Jump to content

பெருந்தொற்றுக்கு முந்திய காலத்துடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்தான விசா விண்ணப்பங்கள் 68% வரை எட்டியது


Recommended Posts

பெருந்தொற்றுக்கு முந்திய காலத்துடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்தான விசா விண்ணப்பங்கள் 68% வரை எட்டியது

பெருந்தொற்றுக்கு முந்திய காலத்துடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்தான விசா விண்ணப்பங்கள் 68% வரை எட்டியது

சர்வதேச எல்லைகளின் திறப்பு மற்றும் தளர்த்தப்பட்ட கொவிட் நெறிமுறைகளினால் 2022 ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்தான விசா விண்ணப்பங்கள் கணிசமான மீட்சியைக் கண்டது. அரசாங்கம் மற்றும் இராஜதந்திர பணிகளுக்கு உலகின் மிகப் பெரிய வெளிவாரி சேவை வழங்குனர் மற்றும் தொழில்நுட்ப சேவை நிபுணர்களாகவும் விளங்கும் VFS Global இற்கு இணங்க பெருந்தொற்றுக்கு முந்திய காலத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையிலிருந்தான விசா விண்ணப்பங்கள் 68% வரை எட்டியது. இது 2021ஆம் ஆண்டு சர்வதேச எல்லைகளின் திறப்புடன் ஒப்பிடுகையில், 2022 ஆம் ஆண்டில் இவ்விண்ணப்ப கோரிக்கைகள் மூன்று மடங்கு அதிகரிப்பை பதிவு செய்தது.

2022 ஆம் ஆண்டு முற்றிலுமாக இலங்கையிலும் மற்றும் தெற்காசிய பிராந்தியத்திலிருந்தும் முன்னெப்போதும் இல்லாத பாரிய கேள்வி நிலவியதை நாம் கண்டோம். அது டிசம்பர் மாதம் வரை உச்ச வெளிவாரி பயணங்கள் காலத்தை நீட்டிக்கவும் காரணமாக அமைந்ததுடன் அது நிலையானதாகவும் காணப்பட்டது. இது தொடர்ந்தும் வளர்ந்து வரும் என்பதை நாம் உறுதியாக நம்புவதுடன் விண்ணப்பதாரிகளுக்கு தங்கள் விசாக்களுக்கான விண்ணப்பங்களை முன்கூட்டியே செய்து கொள்வதுடன் இறுதி நேரம் வரை காத்திருந்து ஏமாற்றங்களை சந்திக்க வேண்டாம். என VFS Global இன் சிரேஷ்ட செயன்முறை அதிகாரியான (தெற்காசியா) பிரபுத்தா சென் - தெரிவித்தார்.

மேலும் பெருந்தொற்றுக்கு பிறகு தனிப்பட்ட சேவைகளை பயணிகள் பெருவாரியாக ஏற்றுக் கொண்ட மற்றுமொரு வரையறுக்கு போக்கும் பயணிகளின் நடத்தையில் காணப்பட்டது. ஏளைய Visa At Your Doorstep, (VAYD) எனும் விசா உங்கள் வீட்டுக்கே போன்ற உன்னத மேலதிக சேவைகளின் மூலம் பயணிகளுக்கு தங்கள் வஜிரும்பும் இடத்திற்குச் செல்வதான சகல விசா பதிவுகளுக்கான நடவடிக்கைகளையும் ஒரே இடத்திலிரிந்து செய்துகொள்ளக்கூடியதாக இருந்ததுடன் அது 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டில் இண்டு மடங்காக அதிகரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. VFS Global ஆனது VAYD சேவையை இலங்கையிலிருந்து இங்கிலாந்து செல்லும் பயணிகளுக்கு வழங்குகிறது. இலங்கை மற்றும் மாலைதீவிலுள்ள 19 நேரடி வாடிக்கையாளர் அரசாங்கங்கள் மற்றும் 17 வாடிக்கையாளர் பிரதிநிதித்துவ அரசாங்கங்கள் என்பவற்றுக்கு தமது சேவைகளை வழங்குகின்றது.

