Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

"கட்டிங் பிளேடு வைத்து பல்லை பிடுங்கினார்" - விசாரணை கைதிகளை ஏஎஸ்பி தாக்கிய குற்றச்சாட்டின் பின்னணி

விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கி கொடூர தாக்குதல்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளை அந்த மாவட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங், கொடூரமாகத் தாக்கி, பற்களைப் பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சேரன் மாதேவி உதவி ஆட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் சரக காவல் நிலையத்திற்கு வரும் விசாரணைக் கைதிகளை அந்த மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளராக உள்ள பல்வீர் சிங், கொடூரமாகத் தாக்கி, அவர்களது பற்களைப் பிடுங்கியதாக விசாரணைக் கைதிகள் சிலர், வீடியோ வெளியிட்டு குற்றம் சாட்டியுள்ளனர்.

வெங்கடேசன் என்பவரைக் கொலை செய்ய முயன்றதாக கடந்த மார்ச் 23ஆம் தேதி சிலர் கல்லிடைக்குறிச்சி காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அங்கு வந்த மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் பல்வீந்தர் சிங் அவர்களைக் கொடூரமாகத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

 

தாக்கப்பட்டவர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்ட வீடியோவில், காவல் நிலையத்திற்கு இவர்கள் அழைத்து வரப்பட்டபோது காவல்துறையினருக்கான சீருடையில் இருந்த பல்வீந்தர் சிங், பிறகு சாதாரண உடைக்கு மாறிக்கொண்டு இவர்களைத் தாக்கியதாகக் கூறியுள்ளனர்.

"ஏஎஸ்பி சார் கையில் கையுறை அணிந்து கொண்டு டிராக் பேண்ட் அணிந்துகொண்டு அங்கு வந்தார். எங்கள் வாய்க்குள் ஜல்லி கற்களைப் போட்டு கொடூரமாக அடித்தார். மேலும் கற்களை வைத்து பல்லை உடைத்தார்.

எனது அண்ணன் மாரியப்பனுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடைபெற்றது. அவன் தற்போது படுத்த படுக்கையாக உணவு சாப்பிட முடியாமல் தவித்து வருகிறான். எங்களுக்கு நடந்ததைப் போன்று வேறு யாருக்கும் நடக்கக்கூடாது," என்று அவர்கள் பேசியுள்ளனர்.

பல்வீந்தர் சிங்கால் பல்லை பிடுங்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ள வேத நாராயணனிடம் பிபிசி பேசியபோது, "நான் அம்பாசமுத்திரம் விக்கிரமசிங்கபுரத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். எனக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.

எனக்கும் எனது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், குடும்பத்தை விட்டுப் பிரிந்து கடந்த நான்கு ஆண்டுகளாகத் தனியாக வாழ்ந்து வருகிறேன். 27 ஆண்டுகளுக்கு முன் நான் கல்லூரிப் படிப்பை முடித்தேன். எனக்கு அந்தச் சான்றிதழ் தேவைப்பட்டதால் கடந்த 20ஆம் தேதி அதைக் கேட்டு என் மனைவி தங்கியிருக்கும் வீட்டிற்குச் சென்றபோது எனக்கும் எனது மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் ஏற்பட்ட சிறிது நேரத்தில் காவல்துறையினர் அங்கு வந்து என்னிடம் இருந்து செல்போனை பிடுங்கிவிட்டு உடனடியாக காவல் நிலையத்திற்கு வருமாறு கூறிச் சென்றனர். மறுநாள் கோவில் திருவிழா என்பதால் 23ஆம் தேதி காலை காவல் நிலையம் செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது, என்னைத் தேடி வந்த இரண்டு காவலர்கள் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று உட்கார வைத்தனர்.

விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கி கொடூர தாக்குதல்

காவல் நிலையத்தில் வெகுநேரமாக உட்கார்ந்து இருந்தபோது அங்கிருந்த காவலர் ஒருவர் 'உனக்கு தனி ட்ரீட்மென்ட் இருக்கு, ஏஎஸ்பி வந்து கொடுப்பாரு' என்று கூறினார். இதனிடையே எனது கையில் கட்டியிருந்த பாஜக கயிறு, சாமிக் கயிறு மற்றும் இடுப்பிலிருந்த கயிற்றை போலீசார் அறுத்து எடுத்தனர்.

சிறிது நேரத்தில் ஏஎஸ்பி அங்கே வந்து என்னிடம் இந்தியில் ஏதோ கேட்டார். எனக்கு விளங்கவில்லை. நான் உடனே ஆங்கிலத்தில் குடும்பத்தில் மனைவிக்கும் எனக்கும் பிரச்னை எனக் கூறினேன்.

