Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெருஸலேம் அல் அக்சா பள்ளிவாசல் வளாகத்துக்குள் இஸ்ரேலிய பொலிஸார் - பக்தர்கள் மோதல்; 350 பேர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: SETHU

05 APR, 2023 | 12:25 PM
image

ஜெருஸலேமிலுள்ள புனித அல் அக்சா பள்ளிவாசல் வளாகத்துக்குள் இஸ்ரேலிய பொலிஸார்  இன்று நுழைந்ததையடுத்து, பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன. 

இம்மோதல்களையடுத்து சுமார் 350 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இம்மோதல்களால் 14 பேர் காயமடைந்துள்ளனர் என பலஸ்தீனியர்கள் தெரிவித்துள்ளனர். 

இஸ்ரேலிய பொலிஸார் இன்று அதிகாலை புனித அல்-அக்சா பள்ளிவாசலை முற்றுகையிட்டனர். அப்பள்ளிவாசலை

பள்ளிவாசலுக்குள் உள்ள கிளர்ச்சியாளர்களை அகற்றுவதற்காக இம்முற்றுகை மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், காஸா பிராந்தியத்தை ஆளும் ஹமாஸ் இயக்கம் இது ஒரு பெரும் குற்றம் என விமர்சித்ததுடன், இப்பள்ளிவாசலை பாதுகாப்பதற்காக பெருந்திரளாக செல்லுமாறு மேற்குக் கரையிலுள்ள முஸ்லிம்களை கோரியுள்ளது. 

பொலிஸார் ஸ்டன் கிறனேட்டுகள் மற்றும் றப்பர் தோட்டாக்கள் மூலம் தாக்கியதாகவும் இதனால் குறைந்தபட்சம் 14 பேர் காயமடைந்தனர் எனவும் பலஸ்தீனியர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தின் பின்ன காஸாவிலிந்து இஸ்ரேலை நோக்கி குறைந்தபட்சம் 9 ரொக்கெட்கள் ஏவப்பட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/152166

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அல்-அக்ஸா மசூதிக்காக முட்டிக்கொள்ளும் முஸ்லிம்களும் யூதர்களும்: என்ன காரணம்?

பாலஸ்தீன் - இஸ்ரேல் விவகாரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

5 மணி நேரங்களுக்கு முன்னர்

ஜெருசலேமின் அல்-அக்ஸா மசூதி புதன்கிழமையன்று பட்டாசுகளின் ஒலி, துப்பாக்கிச் சூடு மற்றும் அலறல்களால் அதிர்ந்தது.

இஸ்ரேலிய போலீசார் மசூதிக்குள் நுழைந்ததாகவும் பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலிய போலீசாருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் சில வீடியோக்களில், இஸ்ரேலிய போலீசார் பாலஸ்தீனியர்களை அடிப்பது தெரிகிறது.

சமீபத்திய வன்முறைக்குப் பிறகு மசூதிக்குள் நாற்காலிகள், தரை விரிப்புகள் சிதறிக் கிடப்பதை மற்றொரு வீடியோவில் பார்க்க முடிகிறது.

 

பாலஸ்தீன எதிர்ப்பாளர்கள் பட்டாசுகள், தடிகள் மற்றும் கற்களை ஏந்தியபடி மசூதிக்குள் தங்களைத் தாழிட்டுக் கொண்டதாக இஸ்ரேல் போலீசார் கூறுகின்றனர்.

இஸ்ரேலிய போலீசாரின் பலப்பிரயோகத்தில் 14 பேர் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீனியர்கள் தெரிவித்துள்ளனர். போலீசார் சிலரை கைகளைக் கட்டி வெளியே அழைத்துச் செல்வது வீடியோவில் தெரிகிறது.

இஸ்ரேலிய போலீசார் ஸ்டென் கையெறி குண்டுகளையும் ரப்பர் தோட்டாக்களையும் பயன்படுத்தினர். இதன்போது காஸா பகுதியில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஒன்பது ராக்கெட்டுகள் ஏவப்பட்டன.

ஐந்து ராக்கெட்டுகள் வழியில் அழிக்கப்பட்டன என்றும் நான்கு ராக்கெட்டுகள் திறந்த பகுதிகளில் செயலிழக்கச் செய்யப்பட்டன என்றும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.

