Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல் இன்னிங்ஸில் இலங்கை 704 ஓட்டங்கள் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
SL vs IRE 2023: Ireland Hopeful of First Test Win on Sri Lankan Tour

அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 4ஆவது நாளான இன்று தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 3 விக்கெட்டுக்களை இழந்து 704 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் இன்னிங்ஸை முடிவுக்கொண்டுவந்தது.

இந்தநிலையில், இலங்கை அணி, அயர்லாந்தை விட 212 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

இலங்கையின் முதல் இன்னிங்ஸில் மொத்தமாக நால்வர் சதங்களை பெற்றதுடன், அவர்களில் இருவர் இரட்டை சதங்களை பெற்றனர்.

அதன்படி, அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 115 ஓட்டங்களையும், நிஷான் மதுஷ்க 205 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 245 ஓட்டங்களையும், எஞ்சலோ மெத்யூஸ் ஆட்டமிழப்பின்றி 100 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்த நிலையில், அயர்லாந்து அணி தமது இரண்டாவது இன்னிங்ஸை காலி மைதானத்தில் தொடங்கவுள்ளது.

Sri-Lanka-vs-Ireland-1st-Test-1024x606.j

https://thinakkural.lk/article/251061

  • கருத்துக்கள உறவுகள்

கண்டிசனல் பிளே....நாங்கள் அடிப்பம்...நீங்கள் பிடிக்கப்படாது...இந்த மச் வெற்றியாலை டெஸ்ட் பைனலுக்கு போக முடியுமோ...அப்ப இந்தியா பறந்தான்...😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அயர்லாந்தை இன்னிங்ஸால் வீழ்த்தி 100ஆவது டெஸ்ட் வெற்றியை ஈட்டியது இலங்கை

28 APR, 2023 | 05:26 PM
image

 

(நெவில் அன்தனி)

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (28) நிறைவடைந்த 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் நான்கு நாட்கள் துடுப்பாட்ட வீரர்கள் ஆதிக்கம் செலுத்தியபோதிலும் கடைசி நாளன்று பந்துவீச்சாளர்களின் ஆற்றல்கள் வெளிப்பட அயர்லாந்தை ஓர் இன்னிங்ஸ் மற்றும் 10 ஓட்டங்களால் இலங்கை அமோக வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் தனது 311ஆவது   டெஸ்ட் போட்டியில் 100ஆவது வெற்றியை இலங்கை ஈட்டிக்கொண்டது.

அத்துடன் அயர்லாந்துடனான 2 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 0 என இலங்கை முழுமையாகக் கைப்பற்றியது.

2017இல் டெஸ்ட் அந்தஸ்து கிடைத்த பின்னர் அயர்லாந்து விளையாடிய 6 போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் ஒற்றை டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அயர்லாந்து, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கையையே முதன்முதலில் எதிர்த்தாடியது.

இலங்கையுடனான இந்தத் தொடரில் தோல்வி அடைந்தபோதிலும் சில சாதனைகள் நிலைநாட்டிய திருப்தியுடன் அயர்லாந்து சொந்த நாடு திரும்பவுள்ளது.

2ஆவது டெஸ்ட் போட்டியில் அயர்லாந்தின் முதல் இன்னிங்ஸில் நையப்புடைக்கப்பட்டதால் கடும் விமர்சனத்திற்குள்ளான ரமேஷ் மெண்டிஸ், 2ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்து இலங்கையின் வெற்றியை ஓரளவு இலகுவாக்கினார். இது அவரது 4ஆவது 5 விக்கெட் குவியலாகும்.

சாதனைகள் பொழியப்பட்ட இந்த டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான இன்றைய  தினம் குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்களைப் பூர்த்தி செய்த சுழல்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ப்ரபாத் ஜயசூரிய நிலைநாட்டினார்.

தனது 2ஆவது இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 54 ஓட்டங்களிலிருந்து  இன்றைய  தினம்   தொடர்ந்த அயர்லாந்து சகல விக்கெட்களையும் இழந்து 202 ஓட்டங்களைப் பெற்று இன்னிங்ஸால் தோல்வி அடைந்தது.

அயர்லாந்தின் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்ப்பதற்க ஹெரி டெக்டர் தனித்து போராடிய போதிலும் அவரது முயற்சி அசித்த பெர்னாண்டோவால் முறியடிக்கப்பட்டது.

கடைசி நாள் ஆட்டத்தின் 3ஆவது ஓவரில் அணித் தலைவர் அண்டி பெல்பேர்னியின் தலைக்கவசத்தை அசித்த பெர்னாண்டோவின் பந்து பதம் பார்த்ததால் அதிர்ச்சிக்குள்ளான அவர் தற்காலிக ஓய்வுபெற்றார்.

அது இலங்கைக்கு சாதகமான திருப்பு முனையாக அமைந்தது. அண்டி பெல்பேர்னி வீரர்கள் தங்குமறைக்குத் திரும்பியதும் களம் நுழைந்த போல் ஸ்டேர்லிங், நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காமல் ப்ரபாத் ஜயசூரியவின் சாதனை விக்கெட்டாக களம் விட்டகன்றார்.

முதல் இன்னிங்ஸில் சதம் குவித்து அசத்திய போல் ஸ்டேர்லிங்கின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் மிகக் குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்களை வீழத்திய சுழல்பந்துவீச்சாளர் என்ற சாதனையை ப்ரபாத் ஜயசூரிய நிலைநாட்டினார். ஆனால், ஒட்டுமொத்த பந்துவீச்சாளர்களில் அதிவேகமாக 50 விக்கெட்கள் குவித்தோர் வரிசையில் இருவருடன் இரண்டாம் இடத்தை ப்ரபாத் பகிர்ந்துகொண்டார்.

