Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

டி20 உலகக் கோப்பை: இந்தியாவின் முதல் போட்டியே பாகிஸ்தானுடன் - எகிறும் எதிர்பார்ப்பு

மகளிர் டி20 உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

28 ஜனவரி 2023, 04:56 GMT
புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை  தொடர் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்குகிறது. மகளிர் உலகக் கோப்பையின் 8வது பதிப்பான இத்தொடரை தென்னாப்பிரிக்கா நடத்துகிறது. 

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. முதல் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்ற நிலையில், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா நடத்தியது.

2012ஆம் ஆண்டுவரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்ற நிலையில், 2014இல் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்த்தப்பட்டது. 

இதுவரை 7 முறை மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட்ட நிலையில், 2022ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக நடைபெறவில்லை. 

 

எந்தப் பிரிவில் எந்த அணிகள் இடம்பெற்றுள்ளன?

10 அணிகளும் தலா 5 அணிகளாக 2 பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன. குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் உள்ளன. 

குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. 

அணிகளின் தரவரிசை

பெண்கள் டி20 அணிகளைப் பொருத்தவரை 299 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து 2வது இடத்திலும் நியூசிலாந்து 3வது இடத்திலும் உள்ளன.

இந்திய அணி 267 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. தென் ஆப்ரிக்கா, மேற்கு இந்திய தீவுகள், பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், அயர்லாந்து ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 

கேப் டவுனில் பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில், தொடரை நடத்தும் தென்னாப்பிரிக்காவை இலங்கை அணி எதிர்கொள்கிறது.

லீக் ஆட்டங்களை தொடர்ந்து முதலாவது அரையிறுதி ஆட்டம் பிப்ரவரி 23ஆம் தேதியும் 2வது அரையிறுதி ஆட்டம் பிப்ரவரி 24ஆம் தேதியும் நடைபெறுகிறது. இறுதிப்போட்டி பிப்ரவரி 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம்

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் பிப்ரவரி 12ஆம் தேதி கேப் டவுனில் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. 

இந்திய மகளிர் அணி கடைசியாக விளையாடியுள்ள 5 டி20 ஆட்டங்களில் 2 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் சந்தித்துள்ளது. மறுபுறம், பாகிஸ்தான் அணி தனது கடைசி 5 ஆட்டங்களில் 1 வெற்றியையும் 4 தோல்வியையும் சந்தித்துள்ளது. 

இந்திய அணி ஆட்டக்காரர்கள் விவரம்

ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷெபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிகஸ், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, தேவிகா வைத்யா, ராதா யாதவ், ரேணுகா சிங் தாக்கூர், அஞ்சலி சர்வானி, பூஜா வஸ்த்ரகர், ராஜேஸ்வரி கெய்க்வாட் மற்றும் ஷிகா பனிக்வாட். 

மாற்று ஆட்டக்காரர்கள்: மேக்னா, சினே ராணா, மேக்னா சிங்.

இந்தியாவின் ரேணுகா சிங்கை ஆண்டின் சிறந்த வளர்ந்துவரும் வீராங்கனையாக ஐசிசி கடந்த ஜனவரி 25, 2023 அன்று தேர்வு செய்தது. எனினும், தனிப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் பார்த்தால் பந்துவீச்சாளர் பட்டியலில் ரேணுகா சிங் 7வது இடத்தில் உள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனையான தீப்தி ஷர்மா 3வது இடத்தில் உள்ளார். சினே ராணா 9வது இடத்தில் இருக்கிறார். 

பேட்டிங்கை பொறுத்தவரை இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 3வது இடத்திலும் ஷெபாலி வர்மா 8வது இடத்திலும் உள்ளனர். மற்றபடி முதல் பத்து ஆட்டக்காரர்களுக்கான பட்டியலில் 7 வீராங்கனைகளுடன் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்துகிறது. 

ஆல்ரவுண்டர் பட்டியலில் இந்தியாவின் தீப்தி ஷர்மா 2வது இடத்தில் உள்ளார். 

ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா

மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகளை பொறுத்துவரை ஆஸ்திரேலியாவின் கையே ஓங்கியுள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள 7 தொடர்களில் 5 முறை ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றுள்ளது. 1 முறை 2வது இடத்தை பிடித்துள்ளது.

அதேபோல், மகளிர் உலகக் கோப்பையின் 7 தொடர்களிலுமே அந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. 

அடுத்ததாக, இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணி தலா ஒருமுறை உலகக் கோப்பையை வென்றுள்ளன.  இந்தியாவை பொருத்தவரை கடந்த 2020இல் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை தொடரில் 2வது இடத்தை பிடித்ததே சிறந்த நிலையாக உள்ளது. 

https://www.bbc.com/tamil/articles/cer0rjyzpr0o

  • Replies 51
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

தமிழ் சிறி

பையா... இந்த மகளிர்  போட்டியில்...   ஸ்ரீலங்கா, இந்தியா ஒன்றும் பங்கு பற்றவில்லையா. அடுத்தமுறை இந்த ஐசிசி  மகளிர்  போட்டி நடக்கும் போது...   @குமாரசாமி தாத்தாவையும், அமெரிக்கன் @ஈழப்பிரியன் தாத்

வீரப் பையன்26

இல‌ங்கை ம‌க‌ளிர் அணி ப‌ல‌ம் இல்லா அணி த‌மிழ் சிறி அண்ணா   இந்தியா ம‌க‌ளிர் அணி ப‌ல‌மா அணி........ ஆண்க‌ளுக்கு வைக்கும் ஜ‌பிஎல்ல‌ போல‌ பெண்க‌ளுக்கும் ப‌ல‌ கோடிய‌ கொட்டி பெரிய‌ தொட‌ர் வைக

ஈழப்பிரியன்

இன்னும் துடுப்பாட்டம் ஆடிக் கொண்டிருக்கும் இளைஞர்களைப் பார்த்து தாத்தா என்று அழைத்ததற்கு எமது அணியின் சார்பில் மிகுந்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது மைதானத்தில் பந்து பொறுக்கும் @பையன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் அணி எப்ப‌வும் இல்லாத‌ அள‌வுக்கு இப்போது மிக‌ ப‌ல‌மான‌ அணியா இருக்கு க‌ண்ண‌ மூடி கொண்டு சொல்ல‌லாம் இந்த‌ ம‌க‌ளிர் உல‌க‌ கோப்பைய‌ அவுஸ்ரேலியா தான் வெல்லும் என்று

 

இங்லாந் அல்ல‌து

இந்தியா ம‌க‌ளிர் அணியின‌ர் அவுஸ்ரேலியாவுட‌னான‌ பின‌லில் விளையாடுவின‌ம்

 

அதிஷ்ட‌ம் கை கொடுத்தா இங்லாந் கோப்பை தூக்க‌ கூடும் 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மகளிர் உலகக் கிண்ண இலங்கை குழாத்தில் 19 வயதுக்குட்பட்ட அணித் தலைவி விஷ்மி

By VISHNU

01 FEB, 2023 | 06:31 PM
image

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கான இலங்கை குழாத்தில் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண மகளிர் அணித் தலைவி விஷ்மி குணரட்ன பெயரிடப்பட்டுள்ளார்.

எனினும் ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்தவரும் ஐசிசியின் சிறப்பு உலக அணியில் பெயரிடப்பட்டவருமான தெவ்மி விஹங்கா சிரேஷ்ட அணியில் இடம்பெறவில்லை.

இலங்கை மகளிர் அணிக்கு வழமையான தலைவி சமரி அத்தபத்து தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வேகப்பந்துவீச்சாளரும் அனுபவசாலியுமான 27 வயதுடைய ஹசினி பெரேரா உபாதைக்குள்ளானதால் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை துரதிர்ஷ்டவசமாக தவறவிட்டுள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் குழாத்தில் பெயரிடப்பட்டிருந்த அவருக்குப் பதிலாக மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் சந்த்யா சந்தீப்பனி இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். ஆனால், அவர் ஒரே ஒரு சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் மாத்திரம் விளையாடியவராவார்.

இலங்கை மகளிர் குழாத்தில் சமரி அத்தபத்துவுடன் இனோக்கா ரணவீர, ஓஷாதி ரணசிங்க ஆகிய அனுபவம்வாய்ந்த சிரேஷ்ட வீராங்கனைகளும் இடம்பெறுகின்றனர்.

90 போட்டிகளில் விளையாடியுள்ள சமரி அத்தபத்து 6 சதங்கள், 14 அரைச் சதங்கள் உட்பட மொத்தமாக 2,840 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 2017 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆட்டமிழக்காமல் பெற்ற 178 ஓட்டங்கள் அவரது தனிப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாகும்.

மற்றொரு அனுபவசாலியான சுழல்பந்துவீச்சாளர் இனோக்கா ரணவீர 65 போட்டிகளில் 70 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். சகலதுறை வீராங்கனை ஓஷாதி ரணசிங்க 29 போட்டிகளில் 298 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன் 25 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.

குழாத்தில் இடம்பெறும் வீராங்கனைகளில் ஹர்ஷிதா சமரவிக்ரம, சுகந்திகா குமாரி, நிலக்ஷி டி சில்வா, அமா காஞ்சனா ஆகியோரும் மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஓரளவு அனுபவம் வாய்ந்த வீராங்கனைகளாவர்.

அவர்களை விட கவிஷா டில்ஹாரி, அனுஷ்கா சஞ்சீவனி, கௌஷினி நுத்யங்கன, மல்ஷா ஷெஹானி, அச்சினி குலசூரிய, தாரிகா செவ்வந்தி  ஆகியோரும்  இலங்கை மகளிர் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, வெகுவாக முன்னேறிவரும் பங்களாதேஷ், நியூஸிலாந்து, வரவேற்பு நாடான தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளுடன் கடினமான முதலாம் குழுவில் இலங்கை இடம்பெறுகிறது.

இராண்டாவது குழுவில் இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன.

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் ஆரம்பப் போட்டியில் தென் ஆபிரிக்காவும் இலங்கையும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி மோதவுள்ளன. இப் போட்டி கேப் டவுன், நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இரவு 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

https://www.virakesari.lk/article/147220

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இல‌ங்கை ம‌க‌ளிர் அணியில்

க‌ப்ட‌ன்  அத்தபத்து இவாவை அவுட் செய்தா அணியின் க‌தை முடிஞ்சுது

 

இந்த‌ பெண் தான் அணியின் ப‌ல‌ம் ம‌ற்ற‌துக‌ள் அனுப‌வ‌ம் இல்லாத‌வ‌ர்க‌ள் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இருபதுக்கு 20 உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில் இலங்கை வெற்றி

By VISHNU

07 FEB, 2023 | 03:35 PM
image

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவில் இன்னும் 3 தினங்களில் ஆரம்பமாகவுள்ள ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஏ குழுவில் இடம்பெறும் இலங்கை மகளிர் அணி, தனது ஆரம்பப் பயிற்சிப் போட்டியில் அயர்லாந்து மகளிர் அணியை 2 ஓட்டங்களால் வெற்றிகொண்டது.

