Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டி. எஸ். சேனநாயக்க, ஜே. ஆர். ஜெயவர்த்தன ஆகியோரின் கொள்கைகளை பின்பற்றி இலங்கையை முன்னேற்றுவேன் - ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: T. SARANYA

01 MAY, 2023 | 04:38 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

டி. எஸ். சேனநாயக்க, ஜே. ஆர். ஜெயவர்த்தன ஆகியோரின் கொள்கைகளை பின்பற்றி இலங்கையை முன்னேற்றுவேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மேதின கூட்டம் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் பிரதித் தலைவர் றுவன் விஜேவர்த்தன தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்று இடம்பெற்றது. இதில் நிகழ் நிலையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

கடந்த 03 தசாப்தங்களாக நாடு கடுமையான பொருளாதார வீழ்ச்சியில் இருந்த நேரத்தில் நான் ஜனாதிபதியாக பொறுப்பேற்றேன். நாட்டின் பொருளாதாரம் முற்றிலுமாக வீழ்ச்சியடைந்து, உணவுத் தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்ததோடு, மக்கள் வீதிகளுக்கு இறங்கியிருந்தனர். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு இந்த நாட்டின் ஜனநாயக கட்டமைப்பையும், பாராளுமன்றத்தையும் சிதைக்க சிலர் முயன்றனர்.

இன்று நாட்டின் பொருளாதாரம் மீண்டும் ஸ்திரத்தன்மை அடைந்துள்ளது. உணவுத் தட்டுப்பாடு இல்லை. மேலும் நாட்டில் ஜனநாயக கட்டமைப்பு செயல்படுகிறது. அச்சுறுத்தல்கள் இன்றி பாராளுமன்றம் செயல்படுகிறது. ஒவ்வொருவரும் தங்களுடைய பணியை தடையின்றி மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

நான் ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்க முன்னர், ஒரு விடயத்தைப் பற்றி சிந்தித்தேன். ஐக்கிய தேசியக் கட்சி நாட்டைப் பற்றி சிந்திக்கும் கட்சி. ஐக்கிய தேசியக் கட்சி ஒரு கொள்கை அரசியலில் இருக்கும் கட்சி. நாங்கள் அதனை விட்டுவிலகவில்லை. சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்வது அவசியம், உலக வங்கியின் உதவி தேவை. நாம் 07 பில்லியன் டொலர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று  ஐக்கிய தேசியக் கட்சியின்  2020 தேர்தல் விஞ்ஞாபனத்தில், அன்று நாம் குறிப்பிட்டிருந்தோம். கட்சி என்ற வகையில் நாங்கள்தான் அந்த உண்மைகளை குறிப்பிட்டோம். மற்ற அனைவரும், பொருளாதார பிரச்சினை இருப்பதை அறிந்து, நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர்.

அதன் விளைவு என்ன, உண்மையைக் கூறிய ஐக்கிய தேசியக் கட்சி இறுதியாக தேசியப்பட்டியலில் வீழ்ந்தது. கசப்பானாலும் உண்மையை மக்களுக்குச் சொல்வதே எங்களின் கொள்கையாகும். அதனால் நாங்கள் அதிலிருந்து பின்வாங்கவில்லை. 2020 மற்றும் 2021 இலும் எங்களின் இலக்கு அறிவிக்கப்பட்டது. 2022ஆம் ஆண்டு, இந்தப் பிரச்சினை தீவிரமடைந்தபோது, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வைச் சந்தித்து, சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுமாறு அவருக்கு ஆலோசனை வழங்கினேன். இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த போது எதிர்க்கட்சியின் ஏனைய குழுக்கள் கலந்துரையாடலை புறக்கணித்த போதும் நானும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் எதிர்க்கட்சியில் இருந்து கலந்து கொண்டோம்.

