Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிசயக்குதிரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

584806277_3343213279164977_7276652306015

  • Replies 1k
  • Views 175.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • *திருமணமாகிப் புதிதாக வீட்டுக்கு வந்த மருமகளிடம் மாமியார் சொன்னார்* "இந்த வீட்டுக்குன்னு சில வரைமுறை இருக்கும்மா. இது ஒர

  • குடித்துவிட்டு மனிசிக்கு அடிப்பவர் -- மது ஹிட்டர். குடித்துவிட்டு பிள்ளைகளுக்கு உதைப்பவர் - மது ஹிக்கர். குடித்து விட்டு சைட் அடிப்பவர் - மது நோக்கர். குடித்துவிட்டு நடனமாடுபவர் - மது ட

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

589123823_1187864590103585_8274737436621

  • கருத்துக்கள உறவுகள்

Chandran Veerasamy ·

Suivre

treoonpdSsh a0e203i:i16u2,16a110tc0H219à498a4681r7329 f6ft5l ·

இப்படியே போராடிக்கொண்டிருந்தால் ஒருபயனும் ஏற்படாது. இனி கெரில்லா யுத்த முறைகளைக் கையாள வேண்டும் என எண்ணி, யுத்த முறைகளைக் கற்றுக்கொள்வதற்காக மெக்சிகோவுக்கு பயணப்படுகிறார். அங்குதான் 'எனது கால்கள் அநீதிகளை எதிர்க்க எல்லைகளைக் கடந்தும் பயணிக்கும்' என்று சொன்ன மாவீரன் 'சேகுவேரா' வை சந்திக்கிறார். கியூபாவின் பிரச்னையை அறிந்த 'சே', 'நானும் உங்களோடு கியூபா வருகிறேன்' என்று சொல்கிறார். இரண்டு மாபெரும் சக்திகள் இணைந்தது தெரியாமல், அமெரிக்காவும், பாடிஸ்டாவும் கியூபாவில் ஆதிக்க வெறியை அதிகப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

ஃபிடலும், சே-வும் இணைந்து அடர்ந்த வனப்பகுதியான சியாரா மேஸ்த்ரா காடுகளில் இளைஞர்களையும், விவசாயிகளையும் ஒன்றுதிரட்டி கடுமையான போர் பயிற்சிகளை வழங்குகிறார்கள். 1956 -ல் கியூபா புரட்சியாளர்கள் தோற்கடிக்கப் படுகிறார்கள். ஆனால் சே, ஃபிடல் காஸ்ட்ரோ, ஃபிடலின் தம்பி ரவுல் காஸ்ட்ரோ உட்பட 12 வீரர்கள் தப்பித்துச் சென்றனர். கிடைத்த வாய்ப்பில், இன்னும் பல இளைஞர்களைத் திரட்டிக் கெரில்லா யுத்தப் படை வீரர்களாக அவர்களையும் மாற்றினார்கள்.

1959-ம் ஆண்டு 9,000 கெரில்லா யுத்த வீரர்கள் ஹவானா வழியாக ஊடுருவி பாடிஸ்டா ராணுவ வீரர்களுடன் யுத்தம் புரிந்தபோது, 'இனியும் இவர்களோடு சண்டையிட்டு நம்மால் தப்பிக்க இயலாது' என நினைத்த பாடிஸ்டா கியூபாவை விட்டு தப்பித்து ஓடுகிறான். இந்த யுத்தத்தின் மூலம் அமெரிக்க காலனி ஆட்சி முறை கியூபாவில் முடிவுக்கு வருகிறது. கியூபாவின் ஆட்சி அதிகாரத்துக்கு வருகிறார் ஃபிடல். கியூபா விடுதலைக்குப் பெரும் பங்காற்றியவர் 'சே' என பின்நாளில் ஃபிடல் அறிவிக்கிறார். இப்போதும் உலக வழக்கத்தில் 'சே'வையும் ஃபிடலையும் இப்படிக் கூறுவார்கள்... 'சிறந்த தலைவன் ஃபிடல் என்றால், ஆகச் சிறந்த தளபதி சே' என்று.

இவர் பதவியேற்றதை அமெரிக்காவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் ஃபிடலுக்கும் அமெரிக்காவுக்கும் நேரடி மோதல்கள் நடைபெறத் தொடங்கின. ஆனால் அதையெல்லாம் ஃபிடல் வெற்றிகரமாக முறியடித்தார். இதில் ஏமாற்றத்தை சந்தித்த அமெரிக்கா ஃபிடலை எப்படியாவது தன் பக்கம் இழுத்துக்கொள்ளத் திட்டம் தீட்டியது. ஆனால், அனைத்துத் திட்டங்களுமே தோல்வியாகத்தான் இருந்தது. 'கியூபாவுக்கு சொந்தமான எல்லா வளங்களும் கியூபா மக்களுக்கே சொந்தம். வேறு எந்த ஏகாதிபத்தியத்துக்கும் அது கிடையாது' என அறிவித்தார் ஃபிடல்.

