Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிடிஆர் தியாகராஜன் விளக்கம்: "நான் பேசியதாக பகிரப்படும் ஆடியோ 'போலி', மெளனம் காக்க இதுதான் காரணம்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பிடிஆர் தியாகராஜன்
 
படக்குறிப்பு,

பிடிஆர் தியாகராஜன், தமிழ்நாடு நிதியமைச்சர்

22 ஏப்ரல் 2023

அடையாளம் தெரியாத நபருடன் தான் பேசியது போல சமூக ஊடகங்களில் வைரலான ஆடியோ 'போலி' என்று தெரிவித்திருக்கிறார் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன்.

சில தினங்களுக்கு முன்பு பிடிஆர் தியாகராஜன் ஒருவருடன் செல்பேசியில் பேசுவதாகக் கூறி பகிரப்பட்ட ஆடியோவில், "உதயநிதியும், சபரீசனும் கடந்த 60 ஆண்டுகளில் அவர்களின் தாத்தாக்கள் சம்பாதித்தை விட, இந்த ஒரு வருடத்தில் அதிகமாக சம்பாதித்து விட்டார்கள். ஏறத்தாழ 30 ஆயிரம் கோடி வரை சம்பாதித்துள்ளார்கள். இப்போது அதனை மறைக்க முடியாமல் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார்கள்," என்றவாறு ஒருவர் பேசுகிறார்.

அந்த ஆடியோவில் பேசியவர் தமிழ்நாடு நிதியமைச்சர் தியாகராஜன் தான் என்று சவுக்கு இணையதள ஆசிரியரும் லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் ஊழியருமான சங்கர் தெரிவித்திருந்தார். அந்த ஆடியோவை வெளியிட்டது தாம் தான் என்றும் இதுபோல மேலும் சில ஆடியோக்களை விரைவில் வெளியிடப்போவதாகவும் சங்கர் கூறியிருந்தார்.

இந்த ஆடியோவின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படாத நிலையில், தமிழ்நாடு அரசியல் களத்தில் இந்த ஆடியோ விவகாரம் சர்ச்சையானது.

 

தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே. அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்களும், சர்ச்சை ஆடியோ குறித்து முதல்வர் உரிய விளக்கம் தர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்ட அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதனால் அவரது அமைச்சர் பதவி கூட பறிக்கப்படலாம் என்று சில ஊடகங்கள் விவாதங்களை நடத்தின.

இந்த நிலையில், அமைச்சர் பிடிஆர். தியாகராஜன் சர்ச்சை காணொளி தொடர்பாக மூன்று பக்க விளக்கத்தை தமது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:

மாநில அமைச்சரவையில் நான் வகிக்கும் துறைகள், ஆடம்பரமாகவோ முழு சக்தியுடனோ வசதியுடனோ சமூக ஊடகங்களில் தொடர்ந்து மும்முரம் காட்டவும் அங்கு நிகழும் மூர்க்கத்தனமான சேறுபூசல்களுக்கு மறுப்புகளை வெளியிடுவதற்கும் என்னை அனுமதிக்கவில்லை.

பட்ஜெட் அலுவல்களில் மும்முரம்

பிடிஆர் தியாகராஜன்

அதிகபட்ச தாக்கத்தை பெறக்கூடிய மற்றும் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கொண்டு வரக்கூடிய துறைகளில் கவனம் செலுத்துவது மட்டுமே மனசாட்சியுள்ள அரசு ஊழியரின் அடையாளம் என்று நான் நம்புகிறேன். இதனாலேயே (முதல் முறை அமைச்சர் என்ற முறையில்) எனக்கு முதல்வர் ஒதுக்கிய பல பொறுப்புகளின் முழு வீச்சையும் உணர்ந்து ஜூன் 2017இல் தொடங்கப்பட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் பதவியிலிருந்து தாமாகவே முன்வந்து ராஜிநாமா செய்தேன்.

மார்ச் 20, 2023 முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் நான் முழுமையாக ஈடுபட்டு அர்ப்பணிப்புடன் இயங்குகிறேன். தமிழ்நாடு சட்டப்பேரவையின் மாலை அமர்வின் போது நான்கு துறைகளுக்கான துணை மானிய கோரிக்கைகளை முன்வைத்துக் கொண்டிருந்தபோது, வெளியே தவறான முறையில் ஜோடிக்கப்பட்ட 26 நொடிகள் ஓடக்கூடிய ஆடியோ பரப்பப்பட்டது. 55 துறைகளின் மானியக் கோரிக்கைகள் சட்டப்பேரவையில் ஏப்ரல் 21ஆம் தேதி நிறைவேற்றப்பட்டவுடன் 4,13,639 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஏப்ரல் 22ஆம் தேதி சனிக்கிழமை, பட்ஜெட் காரணமாக தேங்கிய கோப்புகளில் நான் கவனம் செலுத்தினேன். இதனால் இன்றைய தேதியில் எந்த கோப்புகளும் நிலுவையில் இல்லை.

எந்தவொரு ஜனநாயக நாட்டிற்கும் இன்றியமையாத பேச்சுரிமைக்கான வலுவான ஆதரவாளராக இருப்பவன் நான். என் மீதான தனிப்பட்ட தாக்குதலுக்காக நான் இதுவரை போலீசில் கூட புகார் செய்யவில்லை. அவதூறு வழக்கு போடவில்லை. ஒரு முறை மட்டுமே எப்ஐஆர் (எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருந்தபோது) பதிவு செய்திருக்கிறேன். எனது குடும்பத்தில் இறந்த முன்னோர் பற்றி தீங்கிழைக்கும் வகையிலும் எளிதில் ஏற்க முடியாத அவதூறு தகவல்களையும் வெளியிட்டதால் அந்த புகாரை பதிவு செய்தேன். இன்று வரை அந்த வழக்கை கூட நான் தொடரவில்லை. மக்களின் நல்ல தீர்ப்பை நம்பும் ஓர் அரசியல்வாதி என்ற முறையில், இன்றைய சமூக ஊடகங்களில் நடக்கும் அவதூறு பிரசாரத்திற்கு மறுப்புகளை வழங்குவது ஆபத்தான நெருப்புக்கு ஆக்ஸிஜனை வழங்குவது போன்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளவன் நான்.

