Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
54 நிமிடங்களுக்கு முன்னர்
இலங்கை பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ள இந்த தருணத்தில், அதற்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளைய தினம் பூரண ஹர்த்தால் (முழு கடையடைப்பு) போராட்டத்தை நடத்த தமிழர் தரப்பு தீர்மானித்துள்ளது.

1979ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவினால் கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு பதிலாக, தற்போதைய அரசாங்கத்தினால் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்புக்களை முன்வைத்து வருகின்றனர்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தினால் பெரும்பாலும் தமிழர்களே பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்த சட்டத்தின் கீழ் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, இன்றும் அவர்களில் சிலர் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து, 2019ம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, பல நூற்றுக்கணக்கான முஸ்லிம்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, பல்வேறு துன்பங்களை அனுபவித்திருந்தார்கள்.

அதன்பின்னர், 2022ம் ஆண்டு இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக நடத்தப்;பட்ட போராட்டத்தை அடுத்து, பயங்கரவாத் தடைச் சட்டத்தின் கீழ் பல சிங்களவர்களும் கைது செய்;யப்பட்டிருந்தார்கள்.

இந்த நிலையில், தற்போது கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு மூன்று இனத்தவர்களும் எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு

இலங்கை பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு நாட்டில் ஏன் இவ்வளவு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது என்ற கேள்விக்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது அமலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும், அரசாங்கத்தினால் தற்போது முன்வைக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது ஆயிரம் மடங்கு ஆபத்தான சட்டம் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.

இந்த சட்டமூலத்தில் பயங்கரவாதம் தொடர்பான சரியான வரைவிலக்கணம் கிடையாது எனவும், மிகவும் பரந்த வரைவிலணக்கம் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம், ஒன்று கூடும் சுதந்திரம், போராடுவதற்கான சுதந்திரம், ஊடக சுதந்திரம் உள்ளிட்ட சுதந்திரங்களை இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் மூலம் முடக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.

அம்பிகா சற்குணநாதன்
 
படக்குறிப்பு,

அம்பிகா சற்குணநாதன்

அத்துடன், இந்த சட்டமானது, நாட்டில் ராணுவ மயமாக்கலுக்கான அங்கீகாரத்தை வழங்குவதாகவும் அவர் கூறுகின்றார். அவர் சொல்லும் சில விஷயங்கள் வருமாறு:

01.ராணுவத்திற்கு போலீஸ் அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன. (கைது செய்தல், தேடுதல்களை முன்னெடுத்தல் போன்ற அதிகாரங்கள் ராணுவத்திற்கு கொடுக்கப்படுகின்றது)

02.தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சடத்தின் கீழ் தடுப்பாணையை பாதுகாப்பு அமைச்சர் மாத்திரமே வழங்க முடியும். எனினும், புதிய சட்டத்தில் பிரதி போலீஸ் மாஅதிபர்களுக்கு தடுப்பாணையை பிறப்பிக்கும் அதிகாரம் வழங்கப்படுகின்றது.

03.புதிய சட்டத்தின் மூலம் ஜனாதிபதிக்கு பரந்த அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன.

04.வர்த்தமானியின் ஊடாக அமைப்புக்களை தடை செய்தல், ஒரு பிரதேசத்தை தடை செய்தல் போன்ற செயற்பாடுகளை ஜனாதிபதியினால் முன்னெடுக்க முடியும்.

05.வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் சிங்கள மயமாக்கலுக்கு எதிராக போராடுபவர்களை, சிங்கள பௌத்த மக்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் நோக்குடன், அந்த பௌத்த மத தலங்களுக்கு சேதம் விளைவிப்பதாக திரிவுப்படுத்தி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை இந்த சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும்;.

06.வர்த்தமானியின் ஊடாக தடை செய்யப்பட்ட இடங்களை படம் அல்லது காணொளி எடுத்தலால், அது கூட பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் குற்றமாக கருதப்படுகின்றது. இது ஊடக சுதந்திரத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக அமைகின்றது.

