Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'எதிர்காலத்துக்காக' 12,000 பேரை கூகுளில் இருந்து நீக்கிய சுந்தர் பிச்சையின் கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'எதிர்காலத்துக்காக' 12,000 பேரை கூகுளில் இருந்து நீக்கிய சுந்தர் பிச்சையின் கடிதம்

சுந்தர்பிச்சை

பட மூலாதாரம்,GETTY IMAGES

56 நிமிடங்களுக்கு முன்னர்

கூகுளின் செலவுகளை மறுசீரமைப்பு செய்யும் நோக்கத்துடனும், புதியத் திட்டங்களுக்கான முன்னெடுப்பிற்காகவும் பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவதாக கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, தனது பணியாளர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வரும் நிறுவனங்களின் பட்டியலில், கூகுள் நிறுவனமும் இப்போது இணைந்துள்ளது.

'முழுப் பொறுப்பையும் ஏற்கிறேன்'

கூகுள் சுந்தர் பிச்சை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜனவரி 20ஆம் தேதி காலை கூகுள் மற்றும் ஆல்ஃப்பெட் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, அதன் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த குறிப்பிட்ட மின்னஞ்சல் 12 ஆயிரம் கூகுள் நிறுவன ஊழியர்களுக்கு மட்டும் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த இமெயிலில் கூகுள் நிறுவனம், 12 ஆயிரம் பேர் வரை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்து இருப்பதாக, சுந்தர் பிச்சை குறிப்பிட்டு இருந்தார்.இது தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் பிளாக் பக்கத்தில் இந்த தகவல் பகிரப்பட்டுள்ளது. 

 

இது கூகுளின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 6% ஆகும்.

சுந்தர் பிச்சை அனுப்பிய இமெயில், "நான் பகிர்ந்து கொள்ள சில கடினமான செய்திகள் உள்ளன. எங்கள் பணியாளர்களை குறைக்க முடிவு செய்துள்ளோம். இதனால் வேலையை இழக்கும் அமெரிக்க ஊழியர்களுக்கு ஏற்கனவே தனி மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம். மற்ற நாடுகளில் வேலை செய்யும் நபர்களுக்கு, உள்ளூர் சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் காரணமாக இந்த செயல்முறை நீண்ட நேரம் எடுக்கும்.

இதன் மூலம் திறமைமிக்க சில நபர்களுக்கு நாங்கள் குட்பை சொல்கிறோம். மேலும் இப்போது எடுக்கப்பட்டு இருக்கும் முடிவுக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன்," என அந்த மெயிலில் குறிப்பிட்டு இருந்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் கூகுள் வியத்தகு வளர்ச்சியைக் கண்டுள்ளது. அந்த வளர்ச்சிக்கு தொடர்ந்து எரிபொருள் நிரப்பும் வகையில், இன்றைய பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, என சுந்தர் பிச்சை அந்த மெயிலில் தெரிவித்து இருந்தார்.

பொருளாதார மந்தநிலை

பொருளாதார மந்தநிலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

பொருளாதார வலிமை மிக்க நாடுகள் இந்த ஆண்டு மந்தநிலையை எதிர்கொள்ளும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கடந்த ஆண்டு எச்சரித்து இருந்தார்.

அந்த அமைப்பின் தலைவரான கிறிஸ்டலீனா ஜியார்ஜீவா, 2022ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு சற்று கடினமாக இருக்கும் எனவும், அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும் என அவர் தெரிவித்து இருந்தார்.

இதையொட்டி நிதி நிலைமையை சீராக்க, உலகின் முன்னணி டெக் நிறுவனங்களாக மெட்டா, அமெசான், டிவிட்டர் நிறுவனங்கள் அதன் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்தன.

ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம், கடந்த ஆண்டு 11 ஆயிரம் ஊழியர்களை பொருளாதார மந்தநிலையை காரணம் காட்டி வேலையை விட்டு நீக்கியது. இது அந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 13% ஆகும். இந்த எண்ணிக்கை 87 ஆயிரம் வரை அடுத்து வரும் நாட்களில் உயரும் என அந்நிறுவனத்தின் சி.இ.ஓ. மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்து இருந்தார்.

அமெசான் நிறுவனமும் செலவுகளை குறைக்க இந்த ஆண்டு 18 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது.

வேலையை விட்டு நீக்கும் இந்திய நிறுவனங்கள்

ஸ்விக்கி

பட மூலாதாரம்,GETTY IMAGES

சர்வதேச நிறுவனங்களை போலவே இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனக்களும் பலரை வேலையில் இருந்து நீக்கத் தொடங்கியுள்ளன.