இதனால் கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. அதனால், கியூபாவில் உற்பத்தியான பொருட்கள் அனைத்தும் கியூபாவிலேயே தேங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நேரத்தில் கியூபாவுக்கு ரஷ்ய அரசு கைகொடுக்கத் தயாரானது. கியூபாவின் பொருட்களை ரஷ்யாவில் இறக்குமதி செய்ய சம்மதித்தது அந்த நாடு. இதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற அமெரிக்கா, அமெரிக்காவின் மத்திய உளவுப் பிரிவின் துணையோடு ஃபிடலை கொல்லத் திட்டம் தீட்டியது. ஒரு முறை இருமுறையல்ல 650- க்கும் அதிகமான முறை ஃபிடலைக் கொல்ல முயற்சிகள் செய்தது C.I.A எனப்படும் அமெரிக்காவின் மத்திய உளவுப் பிரிவு.

ரசாயனக் குண்டுகள் போடுவது, சுருட்டில் விஷம் தடவிக் கொடுப்பது, துப்பாக்கியால் சுடுவது, மேலாடையில் விஷ வாயுவைத் தேய்த்துக் கொடுப்பது, விஷ மாத்திரைகளைக் கொடுப்பது, விபத்தினை ஏற்படுத்துவது உள்ளிட்டத் திட்டங்களை செயல்படுத்தி 650-க்கும் மேற்பட்ட முறை ஃபிடலைக் கொல்ல முயற்சி செய்தது அமெரிக்கா. ஆனால் அந்த முயற்சிகள் அனைத்திலும் ஃபிடல் தப்பித்துக் கொண்டே இருந்தார். கொலைத் திட்டங்களில் ஒவ்வொரு முறையும் தப்பித்து வருவதால் ஃபிடலைப் பற்றி மக்களிடத்தில் தவறான கருத்துகளையும் பரப்பத் தொடங்கியது அமெரிக்கா. இதனால் அடிக்கடி மக்கள் முன் தோன்றி உரையாற்ற வேண்டிய அவசியம் ஃபிடலுக்கு இருந்தது.

எப்படியாவது ஃபிடலைக் கொன்று, கியூபாவில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தத் தீவிரக் கவனத்தைக் காட்டி வந்தது அமெரிக்கா. ஆனால், அவர்கள் செய்த சதிகள் அனைத்தையும் தூள் தூளாக்கினார் ஃபிடல். பிடலின் இந்த வாக்கியம் இப்போது மட்டுமல்ல எப்போதும் மிகப் பிரசித்தி பெற்றது 'படுகொலை முயற்சியில் உயிரோடு இருப்பதற்கான ஒலிம்பிக் போட்டி இருந்தால், கண்டிப்பாக நான்தான் தங்கப் பதக்கம் வெல்வேன்.'........!

589277336_25441425342188025_399241682568

  • கருத்துக்கள உறவுகள்

589951298_1360125615853116_4443574728174

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

616815117_25082262584784097_176933605023

  • கருத்துக்கள உறவுகள்

(INTERESTING STORIES) படித்ததில் பிடித்தது  ·

Balaji Srinivasan ·rspdoonetS 27405i9125a46famuih256i9164ahc0ac1ff786mi1a7g9502 ·

1960-ல வாஷிங்டன்ல இருக்குற அந்த மருந்து கட்டுப்பாட்டு ஆபீஸ்க்குள்ள ஒரு சிங்க பெண்மணி கால எடுத்து வைக்குறாங்க, அவங்க பேருதான் டாக்டர் பிரான்சிஸ் கெல்சி. வேலைக்குச் சேர்ந்து முதல் நாளே அவங்க டேபிள்ல ஒரு ஃபைல் வந்து விழுது, அந்த ஃபைல்ல இருந்தது 'தாலிடோமைடு' அப்படிங்கிற ஒரு மருந்து. அவரோட கையெழுத்து அந்த ஃபைலக்கு தேவை

அந்த நேரத்துல ஐரோப்பா முழுக்க அந்த மாத்திரை ஒரு 'மேஜிக் மருந்து' மாதிரி பேசப்பட்டுச்சு, குறிப்பா கர்ப்பமா இருக்குற பொம்பளைங்களுக்கு வர்ற அந்த வாந்தி, மயக்கம், அப்புறம் தூக்கம் வராம தவிக்கிற கஷ்டத்துக்கு இதுதான் பெஸ்ட்னு எல்லாரும் அடிச்சுக்கிறாங்க.

