Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

548202839_764856292919221_35845415425150

நிஜமான சோலார் அடுப்பு ........! 👍

  • Replies 1k
  • Views 156.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • *திருமணமாகிப் புதிதாக வீட்டுக்கு வந்த மருமகளிடம் மாமியார் சொன்னார்* "இந்த வீட்டுக்குன்னு சில வரைமுறை இருக்கும்மா. இது ஒர

  • குடித்துவிட்டு மனிசிக்கு அடிப்பவர் -- மது ஹிட்டர். குடித்துவிட்டு பிள்ளைகளுக்கு உதைப்பவர் - மது ஹிக்கர். குடித்து விட்டு சைட் அடிப்பவர் - மது நோக்கர். குடித்துவிட்டு நடனமாடுபவர் - மது ட

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்


🌷கரிசக்காட்டுப்பூவே🌷

கௌரி சற்குணம் ·Ssenoopdrtgu28iht1tc607a8lf0t9ghlhh9m7u1t007fll130g15519g3 9 ·

ஒரே ஒரு குட்டித் தாவலில் கடக்க கூடிய உலகின் மிகக் குறுகலான நதி... ஆச்சரியம்தான்!

சில சென்டிமீட்டர் மட்டுமே அதாவது ஒரே தாவலில் கடக்க கூடிய உலகின் மிகக் குறுகலான நதி .

நதிகள் என்றவுடன் அகண்டு விரிந்து பல கிலோமீட்டர்களுக்கு கடந்து செல்வதோடு, இரு நாடுகளுக்கும் இடையில் பாயும் நதிகள் ஏராளம் உள்ளன. ஆனால் சில சென்டிமீட்டர் மட்டுமே அதாவது ஒரே தாவலில் கடக்க கூடிய உலகின் மிகக் குறுகலான நதி வடக்கு சீனாவின் மங்கோலியா பகுதியில் அமைந்துள்ள ஹுவாலை (Hualai) நதி தான் உலகிலேயே மிக குறுகலான நதி ஆகும்.

இந்த நதியானது 17 கிலோமீட்டர் மட்டுமே நீளம் கொண்டது. அதன் அகலம் வெறும் 4 செமீ முதல் 15 சென்டிமீட்டர் வரை மட்டுமே.

Hualai போன்ற ஒரு நதி உண்மையில் இருக்கிறது என்பதை நம்புவது கடினம். ஆனால் சீன நிபுணர்களின் கூற்றுப்படி, அது குறைந்தது 10,000 ஆண்டுகளாக கோங்கர் புல்வெளி வழியாக பாய்கிறது என்கின்றனர்.

ஹுவாலை நதி ஒரு நிலத்தடி நீரூற்றில் இருந்து உருவாகிறது. ஹெக்சிக்டன் புல்லேண்ட்ஸ் இயற்கை காப்பகத்தில் உள்ள தலாய் நூர் ஏரியில் பாய்கிறது.

ஹுவாலையை நதியாகக் கூட கருத முடியாத அளவுக்கு குறுகலானது என்று சிலர் கூறினாலும், ஆறுகள், ஓடைகள் மற்றும் சிற்றோடைகளுக்கு இடையே அளவு வேறுபடுத்திக் காட்டும் காரணியாக இல்லை என்பதே உண்மை. இந்த நதி ஒரு நிரந்தர நீர்நிலையாகும். இது ஆண்டு முழுவதும் சீராக பாய்கிறது.

ஹுவாலை 'புத்தகப் பாலம் நதி' என்றும் அழைக்கப்படுகின்றது. ஒரு சிறுவன் ஆற்றைக் கடக்க முயன்றபோது தவறி விழுந்து, தனது புத்தகத்தை ஹுவாலையின் குறுகலான பகுதிகளில் ஒன்றின் மேல் இறக்கி வைப்பது தொடர்பான நாட்டுப்புறக் கதைகள் இருக்கின்றன. மறுகரைக்கு செல்ல முயன்ற எறும்புகளுக்கு, இந்த புத்தகம் பயனுள்ள பாலமாக மாறியதாம். இதனால், புத்தகப் பாலம் நதி என்ற பெயரும் ஒட்டிக்கொண்டது.

ஹுவாலை நதி அகலமாக இல்லாவிட்டாலும், அதன் ஆழம் 50 சென்டிமீட்டர் வரை உள்ளது என்பதும் மேலும் ஒரு ஆச்சரியம்தான்.

உயரமோ, அகலமோ, நீளமோ எவ்வாறு இருந்தாலும் எவ்வளவு தூரம் இருந்தாலும் எந்த நாடாக இருந்தாலும், நதிக்கு முக்கியத்துவம் கொடுத்து முறையாக பராமரித்து, நீர் தேவைகளுக்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்துவதோடு, நீரை சிக்கனமாக பயன்படுத்தினால் அந்நாட்டு மக்கள் செழிப்பாக இருப்பதோடு, வருங்கால தலைமுறையினருக்கும் நன்மை பயக்கும்......!

Voir la traduction

547119084_1300321898411075_4907780828832

548215863_1300321951744403_7161063095529

  • கருத்துக்கள உறவுகள்

548362274_1184721863689283_2588197623585

  • கருத்துக்கள உறவுகள்

552073852_122101080555030489_22203107054

  • கருத்துக்கள உறவுகள்

550442661_1110396851215062_6783538799721

  • கருத்துக்கள உறவுகள்


Creativity கிரியேட்டிவிட்டி
  · 

Anbu Anbu ·redonSospt450ut120t6ài44934437973fui3:c12r29i,g0941H72  eft2 ·

இராணித் தேனீ 🐝" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tf8/1/20/1f41d.png" style="border: 0px; border-start-start-radius: 0px; border-end-end-radius: 0px; border-start-end-radius: 0px; border-end-start-radius: 0px; object-fit: fill;">

இராணிமார்கள் பிறக்கவில்லை, அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்..

இது தேனீ உலகில் ஒரு அற்புதமான கதை! ஒரு இராணித் தேனீ இறந்துவிட்டால் கூட, ஒரு நாட்டைப் போலவே தேனீ கூட்டத்தில் குழப்பம், அரசியற்ற நிலை ஏற்படுவதில்லை. அதற்கு பதிலாக, முழு கூட்டமும் அமைதியாக ஒரு இலக்கிற்காக ஒன்றிணைகிறது.. தேனீ கூட்டம் உடையாது. அது ஏற்கின்றது. அத்துடன், புதிய இராணி ஒருவருக்காக ஒரு குட்டி தேர்ந்தெடுக்கப்படுகிறது. சாதாரண தோற்றமுள்ள குட்டிகள் பலரிலிருந்து சிலரை தேர்வு செய்கின்றார்கள். அவர்கள் சிறப்பானவர்கள் என்பதாலல்ல, அவர்கள் சிறப்பானவர்களாக மாறும் வாய்ப்பு இருப்பதால் தான்.

எந்த குட்டி எதிர்கால இராணியாக மாறும் என்பதை தீர்மானிப்பது விதியோ ஜீன்களோ அல்ல. அது அவருக்குக் கொடுக்கப்படும் உணவாகும். அதாவது, அவருக்கு வழங்கப்படும் சிறப்பு உணவான ராயல் ஜெல்லி (Royal Jelly) காரணமாகும். இந்த அடர்த்தியான, ஊட்டச்சத்து நிறைந்த திரவம் தான் மாற்றத்தின் அமிர்தமாக விளங்குகிறது. அதுவே ஒரு சாதாரண குட்டியை அசாதாரணமான இராணியாக மாற்றும் மாயாஜாலம். இங்கே முக்கியமானது விதியல்ல, ஊட்டச்சத்துதான்.