"குற்றச்சாட்டுகள் புதிதல்ல"

பிடிஆர் தியாகராஜன்

கடந்த இரண்டு ஆண்டுகளில் சமூக வலைதளங்களில் என் மீது பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. ஒப்பீட்டளவில் அதிகப்படியாக செயல்படுவதாகவும், இடையூறு செய்பவராகவும் என் வேலையைச் செய்ய தகுதியற்றவர் போலவும் மற்றவர்கள் மூலம் மறைமுகமாக ஊழல் செய்வது போலவும் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இறுதியாக தனிப்பட்ட முறையில் ஊழல் செய்ததாக கூறப்பட்டது (உதாரணமாக, நான் கையெழுத்திடும் ஒவ்வோர் கோப்பிற்கும் 1% கமிஷன் வாங்குவதாக). நல்ல குணாதிசயத்தின் தனிச்சிறப்பை தொடர்ச்சியாக நான் கொண்டிருப்பதால், இந்தக் குற்றச்சாட்டுகள் எதற்கும் நான் ஒருபோதும் எதிர்வினையாற்றவில்லை.

இப்போது, பொதுவெளியில் என்னை வில்லனாக சித்தரிப்பதில் தோல்வியடைந்ததால், எனக்கு எதிரானவர்களின் உத்தியில் மாற்றம் தெரிகிறது; தனிமையில் சிலுவையில் அறையப்பட்டவன் போலவும் ஊழலை எடுத்துரைப்பவர்களுக்கு இணங்காதவன் போலவும் கட்சியில் தனிமையாக பலி கொடுக்கப்பட்டவன் போலவும் என்னை சித்தரிக்க அவர்கள் முயன்றுள்ளனர். பொது வாழ்வில் நான் எதைச் செய்தாலும் அது என் தலைவரான திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினால் தான் என்றும் எங்களைப் பிரிக்கும் எந்த தீய முயற்சியும் வெற்றி பெறாது என்பதையும் மீண்டும் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.

ஒரு சமூக ஊடக பதிவு இப்போது வருத்தமளிக்கும் விகிதத்தில் மீண்டும் வெளியிடப்பட்டதால், இந்த நேரத்தில் நான் எதிர்வினையாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்: இது நேர்மையற்ற அரசியல் நபர்களால் மீண்டும், மீண்டும் பெரிதுபடுத்தப்படுகிறது. மேலும் பாரம்பரிய ஊடகங்களான ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருப்பவற்றின் செயலைக் கண்டு நான் வருத்தப்படுகிறேன். இதுபோன்ற புனையப்பட்ட, தீங்கிழைக்கும் மூன்றாம் நிலை தகவலை (ஒருவரது கட்டுரை, ஒருவரின் கருத்துகள், சித்தரிக்கப்படும் ஆடியோ, தெரியாத நபருடன் நடந்ததாக கூறப்படும் உரையாடல்) அவை வெளியிடுகின்றன. பொதுவெளியில் கிடைக்கும் தொழில்நுட்ப பகுப்பாய்வு மூலம் அந்த ஆடியோ உண்மையானது அல்ல என்பது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.

ஊடகங்களுக்கு வேண்டுகோள்

திமுக

இந்த நேரத்தில் இரண்டு விஷயங்களை கூறி முடிக்க விரும்புகிறேன்:

1. எளிதில் அணுகக்கூடிய மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புனையப்பட்ட அல்லது இயந்திரத்தால் உருவாக்கப்பட்ட ஆடியோ கிளிப்புகளை உருவாக்கும் திறனுடன், இன்னும் அதிகமான தீங்கிழைக்கும் உள்ளடக்கத்துடன் கூடிய ஆடியோக்கள் அல்லது வீடியோக்கள் இனி வரும் நாட்களிலோ மாதங்களிலோ வந்தால் கூட அவற்றைக் கண்டு நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. நான் ஏற்கெனவே @ptrmadurai என்ற என் ட்விட்டர் பக்கத்தில் புகழ்பெற்ற திரைப்படமான "The Great Escape" இல் இருந்து ஒரு உதாரணத்தை மறு ட்வீட் செய்துள்ளேன்.

2. பொறுப்புள்ள அரசியல்வாதிகள் மற்றும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துபவையாக செயல்பட வேண்டிய பாரம்பரிய ஊடகங்கள், முதல்நிலை தகவல் அல்லது குறைந்தபட்சம் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் சரிபார்க்கப்பட்ட இரண்டாம் நிலை தகவல்களை மட்டுமே தெரிந்த மூலங்களிலிருந்து சரிபார்த்து ஒருவரை குற்றம்சாட்ட வேண்டும் அல்லது புகார் கூற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். மூன்றாம் நிலை தகவல்களை சரிபார்க்காமல் ஒளிபரப்பும் ஆன்லைன் தளங்களின் ஒளிபரப்பால் அவற்றின் நிதி தேவை வேண்டுமானால் பூர்த்தி ஆகலாம். ஆனால் இது ஜனநாயகத்தில் பாரம்பரிய ஊடகங்களின் அந்தஸ்தை சிதைக்கிறது. இத்தகைய திசைதிருப்பல்கள் யாருக்கும் உதவாது மற்றும் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வை பாதிக்கும் முக்கிய விஷயங்கள் மீதான அர்த்தமுள்ள பொது விவாத திறன்களை அவை தடுக்கும்.

இந்த சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய எனது ஒரே அறிக்கை இதுதான். இதுபோன்ற தீங்கிழைக்கும் அவதூறுகளை புறக்கணித்துவிட்டு எனது இயல்பான பணிக்குத் திரும்புவேன். நிச்சயமாக, இத்தகைய அவதூறுகள் அதிகபட்ச சகிப்புத்தன்மையின் நிலையைக் கடக்க வேண்டும். இந்த விஷயங்களில் வழக்கு தொடர்ந்து தீர்வு காண பல மாதங்கள் ஆகும் என்பதை உணர்ந்தாலும், இதுபோன்ற செயல்கள் அப்பட்டமான பொய்கள் மற்றும் ஏமாற்றும் போக்குக்கு மேலும் விளம்பரத்தைத் தரும் என்பதை உணர்ந்ததால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன் என்று அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cjlner9dw94o

  • கருத்துக்கள உறவுகள்

 

 

இதைக் கண்டும் காணாமல் விடப் போவதாக பிடிஆர் சொல்வதிலிருந்தே அவர் தான் இந்த ஒலிப்பதிவில் பேசியது என்பதை மறைமுகமாக ஒத்துக்கொள்கிறார்.  அதுவும் ஒலிப்பதிவு வெளியாகி 4 நாட்களுக்குப் பின் அரைகுறை விளக்கம் கொடுத்திருப்பது திமுக தலைமையின் நெருக்குதலால் ஆக இருக்கலாம். அலர் ஒரு தமிழன் என்பதால் திமுக தலைமைகக்கும் அவருக்கும் இடையில் கருத்து மரண்பாடுகள் ஏற்கனவே இரப்பது உண்மைதான். அதனால்தான் ஐடிவிங்கில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய மீம்சுக்கே சவுக்கு சங்கரின் உதவியாளரைக் கைது செய்தவர்கள் இந்த விடயத்தில் சவுக்கு சங்கரை க்கைது செய்யாமல் மெளம் காப்பதே அவரைக் கைது செய்து விடயத்தைப் பெரிதாக்காமல் ஆறப்போடும் திட்டமாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புலவர் said:

சிறிய மீம்சுக்கே சவுக்கு சங்கரின் உதவியாளரைக் கைது செய்தவர்கள் இந்த விடயத்தில் சவுக்கு சங்கரை க்கைது செய்யாமல் மெளம் காப்பதே அவரைக் கைது செய்து விடயத்தைப் பெரிதாக்காமல் ஆறப்போடும் திட்டமாக இருக்கிறது.

