Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

தமிழ் மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி தீர்வு வழங்க எதிர்த்தவர் தற்போதைய ஜனாதிபதி!

கடந்த 2001 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா அம்மையார் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்க முற்படும்போது அதனை அப்போது எதிர்கட்சியில் இருந்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்த்தார்.

ஆனால் தற்போதைய எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸா தமிழ் மக்களின் அரசியர் தீர்வுக்கு ஆதரவு வழங்ககும் என்றதை வரவேற்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

ஜக்கிய மக்கள் சக்தி கட்சியின் மூச்சு என்னும் தொனிப் பொருளில் நேற்று (22) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸா 39 இலட்சம் ரூபா பெறுமதியான இரத்த சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த காலங்களில் அவ்வப்போது தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்க முற்படும் போது எதிர்கட்சி தலைவர்கள் எதிர்த்து தடையாக இருந்தனர். இருந்தபோதும் அண்மையில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸா உடன் இடம்பெற்ற கலந்துரையாடல் அவர் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு வழங்கவேண்டும் தீர்கப்படவேண்டிய விடையம் அதற்கு அவரது கட்சி ஆதரவு வழங்கும் என்றார்.

நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வை இந்த அரசாங்கத்தின் ஊடாக இந்த காலப்பகுதியிலே வருமா? இல்லையா? என்பது இரண்டாவது விடையம் ஆனால் அவ்வாறு வருவதற்கு சந்தர்பம் இருந்தால் எதிர்வரும் காலங்களில் பூரணமான ஆதரவை எதிர்பார்க்கின்றோம்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் மொனராகலை, பதுளை மாவட்டங்களில் இருதய சத்திர சிகிச்சைக்கு ஒரு இடமும் இல்லை அந்த மக்கள் யாழப்பாணம் சென்று சிகிச்சை பெறவேண்டியுள்ளது.

கிழக்கு மாகாண மக்கள் பதுளை மாவட்ட தமிழ் பேசும் மக்கள் இருதய நோயால் செத்தால் பறவாய் இல்லை நாங்கள் இனவாதிகள் என்று செயற்பட்ட இந்த மொட்டு அரசாங்கம் இனவாத அரசாங்கம் என்பதற்கு இதைவிட வேறு சாட்சியமில்லை. எனவே எதிர்வரும் காலத்தில் நாட்டின் தலைவராக வரப்போகும் எதிர்கட்சி தலைவரே முதலாவது வேலையாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இருதய சத்திரசிகிசை வழங்கவேண்டும் என்றார்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆஹா..... அங்காலை ஒருத்தர் ரகசியமாக ரணிலை சந்தித்து வளைப்பதில்  தீவிரமாக இருக்குபோது சஜித் வந்தது தெரியாமல் போய் விட்டதோ? கூட்டமைப்பின் நகைச்சுவைகள். இன்னும் என்னென்ன அலங்கோலங்கள் அரங்கேறப்போகுதோ ஐயப்பனே!

சாணக்கியனின் இந்தப்பேச்சு தீர்வை தர இருக்கும் ரணிலை குழப்பிவிடப்போகிறது.

9 hours ago, nunavilan said:

கடந்த 2001 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா அம்மையார் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்க முற்படும்போது அதனை அப்போது எதிர்கட்சியில் இருந்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்த்தார்.

சின்னப்பொடியன் தெரியாமல் பேசுறான் நீங்கள் தாறதை தாங்க மாத்தையா!



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.