ராயல் ஜெல்லி என்பது தேனீகள் தயாரிக்கும் ஒரு தனிப்பட்ட திரவமாகும். இது வெண்மையான, கிரீம் போன்ற தோற்றம் கொண்டதாகும். தேனீ உலகில், இந்த ராயல் ஜெல்லி தான் இராணி தேனீயின் வாழ்க்கையும் வளர்ச்சியிலும் முக்கிய ரகசியமாக இருக்கிறது.

இது பெரும்பாலும் நீர், புரதங்கள், சர்க்கரை வகைகள் (பிருக்டோஸ் மற்றும் கிளூகோஸ் உட்பட), கொழுப்புகள், B வகை வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் அமினோ அமிலங்களைக் கொண்ட கலப்பாகும். இதில் உள்ள மிக முக்கியமான தனித்துவம் வாய்ந்த சேர்க்கை 10-HDA (10-hydroxy-2-decenoic acid) எனப்படும். இது ராயல் ஜெல்லியில் மட்டுமே காணப்படும், சுகாதார நன்மைகளுக்குத் தோற்றம் தரும் தன்மை கொண்டது.

ராயல் ஜெல்லி தயாரிக்கப்படுவது இளம் வேலைக்கார தேனீக்களால் (worker bees). அவற்றின் உடலில் உள்ள pharyngeal மற்றும் mandibular glands என்பவற்றின் ஸ்ராவங்களை கலப்பதன் மூலம் இந்த ஜெல்லி உருவாகிறது. குறிப்பாக 5 முதல் 15 நாட்கள் வயதுடைய இளம் வேலைக்கார தேனீகள் இந்த பணிக்குத் தனிப்பட்டவை. அவர்கள் தங்கள் உடலில் உள்ள கொழுப்பு சுரப்பிகளில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, பின் அதை pharyngeal gland மூலம் ஜெல்லியாக மாற்றுகிறார்கள்.

ஒரு புதிய இராணித் தேனீ உருவாக்க வேண்டியபோது, வேலைக்கார தேனீக்கள் விசேட இராணி அறைகள் (Queen cells) கட்டுகிறார்கள். அவற்றில் முட்டை இடப்பட்ட பிறகு, அந்த குட்டிக்குத் தொடர்ந்து அதிகளவில் ராயல் ஜெல்லி வழங்கப்படுகிறது. மற்ற சாதாரண குட்டிகள் ராயல் ஜெல்லி பெறுவது வாழ்நாளின் ஆரம்ப 2–3 நாட்களுக்கு மட்டுமே. பின்னர் அவர்கள் Bee Bread எனப்படும் தேன் மற்றும் மகரந்தக் கலவையை உண்ணுகிறார்கள்.

ராயல் ஜெல்லியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஹார்மோன் போன்ற சேர்மங்கள் அந்த குட்டியின் மரபணு செயல்பாடுகளை மாற்றி, சாதாரண தேனீவைக் காட்டிலும் பெரியதாகவும், நீண்ட நாட்கள் வாழக் கூடியதாகவும், முட்டை இடக் கூடியதாகவும் மாற்றுகின்றன. இது ஊட்டச்சத்துக்களால் உயிரினரின் விதியை மாற்ற முடியும் என்பதற்கான அபூர்வமான எடுத்துக்காட்டாகும்.

ராயல் ஜெல்லி தொடர்ந்து பெறும் ஒரே குட்டி தான் இராணியாக மாறுகிறாள். அவள் பெரிதாக மாறுகிறாள், நீண்ட காலம் வாழ்கிறாள், கூட்டத்தின் தலைமை பொறுப்பை ஏற்கிறாள், அதை மறுபடியும் கட்டியெழுப்புகிறாள். குழப்பமிருந்த இடத்தில் ஒழுங்கும் ஒற்றுமையும் ஏற்படுத்துகிறாள். அவள் அதிகாரத்துக்காக பிறக்கவில்லை, ஆனால் அதற்கேற்ப உருவாக்கப்படுகிறாள்........!

படித்ததில் பிடித்தது..

பகிர்வு பதிவு !!

553593525_122256686804020523_13423487407

  • கருத்துக்கள உறவுகள்

ancient method of well water pumping |நாட்டுப்புற பாட்டு |folk song for agriculture |ஏற்றப்பாட்டு..........! 😃

  • கருத்துக்கள உறவுகள்

555648096_122273126204067741_17396372576

நல்லதொரு குடும்பம் பல்நிறக் கதம்பம் .........! 👍

  • கருத்துக்கள உறவுகள்

556097486_802625875792573_11602874890729

  • கருத்துக்கள உறவுகள்

557612249_3148194048696806_7981453149752

உண்மை விசித்திரமானது .........! 😂

  • கருத்துக்கள உறவுகள்

557615571_841117145128535_89189071615806

  • கருத்துக்கள உறவுகள்

பிரெஞ்சில் கோபத்தில் பேசும் சில வார்த்தைகள் . ........ ! 🙂

  • கருத்துக்கள உறவுகள்

558195040_811144944623518_24660756829310

  • கருத்துக்கள உறவுகள்

காவலூர் அகிலன் ·

ஒருவர் மண்ணுலகை விட்டு

விண் உலகிற்கு பிரிந்து சென்றதை...அதுவும்

வலுக்கட்டாயமாக

உயிருடன் அனுப்பப்பட்டதை

மறக்க முடியாமல் சிலர் 67 வருடங்களாக தவித்து வருகின்றனர்.

லைக்கா, அன்பான, அமைதியான ஜீவன். எல்லா உணர்வுகளையும்

கண்ணிலும், உடல் மொழியிலும் சொல்லி விடக் கூடிய உயிர். வாழ்நாள் முழுவதும் வலிகளை மட்டுமே சுமந்த நிலையில், திடீர் என ஒரு நாள், விண்வெளி ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது லைக்கா. அதற்குரிய பயிற்சிகளிலும் தேர்ச்சி பெற்றது. நம்மை என்ன செய்கிறார்கள். ஏன் அந்தரத்தில் கட்டி விட்டு மிதக்க சொல்கிறார்கள். ஏன் கறி சோறு தராமல் என்னவோ மருந்து பவுடர்கள் கொடுக்கிறார்கள்? ஏன் தண்ணீர் தர மறுக்கிறார்கள்? எதுவுமே தெரியாது லைக்காவுக்கு. ஆனால், ஒரு நாள் திடீர் என தரதரவென்று இழுத்து போய் ஏதோ வண்டியில் ஏற்றி விட்டார்கள். ஆனால், கூட யாருமே வர வில்லை. தன் எஜமானர் அழுவதை பார்த்து தானும் அழுதாள் லைக்கா. அவ்வளவுதான். அந்த வாகனம் முழுக்க மூடப்பட்டது. வண்டி எங்கோ போவது புரிந்தது.

கொஞ்ச நேரத்தில் வயிறு தொண்டைக்கு வந்தது. என்னவோ சரி இல்லை என்று தோன்றியது. யாரிடமாவது சொல்லலாம் என்றால் அருகே யாரும் இல்லை. சின்ன சின்ன கேப்சூல் மாத்திரைகளில் உணவு இருந்தது. கொஞ்சம் நீர் இருந்தது. சுத்திமுத்தி வாகன சுவர்கள் இருந்தது.

1957 நவம்பர் 3 ஆம் தேதி ஸ்புட்னிக் 2 என்னும் விண்வெளி கலத்தில், ஆராய்ச் சிகளுக்காக அனுப்பப்பட்டதுதான் லைக்கா. உயிருடன் பூமிக்கு திரும்பி வர வாய்ப்பே இல்லை என்று தெரிந்தே அனுப்பப்பட்டது .