2 வருடத்தில், 30´000 கோடி ரூபாய் என்றால்... எவ்வளவு நெளிவு, சுழிவு வேண்டும். 
விஞ்ஞான  பூர்வமாக ஊழல் செய்வதில் அ.தி.மு.க. விட, 
தி.மு.க.காரர்கள் படு பயங்கர கில்லாடிகள். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாமலை திமுகவின் சொத்து விபரங்களை வெளியிட்ட பொழுதும் இப்பொழுது இந்த ஒலிநாடா வெளியான பொழுதும் அதை வைத்து அரசியல் செய்யாமல்  அதிமுக மெளனம் காப்பது அதைப் பெரிதுபடத்து தங்கள் உழல்களிலும் வெளிவந்து விடுமோ என்ற அச்சத்திலதான். அண்ணாமலை அடித்து ஆடுகிறார். இதன் வினளவுகளை  தமிழத்தேசிய இயக்கமான சீமான் அறுவடை செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 23/4/2023 at 11:27, புலவர் said:

அண்ணாமலை திமுகவின் சொத்து விபரங்களை வெளியிட்ட பொழுதும் இப்பொழுது இந்த ஒலிநாடா வெளியான பொழுதும் அதை வைத்து அரசியல் செய்யாமல்  அதிமுக மெளனம் காப்பது அதைப் பெரிதுபடத்து தங்கள் உழல்களிலும் வெளிவந்து விடுமோ என்ற அச்சத்திலதான். அண்ணாமலை அடித்து ஆடுகிறார். இதன் வினளவுகளை  தமிழத்தேசிய இயக்கமான சீமான் அறுவடை செய்ய வேண்டும்.

தி மு க / அ தி மு க ஆகியன மட்டுமல்ல இந்தியாவின் அனைத்துக் கட்சிகளில் உள்ளவர்கள் ஓரிருவரைத்தவிர (முக்கியமாக நல்லக்கணு ஐயா அவர்கள்) அனைவரும் இந்த ஊழலுக்குப் பழகிப்போனவர்களே காசு பணம் சொத்து இவைதான் ஊழலா ஏன் மல்லாகத்தைச் சேர்ந்த தமிழரசுக் கட்சியின்  பிரதேசசபைத் தவிசாளர் சுகிர்தன் என்பவர் பொண்டாட்டி பிள்ளைகளை வெளிநாட்டில் வைத்துக்கொண்டு பிரதேச சபையில் வேலைசெய்யும் ஒரு பெண்ணுடன் தொடசலில் இருந்து இப்போது அப்பெண் தற்கொலை செய்துவிட்டதாகக் கதை முடிக்கவில்லையா?

எதுவும் இல்லாது விட்டால் பெண் தொடசலையும் ஊழலாகத்தான் பார்க்கவேண்டும்.

சவுக்கு சங்கர் வெளிநாடுகளில் அதாவது முன்னேறிய நாடுகளில் இப்படிச்செய்வாராக இருந்தால் அனைத்துக்கும் ஆதாரம் கொடுக்க வேண்டும் 

இப்போது மட்டற்று இருக்கும் இஅணையத்தளத்தின் செயலிகளில் யாழ் களத்தின் அனைத்து உறுப்பினர்களதும் குரலைவைத்து ஆடியோ தயாரிக்கலாம் என்ன அவர்களது மாதிரிக்குரல் ஒன்று தேவைப்படும் அச்சு அசலாக சம்பந்தபட்ட மனிதரே ஆச்சரியப்படும் விதத்தில் இதைக் கச்சிதமாகச் செய்யலாம்.

சவுக்கு சங்கர் இப்போது பா ஜா கா  வீட்டின் செல்லப்பிள்ளை அவர் என்ன வேணுமானாலும் செய்வர் ஒத்தாசைக்குச் சீமான் வேறு இருக்கிறார்.

ஆட்டுக்குட்டி அண்ணாமலை பாஜ காவைச் சேர்ந்த எஸ் வி சேகர் எனும் கரடியே காறித்துப்பிவிட்டது
அதாவது
இந்தியாவில் பத்தொன்பதாயிரம் ரூபாக்குமேல் வெகுமதி வாங்கினால் வரி கட்டவேண்டும் ஆனால் மாதாமாதம் ஒரு இலட்சத்துப் பத்தாயிரத்துக்கு மேலாக வாடகை கட்டும் அண்ணாமலையின் வீட்டுவாடகையை நண்பர்கள் கட்டுகிறார்கள் எனக் கதைவிடுகிறார் எஙிறார் சேகர்.

இங்கு யாரும் சுத்தமில்லை பொறுக்கிகள்தான் வாழ்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Elugnajiru said:

தி மு க / அ தி மு க ஆகியன மட்டுமல்ல இந்தியாவின் அனைத்துக் கட்சிகளில் உள்ளவர்கள் ஓரிருவரைத்தவிர (முக்கியமாக நல்லக்கணு ஐயா அவர்கள்) அனைவரும் இந்த ஊழலுக்குப் பழகிப்போனவர்களே காசு பணம் சொத்து இவைதான் ஊழலா ஏன் மல்லாகத்தைச் சேர்ந்த தமிழரசுக் கட்சியின்  பிரதேசசபைத் தவிசாளர் சுகிர்தன் என்பவர் பொண்டாட்டி பிள்ளைகளை வெளிநாட்டில் வைத்துக்கொண்டு பிரதேச சபையில் வேலைசெய்யும் ஒரு பெண்ணுடன் தொடசலில் இருந்து இப்போது அப்பெண் தற்கொலை செய்துவிட்டதாகக் கதை முடிக்கவில்லையா?

எதுவும் இல்லாது விட்டால் பெண் தொடசலையும் ஊழலாகத்தான் பார்க்கவேண்டும்.

