Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அங்குரார்ப்பண ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் இ20 உலகக் கிண்ணம் நாளை ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அங்குரார்ப்பண ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் இ20 உலகக் கிண்ணம் நாளை ஆரம்பம்

By VISHNU

13 JAN, 2023 | 01:44 PM
image

(நெவில் அன்தனி)

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டின் அங்குரார்ப்பண அத்தியாயம் தென் ஆபிரிக்காவில் 14ஆம் திகதி சனிக்கிழமை  ஆரம்பமாகவுள்ளது.

all_captains_u19_t20wc.jpg

16 அணிகள் பங்குபற்றும் அங்குரார்ப்பண 19 வயதுக்குட்பட்ட இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் மொத்தம் 41 போட்டிகள் நடைபெறவுள்ளன.

u19_womens_t20_wc_groupings.jpg

இந்த 16 அணிகளும் 4 குழுக்களாக வகுக்கப்பட்டு முதல் சுற்று லீக் போட்டிகள் நடத்தப்படும்.

ஏ குழுவில் அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இலங்கை, ஐக்கிய அமெரிக்கா ஆகிய அணிகளும் பி குழுவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், ருவண்டா, ஸிம்பாப்வே ஆகிய அணிகளும் சி குழுவில் இந்தோனேசியா, அயர்லாந்து, நியூஸிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளும் டி குழுவில் இந்தியா, ஸ்கொட்லாந்து, தென் ஆபிரிக்கா, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகளும் பங்குபற்றுகின்றன.

ஒவ்வொரு குழுவிலும் முதல் 3 இடங்களைப் பெறும் அணிகள் 2ஆம் சுற்றான சுப்பர் 6 சுற்றில் இரண்டு குழுக்களாக போட்டியிடும். 4ஆம் இடங்களைப் பெறும் 4 அணிகள் நிரல்படுத்தலுக்கான சுற்றில் விளையாடும்.

முதல் சுற்றுப் போட்டிகள் ஜனவரி 14ஆம் திகதியிலிருந்து 19ஆம் திகதிவரை நடைபெறும். நிரல் படுத்தல் போட்டிகள் ஜனவரி 20ஆம் திகதி நடைபெறும்.

ஏ மற்றும் டி குழுக்களிலில் முதல் 3 இடங்களைப் பெறும் அணிகள் ஓரு குழுவிலும் பி மற்றும் சி குழுக்களில் முதல் 3 இடங்களைப் பெறும் அணிகள் மற்றொரு குழுவிலும் சுப்பர் 6 சுற்றில் மற்றொரு லீக் அடிப்படையில் மோதும்.

சுப்பர் 6 போட்டிகள் ஜனவரி 21ஆம் திகதியிலிருந்து 25ஆம் திகதிவரை நடைபெறும்.

சுப்பர் 6 சுற்றில் 2 குழுக்களிலும் முதல் 2 இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிகளில் விளையாடி அவற்றில் வெற்றிபெறும் அணிகள் 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபது 20 உலகக் கிண்ண சம்பியனைத் தீர்மானிக்கும் மாபெரும் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும்.

அரை இறுதிப் போட்டிகள் ஜனவரி 27ஆம் திகதி நடைபெறுவதுடன் 28ஆம் திகதி இருப்பு நாளாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இறுதிப் போட்டி ஜனவரி 29ஆம் திகதி நடைபெறும். இருப்பு நாளாக 30ஆம் திகதி ஒதுக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/145713

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ICC U19 Women T20WC: பங்களாதேஷிடம் இலங்கை தோல்வி; விஷ்மி, தெவ்மி ஆகியோரின் அரைச் சதங்கள் வீண்

By VISHNU

17 JAN, 2023 | 10:59 AM
image

(என்.வீ.ஏ.)

பங்களாதேஷுக்கு எதிராக பெனோனி விலோமுவர் பார்க் பி விளையாட்டரங்கில் இன்று (17) திங்கட்கிழமை நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபது 20 உலகக் கிண்ண  (ICC U19 Women T20WC)  ஏ குழு போட்டியில் பங்களாதேஷிடம் 10 ஓட்டங்களால் இலங்கை தோல்வி அடைந்தது.

002.gif

இலங்கை சார்பாக அணித் தலைவி விஷ்மி குணரட்னவும் தெவ்மி விஹங்காவும் அரைச் சதங்கள் குவித்த போதிலும் அவர்களால் இலங்கையின் தோல்வியைத் தவிர்க்க முடியாமல் போனது.

00.gif

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 20 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 165 ஓட்டங்களைக் குவித்தது.

03.gif

ஆபியா ப்ரொட்டாஷா, மிஸ்டி ஷஹா ஆகிய இருவரும் 75 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், இருவரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர்.

ஆபியா 43 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 53 ஓட்டங்களைக் குவித்தார். மிஸ்டி 14 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து டிலாரா அக்தர், ஷொர்ணா அக்தர் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 51 பந்துகளில் 86 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுத்தனர்.

அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஷொர்ணா அக்தார் 28 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களைக் குவித்தார். அவர் 23 பந்துகளில் ஒற்றைகள், இரட்டைகள் பெற்ற விதம் எதிர்காலத்தில் ஒரு சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக மிளிரக்கூடியவர் என்பதை எடுத்துக்காட்டியது.

டிலாரா அக்தார் 27 பந்துகளில் 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

இலங்கை பந்துவீச்சில் ரஷ்மி நேத்ராஞ்சலி 30 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

166 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

நெத்மி சேனாரத்ன (0), சுமுது நிசன்சலா (3) ஆகிய இருவரும் ஆட்டமிழந்ததால் இலங்கை பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டது.

எனினும், விஷ்மி குணரட்ன, தெவ்மி விஹங்கா ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில்  பெறுமதிமிக்க   96 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கைக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர். தெவ்மி விஹங்கா 44 பந்துகளில் 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 55 ஓட்டங்களைக் குவித்தார்.

கடைசி 20 பந்துகளில் இலங்கையின் வெற்றிக்கு மேலும் 26 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஆனால், வெற்றி இலக்கை 10 ஓட்டங்களால் அடைய இலங்கை தவறியது.

மனுதி நாணயக்கார 4 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

திறமையாகத் துடுப்பெடுத்தாடிய விஷ்மி குணரட்ன 54 பந்துகளில் 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 60 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். துலங்கா திசாநாயக்க ஆட்டமிழக்காமல் 14 ஓட்டங்களைப் பெற்றார்.

பங்களாதேஷ் பந்துவீச்சில் மறூபா அக்தர் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஏ குழுவுக்கான கடைசிப் போட்டியில் பங்களாதேஷிடம் ஐக்கிய அமெரிக்கா தோல்வி அடைந்தால் இலங்கை 2ஆம் சுற்றில் விளையாட தகுதிபெறும். இலங்கை தனது கடைசிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை எதிர்த்தாடவுள்ளது.

https://www.virakesari.lk/article/145958

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

U19 மகளிர் உலகக் கிண்ண போட்டியில் முதலாவது ஹெட்ரிக் சாதனை

By SETHU

17 JAN, 2023 | 04:42 PM
image

19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபது20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில், ஸ்கொட்லாந்துடனான போட்டியில் தென் ஆபிரிக்க வீராங்கனை மெடிசன் லண்ட்ஸ்மன் ஹெட்ரிக் விக்கெட்களை வீழ்த்தினார். 

