Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலியா தென்னாபிரிக்க கிரிக்கெட் தொடர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

100 ஆவது டெஸ்ட்டில் 200 ஓட்டங்களைக் குவித்தார் டேவிட் வோர்ணர்

By SETHU

27 DEC, 2022 | 02:59 PM
image

தென் ஆபிரிக்க அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்ணர் இரட்டைச் சதம் குவித்தார். இது டேவிட் வோர்ணரின் 100 ஆவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

மெல்பேர்னில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 189 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.

அவ்வணியின் சார்பில் மார்கோ ஜேன்சன் (59), கைல் வெரேய்ன் (52) மாத்திரம் அரைச்சதம் குவித்தனர்.

அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில்  கெமரேன் கிறீன் 27 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார். இது டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அவரின் மிகச் சிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகும்.

முதல் நாள் ஆட்டமுடிவில் அவுஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்புக்கு 45 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் 2 ஆவது நாளான இன்று ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்ணர் இரட்டைச் சதம் குவித்தார்.

David-Warner--double-century--Aus--Vs-SA

254 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 சிக்ஸர்கள், 16 பவுண்டறிகள் உட்பட 200 ஓட்டங்களைப் பெற்ற பின்னர் உபாதையினால் ஓய்வுபெற்றார்.

தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் குவித்த 2 ஆவது வீரர் டேவிட் வோர்ணர் ஆவார். இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் இதற்குமுன் தனது 100 ஆவது போட்டியில் இரட்டைச் சதம் குவித்திருந்தார்.

இன்றைய ஆட்டமுடிவின்போது அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 386 ஓட்டங்களைப் பெற்றிருந்தது ஸ்டீவ் ஸமித் 85 ஓட்டங்களைப் பெற்றார். ட்ரேவிஸ் ஹெட் 45 ஓட்டங்களுடனும் அகெ;ஸ் கெறி 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். தற்போது அவுஸ்திரேலிய அணி 197 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது. 

https://www.virakesari.lk/article/144245

  • கருத்துக்கள உறவுகள்

ப‌ல‌ வ‌ருட‌ம் க‌ழித்து இர‌ட்டை ச‌த‌ம் அடிச்ச‌ டேவிட் வோர்ணருக்கு வாழ்த்துக்க‌ள் 🙏🙏🙏

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்காவுடனான 2ஆவது டெஸ்டில் பலமான நிலையில் அவுஸ்திரேலியா

By DIGITAL DESK 5

28 DEC, 2022 | 01:02 PM
image

(என்.வீ.ஏ.)

மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான 2ஆவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா பலம்வாய்ந்த நிலையில் இருக்கிறது.

போட்டியின் 3ஆம் நாளான இன்றைய ஆட்டம் மழையினால் நிறுத்தப்பட்டபோது தென் ஆபிரிக்கா அதன் 2ஆவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை இழந்து 15 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. 2ஆவது இன்னிங்ஸில் 9 விக்கெட்கள் மீதமிருக்க, இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து மீள்வதற்கு தென் ஆபிரிக்காவுக்கு மேலும் 371 ஓட்டங்கள் தேவைப்படுகிறது.

போட்டியில் மேலும் 2 நாட்கள் மீதமிருப்பதால் அவுஸ்திரேலியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகத் தென்படுகிறது.

போட்டியின் 3ஆம் நாளான இன்று புதன்கிழமை (28) காலை 3 விக்கெட் இழப்புக்கு 386 ஓட்டங்களிலிருந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த அவுஸ்திரேலியா, 8 விக்கெட்களை இழந்து 575 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.

Pat Cummins is ecstatic after sending back his opposite number Dean Elgar for a duck, Australia vs South Africa, 2nd Test, Melbourne, 3rd day, December 28, 2022

போட்டியின் 2ஆம் நாள் ஆட்த்தின் கடைசி கட்டத்தில் உபாதை காரணமாக தற்காலிக ஓய்வு பெற்ற டேவிட் வோர்னரும் கெமரன் க்றீனும் இன்றைய தினம் மீண்டும் துடுப்பெடுத்தாடினர்.

உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100ஆவது டெஸ்டில் இரட்டைச் சதம் குவித்த 2ஆவது வீரரான டேவிட் வோர்னர் மேலதிக ஓட்டம் பெறாமல் 200 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

David Warner failed to hold on to a tricky chance at first slip, Australia vs South Africa, 2nd Test, Melbourne, 3rd day, December 28, 2022

அவருக்கு முன்பதாக ட்ரவிஸ் ஹெட் 51 ஓட்டங்களுடன் வெளியேறியிருந்தார்.