07.இந்த சட்டத்தின் கீழ் குற்றங்களை புரிவதற்காக ரகசிய தகவல்களை திரட்டுவதும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகின்றது.

08.போலீஸாரின் செயற்பாடுகள் தொடர்பான தகவல்கள் அல்லது தடுப்பு முகாமில் நடக்கும் விடயங்கள் போன்றவை ரகசிய தகவல்களாக பட்டியலிடப்படுகின்றன.

09. இவ்வாறான தகவல்களை திரட்டும் ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு பெரிதும் பாதிப்புக்களுக்கு உட்படுத்தப்படலாம்.

10.தொழிற்சங்க போராட்டங்கள் நடத்தப்படும் இடங்கள் தடை செய்யப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டு, போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட சந்தர்ப்பம் உள்ளது.

11.தமது அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் தொழிற்சங்கள் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்தப்படும் சந்தர்ப்பத்தில், அந்த சேவையை ஜனாதிபதி அத்தியாவசிய சேவையாக அறிவித்தலின் ஊடாக, அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு விளைவித்தலானது, பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகும்.

அரசாங்கத்தின் பதில்

விஜயதாஸ ராஜபக்ஷ
 
படக்குறிப்பு,

விஜயதாஸ ராஜபக்ஷ

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் சில குறைபாடுகள் காணப்படலாம் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

குறைபாடுகள் எந்தவொரு சட்டத்திலும் காணப்படக்கூடியது எனவும், முழுமையான சட்டமொன்று உலகில் எந்தவொரு நாடும் அமல்படுத்தியது கிடையாது எனவும் அவர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.

சட்டம் என்பது காலத்தின் மற்றும் சமூகத்தின் தேவை எனவும் அவர் கூறுகின்றார்.

ஜே.ஆர்.ஜயவர்தன முதல் மஹிந்த ராஜபக்ஷ வரையிலான ஜனாதிபதிகள் இந்த சட்டத்தின் கீழ் செயற்படாத பட்சத்தில், நாடு தற்போது பிரபாகரனின் ஆட்சியின் கீழ் இருந்திருக்கும் என அவர் குறிப்பிடுகின்றார்.

2019ம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இரத்த ஆறுகள் ஓடுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்பட்டதாகவும், அதனை தவிர்த்துக்கொள்வதற்கு இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.

அரசாங்கத்தை பாதுகாப்பதற்காவோ அல்லது ஜனாதிபதியை பாதுகாப்பதற்காகவோ தாம் புதிய சட்டங்களை கொண்டு வருவது இல்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

மக்களின் தேவைகளை கருத்திற் கொண்டு, மக்களுக்கான சட்டங்களையே தாம் கொண்டு வருவதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/articles/cv2d5pn1p29o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்: மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதம்!

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை தற்போதைய வடிவில் முன்வைக்க வேண்டாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது,

இது ஒரு தேசிய உரையாடல் முடிவடைந்து தெளிவான திட்டத்துடன் அதன் பரிந்துரைகள் வெளியிடப்படும் வரை.பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை முன்வைக்க வேண்டாம் தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு தீர்வு காண்பதற்கு, மிகவும் தாமதமாகிவரும் சமாதானம் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை மேலும் ஆராய வேண்டியது அவசியமானது எனத் தெரிவித்துள்ளது.

இந்த சமாதானம் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் 30 வருடகால கொடூரமான உள்நாட்டு யுத்தத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சமூகங்களுக்கு மாத்திரம் அமையாது எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

70 கள் மற்றும் 80 களில் தெற்கில் ஏற்பட்ட எழுச்சிகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கும் இந்த செயல்முறை இருக்கும், அங்கு பலர் எழுச்சி மற்றும் அரசின் பதில் இரண்டாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமாதானம் மற்றும் நல்லிணக்க செயல்முறையை சமமாக எதிர்கொள்ளும் ஒரு தேசிய உரையாடலை நிறுவுவது, முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துடன் ஒப்பிடக்கூடிய ஒரு சட்டமூலத்திற்கான சூழலின் அவசியத்தை சிறப்பாக வரையறுக்கும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

https://thinakkural.lk/article/251023

  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2023 at 19:31, ஏராளன் said:
54 நிமிடங்களுக்கு முன்னர்
இலங்கை பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ள இந்த தருணத்தில், அதற்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளைய தினம் பூரண ஹர்த்தால் (முழு கடையடைப்பு) போராட்டத்தை நடத்த தமிழர் தரப்பு தீர்மானித்துள்ளது.

