Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் ஒருபோதும் தனியாக நிற்க மாட்டீர்கள்: உக்ரைன் ஜனாதிபதிக்கு பைடன் ஆறுதல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, vasee said:

இதில் கெட்டித்தனம் இல்லை, ஆனால் ஒன்றில் கூடுதல் கவனம் செலுத்தும்போது மற்றய விடயங்களை நாங்கள் தவற விடுகிறோம், அன்று அந்த நிகழ்வில் பெரிய ஆர்வம் காட்டாதமையினால் மாற்றங்களை கவனிக்ககூடியதாக இருந்ததோ அல்லது என்னுடன் வேலை செய்த அனைவரும் கல்வியில் அதிக புலமை கொண்டவர்கள், இடது சார் மூளை திறன் கொண்டவர்களாக இருப்பர்(attention to detail), அல்லது நான் சிறிது மூளைவளம் குறைந்தவராகவும் இருக்கலாம் (Autism) (எனக்கும் அப்பிடி ஒரு சந்தேகம் உண்டு).

உண்மையில் நான் இந்த கெட்டிகாரன், முட்டாள் கேள்விகளில், பரிட்சைகளில் அதிகம் மினக்கெடுவதில்லை.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிறப்பு தேர்ச்சி இருக்கும். 

அதே போல் ஒவ்வொரு தனி திறமையும்.

இந்த வீடியோவில் பிழையாக கணித்த பட்டதாரிகளில் ஒருவர் - மிக திறமையான சட்ட வல்லுனராக இருக்க கூடும். அவரால் எந்த கஸ்டமான தீர்ப்பையும் 5 நிமிடத்தில் வாசித்து விளங்க கூடியதாய் இருக்கும்.

அதேபோல் இதை சரியாக கணித்த ஒருவர் அதே தீர்ப்பின் முதல் பக்கத்தை படித்து முடிக்க ஒரு நாளை எடுக்க கூடும்.

அதே போல் ஒரு கணக்கை கொடுத்தால் சட்ட வல்லுனர் மூர்ச்சையாகி விழக்கூடும்.

சின்ன வயதில் கொக்குக்கு தட்டையான தட்டிலும், நரிக்கு ஒடுங்கிய குவளையிலும் சூப் கொடுத்த கதை படித்தோம் அல்லவா? அது போலத்தான் “கெட்டித்தனம்” மும்.

 

  • Replies 54
  • Views 2.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

 உங்கள் எழுத்தை முழுவதும் வாசித்தேன். தவறைக் கவனித்தேன். ஆனால், தரவுத் தவறுகளை (factual errors) யாழில் சுட்டிக் காட்டும் போக்கினால் தான் நான் உட்பட்ட ஓரிரு உறுப்பினர்கள் மேல் பலருக்குக் காண்டும் ஜென்மக் குரோதமும் வந்தன! எனவே, இப்போது தரவுத் தவறுகளைச் சுட்டுவதில்லை! இதே தவறான தகவலை வேறெங்காவது பொது வெளியில் சொல்லி மொக்கேனப் படும் போது பட்டறிந்து தெளிந்தால் அதிலே ஒரு கற்பிதம் (lesson) இருக்கும் என்பதால் அப்படியே கடந்து விடுவது.

ஆனால், அதை வைத்துக் கொண்டு நீங்கள் பிரேரித்த எண்ணக் கரு perception blindness சிலருக்கு யாழில் பொருந்துகிறது. உதாரணமாக, கோசான் பந்தி பந்தியாக எழுதிய வரலாற்றுத் தகவல்களை நீங்கள் மட்டுமல்ல, ரஷ்ய ஆதரவு நிலையெடுத்த பலரும் கடந்தே போயிருக்கிறார்கள் என்பது இந்தத் திரியிலேயே வெளிப்படுகிறது. இதன் காரணங்களில் நீங்கள் முன்வைத்த சார்பு நிலையும் ஒன்று.

இதை விட முன்னுக்குப் பின் முரணான மன நிலையான cognitive dissonance உம் இன்னொரு காரணம்.

எப்படி? பிராந்திய அரசியலையும், உள்ளூர் இராணுவ அழுத்தங்களையும் மீறி நடை முறை (de facto) அரசை வைத்திருந்த ஈழத்தமிழர், அதைக் காக்க எடுத்த முயற்சிகள் எல்லாமே முற்று முழுதாக நியாயம் என்று வாதிடும் சில யாழ் உறவுகள், சர்வதேச சட்டப் படி ஒரு சட்டரீதியான (de jure) அரசை வைத்திருந்த உக்ரேன் அதைக் காக்க எடுக்கும் முயற்சிகளை தவறாகப் பார்க்கின்றனர், சிலருக்கு இந்த முயற்சிகள் நக்கலுக்குரியதாகவும் கூட இருக்குது. இத்தகைய ஒவ்வொரு விடயத்திற்கும் ஒவ்வொரு தொப்பியை மாற்றிப் போட்டுக் கொள்ளும் குழப்ப மன நிலை தான் cognitive dissonance.

நீங்கள் தெரிந்திருந்தும் சுட்டிகாட்டமல் விட்டிருக்கக்கூடும் எனவே நானும் கருதினேன்.

எனது தவறை தாராளமாக சுட்டிக்காட்டலாம், தவறுகள் என்பது என்னை பொறுத்தவரை மிக சாதாரணமான ஒன்று அவ்வளவு தவறுகள் செய்துள்ளேன்.

கல்விசார் சமூகத்தில்தான் தவறிழைப்பதென்பது மிக பெரிய விடயமாக பார்க்கப்படுகிறது எனக்கு அந்த பின்புலமில்லாதாலோ என்னவோ அதனை பற்றி அலட்டி கோள்வதில்லை.