மிஞ்சி மிஞ்சி ஒரு வாரம் அல்லது 10 நாள் மட்டுமே உயிருடன் இருக்கும் என்று தெரிந்தே அனுப்பப்பட்டது. அதன்படியே தன்னந்தனியாக, அமைதியாக விண்வெளியில் உயிரை விட்டது லைக்கா. உணவு தீரும் முன் 2,570 முறை பூமியை சுற்றி வந்தது லைக்கா. இதில் எதுவுமே லைக்காவின் முடிவு அல்ல. மனிதர்களின் முடிவு. அறிவியல் வளர்ச்சி, விண்வெளியில் என்ன எப்படி இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கும் மனிதர்களின் வேட்கைக்கு பலியான உயிர் லைக்கா.

லைக்கா - ஒரு நாய்.

பூமியில் இருந்து கிளம்பும் முன் அது பார்த்த பார்வையை

பாருங்கள். அதன் கண்களை பாருங்கள்....

அந்த பார்வையை பார்த்த சில மனிதர்கள், 67 வருடங்கள் ஆக, இன்று வரை ஒவ்வொரு நவம்பர் 3 ஆம் தேதி அன்று மெழுகுவர்த்தி ஏற்றி, பூக்களை வைத்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்!!!

படித்தேன் பகிர்கிறேன்.😌"

Voir la traductio

562089446_3227114097466443_9101709684983

  • கருத்துக்கள உறவுகள்

561409953_5080958952129396_7642713587928

R.s. Manoharan ·

இந்தப் புகைப்படம் அற்புதம்! தண்ணீரில் படிப்பவர் போல் தெரிகிறது, ஆனால் நீங்கள் பெரிதாக்கும்போது, ஆள் இல்லை, புத்தகம் இல்லை, வாசிப்பு இல்லை, எல்லாம் ஒரு மாயை.

இது வாழ்க்கையைப் போலவே இருக்கிறது, அது இருப்பது போல் தெரிகிறது, ஆனால் அது இருப்பது போல் இல்லை!

FBல் ரசித்தது

மாற்றம் ஒன்றே மாறாதது........!

  • கருத்துக்கள உறவுகள்

Chandran Veerasamy ·

திருப்பூரில் வாழ்ந்து இளம் வயதில் சுதந்திரப் போரில் உயிர் நீத்த கொடி காத்த குமரனின் வரலாற்றை நாம் படித்திருப்போம். இந்த கொடி காத்த குமரனின் மனைவி ராமாயி மிகவும் வறுமையில் உழல்வதாகத் தகவல் கிடைத்ததும் முதலமைச்சாரா இருந்த எம்ஜி.ஆர் அவரை நேரில் சந்தித்தார்.

நாட்டுக்காக உழைத்த நல்லவரின் மனைவி பிறரிடம் உதவி பெறுவதை விரும்பமாட்டார் என்பதை நன்குணர்ந்த எம்.ஜி.ஆர் ராமாயியை அவர் வீட்டில் சந்தித்து அம்மா நான் உங்கள் மகன் எம்.ஜி.ராமச்சந்திரன் வந்திருக்கிறேன். என் தாய்க்கு நான் உதவ விரும்புகிறேன் என்றார். ராமாயியின் மனம் நெகிழ்ந்தது. மகன் தரும் உதவியை எந்தத் தாயாவது மறுப்பாரா? ஏற்றுக்கொண்டார்.

இந்த உறவை ராமாயி அம்மாள் இறுதிவரை பெருமையாக ஏற்றுக்கொண்டார். என் மகன் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்னையில் இருக்கிறார் என்று அந்தத்தாய் அன்போடு குறிப்பிடுவோர். எம்.ஜி.ஆர் அந்த ராமாயி அம்மாவை, ‘அம்மா” என்று அழைத்தது செய்தி அல்ல. ராமாயி அம்மா அவரை தனது மகன் என்று அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டதுதான் செய்தி.

Voir la traduction

566254363_25086926220971274_201810101943

  • கருத்துக்கள உறவுகள்

Murugesan N  ·

பேசமுடியாதவர்களின் உணவுகள் பேசுகின்றன !

சென்னை, வேளச்சேரி, 'பீனிக்ஸ் மாலி'ற்கு பக்கத்தில் உள்ளது, இந்த வித்தியாசமான உணவு கடை. வாடிக்கையாளர்கள் உள்ளே நுழையும்போது, இன்முகத்துடன், 'சைகை'யால் வரவேற்கின்றனர், இரு பெண்கள்.

வந்தவர்களும், பதில் வணக்கம் தெரிவித்து, 'சைகை'யால் ஏதோ சொல்கின்றனர். பெண்கள் இருவரும் புரிந்து, தலையாட்டுகின்றனர்.

சிறிது நேரத்தில், சப்பாத்தி, தோசை மற்றும் இட்லி சுடச்சுட தயாராகி, அவர்களது இருக்கைக்கு செல்கிறது. பிரமிளா, ரத்னம் என்ற, இந்த இரு பெண்களுக்கும் காது கேட்காது, பேச வராது. ஆனால், பிரமாதமாக சமைக்க தெரியும்.

இருவரும் பிழைப்பு தேடி, தங்களது ஊரை விட்டு, சென்னை வந்தனர்.

இங்கே உள்ள காது கேளாதோர் அமைப்பின் மக்கள் தொடர்பாளராக இருக்கும் சித்ராவை சந்தித்து, தங்கள் வாழ்வாதாரத்திற்கு உதவும்படி கேட்டனர்.

சித்ராவும் இவர்களை அழைத்து, மாற்றுத்திறனாளிகளுக்காக வாதாடும் வழக்கறிஞர்களான, பிரபாகரன், கற்பகம் ஆகியோரை சந்திக்க வைத்தார்.

அவர்களது வழிகாட்டுதலின்படி, சேலம், ஆர்.ஆர்.பிரியாணி அதிபர், தமிழ்ச்செல்வனை சந்தித்தனர்.

'உங்களுக்கு என்ன உதவி வேண்டும்?' என்று அவர் கேட்க, 'எங்களுக்கு தள்ளு வண்டி வாங்கிக் கொடுத்தால், சென்னையில், நடமாடும் உணவகம் அமைத்து, பிழைத்துக் கொள்வோம்...'

என்று கூறியுள்ளனர்.

'தள்ளு வண்டி வேண்டாம்;சிரமம் அதிகம். அதற்கு பதிலாக, வேளச்சேரி பிரதான சாலையில் இருக்கும், என்னுடைய, ஆர்.ஆர்.பிரியாணி கடையையும், கடைப் பொருட்களையும், காலையும் - மாலையும் கட்டணமில்லாமல் உபயோகித்துக் கொள்ளுங்கள்...' என்று, கொடுத்து உதவினார்.

அதன்படி, இப்போது இவர்கள் , காலையில், இட்லி, தோசை மற்றும் இடியாப்பமும்; மாலையில், இட்லி, தோசை, சப்பாத்தி, புரோட்டா மற்றும் 'பிரைடு ரைஸ்' என, விதவிதமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இவர்களது சுவையான உணவிற்காகவே, நிறைய வாடிக்கையாளர்கள் வருகின்றனர்.

அவ்வாறு வருபவர்கள், இவர்களின் நிலைமையை புரிந்து, 'சைகை' மொழியில் வேண்டியதை கேட்டு, சாப்பிடுகின்றனர்.

புது வாடிக்கையாளர்களுக்கும், இந்த இரு பெண்களுக்கு பாலமாகவும், பணவரவு செலவை பார்த்துக் கொள்ளவும் கூடவே இருக்கிறார், சித்ரா.

தற்போது, தங்களைப் போன்ற மேலும் சிலருக்கு வேலை வாய்ப்பு தர உள்ளனர்.உழைத்து பிழைக்க தயாரான இவர்கள்,

பலருக்கு வேலை வாய்ப்பு தரும் அளவிற்கு உயர்ந்திருப்பது பாராட்ட வேண்டியது தான்.

தலைவணங்குகிறேன்.

by செந்தில்குமார்

பகிர்வு

Voir la traduction ..........!