அந்த மருந்து கம்பெனிக்காரங்க "ஏற்கனவே ஊர் முழுக்க வித்துக்கிட்டு இருக்கோம், கிறிஸ்துமஸ் குள்ள அமெரிக்காவுல கல்லா கட்டணும், சீக்கிரம் கையெழுத்தப் போடுங்கம்மா"ன்னு அவசரப்படுத்துறாங்க. ஆனா அந்த அம்மா சாதாரண ஆள் இல்ல, அவங்க கண்ணு அந்த ஃபைல்ல இருக்குற ஓட்டையக் கண்டுபிடிச்சிருச்சு. "எல்லாரும் விக்கிறாங்க சரி, ஆனா இந்த மருந்தால வயித்துல இருக்குற அந்தப் பச்சை மண்ணுக்கு என்ன ஆகும்னு நீங்க சரியா சொல்லலையே?"ன்னு கேட்டு அந்த ஃபைலை தூக்கி எறிஞ்சாங்க.

அவ்வளவுதான், அந்த மருந்து கம்பெனிக்காரங்களுக்கு உச்சந்தலையில கோவம் ஏறிடுச்சு, "எங்ககிட்டயே வேலையைக் காட்டுறியா?"ன்னு இறங்குறாங்க. அவங்க மேலதிகாரிகளுக்குப் போன் போடுறது, அந்த அம்மாவை "உனக்கு ஒண்ணும் தெரியாது, நீ ஒரு லூசு, நீ ஏதோ பவர்ல இருக்கோம்னு ஆட்டம் போடுற"ன்னு அசிங்கப்படுத்துறதுன்னு இறங்குனாங்க. இன்னைக்கு இருந்தா கூட ஒரு பொண்ணு ஒரு பெரிய கம்பெனியை எதிர்த்து நிக்கிறது எவ்வளவு கஷ்டம்னு யோசிச்சுப் பாருங்க, அன்னைக்கு 1960-ல அந்த சிங்க பெண்மணி சுத்தி இருந்ததெல்லாம் ஆம்பளைங்க அதிகாரம், அவங்க கொடுத்த டார்ச்சர்ல அந்த அம்மா நினைச்சிருந்தா "போனா போகுது, எல்லாரும் கையெழுத்து போடுறாங்க நாமளும் போட்டுருவோம்"னு ஒதுங்கியிருக்கலாம்.

ஆனா அந்த அம்மாவுக்குத் தன்னோட படிப்பு மேலயும், அந்த நேர்மை மேலயும் இருந்த நம்பிக்கை பெருசு. "நீ என்ன வேணா பண்ணு, எனக்குச் சரியான பதில் கிடைக்கிற வரைக்கும் பேனா முனையைக் கூட அசைக்க மாட்டேன்"னு ஒத்தக் கால்ல நின்னாங்க. கிட்டத்தட்ட ஒரு வருஷம் அந்த கம்பெனியோட மிரட்டலைத் தாங்கிக்கிட்டு அந்த ஃபைலை லாக் பண்ணி வச்சாங்க.

1961-ல ஜெர்மனியில இருந்து வந்த அந்த நியூஸ் உலகத்தையே நடுங்க வச்சிருச்சு. அந்த மருந்தைச் சாப்பிட்ட தாய்மார்களுக்குப் பிறந்த குழந்தைகள் எல்லாம் கை, கால் இல்லாம, வெறும் முட்டி மட்டுமோ இல்ல சின்னதா மீன் துடுப்பு மாதிரி வளர்ந்த உறுப்புகளோட பிறக்க ஆரம்பிச்சது. பத்தாயிரம் குடும்பம் உருக்குலைஞ்சு போச்சு, பாதி குழந்தைங்க பிறந்த சில நாளுலயே செத்துப் போச்சு.

அந்த நேரத்துலதான் அமெரிக்காவுக்கு உறைச்சது, அந்தப் பெண் சிங்கம் மட்டும் அன்னைக்கு மிரட்டலுக்குப் பயந்து கையெழுத்துப் போட்டிருந்தா, இன்னைக்கு அமெரிக்காவுல எத்தனையோ குடும்பம் கண்ணீர்ல மிதந்திருக்கும். அன்னைக்கு அவங்க தடுத்தது ஒரு பேப்பர் இல்ல, ஒரு தலைமுறையோட அழிவை. இதைக் கேள்விப்பட்ட உடனே அதிபர் கென்னடி அந்த பெண்மணி கூப்பிட்டு மெடல் கொடுத்து கௌரவிச்சாரு.

