அம்சங்களுடன் அரையாக ஆதரவளிக்கப்பட்ட மாக்ஸிய கருத்து வினைப்பாடு என்பவற்றினால் ஈர்க்கப்பட்ட இரண்டு இளைஞர் கிளர்ச்சிகள் தென்னிலங்கையில் இருந்தது.

தமிழ்த் தேசிய இயக்கத்தினால் ஆரம்பத்தில் அகிம்சை வழிமூலமான சத்தியாக்கிரக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது என்பது உண்மை. அப்போது இருந்த அரசாங்கத்தினால் இப்போராட்டங்கள் மோசமாக அடக்கப்பட்டன. சகிப்புத்தன்மை அற்ற சிங்கள அரசாங்கங்களினால், தமிழ் அரசியல் கட்சிகளின் அகிம்சை மற்றும் ஜனநாயக ரீதியான வெளிப்படுத்தல்கள் புறக்கணிக்கப்பட்டன.

இதன் பின்னர் தான் ஆயுத இயக்கங்கள் தோன்றி ஆயுதங்களை கையில் எடுக்கும் நிலைமை உருவானதுடன், வன்முறை மற்றும் சகிப்புத் தன்மை என்பவற்றின் மீதான நம்பிக்கை என்பவை ஆயுத இக்கத்தின் இயல்புகளாக காணப்பட்டன. ஈற்றில், ஒரு போதுமே முடிவடையாத சகோதர படுகொலையில் தமிழர்கள் தங்களை தாங்களே கொல்ல ஆரம்பித்தனர். கடந்த, 20 வருடங்களாக, இந்த நாடானது வன்முறை மற்றும் சகல வடிவ பயங்கரவாதங்களினாலும் சிக்கித் தவிக்கிறது.

யுத்தம் பயனற்றது என்பதை இந்த நாட்டின் மக்கள் உணர்ந்து கொள்கின்றபோதுதான் ஒரு மாற்று வழி காணப்பட முடியும். முழு நாட்டையுமே ஒன்றிணைக்கக் கூடிய பெறுமதி அமைப்புகள் இல்லை. என்பதுடன் நம்பிக்கை வைப்பது தொடர்பில் ஒரு பெரும் நெருக்கடி காணப்படுகிறது. இது இலங்கைக்கான ஒரு மாற்று வழியை வேண்டி நிற்பதுடன், அகிம்சையின் பெறுமதிகளை மக்கள் உள்வாங்கிக் கொள்வதுடன், தம்மை ஒழுங்குபடுத்த வேண்டியமையையும் வலியுறுத்துகிறது.

தமது எதிர்ப்பை தமது வாக்குகள் மூலம் காட்டிக் கொள்வதற்கு இந்த நாட்டில் வாக்காளர்கள் இருக்கிறார்கள், ஆனால், பின்னர் வெறும் பார்வையாளர்களாக ஆகி விடுகிறார்கள். எது தேவை என்றால் சமூக மாற்றத்திற்கான முகவராக தாங்கள் இருப்பதற்கு மக்கள் விரும்புகின்ற ஒரு `பிரஜைத்துவம்' இதற்கான ஒரு அடித்தளத்தை இடுவதற்கான, அவசியமான எழுச்சி மற்றும் வழிகாட்டலை இந்த புகைப்படக் கண்காட்சி வழங்கும் என்பது நம்பிக்கை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.