19 வயதின் கீழ் உலகக் கிண்ணப் போட்டியில், ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்தப்பட்டமை இதுவே முதல் தடவையாகும். 

18 வயதான மெடிசன் லண்ட்ஸ்மன் சுழற்பந்துவீச்சாளர் ஆவார். 

Madison-Landsman-2.jpg

Madison-Landsman-1.jpg

Madison-Landsman-1.jpg

தென் ஆபிரிக்காவின் பெனோனி நகரில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் தனது 3 ஆவது ஓவரில் ஸ்கொட்லாந்து வீராங்கனைகள் மரியம் பைஸால், நியாம் முய்ர், ஓர்லா மொன்ட்கோமரி ஆகியோரை மெடிசன் லண்ட்ஸ்மன் ஆட்டமிழக்கச் செய்தார். 

இப்போட்டியில் தென் ஆபிரிக்க அணி  7 விக்கெட் இழப்புக்கு 112 ஓட்டங்களைப் பெற்றது. 

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 17 ஓவர்களில் 68 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.

மெடிசன் லண்ட்ஸ்மன் 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

https://www.virakesari.lk/article/145993

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹென்றியெட் 4 பந்துகளில் 4 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை : ருவண்டாவுக்கு முதலாவது உலகக் கிண்ண வெற்றி

By NANTHINI

18 JAN, 2023 | 09:52 AM
image

(என்.வீ.ஏ.)

தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவரும் ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ருவண்டா வீராங்கனை ஹென்றியெட் இஷிம்வே 4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார்.

அவரது பந்துவீச்சின் உதவியுடன் ஸிம்பாப்வேயை 39 ஓட்டங்களால் ரூவண்டா வெற்றிகொண்டது.

இதன் மூலம் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியொன்றில் ருவாண்டா முதலாவது வெற்றியை ஈட்டி வரலாறு படைத்துள்ளது.

யோர்க்கர் பந்துகளின் மூலமே அடுத்தடுத்த 4 விக்கெட்களை வீழ்த்தியதாகவும் யோர்க்கர் பந்துகளை வீசுவதற்கென விசேட பயிற்சிகளில் ஈடுபட்டதாகவும் போட்டியின் பின்னர் ஹென்றியெட் இஷிம்வே தெரிவித்தார்.

120 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 18ஆவது ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 80 ஓட்டங்களை பெற்றிருந்தது. 

தொடர்ந்து 19ஆவது ஓவரை வீசிய   ஹென்றியெட் முதல் 4 பந்துகளில் தொடர்ச்சியாக விக்கெட்களை வீழ்த்தி ருவண்டாவின் வெற்றியை உறுதி செய்தார்.

முதல் பந்தில் குட்ஸாய் சிகோராவை போல்ட் ஆக்கிய ஹென்றியெட் இஷிம்வே, அடுத்த பந்தில் ஒலிண்டர் சாரேயை எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். 

அதனைத் தொடர்ந்து அடுத்து 2 பந்துகளில் சிப்போ மோயோ, ஃபெய்த் நிடிலாலம்பி ஆகிய இருவரினதும் விக்கெட்களை நேரடியாக பதம் பார்த்தார்.

rwanda_team_makes_history.jpg

மேலும், தொடர்ச்சியான 2 ஓவர்களில் 6 பந்துகளில் ஸிம்பாப்வேயின் 5 விக்கெட்கள் கைப்பற்றப்பட்டமை மற்றொரு விசேட அம்சமாகும். 

18ஆவது ஓவரின் 5ஆவது பந்திலும் 19ஆவது ஓவரின் முதல் 4 பந்துகளிலுமே 5 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன.

அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ருவண்டா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து, 119 ஓட்டங்களை பெற்றது. 

முதல் 3 துடுப்பாட்ட வீராங்கனைகளான மெர்வில் உவாஸ் (18), சின்தியா டுயிஸியர் (30), அணித் தலைவி ஜிசெல் இஷிம்வே (34) ஆகியோரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளை பெற்றனர்.

ஸிம்பாப்வே பந்துவீச்சில் சிப்போ மோயோ 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும், குட்ஸாய் சிகோரா 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 18.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 80 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் நட்டாஷா மிட்டொம்பே, கெலி நிடிராயா ஆகிய இருவரும் தலா 20 ஓட்டங்களை பெற்றனர்.

ருவண்டா பந்துவீச்சில் ஹென்றியெட் இஷிம்வே 3.4 ஓவர்களில் 13 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/146061

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்க அரங்கில் தமிழ் மொழியை ஒலிக்கச் செய்த தமிழக வீராங்கனைகள்

By DIGITAL DESK 5

19 JAN, 2023 | 02:32 PM
image

(என்.வீ.ஏ.)

தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவரும் ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின்போது விளையாட்டரங்கினுள் வீராங்கனைகளிடையே இனிய தமிழ் மொழி பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சிய அணியில் இடம்பெறும் 3 தமிழக வீராங்கனைகள் மத்தியிலேயே தமிழ் மொழியில் ஆலோசனைகள் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளன.

ஐக்கிய அரபு இராச்சிய அணியின் தலைவியும் விக்கெட்காப்பாளருமான தீர்த்தா சதிஷ், வேகபந்துவீச்சாளர் இந்துஜா நந்தகுமார், சுழல்பந்துவீச்சாளர் வைஷ்ணவி மகேஷ் ஆகிய மூவரும் தமிழகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள்.

தங்களது தாய்நாடான இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியின்போது இந்த மூவரும் அடிக்கடி தமிழ் மொழியில் கலந்துரையாடியவாறு விளையாடியமை விசேட அம்சமாகும்.

theertha_vs_scotland.png

'பரவாலே, நல்லா போட்ற, அப்டியே தான் போயிண்டுரு. வைஷு பின்னாடியிருந்து கொண்டுவா, இந்து கொஞ்சம் மாறி போட்ரு, வரும், வரும்' போன்ற வசனங்களை விக்கெட்டுக்கு பின்னாலிருந்து தீர்த்தா உச்சரிப்பதைக் கேட்கக்கூடியதாக இருந்ததாக செய்தி ஒன்று கூறுகிறது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் குழாத்தில் இடம்பெறும் அனைவருமே இந்திய வம்சாவழி வீராங்கனைகளாவர். குழாத்தில் இடம்பெறும் 15 பேரில் 11 பேர் தமிழ் மொழியில் பரிச்சயம் பெற்றவர்களாம்.

'இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது படபடப்பை ஏற்படுத்துகிறது. பலம் வாய்ந்த அணிகளை எதிர்த்தாடுவதை நாங்கள் விரும்புகிறோம். அவ்வாறான அணிகளை எதிர்கொள்வதற்கு இந்த களம் தான் வாய்ப்பளிக்கிறது. 

இத்தகைய தரம் வாய்ந்த கிரிக்கெட் போட்டிகளில் நாங்கள் தொடர்ந்து விளையாடுவது அபூர்வம். டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுடன் நாங்கள் விளையாடினால், எங்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்கப்பட்டால் நல்ல நிலையை எங்களால் அடைய முடியும். 

theertha_and_shafali.png

ஷஃபாலி (வர்மா), ரிச்சா (கோஷ்) ஆகியோர் விளையாடுவதை பார்ப்பதே ஒரு சிறந்த அனுபவமாகும்' என தோனியின் பரம இரசிகையும் அவரைப் பின்பற்றுபவருமான தீர்த்தா தெரிவித்தார்.