காவல் நிலையத்தின் மேல்பகுதியில் இருந்த அறைக்கு என்னை ஏஎஸ்பி மற்றும் சில காவலர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு கட்டிங் பிளேடு ஒன்றை எடுத்து எனது வாயின் கீழ் தாடையில் உள்ள பல் ஒன்றைப் பிடுங்கினார். மேலும் எனது காதில் அந்த கட்டிங் பிளேயரை வைத்து அமுக்கியதில் எனக்குக் காயம் ஏற்பட்டது.

பின்னர் காவல் நியைத்தில் இருந்து மாலை 5 மணிக்கு என்னை அனுப்பினார். நான் அன்றிலிருந்து இன்று வரை ஐந்து நாட்களாகச் சாப்பிட முடியவில்லை," என்றார் வேதநாராயணன்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் அம்பாசமுத்திரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பல்பீர் சிங் பொறுப்பேற்ற பிறகு அம்பாசமுத்திரம் பகுதியில் சிறு குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுடைய பற்களைப் பிடுங்கி கொடூரமான தண்டனை வழங்கி வருவதாகப் பலர் கூறுகின்றனர்.

அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, பாப்பாக்குடி உள்ளிட்ட பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்ட நபர்களின் பற்களைப் பிடுங்கியதாகச் சொல்லப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு ஜமீன் சிங்கம்பட்டியைச் சேர்ந்த சூர்யா என்பவர் அதே பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்து பிரச்னை செய்தார் என்ற குற்றச்சாட்டில் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு ஏஎஸ்பி பல்பீர் சிங் அவரது பற்களைப் பிடுங்கியது மட்டுமல்லாமல் விசாரணைக்காக வந்த அதே பகுதியைச் சேர்ந்த மேலும் மூன்று இளைஞர்களின் பற்களையும் உடைத்து, தற்போது அந்த மூன்று பேரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக சூர்யா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கி கொடூர தாக்குதல்

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள வழக்கறிஞர் மகாராஜா பிபிசி தமிழிடம் பேசும்போது, "பொதுவாக எவ்வளவு பெரிய வழக்காக இருந்தாலும் விசாரணைக் கைதிகளை காவல் நிலையத்தில் வைத்தோ, சிறைச்சாலையில் வைத்தோ காவல்துறையினர் தாக்கக்கூடாது என்பது சட்டம். அந்த விதியை மீறி பல்வேறு வழக்குகளில் காவல்துறையினர் கைதிகளைக் கொடூரமாகத் தாக்குகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் நடத்தும் விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது சிபிஐ இதை விசாரிக்கவேண்டும். புகார் தெரிவிக்கும் நபர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

ஏஎஸ்பி மற்றும் இதில் தொடர்புடைய காவலர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

இது சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில், சேரன்மாதேவி உதவி ஆட்சியர் முகமது சபீர் ஆலம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டுள்ள பல்வீந்தர் சிங், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஶ்ரீவைகுண்டம் பகுதியின் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் அம்பாசமுத்திரம் பொறுப்பு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c514ljyg8xwo

  • Sad 1
  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கைதி பற்களை உடைத்ததாக புகார் - அம்பை ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் இடைநீக்கம் ரத்து ஏன்?

பல்வீர் சிங் இடைநீக்கம் ரத்து
கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கைது செய்யப்பட்டவர்களைக் கடுமையாகத் தாக்கி, அவர்களின் பற்களை கற்களால் உடைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட அம்பாசமுத்திரம் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங்கின் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வழக்கு நிலுவையில் இருக்கும்போது இடைநீக்கம் ரத்துசெய்யப்பட்டது ஏன்?

நடந்தது என்ன?

திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் துணைச் சரகத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளராக (ஏஎஸ்பி) பணியாற்றி வந்தவர் பல்வீர் சிங். இவர் அங்கே ஏ.எஸ்.பியாக பணியாற்றி வந்த காலகட்டத்தில், அந்தச் சரகத்திற்குட்பட்ட அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் ஆகிய மூன்று காவல் நிலையங்களுக்கு வரும் விசாரணைக் கைதிகளை தாக்கியதாகவும், அவர்களின் பற்களைப் பிடுங்கியதுடன் வேறு பல துன்புறுத்தல்களில் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் 2023 மார்ச் மாதம் மிகப் பெரிதாக வெடித்தது.

பல்வீர் சிங் இடைநீக்கம் ரத்து

பணியாளர் தேர்வாணய விதிகள் என்ன சொல்கின்றன?

