Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

நான்கு வயது சிறுவனுக்கு வாயில் நெருப்பால் சுட்ட ஆசிரியர்!

நான்கு வயது சிறுவனுக்கு வாயில் நெருப்பால் சுட்ட ஆசிரியர்!

துணவி பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் சிறுவனின் வாயில், அங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர் நெருப்பால் சுட்டதாக, சிறுவனின் பெற்றோரால் சங்கானை பிரதேச செயலக சிறுவர் விவகார பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவன் பிரதேச செயலகத்தினால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் தகாத வார்த்தை பேசியதாக கூறி தீக்குச்சியை எரிய வைத்து வாயிலும் நாடியிலும் சூடு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து குறித்த ஆசிரியருக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சங்கானை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1315750

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

குறித்த சிறுவன் தகாத வார்த்தை பேசியதாக கூறி தீக்குச்சியை எரிய வைத்து வாயிலும் நாடியிலும் சூடு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுவன் தானாக பேசவில்லை, வீட்டில் கேட்டதை பேசியிருக்கிறான். தண்டிக்கப்படவேண்டியவன் சிறுவனல்ல, இது கூட புரியாத ஆசிரியர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்போது சின்னனுகள் நல்லாய் தூசணம் கதைக்கிதுகள். பெற்றோரை தவிர வேறு யாரை குறை கூறுவது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, satan said:

சிறுவன் தானாக பேசவில்லை, வீட்டில் கேட்டதை பேசியிருக்கிறான். தண்டிக்கப்படவேண்டியவன் சிறுவனல்ல, இது கூட புரியாத ஆசிரியர்.

பெடியன்ற அம்மா, அப்பாவ கூப்பிட்டு வாத்தி கண்டிச்சிருந்தா ….என்ன வார்த்தைகள் வந்து விழுந்திருக்கும்🤣.

# நினைச்சேன், சிரிச்சேன்🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

பெடியன்ற அம்மா, அப்பாவ கூப்பிட்டு வாத்தி கண்டிச்சிருந்தா ….என்ன வார்த்தைகள் வந்து விழுந்திருக்கும்🤣.

# நினைச்சேன், சிரிச்சேன்🤣

வீட்டில் பெற்றோர் கதைக்கா விட்டாலும் சில இடத்தில் பிள்ளைகள் கதைக்கிறது சுற்று சூழலிலும் கதைப்பதில்லை என் கிரார்கள் ஆனால் பிள்ளை எப்படி கதைக்கிறது ??  

சிறு வயதில் பிள்ளைகள் 60 மொழிகள் கதைக்கிறதா எங்கோ படிச்ச நிபாகம் வருது அதில் ஒரு மொழியாக இருக்குமோ ??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, goshan_che said:

பெடியன்ற அம்மா, அப்பாவ கூப்பிட்டு வாத்தி கண்டிச்சிருந்தா ….என்ன வார்த்தைகள் வந்து விழுந்திருக்கும்

வாத்தியின் சந்தகேம் சந்தகேம் தீர்ந்திருக்கும். குழந்தைகள் தாங்களாக கெட்ட வார்த்தை பேசுவதில்லை, தாங்கள் கேட்டதையே அர்த்தம் புரியாமல் பேசுவார்கள். ஒருதடவை ஒரு சிறுவன் தகாத வார்த்தை பேசி நீர் இறைக்கும் இயந்திரத்தை இயக்குவது போல் பாசாங்கு செய்து விளையாடிக்கொண்டிருந்தானாம். இதை கேட்டுக்கொண்டிருந்தவர் தம்பி! அப்படியென்றால்  என்ன என்று கேட்டாராம், அப்படியென்றார்த்தான் மிசின் இறைக்கும் என்றானாம். அப்படி யார் சொன்னார்? என்று அவர் திருப்பி கேட்டாராம், அதற்கு அந்தச் சிறுவன் சொன்னானாம், மிசின் இறைக்காவிட்டால் அப்பா இதை சொல்லித்தான் கயிறு சுற்றி இழுப்பார் என்றானாம். இதைகேட்டவர் அப்பாவைத் தேடினாராம் தனது சந்தேகத்தை உறுதி செய்துகொள்ள. அப்பா என்ன சொல்லியிருப்பார்?  இப்போ யாரும் தண்ணி இறைக்கும் இயந்திரம் பாவிப்பதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of text that says 'கண்டிப்பான கை வருங்கால கட்டப்படும்போது, ஆசிரியரின் கை அழ சமுதாயத்தின் நம்பிக் வெட்டப்படுகிறது..! கை''

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 16/12/2022 at 15:56, தமிழ் சிறி said:

நான்கு வயது சிறுவனுக்கு வாயில் நெருப்பால் சுட்ட ஆசிரியர்!

இது  தண்டிக்கும் விதமல்ல. சிறுவனுக்கு தான் பேசியதின் பொருள் தெரியாது,  தான் யாரிடம் இருந்து அந்த வார்த்தையை கற்றுக்கொண்டாரோ அவர் தண்டிக்கப்படாமல் தான் மட்டும் தண்டிக்கப்படுவது அவனை எதிர்காலத்தில் பல சந்தேகங்களுக்கு, அவநம்பிக்கைகளுக்கு, குழப்பங்களுக்கு ஆளாக்கும். அநேகமாக சிறுவர்கள் தாங்கள் அதிகம் நேசிக்கும் நபர்களையே பின்பற்றி பாவனை செய்வதும், பேசுவதும் உண்டு. இந்தப்பராயத்தில் தண்டிப்பதை விடுத்து அன்பாக எடுத்துக்காட்டி அரவணைத்து அவனது சூழலை தக்க அமைக்க உதவ வேண்டும். நான்கு வயது சிறுவனின் ஆரம்ப பாடசாலை அவனது குடும்பமே. ஆகவே குடும்பத்தினரை அழைத்து பேசியிருக்கலாம், ஆனால் வீட்டில் சிறுவன் தண்டிக்கப்பட வாய்ப்பிருக்கு. ஆகவே சமுதாயத்தில் விழிப்புணர்வு, பொறுப்புணர்வு  அவசியம்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.