1979ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவினால் கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு பதிலாக, தற்போதைய அரசாங்கத்தினால் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்புக்களை முன்வைத்து வருகின்றனர்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தினால் பெரும்பாலும் தமிழர்களே பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்த சட்டத்தின் கீழ் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, இன்றும் அவர்களில் சிலர் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து, 2019ம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, பல நூற்றுக்கணக்கான முஸ்லிம்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, பல்வேறு துன்பங்களை அனுபவித்திருந்தார்கள்.

அதன்பின்னர், 2022ம் ஆண்டு இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக நடத்தப்;பட்ட போராட்டத்தை அடுத்து, பயங்கரவாத் தடைச் சட்டத்தின் கீழ் பல சிங்களவர்களும் கைது செய்;யப்பட்டிருந்தார்கள்.

இந்த நிலையில், தற்போது கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு மூன்று இனத்தவர்களும் எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு

இலங்கை பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு நாட்டில் ஏன் இவ்வளவு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது என்ற கேள்விக்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது அமலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும், அரசாங்கத்தினால் தற்போது முன்வைக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது ஆயிரம் மடங்கு ஆபத்தான சட்டம் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.

இந்த சட்டமூலத்தில் பயங்கரவாதம் தொடர்பான சரியான வரைவிலக்கணம் கிடையாது எனவும், மிகவும் பரந்த வரைவிலணக்கம் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம், ஒன்று கூடும் சுதந்திரம், போராடுவதற்கான சுதந்திரம், ஊடக சுதந்திரம் உள்ளிட்ட சுதந்திரங்களை இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் மூலம் முடக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.

அம்பிகா சற்குணநாதன்
 
படக்குறிப்பு,

அம்பிகா சற்குணநாதன்

அத்துடன், இந்த சட்டமானது, நாட்டில் ராணுவ மயமாக்கலுக்கான அங்கீகாரத்தை வழங்குவதாகவும் அவர் கூறுகின்றார். அவர் சொல்லும் சில விஷயங்கள் வருமாறு:

01.ராணுவத்திற்கு போலீஸ் அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன. (கைது செய்தல், தேடுதல்களை முன்னெடுத்தல் போன்ற அதிகாரங்கள் ராணுவத்திற்கு கொடுக்கப்படுகின்றது)

02.தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சடத்தின் கீழ் தடுப்பாணையை பாதுகாப்பு அமைச்சர் மாத்திரமே வழங்க முடியும். எனினும், புதிய சட்டத்தில் பிரதி போலீஸ் மாஅதிபர்களுக்கு தடுப்பாணையை பிறப்பிக்கும் அதிகாரம் வழங்கப்படுகின்றது.

03.புதிய சட்டத்தின் மூலம் ஜனாதிபதிக்கு பரந்த அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன.

04.வர்த்தமானியின் ஊடாக அமைப்புக்களை தடை செய்தல், ஒரு பிரதேசத்தை தடை செய்தல் போன்ற செயற்பாடுகளை ஜனாதிபதியினால் முன்னெடுக்க முடியும்.

05.வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் சிங்கள மயமாக்கலுக்கு எதிராக போராடுபவர்களை, சிங்கள பௌத்த மக்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் நோக்குடன், அந்த பௌத்த மத தலங்களுக்கு சேதம் விளைவிப்பதாக திரிவுப்படுத்தி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை இந்த சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும்;.

06.வர்த்தமானியின் ஊடாக தடை செய்யப்பட்ட இடங்களை படம் அல்லது காணொளி எடுத்தலால், அது கூட பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் குற்றமாக கருதப்படுகின்றது. இது ஊடக சுதந்திரத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக அமைகின்றது.

