Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாதாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாதாம்

ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாதாம்

ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ செயற்கைக்கோள் மூலம் ஆய்வு செய்ததில் பாலம் இருந்தது என துல்லியமாக கூற முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே உள்ள திட்டுக்களை, சிதைந்த பாலத்தின் பகுதி என்றோ, எச்சங்கள் என்றோ கூற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

அந்த கட்டமைப்புகள் இருந்ததற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோ ஒரு அறிகுறி இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1317019

  • கருத்துக்கள உறவுகள்

இந்த 'மகா..ஆ...ஆ..வம்சம்' மாதிரி ராமாயணமும் தடயங்களை வைத்து ஒரு அளந்துவிட்ட கதை என எல்லோரும் அறிந்ததுதான்.

இன்னும் சில நூற்றாண்டுகள் கழித்து கல்கி, சாண்டில்யன் ஆகியோர் அளந்த கதைகளும் வரலாறாக மாற வாய்ப்புண்டு..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ராசவன்னியன் said:

இந்த 'மகா..ஆ...ஆ..வம்சம்' மாதிரி ராமாயணமும் தடயங்களை வைத்து ஒரு அளந்துவிட்ட கதை என எல்லோரும் அறிந்ததுதான்.

இன்னும் சில நூற்றாண்டுகள் கழித்து கல்கி, சாண்டில்யன் ஆகியோர் அளந்த கதைகளும் வரலாறாக மாற வாய்ப்புண்டு..!

ராமர்… பாலம் கட்டியவர் என்றால், அவர் என்ன எஞ்சினியரா?….
என்று,  கருணாநிதி கேட்ட நினைவு வந்து தொலைக்குது. 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
On 23/12/2022 at 12:43, ராசவன்னியன் said:

இந்த 'மகா..ஆ...ஆ..வம்சம்' மாதிரி ராமாயணமும் தடயங்களை வைத்து ஒரு அளந்துவிட்ட கதை என எல்லோரும் அறிந்ததுதான்.

இன்னும் சில நூற்றாண்டுகள் கழித்து கல்கி, சாண்டில்யன் ஆகியோர் அளந்த கதைகளும் வரலாறாக மாற வாய்ப்புண்டு..!

இராமர் பாலம் கட்டிய ஒப்பந்தத்தில் அனுமார் ஊழல் செய்ததாக பரபரப்பு புகார்!

விசாரிக்குமா சிபிஐ?

வாலியின் மரணத்திலும் மர்மம் இருப்பதாக சந்தேகம்!

- உடான்ஸ்சாமி டுடே -

On 23/12/2022 at 13:07, தமிழ் சிறி said:

ராமர்… பாலம் கட்டியவர் என்றால், அவர் என்ன எஞ்சினியரா?….
என்று,  கருணாநிதி கேட்ட நினைவு வந்து தொலைக்குது. 🤣

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இராமர் பாலம் கட்டிய ஒப்பந்தத்தில் அனுமார் ஊழல் செய்ததாக பரபரப்பு புகார்!

விசாரிக்குமா சிபிஐ?

வாலியின் மரணத்திலும் மர்மம் இருப்பதாக சந்தேகம்!

- உடான்ஸ்சாமி டுடே -

அது விஞ்ஞான ஊழல். 
அதை கண்டு பிடிக்க சான்றுகள் இல்லை என்று... 
உச்சா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. 😎

வாலியின் மரணமும், ஜெயலலிதா  மரணமும்....  
இயற்கை மரணம் என,  ஊர்க்கிழவி தெரிவிப்பு. 😂

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு மிகப் பயனுள்ள ஆனால் செலவு பிடிக்கும் சேது கால்வாய்த் திட்டத்தை ராமர் பாலம் இருப்பதாகக் கூறித் தானே தடுத்தார்கள்.

பாக் நீரிணைப்பு மற்றும் இராமர் பாலம் (ஆதாம் பாலம், Adam's Bridge) பகுதிகளை ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்திற்கு உகந்ததாக மாற்றும் திட்டமே சேது சமுத்திரக் கப்பல் கால்வாய்த் திட்டம். இத்திட்டம் நிறைவேறும்பொழுது இக்கால்வாய் வழியாக செல்லக்கூடிய அளவும் வேகமும் கொண்ட கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் இருந்து இலங்கையைச் சுற்றாமல் சேதுக் கால்வாய் வழியாக வங்கக் கடலை அடைய முடியும்.

