Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையராஜா - காலத்தால் மறக்கமுடியாத கலைஞன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் நேற்றைய தினம் ஆஸ்கர் விருது பெற்றிருக்கின்ற நம்மூர் மரகதமணிக்கு அந்த ஊர் கீரவாணி க்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் . பூங்கொத்து. அவரது அழகன் திரைப்படத்தில் வரும் எல்லா பாடல்களும் எனக்கு மிக மிக பிடித்தவை. குறிப்பாக “ஜாதி மல்லி பூச்சரமே.”

இப்பதிவு கீரவாணி மற்றும் ஏ ஆர் ரகுமானை குறைத்து மதிப்பிடுவதற்கான பதிவு அல்ல. இந்த சமயத்தில் இசைஞானி இளையராஜாவோடு ஒப்பீடுகளை நிகழ்த்தும் சமூக வலைதள வம்பர்களுக்கான பதில் மட்டுமே.

🛑

எங்கள் பள்ளி வாழ்க்கையில் இறுதியில்தான் ஏ ஆர் ரகுமான் வருகை மற்றும் அவரது தொடர் வெற்றிகள் நிகழத் தொடங்கியிருந்தன. ஆனால் நாங்கள் எல்லாம் இளையராஜாவின் தீவிர ரசிகர்கள். ஏ ஆர் ரகுமான் வெறும் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொண்டு வேடிக்கை காட்டுவதாக தான் நாங்கள் அப்போது தீவிரமாக எதிர்த்தோம். 

90 களின் தொடக்கத்தில் ஹெச் எம் வி நிறுவனம் ராஜாவின் தொடக்க கால 70களின் பாடல் தொகுப்பு ஒன்றினை நான்கு கேசட்டுகளாக வெளியிட்டு இருந்தது. ஒரு அபூர்வமான தொகுப்பு அது. “அன்னக்கிளியே உன்னைத் தேடுதே ,சின்னக் கண்ணன் அழைக்கிறான், கண்ணன் ஒரு கைக்குழந்தை, வசந்தகால கோலங்கள், வா பொன்மயிலே, மயிலே உன் தோகை எங்கே, என அபூர்வ பாடல்கள் நிறைந்த அந்த தொகுப்பு என்னைப் போன்ற ராஜாவின் அதிதீவிர ரசிகர்களுக்கு பெரும் பொக்கிஷம்.

ஆனால் ஏ ஆர் ரகுமான் வருகை மற்றும் அவருக்கு கிடைத்த தேசிய விருது அவருக்கு அப்போது கிடைத்த ஊடக வெளிச்சங்கள் எதுவுமே எங்களுக்கு அப்போது எங்களுக்கு மகிழ்ச்சியை தரவில்லை. பாலச்சந்தர் மணிரத்தினம் என ஏ ஆர் ரகுமான் பின்னால் அணிவகுத்து நின்றவர்களும் அதன் நடுவில்  இழை ஓடிய அரசியலும் இளையராஜாவை எங்களுக்கு இன்னும் நெருக்கமானவராக காட்டியது. அது ஒரு வகையான புரிதல் கோளாறு என்பதை கொள்ள சில வருடங்கள் தேவைப்பட்டாலும் இன்றளவும் இளையராஜாவிற்கு மிஞ்சியவர்கள் யாரும் இல்லை என்பதில் எங்கள் தலைமுறையே உறுதியாக இருக்கிறது.

அதற்கு மிக முக்கியமான காரணம் இத்தனை வருட எங்களது வாழ்க்கையில் காலை மாலை சூரிய உதயம் நிலவு இரவு பசி உறக்கம் காதல் காமம் தனிமை தந்தைமை தாய்மை கொண்டாட்டங்கள் போன்ற தவிர்க்க முடியாத இந்த வாழ்வின் ஒரு அங்கம் தான் இளையராஜாவின் இசை. எங்கள் தலைமுறையில் யாரேனும் ஒருவரை சந்தித்து உங்கள் வாழ்க்கையைப் பற்றி அதில் நிகழ்ந்தவை குறித்து நீங்கள் கோர்வையாக சொல்ல முடியுமா என கேள்வி எழுப்பினார்கள் என்றால் அவருக்கு பல இளையராஜா பாடல்கள் நினைவுக்கு வருவது இயல்பு.