07.இந்த சட்டத்தின் கீழ் குற்றங்களை புரிவதற்காக ரகசிய தகவல்களை திரட்டுவதும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகின்றது.

08.போலீஸாரின் செயற்பாடுகள் தொடர்பான தகவல்கள் அல்லது தடுப்பு முகாமில் நடக்கும் விடயங்கள் போன்றவை ரகசிய தகவல்களாக பட்டியலிடப்படுகின்றன.

09. இவ்வாறான தகவல்களை திரட்டும் ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு பெரிதும் பாதிப்புக்களுக்கு உட்படுத்தப்படலாம்.

10.தொழிற்சங்க போராட்டங்கள் நடத்தப்படும் இடங்கள் தடை செய்யப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டு, போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட சந்தர்ப்பம் உள்ளது.

11.தமது அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் தொழிற்சங்கள் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்தப்படும் சந்தர்ப்பத்தில், அந்த சேவையை ஜனாதிபதி அத்தியாவசிய சேவையாக அறிவித்தலின் ஊடாக, அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு விளைவித்தலானது, பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகும்.

அரசாங்கத்தின் பதில்

விஜயதாஸ ராஜபக்ஷ
 
படக்குறிப்பு,

விஜயதாஸ ராஜபக்ஷ

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் சில குறைபாடுகள் காணப்படலாம் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

குறைபாடுகள் எந்தவொரு சட்டத்திலும் காணப்படக்கூடியது எனவும், முழுமையான சட்டமொன்று உலகில் எந்தவொரு நாடும் அமல்படுத்தியது கிடையாது எனவும் அவர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.

சட்டம் என்பது காலத்தின் மற்றும் சமூகத்தின் தேவை எனவும் அவர் கூறுகின்றார்.

ஜே.ஆர்.ஜயவர்தன முதல் மஹிந்த ராஜபக்ஷ வரையிலான ஜனாதிபதிகள் இந்த சட்டத்தின் கீழ் செயற்படாத பட்சத்தில், நாடு தற்போது பிரபாகரனின் ஆட்சியின் கீழ் இருந்திருக்கும் என அவர் குறிப்பிடுகின்றார்.

2019ம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இரத்த ஆறுகள் ஓடுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்பட்டதாகவும், அதனை தவிர்த்துக்கொள்வதற்கு இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.

அரசாங்கத்தை பாதுகாப்பதற்காவோ அல்லது ஜனாதிபதியை பாதுகாப்பதற்காகவோ தாம் புதிய சட்டங்களை கொண்டு வருவது இல்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

மக்களின் தேவைகளை கருத்திற் கொண்டு, மக்களுக்கான சட்டங்களையே தாம் கொண்டு வருவதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/articles/cv2d5pn1p29o

இந்த சடடம் அமுல்படுத்தபடடால் தமிழர் மட்டுமல்ல மற்ற இனத்தவருக்கும் பாதிக்கப்படுவார்கள். அதன் காரணமாகத்தான் அதிக எதிர்ப்பு வருகின்றது. நிச்சயமாக தமிழனுக்குத்தான் அதிக பாதிப்பு இருக்கும். 

இன்னும் அரசாங்கமும் மக்கள் போராட்டம் வெடிக்கலாம் என்று கவலைப்படுவதால்தான் இந்த மோசமான தெளிவற்ற சடடத்தை கொண்டுவருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Cruso said:

நல்ல கருத்துக்கள். 👍🏽
 @Cruso  நீங்கள் 2019’ம் ஆண்டு நீங்கள் யாழ்.களத்தில் இணைந்து இருந்தாலும்,
இது வரை அதிகமாக கருத்துக்களை எழுதவில்லை.
இனி கூடுதலாக எழுத வேண்டும் என்று எதிர் பார்க்கின்றோம். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