´புதிய இயல்புத்தன்மையில் சுகாதார நிலைமைகளில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது என்பதுடன் அது முக்கிய பங்கினையும் வகிக்கிறது. இதன் விளைவாக தடையற்ற அனுபவமும் பாதுகாப்பான பயணங்களுக்கு முன்னுரிமையும் வழங்கிடும் இவ்வாறான சேவைகளைப் பெறும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை நாம் காணக்கூடியதாக உள்ளது.´ என சென் மேலும் தெரிவித்தார்.

இன்னும் சில மாதங்களில் மாணவர்கள் பயணம் செய்யும் காலம் ஆரம்பிக்கவிருப்பதால், இலங்கையிலுள்ள VFS Global பயணிகளின் நெரிசலை சமாளிக்கும் வகையில் மேலதிக நேரம் தொழிற்பட முடிவெடுத்துள்ளது. மேலும் நிறுவனமானது பிரித்தானியாவில் உயர் கல்வியைத் தொடரும் மாலைதீவு மாணவர்களுக்காக மாலேயில் குறுகிய கால விசா விண்ணப்ப மையங்களையும் தொடர்ந்து நடாத்தும்.

Peak Season Travel Guide – பீக் சீசன் பயண வழகாட்டி

#ApplyinAdvance – முன்கூட்டிய பதிவுகள்

விமானத்திற்கு பதிவு செய்வதைப் போல் உங்களால் முடிந்தளவு முன்கூட்டியே விசாக்களுக்கு விண்ணப்பித்திடுங்கள். அதிகமான நாடுகள் விசா விண்ணப்பங்களை நீங்கள் பயணம் செய்யும் தினத்துக்கு 90 நாட்களுக்கு முன்னாள் (3 மாதங்கள்) வரை ஏற்றுக்கொள்ளும். 2020, பெப்ரவரி 9 ஆம் திகதி முதல் செல்லுபடியாகும் திருத்தப்பட்ட Schengen Visa Code க்கு அமைய நீங்கள் பயணம் செய்யும் தினத்துக்கு 6 மாத காலத்துக்கு முன்னர் Schengen visa வுக்கு விண்ணப்பிக்க முடியும். குறிப்பாக இவ்வருடம் அதிக கேள்வி நிலவுவதாலும் வரையறுக்கப்பட்ட நேர ஒதுக்கீடுகள் காணப்படுவதாலும், விண்ணப்பதாரிகளுக்கு கூடிய விரைவில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறும் நாம் வலியுறுத்துகின்றோம்.

#DoNotFallForFraud – மோசடிகளில் சிக்காதீர்கள்

அனைத்து விசா விண்ணப்பதாரிகளும்

VFS Global இன் பெயரை பாவித்தோ அல்லது சுயேட்சையாகவோ அல்லது வேறு சேவைகளை வழங்கிட கட்டணங்களை அறவிடும் மோசடி நிறுவனங்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். நாம் நேர ஒதுக்கீடுகளை மேற்கொள்ள எவ்வித கட்டணங்களையும் அறவிடுவதில்லை. மேலதிக உதவிக்கு communications@vfsglobal.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் அல்லது எமது ஊழியர் ஒருவரை நாடுங்கள்.

தடையற்ற விசா அனுபவத்திற்காக எமது மேலதிக பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகளை பெற்றுக்கொள்ளுங்கள்

 பிரீமியம் லோன்ஜஸ் : வேகமான, பாதுகாப்பான, வசதியான – தனிப்பயனாக்கப்பட்ட விசா சமர்ப்பிக்கும் அனுபவத்தைப் பெற்றிடுங்கள்.

 விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்ய உதவி: தொலைபேசியின் ஊடாகவோ அல்லது விசா விண்ணப்ப மையத்திலோ உங்கள் விசா விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதில் உங்களுக்கு உதவிட எமது நிபுணத்துவம் பெற்ற ஊழியர்களை நாடுங்கள்

 குரியர் சேவை : உங்கள் கடவுச்சீட்டு மற்றும் ஆவணங்களை நாம் வழங்கிடுவோம். வேகமானது, பாதுகாப்பானது, வசதியானது.