என் பதின் பருவ நண்பன் ஒருவன் “தெற்கத்திக் கள்ளன்”என்ற திரைப்படத்தில் வரும் “ராதா அழைக்கிறாள் ..”என்கிற பாடலை ஒரே நாளில் நூற்றுக்கணக்கான முறை கேட்டுக் கொண்டிருந்ததும் அவன் ராதா என்ற பெண்ணை விரும்பி கொண்டிருந்ததும் தற்செயலானது அல்ல என்பதை நாங்கள் அறிவோம். அந்தப் பெயருள்ள அந்தப் பெண்ணை விரும்பினானா அல்லது அந்தப் பாடலுக்காக அந்த பெண்ணை விரும்பினானா என்றெல்லாம் இதுவரையில் அந்த காதலில் நிறைய கேள்விகள் இருக்கின்றன.அதே போல நெல்லை மாவட்டத்தில் எனது கல்லூரி வாழ்க்கையில் மிக நெருங்கிய நண்பன் ஒருவன் ஆனந்த ராகம் திரைப்படத்தில் வரும் "ஒரு ராகம் பாடலோடு ..”என்ற பாடலை ஒரு கேசட் முழுக்க பதிவு செய்து வைத்துக் கொண்டு மீண்டும் கண் கலங்க அதைக் கேட்டுக் கொண்டு கிறங்கி கிடந்ததெல்லாம் எங்கள் தலைமுறையில் தெருவுக்குத் தெரு நடக்கின்ற
மிக மிக சாதாரண சம்பவங்கள்.

எனது பள்ளிக்காலத்தில் எனது நண்பன் ஜோஸ்வா உடன் நான் எங்கள் ஊரில் இருக்கின்ற புராதான சர்ச்சிக்கு போவது வழக்கம்.  அந்த சர்ச்சில் தேவ கருணை என்கின்ற ஒரு சிஸ்டர் வேலை பார்த்து வந்தார். தேவா என்று மற்றவர்களால் அழைக்கப்பட்ட அந்த சிஸ்டர் ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு வருகை தந்த போது என் வீட்டு நூலகத்தை அவருக்கு அழைத்து போய் காட்டினேன். என் மிகப்பெரிய கேசட்சேகரிப்பை பார்த்து வியந்த அவர் நல்ல பாடல் ஏதோ ஒன்றை ஒளிபரப்பம்படி கேட்டுக் கொள்ள நான் "அறுவடை நாள் "திரைப்படத்தில் வருகிற "தேவனின் கோவில் மூடிய நேரம் .."என்கிற பாடலை அவருக்கு ஒளிபரப்பி காட்டினேன். நான் ஒரு சோக சுமைதாங்கி என்கின்ற பாடல் வரிகள் வரும் அந்த நொடியில் அவரது கண்கள் கலங்கிவிட்டன. முடிந்தவுடன் என்னிடம் எதுவும் சொல்லாமல் எழுந்து போன அவரை அதன் பின் நான் எங்குமே சந்திக்கவில்லை. 

இப்படியாக நிறைய மனிதர்கள் நிறைய வாழ்க்கை. 

இளையராஜா என்கின்ற ஒரு தனி மனிதன் வாழ்நாட்கள் முழுக்க ததும்பி நிரம்பி எங்களை முழுகடித்துக் கொண்டிருந்தான்.

2000 களின் தொடக்க காலத்தில் இருந்து நான் திரைப்படப் பாடல்களில் இருந்து நானெல்லாம் வாழ்வின் சூழல்களால் அந்நியப்பட்டு விலகிப் போன போது ஏறக்குறைய ராஜாவும் அமைதியாகி இருந்தார். நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு "காட்டு மல்லி"பூத்திருக்கிறது.

