Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் புதிய திகதி அறிவிப்பு !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 5

10 APR, 2023 | 12:09 PM
image

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ள புதிய திகதி  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மே 15 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த 2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் மே 29  ஆம் திகதி கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாகுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/152554

  • கருத்துக்கள உறவுகள்

வெசாக் வருகுது போல. எது எதுக்கெல்லாம் பரீட்சையை ஒத்துவைக்கிறதென்ற விவஸ்தையே இல்லாமல் போச்சு.

அதுசரி எனி எந்தக் காலத்தில ஓ எல் டிசம்பரிலும்.. ஏ எல்.. ஆகஸ்டிலும் நடக்கும்..??!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nedukkalapoovan said:

வெசாக் வருகுது போல. எது எதுக்கெல்லாம் பரீட்சையை ஒத்துவைக்கிறதென்ற விவஸ்தையே இல்லாமல் போச்சு.

அதுசரி எனி எந்தக் காலத்தில ஓ எல் டிசம்பரிலும்.. ஏ எல்.. ஆகஸ்டிலும் நடக்கும்..??!

கொரோனாவால் பாடசாலை மூடியதால் பிந்த தொடங்கிய கற்பித்தல் செயற்பாடுகளால் சோதனையும் பிந்துகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலை விடுமுறை காலத்தில் திருத்தம்

school-holidays.jpg

2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டதை அடுத்து, பாடசாலை விடுமுறை காலத்தை திருத்துவதற்கு கல்வியமைச்சின் அதிகாரிகள் தீர்மானித்து வருகின்றனர்.

எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் பாடசாலை தவணை மே 29 ஆம் திகதி வரை தொடரும். இந்தநிலையில், புதிய பாடசாலை நேர அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மே 29 ஆம் திகதி ஆரம்பமாகும் 2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஜூன் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை திருத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/248861

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக வகுப்புகள் கருத்தரங்குகள் நடத்த தடை!

GCE-OL-EXAM-650x375-1.jpg

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர வகுப்பு மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் என்பவற்றை நடத்துவதற்கு எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 29ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில், எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவுடன் சாதாரண தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள்,கருத்தரங்குகள் என்பவற்றை நடத்துவதற்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 12ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/253981

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.