சவுக்கு சங்கர் வெளிநாடுகளில் அதாவது முன்னேறிய நாடுகளில் இப்படிச்செய்வாராக இருந்தால் அனைத்துக்கும் ஆதாரம் கொடுக்க வேண்டும் 

இப்போது மட்டற்று இருக்கும் இஅணையத்தளத்தின் செயலிகளில் யாழ் களத்தின் அனைத்து உறுப்பினர்களதும் குரலைவைத்து ஆடியோ தயாரிக்கலாம் என்ன அவர்களது மாதிரிக்குரல் ஒன்று தேவைப்படும் அச்சு அசலாக சம்பந்தபட்ட மனிதரே ஆச்சரியப்படும் விதத்தில் இதைக் கச்சிதமாகச் செய்யலாம்.

சவுக்கு சங்கர் இப்போது பா ஜா கா  வீட்டின் செல்லப்பிள்ளை அவர் என்ன வேணுமானாலும் செய்வர் ஒத்தாசைக்குச் சீமான் வேறு இருக்கிறார்.

ஆட்டுக்குட்டி அண்ணாமலை பாஜ காவைச் சேர்ந்த எஸ் வி சேகர் எனும் கரடியே காறித்துப்பிவிட்டது
அதாவது
இந்தியாவில் பத்தொன்பதாயிரம் ரூபாக்குமேல் வெகுமதி வாங்கினால் வரி கட்டவேண்டும் ஆனால் மாதாமாதம் ஒரு இலட்சத்துப் பத்தாயிரத்துக்கு மேலாக வாடகை கட்டும் அண்ணாமலையின் வீட்டுவாடகையை நண்பர்கள் கட்டுகிறார்கள் எனக் கதைவிடுகிறார் எஙிறார் சேகர்.

இங்கு யாரும் சுத்தமில்லை பொறுக்கிகள்தான் வாழ்கிறார்கள்

அப்போ திமுக சுத்தமான கட்சி கருணாநிதி குடுப்பத்தின் மீது வீண்பழி சுமத்தப்பட்டுள்ளது என்கிறீர்களா? சவுக்கு விசாணைக்கு தயார் என்று சொல்லி வரும் நிலையில் பிடிஆர்  இதைப் பெருதுபடுத்தமல் இருப்பதும் சவால் விட்டு சிக்கலுக்குள்ளாகமல் இருப்பதற்கே.

  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2023 at 23:28, புலவர் said:

அப்போ திமுக சுத்தமான கட்சி கருணாநிதி குடுப்பத்தின் மீது வீண்பழி சுமத்தப்பட்டுள்ளது என்கிறீர்களா? சவுக்கு விசாணைக்கு தயார் என்று சொல்லி வரும் நிலையில் பிடிஆர்  இதைப் பெருதுபடுத்தமல் இருப்பதும் சவால் விட்டு சிக்கலுக்குள்ளாகமல் இருப்பதற்கே.

அது ஒரு குடும்பக்கட்சி அவர்கள் ஊழல் செய்யாதவிடத்தில்தான் ஆச்சரியமாகும். ஆனால் பாஜக இதைச் சொல்லுது பாருங்கள் அதுதான் ஆச்சரியம் சவுக்கு சங்கர் சீமான் இவர்கள் எல்லோரும் எப்போதோ சங்கிகளாக மாறிவிட்டார்கள். சபரீசனது நிறுவனத்தை ரைடு பண்ணும்போதே புரியவேண்டும் வழக்கு வம்பு எனப்போனால் அம்பு எங்கேயெல்லாம் பாயும் என மத்தியில் ஆள்வது பஜக கனிமொழியையும் ராஜாவையும் சிறையில்போட்டு பென்டு நிமித்தினதை மறந்தீர்கள்போலுள்ளது.

ஆனால் மத்தியில் ஆளும் பஜக நேரடியாக எதையுமே செய்யாது ஏன் சபரீசனின் நிறுவனத்தில் முறைகேடு இருந்தாலும் எதுவும் செய்யாது அதன் கோப்புகளப் பதுக்கி வைத்திருக்கும் அதைவைத்தே மிரட்டும் தேவையெனில் இதுபோன்ற பல ரைடுகளை நடாத்தி முறைகேடுகளை அணிவகுக்கவைக்கும் ஆனால் வழக்கு வம்பு எனப்போகாது கூட்டணி அல்லது ஏதாவது தமிழ்நாட்டில் ஸ்ரெரலைட் காவிரிப்படுகையில் எரிவாயு அல்லது குயராத்தின் பெருமுதலைகளுக்கான முதலீடுகள் ஆகியவற்றில் இதைவைத்தே மிரட்டிக் காரியம் சாதிக்கம். 

சவுக்கு சங்கர் ஒரு கருவியே பிஙதவால் திமுக அமிர்ஸ்சாவுடன் கூட்டுச்சேர்ந்தால் எல்லாம் சரியாகிவிடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆடியோ லீக் சர்ச்சை: அமைச்சர் பி.டி.ஆர் விவகாரத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?

பிடிஆர் தியாகராஜன்

பட மூலாதாரம்,@PTRMADURAI

 
படக்குறிப்பு,

பி.டி.ஆர். தியாகராஜன்,தமிழ்நாடு நிதியமைச்சர்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கூறப்படும் குரல் பதிவுகள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், இந்த விவகாரம் தி.மு.கவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நிதியமைச்சர் மாற்றப்படுவாரா என்ற கேள்விகளையும் அவை எழுப்பியிருக்கிறது.

தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கூறப்படும் இரண்டு குரல் பதிவுகள் சமீப வாரங்களில் அடுத்தடுத்து வெளியாயின.

முதலாவது குரல் பதிவு, ஏப்ரல் 19ஆம் தேதி சில தனி நபர்களால் ட்விட்டரில் வெளியிடப்பட்டு, பா.ஜ.க. தலைவர் கே. அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்களால் பகிரப்பட்டு, கேள்வியெழுப்பப்பட்டது.

அதில், "உதயநிதியும், சபரீசனும் கடந்த 60 ஆண்டுகளில் அவர்களின் தாத்தாக்கள் சம்பாதித்தை விட, இந்த ஒரு வருடத்தில் அதிகமாக சம்பாதித்து விட்டார்கள். ஏறத்தாழ 30 ஆயிரம் கோடி வரை சம்பாதித்துள்ளார்கள். இப்போது அதனை மறைக்க முடியாமல் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார்கள்," என்று நிதியமைச்சர் கூறுவதைப் போல இருந்தது. (அதன் உண்மைத்தன்மை சுயாதீனமான முறையில் உறுதிப்படுத்தப்படவில்லை.)

 

இதையடுத்து, பா.ஜ.கவின் மாநில தலைவர் கே. அண்ணாமலை, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி ஆகியோர் இது குறித்து விசாரணை நடத்த வேண்டுமெனக் கோரினர்.