தமிழ் சினிமாவில் 2018இல் வெளிவந்த விவசாயி ஒருவரின் மகள் சர்வதேச கிரிக்கெட் வீராங்கனையாவதற்கு முயற்சிப்பதை சித்தரிக்கும் கண்ணா திரைப்படத்தைப் பார்த்த பின்னரே தீர்த்தா சதிஷுக்கு கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஆர்வம் பிறந்ததாம்.

https://www.virakesari.lk/article/146205

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபது 20 உலகக் கிண்ணம் : இந்தியாவிடம் இலங்கை படுதோல்வி

By DIGITAL DESK 5

23 JAN, 2023 | 11:55 AM
image

(என்.வீ.ஏ.)

தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவரும் அங்குரார்ப்பண ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிச் சுற்றில் விளையாடும் இலங்கையின் வாய்ப்பு சந்தேகத்திற்கிடமாக உள்ளது.

முதல் சுற்றில் ஏ குழுவில் இடம்பெற்ற இலங்கை, அங்கு ஐக்கிய அமெரிக்காவை வெற்றிகொண்டதன் மூலம் சுப்பர் 6 சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

1458445419.jpg

ஆனால், குழு 1க்கான சுப்பர் சிக்ஸ் சுற்றில் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்த இலங்கை, இறுதிச் சுற்றுக்கு முன்னேறுமா என்பது சந்தேகத்திற்கிடமாக உள்ளது.

தென் ஆபிரிக்காவின் பொச்செஸ்ட்ரூம் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்களால் இலங்கை தோல்வி அடைந்தது.

1458461567.jpg

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 59 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

1458464595.jpg

அணித் தலைவி விஷ்மி குணரட்ன மாத்திரமே திறமையாகத் துடுப்பெடுத்தாடி 25 ஓட்டங்களைப் பெற்றார். அவருக்கு அடுத்ததாக உமாயா ரத்நாயக்க 13 ஓட்டங்களை அதிகப்பட்சமாக பெற்றார்.

Dewmi Vihanga dismissed Shafali Verma and Richa Ghosh in the space of three balls, India vs Sri Lanka, U19 Women's T20 World Cup, Potchefstroom, January 22, 2023

இந்திய பந்துவீச்சில் பார்ஷவி சொப்ரா ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 5 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மன்னாத் காஷியப் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

1458464595.jpg

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 7.2 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 60 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது.

1458475998.jpg

துடுப்பாட்டத்தில் சௌமியா திவாரி ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களையும் அணித் தலைவி ஷஃபாலி வர்மா 15 ஓட்டங்களையும் ஷ்வெட்டா செஹ்ராவத் 13 ஓட்டங்களையும் பெற்றனர்.

1458477228.jpg

இலங்கை பந்துவீச்சில் தெவ்மி விஹங்கா 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/146470

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்காவுடனான பரபரப்பான போட்டியில் 2 ஓட்டங்களால் வெற்றியை தவறவிட்ட இலங்கை

By NANTHINI

25 JAN, 2023 | 11:00 AM
image

(என்.வீ.ஏ.)

தென் ஆபிரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் பொச்சேஸ்ட்ரூம் நோர்த் வெஸ்ட் பல்கலைக்கழக மைதானம் 1 இல் நேற்று செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற மிகவும் பரபரப்பான ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபது 20 சுப்பர் 6 குழு 1 போட்டியில் 2 ஓட்டங்களால் வெற்றியை இலங்கை தவறவிட்டது.

போட்டியின் கடைசி ஓவரில் இலங்கையின் வெற்றிக்கு 11 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன் 4 விக்கெட்கள் மீதமிருந்தன.

ஆனால், கடைசி ஓவரின் 4ஆம், 5ஆம் பந்துகளில் 2 விக்கெட்களை அநாவசியமாக இழந்ததால் இலங்கைக்கு கிடைக்கவிருந்த வரலாற்று வெற்றி நழுவிப் போயிற்று. அத்துடன் இறுதிச் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பையும் இலங்கை இழந்தது.

1459068571.jpg

தென் ஆபிரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட 134 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களை பெற்று ஒரு ஓட்டத்தால் தோல்வி அடைந்தது.

முன்வரிசை துடுப்பாட்ட வீராங்கனைகள் நிறைய பந்துகளில் ஓட்டம் பெறத் தவறியதே இலங்கையின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. 

4ஆம் இலக்க வீராங்கனை தெவ்மி விஹங்கா 23 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸ்களுடன் அதிரடியாக 37 ஓட்டங்களைக் குவித்து இலங்கைக்கு உற்சாகம் ஊட்டினார். ஆனால், அளவுக்கு அதிகமாக ஆக்ரோஷத்தை  வெளிப்படுத்த முயற்சித்து, மொத்த எண்ணிக்கை 106 ஓட்டங்களாக இருந்தபோது 4ஆவதாக ஆட்டமிழந்து அணிக்கு நெருக்கடியை கொடுத்தது.

முன்வரிசையில் நெத்மி செனாரத்ன 36 ஓட்டங்களையும் அணித் தலைவி விஷ்மி குணரட்ன 12 ஓட்டங்களையும் மத்திய வரிசையில் மனூதி நாணயக்கார 17 ஓட்டங்களையும் பெற்றனர்.

1459065795.jpg

தென் ஆபிரிக்க பந்துவீச்சில் கேலா ரினேக் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த தென் ஆபிரிக்கா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களை பெற்றது.

இதில் கேலா ரினேக் 43 ஓட்டங்களையும், ஜென்னா இவேன்ஸ் 22 ஓட்டங்களையும், மெடிசன் லேண்ட்ஸ்மன் 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை பந்துவீச்சில் விதுஷிக்கா பெரேரா 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தெவ்மி விஹங்கா 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

1459058604.jpg

1459058655.jpg

1459068572.jpg

1459081328.jpg

1459072321.jpg

1459089535.jpg

1459103071.jpg

1459057778.jpg

https://www.virakesari.lk/article/146635

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா

இங்லாந்

அவுஸ்ரேலியா

 

இந்த‌ மூன்று ம‌க‌ளிர் அணிய‌ த‌விற‌ ம‌ற்ற‌வை ப‌ல‌ம் இல்லாத‌ அணிக‌ள் 

 

அமெரிக்கா ம‌க‌ளிர் அணி க‌ல‌ந்து கொண்ட‌து ம‌கிழ்ச்சி மெல் மேலும் வ‌ள‌ர‌ட்டும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவை வெற்றிகொண்ட இங்கிலாந்து இறுதிப் போட்டியில் இந்தியாவை சந்திக்க தகுதி

27 JAN, 2023 | 09:58 PM
image

(நெவில் அன்தனி )

தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவரும் அங்குரார்ப்பண ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்த்தாட இங்கிலாந்து தகுதிபெற்றுக்கொண்டது.

பொச்சேவ்ஸ்ட்ரூம் ஜே. பி. பார்க் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (27) மிகவும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது அரை இறுதிப் போட்டியில் 3 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றிபெற்றதன் மூலம் இறுதிப் போட்டியில் விளையாட தகதிபெற்றது.

2701_Grace_Scrivens_of_England_vs_aus.jp

மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்ட அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 99 ஓட்டங்களைப் பெற்றது.