பிரான்சிஸ் கெல்சி 90 வயது வரை அதே துறையில் பணியாற்றி, லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றினார், இது நமக்கெல்லாம் ஒரு பெரிய பாடம், அதாவது ஊரே ஒரு பக்கம் போனாலும், நாம் செய்வது சரி என்று நமக்குத் தெரிந்தால், அந்த நேர்மைக்காகப் போராடத் தயங்கக்கூடாது. இன்று அமெரிக்காவில் ஆரோக்கியமாக விளையாடிக்கொண்டிருக்கும் எத்தனையோ தலைமுறையினர், தங்களுக்குத் தெரியாமலேயே அந்தப் போராட்ட குணமிக்கப் பெண்ணுக்குக் கடமைப்பட்டிருக்கிறார்கள், நிஜமான வீரம் என்பது சண்டை போடுவது மட்டுமல்ல, தர்மத்திற்காகத் தனித்து நின்று 'வேண்டாம்' என்று சொல்லும் அந்தத் துணிச்சல்தான் என்பதை அவர் நிரூபித்துவிட்டார்.

இவ்வளவு பெரிய அநியாயத்துக்கு அப்புறம்தான், உலகத்துல ஒரு மருந்து மார்க்கெட்டுக்கு வரணும்னா அது எவ்ளோ கடுமையான டெஸ்ட்டுகளைத் தாண்டணும்ங்கிற அந்த 'எஃப்.டி.ஏ' (FDA) சட்டமே இன்னும் ஸ்ட்ராங் ஆச்சு. ஒரு தனி மனுஷியோட பிடிவாதம், இன்னைக்கு நாம சாப்பிடுற ஒவ்வொரு மாத்திரையோட பாதுகாப்புக்கும் அஸ்திவாரமா இருக்கு. அந்த அம்மா 101 வயசு வரைக்கும் வாழ்ந்துட்டு 2015-ல தான் இயற்கை எய்தினாங்க, நிஜமாவே அவங்க ஒரு நடமாடும் தெய்வம் தான்.

வணக்கம்

பாலாஜி ஸ்ரீனிவாசன்.....!

627053013_26285600314386013_878286429880

  • கருத்துக்கள உறவுகள்

628318313_1528803841514946_6115163001436

  • கருத்துக்கள உறவுகள்

திமிங்கலம் எப்படி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கிறது?

நிலத்தில் வாழும் பாலூட்டிகளைப் போலல்லாமல், திமிங்கலக் குட்டிகளுக்குத் தங்கள் தாய்மார்களைப் பற்றிக்கொள்ள வழி இல்லை.

அவற்றுக்குக் கால்கள், கைகள் அல்லது கூடு இல்லை.......!

627682597_1420701419706455_7783657210346

  • கருத்துக்கள உறவுகள்

634001006_1431518931921392_3239175007784

  • கருத்துக்கள உறவுகள்


pootedsrnSum5lctli873fhm1i2729aagt u7ac2i5l7g4190cci97ua02l6
 ·

தமிழக அரசு - நடிகை வைஜெயந்தி மாலாவுக்கு ரூ.1,000-மும், மதுரை சோமுவுக்கு ரூ.1,000-மும் மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு, நேர்மையின் சிகரமாகவே வாழ்ந்து, வறுமையில் வாடிக்கொண்டிருந்த கக்கன் அவர்களுக்கு மாதம் ரூ.500 மட்டுமே நிதி உதவி வழங்கியது.

சிவாஜி கணேசன்

தன் கழுத்தில் இருந்த 10 பவுன் தங்கச் சங்கிலியை கக்கனுக்கு அளித்ததுடன், சேலம் நேரு கலையரங்கில் ‘தங்கப்பதக்கம்’ நாடகம் நடித்து கிடைத்த தொகை முழுவதையும் கக்கனுக்கு நிதியாக வழங்கினார்.

அந்த அரிய புகைப்படம் இதுதான்.

முகநூல் பதிவு -பிரசாந்த் ......!

632857035_3668659003277176_1088216616966

  • கருத்துக்கள உறவுகள்


noesprtdoSe2c0tgà4f701hh: imHrl2l69ft l3i1c2gafg10c07tf21,40
 ·

தர்மம் தலையை மட்டுமல்ல...ஒரு நாட்டையே காப்பாற்றும்.

1892 ஆம் ஆண்டு. அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவன் அவன். அவனுக்கு உற்றார் உறவினர் எவரும் இல்லை. தன்னுடைய படிப்பிற்கான கட்டணத்தை கட்ட கூட அவனுக்கு வசதியில்லை.