இந்த முதலாவது ஆடியோ குறித்து விளக்கம் அளித்த நிதியமைச்சர், "இது நேர்மையற்ற அரசியல் நபர்களால் மீண்டும், மீண்டும் பெரிதுபடுத்தப்படுகிறது. மேலும் பாரம்பரிய ஊடகங்களான ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருப்பவற்றின் செயலைக் கண்டு நான் வருத்தப்படுகிறேன். இதுபோன்ற புனையப்பட்ட, தீங்கிழைக்கும் மூன்றாம் நிலை தகவலை (ஒருவரது கட்டுரை, ஒருவரின் கருத்துகள், சித்தரிக்கப்படும் ஆடியோ, தெரியாத நபருடன் நடந்ததாக கூறப்படும் உரையாடல்) அவை வெளியிடுகின்றன. பொதுவெளியில் கிடைக்கும் தொழில்நுட்ப பகுப்பாய்வு மூலம் அந்த ஆடியோ உண்மையானது அல்ல என்பது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது" என்று கூறினார்.

இந்த விவகாரத்தின் சூடு ஆறுவதற்கு முன்பாகவே, நிதியமைச்சர் பேசுவதைப் போன்ற இன்னும் ஒரு ஆடியோ இரு நாட்களுக்கு முன்பு ஏப்ரல் 25ஆம் தேதி வெளியானது. இதனை பா.ஜ.கவின் மாநில தலைவர் கே. அண்ணாமலையே வெளியிட்டார்.

அதில், "ஒரு நபர் ஒரு பதவி என்ற கொள்கைக்கு நான் அரசியலுக்கு வந்த நாள் முதலே ஆதரவளித்து வருகிறேன். பா.ஜ.கவிடம் எனக்குப் பிடித்த விஷயம் இதுதான். கட்சியையும் மக்களையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு பிரிந்திருக்க வேண்டுமல்லவா? எல்லா முடிவுகளையும் அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும்தான் எடுக்கின்றனர். நிதியை மேலாண்மை செய்வது சுலபம். இப்படி ஒரு அமைப்பு இருக்க முடியாது. They are taking the bulk of the spoils. முதல்வரின் மகனும் மருமகனும்தான் கட்சியே. அவர்களை நிதியளிக்கச் சொல்லுங்கள்" என்று நீள்கிறது இந்த இரண்டாவது ஆடியோ.

இந்த ஆடியோ வெளிவந்த பிறகு மீண்டும் விளக்கமளித்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், "ஆடியோவில் உள்ள எந்த செய்தியையும் எந்த ஒரு தனி நபரிடமோ, தொலைபேசி உரையாடலிலோ அல்லது தனிப்பட்ட உரையாடலிலோ நான் கூறவில்லை. நான் அரசியலுக்கு வந்தது முதல் எனக்கு நல்ல வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் துணையாகவும் இருக்கிறார் சபரீசன். எதிர்க்கட்சிகள் கூட உதயநிதி, சபரீசன் மீது குற்றச்சாட்டுக்கள் வைக்காத நிலையில், அவர்கள் மீது களங்கம் சுமத்த இது போன்ற ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவர்களிடம் இருந்து என்னை பிரிப்பதன் மூலம் தங்கள் அரசியல் எண்ணங்களை நிறைவேற்றத் துடிக்கிறது ஒரு மிரட்டல் கும்பல்" என்று வீடியோ மூலம் பதிலளித்தார் பி.டி.ஆர்.

இந்த இரண்டு வீடியோக்களிலுமே பொதுவான ஒரு அம்சம் இருந்தது. அவற்றில் எதிர் முனையில் இருப்பவர் யார் அல்லது பதிவுசெய்தவர் யார் என்பதை, ஆடியோக்களை வெளியிட்டவர்கள் கூறவில்லை.

தி.மு.கவைப் பொறுத்தவரை முதல் ஆடியோ வெளியானபோதும் இரண்டாவது ஆடியோ வெளியானபோதும் அதிகாரபூர்வமாக எந்த ஒரு மறுப்பையோ, விளக்கத்தையோ, பி.டி.ஆருக்கு ஆதரவாகவோ, எதிராகவோ எதையும் கூறவில்லை.

பிடிஆர் திமுக ஃபைல்ஸ்

பட மூலாதாரம்,@ANNAMALAI_K

இந்த மௌனத்தை வைத்துப் பார்க்கும்போது, இந்த விவகாரத்தில் பி.டி.ஆரின் மீது தி.மு.க. தலைமை பெரும் அதிருப்தியில் இருக்கிறது என்றே ஊகிக்க வைத்தது.

ஆனால், ஏப்ரல் 26ஆம் தேதியன்று தி.மு.கவின் அதிகாரபூர்வ தொழில்நுட்ப அணியின் ட்விட்டர் பக்கத்தில் பி.டி.ஆருக்கு ஆதரவாக கருத்துகள் பதிவு செய்யப்பட்டன.

"அவதூறு பரப்புபவர்களுக்கு திராணியிருந்தால் பா.ஜ.க. அரசால் இந்த தேசம் அடைந்தது வளர்ச்சியா, வீழ்ச்சியா என்பது குறித்து நிதியமைச்சர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களோடு விவாதிக்க முன்வரட்டும். அவதூறுகள் அறத்தினை ஒருபோதும் வென்றிட முடியாது." என்று ஒரு பதிவை வெளியிட்டது தொழில்நுட்ப அணி

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

இந்த ஒரு பதிவைத் தவிர தி.மு.க தரப்பிலிருந்து எதுவுமே சொல்லப்படவில்லை என்பதும் கட்சிக்குள் நிலவும் அதிருப்தியைக் காட்டுவதாக இருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுத்தாக வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரி வரும் நிலையில், இதனை முன்வைத்து பி.டி.ஆரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் அல்லது துறையை மாற்றம் செய்ய வேண்டும் என்பது போன்ற கருத்துகள் கட்சிக்குள் விவாதிக்கப்பட்டுவருவதாகத் தெரிகிறது.

பி.டி.ஆர். நிதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டால், அந்தத் துறை, துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு ஆகிய மூவரில் ஒருவருக்கு வழங்கப்படலாம்.

ஆனால், அப்படிச் செய்தால், பா.ஜ.கவின் அழுத்தத்திற்கு பணிந்ததைப் போல இருக்கும் என்பதால், இதனை சற்றுத் தள்ளிப்போடலாமா என்ற விவாதமும் நடந்துவருகிறது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தற்போது குடியரசு தலைவரைச் சந்திக்க டெல்லிக்குச் செல்வதால், அந்தப் பயணம் முடிந்த பிறகு இது குறித்து ஒரு முடிவெடுக்கப்படலாம்.