 

0702_harshitha_..._sl_vs_ire.png

கடைசிவரை மிகவும் பரபரப்பாக நடைபெற்ற அப் போட்டியில் கடைசி ஓவரில் அயர்லாந்தின் வெற்றிக்கு 4 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன் இலங்கையின் வெற்றிக்கு 2 விக்கெட்கள் வீழ்த்தப்பட வேண்டி இருந்தது.

0702_harshitha_sl_vs_ire.png

கடைசி ஓவரை மிகவும் துல்லியமாக வீசிய வேகப்பந்து வீச்சாளர் சுகந்திகா குமாரி ஒரு ஓட்டத்தை மாத்திரம் கொடுத்ததுடன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். அவரது ஓவரின் 5ஆவது பந்தில் அயர்லாந்தின் கடைசி விக்கெட் ரன் அவுட் முறையில் வீழ்த்தப்பட, இலங்கை 2 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றது.

ஹர்ஷித்தா சமரவிக்ரம, அணித் தலைவி சமரி அத்தப்பத்து ஆகிய இருவரும் 46 ஓட்டங்களைப் பகிர்ந்து   ஓரளவு நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

சமரி அத்தப்பத்து 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த பின்னர் ஹர்ஷிதாவுடன் ஜோடி சேர்ந்த 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் அணித் தலைவி விஷ்மி குணரட்ன பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஹர்ஷிதா உபாதைக்குள்ளாகி ஓய்வு பெற்றார். 46 பந்துகளை எதிர்கொண்ட ஹர்ஷிதா 7 பவுண்டறிகளுடன் 56 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து விஷ்மி குணரட்ன 36 ஓட்டங்களுடன் வெளியேறினார். அனுஷ்கா சஞ்சீவனி 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

அயர்லாந்து பந்துவீச்சில் லோரா டிலேனி 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

150 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 147 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

அயர்லாந்து துடுப்பாட்டத்தில் கெபி லூயிஸ் 38 ஓட்டங்களையும் ஆர்லின் கெலி 30 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

இலங்கை பந்துவீச்சில் ஓஷாதி ரணசிங்க 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் இனோக்கா ரணவீர 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இலங்கை தனது 2ஆவது பயிற்சிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை புதன்கிழமை (08) எதிர்த்தாடவுள்ளது.

https://www.virakesari.lk/article/147632

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று முத‌லாவ‌து போட்டி தென் ஆபிரிக்கா எதிர் இல‌ங்கை

 

தென் ஆபிரிக்கா சிம்பில‌ வெல்லும்............அதிஷ்ட‌ம் இருந்த‌ வெற்றி இல‌ங்கைக்கு 🤣😁😂 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ம‌க‌ளிர் கிரிக்கேட்டை பார்க்கிற‌தில் த‌னி சுக‌ம் 

ப‌ல‌மான‌ தென் ஆபிரிக்க‌ ம‌க‌ளிர் அணிய‌ இல‌ங்கை ம‌க‌ளிர் அணி வென்ற‌து ஆச்ச‌ரிய‌மாய் இருக்கு

போன‌ திரியில் சொன்ன‌ மாதிரி இல‌ங்கை ம‌க‌ளிர் அணி க‌ப்ட‌ன் அப்த‌ப‌த்து அவா தான் இல‌ங்கையின் ந‌ம்பிக்கை ந‌ச்ச‌த்திர‌ம் அவாவை அவுட் செய்தா இல‌ங்கை ம‌க‌ளிர் அணிய‌ சிம்பிலா வெல்லலாம்
இன்றும் அதிர‌டியா ஆடி 68 ர‌ன்ஸ் குவிச்சா 
விளையாட்டு க‌ட‌சி ஓவ‌ர் வ‌ர‌ விறு விறுப்பாய் இருந்திச்சு................... 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்லாந் ம‌க‌ளிர் அணி வெற்றி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மீண்டும் இல‌ங்கை ம‌க‌ளிர் அணி வெற்றி

சிமி பின‌லுக்கு போவில் நியுசிலாந்தை வெல்ல‌னும்............வெண்டால் ஈசியா சிமி பில‌னுக்கு போக‌லாம்

 

இன்று ந‌ட‌ந்த‌ விளையாட்டில் வெற்றி வாய்ப்பு அதிக‌ம் வ‌ங்ளாதேஸ்சுக்கு தான் இருந்த‌து............அதிக‌ நோ வோல் ம‌ற்றும் கூடுத‌ல் ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுத்த‌தால் சிறில‌ங்கா 7 விக்கேட்டால் வெற்றி......................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மகளிர் டி20 உலகக் கோப்பை: இந்திய அணிக்காக 'ரன் மழை' பொழிந்து வெற்றிக்கு இட்டுச் சென்ற ஜெமிமா ரோட்ரிகஸ்

  • ஃப்பியன் வியன்
  • பிபிசி விளையாட்டு, கேப் டவுன்
13 பிப்ரவரி 2023, 05:17 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இந்திய அணி வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில், பாகிஸ்தானை 19வது ஓவரில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

வெற்றிக்கு 150 ரன்கள் வேண்டும் என்ற இலக்கோடு களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெமிமா ரோட்ரிகஸ், ரிச்சா கோஷ் இருவரும் 58 ரன்கள் குவித்தனர்.

கடைசி மூன்று ஓவர்களில் இந்தியாவுக்கு 28 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணி எதிர்பாராத வெற்றியை நோக்கி இருந்தது.

ஆனால், பாகிஸ்தானின் பந்து வீச்சாளர்கள் திணறிய நிலையில், இந்திய அணி தன் இலக்கை எட்டியது.

 

பாகிஸ்தான் முதலில் பேட் செய்து 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்திருந்தது. இதில் அந்த அணியின் கேப்டன் பிஸ்மா மரூஃப் ஆட்டமிழக்காமல் 68 ரன்கள் எடுத்தார். மேலும், 18 வயதான ஆயிஷா நசீம் 25 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் எடுத்தார்.

நசீமின் பலமான ஆட்டத்தால் இந்திய அணி திணறியது.

ஜெமிமா

பட மூலாதாரம்,MIKE HEWITT/GETTY

 
படக்குறிப்பு,

ஜெமிமா

பிரகாசித்த இளம் வீராங்கனைகள்

ஷெஃபாலி வர்மா 10வது ஓவரில் சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் அவுட் ஆனார். அவர் 25 பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் 12 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

19 வயதான ரிச்சா கோஷ் 18வது ஓவரில் இருந்து மூன்று பவுண்டரிகளை அடித்தார். அதேபோன்று, கடைசி ஓவரில் ரோட்ரிகஸ் மேலும் மூன்று பவுண்டரிகளை அடித்து இறுதியில் வசதியான வெற்றியைப் பெற்றனர்.

இந்தியா வெற்றியை எதிர்நோக்கிய நிலையில் இருந்தாலும் அதன் எதிரில் உள்ள பாகிஸ்தான் அணியின் ஆட்டத்தால் தடுமாறிய சூழலும் இருந்தது.

பாகிஸ்தான் அணியின் ஆக்ரோஷமான பேட்டிங்கால் இந்திய அணி ஆச்சர்யத்தில் ஆழ்ந்தது, முதல் இன்னிங்ஸின் இறுதிக் கட்டத்தில் இந்திய அணியினரின் உடல்மொழியில் தெளிவாகத் தெரிந்தது. கடைசி மூன்று ஓவர்களில் 33 ரன்கள் பறிக்கப்பட்டது. இதனால், இந்திய ஃபீல்டர்கள் இடுப்பில் கை வைத்து நம்ப முடியாமல் நின்றனர்.

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பிஸ்மா வலுவான ஆட்டத்தை ஆடினாலும், நசீம் இரண்டு சிக்சர்களை அடித்து நொறுக்கியபோது பார்வையாளர்கள் ஆர்ப்பரித்தனர்.

இந்திய வீரர் ரிச்சா கோஷ் அடித்த ஒரு ஷாட்

பட மூலாதாரம்,MIKE HEWITT

 
படக்குறிப்பு,

இந்திய வீரர் ரிச்சா கோஷ் அடித்த ஒரு ஷாட்

தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா விரல் காயத்தால் வெளியேறிய நிலையில், இந்திய இன்னிங்ஸில் இளம் திறமைகள் பிரகாசித்தன. மேலும், ஹர்மன்ப்ரீத் வெறும் 16 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

19 வயதான ஷெஃபாலி வர்மா, 22 வயதான ரோட்ரிகஸ், ரிச்சா கோஷ் ஆகியோர் தங்கள் ஆட்டத்தை வேகப்படுத்தி தங்கள் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

பாகிஸ்தானுடன் விளையாடுவது "எப்போதும் சிறப்பானது"

ஆட்ட நாயகியான ஜெமிமா ரோட்ரிகஸ், "எனது பெற்றோர் இங்கே இருக்கிறார்கள், அவர்கள் எப்போதும் எனக்குப் பின்னால் இருப்பதால் அவர்களுக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்க விரும்புகிறேன்," எனத் தெரிவித்தார்.

மேலும், "முழு ஆட்டத்தைவிட ஒவ்வொரு ஓவர்களுக்குமான இலக்கையே நாங்கள் கொண்டிருந்தோம். எங்களால் இதை முடிக்க முடியும் என்று நாங்கள் அறிந்தோம்," எனவும் அவர் கூறினார்.

பாகிஸ்தான் கேப்டன் பிஸ்மா மரூஃப்

பட மூலாதாரம்,MATTHEW LEWIS-ICC/GETTY

 
படக்குறிப்பு,

பாகிஸ்தான் கேப்டன் பிஸ்மா மரூஃப்

பாகிஸ்தான் பௌலிங் வலுவாக இல்லாததால் அவர்கள் தோல்வியைத் தழுவ நேரிட்டதாகவும் அடுத்த ஆட்டத்திற்கான படிப்பினைகளை இதன்மூலம் பெற்றுள்ளதாகவும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பிஸ்மா தெரிவித்தார்.

இந்திய அணியின் ஹர்மன்ப்ரீத் கவுர், "ஒவ்வொரு போட்டியும் முக்கியமானதுதான், ஆனால் பாகிஸ்தானுடன் விளையாடுவது எப்போதும் சிறப்பானது. இது சிறந்த விளையாட்டாக அமைந்தது.

