Jump to content

யாழ்.பொற்பதியில் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

யாழ்.பொற்பதியில் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு.

யாழ்ப்பாணம் கொக்குவில் – பொற்பதி வீதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் யாழ் நீதவான் நீதிமன்ற பதிவாளர் சுந்தரமூர்த்தி பிருந்தாவின் தலைமையில் கோப்பாய் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஆரிய பந்து வெதகெர, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் யருள், ஆகியோரின் மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின.

இதன்போது பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமையவே இன்றைய தினம் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நான்கு இடங்களில் அகழ்வு மேற்கொள்ளப்பட்டபோதும் எதுவித ஆயுதங்களும் மீட்கப்படவில்லை.
அகழ்வுப் பணிகள் இடம்பெறும் இடத்திற்கு அருகிலேயே விடுதலைப்புலிகளினுடைய பிரதித் தலைவராக இருந்த மாத்தையாவினுடைய முகாம், மற்றும் விடுதலைப் புலிகளினுடைய சட்ட, மருத்துவக் கல்லூரியும் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவக் காலகட்ட ஆயுதங்களாக இருக்குமோ ? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதங்கள் கிடைக்காத நிலையில் அகழ்வுப் பணி கைவிடப்பட்டது!

ஆயுதங்கள் கிடைக்காத நிலையில் அகழ்வுப் பணி கைவிடப்பட்டது!

யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோதும் எதுவித ஆயுதங்களும் கிடைக்காத நிலையில் அகழ்வுப் பணி கைவிடப்பட்டது.

யாழ்ப்பாணம் கொக்குவில் – பொற்பதி வீதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இன்று(திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற பதிவாளர் தலைமையில் கோப்பாய் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஆரிய பந்து வெதகெர, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் யருள், ஆகியோரின் மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின.

இதன்போது பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நான்கு இடங்களில் அகழ்வு மேற்கொள்ளப்பட்டபோதும் எதுவித ஆயுதங்களும் மீட்கப்படவில்லை.

அகழ்வுப் பணிகள் இடம்பெறும் இடத்திற்கு அருகிலேயே விடுதலைப்புலிகளினுடைய பிரதித் தலைவராக இருந்த மாத்தையாவினுடைய முகாம், மற்றும் விடுதலைப் புலிகளினுடைய சட்ட, மருத்துவக் கல்லூரியும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG-20230109-WA0034-1.jpg

IMG-20230109-WA0030.jpg

IMG-20230109-WA0032.jpg

IMG-20230109-WA0033.jpg

https://athavannews.com/2023/1319471

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணிக்காரன் செலவில்லாமல் மலசலகூட குழி கிண்டி எடுத்திட்டான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

காணிக்காரன் செலவில்லாமல் மலசலகூட குழி கிண்டி எடுத்திட்டான்.

சில மாதங்களுக்கு முன் இருபாலையிலும் பெரும் எடுப்பில்,
கொழும்பில் இருந்து, விசேட கனரக வாகனங்களுடன் பல பேர் வந்து
இரண்டு நாட்களாக தோண்டிய பின், வெறுங்கையுடன் சென்றவர்கள்.
இவர்கள் இதற்கு செய்யும் உழைப்பையும், செலவையும், ஆட் பலத்தையும்…
ஏதாவது பிரயோசனமான வழியில் செலவழித்தால், நாடு சிங்கப்பூராகி  விடும். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, தமிழ் சிறி said:

சில மாதங்களுக்கு முன் இருபாலையிலும் பெரும் எடுப்பில்,
கொழும்பில் இருந்து, விசேட கனரக வாகனங்களுடன் பல பேர் வந்து
இரண்டு நாட்களாக தோண்டிய பின், வெறுங்கையுடன் சென்றவர்கள்.
இவர்கள் இதற்கு செய்யும் உழைப்பையும், செலவையும், ஆட் பலத்தையும்…
ஏதாவது பிரயோசனமான வழியில் செலவழித்தால், நாடு சிங்கப்பூராகி  விடும். 🙂

அட்லீஸ்ட் உக்ரேனில் போய் பங்கராவது வெட்டி கொடுக்கலாம் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

அட்லீஸ்ட் உக்ரேனில் போய் பங்கராவது வெட்டி கொடுக்கலாம் 🤣

இவர்கள்…. ஒராள் வேலை செய்ய, பத்துப் பேர்
இடுப்பில் கை வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டு நிற்கிற ஆட்கள்.
நல்லாய் வெட்டினாங்கள்… “பங்கர்” 😂

  • Haha 2
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.