நடுவில் நகர்ந்த நாட்கள் பற்றி அந்தக் காட்டுமல்லிக்கு எந்தக் கவலையும் இல்லை. போன்ற இளையராஜாவின் அதிதீவிர ரசிகர்களுக்கு அந்தக் "காட்டுமல்லி " குறித்து எந்த பெருமிதமும் இல்லை. ஏனென்றால் இதே போன்று பல நூற்றுக்கணக்கான பாடல்களை நாங்கள் எங்கள் தலைமுறையில் அனுபவித்து சுவைத்து ஆழ்ந்து மூழ்கி அழுது சிரித்து கலங்கி நெகிழ்ச்சியில் நிறைந்து இருக்கிறோம்.

அது கூட சமூக வலைதளங்களில் சில உரையாடல்களை பார்க்கும் போது உண்மையில் பரிதாபமாக இருந்தது. கீரவாணி ,ஏ ஆர் ரகுமான் போன்று ஆஸ்கர் விருது வாங்கியவர்கள் போல இளையராஜா ஏன் ஆஸ்கர் விருது வாங்கவில்லை என்பதான கேள்விகள் "உன் கண்களுக்கு உலகிலேயே அழகான உன் தாய் ஏன் உலக அழகியாக மாறவில்லை ...?" என்பது போல அபத்தமாக இருந்தது.

ரகுமான் ஆஸ்கர் விருது வாங்கிய "ஜெய் ஹோ " பாடலும் கீரவாணி இன்று ஆஸ்கர் விருது வாங்கிய "நாட்டுக்குத்து "பாடலும் மிகச்சாதாரணமாக நாம் கடந்து போனவை. நமக்குள் சிறிதளவு அதிர்வை கூட அந்தப் பாடல்கள் ஏற்படுத்தவில்லை என்பது நிஜம். விருதுகள் அதற்கு பின்னால் இருக்கின்ற வணிகங்கள் இவைகளைப் பற்றி பேசுவது என் வேலை அல்ல. ஆனால் வணிகங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு , இளையராஜாவின் அரசியல் அபத்தங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு  ராஜாவின் இசை என் ஆன்மாவை எப்போதும் உலுக்கிக் கொண்டே இருக்கிறது.

என்றாவது பின் இரவில் உங்களுக்கு விழிப்பு ஏற்படும்போது கோபுர வாசலிலே என்ற திரைப்படத்தில் வரும் தாலாட்டும் பூங்காற்று என்கின்ற ஜானகி பாடலை ஒரே ஒரு முறை கேட்டுப் பாருங்கள். ஒரு கால எந்திரத்தில் சிக்கிக்கொண்ட கைதி போல நீங்கள் சுழன்று அடித்து இறந்த காலத்திற்கு தூக்கி அடிக்கப்படுவீர்கள் என்பது உண்மை. இது போன்ற அனுபவங்களை மற்றவர்களின் எந்த பாடல்களும் தருவதில்லை என்கிற கேள்விகளுக்கெல்லாம் இளையராஜாவிடம் கூட பதில் இல்லை தான்.

சமீபத்தில் விமான பயணத்தில் 18 ஆயிரம் அடிக்கு மேல் பறந்து கொண்டிருந்த ஒரு தருணத்தில் "அலைகள் ஓய்வதில்லை "படத்தின் "புத்தம் புது காலை.." என்னை அப்படியே தூக்கிச் சென்று மன்னார்குடி வீதிகளின் அதிகாலை பனிக்குளிரோடு நிற்க வைத்தது.

தமிழனாகிய நான் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இளையராஜா பாடல்கள் மூலமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்த தருணம் அது.
என்னை போன்ற பல கோடி தமிழர்களும் அப்படித்தான் வாழ்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.

எங்களுக்கு இது போதும். 
இது மட்டும் போதும்.
விருதுகளை அவரவர் வைத்துக் கொள்ளட்டும்.
அதற்கு எம் வாழ்த்துக்கள்.

ஆனால்…

இசைஞானி இளையராஜா
எமக்கான விருது.

❤️

மணி செந்தில்.