இந்த மசூதி தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான சர்ச்சை பழையதாக இருக்கலாம். ஆனால் இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சரும் தீவிர வலதுசாரி தலைவருமான இட்மர் பென் கிவிர் கடந்த ஜனவரி மாதம் மசூதி வளாகத்திற்குச் சென்றபோது அல்-அக்ஸா மசூதி தொடர்பான பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது.

பெஞ்சமின் நேதன்யாகு பிரதமராக பதவியேற்ற ஒரு வாரத்திற்குள் இந்தப் பயணம் நடந்தது. இது பாலஸ்தீனிய நிர்வாகத்தால் "ஆத்திரமூட்டும் நடவடிக்கை" என்று அழைக்கப்பட்டது.

பாலஸ்தீன் - இஸ்ரேல் விவகாரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மோதலுக்குப் பிறகு அல் அக்ஸா மசூதிக்கு வெளியே நிற்கும் பாதுகாப்புப் படையினர்.

பதற்றம் அதிகரிக்க காரணம்

கடந்த காலங்களிலும் அல்-அக்ஸா மசூதி தொடர்பான சர்ச்சை காரணமாகவே பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையே பல மோதல்கள் தொடங்கியுள்ளன.

ரமலான் மாதம் நடைபெற்று வரும் இந்த வேளையில் மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் ஏற்கெனவே பல மாதங்களாக பதற்றம் உச்சத்தில் உள்ளது.

இந்தப் புனித தலத்தில் இருந்து மிகவும் உணர்ச்சிகரமான நேரத்தில் புதிதாக வன்முறை வெடிப்பது தொடர்பாக, அதிகாரிகளும் தூதாண்மை துறையினரும் ஏற்கெனவே அச்சத்தில் இருந்தனர்.

மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமை 1948இல் இருந்து 1967இல் நடந்த ஆறு நாள் போர் வரை ஜோர்டன் ஆட்சி செய்தது.

இந்த போருக்குப் பிறகு இஸ்ரேல் இந்தப் பகுதியில் மேலாதிக்கத்தை நிறுவியது.

இருப்பினும், ஜோர்டனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான சமாதான உடன்படிக்கையின்கீழ், ஜெருசலேமின் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மத தலங்களைக் கண்காணிக்க ஜோர்டனுக்கு உரிமை கிடைத்தது.

கடந்த ஆண்டு மே மாதம், இஸ்ரேலின் அப்போதைய பிரதமர் நெஃப்தாலி பென்னட், அல்-அக்ஸா மசூதியின் நிர்வாகத்தில் வெளிநாட்டு தலையீட்டை நிராகரிப்பதாகக் கூறினார். இந்த அறிக்கைக்குப் பிறகு, ஜோர்டன் மற்றும் பாலஸ்தீனியர்கள் கோபமடைந்தனர்.

புனிதத் தலங்களில் உள்ள 'பாலஸ்தீன நிலத்தை ஆக்கிரமிக்கும்' திட்டத்தின் ஒரு பகுதி இது என்று ஜோர்டன் அழைத்தது. தற்போது, அதன் நிர்வாகப் பொறுப்பு ஜோர்டன் வக்ஃப் வாரியத்திடம் உள்ளது.

அல்-அக்ஸா மசூதி ஏன் மிகவும் முக்கியமானது?

பாலஸ்தீன் - இஸ்ரேல் விவகாரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி தொடர்பாக இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே சர்ச்சை ஏற்படுவது இது முதல் முறையல்ல.

கடந்த ஆண்டும் இங்கு பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே மோதல் தொடங்கியது.

அல்-அக்ஸா மசூதி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு ஏன் இவ்வளவு முக்கியம் என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

அல்-அக்ஸா மசூதி ஏன் இவ்வளவு முக்கியம்?

அல்-அக்ஸா மசூதி கிழக்கு ஜெருசலேமில் அமைந்துள்ள யூதர்களின் புனிதமான இடம். மேலும் இது இஸ்லாத்தின் மூன்றாவது புனிதமான இடமாகவும் கருதப்படுகிறது.

