Jump to content

அமெரிக்காவில் அரச சாதனங்களில் டிக்டொக்கை பயன்படுத்த தடை செய்யும் சட்டமூலம் நிறைவேற்றம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் அரச சாதனங்களில் டிக்டொக்கை பயன்படுத்த தடை செய்யும் சட்டமூலம் நிறைவேற்றம்

By T. Saranya

16 Dec, 2022 | 11:38 AM
image

அமெரிக்க அரசு ஊழியர்கள்  சீனாவுக்கு சொந்தமான வீடியோ செயலியான டிக்டொக்கை அரசுக்குச் சொந்தமான கருவிகளில் பயன்படுத்தக்கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் சட்டமூலத்தை நிறைவேற்றி உள்ளது.

அமெரிக்க சென்ட் நேற்று புதன்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் அரசுக்குச் சொந்தமான கருவிகளில் டிக்டொக்கை பயன்படுத்தக் கூடாது என சட்டமூலத்தை நிறைவேற்றியுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் ஒப்புதலுக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதன் பின்பு இந்த சட்டமூலம் அமெரிக்க பாராளுமன்றத்தில் இருக்கும் பிரதிநிதிகளால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்பே நடைமுறைக்கு வரும். 

அடுத்த வாரம் அமெரிக்க பாராளுமன்ற கூட்டம் முடிவதற்குள் பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை, செனட் சபை இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டும்.

டிக்டொக் செயலி மூலம் அமெரிக்க மக்களையும், அரசு அதிகாரிகளையும் சீனா அரசு வேவு பார்ப்பதாகவும், இது அமெரிக்க மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுதல் எனக் கூறப்பட்டு வரும் நிலையில் அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் டிக்டொக் செயலிக்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து உள்ளனர்.
 

https://www.virakesari.lk/article/143258

 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.