Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

My Old School - எனது பழைய பாடசாலை - திரைக்கு வரும் உண்மைக்கதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1995ல் உலகம் எங்கும் ஒரு அதிர்வலையினை உண்டாக்கினார் ஒரு ஸ்காட்லாந்துக்காரர். 

அவர் பெயர் Brian MacKinnon.

இவர் 1974 - 1980 ஆண்டு வரை ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோவ் நகரில் Bearsden Academy யில் உயர்தரம் முடித்து சிறந்த பெறுபேறுகளுடன் மருத்துவம் படிக்க பல்கலைக்கழகம் சென்றார்.

MacKinnon is pictured left as a teenager when he attended Bearsden Academy, back in the 1970

18 years

ஆனால் அங்கே இரண்டாவது வருடத்தில், இரண்டு முறை பெயிலாகி, 1983ல் வெளியேறினார். வேலை எதுவும் செய்யாமல் தாய், தந்தையுடன் வசித்து வந்தார். 30 வயதாகியது.

பின்னர் நோயாளியான தனது தந்தையினை கவனித்து வந்தார். தந்தைக்கு புற்றுநோய் என்று அறிந்ததும், அடேடே கவனமாக படித்து இருந்தால், தந்தைக்கு மருத்துவம் செய்து காத்திருக்கலாமே என்று நினைத்தார். தந்தை இறந்ததும், அதனையே ஒரு வைராக்கியமாக எடுத்து மருத்துவம் மீண்டும் செய்ய முடிவு செய்தார்.

ஆனால் அவர் செய்த காரியம், முட்டாள் தனமானதும், மோசடி மிக்கதாகவும் உலகத்தையே திடுக்கிட வைப்பதாகவும் இருந்ததுதான் வியப்பானது.

அந்நாளில் குங்பூ கலையின் பிரசித்தி பெற்று இருந்த புரூஸ் லீயின் விசிறியான பிரண்டன், அவர் போலவே தலையினை வாரிக்கொள்வார். லீயின் மகன் தீடீரென இறக்க, அவரது பெயரை தனது பெயராக வைத்துக் கொண்டு, அதே Bearsden Academy யில் 5C வகுப்பறையில், Brenden Lee  என்னும் 30 வயது Brian, ஒரு அனாதை கனேடியராக, தனது பாட்டனாரால் பிரிட்டனுக்கு கல்வி கற்க அனுப்பி வைக்கப்பட்ட ஒருவராக போலி, கனேடிய accent உடன் சேர்ந்து கொண்டார்.

Here is MacKinnon aged 30 after he changed his name to 'Brandon Lee' and went back to the school

30 years

அவரது பெரிய தவறு, அதே academy வளர்ந்தோருக்கானா வகுப்புகளையும் கொண்டிருந்தது. ஆனால் இவர், தனது பழைய வகுப்பில், 18 வயதானவராக சேர்ந்து இருந்தார்.

அவரது ஓய்வு பெற்ற  78 வயது வகுப்பு ஆசிரியை, அவர் பதிவுக்கு வந்தமையினை நினைவு கூர்ந்தார். அவர் வயதானவராக தெரிந்தார். கொஞ்சம் வெளியேயே நில், இங்கே பதிவுகளை முடித்துக்கொண்டு வருகிறேன். உனது வகுப்புக்கு அழைத்து செல்கிறேன் என்றேன். அவரோ, நான் உங்கள் வகுப்பு தான் மிஸ் என்றார். பின்னர் இன்னும் ஒரு ஆசிரியருடன் இது குறித்து பேசி, ஆச்சரிய பட்டோம். பயல் வெளிநாட்டுக்காரர், கனேடியர்... அதனால் முதிர்ச்சியாக தெரிகிறார் போலும் என்று பேசினோம் என்றார்.

இவர், மிக சிறந்த பெறுபேறுகளை பெற்று, Dundee பல்கலைக்கழகத்துக்கு மீண்டும் மருத்துவம் படிக்க நுழைந்தார்.

MacKinnon failed to study medicine first time round so went back to school to try again

Second Try: Medical Student at Dundee -

மிகுந்த மகிழ்வுடன் இருக்கும் போது, ஒரு நாள் நண்பர்களுடன் ஒரு பார்ட்டிக்கு சென்றால், அங்கே அவரது முன்னாள் அயலவர், இருந்து, Brian எப்படி இருக்கிறாய். பார்த்து கனகாலம்.... அப்பா, அம்மா போனப்புறம், என்ன பண்ணுறாய். அந்த மருத்துவ கல்லூரியில் இருந்து நீ முடிக்காமல் வெளியே வந்தது உனது தாய், தந்தைக்கு பெரிய கவலை. நீ அதை எப்படியாவது முடித்திருக்கலாம்.... சரி இப்ப என்னப்பா செய்கிறாய் என்று, அன்பாக சிலை போல அதிர்ந்து நின்ற Brenden இடம் கேட்க, சுதாகரித்துக் கொண்டே... யாரு நீங்கள் என்று போட..... அவ்வளவுதான்.

உலகமெல்லாம் அவரது செய்தி சக்கை போடு போட்டது.

Dundee பல்கலைக்கழக chancellor, நேர்மையீனம் காரணமா அவரை பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியே அனுப்புவதாக அறிவித்தார். 

அத்துடன் அவரது மருத்துவ கனவும் இரண்டாவது முறையாக கலைந்து போனது. 😥

அவரது கதையே My Old School என்ற பெயரில் படமாக வருகிறது.

58 வயதாகும், வேலை இல்லாத Brian ஸ்காட்லாந்தில் ஒரு அபார்ட்மெண்டில் தனியாக வசிக்கிறார். நிருபர்கள் அவரை தேடிப்பிடித்து படம் குறித்து கேட்ட போது, அது குறித்து எனக்கு எதுவுமே தெரியாது என்று சொல்லி விட்டார் அவர்.

இவர் மீது எதுவித சட்ட நடவடிக்கையும் எடுக்க படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Pictured as he is today, this is Brian MacKinnon, known as Scotland's biggest imposter after he returned to his old school 15 years after he left to re-take his exams and study medicine

As of today: 58 years old Doctor Brain

MacKinnon, seen this week doing his shopping near his first-floor flat in Glasgow, now lives as a recluse and barely speaks to his neighbours, who are mostly unaware of his notoriety

https://www.dailymail.co.uk/news/article-10443539/The-boy-went-old-school-aged-THIRTY.html

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணைப்புக்கும் மொழிபெயர்ப்புக்கும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.