யூதர்களால் 'டெம்பிள் மவுண்ட்' என்றும், முஸ்லிம்களால் 'அல்-ஹராம் அல்-ஷரீஃப்' என்றும் அழைக்கப்படும் புனிதத் தலத்தில் 'அல்-அக்ஸா மசூதி' மற்றும் 'டோம் ஆஃப் தி ராக்' ஆகியவை உள்ளன.

'டோம் ஆஃப் தி ராக்' கிற்கு யூத மதத்தில், அனைத்தையும்விட புனிதமான தலம் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. முகமது நபியுடன் இணைந்திருப்பதால், இதை ஒரு புனித இடமாக முஸ்லிம்களும் கருதுகின்றனர்.

இந்த மத தலத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் பிரார்த்தனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வளாகம் ஜோர்டனின் வக்ஃப் மூலம் நிர்வகிக்கப்படுகிறது, பாதுகாப்பு ஏற்பாடுகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

நீண்ட காலமாக இங்கு முஸ்லிம்கள் மட்டுமே தொழுகை நடத்த முடியும். குறிப்பிட்ட நாட்களில் முஸ்லிம் அல்லாதவர்கள் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால் அவர்கள் இங்கு பிரார்த்தனை செய்ய முடியாது.

100 ஆண்டுகள் பழைமையான சர்ச்சை

முதல் உலகப் போரில் உஸ்மானியா சுல்தானின் தோல்விக்குப் பிறகு, மத்திய கிழக்கில் பாலஸ்தீனம் என்று அழைக்கப்பட்ட பகுதி பிரிட்டனின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

சிறுபான்மை யூதர்களும் பெரும்பான்மை அரேபியர்களும் இந்த நிலத்தில் இருந்து வந்தனர்.

யூத மக்களுக்கு பாலஸ்தீனத்தை 'நேஷனல் ஹோம்’ என்ற வகையில் நிறுவுமாறு சர்வதேச சமூகம் பிரிட்டனை பணித்தபோது இருவருக்கும் இடையே பதற்றம் தொடங்கியது.

யூதர்களை பொருத்தவரை இது அவர்களின் மூதாதையர் வாழ்ந்த பகுதி. அதே நேரத்தில் பாலஸ்தீன அரேபியர்களும் அந்தப் பகுதி தங்களுடையது என்று சொல்லி இந்த நடவடிக்கையை எதிர்த்தனர்.

1920 மற்றும் 1940க்கு இடையில் ஐரோப்பாவில் துன்புறுத்தல் மற்றும் இரண்டாம் உலகப் போரின்போது இனப்படுகொலையில் இருந்து தப்பிய பின்னர் ஏராளமான யூதர்கள் ஒரு தாயகத்தைத் தேடி இங்கு வந்தடைந்தனர்.

இந்த நேரத்தில் அரேபியர்கள், யூதர்கள் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு இடையேயும் வன்முறை தொடங்கியது.

பாலஸ்தீன் - இஸ்ரேல் விவகாரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

1948க்கு பிறகு நிலைமை

1947 இல் ஐக்கிய நாடுகள் சபை பாலஸ்தீனத்தை யூதர்கள் மற்றும் அரேபியர்களின் தனி நாடுகளாகப் பிரிக்க வாக்களித்தது. மேலும் ஜெருசலேம் ஒரு சர்வதேச நகரமாக மாற்றப்பட்டது.

இந்தத் திட்டம் யூத தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரபு தரப்பு அதை நிராகரித்தது மற்றும் அது ஒருபோதும் செயல்படுத்தப்படவில்லை.

பிரச்னையைத் தீர்க்க முடியாமல் 1948இல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வெளியேறினர். யூத தலைவர்கள் இஸ்ரேல் நாட்டை உருவாக்குவதாக அறிவித்தனர்.

இதற்கு பல பாலஸ்தீனியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் போர் தொடங்கியது. அரபு நாடுகளின் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. வீடுகளில் இருந்து பலர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இதை அவர்கள் அல்-நக்பா அதாவது 'பேரழிவு' என்று அழைத்தார்கள்.

பிற்காலத்தில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த நேரத்திற்குள் பெரும்பாலான பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்தது.