இங்கிலாந்து சார்பாக மூவர் மாத்திரமே 15 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்ளைப் பெற்றனர்.

ஆரம்ப வீராங்கனை அணித் தலைவி க்றேஸ் ஸ்க்ரிவென்ஸ் 20 ஓட்டங்களையும் மத்திய வரிசை வீராங்கனை அலெக்சா ஸ்டோன்ஹவுஸ் 25 ஓட்டங்களையும் ஜொசி க்ரோவ்ஸ் 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

உதிரிகளாக 17 ஓட்டங்கள் கிடைத்தது.

2701_Ella_Hayward_of_Australia_bats_ICC_

பந்துவீச்சில் சியன்னா ஜிஞ்சர் 13   ஓட்டங்களுக்கு   3 விக்கெட்களையும் மெகி க்ளார்க் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் எலா ஹேவோர்ட் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

100 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 18.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 96 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இங்கிலாந்தைப் போன்று அவுஸ்திரேலிய துடுப்பாட்டத்திலும் மூவர் மாத்திரமே 15 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

மத்திய வரிசை வீராங்கனைகளான க்ளயார் முவர் 20 ஓட்டங்களையும் எலா  ஹேவோர்ட்  ஓட்டங்களையும் அமி ஸ்மித் 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

இங்கிலாந்து பந்துவீச்சில் ஹன்னா பேக்கர் 4 ஓவர்களில் 10 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்களையும் க்றேஸ் ஸ்க்ரிவென்ஸ் 3.5 ஓவர்களில் 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அங்குரார்ப்பண ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதலாவது சம்பியனைத் தீர்மானிக்கும் இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இறுதிப் போட்டி பொச்சேவ்ஸ்ட்ரூம் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெறவுள்ளது.

https://www.virakesari.lk/article/146866

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

19 வயதின்கீழ் மகளிர் இருபது20 உலகக் கிண்ண இறுதிப் போட்டி இன்று: இந்தியா - இங்கிலாந்து மோதல்  

By SETHU

29 JAN, 2023 | 12:36 PM
image

19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான ஐசிசி இருபது20 கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தியா, இங்கிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதவுள்ளன. 

முதல் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டி தென் ஆபிரிக்காவில் நடைபெறுகிறது. 

16 அணிகள் பங்குபற்றி இச்சுற்றுப்போட்டியின் அரை இறுதிப் போட்டிகள் நேற்றுமுன்தினம் நடைபெற்றன. 

முதலாவது அரை இறுதிப் போட்டியில் நியூ ஸிலாந்தை இந்தியா 8 விக்கெட்களால் வென்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூ ஸிலாந்து, 9 விக்கெட் இழப்புக்கு 107 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 14.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 110 ஓட்டங்களைப் பெற்றது.

இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை இங்கிலாந்து 3 ஓட்டங்களால் வென்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 19.5 ஓவர்களில் 99 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. 

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 18.4 ஓவர்களில் 96 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.

இந்தியா, நியூ ஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி பொச்சேவ்ஸ்ட்ரூம் நகரில் இலங்கை, இந்திய நேரப்படி மாலை 5.15 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

பெண் மத்தியஸ்தர்கள்

இந்த இறுதிப் போட்டிக்கு முற்றிலும் பெண்களைக் கொண்ட மத்தியஸ்தர்கள் குழாமை ஐசிசி அறிவித்துள்ளது. போட்டியின் பொது மத்தியஸ்தராக இலங்கையரனா வனேசா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். 

கள மத்தியஸ்தர்களாக மேற்கிந்தியத் தீவுகளின் கென்டேஸ் லா போர்ட், ஸிம்பாப்வேயின் சாரா தம்பனேவானா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

தொலைக்காட்சி மத்தியஸ்தராக இலங்கையின் தெதுனு டி சி;வாவும், 4 ஆவது மத்தியஸ்தராக அவுஸ்திரேலியாவின் லிசா மெக்கேய்ப்பும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/146958

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை: இங்கிலாந்து அணியை சிதறடித்த இந்திய பந்துவீச்சு

ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

26 நிமிடங்களுக்கு முன்னர்

தென்னாப்ரிக்காவில் நடைபெறும் முதலாவது ஜூனியர் பெண்கள் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டி, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வருகிறது.

பெண்களுக்கான ஜூனியர் டி20 உலகக் கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் கடந்த ஜனவரி 14ஆம் தேதி தொடங்கியது. லீக் சுற்று ஆட்டங்களில் 3 வெற்றி, சூப்பர் சிக்ஸ் பிரிவில் 2 வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஆனால், இங்கிலாந்து அணியோ, ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல், அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஒப்பிட்டளவில் இரு அணிகளும் சம பலம் வாய்ந்தவை என்பதால், இன்றைய இறுதிப் போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தென்னாப்ரிக்காவின் போர்செப்ஸ்ட்ரூமில் இன்று நடைபெற்றுவரும் இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி

இங்கிலாந்தின் கிரேஸ் ஸ்க்ரீவன்ஸ் - லிபெர்டி ஹிப் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் தித்தாஸ் சாது  4வது பந்திலேயே லிபெர்டி ஹிப்பை ஆட்டமிழக்க செய்தார். 

 

இதையடுத்து, ஸ்க்ரீவன்ஸ் உடன் இணைந்த ஹோலண்ட் 2 பவுண்டரிகளை அடித்து அணியின் ஸ்கோர் தேக்கமடையாமல் பார்த்துகொண்டார். இந்த ஜோடியை அர்ச்சனா தேவி பிரித்தார். அவர் வீசிய பந்தை ரிவர்ஸ்கிப்பில் ஆட முயற்சித்த ஹோலண்ட் போல்ட் ஆகி வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 3.3 ஓவர்களுக்கு 15 ஆக இருந்தது. 

அதே ஓவரின் கடைசி பந்தில் இங்கிலாந்தின் நட்சத்திர ஆட்டக்காரர் கிரேஸ் ஸ்க்ரீவன்ஸும் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் 289 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் சுவேதா செராவத்க்கு ((292) அடுத்த இடத்தில் ஸ்க்ரீவன்ஸ் இருந்தார். கடைசி 5 ஆட்டங்களில் அவர் 4 ஆட்டங்களில் அரை சதம் அடித்திருந்த நிலையில், இந்த போட்டியில் 4 ரன்களிலேயே அவர் வெளியேறியது இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

 

அர்ச்சனா தேவி பிடித்த அசத்தலான கேட்ச்

ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

அடுத்து வந்த செரன் ஸ்மேல் 4 ரன்களின் தித்தாஸ் சாது பந்தில் ஃபோல்ட் ஆகி வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 6.2 ஓவர்களில் 22 ஆக இருந்தது. இங்கிலாந்து தரப்பில் மெக்டொனால்ட் கே மட்டுமே இந்திய அணியில் பந்துவீச்சை ஓரளவு சமாளித்து ஆடினார். மற்றவர்கள் ஒருசில பந்துகளிலேயே ஆட்டமிழந்து வெளியேறினர்.  பார்ஷவி சோப்ரா வீசிய 10வது ஓவரின் கடைசி பந்தில் சாரிஸ் பாவ்லி (2 ரன்கள்) எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். 