அவனும் அவன் நெருங்கிய நண்பன் ஒருவனும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள். பிரபல இசைக் கலைஞர் ஒருவரை வைத்து கல்லூரியில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் இவர்கள் படிப்பிற்கு தேவையான நிதியை திரட்டுவது என்று முடிவானது. அதற்காக அந்த சமயத்தில் அமெரிக்காவிலும் ஏன் உலகம் முழுதும் உலகப் புகழ் பெற்று விளங்கிய போலந்து நாட்டை சேர்ந்த பியானோ இசைக்கலைஞர் இக்னேஸி ஜே.பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து தேதி கேட்டார்கள். அவரது மேனேஜரோ "சார் வருவார்…. ஆனால் நீங்கள் அவருக்கு $2000 தரவேண்டும்” என்று கூற, இவர்களும் சந்தோஷமாக ஒப்புக்கொள்கிறார்கள். பேட்ரெவ்ஸ்கி வருவதாக சொன்னதே மிகப் பெரிய வெற்றி என்பதால் இவர்கள் அந்த நிகழ்ச்சியை சூப்பர் ஹிட்டாக்க முடிவு செய்து அல்லும் பகலுமாக நிகழ்ச்சிக்காக திட்டமிட்டு உழைக்கிறார்கள்.

நிகழ்ச்சிக்கான அந்த நாளும் வந்தது. அந்த நாளில் எதிர்பாராத விதமாக நகரில் வேறு சில முக்கிய நிகழ்வுகள் இருந்தபடியால் எதிர்பார்த்தபடி டிக்கெட்டுகள் விற்பனையாக வில்லை. ஆகையால் அரங்கம் நிரம்பவில்லை. அரும்பாடுபட்டு விழாவை ஏற்பாடு செய்த இவர்களுக்கு எப்படி இருக்கும்?

மனதை திடப்படுத்திக் கொண்டு பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து நடந்ததை கூறி, நிகழ்ச்சியை ரத்து செய்துவிடலாம் என்கிறார்கள். ஆனால் பேட்ரெவ்ஸ்கி மறுத்துவிடுகிறார். “நான் திட்டமிட்டபடி நடத்தியே தீருவேன்” என்கிறார். ஒரு வழியாக நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவரை சந்திக்கும் மாணவர்கள் அவரிடம் $1600 கொடுத்து, இது தான் மொத்தம் வசூலான தொகை மீதியுள்ள தொகைக்கு பின் தேதியிட்டு செக் கொடுத்து விடுகிறோம். கூடிய சீக்கிரம் அந்த கணக்கில் பணம் செலுத்தி விடுகிறோம். பெரிய மனதுடன் வாங்கிக் கொள்ளுங்கள்” என்று கூறி கெஞ்சியபடி அவரிடம் பணத்தையும் காசோலையையும் கொடுக்க, அதை வாங்கி காசோலையை கிழித்துப் போடும் பேட்ரெவ்ஸ்கி அவர்கள் கொடுத்த தொகையை அவர்களிடமே கொடுத்து “நீங்கள் எனக்கு தரவேண்டிய கட்டணத்தை தரவேண்டாம். அதை தள்ளுபடி செய்கிறேன். இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு உங்கள் படிப்புக்கான கட்டணத்தை கட்டுங்கள்" என்கிறார். அவர்கள் கண்கள் கலங்கியபடி அவருக்கு நன்றி கூறுகின்றனர்.

நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வாடகை கொடுக்க கூட வசதியின்றி அந்த மாணவர்கள் சிரமப்படுவதை அறிந்துகொள்ளும் பேட்ரெவ்ஸ்கி அந்த தொகையையும் இறுதியில் தானே செலுத்திவிடுகிறார்.

பேட்ரெவ்ஸ்கி மிகப் பெரிய செல்வந்தர். அவரை பொறுத்தவரை அது சாதாரண தொகை தான். ஆனால் அவருக்குள் இருந்த மனிதாபிமானத்தை அந்த சம்பவம் உணர்த்தியது. ஆனால் பேட்ரெவ்ஸ்கி, நான் உதவாவிட்டால் இவர்களுக்கு வேறு யார் உதவுவார்கள்? இவர்களுக்கு உதவுவதால் நாமொன்றும் குறைந்து போகப்போவதில்லை… என்று கருதியே அந்த உதவியை செய்தார்.

ஆண்டுகள் உருண்டன...

பேட்ரெவ்ஸ்கி காலப்போக்கில் மேலும் புகழின் உச்சிக்கு சென்று ஒரு கட்டத்தில் போலந்து நாட்டின் பிரதம மந்திரியாகவே ஆகிவிட்டார். மிகப் பெரும் தலைவராக விளங்கி நல்லாட்சி நடத்தி வந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக முதல் உலகப் போர் துவங்கிய காலகட்டம் அது. போலந்து நாடு போரின் பிடியில் சிக்கி சின்னாபின்னமானது. போர் முடிவுக்கு வரும் தருவாயில் மக்கள் அனைத்தையும் இழந்து வறுமையில் உழன்றனர். எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடியது.

