Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம் ” யாழில் உண்ணாநோன்புப் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

16 APR, 2023 | 10:51 AM
image

“தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம் “ என்ற தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்புப் போராட்டமும் தமிழர் தாயகம் தழுவிய மாபெரும் கையெழுத்துப்போரும் இன்று (16.04.2023) ஞாயிற்றுக்கிழமை நல்லூர் நல்லை ஆதீன முன்றலில் இடம்பெறுகின்றது.

004.png

5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சமயத்தலைவர்கள், தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் என பலருடைய பாரிய ஒத்துழைப்புடன் இந்த அடையாள உண்ணாநோன்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

தமிழர் மரபுரிமைகளை அழியவிடாது பாதுக்காக குறித்த எழுச்சிப்போராட்டத்தில் பேதங்களை கடந்து தமிழராக அனைவரும் ஒன்றுபட்டு தமிழனத்துக்கு எதிராக இடம்பெறும் செயற்பாடுகளை கண்டிப்பதுடன், எமது நியாயமான கோரிக்கைகளை அரசுக்கும் சர்வதேசத்துக்கும் தெரியப்படுத்த வேண்டும் என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

1)அழிக்கப்பட்ட வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் சிவலிங்கம், தெய்வ சிலைகள் உடனடியாக மீள அமைக்கப்படவேண்டும். நீதியான விசாரணை துரிதப்படுத்தப்பட்டு குற்றவாளிகள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

2.குருந்தூர் மலை, கன்னியா வெந்நீரூற்று ஆதி சிவன் வழிபாட்டு உரிமைகள் உடனடியாக மீள வழங்கப்படுவதுடன் புதிய பௌத்த கட்டுமானம் மற்றும் பௌத்த தொல்லியல் புதிய அரசிதழ் இரத்து நடைமுறையில் செயற்படுத்தப்பட வேண்டும்.

3)இன மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தமிழர் தாயகத்தின் தொன்மங்களை, மரபுரிமைகளை மாற்றியமைக்கும் தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

4.மட்டு. மயிலத்தனை மடு மேய்ச்சல் தரையில் பெரும்பான்மை இன மக்களின் ஆக்கிரமிப்புக்கள் சகலதும் நிறுத்தப்பட்டு தமிழ் பண்ணையாளர்களின்  மரபுரிமையான மேய்ச்சலுக்கான வாழ்வுரிமை  உறுதிப்படுத்த வேண்டும்.

5)போருக்கு பிந்திய இன மதப்பரம்பலை மாற்றி அமைக்கும் திட்டமிட்ட பெரும் குடியேற்றம் உள்ளிட்ட செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்

ஆகிய முதன்மை கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு என்ற அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படுகிறது.

003.png

IMG-20230416-WA0004-696x522.jpg

20230416_095253.jpg

IMG-20230416-WA0005-696x522.jpg

IMG-20230416-WA0006-696x522.jpg

IMG-20230416-WA0007-696x522.jpg

https://www.virakesari.lk/article/152912

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்ச்சி, பாராட்டுக்கள் ஒன்றினைந்து போராட எல்லோரும் முன்வந்ததிற்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் மரபுரிமைகளை பாதுகாக்கும் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு!

தமிழர் மரபுரிமைகளைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் மேற்கொள்ளப்பட்ட அடையாள உண்ணாநோன்புப் போராட்டம் பழரசம் வழங்கப்பட்டு முடித்து வைக்கப்பட்டது.

தமிழர் மரபுரிமைகளைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்புப் போராட்டமும் கையெழுத்துப் போராட்டமும் நல்லூரில் ஆரம்பமாகியது.