571106023_3658263620973916_5620714053290

  • கருத்துக்கள உறவுகள்

Thapes Vlogger est à Oslo, Norvège.  · 

Svalbard 🇳🇴" நோர்வேயின் இந்த தீவில் நீங்கள் பிள்ளை பெற்றுக்கொள்ளவும் முடியாது, மரணமடையவும் முடியாது..

இந்த தீவைப்பற்றிய சில சுவாரிசயமான தகவல்கள் முதலில்..

அமைவிடம்: பூமியின் வட துருவ Arctic சமுத்திரத்தில்..

முக்கிய நகரம்: Longyearbyen

மக்கள் தொகை: 2881 (June 2025)

Winter காலங்களில் November,December,January இந்த மூன்று மாதங்களும் இங்கு சூரியனை காணமுடியாது..

(இந்த மூன்று மாதங்களும் மக்கள் தொடர்ந்து இருட்டுக்குள் தான் வாழ வேண்டும்)

ஒரு நாளின் 24 மணி நேரமும் இருட்டாக இருப்பதால், Northern Lights பார்க்க இது ஒரு சிறந்த பகுதி.

அது போல கோடை காலங்களில் 4-5 மாதங்கள் 24 மணி நேரமும் இங்கு சூரிய வெளிச்சம் இருக்கும்.

மரங்கள் ஏதும் இல்லாத ஒரு தீவு..

இந்த தீவின் மக்கள் தொகையை விட பனிக்கரடிகள் அதிகமாக வாழ்கின்றன இங்கு..

இந்த தீவில் பூணைகளுக்கு அனுமதியில்லை..

இங்கு பெண்கள் யாரும் பிள்ளை பெற்றுக்கொள்ள அனுமதியில்லை. ஆனாலும் சில பிள்ளைகள் இங்கு பிறந்திருக்கின்றன.

பிரசவ திகதிக்கு ஒரு மாதத்திற்க்கு முன்பே பெண்கள் இந்த தீவை விட்டு வெளியேறி நோர்வேயின் Mainland பகுதிக்கு வந்துவிட வேண்டும். இந்த தீவில் மட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ சேவைகளே இருக்கின்றன.

அதே போல இந்த தீவில் யாரும் இறந்தாலும், அங்கே அவர்களை புதைப்பதில்லை, காரணம் அந்த பனிமலைகள் காரணமாக உடல்கள் உக்கிவிடுவதில்லை.

அப்படி உக்காத ஒரு உடலினால் 1918 களில் ஒரு பெரும் தொற்றே உருவாகியிருக்கிறது.

இந்த தீவில் மட்டும் 2100 பனிமலைகள் (Glaciers) இருக்கின்றன இவை 3000-4000 ஆண்டுகள் பழமையானவை.

குறிப்பிட்ட மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தை தவிர்த்து வேறு இடங்களுக்கு நீங்கள் செல்ல நேர்ந்தால், கையில் துப்பாக்கியுடன் தான் செல்லவேண்டும், இல்லையெனில் நீங்கள் திரும்பி வரமாட்டீர்கள்😀" (பனிக்கரடி)

துப்பாக்கி பாவனைகளுக்கு தனிச்சட்டங்கள் இருக்கிறது இந்த தீவில்..

இந்த தீவு ஒரு Frozen Desert அதாவது பனிப்பாலைவனம்.

இந்த தீவில் தான் உலகின் உள்ள அணைத்துவகையான தானியங்களும் ஒரு களஞ்சியத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் போர்கள் வந்து(அணுஆயுத) எல்லாம் அழிந்தாலும் இந்த களஞ்சியத்திலிருந்து எல்லாவற்றையும் மீண்டும் உருவாக்கலாம்.

இப்படி இன்னும் பல சுவாரிசயமான தகவல்கள் இந்த தீவைப்பற்றி இருக்கின்றன..

இது நோர்வேயினுடைய ஒரு தீவு தான், ஆனால் நோர்வேயின் எல்லா சட்டதிட்டங்களும் இந்த தீவில் செல்லுபடியாகது.

இந்த தீவிற்க்கு என்று ஒரு தனியான சட்டம் இருக்கிறது

Svalbard Treaty, அத்துடன் இந்த தீவிற்கென ஒரு தனாயான ஆட்சியரும்(Governor) இருக்கின்றார்.

இந்த தீவில் ஒரேயொரு விமான நிலையம் மட்டும் தான் இருக்கிறது.

இந்த தீவுக்கு நீங்கள் போக வேண்டும் என்றால் நோர்வேயின் இரண்டு நகரங்களிலிருந்து மட்டும் தான் இங்கு போக முடியும்.

அந்த நகரங்கள்..

தலைநகரம் Oslo மற்றும் வடக்கிலுள்ள Tromsø நகரம்.

அங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலும் சுற்றுலாத்துறை சம்பந்தமானவர்கள் மற்றும் உலக ஆராய்ச்சியாளர்கள்..

இந்த தீவு ஒரு Visa-Free Zone

Schengen ஒப்பந்தத்தில் உள்ள 29 நாடுகளில், ஏதாவது ஒரு நாட்டின் Visa (நுழைவு/வதிவிட அனுமதிப்பத்திரம்) இருக்குமானால் நீங்கள் இந்த தீவில் தங்கி நின்று வேலை செய்யலாம்..

நானும் இந்த தீவில் குடியேறத் தான் வேலை ஒன்று பார்த்துக்கொண்டிருக்கிறேன்..🫣"

மற்றது தமிழர்கள் இல்லாத ஒரு இடமா பார்த்து குடியேறவேண்டும் என்று யாராவது சொன்னால், இந்த தீவை காட்டிவிடுங்கள்..😀"

(இந்த படத்தில் இருப்பது Svalbard தீவு தான்) #fblifestyle

Voir la traduction........!

571277039_25252492797697163_105532337966

  • கருத்துக்கள உறவுகள்

பனி மலர்  ·

Venkatesan Vellore ·Sdtrsnpoeo0i809egio8,mtii u661t722h3470i56uh34:7m2l1ub5rico  ·

சமீபத்திய தஞ்சை பயணத்தின் போது, பொறியாளர் ஒருவர் மூலம் நாம் பெற்ற, தஞ்சை பெரியகோவில் கட்டுமானம் பற்றிய ஒரு தகவல்...!

கோபுர உச்சியை உற்று நோக்குங்கள்..

கோபுரஉச்சியை நன்கு உற்று நோக்குங்கள்.

பிரம்மாந்திர கல் எனப்படும் ஸ்தூபிக்கல்.

இது ஒரு கல்லோ அல்லது பல கற்களின் சேர்க்கையோ இதன் எடை 80 டன்...

இந்த பிம்மாந்திர கல்லை தாங்கும் அந்த சதுரவடிவக் கல்லை நோக்குங்கள்...

அந்த கல்லும் 80 டன்...

அந்த சதுரக் கல்லின் மேல் பக்கத்திற்கு இரண்டு நந்தியாக மொத்தம் எட்டு நந்தி...

ஒவ்வொரு நந்தியின் எடை 10 டன்.

ஆக, எட்டு நந்தியின் மொத்த எடை 80 டன்..

இந்த மூன்றும்தான் பெரியகோவிலின் அஸ்திவாரம்..

இது என்ன விந்தை...!

அஸ்திவாரம் அடியில்தானே இருக்கும்.. தலைகீழான கூற்றாய் உள்ளதே..?

நாம் ஒரு, செங்கற்களை கொண்டு ஒரு வீடு கட்டும்போது, கட்டிடத்தின் உயரம் 12 அடி என்றால்

4 அடிக்காவது அஸ்திவாரம் இடுவோம்...

பெரியகோவில் உயரம் 216 அடி...

முழுக்க கற்களைக்கொண்டு எழுப்பப்படும்

ஒரு பிரம்மாண்ட கற்கோவில்..

கற்களின் எடையோ மிக மிக அதிகம்..