அண்மையில் இந்தியாவின் யுனிகார்ன் ஸ்டார் அப் நிறுவனமான ஷேர் சாட்(Sharechat), தனது ஊழியர்களில் 600 பேர் வரை வேலையில் இருந்து நீக்கியது. பொருளாதார நிலைமைகளை கவனத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்து இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்து இருந்தது.

இந்த வேலை நீக்கத்தால் ஷேர் சாட் நிறுவனத்தின் 20% பேர் வேலையை இழந்தனர்.

இதே போல மற்றொரு ஸ்டார்ட் அப் நிறுவனமான கோ மெக்கானிக்(GoMechanic), தனது ஊழியர்களில் 70% பேரை பணிநீக்கம் செய்துள்ளது.

இது குறித்து லிங்க்ட்இன்(LinkedIn) சமூக ஊடகத்தில் பதிவிட்டு இருந்த அந்நிறுவனத்தில் முதன்மை அதிகாரி, "தவறான நிதி தணிக்கையின் காரணமாக வளர்ச்சிக்கான குறியீடுகளை அதிகரித்து காட்டப்பட்டது. இதனை அறிந்து கொண்ட முதலீட்டு நிறுவனம், தனது முதலீடுகளை திரும்பப்பெற்று விட்டது. இதன் விளைவாக எங்கள் பணியாளர்களை வேலை நீக்கம் செய்யும் நிலைமைக்கு ஆளாகி இருக்கிறோம்," எனக் குறிப்பிட்டு இருந்தார்.

பிரபல இந்திய உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி, தனது ஊழியர்களில் 380 பேரை பணிநீக்கம் செய்துள்ளது. இது குறித்து பிடிஐ செய்தி முகமை வெளியிட்ட செய்தியில், அந்நிறுவனம் மோசமான கணிப்புகள் மூலமாக தேவைக்கு அதிகமான நபர்களை பணியில் அமர்த்தியது. இன்றைய சூழலை கருத்தில் கொண்டு இந்த கடினமான முடிவை எடுத்து இருப்பதாக, அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி குறிப்பிட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.

வேலைநீக்கத்தில் இணைந்த மைக்ரோசாஃப்ட்

மைக்ரோசாஃப்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனமும், தனது ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது. அதன் மொத்த பணியாளர்களில், 5% ஊழியர்களை அந்நிறுவனம் பணியில் இருந்து நீக்க இருக்கிறது.

இதன் மூலம் 10 ஆயிரம் பேர் வேலை இழக்கக்கூடும். இது குறித்து பேசிய அந்நிறுவனத்தின் சி.இ.ஓ. சத்யா நாதெல்லா, கூடுதல் கவனத்துடன் இருக்கும் நோக்கில் இந்த ஆட்குறைப்பு நடக்கிறது என்று தனது பணியாளர்களிடன் தெரிவித்துள்ளார்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூகுள் தேடுபொறிக்கு(Google Search Engine) போட்டியாக, சாட் ஜிபிடி(Chat GPT) என்ற தேடுபொறியை உருவாக்கி இருக்கிறது. இந்த தேடு பொறி, செயற்கை நுண்ணறிவுன் உதவியுடன் சிறப்பாக செயல்படுவதால், இதன் வளர்ச்சிக்காக இந்த நிறுவனம் பல பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது.

  • வேலைநீக்கத்தின் மூலமாக ஊழியர்களுக்கு 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை ஊழியர்களுக்கு இழப்பீடாக வழங்க முடிவு செய்துள்ளது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.

கூகுள் நிறுவனமும் வேலை இழப்பால் பாதிக்கப்படும் அமெரிக்காவை சேர்ந்த ஊழியர்களுக்கு சில பொருளாதார இழப்பீடுகளை அறிவித்துள்ளது

  • குறைந்தபட்சம் 60 நாட்களுக்கான ஊதியம் வழங்கப்படும்
  • 2022ஆம் ஆண்டுக்கான போனஸ் வழங்கப்படும்
  • மீதமுள்ள விடுமுறை நாட்கள் ஊதியமாக வழங்கப்படும்
  • 6 மாதம் வரை மருத்துவ காப்பீடு, விசா, வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல்
  • வேலைநீக்கத்திற்கான 16 வார தொகுப்பூதியம்
  • அமெரிக்காவுக்கு வெளியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உள்ளூர் விதிமுறைகளை பின்பற்றி இழப்பீடு வழங்கப்படும்.