300 மீ அகலமும் 12 மீ ஆழமும் 167 கி.மீ நீளமும் கொண்டதாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

முக்கிய அம்சங்கள்[தொகு]

  • இராமர் பாலம் அருகே 35 கி.மீ நீளத்திற்கும், பாக் நீரிணைப்பு பகுதியில் 54 கி.மீ நீளத்திற்கு மட்டும் அகழ்வுப் பணி மேற்கொள்ளப்படும். போதிய ஆழமுள்ள 78 கி.மீ பகுதி ஆழப்படுத்தப்படமாட்டாது.
  • 10 மீ மிதவை ஆழம் கொண்ட கப்பல்கள் இக்கால்வாய் வழி அனுமதிக்கப்படும்.
  • கால்வாயில் செல்லும் கப்பல்கள் 8 கடல் மைல் வேகத்தில் செல்ல அனுமதிக்கப்படும்.
  • பனாமா கால்வாய் போல குறும பார்வைத் தொலைவு 2.5 கி.மீ.
  • 33 மீ அகலமும் 215 மீ நீளமும் 30,000 டன் கொள்ளளவும் கொண்ட கப்பல்கள் இக்கால்வாயைப் பயன்படுத்தலாம்.

படைத்துறை - இடம்சார் அரசியல் நலன் குறித்த காரணங்கள்[தொகு]

  • இந்தியக் கடற்படையின் போர்க்கலன்களை கிழக்குக் கரையோரப்பகுதிகளுக்கும் மேற்குக்கரையோரப்பகுதிகளுக்குமிடையில் அவசரகாலத்தில் மிக வேகமாக பாதுகாப்பாக நகர்த்த உதவும்.
  • கருங்கடலிலிருந்து சிங்கப்பூர் துறைமுகம் வழியாகச்செல்லும் மிகமுக்கிய கடல் வணிகப்பாதையின் பாதுகாப்புச் சார்ந்த முக்கியத்துவத்தை இந்தியக் கடற்படை பெற்றுக்கொள்ளும்.
  • இந்தியாவிலிருந்து விடுதலைப்புலிகளுக்கு இலங்கையை நோக்கி பொருட்களும் ஆயுதங்களும் கடத்தப்படுவதை இலகுவாக இந்தியக்கடற்படையினால் கண்காணித்து முறியடிக்க முடியும். (விடுதலைப்புலிகளின் கண்ணோட்டத்தில் இது இத்திட்டத்தின் பாதகமான விளைவாகும்)
  • இலங்கை, மாலைதீவு, மியான்மார் போன்ற நாடுகளில் சீனாவோ அல்லது இந்தியாவின் அரசியல் நலன்களுக்கு எதிரான சக்தியொன்றோ தன் கடற்படைச்செல்வாக்கை அதிகரிக்கும்போது இந்தியப் பெருங்கடலில் இந்தியா தனது நாட்டின் கடற்படைப் வலுவைக் காப்பாற்ற முடியும்.

திட்டத்திற்கு எதிரான கருத்துக்கள்[தொகு]

சுற்றுச்சூழல் நிலைப்பட்ட காரணங்கள்[தொகு]

  • சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிப் போதிய ஆய்வு நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு.
  • அரியவகை கடல்வாழ் உயிர்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம்.
    • மன்னார் வளைகுடா 10,500 சதுர கிலோமீட்டர் பரப்புக் கொண்டது. அது 3,600 வகையான கடற்செடிகொடிகள், உயிரினங்கள் மற்றும் 117 வகையான அரிய பவளப்பாறை வகையறாக்களை உள்ளடக்கியது.
    • இந்தியாவின் 2,200 வகையான மீன் இனங்களில் 450 வகையான மீன்கள் இங்கே மட்டுமே கிடைக்கக் கூடியதாகும்.
    • 5 வகையான கடலாமைகள் இவ்விடத்தில் மட்டுமே பார்க்கக் கூடியன. இத்திட்டம் செயல் படுத்தப்பட்டால் இவை தீவிர பாதிப்புக்கு ஆளாகும் என அஞ்சப்படுகிறது.
  • ஆழிப்பேரலைகள் உருவாகும் பட்சத்தில் தாக்கம் அதிமாக இருக்கக்கூடிய தீநேர்வு வாய்ப்புள்ளது (ஆபத்து).
  • மீனினங்கள் இடம் பெயரும் அபாயம்.
  • யாழ்ப்பாணத்தின், கால்வாய்க்கு அண்மையிலுள்ள நிலப்பகுகளில் நிலத்தடி நீர்வளமும் நிலக்கட்டுமானமும் குலையக்கூடிய தீநிகழ்தகவு உள்ளது (அபாயம்).
  • யாழ்ப்பாணத்தையும் இராமேசுவரத்தையும் அண்டியுள்ள சிறு தீவுகள் நீரில் மூழ்கக்கூடிய தீநேர்வு வாய்ப்பு (அபாயம்).

பொருளியல் நிலைப்பட்ட காரணங்கள்[தொகு]

  • மீன்பிடிப்பு பகுதி குறையக்கூடும் என்ற மீனவர்களின் அச்சம்.
  • தோண்டப்படும் மணல் அப்புறப்படுத்தப்படுவது பற்றிய ஐயங்கள்.
  • ஒரு லட்சம் டன் கொள்ளளவு கொண்ட பெரிய கப்பல்கள் பயன்படுத்த முடியாது என்பதால் பொருளியல் கோணத்தில் எதிர்பார்த்த பலன் கிட்டுமா என்ற ஐயம்.
  • இலங்கையின் கொழும்புத் துறைமுகம் பாதிக்கப்படும் என்பதால் இலங்கை அரசு பெரும் கவலை கொண்டுள்ளது.
  • இத்திட்டத்தால் பெரிய பொருளியல் நன்மைகள் எதுவும் விளையப்போவதில்லை என்றும், இதனால் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் செலவுகளோடு ஒப்பிடும் போது கிடைக்கும் நன்மைகளும் இலாபமும் மிகக் குறைவு என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.
  • கப்பல்கள் பயண நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்தலாம் என்ற கருத்து மீதான வலுவான சந்தேகங்கள். (பனாமா, சூயஸ் போன்ற உலகின் ஏனைய கால்வாய்களின் அனுபவத்திலிருந்து)
    • கால்வாய் வழியாக குறைவான வேகத்திலேயே கப்பல்கள் செல்ல முடியும்.
    • கால்வாய்க்குள் நுழைவதற்கு கட்டணம் அறிவிக்கப்படும்.
    • கால்வாய் ஊடான பயணத்திற்கு வழியனுமதி பெற சில மணி நேரங்கள் காத்திருக்க வேண்டி வரும்.
    • கால்வாய்க்குள் கப்பலை ஓட்டிச்செல்வதற்கு சிறப்புக் கால்வாய் மாலுமிகளை வாடகைக்கு அமர்த்த வேண்டும்.
    • மேற்கண்ட காரணங்களால் ஏற்படும் தாமதம் இலங்கையைச்சுற்றி வர எடுக்கும் தாமதத்தை அண்மிக்கின்றது.
  • இயற்கை வளங்கள் அப்படியே விட்டுவைக்கப்படும்பட்சத்தில் அது சாதாரண, அடித்தட்டு மக்களின் சொத்தாக இருக்கும். அதையே பெரு நிறுவனங்களின் தொழில்சார் தேவைகளுக்கான பெரிய திட்டங்களூடே அழிக்க முற்படும்போது மிகக்குறைந்த விழுக்காட்டினரான பணக்கார வர்க்கத்துக்கே முழுமையாகப் பயன்படும் என்கிற வாதம்.