பார்ஷவி சோப்ரா வீசிய 12வது ஓவரின் முதல் பந்தை மெக்டோனால்ட் கே அடித்து ஆட முயன்றபோது பந்து மேலே எழும்பியது. அப்போது, அர்ச்சனா தேவி பாய்ந்துவந்து ஒற்றை கையால் பந்தை கேட்ச் பிடித்தது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இதை தொடர்ந்து மெக்டோனால்ட் கேவும்(19 ரன்கள்) வெளியேறினார். 

அடுத்த வந்த ஜோசி க்ரூவ்ஸ் சௌமியா திவாரி மூலம் ரன் அவுட் செய்யப்பட்டும், ஹன்னா பேக்கர் ஸ்டம்பிங் செய்யப்பட்டும் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களை இழந்த இங்கிலாந்து அணி 68 ரன்களை மட்டுமே எடுத்தது.

தித்தாஸ் சாது, அர்ச்சனா தேவி, பார்ஷவி சோப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஒருசில கேட்ச்களை விட்டதை தவிர்த்து பார்க்கும்போது இந்திய அணியின் ஃபீல்டிங்கும் பந்துவீச்சும் சிறப்பாக இந்த ஆட்டத்தில் வெளிப்பட்டது. 

இதையடுத்து 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது. 

https://www.bbc.com/tamil/articles/cx838v1velpo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

U19 மகளிர் உலகக்கோப்பையை வென்றது இந்திய அணி

May be an image of 5 people, people standing and text that says "SONAN 42 15 U19 மகளிர் உலகக்கோப்பையை வென்றது இந்திய அணி. தென் ஆப்ரிக்காவின் சென்வெஸ் பார்க் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 7விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி அபாரம். BBC NEWS தமிழ்"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நனவானது இந்தியக் கிரிக்கெட் பெண்களின் 'கனா' - U19 டி20 உலகக் கோப்பையில் சாம்பியன்

U19

29 ஜனவரி 2023, 13:33 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

19 வயதுக்கு உள்பட்டோருக்கான முதலாவது பெண்கள் உலகக் கோப்பையை இந்தியா வென்றிருக்கிறது.  இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. 

டைட்டஸ் சாது உள்ளிட்ட இந்தியப் பந்துவீச்சாளர்களும் த்ரிஷா உள்ளிட்ட பேட்டர்களும் சிறப்பாக ஆடி இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்தார்கள். 

பந்துவீச்சாளர் டைட்டஸ் சாது ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டார்.

காத்திருந்த தருணம் வந்துவிட்டது, இனி வருங்காலம் நமக்குத்தான் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் நூஷுன் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தார்.

 

இந்தியப் பந்துவீச்சில் திணறிய இங்கிலாந்து வீீராங்கனைகள், குறுகிய இடைவெளியில் ஆட்டமிழந்தார்கள்.

20 ஓவர் கொண்ட போட்டியில் 18-ஆவது ஓவரிலேயே இங்கிலாந்து அணி 68 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

பின்னர் இந்திய அணி சார்பில் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணி, தொடக்கத்திலேயே ஸ்வேதாவின் விக்கெட்டை பறிகொடுத்தது. எநினும் ஷபாலி வர்மா, சௌம்யா, த்ரிஷா ஆகியோர் கணிசமாக ரன்களைச் சேகரித்து இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.

69 ரன்கள் என்ற இலக்கை எட்ட இந்திய அணிக்கு 13.5 ஓவர்களே தேவைப்பட்டன.

சீனியர் அணியில் இடம்பெற்றிருக்கும் கேப்டன் ஷபாலி வர்மா அடித்த சிக்சர்தான் இந்தப் போட்டியில் அடிக்கப்பட்ட ஒரே சிக்சர்.

த்ரிஷா 3 பவுண்டரிகளுடன் 24 ரன்களை சேர்த்தார். 

4 ஓவர்களில் வெறும் 6 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, இங்கிலாந்து அணியைத் தடுமாறச் செய்த டைட்ஸ் சாது சிறந்த வீராங்கனை விருது கிடைத்தது.

பெண்களுக்கான ஜூனியர் டி20 உலகக் கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் கடந்த ஜனவரி 14ஆம் தேதி தொடங்கியது. லீக் சுற்று ஆட்டங்களில் 3 வெற்றி, சூப்பர் சிக்ஸ் பிரிவில் 2 வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

ஆனால், இங்கிலாந்து அணியோ, ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல், அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

ஒப்பிட்டளவில் இரு அணிகளும் சம பலம் வாய்ந்தவை என்பதால், இன்றைய இறுதிப் போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி

தென்னாப்ரிக்காவின் போர்செப்ஸ்ட்ரூமில் இன்று நடைபெற்றுவரும் இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இங்கிலாந்தின் கிரேஸ் ஸ்க்ரீவன்ஸ் - லிபெர்டி ஹிப் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் தித்தாஸ் சாது  4வது பந்திலேயே லிபெர்டி ஹிப்பை ஆட்டமிழக்க செய்தார். 

இதையடுத்து, ஸ்க்ரீவன்ஸ் உடன் இணைந்த ஹோலண்ட் 2 பவுண்டரிகளை அடித்து அணியின் ஸ்கோர் தேக்கமடையாமல் பார்த்துகொண்டார். இந்த ஜோடியை அர்ச்சனா தேவி பிரித்தார். அவர் வீசிய பந்தை ரிவர்ஸ்கிப்பில் ஆட முயற்சித்த ஹோலண்ட் போல்ட் ஆகி வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 3.3 ஓவர்களுக்கு 15 ஆக இருந்தது. 

அதே ஓவரின் கடைசி பந்தில் இங்கிலாந்தின் நட்சத்திர ஆட்டக்காரர் கிரேஸ் ஸ்க்ரீவன்ஸும் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் 289 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் சுவேதா செராவத்க்கு ((292) அடுத்த இடத்தில் ஸ்க்ரீவன்ஸ் இருந்தார். கடைசி 5 ஆட்டங்களில் அவர் 4 ஆட்டங்களில் அரை சதம் அடித்திருந்த நிலையில், இந்த போட்டியில் 4 ரன்களிலேயே அவர் வெளியேறியது இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

 

அர்ச்சனா தேவி பிடித்த அசத்தலான கேட்ச்

ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

அடுத்து வந்த செரன் ஸ்மேல் 4 ரன்களின் தித்தாஸ் சாது பந்தில் ஃபோல்ட் ஆகி வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 6.2 ஓவர்களில் 22 ஆக இருந்தது. இங்கிலாந்து தரப்பில் மெக்டொனால்ட் கே மட்டுமே இந்திய அணியில் பந்துவீச்சை ஓரளவு சமாளித்து ஆடினார். மற்றவர்கள் ஒருசில பந்துகளிலேயே ஆட்டமிழந்து வெளியேறினர்.  பார்ஷவி சோப்ரா வீசிய 10வது ஓவரின் கடைசி பந்தில் சாரிஸ் பாவ்லி (2 ரன்கள்) எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். 

 

பார்ஷவி சோப்ரா வீசிய 12வது ஓவரின் முதல் பந்தை மெக்டோனால்ட் கே அடித்து ஆட முயன்றபோது பந்து மேலே எழும்பியது. அப்போது, அர்ச்சனா தேவி பாய்ந்துவந்து ஒற்றை கையால் பந்தை கேட்ச் பிடித்தது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இதை தொடர்ந்து மெக்டோனால்ட் கேவும்(19 ரன்கள்) வெளியேறினார். 