நல்ல கருத்துக்கள். 👍🏽
 @Cruso  நீங்கள் 2019’ம் ஆண்டு நீங்கள் யாழ்.களத்தில் இணைந்து இருந்தாலும்,
இது வரை அதிகமாக கருத்துக்களை எழுதவில்லை.
இனி கூடுதலாக எழுத வேண்டும் என்று எதிர் பார்க்கின்றோம். 🙂

நிச்சயமாக. நன்றி சிறி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் – யோசனைகளை முன்வைக்க பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் !

wijeyadasa-rajapakshe.jpg

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் எதிர்வரும் 31ஆம் திகதி வரையில், பொது மக்கள் மற்றும் சிவில் அமைப்புகள் தங்களின் கருத்துகள் மற்றும் யோசனைகளை முன்வைக்க முடியும் என நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, குறித்த தரப்பினர் தங்களது யோசனைகளை, justicemedia07@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும் என நீதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த யோசனைகள் மற்றும் கருத்துக்களை ஆராய்ந்து, புதிய சட்டமூலம் உருவாக்கப்படும் எனவும், அது தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடப்படும் எனவும் நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/251865

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருத்தங்களை உள்வாங்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை தயாரிக்க அமைச்சரவை அங்கீகாரம்

Published By: DIGITAL DESK 3

29 AUG, 2023 | 03:30 PM
image
 
தற்போது வரைவாக்கம் செய்யப்பட்டுள்ள சட்ட மூலத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திருத்தங்களை உள்வாங்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை மீண்டும் தயாரிப்பதற்காக சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை நீக்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்ட மூலத்தை அரச வர்த்தமானியில் வெளிளிடுவதற்காக கடந்த 27 ஆம் திகதி மார்ச் மாதம் 2023 ஆண்டு இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள குறித்த சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சில பிரிவுகள் தொடர்பாக ஆர்வம் காட்டுகின்ற பல தரப்பினர்களால் முன்வைக்கப்பட்டுள்ள  கருத்துக்களைக் கருத்தில் கொண்டு அச்சட்ட மூலத்திற்கு தேவையாக திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/163437

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக அனைத்து உயர் ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களுக்கு விளக்கமளிப்பு

Published By: VISHNU

01 SEP, 2023 | 09:05 PM
image
 
(எம்.ஆர்.எம்.வசீம்)

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக நாட்டில் இருக்கும் அனைத்து வெளிநாட்டு உயர் ஸ்தானிகர்கள் தூதுவர்கள் மற்றும் ராஜதந்திர பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தும் விசேட கலந்துரையாடல் ஒன்று நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தலைமையில் வெள்ளிக்கிழமை (01) வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது.

WhatsApp_Image_2023-09-01_at_3.03.28_PM.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக உயர் ஸ்தானிகர்கள், தூதுவர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் யோசனைகளை இதன்போது முன்வைத்துடன் அது தொடர்பில் அவர்களுக்கு இருந்து வந்த பிரச்சினைகள் தொடர்பாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ், வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் விளக்கங்களை வழங்கி தெளிவுபடுத்தியுள்ளனர்.

WhatsApp_Image_2023-09-01_at_3.03.26_PM_

இந்நிகழ்வில் நீதி இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன, நீதி மற்றும் வெளிவிவகார அமைச்சுக்களின் செயலாளர்கள், சட்டமா அதிபர் திணைக்களம், சட்டவரைபு திணைக்களம், உயர் ஸ்தானிகர் காரியாலயம் மற்றும் தூதுவராலய காரியாலயங்களை பிரிதிநிதித்துவப்படுத்தி ராஜதந்திர அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

https://www.virakesari.lk/article/163659

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூல வரைபின் பல சரத்துக்கள் அடிப்படை சட்டவாட்சிக் கோட்பாடுகளுக்கு முரணானவை - சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு

Published By: DIGITAL DESK 3

26 SEP, 2023 | 03:04 PM
image

(நா.தனுஜா)

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூல வரைபின் பல சரத்துக்கள் அடிப்படை சட்டவாட்சிக் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் அமைந்துள்ளது.