 பயண மருத்துவக் காப்பீடு : உலகளாவிய காப்பீட்டாளர்களிடமிருந்து கொவிட் 19 உள்ளடங்கலாக உங்கள் கட்டாய பயண மருத்துவக் காப்பீட்டைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

SMS: உங்கள் விசா விண்ணப்ப செயன்முறை தொடர்பாக தொடர்ந்தும் அறிந்துகொள்ளுங்கள்.

 விசா உங்கள் வீட்டுக்கே: ஐக்கிய இராச்சியத்திற்கு செல்லும் பயணிகளுக்கு வழங்கப்படும் இச்சேவையின் மூலம் விண்ணப்பதாரிகள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து விருப்பப்படி (வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ) பயோமெட்ரிக்ஸ் உட்பட முழு விசா அனுபவத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலதிக தசவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் : https://www.vfsglobal.com/en/individuals/solutions.html

VFS Global இனைப் பற்றி

VFS Global என்பது அரசாங்கங்கள் மற்றும் இராஜதந்திர பணிகளுக்கான உலகின் மிகப்பெரிய வெளிவாரியான மற்றும் தொழில்நுட்ப சேவை வல்லுனர்கள் ஆகும். VFS Global ஆனது 67 வாடிக்கையாளர் அரசாங்கங்களின் நம்பகமான பங்காளியாகும். மேலும் 145 நாடுகளில், 3400 க்கும் அதிகமான விண்ணப்ப மையங்கள் என்பவற்றுடன் உலகளாவிய வலையமைப்பை இயக்குகிறது. 2001ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து 256 மில்லியன் விண்ணப்பங்களை செயற்படுத்தியுள்ளது. நிறுவனமானது தமது வாடிக்கையாளர் அரசாங்கங்களுக்கான விசா, கடவுச் சீட்டு மற்றும் தூதர சேவைகளுக்கான விண்ணப்பங்கள் தொடர்பான நியாயமான மற்றும் நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதுடன் முக்கியமான மதிப்பீட்டு பணிகளில் முழுக் கவனத்தையும் செலுத்த அவர்களை அனுமதிக்கிறது. VFS Global இன் தலைமையகம் சுவிட்சலாந்தின் சூரிச் இலும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயிலும் அமைந்துள்ளது.

VFS Global என்பது உலகின் மிகப்பெரிய மாற்றுச் சொத்து முகாமையாளரான Blackstone இனால் நிர்வகிக்கப்படும் நிதிகளுக்கு பெரும்பான்மை உரிமையை கொண்டுள்ளது. Blackstone தமது முதலீட்டாளர்களுக்கு, அவர்கள் முதலீடு செய்யும் நிறுவனங்கள் மற்றும் அவர்கள் பணிபுரியும் சமூகங்களுக்கு சாதகமான பொருளாதார தாக்கத்தையும் நீண்ட கால மதிப்பையும் உருவாக்கிட முயற்சிசெய்கிறது. Blackstone இன் நிர்வாகத்தின் கீழ் உள்ள 915 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சொத்துக்கள், தனியார் பங்கு, ரியல் எஸ்டேட், பொதுக்கடன் மற்றும் சமபங்கு, உட்கட்டமைப்பு, வாழ்க்கை அறிவியல், வளர்ச்சிப் பங்கு, சந்தர்ப்பவாத முதலீடு அல்லாத தரக்கடன், அசல் சொத்துக்கள் மற்றும் இரண்டாம் நிலை நிதிகள் ஆகியவற்றில் உலகளாவிய ரீதியில் கவனம் செலுத்தும் முதலீட்டு வகைகளுள் அடங்கும்.

சுவிட்சலாந்தை தளமாகக் கொண்ட Kuoni மற்றும் Hugentobler Foundation மற்றும் EQT சுவீடன் - ஸ்டொக்ஹோம் ஐ தலைமையகமாகக் கொண்ட ஒரு உலகளாவிய முதலீட்டு அமைப்பாகும். இது VFS Global இன் சிறுபான்மை பங்குகளை தம்மகத்தேக் கொண்டுள்ளது.
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.