 

அடுத்த வந்த ஜோசி க்ரூவ்ஸ் சௌமியா திவாரி மூலம் ரன் அவுட் செய்யப்பட்டும், ஹன்னா பேக்கர் ஸ்டம்பிங் செய்யப்பட்டும் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களை இழந்த இங்கிலாந்து அணி 68 ரன்களை மட்டுமே எடுத்தது.

தித்தாஸ் சாது, அர்ச்சனா தேவி, பார்ஷவி சோப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஒருசில கேட்ச்களை விட்டதை தவிர்த்து பார்க்கும்போது இந்திய அணியின் ஃபீல்டிங்கும் பந்துவீச்சும் சிறப்பாக இந்த ஆட்டத்தில் வெளிப்பட்டது. 

https://www.bbc.com/tamil/articles/cx838v1velpo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தை வீழ்த்தி அங்குரார்ப்பண 19இன் கீழ் மகளிர் இ20 உலகக் கிண்ணத்தை இந்தியா சுவீகரித்தது

29 JAN, 2023 | 10:36 PM
image

(நெவில் அன்தனி)

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடத்தப்பட்ட அங்குரார்ப்பண ஐசிசி 19 வயதுக்குபட்ட மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதலாவது சம்பியன் பட்டத்தை இந்தியா சுவீகரித்து வரலாறு படைத்தது.

இதன் மூலம் இருவகை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில்  சிரேஷ்ட   இந்திய மகளிர் அணியினால் சாதிக்க முடியாததை கனிஷ்ட அணி நிறைவேற்றியுள்ளது.

2901_Players_of_India_celebrate_after_wi

தென் ஆபிரிக்காவின் பொச்சேவ்ஸ்ட்ரூம் ஜே. பி. மார்க் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 7 விக்கெட்களால் வெற்றிகொண்டு இந்தியா சம்பியன் பட்டத்தை வெற்றிகொண்டது.

இந்திய பந்துவீச்சாளர்கள் அனைவரும் விக்கெட்டை நோக்கி துல்லியமாக பந்துவீசி இங்கிலாந்து துடுப்பாட்ட வீராங்கனைகளை திக்குமுக்காட வைத்தனர். குறிப்பாக டிட்டாஸ் சாது, அர்ச்சனா தேவி, பர்ஷவி சொப்ரா ஆகிய மூவரும் மிகத் திறமையாகப் பந்துவீசி தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றி இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்தனர்.

2901_Players_of_England_and_India_line_u

இங்கிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 69 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்ட பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 14 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 69 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

அணித் தலைவி ஷஃபாலி வர்மாவும் ஷ்வெட்டா செஹ்ராவத்தும் 2 ஓவர்களில் 16 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால் இருவரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர்.

2901_Grace_Scrivens_of_England_poses_aft

ஷஃபாலி வர்மா ஒரு சிச்ஸ், ஒரு பவுண்டறியுடன் 15 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது அநாவசியமாக பந்தை விசுக்கி அடிக்க முயற்சித்த ஆட்டமிழந்தார்.

இந்த உலகக் கிண்ணத் தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர்கள் வரிசையில் முதிலடத்தில் உள்ள ஷ்வெட்டா செஹ்ராவத் 5 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த சௌமியா திவாரி, கொங்காடி த்ரிஷா ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 46 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றி இலக்கை அண்மிக்க இந்தியாவுக்கு உதவினர்.

எவ்வாறாயினும் கொங்காடி த்ரிஷா 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க வெற்றிக்கு மேலும் தேவைப்பட்ட 3 ஓட்டங்களை சௌமியா திவாரி பெற்றுக்கொடுத்தார்.

2901_Titas_Sadhu_of_India_poses_after_be

சௌமியா திவாரி 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார.

இங்கிலாந்து பந்துவீச்சில் ஹனா பேக்கர், க்றேஸ் ஸ்க்ரிவென்ஸ், அலெக்ஸா ஸ்டோன்ஹவுஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து 17.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 68 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இங்கிலாந்து துடுப்பாட்டத்தில் நியாம்  ஹொலண்ட் (10), ரியானா மெக்டொனல்ட் கே (19), அலெக்ஸா ஸ்டோன்ஹவுஸ் (11), சொஃபியா ஸ்மேல் (11) ஆகிய நால்வர் மாத்திரமே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். 

இங்கிலாந்து வீராங்கனைகள் அனைவரும் தவறான அடி தெரிவுகள் காரணமாக விக்கெட்களைத் தாரைவார்த்தனர்.

இந்திய பந்துவீச்சில் டிட்டாஸ் சாது 4 ஓவர்களில் 6 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பர்ஷவி சொப்ரா 4 ஓவர்களில் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அர்ச்சனா தேவி 3 ஓவர்களில் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும கைப்பற்றினர். அத்துடன் சோனம் யாதவ், மன்னாத் காஷியப், ஷஃபாலி வர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

ஆட்டநாயகி: டிட்டாஸ் சாது, தொடர்நாயகி: க்றேஸ் ஸ்க்ரிவென்ஸ்.

https://www.virakesari.lk/article/146973

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

U19 உலக சாம்பியன்: இந்திய மகளிர் கிரிக்கெட்டின் '83' தருணம்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சஞ்சய் கிஷோர்
  • பதவி,மூத்த விளையாட்டுச் செய்தியாளர், பிபிசி இந்தி
  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்
இந்திய மகளிர் அணி உலக சாம்பியன்

பட மூலாதாரம்,ANI

 
படக்குறிப்பு,

U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை ரியான் மெக்டொனால்டை அபார கேட்ச் மூலம் வெளியேற்றிய அர்ச்சனா தேவி.

ஒருவேளை இது இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்கு 1983 போன்ற தருணமாக இருக்கலாம். கபில்தேவ் தலைமையில் இந்திய ஆடவர் அணி அந்த ஆண்டு உலக கோப்பையை வென்றது. அதன் பிறகு இந்திய கிரிக்கெட்டின் முகமே ஒட்டுமொத்தமாக மாறிப் போனது. அதேப்போல் இதுவும் மகளிர் கிரிக்கெட்டின் திருப்புமுனையா?

ஆம். அந்த நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்தது.

இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்கு ஜனவரி 29ம் தேதி சிறப்பானதாக அமைந்தது. சச்சின் டெண்டுல்கர் படைத்த சாதனையுடன் தனது பெயரையும் இணைத்துக் கொண்ட ஷெஃபாலி வர்மா, தனது அணியை உலக சாம்பியனாக்கினார்.

பயிற்சியாளர் நௌஷின்-அல்-கதிர், 18 ஆண்டுகளுக்கு முன்பு இறுதிப் போட்டிக்கு வந்து பட்டத்தை வெல்ல முடியாத அணியில் இடம்பெற்றிருந்தார். அந்த ஏமாற்றம் இப்போது புன்னகையாக மாறியுள்ளது.

 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதல் முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதற்கு முன்பாக பலமுறை பட்டம் கைநழுவியிருந்தது குறிப்பிடத்தக்கது.

2005 இல், ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியை இந்தியா எட்டியது, ஆனால் ஆஸ்திரேலியாவிடம் 98 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

2017ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியாவை இங்கிலாந்து அணி தோற்கடித்தது. 2020 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 85 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

கடந்த ஆண்டு காமன்வெல்த் போட்டியில் கூட இந்திய மகளிர் அணியால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை. இறுதிப்போட்டிகளில் தொடர்ந்து வந்த சோகத்திற்கு கடந்த ஞாயிறன்று இந்திய ஜூனியர் மகளிர் அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. எதிரணியை வீழ்த்தி பட்டத்தை வென்று முந்தைய ஏமாற்றங்களுக்கு இந்திய அணி பழிதீர்த்துக்கொண்டது.