எனது முயற்சி அரசியல் அல்ல, நாட்டின் பொருளாதாரத்தை முறையாகக் கையாள்வதும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதும் ஆகும். எனவே நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் பலம் என்னிடம் இருப்பதாகவும், எனக்கு ஆதரவளிக்கும் அமைச்சர்களுடன் இணைந்து செயற்பட்டு அந்த பெறுபேறுகளை அடைய முடியும் என்ற நம்பிக்கையினால் ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.

அந்த நம்பிக்கை எனக்கு இருந்ததற்கு முக்கிய காரணம், 2001 இல் அரசாங்கம் கவிழ்ந்தபோது, பொருளாதாரத்தை மீட்டெடுத்தது மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத்தையும் பலப்படுத்த முடிந்ததுதான். 2015 இல், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தபோது, பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், முதன்மை வரவு செலவுத்திட்ட மேலதிகத்தைப் பெறவும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

எனவே, இந்தப் பொருளாதார நெருக்கடியை என்னால் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். அப்படியானால், இந்த நேரத்தில், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதோடு, அரசியல் ஸ்திரத்தன்மையையும் உருவாக்குவதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது. தற்போது பாராளுமன்றம் இயங்கி வருகிறது. ஜனநாயகம் மற்றும் சட்டத்தின்படி செயல்படுபவர்கள் பலர் உள்ளனர். எனவே, இதற்கு எனக்கு உதவிய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களுக்கும் குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எனது நன்றியை முதலில் தெரிவித்துக்கொள்கின்றேன்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் காரணமாகவே நாம் முன்னோக்கிச் செல்ல வாய்ப்புக் கிடைத்தது. மேலும் கடந்த வெள்ளிக்கிழமை, இந்த ஒப்பந்தம் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை வாக்குகளினால் அங்கீகரிக்கப்பட்டது. அதற்கு ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோரும் ஆதரவு வழங்கினர். அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.

இப்போது நாம் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை அமுல்படுத்த வேண்டும். அதற்கு அவசியமான சட்டதிட்டங்களைக் கொண்டு வந்து 2024 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் நான் அதில் திருப்தியடையவில்லை.

எமக்கு இந்தப் பழைய பொருளாதார முறையுடன் இனியும் முன்னோக்கிச் செல்ல முடியாது. மொத்தத் தேசிய உற்பத்தியை ஆண்டுக்கு 6வீதம் முதல் 7வீதம் என்ற அளவில் விரைவாகக் கொண்டு வரக்கூடிய பொருளாதாரத்தை நாம் உருவாக்க வேண்டும். அதற்கு என்னிடம்  இரண்டு எடுத்துக்காட்டுகள் உள்ளன. ஒருவர் டி.எஸ். சேனநாயக்காவின் கீழ், ஆசியாவின் இரண்டாவது வலுவான பொருளாதாரத்தை நாங்கள் கொண்டிருந்தோம். அப்போது எம்மால் இங்கிலாந்துக்கு கடன் கொடுக்க முடிந்தது. ஜே.ஆர் ஜெயவர்தனவின் கீழ் நாம் திறந்த பொருளாதாரத்துடன் முன்னேறினோம். திறந்த பொருளாதாரத்தை உருவாக்கும் இரண்டாவது பயணத்தை இலங்கை தான் தொடங்கியது. அதன் பிறகுதான் சீனா அதனை நோக்கி வந்தது.

எனவே இந்தப் பின்னணியில் இலங்கையை மீண்டும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். பொருளாதாரத்தில் யார் கீழ்மட்டத்தில் இருக்கிறார்கள் என்பதில் நாம் ஆப்கானிஸ்தானுடன் போட்யிட முடியாது. எனவே நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். முன்னேறிய பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும். அன்று ஜே.ஆர் ஜெயவர்தன செய்தது போல், நாம் பல புதிய திட்டங்களை முன்னெடுத்து புதிய பொருளாதாரத்தில் இணைய வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் நமக்கு எதிர்காலம் இல்லை. நாம் சிந்திக்க வேண்டியது நமது எதிர்காலத்தைப் பற்றி அல்ல, நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பற்றியே நாம் சிந்திக்க வேண்டும்.