பாகிஸ்தான் நன்றாக பேட்டிங் செய்தது. ஆனால், இந்த ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற விரும்பினோம். ஜெமிமாவும் ரிச்சாவும் நன்றாக விளையாடினர், இருவரும் விவேகத்துடன் பேட்டிங் செய்தனர்" எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/sport-64621813

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா ம‌க‌ளிர் அணியின‌ரின் விளையாட்டை பார்த்தேன் க‌ட‌சி நேர‌த்தில் அதிர‌டியா விளையாடி அணிக்கு வெற்றிய‌டைய‌ செய்தார்க‌ள்...............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மகளிர் டி20 உலகக் கிண்ண ஆரம்ப் போட்டியில் தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது இலங்கை

Published By: DIGITAL DESK 5

11 FEB, 2023 | 11:17 AM
image

(நெவில் அன்தனி)

கேப் டவுன், நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (10)  நடைபெற்ற  ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியில் வரவேற்பு நாடான தென் ஆபிரிக்காவை 3 ஓட்டங்களால் இலங்கை வெற்றிகொண்டது.

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான சர்வதேச இருபது 20 போட்டி ஒன்றில் 2016க்குப் பின்னர் இலங்கை ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும்.

அணித் தலைவி சமரி அத்தபத்து மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 50 பந்துகளில் 68 ஓட்டங்களைப் பெற்று இலங்கையின் வெற்றிக்கு அடிகோலியிருந்தார். இதன் மூலம் மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை சார்பாக அதிகூடிய தனிநபருக்கான எண்ணிக்கையை சமரி அத்தபத்து பதிவு செய்தார்.

Vishmi_Gunaratne_of_Sri_Lanka_plays_a_sh

சமரி அத்தப்பத்துவைத் தொடர்ந்து இனோக்கா ரணவீர, சுகந்திகா குமாரி, ஓஷாதி ரணசிங்க ஆகியோர் துல்லியமாக பந்துவீசி தென் ஆபிரிக்காவின் பலம்வாய்ந்த துடுப்பாட்ட வரிசையைக் கட்டுப்படுத்தினர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை நிதானத்துடன் துடுப்பாட்டத்தை ஆரம்பித்து 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றது.

முதல் 3 ஓவர்களில் 4 ஓட்டங்களை மாத்திரமே இலங்கை பெற்றிருந்தது. ஆனால், சிறுக சிறுக வேகமாக ஓட்டங்களைப் பெறத் தொடங்கிய அத்தபத்து, அணி நல்ல நிலையை அடைய உதவினார்.

மொத்த எண்ணிக்கை 28 ஓட்டங்களாக இருந்தபோது அத்தபத்துவின் சக ஆரம்ப வீராங்கனை ஹர்ஷித்தா சமரவிக்ரம 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். (28 - 1 விக்.)

1002_sl_celebrating_vs_sa_wt20wc_opener.

அதன் பின்னர் அத்தபத்துவுடன் ஜோடி சேர்ந்த 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணித் தலைவி விஷ்மி குணரட்ன திறமையாகத் துடுப்பெடுத்தாடி 4 பவுண்டறிளுடன் 35 ஓட்டங்களைப் பெற்றதுடன் 2ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 94 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

18ஆவது ஓவரின் முதலாவது பந்தில் விஷ்மி ஆட்டமிழக்க, அடுத்த பந்தில் அத்தபத்துவும் களம் விட்டகன்றார். சமரி அத்தபத்து 12 பவுண்டறிகள் அடங்கலாக 68 ஓட்டங்களைப் பெற்றார்.

தென் ஆபிரிக்க பந்துவீச்சில் மாரிஸ்ஆன் கெப், ஷப்மின் இஸ்மாயில், நாடின் டி க்ளார்க் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

சுமாரான 130 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்  ஆபிரிக்கா   20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

0702_sl_vs_ire_warm_up_sl_win.png

துடுப்பாட்டத்தில் அணித் தலைவி சுனே லுஸ் 28 ஓட்டங்களையும் லோரா வுல்வார்ட்18 ஓட்டங்களையும் சினாலோ ஜவ்டா 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை பந்துவீச்சில் இனோக்கா ரணவீர 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஓஷதி ரணசிங்க 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சுகந்திகா ரணசிங்க 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: சமரி அத்தபத்து.

https://www.virakesari.lk/article/147935

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இலகுவான வெற்றிகள்

Published By: VISHNU

12 FEB, 2023 | 01:43 PM
image

(என்.வீ.ஏ.)

தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவரும் 8ஆவது ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளான சனிக்கிழமையன்று (11) நடப்பு உலக சம்பியன் அவுஸ்திரேலியாவும் முதலாவது உலக சம்பியன் இங்கிலாந்தும் பி குழுவில் இலகுவான வெற்றிகளை ஈட்டின. 

1102_Heather_Knight_and_Nat_Sciver-Brunt

நியூஸிலாந்துக்கு எதிராக பார்ல், போலண்ட் பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்ற  போட்டியில் அவுஸ்திரேலியா 97 ஓட்டங்களாலும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அதே விளையாட்டரங்கில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட்களாலும் இலகுவாக வெற்றிபெற்றன.

அலிசா, ஏஷ்லி அபாரம்

நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் அலிசா ஹீலி பெற்ற அரைச் சதமும் ஏஷ்லி கார்ட்னர் பதிவு செய்த 5 விக்கெட் குவியலும் அவுஸ்திரேலியாவை இலகுவாக வெற்றிபெறச் செய்தன.

1102_Ellyse_Perry_of_Australia_vs_New_Ze

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலியா 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது.

AFYFLE_1.JPG

நடப்பு மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதூவாகும்.

அவுஸ்திரேலியாவின் ஆரம்பம் சிறப்பாக அமையாத போதிலும் ஏஷ்லி ஹீலி, அணித் தலைவி மெக் லெனிங் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவைத் தடுத்தனர்.

1102_Ashleigh_Gardner_of_Australia_vs_Ne

ஏஷ்லி ஹீலி 38 பந்துகளில் 9 பவுண்டறிகளுடன் 55 ஓட்டங்களையும் மெக் லெனிங் 33 பந்துகளில் 7 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களை விட எலிஸ் பெரி அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 22 பந்துகளில் 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 40 ஓட்டங்களையும் குவித்தார்.

1102_Alyssa_Healy_of_Australia_vs_New_Ze

நியூஸிலாந்து பந்துவீச்சில் அமேலியா கேர் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லீ தஹுஹு 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

174 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 14 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 76 ஓட்டங்களைப் பெற்றது.

அமேலிய கேர் (21), பேர்னடின் பெசுய்டென்ஹூட் (14), ஜெஸ் கேர் (10) ஆகிய மூவரே 10 ஓட்டங்கள் அல்லது அதற்கு மேல் பெற்றனர்.

அவுஸ்திரேலிய பந்துவீச்சில் ஏஷ்லி கார்ட்னர் 3 ஓவர்களில் 12 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் மெகான் ஷூட் 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இங்கிலாந்து அமோக வெற்றி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சனிக்கிழமை (11) நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட்களால் அமோக வெற்றிபெற்றது.

சொஃபி எக்லஸ்டோனின் துல்லியமான பந்துவீச்சு, நெட் சிவர்-பரன்ட், சொஃபி டன்கி, ஹீதர் நைட் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டங்களும் இங்கிலாந்தின் வெற்றியை இலகுவாக்கின.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது.

அணித் தலைவி ஹேலி மெத்யூஸ் 43 ஓட்டங்களையும் ஷெமெய்ன் கெம்பெல் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஹேலி மெத்யூஸும் முன்னாள் அணித் தலைவி ஸ்டெஃபானி டெய்லரும் ஆரம்ப விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஆனால், டெய்லர் 3 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.

இங்கிலாந்து பந்துவீச்சில் சொஃபி எக்லஸ்டோன் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

136 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 14.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 138 ஓட்டங்ளைப் பெற்று வெற்றியீட்டியது.

இங்கிலாந்து சார்பாக துடுப்பெடுத்தாடிய அனைவரும் வேகமாகத் துடுப்பெடுத்தாடி ஓட்டங்களைப் பெற்றனர்.

நெட் சிவர்-ப்ரன்ட் 30 பந்துகளில் 40 ஓட்டங்களையும் அணித் தலைவி ஹீதர் நைட் 22 பந்துகளில் 32 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காதிருந்தனர். அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

அவர்களை விட ஆரம்ப வீராங்கனை சொஃபியா டன்க்லி 18 பந்துகளில் 34 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் சினேல் ஹென்றி 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/148017

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓஷாதி, ஹர்ஷிதா, நிலக்ஷி ஆகியோர் அபாரம்; இலங்கைக்கு 2ஆவது நேரடி வெற்றி

Published By: DIGITAL DESK 5

13 FEB, 2023 | 08:58 AM
image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கு எதிராக கேப் டவுன், நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் இலங்கை அபார வெற்றியீட்டியது.

இந்த வெற்றியில் ஓஷாதி ரணசிங்க, சமரி அத்தபத்து ஆகியோரது துல்லியமான பந்துவீச்சுகளும்    ஹர்ஷிதா சமரவிக்ரம, நிலக்ஷ டி சில்வா ஆகியோரது திறமையான துடுப்பாட்டங்களும் பிரதான பங்காற்றின.

இதன் மூலம் தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவரும் மகளிர் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் 1ஆம் குழுவில் இடம்பெறும் இலங்கை தனது 2 நேரடி வெற்றியை ஈட்டி அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான தனது வாய்ப்பை சற்று அதிகரித்துக்கொண்டுள்ளது.

1202_Nilakshi_de_Silva_of_Sri_Lanka_vs__

ஆரம்ப வீராங்கனை ஹர்ஷிதா சமரவிக்ரம, மத்திய வரிசை வீராங்கனை நிலஷ்டி சில்வா ஆகிய இருவரும் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 104 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தனர்.

பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 127 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 18.2 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 129 ஓட்டங்களைப் பெற்று மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.

இலங்கை அணி ஆரம்பத்தில் சரிவு கண்டது. அணித் தலைவி சமரி அத்தபத்து (15), விஷ்மி குணரட்ன (1), அனுஷ்கா சஞ்சீவனி (0) ஆகியோரது விக்கெட்களை மருபா அக்தர் வீழ்த்த 6ஆவது ஓவரில் இலங்கை பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. (25 - 3 விக்.)

ஆனால், ஹர்ஷிதா சமரவிக்ரமவும் நிலக்ஷி டி சில்வாவும் மிகவும் திறமையாகவும் அதேவேளை புத்திசாதுரியமாகவும் துடுப்பெடுத்தாடி இலங்கை வெற்றி பெறுவதை உறுதிசெய்தனர்.

Harshitha_Samarawickrama_of_Sri_Lanka_ce

ஹர்ஷிதா சமரவிக்ரம 50 பந்துகளில் 8 பவுண்டறிகள், ஒரு சிச்ஸ் உட்பட 69 ஓட்டங்களுடனும் நிலக்ஷி டி சில்வா 38 பந்துகளில் 41 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பங்களாதேஷ் பந்துவீச்சில் மருபா அக்தர் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றது.