தொழில்நுட்பம் குறித்த அமெரிக்க இணையதளமான Layoffs.fyi, தனது தளத்தில் 2022ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் 1 லட்சத்து 94 ஆயிரம் பேர் வரை வேலையை இழந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளது. இதில் கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களின் எண்ணிக்கையை சேர்க்கும் போது இந்த எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டும்.

எப்போது சந்தை மீளும்?

இது குறித்து பிபிசி ரேடியோ 4 இன் டுடே நிகழ்ச்சியில் பேசும் போது, "நாம் ஒரு மந்தநிலையைக் காணப் போகிறோம். இதன் காரணமாக ஏற்பட இருக்கும் விளைவுகளினால், 2023ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்கள் வரை சந்தைகள் மந்தநிலையில் இருக்கும்," என அவர் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c72r792lynro

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வாரத்தில் பிரசவம் - வேலையை பறித்த கூகுள்: "இனி என்ன செய்வேன்?" என கலங்கும் கர்ப்பிணி

கூகுள் பணி நீக்கம் - கர்ப்பிணி கலக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

5 மணி நேரங்களுக்கு முன்னர்

பிரசவத்திற்கு ஒரு வாரமே இருந்த நிலையில் கர்ப்பிணி ஒருவரை கூகுள் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. பிரசவ கால விடுமுறையை எதிர்நோக்கியுள்ள தனக்கு உடனே அடுத்த வேலை எப்படி கிடைக்கும் என்று கேட்டு கலங்கும் அவரது குரல், ஐ.டி. நிறுவனங்களில் தொடரும் பணிநீக்க கொடுமையை உணர்த்துகிறது. கொரோனா பேரிடர், யுக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு ஆகிய இரண்டும் சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை கடந்த ஓராண்டாகவே உலகம் முழுவதும் உணரப்பட்டு வருகிறது.

பெரும் ஐ.டி. நிறுவனங்களில் தொடரும் பணிநீக்கம்

உதிரி பாகங்களின் விநியோகச் சங்கிலி உடைந்ததால் தொழில்துறையில் உற்பத்தி முடக்கம், உணவுதானியப் பற்றாக்குறை, பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற எரிபொருள் விலையேற்றம் என ஒவ்வொரு நாடும் வெவ்வேறு வகையில் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. உலக பொருளாதார வளர்ச்சி சரிந்துவிட்டதன் தாக்கத்தை தகவல் தொழில்நுட்பத் துறையில் கண்கூடாக காண முடிகிறது. அமேசான், கூகுள், மெட்டா, ட்விட்டர் போன்ற பெருநிறுவனங்கள் அடுத்தடுத்து பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டு தொழிலாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன.

நிறைமாத கர்ப்பிணி வேலையைப் பறித்த கூகுள்

அந்த வரிசையில், கூகுள் நிறுவனம் அண்மையில் 12,000 பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த கேதரின் வாங் என்ற பெண்ணும் அவர்களில் ஒருவர். கூகுள் நிறுவனத்தில் ஏவியேஷன் பிரிவில் புரோகிராம் மேலாளராக அவர் பணிபுரிந்து கொண்டிருந்தார். 8 மாத கர்ப்பிணியான கேதரின் வாங் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். ஒரு வாரத்தில் பிரசவத்தை எதிர்நோக்கியிருந்த கேதரின், தான் பணி நீக்கம் செய்யப்பட்டதை இமெயிலில் பார்த்ததும் அதிர்ந்து போயுள்ளார். "பிரசவ விடுப்பு எடுப்பதற்கு முன்பு, புரோகிராம் மேலாளராக நான் என் பணி ஒப்படைப்பு ஆவணத்தை முடித்த பிறகு இன்னும் ஒரு வாரத்தில் குழந்தை முகத்தை பார்க்கப் போகிறேன் என்ற ஆவலில் இருந்தேன். ஆனால், என் மொபைலில் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறேன் என்ற தகவலை பார்த்த போது என் இதயமே கனத்துவிட்டது." என்று லிங்க்ட் இன் சமூக வலைதளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூகுள் பணி நீக்கம் - கர்ப்பிணி கலக்கம்

பட மூலாதாரம்,LINKEDIN/ KATHERINE WONG

"நான் ஏன்? ஏன் இப்போது?"

கேதரின் வாங் மேலும் தனது பதிவில், "நான் ஏன்? ஏன் இப்போது? என்பதே செய்தியை பார்த்ததும் என் மனதில் தோன்றிய எண்ணம். குறிப்பாக, எனது செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாக மதிப்பாய்வு அறிக்கை கிடைத்த பிறகு இந்த செய்தி வந்ததை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.