காலத்திற்கு காலம் எனது அபிப்பிராயத்தில் மாற்றம் ஏற்பட்டு கொண்டுள்ளது, இதுதான் நிலையான கொள்கை என்று எதுவுமில்லை இது அனைவருக்கும் பொதுவான ஒன்று நான் அதனை வெளிப்படையாக சொல்கிறேன் மற்றவர்கள் சொல்வதில்லை அவ்வளவுதான் வித்தியாசம்.

சின்ன வயதில் பாடசாலையில் ஆங்கில ஆசிர்யர் நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக போகிறீர்கள் என கேட்டால் ஒட்டு மொத்த வகுப்பும் மருத்துவராகவும் பொறியியலாலராவதாக சொன்னார்கள், அந்த தருணத்தில் எனக்கு ஒரு தந்தை ஆவது மட்டும் உறுதியான தெரிந்தது அதை சொல்லமுடியுமா? அதனால் எனக்கு தெரியாது என சொன்னேன் ஒட்டு மொத்த வகுப்பும் ஒரு மிக பெரிய நகைசுவை கேட்டது போல சிரித்தார்கள்.

உங்களுக்கு சரியோ தவறோ ஊரோடு ஒத்து ஓடு என்பார்கள் அதனை மீறுவது கடினம்.

உயரம் பாய்வதில் ஒருவர் முதல் முறையாக தற்போதுள்ள நடைமுறையினை பின்பற்றினார், அவரினது பயிற்றுவிப்பாளர் தொடக்கம் அனைவரும் அவரினை வாட்டி வதைத்தனர்(மருத்துவர் உள்ளடங்கலாக). அனால் 1968 இல் அவர் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார், அடுத்த முனிச் ஒலிபிக்கில் 70% ஆனவர்கள் அதனை பின்பற்றினார்கள்.

 

3 minutes ago, goshan_che said:

உண்மையில் நான் இந்த கெட்டிகாரன், முட்டாள் கேள்விகளில், பரிட்சைகளில் அதிகம் மினக்கெடுவதில்லை.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிறப்பு தேர்ச்சி இருக்கும். 

அதே போல் ஒவ்வொரு தனி திறமையும்.

இந்த வீடியோவில் பிழையாக கணித்த பட்டதாரிகளில் ஒருவர் - மிக திறமையான சட்ட வல்லுனராக இருக்க கூடும். அவரால் எந்த கஸ்டமான தீர்ப்பையும் 5 நிமிடத்தில் வாசித்து விளங்க கூடியதாய் இருக்கும்.

அதேபோல் இதை சரியாக கணித்த ஒருவர் அதே தீர்ப்பின் முதல் பக்கத்தை படித்து முடிக்க ஒரு நாளை எடுக்க கூடும்.

அதே போல் ஒரு கணக்கை கொடுத்தால் சட்ட வல்லுனர் மூர்ச்சையாகி விழக்கூடும்.

சின்ன வயதில் கொக்குக்கு தட்டையான தட்டிலும், நரிக்கு ஒடுங்கிய குவளையிலும் சூப் கொடுத்த கதை படித்தோம் அல்லவா? அது போலத்தான் “கெட்டித்தனம்” மும்.

 

உண்மைதான்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விசுகு said:

 

பிரெஞ்சில்  Malin என்ற சொல்  ஞாபகம் வருவது  எனக்கு  மட்டும்  தானா என்று  தெரியவில்லை

 

எனக்கு பிரெஞ்சு தெரியாது, அதன் அர்த்தம் என்ன என்பதனை தமிழில் சொல்வீர்களா?

 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, vasee said:

எனக்கு பிரெஞ்சு தெரியாது, அதன் அர்த்தம் என்ன என்பதனை தமிழில் சொல்வீர்களா?

 

வணக்கம் நத்தார் வாழ்த்துங்கள்

Malin என்ற பிரெஞ்சு சொல்லுக்கு தமிழில் சந்தர்ப்பங்களுக்கேற்ப அர்த்தம் மாறுபடும்.

 இப்போ நான் இங்கே ஒன்றை சொன்னால் @இணையவன் வந்து வேறு ஒன்றை சொல்லமுடியும்

புத்திசாலி என்றும் சொல்லலாம்

அதனை வைத்து புகுந்து விளையாடுபவர் என்றும் சொல்லலாம்

அதையே ஒரு குழந்தை செய்தால் அதை ஒருவித அவதானத்துடன் ரசிப்பதாகவும் எடுத்து கொள்ளலாம் 

(இங்கு எழுதுபவர்களுக்கு முக்கியமாக உங்கள் கருத்துக்களை வாசிப்பவர்களுக்கு ஆங்கிலம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்று இல்லை என்பதை தாங்கள் உணர்ந்து விட்டீர்களா?)

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
On 25/12/2022 at 22:41, விசுகு said:

(இங்கு எழுதுபவர்களுக்கு முக்கியமாக உங்கள் கருத்துக்களை வாசிப்பவர்களுக்கு ஆங்கிலம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்று இல்லை என்பதை தாங்கள் உணர்ந்து விட்டீர்களா?)

எனக்கு ஆங்கிலம் பெரிதாக தெரியாது, சில மொழிகளை இலகுவாக அறிந்து அதே வேகத்தில் மறந்தும் விட்டேன் (பயன்பாட்டு தேவெஇயினால்), ஆனால் ஆஙிலம் வராது என சிறு வயதிலேயே மனதளவில் சில விடயம் சுட்டு போட்ட்டாலும் வராது என நினைப்பதால் அப்படி ஏற்படுகிறது என நினைகிறேன்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.