போல் ஸ்டேர்லிங்கைத் தொடர்ந்து மேலும் 2 விக்கெட்களைப் பறிகொடுத்த அயர்லாந்து பகல்போசன இடைவேளையின்போது 5 விக்கெட்களை இழந்து 121 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதனிடையே உபாதையினால் ஓய்வு பெற்று மீண்டும் துடுப்பெடுத்தாட வந்த அண்டி பெல்பேர்னியும் ஹெரி டெக்டரும் ஜொடி சேர்ந்து நிதானமாகத் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

பெல்பேர்னி 46 ஓட்டங்கள் பெற்ற நிலையில் மெண்டிஸின் பந்துவீச்சில் ஆடுகளம் விட்டகன்றார்.

மறுபக்கத்தில் சுமார் 4 மணித்தியாலங்கள் துடுப்பெடுத்தாடிய ஹெரி டெக்டர் 189 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், 3 சிக்கஸ்கள் அடங்கலாக 85 ஓட்டங்களைப் பெற்று தேநீர் இடைவேளைக்கு சுமார் 15 நிமிடங்கள் இருந்தபோது 9ஆவதாக ஆட்டம் இழந்தார்.

4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்த மெத்யூ ஹம்ப்ரீஸுடன் 9ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை வெற்றிபெறுவதை தாமதம் அடையச் செய்தார். இந்த இணைப்பாட்டமே அயர்லாந்தின் 2ஆவது இன்னிங்ஸில் சிறந்த இணைப்பாட்டமாக இருந்தது.

டெக்டரை ஆட்டம் இழக்கச் செய்த அசித்த பெர்னாண்டொ, அடுத்த பந்தில் பென் வைட்டையும் வெளியேற்றி இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தார். இந்தப் போட்டியின் கடைசி 2 பந்துகளில் விக்கெட்களைக் கைப்பற்றிய அசித்த பெர்னாண்டோ அடுத்து விளையாடவுள்ள டெஸ்ட் போட்டியில் ஹெட் - ட்ரிக்கை நிறைவுசெய்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

பந்துவீச்சில் ரமேஷ் மெண்டிஸ் 64 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் அசித் பெர்னாண்டோ 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 88 ஓட்டங்களுக்கு 2 விக்கெடகளையும்   கைப்பற்றினர்.

எண்ணிக்கை சுருக்கம்

அயர்லாந்து 1ஆவது இன்: 492 (கேர்ட்டிஸ் கெம்ஃபர் 111, போல் ஸ்டேர்லிங் 103, அண்டி பெல்பேர்னி 95, லோக்கன் டக்கர் 80, ப்ரபாத் ஜயசூரிய 174 - 5 விக்., அசித்த பெர்னாண்டோ 78 - 2 விக்., விஷ்வா பெர்னாண்டோ 92 - 2 விக்.)

இலங்கை 1ஆவது இன்: 704 - 3 விக். (குசல் மெண்டிஸ் 245, நிஷான் மதுஷ்க 205, திமுத் கருணாரட்ன 115, ஏஞ்சலோ மெத்யூஸ் 100 ஆ.இ.)

அயர்லாந்து 2ஆவது இன்: 202 (ஹெரி டெக்டர் 85, அண்டி பெல்பேர்னி 46, ரமேஷ் மெண்டிஸ் 64 - 5 விக்., அசிதத் பெர்னாண்டோ 30 - 3 விக்., ப்ரபாத் ஜயசூரிய 88 - 2 விக்.)

ஆட்டநாயகன்: ப்ரபாத் ஜயசூரிய, தொடர்நாயகன்: குசல் மெண்டிஸ்.

https://www.virakesari.lk/article/154044

15 hours ago, alvayan said:

கண்டிசனல் பிளே....நாங்கள் அடிப்பம்...நீங்கள் பிடிக்கப்படாது...இந்த மச் வெற்றியாலை டெஸ்ட் பைனலுக்கு போக முடியுமோ...அப்ப இந்தியா பறந்தான்...😂

அவுஸ்திரேலியா இந்தியா இறுதிப் போட்டிக்கு தெரிவாகிவிட்டார்கள். அனுபவம் குறைந்த அயர்லாந்தை வென்றிருக்கிறார்கள். ஆனாலும் அயர்லாந்து 492 அடிச்சிருக்கு முதல் இனிங்க்சில்!

  • கருத்துக்கள உறவுகள்
On 29/4/2023 at 09:59, ஏராளன் said:

 

அவுஸ்திரேலியா இந்தியா இறுதிப் போட்டிக்கு தெரிவாகிவிட்டார்கள். அனுபவம் குறைந்த அயர்லாந்தை வென்றிருக்கிறார்கள். ஆனாலும் அயர்லாந்து 492 அடிச்சிருக்கு முதல் இனிங்க்சில்!

விபரம் தெரிந்தேபகிடிக்காக பதிந்தேன்....இப்ப இவை அடுத்த உலக டெஸ்ட் சம்பியன் போட்டிக்கு ...தகுதிபெற மச்  விளையாட வேணும்...என்பதும் ஒரு நிபந்தனை இருக்கே..அதுதான்  இந்த  போட்டிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.