இவ்வளவு பெரிய கோவிலுக்கு அஸ்திவாரம் எவ்வாறு அமையும்...?

குறைந்தது 50 அடி ஆழம், 50 அடி அகல

அஸ்திவாரம் வேண்டும்.. இந்த அளவு சாத்தியமே இல்லை.. 50 அடி ஆழத்தில் வெறும் தண்ணீரும் புகை மண்டலமாகத்தான் இருக்கும்...

ஆனால்... பெரியகோவிலின் அஸ்திவாரம் வெறும் 5 அடிதான்...

மேலும் ஒரு வியப்பு...

இது எப்படி சாத்தியம்..?!

இங்குதான் நம்ம சோழ விஞ்ஞானிகளின் வியத்தகு அறிவியல் நம்மை சிலிர்ப்படையச் செய்கிறது...!

பெரியகோவில் கட்டுமானத்தை,

அதாவது கற்கள் இணைக்கப்பட்டதை...

“இலகு பிணைப்பு” என்கிறார்கள்...

அதாவது Loose joint என்கிறார்கள்.. அதாவது ஒவ்வொரு கல்லையும் இணைக்கும் போது,

ஒரு நூலளவு இடைவெளிவிட்டு அடுக்கினார்கள்..

எதற்காக ?

நமது கிராமத்தில் பயன்பட்ட கயிற்று கட்டிலை

நினைவில் கொள்ளுங்கள்.. கயிறுகளின் பிணைப்பு... லூஸாகத்தான் இருக்கும்...

அதன் மேல் ஆட்கள் உட்காரும் போது, கயிறுகள் அனைத்தும் உள் வாங்கி இறுகிவிடும்...

கயிறுகளின் பிணைப்பு பலமாகிறது...

இதன் அடிப்படைதான் பெரியகோவில் கட்டுமானம் ..

லூஸாக கற்களை அடுக்கிக்கொண்டே சென்று,

அதன் உச்சியில் மிக பிரம்மாண்டமான எடையை அழுத்தச் செய்வதன் மூலம், மொத்தகற்களும் இறுகி மிக பலமான இணைப்பை பெறுகின்றன...

இதுதான் அந்த 240 டன் எடை கொண்ட,

ஸ்தூபி, சதுரக்கல் மற்றும் எட்டு நந்தி..

அஸ்திவாரம் கோவிலின் உச்சியில் இடம் பெற்ற அதிசயம் இது...!!!

எத்தனை பூகம்பம் வந்தாலும் எந்த கல்லும் அசையாது.

எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நிலைபெற்று இருக்கும்...

சூரியசந்திரர் இருக்கும் வரை இக்கோவிலும் இருக்கும்... என்ற நம் இராஜராஜ சோழ மன்னரின் நம்பிக்கை எந்த காலத்திலும் பொய்க்காது...!!!

Voir la traduction

571209458_2052504015286357_2771077078182

  • கருத்துக்கள உறவுகள்

577048996_1422987392519433_8322356976079

  • கருத்துக்கள உறவுகள்

DoctorFarook Abdulla  ·

இன்று இந்தப் பதிவை எழுதி இந்த உன்னதமானவரைப் பற்றி

தெரிவித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்குகிறேன்

படத்தில் நாம் அனைவரும் பார்ப்பது

யார் தெரியுமா?

உழைப்பாலும்

அறிவாலும்

ஆற்றலாலும்

சிந்தனையாலும்

ஒப்பற்ற நிலையை எய்திய பெண்மணி

திருமதி மரியா சலோமியா ஸ்கொலோட்வ்ஸ்கா அவர்கள்.

இவரைப் பற்றி எழுதும் கணமெல்லாம் புல்லரிக்கும்படி இருக்கும் இவரது வரலாறு.

வாருங்கள் இவரது கதையைக் கூறுகிறேன்.

பிறந்தது 1867 ஆம் ஆண்டு

போலந்து நாட்டில் உள்ள வார்சவ் எனும் நகரத்தில்

இவர் பிறந்த போது போலந்துக்கு சுதந்திரம் கிடைக்காமல்

ரஷ்யா, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா ஹங்கேரி ஆகிய நாடுகள் போலந்தைக் கூறுபோட்டு பாகம் பிரித்து ஆண்டுவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சூழலில் இவரது தந்தை

தவறான முதலீட்டில் தனது செல்வத்தை இழக்க குடும்பம் வறுமைக்குத் தள்ளப்படுகிறது.

படிப்பில் படுகெட்டி. அதீத நினைவாற்றல். ஆழ்ந்த சிந்தனையாற்றல் என்று இருந்தவரை வறுமை மேற்படிப்பு படிக்க அனுமதிக்கவில்லை.

இவருக்கு ப்ரோனிஸ்லாவா எனும் அக்காள் இருக்கிறார்.

அவர் ப்ரான்சின் தலைநகரமாம் பாரிஸில் தங்கி மருத்துவம் பயில்வதற்கு ஏதுவாக பணம் அனுப்புவதற்கு தங்கையான மேரி க்யூரி தனது 16 வயதில்

செல்வந்தர் வீட்டில் குழந்தைகளுக்கு வீட்டிற்கு சென்று பயிற்றுவிக்கும் ஆசிரியப்பணி புரிந்து வந்தார்.

எனினும் படிப்பின் மீதும்

இயற்பியல் மற்றும் கணிதத்தின் மீது இருந்த தீராத காதலால் அவர்

தனது தமக்கை இருந்த பாரீஸ் நகருக்கு 1891 இல் குடிபெயர்ந்தார்.

ப்ரான்சு நாட்டுக்கு ஏற்றவாறு

தனது பெயரான "மரியா" என்பதை

"மேரி" என்று மாற்றிக் கொண்டார்.

அக்காவின் தங்குமிடத்தில் தங்கிக் கொண்டு சோர்பன் பல்கலைக்கழகத்தில் இணைந்தார்.

இயற்பியலுக்கான தகுதித் தேர்வை 1893இலும்

கணிதத்துக்கான தகுதித் தேர்வை

1894 ஆம் ஆண்டிலும் தேர்ச்சி பெற்றார்.

1894 ஆம் ஆண்டு

சக இயற்பியலாளரான பியரி க்யூரி எனும் நபரைச் சந்திக்கிறார்.

அந்தச் சந்திப்பு தனது வாழ்க்கையை மாற்றி அமைக்கும் சந்திப்பு என்று அப்போது அவருக்குத் தெரிந்திருக்காது.

அவர்கள் இருவருக்குள்ளும்

இருந்த இயற்பியல் மற்றும் கணிதத்திற்கான வேட்கை

காதலாக அரும்ப

1895 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் நாள் இருவரும் இல்லறத்தில் இணைந்தனர்.

இனி இருவேறு திசையில் பயணிக்காமல் ஒரே திசையில்

இயற்பியல் ஆராய்ச்சியில் பயணிக்கத் தொடங்கினர்.

1896ஆம் ஆண்டு ஹென்றி பெக்குரல் எனும் இயற்பியலாளர் யுரேனியத்தில் இருந்து கண்ணுக்குப் புலப்படாத அணுக்கதிர்கள் வெளிப்படுகின்றன என்பதை அறிந்து கூறினார்.

பியரி க்யூரி அந்த அணுக்கதிர்களின் இயற்பியல் தத்துவங்களை அறிவது குறித்த ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டினார்.

நமது கதையின் நாயகியான மேரி க்யூரிக்கோ யுரேனியம் மட்டுமே இத்தகைய கதிரியக்கத்தை கொண்டிருக்காது . மேலும் பல உலோகங்கள் கனிமங்கள் இத்தகைய கதிரியக்கத்தைக் கொண்டிருக்கும் என்று பலமாக நம்பினார்.