யுபிஎஸ்சி மூலம் அகில இந்தியப் பணிகளில் சேர்பவர்களுக்கான ஒழுங்கு விதிமுறைகள், குற்றம் சாட்டப்படும் ஒரு அதிகாரி எவ்வளவு காலகட்டத்திற்கு இடைநீக்கத்தில் இருக்கலாம் என்பதை வரையறுக்கிறது. அதன்படி, "ஊழல் தவிர்த்த பிற குற்றங்களை எதிர்கொள்ளும் அதிகாரி, ஓராண்டிற்கு மேல் இடைநீக்கத்தில் வைக்கப்பட முடியாது. அந்த கால கட்டத்திற்குள் விசாரணையை முடித்து, உரிய நடவடிக்கைகளுக்கான ஆணையை அரசு பிறப்பிக்க வேண்டும். இடைநீக்கம் செய்யப்பட்ட தேதியிலிருந்து ஓராண்டிற்குள், இந்த நடவடிக்கைகள் நிறைவடையவில்லையெனில், அந்த அதிகாரியின் இடைநீக்கம் தானாகவே ரத்தாகிவிடும்".

ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அதிகாரிகளை மட்டும் இரண்டாண்டுகளுக்கு இடைநீக்கத்தில் வைத்திருக்கலாம்.

பல்வீர் சிங் இடைநீக்கம் ரத்து
 

தமிழ்நாடு அரசு ரகசியம் காப்பது ஏன்? என கேள்வி

சம்பந்தப்பட்ட அதிகாரி மீது குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கையை எடுத்து, உரிய அறிக்கையைத் தாக்கல் செய்யாதது யார் தவறு எனக் கேள்வியெழுப்புகிறார் மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி திஃபேன்.

"இடைநீக்கத்திற்கு கால வரம்பு இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், இந்த காலகட்டத்திற்குள் உரிய நடவடிக்கையை எடுக்காதது யார் தவறு? முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் துறை இது. அவர் பதில் அளிப்பாரா? தேர்தல் வரும்போது என்னவெல்லாம் சொன்னார்களோ அதற்கு மாறாகச் செயல்படுகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி அமுதா அளித்த அறிக்கை ஏன் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது? அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு ஒன்பது மாதங்களாகியும் எந்த நடவடிக்கை முடிவும் ஏன் எடுக்கப்படவில்லை?

இந்த விவகாரம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் அறிக்கை கேட்டது. அது தொடர்பாக இப்போதுவரை அரசு பதிலளிக்கவில்லை. இதுபோல 1990களின் துவக்கத்தில் தூத்துக்குடியில் ஏடிஎஸ்பியாக இருந்த ஒரு அதிகாரி மீது சரியாக நடவடிக்கை எடுக்காத காரணத்தால்தான், அவர் தொடர் தவறுகளில் ஈடுபட்டுக் கொண்டே சென்றார். இந்த அதிகாரியும் அப்படி ஆகிவிடுவாரோ என்ற அச்சம் இருக்கிறது.

அமுதா அளித்த அறிக்கை வெளியில் வரவில்லை, காவல் நிலையங்களின் சிசிடிவி காட்சிகள் வெளியில் வரவில்லை, ஆனால் இடைநீக்கம் குறித்த செய்திகள் மட்டும் கசிய விடப்படுகின்றன என்றால் என்ன அர்த்தம்? இந்த அரசு யார் பக்கம் இருக்கிறது?" எனக் கேள்வியெழுப்புகிறார் ஹென்றி திஃபேன்.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பல்வீர் சிங் 2020ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்ச்சி பெற்றவர். தமிழ்நாடு பிரிவில் இடம்பெற்ற அவர், அம்பாசமுத்திரத்தில் பயிற்சி ஏஎஸ்பியாக பணியாற்றி வந்த காலகட்டத்தில் இந்த விவகாரம் வெடித்தது.