2048 இல் சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் போது, முன்னேறிய பொருளாதாரம் கொண்ட நாடாக நாம் மாற வேண்டும். இந்தியா அந்த இலக்கை 2047 இல் வைத்துள்ளது. சீனா 2049 அந்த இலக்குகளை அடைய உழைக்கிறது. 2048 ஆம் ஆண்டை இலங்கை அபிவிருத்தி ஆண்டாக மாற்ற வேண்டும். இன்றைய இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்காக இந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்புகிறோம். அந்த புதிய பொருளாதாரம் மிகவும் போட்டி நிறைந்த பொருளாதாரமாக இருக்க வேண்டும். சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட திறந்த பொருளாதாரமாக இருக்க வேண்டும். பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் குறிப்பாக ஏற்றுமதி சந்தையை இலக்காகக் கொண்ட போட்டி பொருளாதாரமாக இருக்க வேண்டும். நாங்கள் அங்கு செல்ல முயற்சிக்கிறோம். எனவேதான் அனைவரின் ஆதரவையும் கோருகிறோம்.

குறுகிய கால அரசியல் பற்றி சிந்திக்க வேண்டாம். இன்று நாளையல்ல, 2048ஐப் பற்றி சிந்தியுங்கள். நாட்டை முன்னேற்ற வேண்டும். இன்று, நாளை என நினைத்து பொய்யான வாக்குறுதிகளை வழங்கி நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளோம், மீண்டும் பாராளுமன்றத்திற்கான மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள இந்த புதிய பாதையில் செல்ல வேண்டும். எனவே, குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் உங்கள் அனைவருக்கும், நாங்கள் எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் கட்சியாக இருப்போம் என்று நான் பரிந்துரைக்கிறேன். நாம் புதிதாக சிந்திப்போம். இந்த நாட்டின் பழைய அரசியல் செயல்முறையை மாற்றும் கட்சியாக நாம் மாறுவோம். அதைத்தான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.

பாராளுமன்றம் மீதான  மக்களின் ஆதரவை மீண்டும்   பெற்றுக்கொள்ள இந்த புதிய பாதையில் செல்ல வேண்டும். எனவே, குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் உங்கள் அனைவருக்கும், நாங்கள் எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் கட்சியாக இருப்போம் என்று நான் பரிந்துரைக்கிறேன். நாம் புதிதாக சிந்திப்போம். இந்த நாட்டின் பழைய அரசியல் செயல்முறையை மாற்றும் கட்சியாக நாம் மாறுவோம். அதைத்தான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன். 

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் அங்கீக்கப்பட்டுள்ள நிலையில், அதனை முன்னெடுத்துச் செல்ல எண்ணியுள்ளோம்.   நாம் முன்நோக்கிப் பயணிக்க வேண்டுமாயின், நாம் இரண்டு விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். முதலாவது நாட்டில் உள்ள இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். இதுகுறித்து பேச்சு நடத்தி வருகிறோம். இந்த வருட இறுதிக்குள் ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு எதிர்பார்த்துள்ளேன். யாருக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது. பெரும்பான்மை சிங்கள மக்களையும், சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களையும் பாதுகாத்துக் கொண்டு முன்நோக்கிச் செல்ல வேண்டும். இதற்காக நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.

இரண்டாவது இந்த நாட்டில் அரசியல், பொருளாதார முறைமையில் மாற்றம் வேண்டும் என்று இளைஞர்கள் கோருகின்றனர். நாம் இதனை செவிமெடுக்க வேண்டும். இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்காக பல கட்டங்களாக  நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம். பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கும், மேற்பார்வைக் குழுவிற்கும் தலா ஐந்து இளைஞர்களை நியமிக்க எதிர்பார்த்துள்ளோம். இந்தப் பணிகளை இந்த மாதத்தில் பாராளுமன்றத்தில் மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம். கரு ஜயசூரியவின் ஆலோசனைக்கமைய மக்கள் சபையை உருவாக்குவதற்காக அதற்கான சட்ட மூலங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்போம்.   நாம் அனைவரும் உடன்பாட்டுடன்  புதிய பொருளாதார முறைமையை ஏற்படுத்துவோம்.  புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவோம். நாம் முன்நோக்கிப் பயணிப்போம். 