இரண்டாவது ஓவரில் மர்ஷிதா காத்துன் (0) ஆட்டமிழந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 8 ஓட்டங்களாக இருந்தது.

எனினும் மற்றைய ஆரம்ப வீராங்கனை ஷமிமா சுல்தானா (20), சோபனா மோஸ்தரி (29), அணித் தலைவி நிகார் சுல்தானா (28) ஆகிய மூவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி பங்களாதேஷை பலப்படுத்தினர். (9.5 ஓவர்களில் 71 - 3 விக்.)

ஆனால், ஓஷாதி ரணசிங்க, சமரி அத்தப்பத்து, இனோக்கா ரணவீர ஆகியோர் கட்டுப்பாட்டுடன் பந்துவீசி பங்களாதேஷை ஆட்டம் காணச் செய்தனர்.

ஒஷாதி ரணசிங்க 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சமரி அத்தபத்து 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் இனோக்கா ரணவீர 18 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

https://www.virakesari.lk/article/148043

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் அவசிய வெற்றியை தென் ஆபிரிக்கா ஈட்டியது

Published By: DIGITAL DESK 5

14 FEB, 2023 | 08:53 AM
image

(என்.வீ.ஏ.)

நியூஸிலாந்துக்கு எதிராக பார்ல், போலண்ட் பார்க் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (13) நடைபெற்ற 1ஆம் குழுவுக்கான ஐசிசி மகளிர் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 65 ஓட்டங்களால் தென் ஆபிரிக்கா இலகுவாக, அதேவேளை அவசியமான வெற்றியை ஈட்டிக்கொண்டது.

இந்த வெற்றியை அடுத்து வரவேற்பு நாடான தென் ஆபரிக்கா, அரை இறுதியில் விளையாடுவதற்கான வாய்ப்பை இப்போதைக்கு தக்கவைத்துக்கொண்டுள்ளது. அதேவேளை தனது முதல் 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்த நியூஸிலாந்து அரை இறுதிக்கு செல்வது சந்தேகத்திற்கு இடமாகியுள்ளது.

தனது ஆரம்பப் போட்டியில் இலங்கையிடம் தோல்வி அடைந்த தென் ஆபிரிக்காவுக்கு இந்த வெற்றி ஆறுதல் அளித்துள்ளதுடன் அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்வதற்கு அவ்வணி எஞ்சியுள்ள 2 போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டும்.

நியூஸிலாந்துடனான போட்டியில் க்ளோ ட்ரையொனின் சகலதுறை ஆட்டம், நாடின் டி க்ளார்க்கின் சிறந்த துடுப்பாட்டம், நொன்குலுலேக்கோ மிலாபா, மாரிஸ்ஆன் கெப் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சு என்பன தென் ஆபிரிக்காவுக்கு மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டிக்கொடுத்தது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தென் ஆபிர்க்கா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றது.

முதலாவது ஓவரில் தஸ்மின் ப்றிட்ஸ் (1) ஆட்டமிழந்த போதிலும் பவர் ப்ளே நிறைவின்போது தென் ஆபிரிக்காவின் ஓட்ட வேகம் சிறப்பாக இருந்தது. எனினும் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்ததால் 13ஆவது ஓவரில் அதன் மொத்த எண்ணிக்கை 5 விக்கெட் இழப்புக்கு 78 ஓட்டங்களாக இருந்தது.

இந் நிலையில் க்ளோ ட்ரையொன், நாடின் டி க்ளார்க் ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 6 ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவை ஓரளவு பலமான நிலையில் இட்டனர்.

க்ளோ ட்ரையொன் 40 ஓட்டங்களையும் நாடின் டி க்ளார்க் ஆட்டம் இழக்காமல் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்களைவிட அணித் தலைவி சுனே லுஸ் 22 ஓட்டங்களையும் லோரா வுல்வார்ட் 13 ஓட்டங்களையும் பெற்றனர்.

நியூஸிலாந்து பந்துவீச்சில் ஈடன் கார்சன் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லீ தஹுஹு 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

1202_Players_of_South_Africa_celebrate.j

133 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களம் இறங்கிய நியூஸிலாந்து மிக மோசமாக துடுப்பெடுத்தாடி 18.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 67 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அணித் தலைவி சொஃபி டிவைன் (16), ஜெஸ் கேர் (11), அமேலியா கேர் (10) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

தென் ஆபிரிக்க பந்துவீச்சில் நொன்குலுலேக்கோ மிலாபா 10 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் க்ளோ ட்ரையொன் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மாரிஸ்ஆன் கெப் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/148135

  • கருத்துக்கள உறவுகள்
Posted

2 ஆவது வெற்றியுடன் அரையிறுதி வாய்ப்பை இங்கிலாந்து உறுதிசெய்துள்ளது

Published By: DIGITAL DESK 5

14 FEB, 2023 | 12:37 PM
image

(என்.வீ.ஏ.)

அயர்லாந்துக்கு எதிராக பார்ல், போலண்ட் பார்க் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (13) நடைபெற்ற 2ஆம் குழுவுக்கான ஐசிசி மகளிர் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்களால் இங்கிலாந்து வெற்றிபெற்றது.

இதற்கு அமைய தனது முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற இங்கிலாந்து அரை இறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதிசெய்துகொண்டுள்ளது.

அயர்லாந்தை 105 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய இங்கிலாந்து ஓரளவு சிரமத்திற்கு மத்தியில் 14.2 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 107 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயற்பட்டபோதிலும் முன்வரிசை வீராங்கனை அலிஸ் கெப்சி அரைச் சதம் குவித்ததன் பலனாகவே அவ்வணி வெற்றிபெற்றது.

ஆரம்ப வீராங்கனை சொஃபி டன்க்லி (4) ஆட்டமிழந்ததும் இங்கிலாந்து தடுமாற்றம் அடைந்தது. (4 - 1 விக்.)

ஆனால், மற்றைய ஆரம்ப வீராங்கனை டனி வியட் (16) அலிஸ் கெப்சி ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 66 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்து அணியைப் பலப்படுத்தினர்.

22 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்ட கெப்சி 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 51 ஓட்டங்களைக் குவித்தார். இதன் மூலம் மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து சார்பாக அதிவேக அரைச் சதத்தை கெப்சி பூர்த்தி செய்து வரலாறு படைத்தார்.

மத்திய வரிசையில் அணித் தலைவி ஹீதர் நைட் (14), அமி ஜோன்ஸ் (12) ஆகிய இருவரும் ஓரளவு சிறப்பான பங்களிப்பை வழங்கினர்.

அயர்லாந்து பந்துவீச்சில் காரா மறே 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த அயர்லாந்து 18.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

அயர்லாந்தின் முன்வரிசை வீராங்கனைகள் நால்வர் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய போதிலும் ஏனையவர்கள் இரட்டை இலக்கத்தை எட்டாதது அதன் சரிவுக்கு காரணமானது.

1302_Sophie_Ecclestone_of_England_celebr

13ஆவது ஓவரில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 80 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையில் இருந்த அயர்லாந்து கடைசி 8 விக்கெட்களை 25 ஓட்டங்களுக்கு இழந்தது.

துடுப்பாட்டத்தில் காபி லூயிஸ் 36 ஓட்டங்களையும் ஓர்லா ப்ரெண்டகாஸ்ட் 17 ஓட்டங்களையும் அமி ஹன்டர் 15 ஓட்டங்களையும் அணித் தலைவி லோரா டிலேனி 12 ஓட்டங்களையும் பெற்றனர்.

இங்கிலாந்து பந்துவீச்சில் சொஃபி எக்லஸ்டோன் 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சாரா க்லென் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சார்லி டீன் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/148147

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவுஸ்திரேலியாவை வெற்றிபெறச் செய்த ஜோர்ஜியா, லெனிங் ஆகியோரின் ஆற்றல்கள்

Published By: DIGITAL DESK 5

15 FEB, 2023 | 09:19 AM
image

(என்.வீ.ஏ.)

பங்களாதேஷுக்கு எதிராக சென். ஜோர்ஜ் பார்க் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற முதலாம் குழுவுக்கான ஐசிசி மகளிர் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்களால் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா வெற்றியீட்டியது.

இதன் மூலம் 2ஆவது நேரடி வெற்றியை ஈட்டிய அவுஸ்திரேலியா முதலாம் குழுவில் முதலாம் இடத்தை அடைந்துள்ளது. இலங்கை 2 வெற்றிகளை ஈட்டியுள்ளபோதிலும் நிகர ஓட்ட வேக அடிப்படையில் 2ஆம் இடத்தில் உள்ளது.

_1a__1402_georgia_wareham_of_aus_celebra

பதினாறு மாதங்களின் பின்னர் அவுஸ்திரேலிய அணியில் மீண்டும் இடம்பிடித்த ஜோர்ஜியா வெயர்ஹம் மிகத் திறமையாக பந்துவீசி பங்களாதேஷை கட்டுப்படுத்தியதுடன் அணித் தலைவி மெக் லெனிங் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி அவுஸ்திரேலியாவின் வெற்றியை உறுதிசெய்தார்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றது.

_1__1402_Nigar_Sultana_Joty_of_Banglades

அணித் தலைவி நிகார் சுல்தானா, ஷொர்னா அக்தர் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 44 ஓட்ட இணைப்பாட்டமே பங்களாதேஷ் சுமாரான மொத்த எண்ணிக்கையைப் பெற உதவியது.

நிகார் சுல்தானா 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 57 ஓட்டங்களையும் ஷொர்னா அக்தர் 12 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்கள் இருவரைவிட வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெறவில்லை.

அவுஸ்திரேலிய பந்துவீச்சில் ஜோர்ஜியா வெயார்ஹம் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் டார்சி ப்றவுண் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

108 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 18.2 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 111 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

_3__1402_Alyssa_Healy_of_Australia__.jpg

மொத்த எண்ணிக்கை 9 ஓட்டங்களாக இருந்தபோது அனுபவசாலியான பெத் மூனி 2 ஓட்டங்களுடன் வெளியேறினார். அதன் பின்னர் 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த அலிசா ஹீலியும் மெக் லெனிங்கும் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர்.

அலிஸா ஹீலி 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த பின்னர் லெனிங், ஏஷ்லி கார்ட்னர் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 33 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவின் வெற்றியை உறுதிசெய்தனர்.

