Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை தனியார்மயப்படுத்த முயற்சி; பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை தனியார்மயப்படுத்த இடமளிக்கப் போவதில்லை - இ.பெ.கூ சேவை சங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை தனியார்மயப்படுத்த முயற்சி; பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை தனியார்மயப்படுத்த இடமளிக்கப் போவதில்லை - இ.பெ.கூ சேவை சங்கம்

Published By: NANTHINI

26 MAR, 2023 | 04:46 PM
image

 

(இராஜதுரை ஹஷான்)

லங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு தனியார் நிறுவனத்துக்கு வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை தனியார்மயப்படுத்தினால் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொழில்வாய்ப்புக்களை இழப்பார்கள் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சேவை சங்க தலைவர் ஜகத் விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

துறைமுகம், மின்சாரம் மற்றும் பெற்றோலியம் ஆகிய துறைகளின் தொழிற்சங்க தலைவர்களுடன் இன்று (26) கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் கொள்வனவுக்கு தேவையான டொலரை சுயமாக திரட்டிக்கொள்கிறது. 

கூட்டுத்தாபனம் கடந்த ஜனவரி மாதம் 1300 கோடி ரூபாய், பெப்ரவரி மாதம் 900 கோடி ரூபாய் இலாபமடைந்துள்ளது. இவ்வாறு இலாபமடையும் நிறுவனத்தையே அரசாங்கம் தனியார்மயப்படுத்த தீர்மானித்துள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் 600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கினால் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொழில்வாய்ப்புக்களை இழக்க நேரிடும். இதனால் நாட்டில் பாரிய பிரச்சினைகள் தோற்றம் பெறும்.

மறுசீரமைப்பு என்று குறிப்பிட்டுக்கொண்டு அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்தும்போது பலர் தொழில்வாய்ப்புகளை இழப்பார்கள். இதற்கான மாற்று நடவடிக்கைகள் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் பதிலளிக்கையில்,

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்த பகுதியை சீனாவின் சினொபெக் நிறுவனத்துக்கும், திருகோணமலை துறைமுகம் மற்றும் அதனை அண்மித்த பகுதியை இந்தியாவுக்கும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கீரியும் பாம்பும் போல் பகைத்துக்கொள்ளும் சீனா, இந்தியா ஆகிய நாடுகள் இலங்கைக்குள் முரண்பட்டுக்கொண்டால் தேவையில்லாத பிரச்சினையை நாடு எதிர்கொள்ள நேரிடும்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்தும் செயற்பாட்டுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. சகல தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்றார்.

https://www.virakesari.lk/article/151436

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை தனியார்மயப்படுத்த முயற்சி; பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை தனியார்மயப்படுத்த இடமளிக்கப் போவதில்லை - இ.பெ.கூ சேவை சங்கம்

கூடி இருந்து ஒப்பாரி வையுங்கள்.

உள்ளுக்கு எல்லா விடயங்களும் முடிந்து.

 

போர்த்திக்கிட்டு படுத்துக்கவா

படுத்துக்கிட்டு போர்த்திக்கவா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.