குறிப்பு : படித்ததும் சாதாரணமாக கடந்து செல்ல முடியவில்லை. இணைத்துள்ளேன்

  • கருத்துக்கள உறவுகள்

இது காலத்துக்கு காலம் ஒவ்வொரு திறமையானவர்கள் திரைத்துறையில் கோலோச்சி வருவது வளமையானதுதான்.......எம்.எஸ். விஸ்வநாதனுக்கு ஆஸ்கார் விருது கிடைத்ததா.......இன்றும் எங்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பது அந்தக் கருப்பு வெள்ளை படங்களின் பாடல்கள்தானே .......இளையராஜாவின் பாடல்களும் மிகவும் பிடிக்கும் .......ஆனால் பிள்ளைகளுக்கு அனிருத்தையும் யுவனையும் பிடிக்குதே, அதுதான் காலமாற்றம்......!   😁

பகிர்வுக்கு நன்றி முதல்வன்......!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

விஸ்வநாதனின் பாடல்களும் இளசுவின் ராகங்களும் எங்களுக்கு பிடிப்பதில்லை அதயும் தாண்டி ஆராதித்து கொண்டு இருக்கிறோம் இமான், அனிருத், சந்தோஷ் நாராயணன் எல்லாரும் கிந்தி இசையமைப்பாளர் பப்பிலகிரி போன்றவர்கள் அப்பப்ப புதுசு என்று அவிட்டு விடுவார்கள் ஆனால் எங்கோ ஒரு மூலையில் இளசுவின் அல்லது msvயின்  தண்டவாளத்தில் அவர்களை அறியாமலே ரெயில் ஓடுவார்கள் ஆஸ்கார் வாங்கினாத்தான் அவர் உண்மையிலே இசையமைப்பாளர் என்ற கதை புதியவர்களுக்கு இருக்கலாம்   இத்தாலியில் பிறந்து உலகெங்கும் இசை பரப்பிய Ennio Morricone அவரின் இசையை கொப்பி பண்ணி நிறைய கிந்தி பாடல்கள் பப்பிலகிரி உள்ளடங்கலாக அந்த மனிதருக்கே ஆஸ்கார் வாழ்வின் இறுதி பகுதியில்தான் 97 வயதில் தான் அந்த சிங்கத்தின் கைகளில் கிடைத்தது அதற்க்கு முன் பல விருதுகள் கிடைத்தாலும் அந்த மனிதனின் கைகளில் ஆஸ்கார் அமர பலகாலமகியது .ஆனால் இளசுவுக்கும் msvக்கும் நாங்கள் கொடுத்துள்ள இடம் சாமானியமானது அல்ல .

மேலும் யார் அந்த Ennio Morricone தேடுபவர்களுக்கு .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாட்டிற்கு எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் இளையராஜா என்ற பிரமாண்டத்தை யாராலும் தாண்ட முடியாது. ஒஸ்கார் விருதை வைத்து யாரும் யாரையும் கணிப்பிட முடியாது. அங்கும் அரசியல் நிறையவே இருக்கின்றது. நோபல் பரிசு வழங்குதலை போல.....:beaming_face_with_smiling_eyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இசை 37-38 வருடங்களை நொடியில் பின்னகர்த்திவிடுகிறது.

பரதன் காலத்து நிதர்சனத்தில் புலிகளின் பயிற்சி காணொளிக்கு பின்னணியில் ஒலிக்கும் இசைக்கு சொந்தக்காரரை இப்போது தெரிந்துகொண்ட்டேன். நன்றி @பெருமாள்

Edited by முதல்வன்
ஒரு வசனம் சேர்க்கை

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, முதல்வன் said:

பரதன் காலத்து நிதர்சனத்தில் புலிகளின் பயிற்சி காணொளிக்கு பின்னணியில் ஒலிக்கும் இசைக்கு சொந்தக்காரரை இப்போது தெரிந்துகொண்ட்டேன். நன்றி @பெருமாள்

உண்மையில் Ennio Morricone  தன்னை அமெரிக்காவில் வசிக்க விரும்பவில்லை இடது சாரி தத்துவங்களில் ஆர்வமாய் இருந்தார் அதனால் கொல்லபடுவோம் என்று இத்தாலி வாழ்வையே 91 வயது மட்டும்  வாழ்ந்து போனார் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, முதல்வன் said:

இசைஞானி இளையராஜா
எமக்கான விருது.