அதனால் நான் இன்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களிடம் இந்த புதிய பயணத்தை ஆரம்பிப்போம் என்று கோரிக்கை விடுக்கின்றேன். கடந்த வாக்கெடுப்பின் போது ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் வாக்களிப்பைப் புறக்கணித்தனர். திறந்த பொருளாதார முறைமையை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம். எனவே, வேற்றுமைகளை மறந்து முழு பாராளுமன்றத்தில் அரசாங்கமாக பணியாற்றுவோம் என்று நான் கோரிக்கை விடுக்கின்றேன். இனப்பிரச்சினை விடயத்தில் தூரமாகிச்  செல்வதால் எந்தப் பயனும் இல்லை என்று நான் தமிழ்க் கட்சிகளிடம் கூறுகிறேன். இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமாயின், தயவுசெய்து இந்த பொறிமுறைக்குள் வந்து விசேடமாக பாராளுமன்றத்தில் ஒரு அரசாங்கமாக நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம். இடதுசாரி கட்சிகள் தமது கொள்கைகளுக்கமைய இந்த நடைமுறையை பின்பற்றமாட்டோம் என்று கூறியுள்ளனர்.

நாம் தற்போது எதிர்காலத்தை நோக்கிப் பார்க்க வேண்டும். புதிய வேலைத் திட்டங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். புதிய வேலைத் திட்டங்களுடன் அனைவரும் இணைந்துகொள்ளுமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன். தொழிற்சங்கங்கள், ஏனைய அமைப்புக்கள் என அனைவரையும் இந்த வேலைத் திட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். புதிய வேலைத் திட்டங்கள் குறித்த அமைச்சரவையின் யோசனைகளை, பாராளுமன்றத்தில் உள்ள கட்சிகளிடம் சமர்ப்பித்து, மக்கள் சபையுடனும் கலந்தாலோசிப்போம். இதற்கான பரந்த இணக்கப்பாட்டை எட்ட விரும்புகிறோம். அப்படியாயின், எமக்கு அச்சமின்றி முன்நோக்கிச் செல்ல முடியும். இது 25 ஆண்டுகால வேலைத் திட்டம். இந்த 25 ஆண்டுகால வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, நாட்டைக் கட்டியெழுப்பி, மேம்படுத்துவோம் என்று அனைவரிடமும் கோரிக்கை விடுக்கின்றேன். இதற்காக உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றேன் என்றார்.

https://www.virakesari.lk/article/154260

  • கருத்துக்கள உறவுகள்

இருவருமே தமிழர்களுடான இனப்பிரச்சனையை தீர்க்காமல் சிக்கலாக்கி.. இறுதியில் நாட்டை ஒரு உள்நாட்டுப் போருக்குள் தள்ளி உதவியவர்கள். நாடு இன்று இந்த நிலையை அடைய இவர்களின் தவறான கொள்கைகளும் முக்கியமாகும். ரணில் அதே பாதையில் போய் நாட்டில் வாழும் பிற இனங்களின் உரிமையை மறுத்து நாட்டை சிங்கள பெளத்த நாடாக ஒருபோதும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியாது. மாறாக எல்லா இனங்களின் உரிமையும்.. இருப்பும் பாதுகாக்கப்பட்டால் அன்றி.. சொறீலங்கா கடன் மேல் கடன் வாங்கும்.. நாடாகவே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நாடு என்ற ரீதியில் பாரிய சவால்களை எதிர்கொண்ட வேளையில் தான் ஆட்சியதிகாரத்தை பொறுப்பேற்றேன்.