எனவே அனைத்துப் பிரஜைகளினதும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதாக அளித்திருக்கும் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு இலங்கை இச்சட்டவரைபைத் திருத்தியமைக்கவேண்டியது அவசியமென சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

அரசாங்கத்தினால் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தின் உள்ளடக்கம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அதில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் பற்றிய பரிந்துரைகளைத் தமக்கு அனுப்பிவைக்குமாறு கடந்த மேமாதம் 2 ஆம் திகதி நீதியமைச்சு அறிவித்தது. இவ்வாறானதொரு பின்னணியில் ஏற்கனவே வெளியிடப்பட்ட வரைபில் அவசியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னரான சட்டமூலம் கடந்த 15 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

இருப்பினும் திருத்தங்களுடன்கூடிய இப்புதிய வரைபின் 3 ஆவது சரத்தில் 'பயங்கரவாதம்' என்ற பதத்துக்கு விரிவான வரைவிலக்கணம் வழங்கப்பட்டிருப்பதாகவும், பாதுகாப்பு செயலாளரின் உத்தரவின்பேரில் மாத்திரம் ஒருவரை இரண்டு மாதங்கள் வரை தடுத்துவைப்பதற்கு இடமளிக்கப்படுவதன் மூலம் நீதித்துறையின் அதிகாரங்கள் வலுவிழக்கச்செய்யப்படுவதாகவும் சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழுவின் சட்ட மற்றும் கொள்கைப் பணிப்பாளர் லான் செய்டர்மன் சுட்டிக்காட்டியுள்ளார்.

'தடுப்புக்காவல் உத்தரவைப் பரிசீலனை செய்வதற்கான நீதிவானின் அதிகாரம் மட்டுப்படுத்தப்படுவதுடன், பயங்கரவாதம் எனும் பதத்துக்கான பரந்துபட்ட வரைவிலக்கணமானது அடிப்படை சட்ட ஆட்சிக் கோட்பாடுகளுக்கு முரணானவகையில் அமைந்துள்ளது. எனவே அனைத்துப் பிரஜைகளினதும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதாக இலங்கை அளித்திருக்கும் வாக்குறுதியை நிறைவேற்றவேண்டுமெனில் இச்சட்டவரைபு மேலும் திருத்தியமைக்கப்படவேண்டியது அவசியமாகும்' என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதுமாத்திரமன்றி புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூல வரைபின் சில சரத்துக்கள், அரசியலமைப்பின் 13 ஆவது சரத்துக்கும், இலங்கை கைச்சாத்திட்டிருக்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயத்தின் 9 ஆவது சரத்துக்கும் முரணானவைகயில் அமைந்திருப்பதாகவும் சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு கரிசனை வெளியிட்டுள்ளது.

'இலங்கையானது பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் போன்ற விசேட சட்டங்களை நீக்கிவிட்டு, சட்டவாட்சியுடன் முரண்படாத குற்றவியல் சட்டத்தின் ஊடாக பயங்கரவாதக்குற்றங்களைக் கையாள்வதற்கு முன்வரவேண்டும். இல்லாவிடின் குறைந்தபட்சம் தற்போது வெளியிடப்பட்டள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றம் தீர்மானம் மேற்கொள்வதற்கு முன்பதாக அதனை சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைப்பதற்கு நீதியமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று லான் செய்டர்மன் வலியுறுத்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/165475

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நிகழ்நிலைபாதுகாப்பு சட்டம் குறித்து மேற்குலக நாடுகள் கடும் அதிருப்தி- கடுமையாக சாடுவதற்கு தயாராகின்றன

Published By: RAJEEBAN

27 SEP, 2023 | 12:17 PM
image
 
பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம்  குறித்து அரசாங்கத்தை கடுமையாக சாடுவதற்கு மேற்குலக நாடுகள் தயாராகிவருகின்றன .