அதன் விளைவாக

"பிட்ச் ப்ளெண்ட்" எனும் யுரேனியத்தை பெரும்பகுதியாகக் கொண்ட கனிமத்தை ஆராயும் போது அது யுரேனியத்தை விட பன்மடங்கு கதிரியக்கம் கொண்டதாக இருந்தது.

எனவே இந்த பிட்ச் ப்ளெண்டில் யுரேனியத்தை விடவும் சக்தி வாய்ந்த பொருட்களை இருக்கும் என்ற ஆராய்ச்சியின் விளைவாக

1898 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது தான் - போலோனியம்.

மேரி க்யூரி பிறந்த நாடான போலோனியா ( போலந்தின் பெயர்) அந்த கனிமத்துக்கு சூட்டப்பட்டது.

இந்தப் பெயரை சூட்டுவதன் மூலம் தனது நாட்டுக்கு சுதந்திரம் கிடைப்பது குறித்து அறிவியல் உலகம் பேச வேண்டும் என்று கருதினார்.

அடுத்த சில மாதங்களில் இன்னும் அதிக கதிரியக்க சக்தியைக் கொண்ட

ரேடியம் எனும் கனிமத்தைக் கண்டறிந்தார்.

அவரது ஆராய்ச்சிகளைப் போற்றும் விதமாக இயற்பியல் விரிவுரையாளர் பொறுப்பைப் பெற்றார்.

1903ஆம் ஆண்டு

"கதிரியக்கத்தைக் கண்டறிந்து கூறியதற்காக

மேரி க்யூரி இவரது கணவர் பியரி க்யூரி மற்றும் பெக்குரல் மூவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1904 ஆம் ஆண்டு இவரது கணவரின் இயற்பியல் ஆய்வகத்தில் தலைமை உதவியாளராக இணைந்தார்.

இத்தகைய கடுமையான ஆராய்ச்சிப் பணிகளை 1895 முதல் 1905 வரை செய்திருந்தாலும் இடையே இருமுறை கர்ப்பமுற்று

1897 ஆம் ஆண்டு முதல் பெண் குழந்தை - ஐரின்

1904 ஆம் ஆண்டு ஈவ் என்ற இரண்டாவது பெண் குழந்தையையும் ஈன்றெடுத்தார்.

1906 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி

கணவர் பியரி க்யூரி குதிரை சாரட் வண்டி மோதிய விபத்தில் திடீரென இறந்தது இடியென மேரியைத் தாக்கியது.

எனினும் தான் கொண்ட லட்சியத்தில் சிறிதும் துவளாமல்

தன் கணவர் ஏற்றிருந்த பேராசிரியர் பொறுப்பை மனமுவந்து ஏற்றார்.

சோர்பன் பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு பெண் பேராசிரியர் பொறுப்பேற்றது அதுவே முதல் முறை.

தொடர்ந்து அடுத்த ஐந்து வருடங்கள்

போலோனியம் மற்றும் ரேடியத்தை பிரித்தெடுத்தல் குறித்த ஆராய்ச்சிகளைச் செய்து

1911 ஆம் ஆண்டு ரேடியத்தை கச்சிதமாக பிரித்தெடுத்துக் காட்டி

இம்முறை வேதியியலுக்கு நோபல் பரிசைப் பெற்றார்.

1914ஆம் ஆண்டு இவரது ஆராய்ச்சிக்கென பிரத்யேகமாக ஆய்வகக்கூடத்துடன் கூடிய நிறுவனம் தொடங்கப்பட்டது.

அதில் அணுக்கதிர் மருத்துவம் குறித்த ஆராய்ச்சிகள், புற்று நோய்க்கு அணுக்கதிர்களை வைத்து சிகிச்சை அளிப்பது குறித்த ஆராய்ச்சிகள் என தனது அறிவியல் சிந்தனையை மானுட நலனுக்கான பாதையில் திருப்பலானார்.

1914 ஆம் ஆண்டு

ஐரோப்பாவில் முதல் உலகப்போர் மூண்ட போது

போர் முனைக்கே சென்று

நடமாடும் எக்ஸ் ரே கருவிகளைத் தானே இயக்கி

போரில் அடிபட்ட ராணுவ வீரர்களுக்கு எலும்பு முறிவு, குண்டினால் ஏற்பட்ட காயங்கள், உடலில் இருக்கும் துப்பாக்கி குண்டுகள் போன்றவற்றை அறிவதற்கு வழிவகை செய்தார்.

போர் முனைக்கு தனது 17 வயதே ஆன மூத்த மகள் ஐரினையும் அழைத்துச் சென்று பணி செய்ய வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போர் 1918 ஆம் ஆண்டு ஓய்ந்ததும்

தனது ஆராய்ச்சி முழுவதையும்

அணுக்கதிர் இயற்பியல் மற்றும் வேதியியலை மருத்துவத்தில் பயன்படுத்துவது குறித்த செயல்படுத்தினார்.

இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் இவரது மூத்த மகளான ஐரின் இணைந்து ஆராய்ச்சி செய்து வந்தார்

1922 ஆம் ஆண்டு

மருத்துவத்துக்கான அகாடமியில் உறுப்பினர் பதவி தேடி வந்தது.

1934 ஆம் ஆண்டு

இவரது மகள் ஐரின் மற்றும் அவரது கணவர் ஜோலியட் இருவரும் இணைந்து செயற்கை கதிரியக்கத்தைக் கண்டறிந்தனர்.

இதற்காக இவர்கள் இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு சில மாதங்கள் கழித்து மேரி க்யூரி நலிவுற்று கதிரியக்கத்தால் ஏற்படும் புற்று நோய்க்கு இரையானார்.

காலம் முழுவதும் கதிரியக்கத்தின் பயன்பாடு குறித்து ஆராய்ச்சி செய்தவருக்கு அதன் தீய விளைவுகள் குறித்து அப்போது தெரிந்திருக்கவில்லை.

கதிரியக்க ஆராய்ச்சியில் ஈடுபட்ட இவரது மூத்த மகளும் லூகிமியா எனும் ரத்த புற்றுநோய் ஏற்பட்டு இறந்தார்.

இவரது இரண்டாவது மகளான ஈவை மணந்த ஹென்றி ரிச்சர்ட்சன் லபோய்ஸ் 1965 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

இந்த வகையில்

க்யூரி குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து நபர்கள் நோபல் பரிசு பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

வரலாற்றில் இரு வேறு அறிவியல் துறைகளில் நோபல் பரிசு பெற்ற ஒரே நபர் - மேடம் மேரி க்யூரி

இவரது பெயரில் இயங்கும் தொண்டு நிறுவனம் இன்றைய பொழுதும்

புற்று நோயாளர்களுக்கு வழங்கப்படும் கதிரியக்க சிகிச்சை குறித்த ஆராய்ச்சி மற்றும் நிதி பங்களிப்பு செய்து வருகிறது.

இன்றைய உலகில் மருத்துவத் துறையில் நியூக்லியர் மெடிசின் எனும் கதிரியக்கத் துறை புற்றுநோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை வழங்கி வருகிறதென்றால்

அதற்கான விதையைப் போட்டு விருட்சமாக வளர்த்து அதற்குத் தானே இரையான

மேடம் மேரி க்யூரி முதலும் முக்கியமானவர்

அன்னார் பிறந்த தினமான நவம்பர் ஏழு - உலகம் முழுவதும் புற்று நோய் விழிப்புணர்வு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அவரை என்றும் மறவோம்.

அன்னாரின் தியாகத்தையும் அறிவையும் போற்றுவோம்.

நன்றி

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா

பொது நல மருத்துவர்

சிவகங்கை

Voir la traduction

576872304_25500861069570395_226846304769

💐💐

  • கருத்துக்கள உறவுகள்

🌷கரிசக்காட்டுப்பூவே🌷

அம்மு ·rdSnooestpttm6lt148a161026ah1ti51g0i4mg51934hl8m1141h3a gl1a ·

JRD டாட்டாவுக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்து விடுவார். இதனால் விலை மலிவாக நிறைய பேனா வாங்கி, தொலைத்து விடுவார். இந்த கவனக் குறைவை நினைத்து மிகவும் மனம் வருந்தினார்.