_2__1402_Darcie_Brown_of_Australia_celeb

மெக் லெனிங் 48 ஓட்டங்களுடனும் ஏஷ்லி கார்ட்னர் 19 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பங்களாதேஷ் பந்துவீச்சில் ஷொர்ணா அக்தர் 12 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் மாறுபா அக்தர் 19 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/148228

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இல‌ங்கை ம‌க‌ளிர் அணியின‌ர் எதிர் பார்த்த‌தை விட‌ ந‌ல்லா விளையாடின‌ம்

 

அவ‌ர்க‌ளின் குருப்பில் நியுசிலாந் ம‌க‌ளிர் அணி தொட‌ர் தோல்வியால் அவ‌ர்க‌ள் சிமி பின‌லுக்கு போவ‌து ச‌ந்தேக‌ம் அண்ணா.....................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை ‘சுருட்டிய’ இந்தியாவின் தீப்தி சர்மா

கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

15 பிப்ரவரி 2023

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் குரூப் சுற்று ஆட்டம் தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் இன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் ஏற்கனவே இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்து 2வது ஆட்டத்தில் களமிறங்கியது.

இந்தியா முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய உற்சாகத்தில் மோதியது.

தீப்தியின் சுழலில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸின் சரிவு சரியாக 2வது ஓவரில் இருந்து தொடங்கியது. இந்திய வீராங்கனை பூஜா வீசிய அந்த 2வது ஓவரின் முதல் பந்திலேயே வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை ஹேய்லே மேத்யூஸ் விக்கெட்டை பறிகொடுத்தார்.

மீதமிருந்த 5 பந்துகளும் டாட் பால்களாக மாறின. அந்த ஓவரில் 1 விக்கெட் மட்டுமின்றி மெய்டன் ஓவராக மாற்றி வெஸ்ட் இண்டீஸுக்கு அதிர்ச்சி கொடுத்தார் பூஜா. 14வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் தீப்தி வீசினார்.

ஆட்டத்தின் 3வது பந்திலும் 6வது பந்திலும் விக்கெட்டை வீழ்த்தினார். களத்தில் பொறுமையாக ஆடிக்கொண்டிருந்த கேம்பெல்லே 30 ரன்னிலும் யெய்லர் 42 ரன்னிலும் விடைபெற்றனர்.

இது இந்தியாவுக்கு மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது. தீப்தியின் அடுத்தடுத்த சுழலில் சிக்கிய வெஸ்ட் இண்டீசால் மீண்டு வர முடியாமலேயே போனது.

துல்லியமாக பந்துவீசிய தீப்தி சர்வதேச போட்டிகளில் 100 விக்கெட்களை கைப்பற்றிய முதல் இந்திய வீராங்கனை எனும் சாதனையைப் படைத்தார்.

20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 4 ஓவர்களை வீசிய 3 விக்கெட்களை கைப்பற்றியதோடு வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார்.

கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அடித்து ஆடிய இந்தியா

119 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. ஆட்டத்தை அதிரடி பாணியில் நகர்த்திய ஷஃபாலி வர்மா முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகளை விளாசினார். அடுத்த ஓவரிலும் பந்துகள் பவுண்டரி சென்ற வண்ணம் இருந்தன. 2 ஓவர்களில் 14 ரன்களை சேர்த்தது இந்தியா.

ஸ்மிரிதி மந்தானா 10 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த ஜெமிமா ரோட்ரிகசும் 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

கேப்டன் ஹர்மன் ப்ரீத் ஜோடி சேர்ந்து ரன்களை சேர்த்தனர். 23 பந்துகளில் 28 ரன்கள் விளாசி ஷஃபாலி விடைபெற்றார்.

இருப்பினும் கேப்டனுடன் இணைந்து பொறுப்புடன் ஆடிய ரிச்சா கோஷ் அதிகபட்சமாக 44 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி 18வது ஓவரிலேயே 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்தது. வெஸ்ட் இண்டீஸை சுருட்டிய தீப்தி சர்மாவுக்கு ப்ளேயர் ஆஃப் தி மேட்ச் விருது கிடைத்தது.

இந்தியாவின் வெற்றி தொடருமா?

கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் என அடுத்தடுத்து 2 வெற்றிகளை ருசித்து புள்ளிப்பட்டியலில் 2ம் இடைத்தில் உள்ளது இந்திய அணி. நெட் ரன் ரேட் அடிப்படையில் இங்கிலாந்து முதல் இடம் வகிக்கிறது. சனிக்கிழமை நடைபெறும் குரூப் சுற்று ஆட்டத்தில் பலம் வாய்ந்த இங்கிலாந்துடன் மோதுகிறது இந்திய அணி. தோல்வியை சந்தித்திராத இரு அணிகளும் முழு திறனுடன் மோத உள்ளதால் இந்த ஆட்டம் முக்கிய கவனத்தை பெற்றுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c99y14jqgq0o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேற்கிந்தியத் தீவுகளை இலகுவாக வீழ்த்தியது இந்தியா : வரலாறு படைத்தார் தீப்தி ஷர்மா

16 FEB, 2023 | 09:35 AM
image

 

(என்.வீ.ஏ.)

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கேப் டவுன், நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் புதன்கிழமை (15) நடைபெற்ற 2ஆம் குழுவுக்கான ஐசிசி மகளிர் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 6 விக்கெட்களால் இலகுவாக வெற்றியீட்டியது.

இவ் வருட மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா பெற்ற 2ஆவது நேரடி வெற்றி இதுவாகும்.

இதேவேளை, இந்தப் போட்டியில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய தீப்தி ஷர்மா தனது 89ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 100 விக்கெட்களைப் பூர்த்தி செய்தார். இதன் மூலம் சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்களைப் பூர்த்தி செய்த முதலாவது இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை தீப்தி ஷர்மா படைத்தார்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்றது.

1502_Shemaine_Campbelle_of_West_Indies_v

மொத்த எண்ணிக்கை வெறும் 4 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீராங்கனை அணித் தலைவி ஹெய்லி மெத்யூஸ் (2) ஆட்டமிழந்தார்.

ஆனால், முன்னாள் அணித் தலைவி ஸ்டெபானி டெய்லருடன் ஜோடி சேர்ந்த ஷெமெய்ன் கெம்பெல் 2ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 73 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையை அடைய உதவினர். ஆனால், இருவரும் 14ஆவது ஓவரில் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர்.

1502_Stafanie_Taylor_of_West_Indies_vs_i

ஷேர்மெய்ன் கெம்பல் 30 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த சொற்ப நேரத்தில் ஸ்டெபானி டெய்லர் 42 ஒட்டங்களுடன் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து சினெல் ஹென்றி (2) ஆட்டமிழந்தார். (79 - 4 விக்.)

தொடர்ந்து செடீன் நேஷன் (21 ஆ.இ.), ஷபிக்கா கஜ்னாபி (15) ஆகிய இருவரும் ஓரளவு திறமையை வெளிப்படுத்தி மேற்கிந்தியத் தீவுகள் 100 ஓட்டங்களைக் கடக்க உதவினர்.

இந்திய பந்துவீச்சில் தீப்தி ஷர்மா 4 ஓவர்களில் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

119 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 18.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

1502_Richa_Ghosh_of_India_vs_wi__1_.jpg

உபாதையிலிருந்து பூரண குணமடைந்து இந்திய அணியில் மிண்டும் இணைந்த அதிரடி ஆரம்ப வீராங்கனை ஸ்ம்ரித்தி மந்தானா 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஜெமிமா ரொட்றிகஸ் 1 ஓட்டத்துடன் வெளியேறினார்.

மறுபக்கத்தில் திறமையாக துடுப்பெடுத்தாடிய ஷஃபாலி வர்மா 28 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். (43 - 3 விக்.)

தொடர்ந்து அணித் தலைவி ஹார்மன்ப்ரீத் கோர் (33), ரிச்சா கோஷ் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றி இலக்கை அண்மிப்பதற்கு இந்தியாவுக்கு உதவினர்.

1502_Deepti_Sharma_of_India_v_wi__1_.jpg

ஹார்மன்ப்ரீத் கோர் ஆட்டமிழந்த பின்னர் வெற்றிக்கு தேவைப்பட்ட 4 ஓட்டங்களை ரிச்சா கோஷ் பெற்றுக்கொடுத்தார்.

ரிச்சா கோஷ் 32 பந்துகளில் 5 பவுண்டறிகளுடன் ஆட்டமிழக்காமல் 44 ஒட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் கரிஷ்மா ராம்ஹாரக் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இலங்கை மத்தியஸ்தர்

இந்தியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான போட்டியில் இலங்கையின் மிச்செல் பெரெய்ரா பொது மத்தியஸ்தராகக் கடமையாற்றினார். நிர்மலி பெரேரா பதில் மத்தியஸ்தராகப் பெயரிடப்பட்டிருந்தார்.

https://www.virakesari.lk/article/148313

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முனீபாவின் கன்னிச் சதத்தின் உதவியுடன் அயர்லாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்

Published By: VISHNU

16 FEB, 2023 | 11:12 AM
image

(என்.வீ.ஏ.)

அயர்லாந்துக்கு எதிராக கேப் டவுன், நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் புதன்கிழமை (15) நடைபெற்ற 2ஆம் குழுவுக்கான ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 70 ஓட்டங்களால் பாகிஸ்தான் அமோக வெற்றியீட்டியது.

1502_Muneeba_Ali_of_Pakistan_vs_ire.jpg

முனீபா அலி அபாரமாகத் துடுப்பெடுத்தாடி கன்னி சதம் குவித்து பாகிஸ்தானின் வெற்றிக்கு அடிகோலியிருந்தார். இதன் மூலம் மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் சார்பாக சதம் குவித்த முதலாவது வீராங்கனை என்ற சாதனையை முனீபா அலி நிலைநாட்டினார்.

1502_Nida_Dar_of_Pakistan_vs_ire.jpg

அத்துடன் நஷ்ரா சாந்து பதிவு செய்து 4 விக்கெட் குவியல், அணித் தலைவி நிதா தாரின் சகலதுறை ஆட்டம் என்பனவும் பாகிஸ்தானின் வெற்றியில் பிரதான பங்காற்றியிருந்தன.

1502_Players_of_Pakistan_celebrate_vs_ir

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 165 ஓட்டங்களைக் குவித்தது.

முனீபா அலி, ஜாவேரியா கான் ஆகிய இருவரும் 44 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், ஜாவேரியா கான் 6 ஓட்டங்ளை மாத்திரமே பெற்றார்.

இந்தியாவுக்கு எதிராக அரைச் சதம் குவித்த பாகிஸ்தான் அணித் தலைவி பிஸ்மா மாறூவ் இந்தப் போட்டியில் பிரகாசிக்கத் தவறி 4 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார். (55 - 2 விக்.)

அதனைத் தொடர்ந்து முனீபா அலியும் நிதா தாரும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 101 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானைப் பலப்படுத்தினர்.

ஆனால், மொத்த எண்ணிக்கை 156 ஓட்டங்களாக இருந்தபோது  அவர்கள் இருவரும்  அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

மிகவும் அற்புமாகத் துடுப்பெடுத்தாடிய முனீபா அலி 68 பந்துகளில் 14 பவுண்டறிகளுடன் 102 ஓட்டங்களைக் குவித்தார்.