இது 1918 ஆம் ஆண்டு...

எப்படி நிலைமையை சமாளிப்பது? பசியோடிருக்கும் தன் லட்சக்கணக்கான மக்களுக்காக யாரிடம் போய் உதவி கேட்பது? கலங்கித் தவிக்கிறார் பேட்ரெவ்ஸ்கி.

கடைசியில் அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழு அராவை அணுகுகிறார். (American Relief Administration ARA). அதன் தலைவராக இருந்தவர் ஹெர்பெர்ட் ஹூவர் என்பவர். (இவர் பின்னாளில் அமெரிக்காவின் 31 வது ஜனாதிபதியானார்.)

பேட்ரெவ்ஸ்கி கேட்டுக் கொண்டதையடுத்து அமெரிக்காவின் உதவிக்கரம் போலந்துக்கு நீள அடுத்த சில நாட்களில் அமெரிக்காவிலிருந்து போலந்து நாட்டிற்கு ஆயிரக்கணக்கான டன்கள் உணவு தானியங்கள் மற்றும் மளிகை பொருட்கள் அனுப்பப்பட்டன. அதன் மூலம் சுமார் 1.5 மில்லியன் போலந்து மக்கள் பசியாறினர்.

ஒரு பேரழிவு மற்றும் பஞ்சத்திலிருந்து போலந்து மக்கள் தப்பினர். பேட்ரெவ்ஸ்கி நிம்மதி பெருமூச்சுவிட்டார். தான் கேட்டவுடன் தன் மக்களுக்கு உணவு பொருட்களை டன் கணக்கில் அனுப்பி அவர்களை பட்டினி சாவிலிருந்து காப்பாற்றிய அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழுவின் (American Relief Administration) தலைவரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்பினார் பேட்ரெவ்ஸ்கி.

ஹெர்பெர்ட் ஹூவரை நேரில் சந்தித்து கண்கள் பணிக்க நன்றி தெரிவிக்கிறார். "நோ… நோ… மிஸ்டர் ப்ரைம் மினிஸ்டர். நீங்கள் நன்றி சொல்லக்கூடாது நீங்கள் செய்த உதவியை தான் நான் உங்களுக்கு திருப்பி செய்தேன். உங்களுக்கு நினைவிருக்கிறதா? 25 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே கல்லூரி மாணவர்கள் இருவருக்கு அவர்கள் ஃபீஸ் கட்ட உங்கள் நிகழ்ச்சியை இலவசமாக நடத்திக்கொடுத்து உதவினீர்கள் அல்லவா? அந்த மாணவர்களில் ஒருவன் தான் நான் என்கிறார்" ஹெர்பெர்ட் ஹூவர். பேட்ரெவ்ஸ்கி கண்கள் கலங்கியபடி

அவரை அணைத்துக் கொள்கிறார்.

காலம் எப்போது யாரை எங்கு வைக்கும் என்று ஒருவராலும் கூற முடியாது.

தனிப்பட்ட ஒருவருக்கு செய்த உதவி, எப்படி ஒரு நாட்டிற்கே பன் மடங்கு திரும்ப கிடைத்தது பார்த்தீர்களா?

இந்த உலகில் நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதை பன்மடங்கு அறுவடை செய்வீர்கள்.

ஏனெனில்… விதைத்தவன் உறங்கினாலும், ஏன் அந்த படைத்தவனே உறங்கினாலும் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை..

பலன் கருதாமல் பேட்ரெவ்ஸ்கி செய்த உதவி இது. ஆனால் காலத்தினால் செய்த உதவியாயிற்றே… காலம் குறித்து வைத்துக் கொண்டது....

(உண்மை சம்பவம்)

தர்ம சிந்தனையை பற்றி

அறம் வழியில் வாழ

குழந்தைகளுக்கு சொல்லி

கொடுங்கள் . குழந்தைகள் சொல்வதை கேட்பதில்லை ஆனால் செய்வதை பார்ப்பார்கள்......!

635518202_122276127392037466_22000268504

  • கருத்துக்கள உறவுகள்

634256636_1341974114640858_7856284146700

  • கருத்துக்கள உறவுகள்

639158264_898413173163171_31117146328583

  • கருத்துக்கள உறவுகள்


dpstSeoonr6ml u:r2360hs5 41t9i4m39l8a0t01637a5agthg,43642mil
 ·

மருத மலை மாமணியே என்ற பாடலில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு செல்ல போட்டி நடந்தது. இதை குன்னக்குடியே பல இடங்களில் சொல்லியுள்ளார்.

அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கண்ணதாசன் அதற்கு பாட்டு எழுத வேண்டும்.

இது தான் போட்டி. குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறிவிடுவாராம்.