மேற்குலக நாடுகள் தங்கள் சட்டநிபுணர்களுடன் இந்த சட்ட மூலங்கள் குறித்து ஆராய்ந்ததில் இந்த சட்டமூலங்கள் பிரச்சினைக்குரியவை என அவை முடிவு செய்துள்ளன.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் பயங்கரவாதத்திற்கான விளக்கம் பரந்துபட்டது சர்வதேச தராதரங்கள் மரபுகளை மீறுவது  என மேற்குலக நாடுகள் கருதுகின்றன. இந்த சட்ட மூலம் குறித்து மேற்குலக நாடுகள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளன.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் போல துஸ்பிரயோகங்கள் தன்னிச்சையாக தடுத்துவைத்தல் போன்றவை இடம்பெறுவதை ஊக்குவிக்ககூடிய பிரிவுகள் காணப்படுகின்றன என உயர்வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் சமீபத்தைய தீர்மானத்திலும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேணடும் என்றவேண்டுகோள் காணப்படுகின்றது. ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையினை பெறுவதற்கு இலங்கை தகுதிபெறுவதற்கு பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

முன்னர் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அறிமுகப்படுத்திய அரசாங்கம் மேற்குலக நாடுகளின் விமர்சனத்தினால் அதனை மீளப்பெற்றுக்கொண்டது.

மேற்குலக நாடுகள் சிவில் சமூகத்தின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டன. எனினும் அரசாங்கம் சமீபத்தில் வெளியிட்டுள்ள சட்ட மூலம் குறித்தும் மேற்குலகநாடுகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியுடனான சந்திப்பின்போது  விக்டோரியா நுலண்ட் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் உள்ள விடயங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

https://www.virakesari.lk/article/165547

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு பாதுகாப்பும் அடிப்படை உரிமைகளும் அவசியம்- அமெரிக்க தூதுவர்

Published By: RAJEEBAN

30 SEP, 2023 | 03:01 PM
image
 
இலங்கை அரசாங்கம் தனது உத்தேச நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்து நிபுணர்களின் கருத்துக்களை பெறுவது அவசியம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

இலங்கை நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்து ஆராய்ந்து வருகையில் தொழில்நுட்ப துறையினர் சிவில் சமூகத்தினர் மற்றும் பலதரப்பட்ட நிபுணர்களின் கருத்தினை உள்வாங்குவது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

இது அடிப்படை உரிமை அதுபேச்சுவார்த்தைகளிற்கு அப்பாற்பட்ட விடயம் அதனை பாதுகாக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டம் குறித்தும் அமெரிக்க தூதுவர் கருத்து தெரிவித்துள்ளார்.

தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டத்தை சர்வதேச தராதரங்கள் ஏனைய ஜனநாயக நாடுகளில் உள்ள சிறந்த நடைமுறைகளிற்கு ஏற்ப மாற்றியமைப்பது குறித்த தனது வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் பின்பற்றவேண்டும் என நாங்கள் வலியுறுத்துகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வலுவான சட்டமூலம் மூலம் சரியான சமநிலையை பேணுவது சட்டபூர்வமான ஒன்றுகூடலிற்கு அனுமதிப்பது சட்டஅமுலாக்கல் அதிகாரிகள் அச்சுறுத்தல்களை வலுவான விதத்தில் கையாளக்கூடிய விதத்தில் அவர்களை வலுப்படுத்துவது ஆகியவை அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/165762

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் 18 மனுக்கள் தாக்கல் - சபாநாயகர் சபைக்கு அறிவிப்பு

24 JAN, 2024 | 05:35 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

பயங்கரவாத எதிர்ப்பு  சட்டமூலம் தொடர்பில் மேலும் 18 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.

பாராளுமன்றம் புதன்கிழமை (24)  காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது  இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு  மேலும் கூறுகையில்,

23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நான் இந்த சபையில் விடுத்த   அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட ஆறு மனுக்களுக்கு மேலதிகமாக, அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் பயங்கரவாத எதிர்ப்பு  எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மேலும் பதினெட்டு மனுக்களின் பிரதிகள் எனக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. 

அதேவேளை  அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மேலும் ஐந்து மனுக்களின் பிரதிகளும் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றார்.

https://www.virakesari.lk/article/174713

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.