நிதா தார் 38 ஓட்டங்களைப் பெற்றார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 16.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 95 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

பாகிஸ்தானின் பந்துவீச்சை எதிர்கொள்வதில் அயர்லாந்து  வீராங்கனைகள்  பெரும் சிரமத்தை எதிர்கொண்டதுடன் 7 பேர் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் ஆட்டமிழந்தனர்.

ஓலா ப்ரெண்டகாஸ்ட் (31), எய்மியர் ரிச்சர்ட்ஸ்சன் (28), கெபி லூயிஸ் (10) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் நஷ்ரா சாந்து 4 ஓவர்களில் 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நிதா தார் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 3 ஓவர்களில் 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சாதியா இக்பால் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/148323

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று ந‌ட‌ந்த‌ ம‌க‌ளிர் போட்டியில்

இல‌ங்கை ம‌க‌ளிர் அணி ப‌டு தோல்வி............ 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையை பந்தாடிய அவுஸ்திரேலியா அரையிறுதியை நெருங்கியது

Published By: VISHNU

17 FEB, 2023 | 10:12 AM
image

(நெவில் அன்தனி)

இலங்கைக்கு எதிராக ஜீகுவேபேர்ஹா, சென் ஜோர்ஜ்ஸ் பார்க் விளையாட்டரங்கில் 16 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற 1ஆம் குழுவுக்கான ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட்களால் அவுஸ்திரேலியா இலகுவாக வெற்றி பெற்றது.

_1__1602_Beth_Mooney_of_Australia_vs_sl.

அப் போட்டியில் முழுமையான ஆதிக்கம் செலுத்தி வெற்றி ஈட்டியதன்மூலம் அரை இறுதியில் விளையாடுவதற்கான வாய்ப்பை அவுஸ்திரேலியா வெகுவாக அதிகரித்துக்கொண்டுள்ளது.

_4__1602_Vishmi_Gunarathne_of_Sri_Lanka_

அதேவேளை, நியூஸிலாந்துக்கு எதிரான தனது கடைசிப் போட்டியில் மிகச் சிறந்த ஓட்ட வேகத்துடன் இலங்கை வெற்றிபெற்றால் அரை இறுதியில் விளையாடும் வாய்ப்பை பெறக்கூடியதாக இருக்கும். ஆனால், வரவேற்பு நாடான தென் ஆபிரிக்காவுக்கு இன்னும் 2 போட்டிகள் மீதமிருப்பதால் இலங்கையின் அரை இறுதி வாய்ப்பு நிச்சயமற்றதாகவே இப்போதைக்கு காணப்படுகிறது.

_3__1602_Harshitha_Samarawickrama_of_Sri

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட சுமாரான 113 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 15.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 113 ஓட்டங்களைப் பெற்று 10 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.

_2__1602_Alyssa_Healy_of_Australia_vs_sl

இலங்கைக்கு எதிராக இதுவரை விளையாடிய 7 சர்வதேச இருபது 10 கிரிக்கெட் போட்டிகளிலும் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றுள்ளது குறிப்பிட்டு சொல்லக்கூடிய விடயமாகும்.

ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனைகளான அலிசா ஹீலி, பெத் மூனி ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்து தமது அணியின் வெற்றியை மிகவும் இலகுவாக்கினர்.

அவர்கள் இருவருக்கும் எந்த ஒரு இலங்கை பந்துவீச்சாளராலும் சவால் விடுக்க முடியாமல் போனது.

பெத் மூனி 53 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள் உட்பட 56 ஓட்டங்களுடனும் அலிசா ஹீலி 43 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 54 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 112 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

மந்த கதியில் துடுப்பெடுத்தாடிய போதிலும் போட்டியின் 14ஆவது ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 69 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அதன் பின்னர் ஓட்டவேகம் அதிகரிக்கும் எனவும் இலங்கை கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெறும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 40 பந்துகளில் 43 ஓட்டங்களுக்கு இலங்கையின் 7 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 112 ஓட்டங்களாக கட்டுப்படுத்தப்பட்டது.

ஹர்ஷிதா சமரவிக்ரம (34), சமரி அத்தபத்து (16) ஆகிய இருவரும் 30 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

தொடர்ந்து ஹர்ஷிதா, விஷ்மி குணரட்ன (24) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு ஓரளவு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால், அதன் பின்னர் விக்கெட்கள் சீரான இடைவெளியில் விழ்ந்தன.

மத்திய வரிசையில் நிலக்ஷி டி சில்வா மாத்திரம் 15 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் மெகான் ஷூட் 4 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் க்றேஸ் ஹரிஸ் 3 ஓவர்களில் 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 

https://www.virakesari.lk/article/148416

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொட‌ர்ந்து அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் அணி தான் கோப்பையை தூக்கின‌ம் இந்யா அல்ல‌து தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் அணி கோப்பையை தூக்கினா ம‌கிழ்ச்சி............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

நியூஸிலாந்து, மேற்கிந்தியத் தீவுகளுக்கு முதல் வெற்றிகள் : பங்களாதேஷ், அயர்லாந்து முதல் சுற்றுடன் வெளியேற்றம்

Published By: NANTHINI

18 FEB, 2023 | 10:58 AM
image

(என்.வி.ஏ.)

தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவரும் 8ஆவது ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்தும் மேற்கிந்தியத் தீவுகளும் தத்தமது முதலாவது வெற்றிகளை பதிவு செய்து, அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பை உயிர் பெறச் செய்துகொண்டுள்ளன.

அதேவேளை தமது 3ஆவது நேரடி தோல்விகளை தழுவிய பங்களாதேஷும் அயர்லாந்தும் இறுதிச் சுற்று வாய்ப்பை இழந்து, முதல் சுற்றுடன் வெளியேறவுள்ளன.

கேப் டவுன், நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான 1ஆம் குழு போட்டியில் 71 ஓட்டங்களால் நியூஸிலாந்து வெற்றிபெற்றது.

சுஸி பேட்ஸ் பெற்ற ஆட்டமிழக்காத அரைச் சதம், பேர்னடின் பெஸுய்டென்ஹூட், மெடி க்றீன் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டங்கள்,  ஈடன் கார்சன், ஹனா ரோவ் ஆகிய இருவரின் துல்லியமான பந்துவீச்சுகள் என்பன நியூஸிலாந்துக்கு அவசியமான வெற்றியை ஈட்டிக்கொடுத்தன. 

_3__1702_Maddy_Green_of_New_Zealand_vs_b

அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து, 189 ஓட்டங்களை குவித்தது. 

இந்த வருடத்துக்கான மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அணியொன்று பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

_1__1702_Suzie_Bates_of_New_Zealand_vs_b

_2___1702_Bernadine_Bezuidenhout_of_New_

ஆரம்பம் முதல் கடைசி வரை அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய நியூஸிலாந்துக்கு பேர்னடின், சுஸி ஆகிய இருவரும் 52 பந்துகளில் 77 ஓட்டங்களை பகிர்ந்து, சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

பேர்னடின் 44 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

மொத்த எண்ணிக்கை 107 ஓட்டங்களாக இருந்தபோது அமேலியா கேர் (16), அணித் தலைவி சொஃபி டிவைன் (0) ஆகிய இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அதன் பின்னர் சுஸியும் மெடியும் ஜோடி சேர்ந்து  பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 42 பந்துகளில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்தை பலமான நிலையில் இட்டனர்.

_5__1702_Eden_Carson_of_New_Zealand_vs_b

சுஸி பேட்ஸ் 61 பந்துகளில் 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 81 ஓட்டங்களுடனும் மெடி க்றீன் 20 பந்துகளில் 7 பவுண்டறிகள் உட்பட 44 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பங்களாதேஷ் பந்துவீச்சில் பாஹிமா காத்துன் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

190 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து, 118 ஓட்டங்களை பெற்று தோல்வி அடைந்தது.

ஷொர்ணா அக்தர் (31), முர்ஷிதா காத்துன் (30), ஷமிமா சுல்தானா ஆகிய மூவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

நியூஸிலாந்து பந்துவீச்சில் ஈடன் கார்சன் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும், ஹனா ரோவ் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

_4__1702_Shorna_Akter_of_Bangladesh_vs_n

மேற்கிந்தியத் தீவுகளுக்கு முதல் வெற்றி

கெப் டவுனில் நேற்று வெள்ளிக்கிழமை (17) இரவு நடைபெற்ற 2ஆம் குழு போட்டியில் அயர்லாந்தை 6 விக்கெட்களால் மிக இலகுவாக மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிகொண்டது.

அணித் தலைவி ஹேலி மெத்யூஸ் அற்புதமாக துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் அரைச் சதம் குவித்ததன் பலனாக மேற்கிந்தியத் தீவுகள்  ஒரு பந்து மீதமிருக்க பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

_9__1702_Hayley_Matthews_of_West_Indies_

அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து, 137 ஓட்டங்களை பெற்றது.

மூன்றாம் இலக்க வீராங்கனை ஓலா ப்ரெண்டர்காஸ் 47 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 61 ஓட்டங்களை பெற்றார். அவரை விட அமி ஹன்டர் (38), எய்மியர் றிச்சர்ட்சன் (15) ஆகியோரும் துடுப்பாட்டத்தில் தங்களது அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர்.