இடம்சார் அரசியல் நிலைப்பட்ட காரணங்கள்[தொகு]

  • பனாமா கால்வாய் வெட்டப்பட்டதன் பின்னான அமெரிக்க அரசியல் தலையீடுகள் போன்ற ஏகாதிபத்திய நெருக்கடிகள் ஏற்படக்கூடும் என்ற அச்சம்.
  • இந்தியாவின் அரசியல் நலன் என்று இத்திட்டத்தில் இனங்காணப்படுபவை அண்டை நாடான இலங்கையின் அரசியல் நலன்களுக்கு முரணாக இருத்தல்.
  • தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படைக்கு சாதகமானதாக இத்திட்டம் அமைகிறதென்றும் பாதகமாக அமைகிறதென்றும் இருவேறுபட்ட எதிரெதிர் கருத்துக்கள்.
  • இந்திய இடம்சார் அரசியல், படைத்துறைச் செல்வாக்கினை வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் முதன்மையான நோக்கமாக கருதப்படுவதால் இந்திய நலன்கள் தமக்கெதிரானவையாக இருக்கும் என்று அஞ்சுகின்ற ஏனைய பிரிவினருக்கும் நாடுகளுக்கும் இத்திட்டம் கெடுதியாக (பாதமாக) அமையக்கூடும்.

ஈழ-அரசியல் நிலைப்பட்ட காரணங்கள்[தொகு]

  • தமிழர் தாயகப்பகுதிகளான மன்னார், யாழ்ப்பாணம், தீவுப்பகுதிகள் ஆகியவை இத்திட்டத்தின் ஆக்கப்பணிகளின்போதும் திட்டம் நிறைவுற்றபிறகும் மிகு தீவிர அரசியல், பாதுகாப்பு சார்ந்த முக்கியத்துவத்தைப் பெற்றுவிடும் என்பதால் இப்பகுதிகள் வலிமையான அரசியல் சக்திகளால் தமது சொந்தநலன்களுக்காகப் பயன்படுத்தப்படும் (தீநேர்வு) வாய்ப்பு உள்ளது. இதனால் இப்பகுதி மக்களது அரசியல் நலன்களும் அரசியல் போராட்டங்களும் முன்னெப்போதுமில்லாதவகையில் வலுவாக நசுக்கப்படவும் சுரண்டப்படவும் வாய்ப்புண்டு.
  • சேது சமுத்திரத்தால் ஒருவேளை தமிழர் தாயகப்பகுதிகளிலுள்ள துறைமுகங்கள் நன்மை பெறக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்படுமாயின் அத்துறைமுகம் சார்ந்த பகுதிகளில் சிங்களக்குடியேற்றங்களை அமைக்கும், உயர் பாதுகாப்பு வலயங்களை அமைக்கும் செயற்பாடுகளை சிறீலங்கா அரசு தொடங்கக்கூடிய தீவாய்ப்பு உள்ளது.

சமய நிலைப்பட்ட காரணங்கள்[தொகு]

  • ஆதாம் பாலம்/இராமர் பாலம் என அழைக்கப்படும் மன்னாருக்கும் இராமேசுவரத்துக்கு இடைப்பட்ட மணல் திட்டுப் பகுதி, இராமாயணம் எனும் இந்து சமய இதிகாசம் ஒன்றோடு சம்பந்தப்படுகிறது. இப்பகுதியில் காணப்படும் மணல் திட்டுக்கள் இராமர் கட்டிய பாலம் என இந்துக்களால் நம்பப்படுகிறது. திட்டத்தில் இத்திட்டுக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தைக்கூறி சில இந்து அமைப்புக்கள் திட்டத்தை எதிர்க்கின்றன.

செலவு[தொகு]

சேது சமுத்திரம் திட்டத்தை, 2,427.40 கோடி ரூபாய் மதிப்பில், நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. 2009, ஜூலை, 27ம் தேதி வரை, 831.80 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

உயர்மட்ட நிபுணர் குழு முடிவு[தொகு]

ஆதாம் பாலம் அல்லது இராமர் பாலத்தில் காணப்படும் மணற்திட்டுகள் அன்றி சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவது பொருளாதார ரீதியிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ரீதியிலும் பலன்தராது என உயர்மட்ட நிபுணர் குழு முடிவுதெரிவுத்துள்ளதாக இந்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.[1]

https://ta.wikipedia.org/wiki/சேது_சமுத்திரக்_கால்வாய்த்_திட்டம்#:~:text=இத்திட்டம் நிறைவேறும்பொழுது இக்கால்வாய் வழியாக செல்லக்கூடிய,வழியாக வங்கக் கடலை அடைய முடியும்.&text=300 மீ அகலமும் 12 மீ,மீ நீளமும் கொண்டதாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.