ஜோர்டனால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மேற்குக் கரை என்றும் எகிப்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் காஸா என்றும் அழைக்கப்பட்டது.

அதே நேரத்தில் ஜெருசலேமின் மேற்குப்பகுதி இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுக்கும் கிழக்குப்பகுதி ஜோர்டனிய பாதுகாப்புப் படைகளுக்கும் பிரித்தளிக்கப்பட்டது.

https://www.bbc.com/tamil/articles/cjlx069n3x2o

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஏராளன் said:

ஜெருசலேமின் அல்-அக்ஸா மசூதி புதன்கிழமையன்று பட்டாசுகளின் ஒலி, துப்பாக்கிச் சூடு மற்றும் அலறல்களால் அதிர்ந்தது

யேசு அமைதியின் போதனையாளரெனத் தொடரும் இவர்களால் எப்படி இன்னொரு மதத்தினர் தொழும்போது அதனைக் குழப்பியடித்து குருதிக்கறைகளால் வேதாகமத்தை எழுதுமுடிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nochchi said:

யேசு அமைதியின் போதனையாளரெனத் தொடரும் இவர்களால் எப்படி இன்னொரு மதத்தினர் தொழும்போது அதனைக் குழப்பியடித்து குருதிக்கறைகளால் வேதாகமத்தை எழுதுமுடிகிறது.

யூதர்கள் இயேசுவை பின்பற்றுவதில்லை. அவர்கள் தான் யேசு  சிலுவையில் அறைந்து கொல்லப்பட காரணமானவர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வாலி said:

யூதர்கள் இயேசுவை பின்பற்றுவதில்லை. அவர்கள் தான் யேசு  சிலுவையில் அறைந்து கொல்லப்பட காரணமானவர்கள். 

வாலியவர்களே சுட்டியமைக்கு நன்றி.
யேசுவையே கொன்றவர்கள் மற்றவர்களை வாழவிடவா போகிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாப்பதற்கான உரிமை உள்ளது - மத்திய கிழக்கு வன்முறைகள் குறித்து அவுஸ்திரேலியா

Published By: RAJEEBAN

09 APR, 2023 | 01:14 PM
image

மத்திய கிழக்கில் பயங்கரவாத செயல்களும் வன்முறைகளும் அதிகரிப்பது குறித்து அவுஸ்திரேலியா கண்டனம் வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கில் வன்முறைகள் தீவிரமடைவது குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகாரஅமைச்சர் பென்னி வொங் தெரிவித்துள்ளார்.

ரம்ழான் உயிர்த்தஞாயிறு போன்றவற்றின் காலப்பகுதியில் அனைத்து தரப்பினரையும் வன்முறைகளை நிறுத்துமாறும்  பொறுமையை கடைப்பிடிக்குமாறும் அமைதியையும் மீண்டும் ஏற்படுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

காசா லெபனானிலிருந்து மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான ரொக்கட் தாக்குதல்களை அவுஸ்திரேலியா கண்டிக்கின்றது இஸ்ரேலிற்கு தன்னை பாதுகாப்பதற்கு  உள்ள உரிமையை அங்கீகரிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/152473

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஏராளன் said:

காசா லெபனானிலிருந்து மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான ரொக்கட் தாக்குதல்களை அவுஸ்திரேலியா கண்டிக்கின்றது இஸ்ரேலிற்கு தன்னை பாதுகாப்பதற்கு  உள்ள உரிமையை அங்கீகரிக்கின்றது

அப்ப பலஸ்தீனத்துக்கு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெருசலேம் அல்-அக்ஸா மசூதியில் யூதர்கள் ஆட்டை பலியிட விரும்புவது ஏன்?

அல் அக்ஸா மசூதி

பட மூலாதாரம்,AFP

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,மார்க் ஷே
  • பதவி,பிபிசி உலக சேவை
  • 10 ஏப்ரல் 2023, 06:38 GMT
    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

ஜெருசலேமின் அல்-அக்ஸா மசூதிக்குள் ஆட்டைப் பலியிட முயற்சி செய்ததாக ஒருவரை இஸ்ரேலிய காவல்துறையினர் அண்மையில் கைது செய்தனர்.