❤️

எண்பது வயதிலும் ஒரு மனிதன் நிமிர்ந்து நிற்கின்றான் என்றால்.......?!?!?!?!?!?!?
உன்னால் முடியுமா தம்பி?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தமிழ் நாட்டிற்கு எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் இளையராஜா என்ற பிரமாண்டத்தை யாராலும் தாண்ட முடியாது. ஒஸ்கார் விருதை வைத்து யாரும் யாரையும் கணிப்பிட முடியாது. அங்கும் அரசியல் நிறையவே இருக்கின்றது. நோபல் பரிசு வழங்குதலை போல.....:beaming_face_with_smiling_eyes:

தமிழ் நாட்டில் என்று வருவது நல்லதல்ல பாரத கிந்தியாவில் இருந்து  என்று வரனும் சாமியார் .

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, முதல்வன் said:

இசை 37-38 வருடங்களை நொடியில் பின்னகர்த்திவிடுகிறது.

பரதன் காலத்து நிதர்சனத்தில் புலிகளின் பயிற்சி காணொளிக்கு பின்னணியில் ஒலிக்கும் இசைக்கு சொந்தக்காரரை இப்போது தெரிந்துகொண்ட்டேன். நன்றி @பெருமாள்

அது மட்டும் அல்ல  ஜெர்மனியால் உருவாக்க பட்ட  எனிக்மா தொடர்பாடல் இயந்திரம் பற்றி முழு விளக்கம் அடையணும் என்பதுக்காக தமிழ் மொழி பெயர்ப்பு உள்ள ஆங்கில படங்கள் முதலில் வன்னியிலோ இருந்தே வந்தன .

ஆனால் சில ........... தாங்கள் எழுதியதே வரலாறு என்று இதே யாழில் எழுதுகிறார்கள் .அதனால் யாழில் எழுதினால் வரலாறு மாறி விடும் என்று நம்புகிறார்கள் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

விஸ்வநாதனின் பாடல்களும் இளசுவின் ராகங்களும் எங்களுக்கு பிடிப்பதில்லை அதயும் தாண்டி ஆராதித்து கொண்டு இருக்கிறோம் இமான், அனிருத், சந்தோஷ் நாராயணன் எல்லாரும் கிந்தி இசையமைப்பாளர் பப்பிலகிரி போன்றவர்கள் அப்பப்ப புதுசு என்று அவிட்டு விடுவார்கள் ஆனால் எங்கோ ஒரு மூலையில் இளசுவின் அல்லது msvயின்  தண்டவாளத்தில் அவர்களை அறியாமலே ரெயில் ஓடுவார்கள் ஆஸ்கார் வாங்கினாத்தான் அவர் உண்மையிலே இசையமைப்பாளர் என்ற கதை புதியவர்களுக்கு இருக்கலாம்   இத்தாலியில் பிறந்து உலகெங்கும் இசை பரப்பிய Ennio Morricone அவரின் இசையை கொப்பி பண்ணி நிறைய கிந்தி பாடல்கள் பப்பிலகிரி உள்ளடங்கலாக அந்த மனிதருக்கே ஆஸ்கார் வாழ்வின் இறுதி பகுதியில்தான் 97 வயதில் தான் அந்த சிங்கத்தின் கைகளில் கிடைத்தது அதற்க்கு முன் பல விருதுகள் கிடைத்தாலும் அந்த மனிதனின் கைகளில் ஆஸ்கார் அமர பலகாலமகியது .ஆனால் இளசுவுக்கும் msvக்கும் நாங்கள் கொடுத்துள்ள இடம் சாமானியமானது அல்ல .

மேலும் யார் அந்த Ennio Morricone தேடுபவர்களுக்கு .

பகிர்வுக்கு நன்றி பெருமாள்.......!   👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, பெருமாள் said:

தமிழ் நாட்டில் என்று வருவது நல்லதல்ல பாரத கிந்தியாவில் இருந்து  என்று வரனும் சாமியார் .