அந்த பாடல்களில் ஒன்று தான் மேலே சொன்ன 'மருதமலை மாமணியே' பாடல்.

ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலனில் வாசித்து 'இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்' என்றாராம் குன்னக்குடி. உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள் "சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன்"....

குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடலில்

முடிவில் வேண்டுமென்றே வயலினில் சம்பந்தம் இல்லாமல் நிச நிச நிச நிச என்று வேகமாக வாசித்துவிட்டாராம்..

கவிஞர் உடனே இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று மலையடி, நதியடி, கடலடி சகலமும் உனதடி என்ற வார்த்தையை எழுதியவுடன் வயலினை நான் சிறிது நேரம் கீழே வைத்து "ஐயா ,என்னை விட்டுடுங்க"ன்னு கும்பிட்டேன் என்றார்...

கவிஞரே உங்கள் பாதம் பணிகிறோம்......

இன்று குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் பிறந்தநாள் இன்று ......!

645576834_3689918394484570_5846416386972

  • கருத்துக்கள உறவுகள்


ptenosrodS7l013120h2t2hhmiu1l1a7t071i8 f17683302122u1au9f9lu
 ·

#தங்கமனசு

எத்தன இட்லினு சாப்பிட்டவங்கதான் கணக்கு சொல்வாங்க! நெகிழவைக்கும் 2 ரூபாய் இட்லிக்கடை பாட்டி!!

புதுக்கோட்டை, காந்தி நகரில் இருக்கிறது தனம் பாட்டியின் குடிசை வீடு. 2 அடி குனிந்து உள்ளே சென்றால், சிறிய குடிசைக்குள்ளே விறகு அடுப்பில் சுடச்சுட இட்லி தயாராகிக் கொண்டிருக்கிறது.

நாற்காலி, மேசை எதுவும் இல்லை. திண்ணையில், பாட்டியின் அருகே அமர்ந்து பலர் பசியாறிக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு இட்லி ரூ.10க்கு விற்கும் இன்றைய காலகட்டத்தில், ஒரு இட்லி ரூ.2க்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறார் தனம் பாட்டி. 10 ரூபாயிலேயே பலருக்கும் வயிறு நிறைந்து போகிறது. மாவு அரைப்பது, சட்னி, சாம்பார், சுண்டல் வைப்பது, இட்லி அவிப்பது வரையிலும் எல்லாமும் தனம் பாட்டி தான்.

84 வயதிலும் சுறுசுறுப்புடன் பம்பரமாகச் சுழன்று வேலை செய்து கொண்டிருந்த பாட்டியிடம் பேச்சுக் கொடுத்தோம்.

நான் பொறந்து, வளர்ந்தது எல்லாம் அறந்தாங்கி பக்கத்துல இருக்க சிதம்பரவிடுதிங்கிற சின்ன கிராமம். வீட்டுக்காரருக்கு ஊரு பட்டுக்கோட்டை. அவரு புதுக்கோட்டையில சின்னதா ஒரு டீக்கடை வச்சிருந்தாரு. 1960-ல எங்களுக்குக் கல்யாணம் நடந்துச்சு. கல்யாணம் முடிச்ச கையோட புதுக்கோட்டைக்கு கூட்டிக்கிட்டு வந்திட்டாரு.

டீக்கடையை வச்சி பிழைப்பு ஓட்டிக்கிட்டு இருந்தோம். சமாளிக்க முடியலை. கொஞ்ச வருஷம் கழிச்சி இட்லிக்கடை ஆரம்பிச்சோம். கடை ஆரம்பிச்சப்ப இட்லி ரூ.10 காசு. மத்த கடைகளைவிட எப்பவும் நம்ம கடையில விலை கொஞ்சம் குறைவாத்தான் இருக்கும்.

நாம போதும்னு சொல்ற ஒரே விஷயம். சாப்பாடுதான். எவ்ளோ நல்ல சாப்பாடா இருந்தாலும், யாரா இருந்தாலும், வயிறு நிறைஞ்சதுக்கு அப்புறம் சாப்பிட முடியாதே. பணத்தை விட, நம்மள தேடி வர்றவங்களோட பசியை போக்குறது தான் முக்கியம்னு நினைச்சோம். அதனாலயே என்னவோ எங்களைத் தேடி நிறைய பிள்ளைங்க வருவாங்க. பலர் உங்களுக்கு எப்படி கட்டுப்பிடியாகுது?னு கேட்பாங்க. குறைஞ்ச லாபம் கிடைச்சா போதும்னு நினைக்கிறதாலதான் சமாளிக்க முடிஞ்சது. இப்பவும் முடியுது.