அப்போது டாட்டா தன் நண்பருக்கு ஒரு ஆலோசனை வழங்கினார். மிகவும் விலை உயர்ந்த பேனா ஒன்று வாங்கச் சொன்னார். அதன் படியே 22 காரட் தங்கத்தால் ஆன பேனா ஒன்றை வாங்கினார்.

பிறகு 6 மாதம் கழித்து டாட்டா அந்த நண்பரைச் சந்தித்தார்.

பேனா மறதியைப் பற்றி விசாரித்தார். அந்த தங்கப் பேனாவை தான் மிகவும் கவனமாக வைத்துக் கொள்வதாகவும், முன்பு இருந்ததை விட தன்னுடைய செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இது தான் நம்முடைய வாழ்க்கையிலும் நடந்துக் கொண்டிருக்கிறது நண்பர்களே. நாம் மதிப்பாக உணரும் ஒவ்வொன்றையும் கவனத்துடன் பார்த்துக் கொள்கிறோம்.

1. உடலை மதிப்பாக உணர்ந்தால், சாப்பிடுவதில் கவனம் செலுத்துவோம்.

2. நண்பனை மதிப்பாக உணர்ந்தால், அவனுக்கு மரியாதைக் கொடுப்போம்.

3. பணத்தை மதிப்பாக உணர்ந்தால், அவசிய செலவுகள் செய்வோம்.

4. உறவுகளை மதிப்பாக உணர்ந்தால், முறிக்க மாட்டோம்.

5. வியாபாரத்தை மதிப்பாக உணர்ந்தால், அர்ப்பணிப்புடன் செய்வோம்.

6. வாழ்க்கையை மதிப்பாக உணர்ந்தால், உயர்ந்த நோக்கத்துடன் வாழ்வோம்.

மதிப்பில்லாமல் செய்யப்படும் எந்த ஒரு செயலும் நிச்சயமாக வெற்றி பெறுவதில்லை...

இது தான் உண்மை √

Voir la traduction ......!

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் ஒரு வரி தத்துவம் ·

கேரளாவில் ஒரு பெரிய தொழிற்சாலை கட்டப்பட்டு, அந்த ஆலை கட்டும் போது

பெரும் பிரச்சனை ஏற்பட்டது.

பிரச்சனை என்னவென்றால் ஆலையில் கட்டப்பட்ட ஆழமான குழியின் அடிப்பகுதியில் மிகவும் கனமான இயந்திரம் வைக்கப்பட வேண்டும், ஆனால் இயந்திரத்தின் எடை ஒரு சவாலாக இருந்தது. இயந்திரம் தளத்திற்கு வந்து விட்டது, ஆனால் 30 அடி ஆழமான குழியில்

அதை எவ்வாறு இறக்குவது என்பது

பெரும் சிக்கலாக மாறிவிட்டது. சரியாக நிறுவப்படவில்லை என்றால், அடித்தளம் மற்றும் இயந்திரம் இரண்டும் மிகவும் பாதிக்கப்படும்.

இப்போது, மிக அதிக எடையைத் தூக்கக்கூடிய கிரேன்கள் எல்லா இடங்களிலும் கிடைக்காத காலம் இது. கிடைக்கக்கூடியவர்கள் இயந்திரத்தை தூக்கலாம், ஆனால் அதை ஆழமான குழியில் தரையிறக்குவது அவர்களின் திறனுக்கு அப்பாற்பட்டது.

இறுதியாக, ஆலை கட்டும் நிறுவனம் கைவிட்டு, இந்த பிரச்சனைக்கு தீர்வு காண டெண்டர் விடப்பட்டது. இதனால், ஏராளமானோர், இந்த இயந்திரத்தை குழிக்குள் பொருத்தி, தங்கள் டெண்டர்களை அனுப்பினர்.

கிரேன் வரவழைத்து இயந்திரத்தை பொருத்தி விடலாம் என நினைத்தனர். அதன்படி, பணியை முடிக்க, 10 முதல், 15 லட்சம் ரூபாய் வரை கேட்டனர். ஆனால் அந்த மக்களிடையே ஒரு ஜென்டில்மேன் இருந்தார்,.

மெஷின் தண்ணீரில் நனைந்தால், ஏதாவது பிரச்சனை வருமா?" என்று நிறுவனத்திடம் கேட்டார். "இது இயந்திரத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது” என்று நிறுவனம் பதிலளித்தது. அதன்பின், டெண்டரையும் நிரப்பினார்.

அனைத்து டெண்டர்களையும் பார்த்தபோது, அந்த நபர் வேலையை முடிக்க 5 லட்சம் ரூபாய் மட்டுமே கேட்டுள்ளார். எனவே வெளிப்படையாக, இயந்திரம் அமைக்கும் வேலை அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் விசித்திரமான விஷயம் என்னவென்றால், இந்த நபர் இந்த வேலையை எப்படி செய்வார் என்பதை பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டார். மேலும் அதைச் செய்வதற்கான திறமையும் சரியான குழுவும் தன்னிடம் இருப்பதாக மட்டுமே கூறினார்.

இந்த வேலையைச் செய்ய வேண்டிய தேதி மற்றும் நேரத்தைச் சொல்லுமாறு அவர் நிறுவனத்திடம் கேட்டார்.

அந்த நாள் இறுதியாக வந்தது. ஒவ்வொரு ஊழியரும், மேலாளரும், நிறுவனத்தின் முதலாளியும், சுற்றியிருந்தவர்களும் கூட, அந்த மனிதன் இந்த வேலையை

எப்படிச் செய்வான் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தனர்! அவர் தளத்தில் எந்த தயாரிப்பும் செய்யவில்லை.

முடிவு செய்த நேரத்தில், நிறைய லாரிகள் அந்த தளத்தை அடைய ஆரம்பித்தன. அந்த லாரிகள் அனைத்தும் பனிக்கட்டிகளால் ஏற்றப்பட்டிருந்தன, அவை அனைத்தும் குழிக்குள் நிரப்பப்பட்டன.

குழி முழுவதுமாக பனியால் நிரம்பியதும், இயந்திரத்தை நகர்த்தி பனி அடுக்குகளின் மேல் வைத்தனர். இதற்குப் பிறகு, ஒரு சிறிய தண்ணீர் பம்ப் சுவிட்ச் ஆன் செய்யப்பட்டு, குழியில் ஒரு குழாய் செருகப்பட்டது. இதனால் தண்ணீர் வெளியே எடுக்கப்பட்டது. பனி உருகியது, தண்ணீர் தொடர்ந்து கொட்டியது, இயந்திரம் கீழே செல்லத் தொடங்கியது.

4-5 மணி நேரத்திற்குள் வேலை முடிந்து மொத்த செலவு ரூ.1 லட்சத்திற்கும் குறைவாகவே வந்தது.

இயந்திரம் கச்சிதமாக பொருத்தப்பட்டு, அந்த நபருக்கு ரூ.4 லட்சத்துக்கு மேல் லாபம் கிடைத்தது.

வணிகம் உண்மையில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம்.

பிரச்சினைக்கு எளிய தீர்வைக் கண்டறிவது ஒரு கலையாகும், இது மனிதனின் விவேகம், புத்திசாலித்தனம் மற்றும் நடைமுறை புரிதலைப் பொறுத்தது. கஷ்டமான பிரச்சனைகளுக்கு கூட விவேகத்தின் மூலம் எளிய தீர்வுகள் கிடைக்கும்..