திமுக

மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் இது குறித்துக் கூறுகையில், "தி.மு.கவைக் காலிசெய்ய பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது என்பது எல்லோருக்குமே தெரியும். அம்மாதியான சூழலில் இப்படி ஒரு ஆடியோ வெளியாகியிருப்பது, அது உண்மையா, பொய்யா என்பதைத் தாண்டி எல்லோருக்குமே சிக்கலை ஏற்படுத்தும். இந்த விவகாரம் வெளியானதிலிருந்து முதலமைச்சர் பெரும் மன உளைச்சலில் இருக்கிறார். முதலமைச்சரைச் சந்திக்க செவ்வாய்க்கிழமையன்று முயன்றார் பி.டி.ஆர். ஆனால், முதல்வர் பார்க்க மறுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆகவே. பி.டி.ஆர். மாற்றப்படுவதற்கே வாய்ப்பு அதிகம். அவர் அப்படி மாற்றப்படாவிட்டால், மீதமுள்ள ஆடியோக்களையும் பா.ஜ.க. நிச்சயமாக வெளியிடும்.

கட்சியைப் பொறுத்தவரை, சக அமைச்சர்களோடு பி.டி.ஆருக்கு சரியான உறவு இல்லை. ஆகையால் இவர் போனால்தான் சரியாக இருக்கும் என அவர்கள் நினைக்கிறார்கள்" என்கிறார்.

தி.மு.கவை கட்சிக்குள்ளிருந்தே நேரு, துரைமுருகன், செந்தில் பாலாஜி போன்றவர்கள் விமர்சிப்பார்கள். குறிப்பாக, 12 மணி நேரம் வேலைக்கு அனுமதியளிக்கும் சட்டம் வந்தபோது, எம்.எல்.ஏக்களே முதலமைச்சரைச் சந்தித்து தங்கள் அதிருப்தியை நேரடியாகத் தெரிவித்தார்கள். இப்படியிருந்தால் நாங்கள் தொகுதிக்கே போக முடியாது என்றார்கள். அதுபோல அதிருப்தியைச் சொல்லலாம். மாறாக, மற்றவர்களிடம் முதலமைச்சரின் குடும்பத்தைப் பற்றியே பேசுவது சரியாக இருக்காது என்கிறார் குபேந்திரன்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

தி.மு.க. அரசுக்கு பா.ஜ.க. பல்வேறு விதங்களில் நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்தச் சூழலில், பா.ஜ.க. வெளியிட்ட ஒரு ஆடியோவின் அடிப்படையில் அமைச்சர் ஒருவரது பதவியைப் பறிப்பது சரியாக இருக்க முடியுமா?

"அது பற்றிய கவலை அமைச்சர்களுக்குத்தான் இருக்க வேண்டும். அவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டுமே. கண்டிப்பாக பி.டி.ஆர். உடன் இருந்தவர்கள்தான் இதைச் செய்திருக்க முடியும். இதை பிளாக்மெயில் என்று சொன்னாலும்கூட, அப்படி பிளாக் மெயில் செய்யும் வகையில் ஏன் பேசுகிறீர்கள் என்றுதான் கேள்வி வரும். ஆனால், இப்போது நடவடிக்கை எடுக்காவிட்டால் கட்சிக்குத்தான் கெட்ட பெயர் வரும்" என்கிறார் குபேந்திரன்.

2006 - 11 ஆட்சிக் காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். அப்போது பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்த துரை முருகன் மீது ஏதோ குற்றச்சாட்டு வந்த நிலையில், அவரை அந்தத் துறையிலிருந்து மாற்றி, சட்ட அமைச்சராக நியமித்தார் அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதி.

இத்தனைக்கும் அவர் கருணாநிதியின் தீவிர விசுவாசி. எம்.ஜி.ஆர். அழைத்தும் செல்லாதவர். அப்படியிருந்தும் நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணத்தில் நடவடிக்கை எடுத்தார் என்கிறார் குபேந்திரன்.

இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.கவைச் சேர்ந்தவர்களின் கருத்துக்களைப் பெற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

பி.ஆர்.ஆரின் முந்தைய சர்ச்சை

பிடிஆர் தியாகராஜன்

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனைப் பொறுத்தவரை, இதுபோன்ற சர்ச்சையில் சிக்குவது அவருக்கு முதல் முறையல்ல.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் தேதியன்று மதுரையில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் பேசிய தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூட்டுறவுத் துறையின் அண்மைக்கால செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்று குறிப்பிட்டார்.

"செயல்பாட்டுத் திறன், தகவல், தொழில்நுட்பம் இதெல்லாம் மிகவும் சிறப்பிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது. இன்றைய சூழலில் முழுமையான கணினிமயமாக்கம் இல்லாமல் இம்மாதிரி சங்கங்களை இயக்குவது மிகவும் கடினமான பணி. அதில் பல பிழைகள் வர வாய்ப்புண்டு. Aggregate Value பார்த்தீங்கன்னா இன்னும் எனக்குத் திருப்தி இல்லை. நிதியமைச்சராகக் கூறுகிறேன். இன்னும் சிறப்பிக்க பல வாய்ப்பு இருக்கு," என்று கூறினார்.

இதற்கு அடுத்த நாளே செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, "எங்களுக்கு யார் திருப்தி அடையனும்னா, ஏழு கோடி மக்களும் திருப்தி அடையனும். எங்கள் முதலமைச்சர் திருப்தி அடையனும். அதற்கு நாங்க வேலை செய்வோம். வேற யாரையும் திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கில்லை. மக்கள்தான் திருப்தியைச் சொல்லனுமே தவிர, ரேஷன் கடையே தெரியாதவர்கள் எல்லாம் திருப்தியடைனும்னு அவசியம் இல்லை" என்று எதிர்வினையாற்றினார்.

இதற்குப் பிறகு முதல்வர் தலையிட்டு, இரு தரப்பையும் இது தொடர்பாக ஊடகங்களிடம் பேச வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

https://www.bbc.com/tamil/articles/cpvxw96l92ro

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மு.க.ஸ்டாலின் பதிலால் பி.டி.ஆர் ஆடியோ லீக் சர்ச்சை முடிவுக்கு வந்ததா? அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகும் அரசு

பிடிஆர். தியாகராஜன்
 
படக்குறிப்பு,

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு நிதியமைச்சர்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆடியோ லீக் சர்ச்சையால் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் பதவி பறிக்கப்படலாம் என்று பரவிய செய்திகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள பதில் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஆடியோ லீக் சர்ச்சை இத்துடன் ஓயுமா? மேலும் வீடியோக்கள் வரக் கூடுமா? திமுகவில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனித்து விடப்பட்டுள்ளாரா? அவருக்கு பா.ஜ.க. குறி வைக்கிறதா? என்பன போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ளன.