 

ஒரு புரோகிராம் மேலாளராக, திட்டமிடலே என் முதல் உள்ளுணர்வாக இருந்தது. ஆனால், நான் கையாண்டதிலேயே இதுதான் மிகவும் கடினமான வேலை. அதுவும் பணிநீக்கம் செய்யப்பட்ட காலம் மிகவும் மோசமானது. பல மாத பேறுகால விடுப்பில் செல்லவுள்ள 34 வார கர்ப்பிணிக்கு உடனே வேலை கிடைப்பது என்பது கிட்டத்தட்ட நடக்காத காரியம்" என்று மன வேதனைகளைக் கொட்டியுள்ளார்.

பணி நீக்கத்தின் கொடூரத்திற்கு உதாரணம்

"வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் நலன் கருதி, மனதில் எதிர்மறை எண்ணங்கள் எழாமல் பார்த்துக் கொள்கிறேன். ஆனால், நடுங்கும் கைகளை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. கர்ப்ப காலத்தின் இறுதியில் கூடுதல் கவனம் செலுத்தி குழந்தை பாதுகாப்பாக, முழு ஆரோக்கியத்துடன் உலகிற்கு வருவதை உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறேன்." என்ற அவரது பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேதரின் வாங் எழுதிய லிங்க்ட் இன் பதிவைக் காணும் நெட்டிசன்கள் பலரும் அவருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர். தன்னையும், தன் குழந்தையையும் நலம் விசாரித்து வெள்ளமென வரும் இமெயில்கள், குறுந்தகவல்களால் அவர் நெகிழ்ந்து போயிருக்கிறார்.

அதேநேரத்தில், ஐ.டி. நிறுவனங்கள் திடீர்திடீரென வேலையை விட்டு நீக்குவதால் தொழிலாளர்கள் எவ்விதம் பாதிக்கப்படுகின்றனர் என்பதற்கு கேதரின் வாங் ஒரு உதாரணம்.

கூகுள் பணி நீக்கம் - கர்ப்பிணி கலக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய ஐ.டி. நிறுவனங்களிலும் தொடரும் பணிநீக்கம்

அமேசான், கூகுள், மெட்டா, ட்விட்டர் போன்ற பெருநிறுவனங்களில் பணி நீக்கம் செய்யப்பட்ட பல ஆயிரம் பேரில் இந்தியர்களும் அடக்கம். எச்1பி விசாவின் கீழ் அமெரிக்கா சென்ற பலரும் இதனால் பாதிக்கப்பட, விசா விதிகளின்படி அங்கே தொடர்ந்து வசிக்க ஏதுவாக உடனே வேறு வேலை தொடங்க படாதபாடு பட்டுக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்காவில் ஐ.டி. நிறுவனங்களில் தொடரும் பணி நீக்க நடவடிக்கை இந்தியாவிலும் எதிரொலிக்காமல் இல்லை. அண்மையில் கூட விப்ரோ நிறுவனம் 430 பேரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. அவர்களின் பணியில் திருப்தி இல்லை என்று விப்ரோ நிறுவனம் கூறினாலும், உண்மையில் பணிநீக்க நடவடிக்கையின் தொடர்ச்சியே இது என்று ஐ.டி. வட்டாரங்கள் கூறுகின்றன.

"Moonlighting என்ற பெயரில் ஏற்கனவே பணிநீக்கம்"

இந்தியாவில் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான பணிப் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது என்பதை அறிய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு சேவை பணியாளர் சங்க பொதுச் செயலாளர் அழகுநம்பி வெல்கின்னை தொடர்பு கொண்டோம்.

அவர் பேசுகையில், "3 மாதங்களுக்கு முன்பு ட்விட்டர் நிறுவனம் பணிநீக்கம் செய்த போதே இந்தியாவிலும் அது தொடங்கிவிட்டது. 'moonlighting' அதாவது ஒரே நேரத்தில் ரகசியமாக மற்றொரு நிறுவனத்திற்காகவும் பணி செய்கிறார்கள் என்று கூறி ஏற்கனவே பலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்." என்றார்.