_7__1702_Karishma_Ramharack_of_West_Indi

_8__1702_Shamilia_Connell_of_West_Indies

பந்துவீச்சில் ஷமிலா கொனல் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும், கரிஷ்மா ராம்ஹாரக் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், அஃபி ப்ளெச்சர் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 19.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து, 140 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஹேலி மெத்யூஸ் 53 பந்துகளில் 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 66 ஓட்டங்களை பெற்றார். அவரை விட சினெல் ஹென்றி 34 ஓட்டங்களையும், ரஷாடா வில்லியம்ஸ் 17 ஓட்டங்களையும், ஷபிக்கா கஜ்னாபி 13 ஓட்டங்களையும் பெற்றனர்.

https://www.virakesari.lk/article/148486

 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சொந்த கட்சிக்குள் இருந்தும் ட்ரூடோ பதவி விலகுவதற்கான அழுத்தம் அதிகரித்து வருகிறது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சர்வதேச அரங்கில் ஒன்றன்பின் ஒன்றாக நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில், தற்போது உள்நாட்டு அரசியலிலும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார். அவரது அரசாங்கத்தை ஆதரித்து வந்த புதிய ஜனநாயகக் கட்சி (NDP), ஆதரவைத் தொடர மறுத்துவிட்டது. இந்த புத்தாண்டில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என என்டிபி தலைவர் ஜக்மீத் சிங் தெரிவித்துள்ளார். மையவாத இடதுசாரி கட்சியான என்.டி.பி அதன் பொதுவான அரசியல் செயல் திட்டங்களை கொண்டிருந்ததால் ட்ரூடோவின் அரசாங்கத்தை ஆதரித்தது. ஆனால் என்.டி.பி கட்சி தலைவரின் சமீபத்திய அறிக்கை கட்சியின் நிலைப்பாட்டில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை பிரதிபலிக்கிறது. கனடாவுக்கு எதிராக டிரம்ப் எடுத்த முடிவு, சிக்கலில் ஜஸ்டின் ட்ரூடோ - இந்தியாவை பாதிக்குமா? உயிரையே பணயம் வைத்து 'அமெரிக்க வாழ்க்கை' கனவுக்காக புலம் பெயரும் இந்தியர்கள் கனடா: 1984 சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை குறித்து தீர்மானம் நிறைவேற்ற திட்டம் - இதன் விளைவுகள் என்ன?   ஜஸ்டின் ட்ரூடோ, ஏற்கனவே அனைத்து தரப்பிலிருந்தும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ள நிலையில் தற்போது மேலும் சிக்கல்களை எதிர்கொள்ளும நிலை ஏற்பட்டுள்ளது. ட்ரூடோவை குறிவைக்கும் பிரதான கட்சிகளில் தற்போது ஜக்மீத் சிங்கின் கட்சியும் சேர்ந்துவிட்டது. எனவே நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ட்ரூடோ அரசு தப்புவது கடினம். கடந்த இரண்டரை ஆண்டுகளாக ட்ரூடோ அரசுக்கு என்டிபி ஆதரவளித்தது. அதனால்தான் ட்ரூடோவால் தொடர்ந்து ஆட்சியில் இருக்க முடிந்தது. ஏற்கனவே இந்த வாரம் ட்ரூடோவுக்கு மிகவும் மோசமான வாரமாக இருக்கும் நிலையில் ஜக்மீத் சிங்கின் அறிவிப்பும் வெளிவந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை ட்ரூடோவின் அமைச்சரவையில் மிக மூத்த அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்தார். இதனையடுத்து அவரது சொந்த லிபரல் கட்சிக்குள்ளேயே அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மறுபுறம், அமெரிக்காவில் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பின் அறிவிப்பு ட்ரூடோவுக்கு பெரிய பிரச்னையாக இருந்தது. கந்தஹார் விமான கடத்தல்: 25 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இந்தியா - நேபாள உறவில் நெருடல் ஏன்?21 டிசம்பர் 2024 'எனது உடல், ஆடை பற்றி சங்கடப்படுத்தும் வகையில் கேட்டார்' - பெண் உணவு டெலிவரி ஊழியர்களின் பிரச்னைகள்21 டிசம்பர் 2024 ஜக்மீத் சிங் என்ன சொன்னார்? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஜக்மீத் சிங் ஜக்மீத் சிங் எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டிருந்தார். "லிபரல் கட்சியினர் இரண்டாவது வாய்ப்புக்கு தகுதியானவர்கள் அல்ல. அடுத்த நாடாளுமன்ற அமர்வில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அழைப்பு விடுப்போம்" என்று பதிவிட்டிருந்தார். இந்தாண்டு செப்டம்பரில் ட்ரூடோ அரசுக்கு அளித்து வந்த தனது ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்திருந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜக்மீத் சிங்கின் கட்சி கடந்த பொதுத் தேர்தலில் 24 இடங்களில் வெற்றி பெற்று முக்கிய கட்சியாக இருந்தது. பல சந்தர்ப்பங்களில் ஜக்மீத் சிங் இந்தியாவை விமர்சித்து இருக்கிறார். டொராண்டோவில் உள்ள பிபிசி செய்தியாளர் நாடின் யூசுப், "கனடாவின் அடுத்த பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் அல்லது அதற்கு முன்னதாக நடைபெறும். லிபரல் கட்சியின் அரசாங்கம் கவிழும் பட்சத்தில் இந்த தேர்தல் முன்னதாகவே நடத்தப்பட வாய்ப்பிருக்கிறது" என்று கூறினார். கனடா நாடாளுமன்றத்தின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் அவை வரும் ஜனவரியில் மீண்டும் கூடும் நிலையில் 3 முக்கிய எதிர்க்கட்சிகளும் ட்ரூடோ அரசாங்கத்தை கவிழ்க்க விரும்புவதாக கூறியுள்ளன. இந்த வாரம் ட்ரூடோ அடுத்தடுத்து பல பின்னடைவுகளை சந்தித்துள்ளார். ட்ரூடோவின் அமைச்சரவையில் மிகவும் மூத்தவராக இருந்த துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் ராஜினாமா செய்தார். இப்படியான சூழலில், ஜக்மீத் சிங்கின் இந்த அறிவிப்பு அவருக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. திங்களன்று பொருளாதார அறிக்கையை வழங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு ஃப்ரீலேண்ட் ராஜினாமாவை அறிவித்தது அனைவருக்கும் அதிர்ச்சியான செய்தியாக இருந்தது. 'சிரியாவால் உலகிற்கு அச்சுறுத்தல் இல்லை' - கிளர்ச்சிக் குழுவின் தலைவர் அகமது அல்-ஷாரா பிபிசிக்கு பேட்டி19 டிசம்பர் 2024 கிசெல் பெலிகாட்: பாலியல் வன்புணர்வு செய்த 51 பேர் - முன்னாள் கணவருக்கு 20 ஆண்டுகள் சிறை19 டிசம்பர் 2024 கனடாவுக்கு எதிரான டிரம்பின் கருத்துகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றபோது, அவருக்கு ட்ரூடோ வாழ்த்து தெரிவித்தார் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் பாதுகாப்பை அதிகரிப்பதில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றால், கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய இரு அண்டை நாடுகளின் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீதம் வரி (இறக்குமதி வரி) விதிப்பேன் என்று கடந்த மாதம் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்றவுடன் கனடா, மெக்ஸிகோ மற்றும் சீனாவுக்கு எதிராக வரிகளை விதிக்கும் உத்தரவில் கையெழுத்திடுவேன் என்று டிரம்ப் தனது `ட்ரூத்' சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டிருந்தார். "கனடா மற்றும் மெக்ஸிகோ எல்லைகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அமெரிக்காவுக்குள் நுழைகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. போதைப்பொருளை கொண்டு வருவது போன்ற பல குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். இப்படியெல்லாம் இதற்கு முன் நடந்ததில்லை." என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். டிரம்ப் வெற்றி பெற்ற உடனேயே ட்ரூடோ வாழ்த்து தெரிவித்த போதிலும் இது டிரம்பின் அணுகுமுறையை மாற்றவில்லை. டிரம்ப் மற்றும் ட்ரூடோ இடையேயான உறவு கசப்பானது மற்றும் சில சந்தர்ப்பங்களில் ட்ரூடோ மீது டிரம்ப் தனிப்பட்ட தாக்குதல்களை கூட செய்துள்ளார். கனடாவின் ஏற்றுமதியில் 75 சதவிகிதம் அமெரிக்காவிற்கு செல்கிறது. டிரம்பின் அறிவிப்பு கனடாவுக்கு சிக்கல்களை அதிகரிக்கக் கூடும். இந்த வரி விதிப்பு கனடாவின் பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால் டிரம்ப் இத்தோடு நிற்கவில்லை, கனடாவைப் பற்றி மேலும் கடுமையான கருத்துகளை வெளியிட்டார். இரண்டு நாட்களுக்கு முன்பு, டிரம்ப் தனது `ட்ரூத்' சமூக ஊடகப் பக்கத்தில் "ஒவ்வொரு ஆண்டும் கனடாவுக்கு 100 மில்லியன் டாலர்களை மானியமாக ஏன் தருகிறோம் என்பதற்கு யாரிடமும் பதில் இல்லை. பெரும்பாலான கனடியர்கள் 51வது மாகாணமாக மாற விரும்புகிறார்கள். அதாவது, அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற கனடா நினைக்கிறது. இது அவர்களுக்கு வரி மற்றும் ராணுவ செலவுகளை மிச்சப்படுத்தும். இது ஒரு சிறந்த யோசனை என்று நான் நினைக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார். பிரான்சில் இருந்தபடியே, கென்யாவில் அதானி ஒப்பந்தத்தை ரத்தாகச் செய்த மாணவர் - எப்படி தெரியுமா?21 டிசம்பர் 2024 404 ஏக்கருக்கு உரிமை கோரும் வக்ஃப் வாரியம், 2 மாதங்களாக போராடும் கிராமம் - கேரளாவில் என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு21 டிசம்பர் 2024 ட்ரூடோ பதவி விலக வேண்டும் என அதிகரிக்கும் அழுத்தம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கனடாவில் பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன கனடா நிதியமைச்சராக இருந்த ஃப்ரீலாண்ட் தனது ராஜினாமாவில், டிரம்பின் அறிவிப்பு கனடாவுக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாகவும், பிரதமர் ட்ரூடோ நிதி நிலைமையை சரிசெய்வதற்குப் பதிலாக மலிவான அரசியலில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டினார். அப்போதிருந்து, ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்ற குரல் அவரது சொந்த லிபரல் கட்சிக்குள்ளேயே வலுத்துள்ளது. குளோப் அண்ட் மெயில் செய்தியின்படி, அக்கட்சியின் 153 எம்.பி.க்களில் இதுவரை 19 பேர் ட்ரூடோவை பதவி விலகுமாறு பகிரங்கமாக வலியுறுத்தியுள்ளனர். எவ்வாறாயினும், இந்த பொது முறையீடுகளுக்கு ட்ரூடோ இதுவரை பதிலளிக்கவில்லை. இந்த பிரச்னையை பரிசீலித்து அடுத்து என்ன செய்வது என்பது குறித்து முடிவு செய்வதாக தனது கட்சி உறுப்பினர்களிடம் கூறியதாக கூறப்படுகிறது. ட்ரூடோ வெள்ளிக்கிழமை அன்று தனது அமைச்சரவையை விரைவில் மறுசீரமைப்பதாகக் கூறினார். அடுத்த ஆண்டு தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்த பல அமைச்சர்கள் விட்டுச் சென்ற காலி இடங்களை நிரப்புவதற்காக இதனை அவர் தெரிவித்தார். கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ 2015 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளார். 