முஸ்லிம்களுக்கு மிகவும் புனிதமானதாகக் கருதப்படும் இந்த மசூதியை யூத அடிப்படைவாதிகளிடமிருந்து பாதுகாக்குமாறு பாலஸ்தீனியர்களிடம் ஹமாஸ் வேண்டுகோள் விடுத்தது.

சர்ச்சைக்குரிய அல்-அக்ஸா மசூதிக்குள் ஆடு ஒன்றை பலியிட யூத அடிப்படைவாதிகள் தயாராகிவந்ததாக காஸாவில் உள்ள இந்த பாலஸ்தீனிய அமைப்பு தெரிவித்தது. யூதர்கள் இந்த தலத்தை டெம்பிள் மவுண்ட் என்று அழைக்கிறார்கள்.

கேள்வி என்னவென்றால், யூத அடிப்படைவாதிகள் மசூதி வளாகத்திற்குள் ஆட்டை பலியிட ஏன் நினைத்தார்கள்? இப்போது அவ்வாறு செய்வதற்கு ஏதேனும் சிறப்புக்காரணம் உள்ளதா?

 

ஆட்டை பலியிட யூதர்கள் முயற்சிப்பது ஏன்?

இந்த ஆடு பலியிடும் வழக்கத்தின் வேர்கள் யூதர்களின் புனித நூலான தோராவுடன் தொடர்புடையவை.

யூதர்கள் எகிப்தில் அடிமைகளாக வைக்கப்பட்டனர். அவர்களை விடுவிப்பதற்காக கடவுள் அந்த தேசத்தை கடந்து சென்றார். மேலும் ஒவ்வொரு எகிப்திய குடும்பத்தின் முதல் மகனையும் அவர் கொன்றார் என்று தோரா குறிப்பிடுகிறது.

ஆட்டை பலியிடுமாறும், அதன் ரத்தத்தால் தங்கள் வாசலில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்துமாறும் கடவுள் யூதர்களுக்கு கட்டளையிட்டார். இதனால் மரணம் அவர்களின் கதவை கடந்து சென்றுவிடும் என்றும், அவர்களுக்கு அழிவை ஏற்படுத்தாது என்றும் சொல்லப்பட்டது.

எகிப்தின் 'ஏழு தெய்வீக பேரழிவுகளில்' இதுவே கடைசி என்று புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எகிப்தின் ஆட்சியாளர்கள்( Pharaoh) மீதான கடைசி தாக்குதல் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு யூத குடிமக்களை நாட்டை விட்டு வெளியேற ஆட்சியாளர் அனுமதித்தார். யூத புராணங்களில் இது எக்ஸோடஸ் அதாவது பெரும் இடப்பெயர்வு என்று அழைக்கப்படுகிறது,

அதன் பிறகு யூதர்கள் தங்கள் மூதாதையரான ஆபிரகாமுக்கு கடவுளின் வாக்களிக்கப்பட்ட தேசத்தை அடைந்தனர். அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த சமூக இடப்பெயர்வின் நினைவாக ஆடு பலியிடும் வழக்கம் தொடங்கியது.

இருப்பினும் இன்றைய காலகட்டத்தில் இந்த வழக்கத்தைப் பின்பற்றும் ஒரு சில மதக் குழுக்கள் மட்டுமே உள்ளன.

அல் அக்ஸா

பட மூலாதாரம்,AFP

மசூதி வளாகத்திலேயே பலியிட விரும்புவது ஏன்?

டெம்பிள் மவுண்ட் யூதர்களுக்கு மிகவும் புனிதமான இடம். பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த இரண்டு கோவில்களின் இருப்பிடம் இதுதான் என்று யூதர்கள் நம்புகிறார்கள்.

அல்-அக்ஸா மசூதியின் கோல்டன் டோம் தற்போது இருக்கும் அதே இடத்தில் மூன்றாவது கோவிலைக் கட்ட பல யூத குழுக்கள் விரும்புகின்றன.