கூகுள் பணி நீக்கம் - கர்ப்பிணி கலக்கம்
 
படக்குறிப்பு,

அழகுநம்பி வெல்கின்

"ஊழியர்களை நிர்பந்தித்து பணிவிலகல் கடிதம் பெறப்படுகிறது"

"ஐ.டி. பணியாளர்களை நிர்பந்தப்படுத்தி பணி விலகல் கடிதத்தை பெற்றுக் கொள்வதன் மூலம் பெருநிறுவனங்கள் தொழிலாளர் பணிப் பாதுகாப்புச் சட்டத்தில் இருந்து தப்பி விடுகின்றன. நிறுவனத்தின் நலன் கருதி பணியாளர்களே ராஜினாமா செய்துவிட்டதாக அந்நிறுவனங்கள் கூறுகின்றன.

இது சட்டவிரோதம் என்று நாடாளுமன்றத்திலேயே கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் மத்திய அரசு உறுதிப்படுத்தியிருக்கிறது. ஆனால், நடைமுறையில் நிறுவனங்களை எச்சரிக்கும் வகையில் கடுமையான நடவடிக்கை ஏதும் இல்லாத நிலையே நீடிக்கிறது," என்று அவர் மேலும் கூறினார்.

"டி.சி.எஸ்.சில் சத்தமின்றி 40,000 பேர் பணிநீக்கம்"

"டி.சி.எஸ். நிறுவனம் அண்மையில் வெளியிட்ட காலாண்டு அறிக்கையில், '40,000 புதிய ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்; நிறுவனத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் 2 ஆயிரம் குறைந்துள்ளது' என்று கூறியுள்ளது. அதன் உண்மையான அர்த்தம் கிட்டத்தட்ட 40 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பதே. இளைஞர்களுக்கு பணி வாய்ப்பு என்ற பெயரில் அதிக சம்பளம் பெறும் சீனியர்களை குறி வைத்து நிறுவனங்கள் பணிநீக்கம் செய்கின்றன. அவர்கள் அனைவருமே மனைவி, குழந்தைகள் என்று வாழும் நடுத்தர வயதினர்.

வீடு, வாகனக் கடன்கள், குழந்தைகளின் கல்வி என்று வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தில் இருக்கும் போது வேலை பறிக்கப்படுவதால் ஒட்டுமொத்த குடும்பத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகிறது. பணி நீக்க நடவடிக்கை சட்ட மீறல் என்பதுடன் மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக்கொள்ளவே முடியாதது" என்று அழகுநம்பி வெல்கின் கூறினார்.

கூகுள் பணிநீக்கம் - கர்ப்பிணி கலக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தொழிற்சங்கங்களில் வேகவேகமாக சேரும் ஐ.டி. பணியாளர்கள்

ஐ.டி. பணியாளர்களுக்கு கை நிறைய சம்பளம் கிடைப்பதால், தொழிற்சங்கங்களில் சேர ஆர்வம் காட்டுவதில்லை என்ற கருத்து பொதுவாக உண்டு. அதில் உண்மை இல்லாமலும் இல்லை. ஏனெனில், ஐ.டி. தொழிற்சங்கங்களில் சில நூறு பேரே உறுப்பினர்களாக இருந்தனர். ஆனால், கடந்த ஓராண்டில் அந்த எண்ணிக்கை 30,000-ஆக உயர்ந்திருப்பதாகக் கூறும் அழகுநம்பி வெல்கின், "ஐ.டி. ஊழியர்களிடையே பணிப் பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்திருப்பதையே இது எடுத்துக் காட்டுகிறது," என்கிறார். தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களில் இருந்து தப்ப, ஐ.டி. நிறுவனங்கள் கடைபிடிக்கும் தந்திர உத்திகளால், கேதரின் வாங் போன்ற நிலைமை இந்தியாவில் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்பதே நிதர்சனம் என்கிறார் அழகுநம்பி வெல்கின்.

https://www.bbc.com/tamil/articles/c0j8vw85gl8o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கூகுளில் இருந்து 12,000 பணியாளர்கள் பணி நீக்கம் ; சுந்தர் பிச்சையின் கடிதம்

By RAJEEBAN

27 JAN, 2023 | 04:35 PM
image

கூகுள் நிறுவனம் தனது 12000 பணியாளர்களை பணியிலிருந்து நீக்குவதாக இன்று அறிவித்துள்ளது.

கூகுளின் பணியாளர்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஆவணமொன்றில் சுந்தர் பிச்சை இதனை தெரிவித்துள்ளார்.

அவர் அதில் தெரிவித்துள்ளது.

download__82_.jpg

நான் உங்களுடன் ஒரு கடினமான விடயத்தை பற்றி பேசவேண்டியுள்ளதுநாங்கள் எங்கள் பணியாளர்களில் 12000 பேரை வேலையிலிருந்து நீக்குவதற்கு தீர்மானித்துள்ளோம்.