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ட்ரூடோவின் கட்சி பெரும்பான்மை பெற முடியாமல் வேறு கட்சியின் ஆதரவுடன் ஆட்சியில் உள்ளது. புகைபிடித்தல், உடல் பருமனை தாண்டியும் 100 ஆண்டுகளுக்கு மேல் சிலர் உயிர் வாழும் ரகசியம் என்ன?22 டிசம்பர் 2024 விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?20 டிசம்பர் 2024 ஜக்மீத் சிங் யார்? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,ட்ரூடோவிற்கும் ஜக்மீத் சிங்கிற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், லிபரல் கட்சி நாடாளுமன்றத்திற்குள் முக்கியமான பிரச்னைகளில் என்.டி.பி கட்சிக்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில், பர்னாலா மாவட்டத்தில் உள்ள திக்ரிவால் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்தான் ஜக்மீத் சிங். அவரது குடும்பம் 1993இல் கனடாவுக்கு குடிபெயர்ந்தது. மார்ச் 2022 இல் ட்ரூடோவிற்கும் ஜக்மீத் சிங்கிற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், லிபரல் கட்சி நாடாளுமன்றத்திற்குள் முக்கியமான பிரச்னைகளில் என்.டி.பி கட்சிக்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டது. ஆனால், இதில் அதிகாரப் பகிர்வு பற்றிய விவகாரங்கள் இடம்பெறவில்லை. பெரும்பான்மை பெற முடியாவிட்டாலும், இந்த ஒப்பந்தம் காரணமாக ட்ரூடோவின் கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்தது. இதற்கு ஈடாக, என்.டி.பி கட்சியின் நோக்கங்களை நிறைவேற்ற ஜக்மீத் சிங்குக்கு ட்ரூடோ உதவ வேண்டியிருந்தது. ஜக்மீத் சிங் இந்தியாவை பல சந்தர்ப்பங்களில் விமர்சித்துள்ளார்.. ஏப்ரல் 2022 இல், ஜக்மீத் சிங், "இந்தியாவில் முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்படும் வன்முறை தொடர்பானப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பார்த்து கவலைப்படுகிறேன். முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டுவதை மோதி அரசு நிறுத்த வேண்டும். மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்" என்றார். இந்தியாவில் 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான நடந்த கலவரம் குறித்து ஜக்மீத் தொடர்ந்து தன் கருத்துகளை பதிவு செய்து வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக கனடாவில் சில இயக்கங்களின் செயல்பாடுகளுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. டிசம்பர் 2013 இல், அமிர்தசரஸ் வருவதற்கு ஜக்மீத் சிங்குக்கு இந்தியா விசா வழங்கவில்லை. "கட்சித் தலைவராவதற்கு முன்பு ஜக்மீத் சிங் காலிஸ்தான் பேரணிகளில் கலந்துகொள்வார்." என வாஷிங்டன் போஸ்ட் செய்தியில் குறிப்பிட்டிருந்தது. பரப்பளவில் உலகின் இரண்டாவது பெரிய நாடான கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் கணிசமாக வாழ்கின்றனர். கனடாவின் மக்கள் தொகையில் 2.1 சதவீதம் சீக்கியர்கள் வாழ்கின்றனர். கனடாவில் சீக்கிய மக்கள் தொகை கடந்த 20 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் கல்வி, தொழில், வேலைவாய்ப்பு போன்ற காரணங்களுக்காக இந்தியாவில் இருந்து கனடாவுக்கு சென்றுள்ளனர். வான்கூவர், டொராண்டோ, கல்கரி உட்பட கனடா முழுவதும் குருத்வாராக்கள் உள்ளன. ஜஸ்டின் ட்ரூடோ சீக்கியர்களுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறார். அவர் தனது முதல் ஆட்சிக் காலத்தில் அமைச்சரவையை அமைத்த போது, அதில் நான்கு சீக்கியர்களை அமைச்சராக்கினார். கடந்த 2015-ஆம் ஆண்டு ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய அமைச்சரவையில் சீக்கியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இடங்களை விட தனது அமைச்சரவையில் அதிக இடங்கள் வழங்கப்பட்டிருப்பதாக கூறியிருந்தார். கடந்த சில மாதங்களாக இந்தியாவுடன் காணப்பட்ட கசப்பிற்கு ட்ரூடோவின் காலிஸ்தான் ஆதரவு கொள்கையே காரணம் என்று பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தேர்தல் அரசியலால் இரு நாட்டு உறவுகளை ட்ரூடோ ஆபத்தில் ஆழ்த்துவதாகவும், பிரிவினைவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாகவும் இந்தியா பலமுறை குற்றம்சாட்டியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cgl9gd1gdryo
    • “ஆபிரிக்க நத்தைகளால் பேராபத்து”   பு.கஜிந்தன் ஆபிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெரு மழையின் பின்னர் பல பகுதிகளில் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. ஆபிரிக்கப் பெரும் நத்தைகள் ஏற்கெனவே இங்கு அவதானிக்கப்பட்ட போதும், இப்போது இவற்றின் பெருக்கம் அதிகமாக உள்ளது. பயிர் பச்சைகளையெல்லாம் தின்று தீர்க்கும் இவை, உள்ளூர் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு, நோய்களைப் பரப்பும் கருவிகளாகவும் செயல்படுகின்றன. இவற்றை இப்போதே கட்டுப்படுத்த தவறினால் விரைவில் பேராபத்துகளை விளைவிப்பவையாக அமையும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (22)  நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஐங்கரநேசன் இவ்வாறு எச்சரித்துள்ளார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், ஆபிரிக்கப் பெரும் நத்தைகள் (African Giant Snail- Lissachtina fulica)  பிரித்தானியர் ஒருவரால் பின் விபரீதங்கள் புரியாமல் இலங்கைக்குள் எடுத்துவரப்பட்ட ஓர் அந்நிய இனம். ஒரு நத்தையிலேயே ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள் இரண்டும் இருப்பதால் இரண்டு நத்தைகள் சோடி சேரும் போது இரண்டுமே முட்டைகளை உருவாக்குகின்றன. சராசரியாக 5 தொடங்கி 6 ஆண்டுகள் வரை வாழ்கின்ற ஒரு நத்தை தன் ஆயுளில் 1000க்கும் அதிகமான முட்டைகளை இடுகின்றன. அந்நிய இனமான இவற்றை இரையாக்க இலங்கையின் இயற்கைச் சூழலில் இரை கௌவிகள் எதுவும் இல்லை. இதனால் பல்கிப்பெருகி இப்போது ஓர் ஆக்கிரமிப்பு இனமாக உருவெடுத்துள்ளது. உலகின் உயிர்ப்பல்வகைமையின் அழிவுக்கு அந்நிய ஊடுருவல் இனங்களும் ஒரு பெரும் காரணமாக உள்ளது. பகலில் மறைந்திருந்துவிட்டு இரவில் இரை தேடும் ஆபிரிக்க நத்தைகள் பயிர்கள், அலங்காரச் செடிகள், புல் பூண்டுகள் என்று எல்லாவற்றையும் தின்று தீர்த்து வருகின்றன. ஒரு தாவரத்தில் உள்ள நோய்க்கிருமிகளை இன்னொரு தாவரத்துக்கு காவிச் செல்கின்றன.  இவற்றோடு  மனிதர்களில் மூளை மென்சவ்வு ஒவ்வாமையை ஏற்படுத்தும் ஒட்டுண்ணி புழுக்களை இவை காவித் திரிவதும் அறியப்பட்டுள்ளது. ஆபிரிக்க நத்தைகள் பயிர்ச்செய்கைக்கு, உயிர்ப்பல்வகைமைக்கும் அச்சுறுத்தலாக இருப்பதால் இலங்கை அரசாங்கம் இதை அந்நிய ஊடுருவல் இனமாக அறிவித்துள்ளது.   ஆபிரிக்க நத்தைகளைக் கட்டுப்படுத்துவதற்குத் திணைக்களங்களுக்காகக் காத்திராமல்  பொது அமைப்புகளும், பொதுமக்களும்  முன்வரவேண்டும். உப்பு நீர் கரைசல் உள்ள பாத்திரம் ஒன்றில் இவற்றை  அழுத்துவதன் மூலம்  சுலபமாக அழிக்க முடியும். ஆபிரிக்க நத்தைகள் நோய்க்காவிகளாகவும் இருப்பதால் வெறும் கைகளால் நேரடியாகத் தொடாமல் இலைகள், கடதாசிகள் போன்றவற்றால் இவற்றைப் பிடிப்பதே பாதுகாப்பானது. இதனை ஒரு சமூகக்கடமையாகக்கருதி நாம் விரைந்து செயல்படவில்லை எனில் ஏற்கெனவே பாரிய பொருளாதார சீரழிவுக்கு, சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு ஆளாகியிருக்கும் இலங்கை இந்நத்தையாலும் பெரும் சீரழிவுகளைச் சந்திக்க நேரும் என்றும் தெரிவித்துள்ளார்.   https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ஆபிரிக்க-நத்தைகளால்-பேராபத்து/150-349129
    • சேர் என அழைக்க வற்புறுத்திய வைத்தியர் அர்ச்சுனா! மனம் திறக்கும் வைத்தியர் சத்தியமூர்த்தி யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், தம்மை அச்சுறுத்தியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக வைத்தியர் த. சத்தியமூர்த்தியினால் பகிரங்க குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இந்தநிலையில் குறித்த விசாரணைகளுக்கு அமைய, தங்களது சமர்ப்பணங்களை யாழ். நீதவான் நீதிமன்றில் பொலிஸார்  முன்வைத்துள்ளனர். இந்நிலையில்   இலங்கையில் வைத்தியத்துறையானது முன்னைய காலங்களில் பலராலும் பேசப்பட்டு வந்ததாக இருந்தாலும் தற்போது பலரது எதிர்மறையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலே வைத்தியத்துறை மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி மற்றும் பிரித்தானியாவில் பணியாற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சதானந்தன் ஆகியோர் இன்றைய லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான கருத்துக்களை முன்வைத்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், https://tamilwin.com/article/what-happen-srilanka-free-medical-sector-udaruppu-1734869196
    • 23 DEC, 2024 | 09:55 AM   பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை சோதனை செய்யும் நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியில் இன்று திங்கட்கிழமை (23) முதல் முன்னெடுப்பதற்கு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில், வாகன சாரதிகள் மது  போதையில் வாகனத்தை செலுத்துவது தொடர்பில்  சிறப்பு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன்படி,  பஸ் சாரதிகளின் கவனக்குறைவு , அதிவேகமாக வாகனம் செலுத்துதல், போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் செலுத்துதல், பொருத்தமற்ற நிலையில் உள்ள டயர்கள் அல்லது கோளாறுகள் மற்றும் குறைபாடுகள் உள்ள வாகனங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இவ்வாறான, குறைப்பாடுகளுடன் வாகனம் செலுத்தும் சாரதிகள் தொடர்பில் 119 அல்லது 1997 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கோ அல்லது அந்தந்த பிரிவுகளுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளுக்கோ அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.   இதேவேளை,வாகனங்களை சோதனையிடுவதற்கு 24 மணிநேரமும் நாடு முழுவதும் போக்குவரத்து அதிகாரிகளை சேவையில் ஈடுப்படுத்தவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/201927
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.