டீ, இட்லி வியாபாரம் செஞ்சே தான் பிள்ளைங்க மூணு பேரையும் வளர்த்தோம். மூணு பேரும் கல்யாணம் முடிஞ்சு நல்லாயிருக்காங்க. கொஞ்ச வருஷத்துக்கு முன்னால, வீட்டுக்காரருக்கு கண்ணு ஆபரேசன் செஞ்சோம். அப்புறம் அவருக்கு கிட்னியில பிரச்னை வந்ததால டீக்கடையை நிறுத்திட்டோம்.

இட்லி கடையை மட்டும் நிறுத்தவே இல்லை. காலையில 5 மணிக்கெல்லாம் வேலைய ஆரம்பிச்சிடுவேன். ஸ்கூல் பிள்ளைங்க, ஆபிஸ்ல வேலை பார்க்கிறவங்க, கூலிக்கு வேலை பார்க்கிறவங்கன்னு தினசரி வாடிக்கையாளர்கள் பலர் வருவாங்க. அதிகபட்சமா ஒருநாளைக்கு 200 ரூபாய் கிடைக்கும். ஒரு சிலநாள் வியாபாரம் பெருசா இருக்காது. அடுத்த நாள் உளுந்து, அரிசி வாங்கிறதுக்குக் கொஞ்சம் சிரமமா இருக்கும். ஆனாலும், எல்லாத்தையும் சமாளிச்சிடுவேன்.

விறகு அடுப்புக்கு, சாயந்தர நேரத்துல காடு, கரைக்கு போய் விறகு எடுத்துக்கிட்டு வந்துடுவேன். மாவுக்கல்லு இருக்கு. இப்போ பையன் கிரைண்டரும் வாங்கிக் கொடுத்திருக்கான். பெரும்பாலும், மாவுக் கல்லுலயே மாவு ஆட்டிக்கிடுவேன்.

நாலு பேருக்கு தினமும் இட்லி கொடுத்துப் பழகிட்டேன். அவங்களும் சாப்பிட்டுப் பழகிட்டாங்க. நான் சாப்பிடுற பிள்ளைங்ககிட்ட கணக்கு கேட்கிறதேயில்லை. வேணுங்கிற இட்லியை எடுத்து வச்சிக்குவாங்க. சாப்பிட்டுட்டு சரியா கணக்குப் போட்டு கொடுத்துட்டு போயிடுவாங்க

ரொம்ப வருஷமா ஒரு ரூபாய்க்குத்தான் இட்லி கொடுத்துக்கிட்டு இருந்தேன். விலைவாசி உயர்ந்துகிட்டே இருந்தாலும் நான் மட்டும் விலையை ஏத்தாம தான் இருந்தேன். இப்போ ரெண்டு வருஷமாதான் ரெண்டு ரூபாய்க்குக் கொடுக்குறேன். அதுகூட, தினமும் இங்க சாப்பிட வர்ற பிள்ளைங்கதான், உன் உழைப்புக்காகவது இன்னும் ஒரு ரூபாய் சேர்த்துக் கொடுக்கணும்னு சொல்லி, அவங்களா விலையை ஏத்தி கொடுத்துட்டுப் போக ஆரம்பிச்சாங்க. அது அப்படியே மாறிருச்சு.

சாப்பிட வர்ற பிள்ளைங்க பலர், `உன் குடிசையை எடுத்துக் கட்டித் தர்றேன்'னு சொல்லுவாங்க. அதெல்லாம் வேண்டாம் ராசா, இந்த கிழவிக்கு இதுவே போதும்னு சொல்லிடுவேன். முடியாம இருந்த வீட்டுக்காரரை இட்லி வேலை செஞ்சே பார்த்துக்கிட்டேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, அவரு என்னை மட்டும் தனியா விட்டுட்டுப் போயிட்டாரு. இப்ப கூட என் பிள்ளைங்க, எங்களோட வந்து ஓய்வு எடுங்கம்மான்னு சொல்லிக் கூப்பிடுறாங்க. ஆனா, இட்லி கடையையும், கடைக்கு வர்ற இந்த பிள்ளைகளையும் விட்டுப்போக மனசில்ல. இந்த கிழவியோட உயிரும் இட்லி கடையிலயே போகட்டும் ராசான்னு சொல்லி அவங்களை அனுப்பிடுவேன். வெந்த இட்லிகளை தட்டுக்கு மாற்றுகிறார் தனம் பாட்டி.

சிலரது வாழ்க்கை இப்படித்தான் அழகாகிக் கிடக்கிறது உழைப்பாலும் அன்பாலும்.

பதிவு மாணிக்கவாசகம் சம்மந்தம்்

#idlypatti #idly #pudukottai #tamilnadu #Thanjavur #thanjai #tanjore #choladesam #cholaninsorgaboomi #ilovethanjavur #trending #viral

யானை.......!

648072688_927291490089212_24074251585494

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.