சவால்களை பொறுப்பேற்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு பலமுறை அழைப்பு விடுத்தோம்.அப்போது எவரும் முன்வரவில்லை.

மஹிந்த ராஜபக்சவின் மேதின உரை.

 

7 hours ago, ஏராளன் said:

நாட்டின் பொருளாதாரத்தை முறையாகக் கையாள்வதும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதும் ஆகும். எனவே நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் பலம் என்னிடம் இருப்பதாகவும், எனக்கு ஆதரவளிக்கும் அமைச்சர்களுடன் இணைந்து செயற்பட்டு அந்த பெறுபேறுகளை அடைய முடியும் என்ற நம்பிக்கையினால் ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்

ஒருவர் இழந்த அதிகாரத்தை கைப்பற்றவும், மற்றவர் கைப்பற்றியதை தக்க வைக்கவும் பகீரதப் பிரயத்தனம் பிரயோகிக்கிறார்கள். ஆனால் நிஜத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

7 hours ago, ஏராளன் said:

வேற்றுமைகளை மறந்து முழு பாராளுமன்றத்தில் அரசாங்கமாக பணியாற்றுவோம் என்று நான் கோரிக்கை விடுக்கின்றேன். இனப்பிரச்சினை விடயத்தில் தூரமாகிச்  செல்வதால் எந்தப் பயனும் இல்லை என்று நான் தமிழ்க் கட்சிகளிடம் கூறுகிறேன். இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமாயின், தயவுசெய்து இந்த பொறிமுறைக்குள் வந்து விசேடமாக பாராளுமன்றத்தில் ஒரு அரசாங்கமாக நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம்.

அன்று சுதந்திரம் பெறுவதற்காக ஒன்று சேர அழைத்து பெற்ற பின் முதுகில் குத்த ஆரம்பித்தீர்கள். இன்று பொருளாதார மீட்சிக்காக அழைக்கிறீர்கள். ஆனால் பாருங்கோ! சுதந்திர தினத்துக்கு முன் தீர்வு என்றீர்கள், தீர்வு வரவில்லை எங்கும் விகாரைகள் வருகின்றன, அதை நீங்கள் தடுக்கவில்லை, நிஞாயப்படுத்துகிறீர்கள். எங்களுக்கான பிரச்சனைகளும் அச்சுறுத்தல்களும் அதிகரிக்கின்றனவே தவிர நிறுத்தப்படவில்லை, எந்த சூழ்நிலைகளும் மாறாமல் எங்களை விழுத்தி 
எங்கள்மேல் மிதித்துக்கொண்டு, எங்களை கட்டியெழுப்ப வாருங்கள் என்று எப்படி எம்மை அழைப்பீர்கள்? நாங்கள்தான் எப்படி வருவோம்?  உங்களை நீங்கள் எங்களுக்காக இழக்கவேண்டாம், எங்களிடமிருந்து பறித்ததை திருப்பித்தந்து நல்ல சமிக்ஞயை காட்டுங்கள், நம்புகிறோம். கைகொடுத்து கட்டியெழுப்புகிறோம். தீட்டிய மரத்தில் கூர்பார்ப்பவர்கள் நீங்கள் என்பதை நாங்கள் நன்கறிவோம்.

உங்களை நெருங்கி வருவதாலும் எங்களுக்கு இருக்கிற  இனப்பிரச்சனை மாறப்போவதில்லை என்பதும்நமக்குத்தெரியும். தேவை வரும்போது அழைப்பீர்கள், முடிந்ததும் தூக்கிஎறிவீர்கள் என்பது கடந்த, நிகழ்கால யதார்த்தம். முதலில் இனவாதம் பேசுவோரை கட்டுப்படுத்துங்கள், தண்டனை அளியுங்கள் முடிந்தால்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி என்றால் இன்னும் ஒரு எழுபது வருடம் பின்னோக்கி செல்லப்போகிறோம். பாவம் இலங்கை மக்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.