#

Voir la traduction

  • கருத்துக்கள உறவுகள்

582164470_122227411538040622_51316862953

  • கருத்துக்கள உறவுகள்

Riyas Qurana

asBjqOfBMz1.png se sent fou à Akkaraipattu, Province de l'Est, Sri Lanka.  ·

Suivre

oesdtoSnrp4mhc1l1766 9i070869888m9aifmi8m0t92gh4g1hc1gh284i2 ·

விக்கிபீடியாவின் சித்தப்பா

0000000000000000000000000000

அடிப்படையில் அ.முத்துலிங்கம் ஒரு எழுத்தாளர் தானா அல்லது மனித உருவில் இருக்கும் ஒரு நடமாடும் 'விக்கிபீடியாவா' என்பதை இதுவரை இலக்கிய உலகம் உறுதி செய்யவில்லை. எனக்குத் தெரிந்து அவர் கதை எழுத அமரும்போது, ஒரு பக்கம் வேர்ட் டொக்குமெண்ட் , இன்னொரு பக்கம் 'Britannica Encyclopedia' இரண்டையும் திறந்து வைத்துக்கொண்டுதான் உட்காருவார் போல.

இல்லையென்றால், ஒரு மனுஷன் காதலைக்கூட இப்படியா 'லேப் ரிப்போர்ட்' மாதிரி எழுதுவது? அவருடைய கதையில் காதலன் காதலியின் கண்களைப் பார்க்கிறான். "கண்ணே, மணியே" என்று உருக வேண்டும் என்பதுதானே உலக நியதி? ஆனால் முத்துலிங்கம் சேரின் ஹீரோ, காதலியின் கண்களைப் பார்த்துவிட்டு, "உனக்குத் தெரியுமா? 1876-ல் பசிபிக் பெருங்கடலில் வாழும் ஒரு வகை ஆக்டோபஸ் தன் இணையைத் தேடும்போது, அதன் உடலில் இருந்து 42 விதமான நிறங்கள் மாறும். உன்னைப் பார்த்ததும் என் பிட்யூட்டரி சுரப்பியில் நடப்பதும் அதுதான்" என்கிறான். அடப்பாவிகளா! இது காதலா இல்லை 'டிஸ்கவரி சேனல்' ஸ்கிரிப்டா?

சரி, சோகக் காட்சியிலாவது மனுஷன் விடுவாரா? ஊஹூம். அவருடைய பாத்திரங்கள் அழுதால்கூட, "ஒரு சொட்டுக் கண்ணீரில் 0.9% உப்பு இருக்கிறது. ஆனால், அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகளில்..." என்று அழுதுகொண்டே, நமக்கு ஒரு புவியியல் வகுப்பை எடுத்துவிட்டுத்தான் மூக்கைச் சிந்துவார்கள். வாசகர்களுக்கு ஒரு எச்சரிக்கை. நீங்கள் அ.முத்துலிங்கம் கதைகளைத் தொடர்ந்து வாசித்தால், உங்களுக்கு இலக்கிய அனுபவம் கிடைக்குமோ இல்லையோ, அடுத்த வருடம் 'கோடீஸ்வரன்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், நிச்சயம் ஜாக்பாட் அடிக்கலாம்.

உண்மையைச் சொல்லிவிடுகிறேன். அ.முத்துலிங்கம் அவர்களின் கதைகளைப் படிக்கும் போதெல்லாம் எனக்கு ஒரு சந்தேகம் வரும். இவர் கதை எழுதுகிறாரா, இல்லை ‘பொது அறிவு’ தேர்வுக்கான வினாத்தாளை லீக் செய்கிறாரா?

அதாவது, ஒரு சாதாரணக் கதை. ஒருத்தன் யாழ்ப்பாணத்தில் சைக்கிள் ஓட்டுகிறான். நாம் என்ன நினைப்போம்? ‘சரி, வெயில் அடிக்கிறது, புழுதி பறக்கிறது’ என்று போய்க்கொண்டே இருப்போம். ஆனால் முத்துலிங்கம் சேர் விடுவாரா?

"அவன் ஓட்டியது ரெலி (Raleigh) சைக்கிள். 1887-ம் ஆண்டு நாட்டிங்ஹாமில் சேர் ஃபிராங்க் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. அந்தச் சைக்கிளின் சங்கிலியில் (Chain) மொத்தம் 114 இணைப்புகள் இருந்தன. சரியாக 114 இணைப்புகள் இருந்தால் மட்டுமே சைக்கிள் ஈர்ப்பு விசையை எதிர்த்து 15 டிகிரி சாய்வில் ஏற முடியும் என்று ஆர்க்கிமிடிஸ் குளிக்கும்போது கண்டுபிடித்தார்."

அடக் கடவுளே! (இதை நான் சொல்லவில்லை, அந்தச் சைக்கிளே அலறுகிறது). ஒரு மனுஷன் நிம்மதியாகச் சைக்கிள் கூட ஓட்ட முடியாதா பாஸ்?

இவருடைய கதைகளில் வரும் காதலர்கள், பார்க்கிலோ அல்லது பீச்சிலோ சந்திப்பதில்லை. அவர்கள் நேராக ‘பிரிட்டிஷ் மியூசியத்தில்’ உள்ள பதினோராவது செக்‌ஷனில், மம்மிகளுக்கு நடுவேதான் சந்திப்பார்கள்.

காதலன் காதலியிடம், "உன் முகம் நிலா மாதிரி இருக்கு" என்று சொல்ல மாட்டான். அது அ.முத்துலிங்கம் யூனிவர்ஸ் இல்லையே!. அங்கே அவன் சொல்வது இதுதான். "பெண்ணே, உன் முகம் சந்திரயான்-3 அனுப்பிய லேண்டிங் புகைப்படத்தில் இருக்கும் தென் துருவத்தின் 42-வது பள்ளத்தைப் போலவே இருக்கிறது. அந்தப் பள்ளத்தில்தான் ஹீலியம்-3 வாயு உறைந்த நிலையில் கிடைக்கிறது."

இதைப் கேட்டவுடன் அந்தப் பெண் வெட்கப்பட மாட்டாள். அவளும் ஒரு முத்துலிங்கம் கதாபாத்திரம் என்பதால், "ஆம் அன்பே, ஹீலியம்-3 எதிர்காலத்தின் எரிபொருள். ஆனால் ரஷ்யாவின் லூனா-25 ஏன் விழுந்தது தெரியுமா?" என்று பதில் கேள்வி கேட்பாள்.

இவர்கள் பேசுவதைக் கேட்டு, பக்கத்தில் இருக்கும் நமக்கே ‘மைனர் ஹார்ட் அட்டாக்’ வரும். ஆனால் கவலைப்படாதீர்கள், ஹார்ட் அட்டாக் வந்தால் என்ன செய்ய வேண்டும், பைபாஸ் சேர்ஜரியை முதன்முதலில் 1960-ல் அர்ஜென்டினாவில் யார் செய்தது என்பதையெல்லாம், அடுத்த பாராவிலேயே விளக்கமாக எழுதிவிடுவார்.

சுருக்கமாகச் சொன்னால், அ.முத்துலிங்கம் ஒரு எழுத்தாளர் அல்ல. அவர் மனித உருவில் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு ‘நடமாடும் அல்காரிதம்’. கூகுள் சேர்வர் டவுன் ஆனால், சுந்தர் பிச்சை உடனே அ.முத்துலிங்கத்திற்குத்தான் போன் செய்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

(பின்குறிப்பு: இந்தக் கட்டுரையை நான் எழுதி முடிப்பதற்குள், அ.முத்துலிங்கம் அவர்கள் ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு அபூர்வமான சிலந்தி, எப்படி இணையத்தை விட வேகமாக வலை பின்னும் என்பது பற்றி ஒரு சிறுகதை எழுதி முடித்திருப்பார். பாவம் அந்தச் சிலந்தி!)

Voir la traduction

581692702_25892567200346688_411801196204

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.