இங்கே பலியிடல் நடத்தப்படவேண்டும் என்று சில அடிப்படைவாத யூதர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஆனால், அல்-அக்ஸா மசூதியின் வளாகம், முஸ்லிம்களின் மிகவும் புனிதமான இடங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. கடைசி நபியான ஹஸ்ரத் முகமது இங்கிருந்து ஜன்னத்திற்கு (சொர்க்கம்) சென்றார் என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். யூதர்கள் இங்கு வர அனுமதிக்கப்பட்டாலும், அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

1967 ஆம் ஆண்டு நடந்த ஆறு நாள் போரின் போது ஜெருசலேமின் இந்தப் பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது. அந்தப் போருக்குப் பிறகு, அல்-அக்ஸா மசூதியைப் பாதுகாக்கும் ஜோர்டனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டது. யூதர்கள் இந்த மசூதி வளாகத்திற்குள் வர அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அவர்கள் வழிபட அனுமதி இல்லை என்று இந்த ஒப்பந்தம் கூறுகிறது.

மசூதி வளாகத்திற்குள் ஆயுதமேந்திய இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரின் இருப்பு மற்றும் வழிபாட்டாளர்கள் நடமாட்டத்திற்கு பல பாலஸ்தீனியர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். பல முஸ்லிம் அமைப்புகளும் மசூதியைப் பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்துள்ளன.

மசூதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இப்போது ஆட்டைப் பலியிட முயற்சி செய்வதற்கு என்ன காரணம்?

யூத அடிப்படைவாத குழுக்கள் ஒவ்வொரு ஆண்டும், பாஸ்கா (Passover) விழா தொடங்குவதற்கு முந்தைய நாள் மாலை இந்த பலியிடலை நடத்தும் பொருட்டு தயாராகின்றன. அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு கடவுளின் கட்டளையை நோக்கி நகரும் நினைவாக இஸ்ரேலியர்கள் இந்த விழாவை சுமார் ஒரு வாரம் கொண்டாடுகிறார்கள்.

இந்த யூதப் பண்டிகை வரும்போதெல்லாம், பலியிடும் தேதிக்கு முன்னதாகவே இஸ்ரேலிய அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில முக்கியமானவர்களை கைது செய்கிறார்கள், மசூதி வளாகத்தில் இந்த சடங்கை நடத்துவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை.

இந்த ஆண்டு பாஸ்கா விழா கடந்த புதன்கிழமை அதாவது ஏப்ரல் 5 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13 ஆம் தேதி வியாழன் அன்று முடிவடைகிறது. இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் இந்தப்பண்டிகை நடப்பதால் பதற்றம் மேலும் அதிகரித்தது.

அல் அக்ஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதன் பின்னணியில் இருப்பது யார்?

அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் ஆடு பலியிடும் முயற்சியின் பின்னணியில் குறிப்பாக ஒரு யூத அடிப்படைவாதக் குழு உள்ளது. இந்த அமைப்பின் பெயர் 'ரிட்டர்ன் டு தி மவுண்ட்'.

கடந்த ஆண்டு இந்த அமைப்பின் தலைவரான ரஃபேல் மோரிஸிடம் பிபிசி பேசியது. ரஃபேல் மோரிஸ் ஒரு முஸ்லிம் போல் மாறுவேடமிட்டு அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் வழிபட முயன்றார்.

மோரிஸ் தன்னை யூத மதத்தின் பாதுகாவலர் என்று கூறிக்கொள்கிறார். "பைபிளில் கடவுள் வாக்குறுதியளித்தபடி, டெம்பிள் மவுண்ட் யூதர்களுக்கு சொந்தமானது என்று நான் நம்புகிறேன். டெம்பிள் மவுண்டை மீண்டும் வெற்றிகொள்வதே எங்கள் இலக்கு" என்று அவர் கூறினார்.

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க திட்டமிட்டதான சந்தேகத்தின் பேரில் ரஃபேல் மோரிஸை இஸ்ரேல் காவல்துறையினர் கடந்த திங்கள்கிழமை கைது செய்தனர்.

அல்-அக்ஸா மசூதியில் யாராவது ஆட்டை பலியிடுவதில் வெற்றிபெற்றாலோ, அவ்வாறு செய்ய முயற்சிக்கும்போது கைது செய்யப்பட்டாலோ அவருக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என ரிட்டர்ன் டு தி மவுண்ட் அமைப்பு அறிவித்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://www.bbc.com/tamil/articles/cxr0w43z4z1o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.