Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் படைத்தளம் மீது புலிகள் தொடர் எறிகணைத்தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா இராணுவத்தினரின் மன்னாரில் உள்ள பிரதான படைத்தளமான தள்ளாடி முகாம் மீது இன்று 6 மணி நேரத்துக்கும் மேலாக தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர் எறிகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இன்று புதன்கிழமை மாலை 4.30 மணி தொடக்கம் விடுதலைப் புலிகள் தொடர் எறிகணைத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கிறனர்.

இத்தாக்குதல்கள் இன்று இரவு 10 மணிக்கும் மேலாக தொடர்கின்றன.

சிறிலங்காப் படைத்தளத்துக்குள் பலத்த அழிவுகள் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தித் தொடர்புகள் உறுதி செய்கின்றன.

இத்தாக்குதல்கள் தொடங்கிய நேரம் தொடக்கம் தள்ளாடி படைத்தளத்தில் இருந்தும் அதனை அண்மித்த சிறிலங்கா இராணுவப் படைத்தளங்களில் இருந்தும் படையினரும் தொடர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர் நன்றி புதினம்.

(ஊர்ப்புதினம் பகுதியில் எழுத எனக்கு அனுமதி இல்லாததால் இங்கு இணைத்து உள்ளேன்)

Edited by sagevan

யோகி அவர்களின் பேட்டியில் சொன்ன மாதிரி அங்கு அடி நடந்து கொண்டு தான் இருக்கிறது

சிங்கள இராணுவம் பயத்துடன் தான் வாழுகிறார்கள்.

Artillery duel in northern FDLs

[TamilNet, Wednesday, 29 August 2007, 16:45 GMT]

The Liberation Tigers of Tamil Eelam (LTTE) and the Sri Lanka Army (SLA) exchanged heavy artillery fire in Naakarkoayil and Mukamaalai Front Defence Lines (FDL) positions in the north from Tuesday 2:30 p.m, continuing into the night, residents of the areas said. SLA confirmed the exchange of fire, but did not release information on casualties or damages.

However, sources close to SLA said that these duels of artillery fire between the two parts have become routine when units change shifts of duty in the afternoon.

சொறிச் சேட்டைகளுக்கு இடங்கொடுக்கக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

தள்ளாடி, மாந்தை முகாம்கள் மீது புலிகள் ஷெல் தாக்குதல் படைவீரர் பலி; மூவர் காயம்

மன்னார் தள்ளாடி மற்றும் மாந்தை இராணுவ முகாம்களை இலக்குவைத்து விடுதலைப் புலிகள் நேற்றுமுன்தினம் மேற்கொண்ட ஷெல் தாக்குதலில்

படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூவர் படுகாமடைந்துள்ளனர் என்று படைத்தரப்பிலிருந்து தெரியவருகிறது.

நேற்றுமுன்தினம் மாலை 4.30 மணியளவில் ஆரம்பமான ஷெல் தாக்குதல் நள்ளிரவு வரை தொடர்ந்ததாகவும் பதிலுக்கு படையினரும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசங்களை நோக்கி ஷெல் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

படையினர் ஏவிய ஷெல்கள் கறுக்காய்குளம், ஆண்டான்குளம் மற்றும் பிள்ளையார்பிட்டி பகுதிகளில் வீழ்ந்து வெடித்துள்ளதாகத் தெரியவருகிறது. இதேவேளை, விடுதலைப் புலிகள் ஏவிய ஷெல்கள் தள்ளாடி, மாந்தே இராணுவ முகாம்களில் வீழந்து வெடித்ததாகவும் இதன்போது வடைவீரர் ஒருவர் பலியானதுடன் மூவர் படுகாயமடைந்ததாகவும் படைத்தரப்பிலிருந்து தெரியவருகிறது.

மன்னார் தள்ளாடி மற்றும் மாந்தே பிரதேசங்களிலுள்ள முகாம்களிலிருந்து விடுதலைப் புலிகளின் நிலைகளை நோக்கி நேற்றுமுன்தினம் மாலை 5.30 மணியளவிலிருந்து தொடர்ச்சியாக படையினர் ஷெல் தாக்குதல் நடத்தியதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

இருதரப்பினருக்கும் இடையில் பரஸ்பரம் இடம்பெற்ற ஷெல் தாக்குதலில் படைத்தரப்பில் ஏற்பட்ட உயிர் இழப்பை மன்னார் பொலிஸ் வட்டாரங்களும் உறுதிசெய்துள்ளன. காயமடைந்த படையினர் மூவரும் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

-வீரகேசரி

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தினரின் முன்நகர்வு நடவடிக்கை முறியடிப்பு

[வெள்ளிக்கிழமை, 31 ஓகஸ்ட் 2007, 17:31 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

மன்னார் விளாத்திக்குளத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் முன்நகர்வு நடவடிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று முறியடித்துள்ளனர்.

மன்னாரின் கிழக்கு எல்லைப் பகுதியில் உள்ள விளாத்திக்குளம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு சிறிலங்கா இராணுவத்தினர் பெருமெடுப்பிலான முன்நகர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

செறிவான எறிகணைச் சூட்டாதரவு மற்றும் வெடிகணைச் சூட்டாதரவுடன் விளாத்திக்குளம் பகுதியில் இராணுவத்தினர் முன்நகர்வை மேற்கொண்டனர்.

இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர். சிறிலங்கா இராணுவத்தினரின் முன்நகர்வு நடவடிக்கையானது பிற்பகலில் முறியடிக்கப்பட்டது.

இதில் இராணுவத்தினருக்கு சேதங்கள் மற்றும் இழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரின் சடலமும் ஆயுத தளபாடங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகள் தரப்பில் போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்

puthinam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.