https://www.bbc.com/tamil/articles/cqv6e46x152o



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவர் நாட்டில் இதுவரை காலமும் யாரும் பெறாத பெரும்பான்மையோடு வெற்றியீட்டியிருக்கிறார். அவர்க்கு பாரிய பொறுப்புண்டு இதற்குப்பின்னால். முன்னிருந்த அரசாங்கங்கள் யாரும் சொன்னதை நிறைவேற்றினார்களா? இவர் எதுவும் சொல்லவில்லை, யாரும் அதுபற்றி கேட்கவுமில்லை. அது இருக்க, ஏன் அனுரா வந்தவுடனேயே இவ்வளவு கேள்வி, கோபம்? அவர் இன்னும் பாராளுமன்றமே அமைக்கவில்லை, எதற்காக இத்தனை அவசரம்? ஜனாதிபதி தேர்தலில் கூட, வடக்கு மக்கள் அந்த கட்சிக்கு வாக்களிக்கவில்லை, இறுதி நேரத்தில் தங்கள் முடிவை மாற்றியதன் காரணத்தை விளங்க முடியும். மட்டக்களப்பில் கூட சிவநேசதுரை சந்திரகாந்தன், விநாயக மூர்த்தி முரளிதரன் மேல் சட்ட நடவடிக்கை கட்டாயம் எனும் செய்தி பரவியதால் மக்கள் அவர்களை தவிர்த்திருக்கலாம். அது தமிழசுகட்சிக்கு சாதகமாய் அமைந்துள்ளது அவ்வளவே. அதோடு கிழக்கின் விடி வெள்ளிகளால்  அனுராவிடம் இருந்து எந்த சலுகைகளையும் பெற முடியாது என்பதும் மக்கள் புரிந்ததே.
    • நீங்கள் ஏன் பாராளுமன்றம் போக விரும்புகிறீர்கள் என்று பத்திரிகையாளர் சுமந்திரனை கேட்ட கேள்விக்கு, சுமந்திரன் அளித்த பதில்,  "அனுரா,தங்களால் நல்லாட்சி  2015-2019 காலத்தில் வரையப்பட்ட சட்ட வரைபைஅமுல்படுத்துவேன் என்று தேர்தல் வாக்குறுதியில் சொல்வதாகவும், அது தன்னாலும் இன்னொரு சிங்களவரின் பெயர், (மறந்துவிட்டேன்)  வரையப்பட்டதாகவும் அதை முன்னெடுத்து செல்ல தான் பாராளுமன்றம் போய் தனது திறமைகளை உபயோகித்து அதை நடைமுறைப்படுத்த முடியும் என தான் நம்புவதாலுமே தான் பாராளுமன்றம் போக விருப்பப்படுவதாக." ஒரு நேர்காணலில் சுமந்திரன் தெரிவித்திருந்தார். ஆனால் இவர் முன்பு பலதடவை அந்த வரைபில், ஏக்கய ராஜ்ய எனும் சட்ட வரைபு அது என கூறியிருக்கிறார், அதே ஒரு சர்ச்சையான சொல். இவர் சொல்கிறார் ஒருமித்த என்று, வேறொருவர் விளக்குகிறார் ஒற்றை ஆட்சி என்று. இவர் பாராளுமன்றம் போனால் ஏதோ மக்களை ஏமாற்றி சடைஞ்சு நிறைவேற்றி போடுவார். பொன்னம்பலம் அதை ஆராய வெளிகிட்டால் அங்கு சுமந்திரன் என்ன திருகுதாளம் வரைந்தார் என்பது வெளிவரும், கண்டிப்பாக எதிர்ப்பு வரும், ஆகவே தான் வரைந்ததை பொன்னம்பலம் கஜேந்திரன் குழப்பி விட்டார் என பரப்பலாம். அல்லது மாற்றம் செய்தால் நான் போயிருந்தால்; அதை சாதித்திருப்பேன், இதை சாதித்திருப்பேன் மக்கள் ஆணை தரவில்லை என்பார். ஆனால் எல்லாம் வரைந்தவருக்கு ஏன் நடைமுறைப்படுத்த முடியாமல் போனது? என்பது கேள்விக்குறி. கோத்த ஓடியபின் அரகலயாவை அடக்கிய ரணில் ஏன் அதை நடைமுறைப்படுத்தவில்லை?   நாட்டின் கடந்த சரித்திரம் புரியாமல் பேசுகிறீர்கள். சந்திரிகாவும் ஒருகாலத்தில் இராணுவத்தை ஒரு வரையறைக்குள் கொண்டுவர எடுத்த எடுப்பில் முயற்சித்தவர், ஆனால் அவர்களுக்கு அடிபணிவதை தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை அவரால். இதற்கு பல செயற்திட்டங்கள்  தேவைப்படும்  மாற்றியமைக்க முன்பு. அதற்கு முன் பொருளாதார உடனடிப்பிரச்சனையிலேயே தான் கவனம் செலுத்தப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆக்கப்பொறுத்த நாம் ஆறவும் பொறுக்க வேண்டும். இல்லையேல் எல்லாம் கெட்டுவிடும். இதில் நான் என்ன தவறுதலாக எழுதிவிட்டேன்? அவர் இறுதிவரை கொண்ட  கொள்கையில்  உறுதியாக இருந்தார் என்று சொன்னேன், மாற்றத்தை அவரால் ஏற்படுத்த முடியவில்லை. அனுராவுக்கு காலம், சந்தர்ப்பம், அரசியல் எதிர்ப்பற்ற வெற்றி சூழல், மக்கள் மனங்களில் மாற்றம், சாதகமாக அமைந்துள்ளது என்றேன். இதிலென்ன தவறு?   