இந்திய அரசியலில் பல விஷயங்களில் முன்னோடியாக திகழும் தமிழ்நாடு, இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப அரசியல் செய்வதிலும் அப்டேட்டாகி வெகு நாட்களாகிவிட்டன. குறிப்பாக, பா.ஜ.க. மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு ஆடியோ, வீடியோ கசிவு, ஸ்டிங் ஆபரேஷன் என பல பெயர்களில் தனிப்பட்ட பதிவுகள் சமூக வலைதளங்கள் வாயிலாக பொதுவெளியில் பகிரங்கமாக வெளியிடப்பட்டன.

ஆடியோ டேப் கசிவும், பி.டி.ஆர் விளக்கமும்

அந்த வரிசையில், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோவின் முதல் பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த ஆடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, அதனால் எழுந்த அதிர்வுகள் அடங்கும் முன்பே ஏப்ரல் 25ஆம் தேதி பிடிஆர் பேசுவதாகக் கூறி இரண்டாவது ஆடியோவை தாமே வெளியிட்டார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

முதல் ஆடியோ பதிவில் "உதயநிதியும், சபரீசனும் கடந்த 60 ஆண்டுகளில் அவர்களின் தாத்தாக்கள் சம்பாதித்தை விட, இந்த ஒரு வருடத்தில் அதிகமாக சம்பாதித்து விட்டார்கள். ஏறத்தாழ 30 ஆயிரம் கோடி வரை சம்பாதித்துள்ளார்கள். இப்போது அதனை மறைக்க முடியாமல் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார்கள்," என்றும், இரண்டாவது ஆடியோ பதிவில், "ஒரு நபர் ஒரு பதவி என்ற கொள்கைக்கு நான் அரசியலுக்கு வந்த நாள் முதலே ஆதரவளித்து வருகிறேன். பா.ஜ.கவிடம் எனக்குப் பிடித்த விஷயம் இதுதான். கட்சியையும் மக்களையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு பிரிந்திருக்க வேண்டுமல்லவா? எல்லா முடிவுகளையும் அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும்தான் எடுக்கின்றனர். நிதியை மேலாண்மை செய்வது சுலபம். இப்படி ஒரு அமைப்பு இருக்க முடியாது. They are taking the bulk of the spoils. முதல்வரின் மகனும் மருமகனும்தான் கட்சியே. அவர்களை நிதியளிக்கச் சொல்லுங்கள்" என்றும் பேசுவது பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்தான் என்று கூறப்பட்டது. (இரு ஆடியோக்களின் உண்மைத்தன்மை சுயாதீனமான முறையில் உறுதிப்படுத்தப்படவில்லை.)

 

இந்த இரண்டு ஆடியோக்களிலுமே பொதுவான ஒரு அம்சம் இருந்தது.

அவற்றில் எதிர் முனையில் இருப்பவர் யார் அல்லது பதிவு செய்தவர் யார் என்பதை, ஆடியோக்களை வெளியிட்டவர்கள் கூறவில்லை.

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

ஆடியோ சர்ச்சைக்கு விளக்கமளித்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், "ஆடியோவில் உள்ள எந்த செய்தியையும் எந்தவொரு தனி நபரிடமோ, தொலைபேசி உரையாடலிலோ அல்லது தனிப்பட்ட உரையாடலிலோ நான் கூறவில்லை. நான் அரசியலுக்கு வந்தது முதல் எனக்கு நல்ல வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் துணையாகவும் இருக்கிறார் சபரீசன்.

எதிர்க்கட்சிகள் கூட உதயநிதி, சபரீசன் மீது குற்றச்சாட்டுக்கள் வைக்காத நிலையில், அவர்கள் மீது களங்கம் சுமத்த இது போன்ற ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவர்களிடம் இருந்து என்னை பிரிப்பதன் மூலம் தங்கள் அரசியல் எண்ணங்களை நிறைவேற்றத் துடிக்கிறது ஒரு மிரட்டல் கும்பல்" என்று வீடியோ மூலம் பதிலளித்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

சிறிய மெளனத்திற்குப் பிறகு ஏப்ரல் 26ஆம் தேதியன்று தி.மு.கவின் அதிகாரபூர்வ தொழில்நுட்ப அணியின் ட்விட்டர் பக்கத்தில் பி.டி.ஆருக்கு ஆதரவாக கருத்துகள் பதிவு செய்யப்பட்டன. அந்த ஒரு பதிவைத் தவிர தி.மு.க தரப்பிலிருந்து எதுவுமே சொல்லப்படவில்லை என்பதும் கட்சிக்குள் பி.டி.ஆர். மீது நிலவும் அதிருப்தியைக் காட்டுவதாகவே கருதப்பட்டது.

திமுகவின் சொத்துப்பட்டியல் என்று கூறி அண்ணாமலை வெளியிட்ட தகவலுக்காக அவர் மீது வழக்கு தொடரப் போவதாக அறிவித்த அக்கட்சி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விஷயத்தில் கட்சி சார்பில் வழக்கு தொடுக்கப்படாது என்று தெளிவுபடுத்தியது. திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் இதுதொடர்பாக அளித்த பேட்டி வெளியானதுமே, கட்சிக்குள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனித்து விடப்பட்டிருப்பதாக ஊகங்கள் பரவின.

அமைச்சரவை மாற்றம் இருக்குமா?

பட மூலாதாரம்,TWITTER

 
படக்குறிப்பு,

டி.கே.எஸ்.இளங்கோவன்

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் அல்லது அவரிடம் இருந்து நிதித்துறை பறிக்கப்பட்டு வேறு இலாகா தரப்படலாம் என்று தமிழ்நாடு அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில்தான், 'உங்களில் ஒருவன்' என்ற பெயரில் பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்கும் 11.15 நிமிட வீடியோ செவ்வாய்க்கிழமை வெளியானது.

அதில், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆடியோ லீக் சர்ச்சை குறித்த கேள்விக்குப் பதிலளித்திருந்த அவர், "இந்த ஆடியோ குறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே 2 முறை விளக்கம் அளித்துவிட்டார். இந்த மட்டமான ஆடியோ அரசியல் பற்றி நான் பேச விரும்பவில்லை. மக்களுக்கான பணிகளை செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. மட்டமான அரசியல் செய்யும் நபர்களுக்கு நான் விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை" என்று கூறியிருந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

"முதலமைச்சர் பதிலால் முற்றுப்புள்ளி வரவில்லை"

தமிழ்நாடு அமைச்சரவையில் ஒரு வாரத்திற்குள் மாற்றம் இருக்கும், அமைச்சர் பி.டி.ஆரின் பதவி பறிக்கப்படலாம் அல்லது இலாகா மாற்றப்படலாம் என்னும் வகையில் பரவிய செய்திகளுக்கு முற்றுப்புள்ளி விழுந்துள்ளதாகவே கருதப்படுகிறது.