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் ஏற்பாட்டில் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் முன்பாக நேற்று (16) காலை 9 மணி அளவில் இப்போராட்டம் ஆரம்பமாகி நடைபெற்றநிலையில் 3.30 மணி அளவில் பழரசம் வழங்கப்பட்டு உண்ணாநோன்பு முடித்து வைக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் நல்லை ஆதீன முதல்வர் சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள், தென்கயிலை ஆதீன முதல்வர் அகத்தியர் அடிகளார், சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள், யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம், பாராளுமன்ற உறுப்பினர்களான க.வி. விக்னேஸ்வரன், சி. சிறிதரன், த. சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை. சேனாதிராஜா, சுரேஸ் பிறேமச்சந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், அகில இலங்கை சைவ மகா சபை, தமிழ்ச் சைவப் பேரவை மற்றும் சமய அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிறிஸ்தவ மதத் தலைவர்கள், அரிசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள உண்ணா நோன்புப் போராட்டம் இடம்பெற்றது.

அழிக்கப்பட்ட வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோவில் சிவலிங்கம், தெய்வ சிலைகள் உடனடியாக மீள் நிர்மாணம் செய்யப்பட வேண்டும். நீதியான விசாரணை துரிதப்படுத்தப்பட்டு குற்றவாளிகள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

குருந்தூர் மலை, கன்னியா வெந்நீரூற்று ஆதி சிவன் வழிபாட்டு உரிமைகள் உடனடியாக மீள வழங்கப்படுவதுடன் புதிய பௌத்த கட்டுமானம் மற்றும் பௌத்த தொல்லியல் புதிய வர்த்தமானி இரத்து நடைமுறையில் செயற்படுத்தப்பட வேண்டும்.

இன மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தமிழர் தாயகத்தின் தொன்மங்களை, மரபுரிமைகளை மாற்றியமைக்கும் தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

மட்டு. மயிலத்தனைமடு மேய்ச்சல் தரையில் பெரும்பான்மை இன மக்களின் ஆக்கிரமிப்புக்கள் சகலதும் நிறுத்தப்பட்டு தமிழ் பண்ணையாளர்களின் மரபுரிமையான மேய்ச்சலுக்கான வாழ்வுரிமை உறுதிப்படுத்த வேண்டும்.

போருக்கு பிந்திய இன மதப்பரம்பலை மாற்றி அமைக்கும் திட்டமிட்ட பாரிய குடியேற்றம் உள்ளிட்ட செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் ஆகிய பிரதான கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 

http://www.samakalam.com/தமிழர்-மரபுரிமைகளை-பாதுக/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் தொல்லியல் அடையாளங்கள் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் பௌத்த மதமும் தொல்லியல் திணைக்களமும் ஆதிக்கம் - சிவசிறி காந்தக் குருக்கள்

Published By: VISHNU

19 APR, 2023 | 06:00 PM
image

தமிழர்களுடைய தொல்லியல் அடையாளங்கள் எங்கெல்லாம்  இருக்கின்றதோ அங்கெல்லாம் பௌத்த மதமும் தொல்லியல் திணைக்களமும் ஆதிக்கத்தை செலுத்துகின்றது என நாகதம்பிரான் ஆலய குரு சிவசிறி காந்தக் குருக்கள் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற அன்னை பூபதியின் நிணைவு வணக்க நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற் கண்ட வாறு தெரிவித்துள்ளார்

தமிழர்களாகிய நாங்கள் எமது விடுதலையை நோக்கி விடுதலைக்காக பல வடிவங்களிலே போராடி இருக்கின்றார்கள் ஆனாலும் அதற்கான முற்றுப்புள்ளியை அடைய முடியாத ஒரு நிலையில் இன்று தமிழ் தேசம் உள்ளது

என்று குறிப்பிட்ட அவர் இப்போது  தமிழர்களின் தொல்லியல் அடையாளங்கள் எங்கெங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கங்கெல்லாம் தொல்லியல் திணைக்களமும்  பௌத்தமும் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது குறிப்பாக வெடுக்கு நாறிமலை குருந்தூர் மலை போன்ற இடங்களிலே விக்கிரகங்களை அழித்து அவற்றை உடைத்து சிதைத்து வந்திருக்கின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/153248

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.