இந்திய மகளிர் அணி உலக சாம்பியன்

பட மூலாதாரம்,ANI

சிறந்த பந்துவீச்சு, அட்டகாசமான ஃபீல்டிங்

இது 19 வயதுக்குட்பட்டோருக்கான முதலாவது மகளிர் உலகக் கோப்பை போட்டியாகும். இதில் இந்திய வீராங்கனைகள் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டினர். இதற்காக ஷெஃபாலி வர்மாவும், 19 வயதுக்குட்பட்ட இந்த பெண்கள் கிரிக்கெட் அணியும் பாராட்டப்பட வேண்டும்.

தென்னாப்பிரிக்காவின் போட்செஃப்ஸ்ட்ரோமில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான முதலாவது மகளிர் உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றியது. முன்னதாக இந்த தொடரில் ஒரு போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி தோல்வியடைந்திருந்தது. இங்கிலாந்து அணி ஒரு தோல்வியைக் கூட சந்திக்காத அணியாக திகழ்ந்தது.

வரலாறும், இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளும் இங்கிலாந்திற்கே சாதகமாக இருந்தன. ஆனால் இந்தியாவின் அபார பந்துவீச்சு மற்றும் அட்டகாசமான பீல்டிங்கிற்கு முன்னால் இங்கிலாந்தின் திட்டங்கள் தவிடுபொடியாகின.

இறுதிப் போட்டியில் இரு அணிகளும் எந்தவொரு மாற்றத்தையும் செய்யவில்லை. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து வென்றது. மற்றொரு அரையிறுதியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா, நியூஸிலாந்தை வீழ்த்தியது.

இரு அணிகளும் அரையிறுதியில் விளையாடிய அதே ஆடுகளத்தில்தான் இறுதிப் போட்டியும் நடைபெற்றது. இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்தது.

இந்திய பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்தை அதிர வைத்தனர். வேகப்பந்து வீச்சாளர் தித்தாஸ் சாது, ஆஃப் ஸ்பின்னர் அர்ச்சனா தேவி மற்றும் லெக் ஸ்பின்னர் பார்ஷ்வி சோப்ரா ஆகியோரிடம் இங்கிலாந்து மண்டியிட்டது.

இந்திய மகளிர் அணி உலக சாம்பியன்

பட மூலாதாரம்,ANI

இங்கிலாந்துக்கு ஏமாற்றம்

தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் இங்கிலாந்தின் பேட்டிங் மோசமாக அமைந்தது. 18வது ஓவரின் முதல் பந்தில் இங்கிலாந்து அணி 68 ரன்களுக்கு சுருண்டது.

இந்தியா சார்பில் தித்தாஸ் சாது, அர்ச்சனா தேவி, பார்ஷ்வி சோப்ரா ஆகியோர் முறையே 6, 17 மற்றும் 13 ரன்கள் கொடுத்து தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

கேப்டன் ஷெஃபாலி வர்மா, மன்னத் காஷ்யப், சோனம் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். பார்ஷ்வி சோப்ராவின் பந்துவீச்சில் ஒரு அட்டகாசமான  கேட்ச் பிடித்து கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களை வென்றார் அர்ச்சனா தேவி.

இங்கிலாந்தின் ஹாலந்து, ராயன்னா மெக்டொனால்ட்-கே, அலெக்சா ஸ்டோன்ஹவுஸ் மற்றும் சோஃபியா ஸ்மேல் ஆகிய மூன்று வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்கத்தைத் தொட்டனர்.

இந்திய அணியின் இன்னிங்ஸை ஷெஃபாலி வர்மா மற்றும் ஸ்வேதா செஹ்ராவத் தொடங்கினர். ஷெஃபாலி 11 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்வேதா செஹ்ராவத் 6 பந்துகளில் 5 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். இந்தியா 14-வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.

சீனியர் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்குகிறது.

ஒருவேளை அதனால்தான் இங்கிலாந்தின் மூன்று மூத்த வீரர்கள் பிரத்யேகமாக இந்தப் போட்டியைக் காண வந்திருப்பார்கள் என்று தோன்றுகிறது.

இந்திய மகளிர் அணி உலக சாம்பியன்

பட மூலாதாரம்,ANI

டெண்டுல்கர் சாதனையை முறியடித்த ஷெஃபாலி வர்மா

இந்த தொடர் பல வகைகளில் சுவாரசியமாக இருந்தது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வங்கதேசம் பீதியை கிளப்பியது. ருவாண்டா அணி முதல் முறையாக உலகக் கோப்பையில் விளையாடி அனைவரையும் கவர்ந்தது.

ருவாண்டாவின் ஹென்ரிட் இஷிமவே 2 முறையும், தென்னாப்பிரிக்காவின் மேடிசன் லாண்டஸ்மேன் ஒரு முறையும் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினர்.

19 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் கிரிக்கெட் குழுவில் வறுமையில் இருந்து புகழின் உச்சம் தொட்ட பலரது கதைகள் உள்ளன.

”சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரோஹ்தக் சென்றிருந்தேன். மகளிர் கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறப்பட்ட பதினைந்து வயது வீராங்கனையை சந்தித்தேன்.

கிரிக்கெட் மீது அவருக்கு மிகுந்த நாட்டம் இருந்தது. பல முறை சிறுவர்களுக்கான போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டு வீரரை போல உடையணிந்து இவர் விளையாடியுள்ளார்.

இந்திய மகளிர் அணி உலக சாம்பியன்

பட மூலாதாரம்,BCCI

இதனால்தான் தனது மகளின் தலைமுடியை தந்தை குட்டையாக வெட்டியிருந்தார். பொருளாதார நெருக்கடியில் இருந்த பொற்கொல்லரான அவரது தந்தை தனது கனவை மகள் மூலம் நிறைவேற்ற விரும்பினார். அதனால்தான் அவர் மகளுக்கு பக்கபலமாக இருந்தார். அந்த பெண்ணின் பெயர் ஷெஃபாலி வர்மா.

அப்போது இந்த சிறுமி வெஸ்ட் இண்டீஸில் தூள் கிளப்பிவிட்டு திரும்பியிருந்தார். இளம் வயதில் அரைசதம் அடித்த சச்சின் டெண்டுல்கரின் 30 ஆண்டுகால சாதனையை அவர் முறியடித்தார்.

14-15 வயதில் ஆண்களால் ஸ்ட்ரோக் மேக்கிங் செய்ய முடியும் என்று கூறுவார்கள். ஆனால் ஷெஃபாலி 11-12 வயதில் இருந்து ஸ்ட்ரோக் மேக்கிங் செய்யத் தொடங்கினார் என்று அவரது பயிற்சியாளர் அஷ்வினி குமார் கூறினார். இதை கடவுளின் பரிசு என்று கூறுகிறார் அவர்.

ஷெஃபாலியின் ஆட்டத்தைப் பார்த்த பயிற்சியாளர், சிறுவர்களுடன் சேர்ந்து அவரை விளையாட வைத்தார். அதன்பிறகு நடந்தது வரலாறானது. இரண்டு உலகக் கோப்பைகளைத் தவிர, கடந்த ஆண்டு பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அணியிலும் ஷெஃபாலி வர்மா ஒரு அங்கமாக இருந்தார்”.