அமெரிக்காவில் பாதிக்கப்பட்ட எங்களின் பணியாளர்களிற்கு நாங்கள் ஏற்கனவே கடிதங்களை அனுப்பியுள்ளோம்இஏனைய நாடுகளில் இந்த செயற்பாடு உள்ளுர் சட்டங்கள் நடைமுறைகளை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்படும்.

இதன் அர்த்தம் என்னவென்றால் நாங்கள் பணிக்கு அமர்த்துவதற்காக கஸ்டப்பட்ட - நான் அவர்களுடன் பணியாற்றுவதை விரும்பிய மிகவும் திறமையான பலருக்கு பிரியாவிடை அளிக்கவேண்டிய நேரம் வந்துள்ளது என்பதே இதன் அர்த்தம்.

கூகுளில் பணிபுரிபவர்களின் வாழ்;கையில் இந்த மாற்றங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற விடயம் என்னை பாதித்துள்ளது.

இந்த தீர்மானத்தை எடுக்கவேண்டிய சூழ்நிலை உருவானமைக்கான முழுப்பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

கடந்தஇரண்டு வருடங்களில் நாங்கள் மிகப்பெரும் வளர்ச்சியை பார்த்துள்ளோம்அந்த வளர்ச்சிக்கு தகுந்த விதத்திலும் தொடர்ந்து வளர்ச்சியடைவதற்கும் நாங்கள் வேறு விதமான பொருளாதார யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டோம் அதனை இன்று நாங்கள் எதிர்கொண்டுள்ளோம்.

எங்கள் நோக்கத்தின் வலுகாரணமாகவும் எங்கள் உற்பத்திகளின் பெறுமதி செயற்கை நுண்ணறிவில் இல் எங்களின் முன்னைய முதலீடுகள் காரணமாகவும்  எங்கள் முன்னால் உள்ள பாரிய சந்தர்ப்பங்கள் குறித்துநான் நம்பிக்கையுடன் உள்ளேன்.

இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்துவதற்காக நாங்கள் சில கடினமான முடிவுகளை எடுக்கவேண்டியுள்ளது.

எனவே ஒரு நிறுவனமாக எங்களின் உயர்ந்த முன்னுரிமைகளுடன் எங்கள் மக்கள் மற்றும் பணி சீரமைக்கப்படுவதை உறுதி செய்ய தயாரிப்பு பகுதிகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து முழுமையான மீளாய்வை மேற்கொண்டோம்.

இந்த மதிப்பாய்வின் அடிப்படையில் சில பணிகளில் இருந்து நீக்கங்களை நாங்கள் மேற்கொள்கின்றோம்.

எங்களை விட்டு விலகிச்செல்லும் கூகுள் பணியாளர்களிற்கு உலகின் முழுவதும் மக்களிற்கும் வர்த்தகத்திற்கும் உதவுவதற்காக கடுமையாகபணியாற்றியமைக்காக நன்றி

உங்களின் பங்களிப்புகள் ஈடுஇணையற்றவை நாங்கள் அவற்றை மிகவும பெரிய விடயமாக கருதுகின்றோம்.

இந்த மாற்றம் இலகுவாக காணப்படாது.பணியிலிருந்து நீக்கப்படுபவர்களிற்கு புதிய வேலை கிடைக்கும் வரை நாங்கள் அவர்களிற்குஉதவுவோம்.

images__16_.jpg

ஆகக்குறைந்தது 60 நாட்களிற்கு நாங்கள் அவர்களிற்கு ஊதியம் வழங்குவோம்.

பணியிலிருந்து நீக்கப்படும் பணியாளர்களிற்கான ஊதியங்கள் மற்றும் அனுகூலமான விடயங்களை நாங்கள் அவர்களிற்கு வழங்குவோம்.

2022 மேலதிக கொடுப்பனவையும்இமீதமுள்ள விடுமுறை நேரத்தையும் வழங்குவோம்.

பாதிக்கப்பட்டவர்களிற்கு ஆறுமாத சுகாதார நலன்கள் வேலைவாய்ப்பு சேவைகள் மற்றும் குடியேற்ற ஆதரவை வழங்குவோம்.

அமெரிக்காவிற்கு வெளியே குறிப்பிட்ட நாடுகளின் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளிற்கு ஏற்ப நாங்கள் உதவுவோம்.

https://www.virakesari.lk/article/146851

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.