உபாதையிலிருந்து மீண்டுவந்து துடுப்பெடுத்தாடிய கெமரன் க்றீன் அரைச் சதம் பெற்றதுடன் கன்னிச் சதம் குவித்த அலெக்ஸ் கேரியுடன் 117 ஓட்டங்களை 8ஆவது விக்கெட்டில் பகிர்ந்தார்.

Cameron Green checks upon Mitchell Starc after he was struck on the helmet by a Marco Jansen bouncer, Australia vs South Africa, 2nd Test, Melbourne, 3rd day, December 28, 2022

அலெக்ஸ் கேரி 111 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க கெமரன் க்றீன் 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். அவர் அரைச் சதத்தைப் பூர்த்தி செய்ததும் அவுஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.

நெதன் லயன் 25 ஓட்டங்களையும் மிச்செல் ஸ்டார்க் ஆட்டமிழக்காமல் 10 ஓட்டங்களையும் பெற்றனர்.

தென் ஆபிரிக்க பந்துவீச்சில் அன்ரிச் நோக்கியா 92 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

Anrich Nortje exults after getting rid of Travis Head, Australia vs South Africa, 2nd Test, Melbourne, 3rd day, December 28, 2022

தொடர்ந்து 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 7 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 15 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது மழையினால் ஆட்டம் தடைப்பட்டது. தொடர்ந்து ஆட்டம் நடைபெறாததால் 3ஆம் நாள் ஆட்டத்தில் 28 ஓவர்கள் வீசப்படவில்லை.

கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் தென் ஆபிரிக்கா முதல் இன்னிங்ஸில் 189 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

https://www.virakesari.lk/article/144334

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்காவுடனான டெஸ்ட்டில் அவுஸ்திரேலியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி

29 DEC, 2022 | 11:24 AM
image

(என்.வீ.ஏ.)

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக மெல்பர்ன் விளையாட்டரங்கில் நடைபெற்ற 2 ஆவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 182 ஓட்டங்களால்  அவுஸ்திரேலியா அமோக வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒரு போட்டி மீதமிருக்க இப்போதைக்கு 2 - 0 என்ற ஆட்டக்கணக்கில் அவுஸ்திரேலியா தனதாக்கிக்கொண்டுள்ளது.

அத்துடன் 2005-06 கிரிக்கெட் பருவ காலத்திற்கு பின்னர் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக தனது சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர் ஒன்றில் அவுஸ்திரேலியா முதல் தடவையாக வெற்றிபெற்றுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாளான இன்று காலை தனது 2ஆவது இன்னிங்ஸை ஒரு விக்கெட் இழப்புக்கு 15 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த தென் ஆபிரிக்கா 204 ஓட்டங்களுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தது.

துடுப்பாட்டத்தில் டெம்பா பவுமா திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் ஒன்றைப் பெற்றார். அவரைவிட கய்ல் வெரின், தெயூனிஸ் டி ப்றயன், சரெல் ஏர்வீ ஆகிய மூவரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகி இன்று நிறைவுபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியின் எண்ணிக்கை சுருக்கம் வருமாறு:

தென் ஆபிரிக்கா 1ஆவது இன்: 189 (மார்க்கோ ஜென்சன் 59, கய்ல் வெரின் 52, கெமரன் க்றீன் 27 - 5 விக்.. மிச்செல் ஸ்டார்க் 39 - 2 விக்.)

அவுஸ்திரேலியா 1ஆவது இன்: 575 - 8 விக். டிக்ளயார்ட் (டேவிட் வோர்னர் 200, அலெக்ஸ் கேரி 111, ஸ்டீவன் ஸ்மித் 85, ட்ரவிஸ் ஹெட் 51, கெமரன் க்றீன் 51, அன்ரிச் நோக்கியா 92 - 3 விக்.)

தென் ஆபிரிக்கா 2ஆவது இன்: 204 (டெம்பா பவுமா 65, கய்ல் வெரின் 33, தெயூனிஸ் டி ப்றயன் 28, சரெல் ஏர்வீ 21, நெதன் லயன் 58 - 3 விக்., ஸ்கொட் போலண்ட் 49 - 2 விக்.)