இந்திய மகளிர் அணி உலக சாம்பியன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஷெஃபாலி வர்மா

அர்ச்சனா தேவி மற்றும் சோனத்தின் தீராத வேட்கை

அதே சமயம் இறுதிப்போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒரு அபாரமான கேட்ச் பிடித்த அர்ச்சனா தேவியின் கதையும் போராட்டம் நிறைந்தது.

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் ரதாய் பூர்வா கிராமத்தைச் சேர்ந்த அர்ச்சனா தேவியின் இந்த வெற்றிக்குப் பின்னால், எல்லா கிண்டல், கேலிகளுக்கும் மத்தியில் தன் மகளை கிரிக்கெட் வீராங்கனையாக்குவதில் உறுதியாக இருந்த அவரது தாய் சாவித்ரி தேவியின் கதையும் இருக்கிறது.

அவரது கணவர் புற்றுநோயால் காலமானார். மகன் பாம்பு கடித்து இறந்தபோது அவர் சூனியக்காரி என்று கூட அழைக்கப்பட்டார்.

ஆனால் இப்போது ஷெஃபாலி மற்றும் அர்ச்சனா வீட்டில் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. ஒரு காலத்தில் கிண்டல் செய்தவர்களும் இந்த கொண்டாட்டத்தில் இணைந்துள்ளனர்.

ஃபிரோசாபாத்தைச் சேர்ந்த ஆல்-ரவுண்டரான சோனம், இடது கை சுழற்பந்து வீச்சாளர். அவர் வலது கையால் பேட் செய்கிறார்.

சோனம் ஐந்து சகோதரிகளில் இளையவர். தந்தை தொழிற்சாலையில் கூலி வேலை செய்கிறார். சோனத்தின் கிரிக்கெட் மீதான ஆர்வத்தைப் பார்த்த அவரது தந்தை இரண்டு ஷிஃப்ட் கூலி வேலை செய்து குடும்பத்திற்கு தேவையானவற்றை கவனித்து வந்தார்.

இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் நிஜமாகவே மாறிவருகிறது என்பதை இந்த இளம் வீராங்கனைகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மகளிர் ஐபிஎல் தொடருக்கு பிறகு இன்னும் நிறைய மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

https://www.bbc.com/tamil/articles/cv2ngwrz9m0o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனிஷ்ட உலகக் கிண்ணத்துடன் சிரேஷ்ட உலகக் கிண்ணத்திற்கும் குறி வைத்துள்ள ஷஃபாலி

By VISHNU

30 JAN, 2023 | 10:27 PM
image

(நெவில் அன்தனி)

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியன் பட்டத்தை சூடிய அணித் தலைவி ஷஃபாலி வர்மா, பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ணத்திலும் இந்தியாவுக்கு மேலும் வெற்றிகளை ஈட்டிக்கொடுப்பதற்கு தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

india_under_19_women_wishing_england.jpg

இங்கிலாந்துக்கு எதிராக ஞாயிறன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 7 விக்கெட்களால் வெற்றியீட்டி அங்குரார்ப்பண 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபது 20 உலகக் கிண்ணத்தை சுவீகரிப்பதற்கு இந்தியாவுக்கு பெரிதும் உதவிய 19 வயதான ஷஃபாலி வர்மா, இரட்டை வெற்றிக்கு இப்போது குறிவைத்துள்ளார்.

india_under_19_world_champions.jpg

இந்தியாவின் சிரேஷ்ட மகளிர் அணியில் கடந்த சில வருடங்களாக விளையாடிவரும் ஷஃபாலி வர்மா சிறந்த அனுபவசாலியாவார்.

shafali_verma..jpg

இங்கிலாந்தில் 2017இல் நடைபெற்ற மகளிர் 50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலும் அவுஸ்திரேலியாவில் 2020இல் நடைபெற்ற மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலும் இந்தியா உப சம்பயினாகியிருந்தது.

shafali_verma_with_the_trophy.jpg

2020 மகளிர் இருபது 20 உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய அணியில் 16 வயது வீராங்கனையாக இடம்பெற்ற ஷஃபாலி வர்மா 5 இன்னிங்ஸ்களில் 163 ஓட்டங்களை மொத்தமாக பெற்றிருந்தார். அதன் மூலம் இந்தியா சார்பாக அதிக ஓட்டங்கள் பெற்றவர்கள் வரிசையில் முதலிடத்தை வகித்தார்.

Shafali_Verma_of_India_2023_in_Potchefs.

இந்திய மகளிர் சிரேஷ்ட அணியினால் சாதிக்க முடியாததை கனிஷ்ட அணிக்கு தலைமைதாங்கி சாதித்துக் காட்டிய ஷஃபாலி 10 நாடுகள் பங்குபற்றும் ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலும் இந்தியாவை சம்பியனாக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார்.

தென் ஆபிரிக்காவிலிருந்து 19 வயதுக்குட்பட்ட உலக கிண்ணத்துடன் மாத்திரம் நாடு திரும்ப வேண்டும் என எண்ணினீர்களா என அவரிடம் கேட்கப்பட்டபோது, 'இல்லை, சிரேஷ்ட உலக சம்பியன் பட்டத்தையும் வென்றெடுக்க விரும்புகிறேன்' என்றார்.

'நான் எப்போதும் என் முன்னே உள்ள இலக்கை அடைவதை குறியாக கொண்டவள். நான் 19 வயதுக்குட்பட்ட அணியில் இணைந்த போது எனது குறிக்கோள் எல்லாம் 19 வயதுக்குட்பட்ட உலக சம்பியன் பட்டத்தை சுவீகரிக்க வேண்டும் என்பதாகவே இருந்தது. இன்று நாங்கள் அதனை வென்றுவிட்டோம். அந்த வெற்றியின் நம்பிக்கையுடன் சிரேஷ்ட உலகக் கிண்ணத்தையும் வென்றெடுக்க முயற்சிப்பேன்' என ஷஃபாலி வர்மா குறிப்பிட்டார்.

19 வயதுக்குட்பட்ட இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஷஃபாலி மொத்தமாக 172 ஓட்டங்களைப் பெற்று அதிக ஓட்டங்கள் பெற்றவர்கள் பட்டியலில் 3ஆம் இடத்திலிருந்தார். அவரது சக வீராங்கனை ஷ்வெட்டா செஹ்ராவத் 297 ஓட்டங்களுடன் முதலிடத்தில் இருந்தார்.

பந்துவீச்சில் பர்ஷவி சொப்ரா 12 விக்கெட்களையும் மன்னாத் காஷியப் 9 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

'எமது வெற்றிக்கு ஒவ்வொரு வீராங்கனையும் கொண்டிருந்த தன்னம்பிக்கைதான் காரணம்' எனக் குறப்பிட்ட அவர் இந்தியாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றார்.

https://www.virakesari.lk/article/147061

  • கருத்துக்கள உறவுகள்

19வ‌ய‌துக்கு உள்ப‌ட்ட‌ இந்தியா ம‌க‌ளிர் அணி அருமையா விளையாடினார்க‌ள் 

நியுசிலாந்தை சிம்பிலா வின் ப‌ண்ணி விட்டார்க‌ள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.