உண்மைதான்....தமிழ்த்திரையுலகிற்கு இரு பெரும் வரப்பிரசாதங்கள்.ஒன்று கமலகாசன்.இரண்டாவது இளையராஜா.
இவர்கள் இருக்கும் போதே அவர்களுக்குரிய மரியாதையை கொடுத்து கொண்டாடி விட வேண்டும். சிறு சிறு விடங்களுக்கெல்லாம் அவர்களை தூற்றிக்கொண்டிருக்காமல் அவர்களின் திறமையை மட்டும் ரசிக்க வேண்டும். 

50 வயது வந்தாலே எல்லாம் முடிந்தது என சொல்லும் காலகட்டத்தில் 80 வயதில் இப்படியொரு காதல் பாட்டு !?!?!?!?!?!

கண் கலங்குகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/3/2023 at 11:04, குமாரசாமி said:

உண்மைதான்....தமிழ்த்திரையுலகிற்கு இரு பெரும் வரப்பிரசாதங்கள்.ஒன்று கமலகாசன்.இரண்டாவது இளையராஜா.
இவர்கள் இருக்கும் போதே அவர்களுக்குரிய மரியாதையை கொடுத்து கொண்டாடி விட வேண்டும். சிறு சிறு விடங்களுக்கெல்லாம் அவர்களை தூற்றிக்கொண்டிருக்காமல் அவர்களின் திறமையை மட்டும் ரசிக்க வேண்டும். 

உண்மைதான் தனக்குதானே விழா நடாத்தி கொண்டாடும் கட்டுமரம் போல் அல்ல இவர்கள் .😀

  • கருத்துக்கள உறவுகள்
On 20/3/2023 at 23:10, குமாரசாமி said:

ஒஸ்கார் விருதை வைத்து யாரும் யாரையும் கணிப்பிட முடியாது. அங்கும் அரசியல் நிறையவே இருக்கின்றது.

சாமியார் அதைவிட பெரிய அரசியல் கீரவாணி ஒஸ்கார் விருது வாங்கிய விதம் நேரம் குறைவு என்றபடியால் சுருக்கமாக தருகிறேன் .

1.இம்முறை ஆஸ்கார் விருதுக்கு கிந்திய அரசால் அனுப்பபட்ட படம் மோடியின் மொழியான குஜராத்தி மொழி படம் பெயர் நினைவில் இல்லை வழக்கமாக கிந்தி படம்தான் ஆஸ்காருக்கு போய் அவமானபட்டு திரும்பி  வரும் .

2.அதுபற்றி ரகுமான் ஒஸ்காருக்கு இந்தியாவில் இருந்து தெரிவு செய்யும் குழு மீது நேரடியாக குற்றசாட்டு வைக்க அது கொழுந்து விட்டு எரிகிறது இணையமெங்கும் .

3.அப்ப எப்படி கீரவாணி பரிசை பெற்றார் என்றால் RRR  படக்குழு தாங்களாகவே சிலவு செய்து பரப்புரைகள் மேற்கொண்டு இந்திய அரசின் எந்த உதவியையும் பெறாமல் சுயமாக பெற்று கொண்டார்கள் .

இப்ப விளங்கி இருக்கும் ஏன் தென்னிந்திய படம்கள் கிந்தியை விட தரமாய் இருந்தாலும் இளையராஜாவின் இசை மேம்பட்டு இருந்தாலும் வட இந்திய சினிமா அரசியலால் வேண்டும் என்றே  மழுங்கடிக்க பட்டு உள்ளன .

RRR  இன் சுயமான வெற்றி இப்படியும் போய் ஒஸ்கார் எடுக்கலாம் என்ற நெருப்பை பற்ற வைத்தவர் ரகுமான் என்று பேச்சு உறுதிபடுத்தாத செய்தி .

தென்னிந்திய சினிமா உலகின் ஆஸ்கார் அவதாரம் அடுத்தமுறை வடகிந்தியர்களை யோசிக்க வைக்கும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.