ஆனால், அது நிரந்தரமானதாக இருக்குமா என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.

”முதலமைச்சரின் பதிலால் ஆடியோ லீக் விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதாக நான் கருதவில்லை. ஏனெனில், இதுவரை வெளிவந்த 2 ஆடியோக்களுமே துண்டுதுண்டாக வந்தவை. மேலும் ஆடியோக்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை.

அவற்றின் உண்மைத்தன்மை இன்னும் நிரூபிக்கப்படவில்லை. பி.டி.ஆரை மட்டுமின்றி ஒட்டுமொத்த திமுகவையும் குறிவைக்கும் பா.ஜ.க., திமுகவுக்கு எதிராக சிறு துரும்பு கிடைத்தாலும் விடாது எனும் போது பி.டி.ஆர். ஆடியோ விவகாரத்தில் அவர்கள் அவ்வளவு எளிதில் விட்டுவிட மாட்டார்கள்.

அடுத்தபடியாக, குறிப்பிட்ட சில திட்டங்கள், வேலைகளைக் குறிப்பிட்டு பி.டி.ஆர் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக ஏதேனும் ஆடியோ வெளியானால் நிலைமை மோசமாகிவிடும்” என்கிறார் குபேந்திரன்.

"ஆடியோ பதிவு அண்ணாமலைக்கு எப்படி கிடைத்தது?"

மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கூறும் போது, "செலெக்ட்டிவ் கிளிப்பிங் ஆபத்தானது. முழுமையான உரையாடலின் ஓரிரு வார்த்தைகளை மட்டும் வெட்டி ஒட்டி வெளியிட்டால் முற்றிலும் மாறுபட்ட கருத்து கிடைக்கும்.

இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் இது சாத்தியம். நிதி அமைச்சர் தியாகராஜன் யாரோடு பேசினார்? அது தொலைபேசி உரையாடல் என்றால் அது அண்ணாமலைக்கு எப்படி கிடைத்தது? ஒட்டு கேட்கப்பட்டது என்றால் மத்திய அரசா மாநில அரசா? இந்த கேள்விகளுக்கு இதுவரை விடை இல்லை.

நிதியமைச்சர் தியாகராஜன் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர்ந்து முழுமையான ஆடியோ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கலாம் அல்லது பொதுவாழ்வில் தூய்மை என்கிற கோட்பாட்டின் அடிப்படையில் அண்ணாமலையே முழு ஆடியோவை வெளியிடலாம். அவ்வாறு செய்யாத வரை சர்ச்சை தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்." என்றார்.

அமைச்சரவை மாற்றம் இருக்குமா?

பட மூலாதாரம்,SHYAM

 
படக்குறிப்பு,

தராசு ஷ்யாம்

"சத்யபால் மாலிக் குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க. என்ன பதில் அளித்தது?"

அதேநேரத்தில், மற்றொரு மூத்த பத்திரிகையாளர் கார்த்திகேயனோ மாறுபட்ட கோணத்தை முன்வைத்துள்ளார்.

"பிரதமர் மோடி ஊழலுக்கு எதிரானவர் அல்ல, புல்வாமா தாக்குதலின் போது பாதுகாப்புப் படையினர் உயிரிழக்க காரணமான அரசின் தவறுகள் தொடர்பாக அமைதி காக்குமாறு தன்னை பிரதமர் கேட்டுக் கொண்டார் என்பன போன்ற குற்றச்சாட்டுகளை ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் அதிகாரப்பூர்வமாக இணைய இதழுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதுபோன்ற சீரியசான குற்றச்சாட்டுகளுக்குக் கூட பா.ஜ.க. இன்னும் பதில் அளிக்கவே இல்லை.

பி.டி.ஆர். விவகாரத்தில், ஆடியோ டேப்பில் இருப்பது அவரது குரல்தானா என்பது இன்னும் உறுதியாகவே இல்லை. அவரோ அது தன்னுடைய குரல் அல்ல என்று மறுக்கிறார். இந்த சூழலில், பி.டி.ஆர். மீது நடவடிக்கை எடுப்பது, அந்த குற்றச்சாட்டுகளை திமுகவே ஒப்புக்கொண்டதாக ஆகிவிடாதா? அதனால்தான், ஆடியோ டேப் விவகாரத்தில் அது பிடிஆரின் தனிப்பட்ட விஷயம் என்று கூறி திமுக விலகி நிற்கிறது." என்கிறார் அவர்.

அமைச்சரவை மாற்றம் இருக்குமா?
 
படக்குறிப்பு,

கார்த்திகேயன்

மேலும், "சத்யபால் மாலிக் அதிகாரபூர்வமாக பேசிவிட்ட பிறகும் கூட, அதற்கு விளக்கமோ அல்லது நடவடிக்கையோ எடுக்காத பா.ஜ.க.வுக்கு, தமிழ்நாட்டில் இப்போது கேள்வி எழுப்ப எந்தவொரு தார்மீக உரிமையும் கிடையாது. அதுபோக, பா.ஜ.க.வின் வளர்ச்சி, குஜராத் மாடல் போன்ற பிரசாரங்களுக்கு எதிராக மத்திய அரசு வெளியிடும் புள்ளிவிவரங்களைக் கொண்டே பி.டி.ஆர். பதிலடி கொடுக்கிறார். பா.ஜ.க.வின் இந்துத்துவ அரசியலுக்கு மாற்றாக திமுகவின் சமூகநீதி அரசியலை அவரை வலுவாக முன்வைக்கிறார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் தவறுகளை புள்ளிவிவரங்களுடன் அவர் புட்டுபுட்டு வைக்கிறார். பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் கருத்துகள் தேசிய அரசியலில் அறிவுசார் தளத்தில் பெரிய அளவில் விவாதிக்கப்படும் ஒன்றாக மாறிவிட்டிருக்கிறது. இதனால், தேசிய அரசியலில் பா.ஜ.க.வுக்கு அவர் ஒரு நெருடலாகவே திகழ்ந்து வருகிறார். ஆகவே, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக இதனை வலுவான ஆயுதமாக பா.ஜ.க. பயன்படுத்துகிறது" என்று கார்த்திகேயன் குறிப்பிட்டார்.

https://www.bbc.com/tamil/articles/cd1g2epl3jjo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.