ஆட்டநாயகன்: டேவிட் வோர்னர்.

https://www.virakesari.lk/article/144415

  • nunavilan changed the title to அவுஸ்திரேலியா தென்னாபிரிக்க கிரிக்கெட் தொடர்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவாஜா அதிகபட்ச டெஸ்ட் ஓட்ட எண்ணிக்கை : ஆஸி.க்கான ப்றட்மனின் சாதனையை புதுப்பித்தார் ஸ்மித்

By DIGITAL DESK 5

05 JAN, 2023 | 03:11 PM
image

(என்.வீ.ஏ.)

டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் உஸ்மான் கவாஜா தனது அதிகபட்ச எண்ணிக்கையை பெற்றதுடன் ஸ்டீவன் ஸ்மித் 30ஆவது டெஸ்ட் சதத்தைக் குவித்து அவுஸ்திரேலியாவுக்கான  சேர் டொனல்ட் ப்றட்மினின் சாதனையைப் புதுப்பித்தார்.

இதன் பலனாக தென் ஆபிரிக்காவுக்கு எதிராக சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 3ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா பலமான நிலையை அடைந்துள்ளது.

0501_steven_smith_asu_vs_sa___2_.jpg

போட்டியின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை (05) ஆட்டம்  மழை காரணமாக   முடிவுக்கு வந்தபோது அவுஸ்திரேலியா அதன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்களை இழந்து 475 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

கவாஜா 195 ஓட்டங்களுடனும் மெட் ரென்ஷோ 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர். பெரும்பாலும் நாளைய தினமும் அவுஸ்திரேலியா தொடர்ந்து துடுப்பெடுத்தாடி கவாஜாவுக்கு இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்ய அவகாசம் வழங்கி அதன் பின்னர் இன்னிங்ஸை டிக்ளயார் செய்யும் என கருதப்படுகிறது.

முதலாம் நாள் ஆட்டம் மழை காரணமாகவும் போதிய வெளிச்சம் இன்மை காரணமாகவும் 47 ஓவர்களுடன் நிறுத்தப்பட அவுஸ்திரேலியா 2 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முதலாம் நாள் ஆட்டத்தில் கவாஜா 33ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது கவாஜா 4,000 டெஸ்ட் ஓட்டங்களைப் பூர்த்தி செய்திருந்தார்.

0501_steven_smith_asu_vs_sa___1_.jpg

போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த அவுஸ்திரேலியா சார்பாக கவாஜாவும் ஸ்மித்தும் சதங்கள் குவித்தனர். அவர்கள் இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 209 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

தொடர்ந்து ட்ரவிஸ் ஹெட்டுடன் மேலும் 112 ஓட்டங்களை 4ஆவது விக்கெட்டில் கவாஜா பகிர்ந்து அணியை மேலும் பலப்படுத்தினார்.

தனது 56ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கவாஜா, 13ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர் இன்னிங்ஸ் ஒன்றில் அதிகபட்ச ஓட்டங்களைப் பெற்றமை விசேட அம்சமாகும். இதற்கு முன்னர் அவரது அதிகபட்ச இன்னிங்ஸ் எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தது. நியூஸிலாந்துக்கு எதிராக 2015இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலேயே அவர் முந்தைய அதிகபட்ச எண்ணிக்கையைப் பெற்றிருந்தார்.

கவாஜா 368 பந்துகளை எதிர்கொண்டு 19 புவுண்டறிகளையும் ஒரு சிக்ஸையும் விளாசியிருந்தார்.

0501_khawaja_aus_vs_sa___2_.jpg

இதேவேளை, ஸ்டீவன் ஸ்மித் தனது 92ஆவது டெஸ்ட் போட்டியில் 30ஆவது சதத்தைப் பூர்த்தி செய்து 104 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இந்த சதத்துடன் சேர் டொனல்ட் ப்றட்மனின் 29 டெஸ்ட் சதங்களை ஸ்டீவன் ஸ்மித் கடந்து அவுஸ்திரேலியாவுக்கான புதிய சாதனையை நிலைநாட்டினார்.

அவர்களை விட மார்னுஸ் லபுஸ்சான் 79 ஓட்டங்களையும் ட்ரவிஸ் ஹெட் 70 ஓட்டங்களையும் பெற்றனர்.

தென் ஆபிரிக்க பந்துவீச்சில் அன்றிச் நோக்கியா 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/145061

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.