எழுபத்தைந்து வருடங்களாக வேரோடி அடர்ந்து வளர்ந்து வளர்த்து விட்ட விருட்ஷத்தை ஒரு நொடியில் அடியோடு அழிப்பதென்பது எத்தனை பாரிய விளைவை ஏற்படுத்தும் என்பதை புரிந்து பேசுகிறீர்களா? அல்லது என்னோடு விதண்டாவாதம் பண்ண வேண்டுமென்று பேசுகிறீர்களா தெரியவில்லை? முதலில் அதில் உள்ள தழைகளை களைய வேண்டும், கிளைகளை மெதுவாக வெட்ட வேண்டும், பின் மரத்தை சிறு சிறு துண்டுகளாக்க வேண்டும், அதன்பின் வேர்களை கிளற வேண்டும்,  அதன் பின்னே அடிமரத்தில் கைவைக்க வேண்டும். இலகுவாக தானாகவே மரம் ஆட்டம் காணும், சரியும். அதை தமிழர் மத்தியிலேயே சிங்களம் மிகச்சாதுரியமாக செய்தது. இவர் நாட்டில் தொடர்ந்து ஆட்சி செய்ய வேண்டுமாயின் கட்டாயம் இதை செய்தே ஆகவேண்டும். இல்லையேல் அரசியலை ஒருதடவைக்கு மேல் கனவு காணக்கூடாது. இது வெறும் உதாரணம். பிறகு இதில கேள்வி கேட்டு விதண்டாவாதம் பண்ணி குடையக்கூடாது. 
    • செய்ய வேண்டிய வேலை… ஆனால் இவரால் முடியுமா? இப்போ இருக்கும் ஆட்களை சேர்த்து மினக்கெட்டு அவர்கள் மீண்டும் ஒரு சீட்டுக்காக பிய்த்து கொண்டு போவதை விட. அருச்சுனாவின் அணியை பலபிக்க உண்மையான எண்ணம் கொண்டோர் இணையலாம். அந்த அணியில் அருச்சுனா தவிர்ந்த ஏனையோர் சரியாக வழிநடந்தால், உத்வேக படுத்தப்பட்டால் மீளலாம்.
    • இதுக்கு வேப்பிலை அடிக்கத்தான் சுமந்திரன் அவசரப் படுகிறாரோ..
    • உடான்ஸ் லீக்ஸ் இணையதளம் அதிரடியாக அனுரவின் கொள்கை பிரகடனத்தை லீக் செய்துள்ளது, இதன் முக்கிய விபரங்கள்: 1. மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் 2. மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் 3. தமது பிரதேசங்களில் மத ஸ்தலங்கள் கட்டுவதற்கான அனுமதி வழங்கும் அதிகாரம் மாகாணசபைகளுக்கு மட்டுமே வழங்கப்படும். இதில் தொல்பொருட்கள் உட்பட எந்த அரச திணைக்களமும் மாகாண சபையை மீறி செயல்பட முடியாது. 4. கடந்த 5 வருடத்தில் கட்டப்பட்ட அனுமதியில்லா மததலங்கள் இடிக்கப்படும். 5. போர் இல்லை, இப்போ மூவின மக்களும் ஒண்டுக்கு இருக்கிறார்கள், எனவே முப்பட்டைகள் 1/3 ஆல் குறைக்கப்படும். இந்த பணம் வைத்திய, கல்வி துறைக்கு நேரடியாக ஒதுக்கப்படும். முப்படை முகாம்கள் 1983 க்கு முந்திய நிலைக்கு போகும். 6.  1948 இல் இருந்து இலங்கை அரசுகள் கடைபிடித்த இன ஒதுக்கலுக்கு அரசு சார்பாக சிறுபான்மையினரிடம் மன்னிப்பு கேட்கிறோம். 7. இலங்கைக்கு உழைத்த, இங்கே பிறந்து இந்தியாவுக்கு அனுப்பபட்டவகளிடம் மன்னிப்பு கேட்கிறோம். 8. மாகாண சபைகளுக்கு வரி விதிக்கும், வெலிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்க்கும் அதிகாரம் கொடுக்கப்படும். (யாவும் கற்பனை)
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.