Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புவிதரனின் கோலூன்றிப் பாய்தல் சாதனையை துஷேன் முறியடிப்பு; தமிழ் வீர, வீராங்கனைகள் பிரகாசிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: NANTHINI

07 MAY, 2023 | 04:42 PM
image

 

(நெவில் அன்தனி)

தியகம விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (07) ஆரம்பமான 63ஆவது கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியைச் சேர்ந்த துஷேன் சில்வா, 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் புதிய சாதனையை நிலைநாட்டினார்.

இதேவேளை, 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல், 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தட்டெறிதல், 20 வயதுக்குட்பட்ட 5000 மீற்றர் ஓட்டம் ஆகியவற்றில் பிற மாவட்டங்களில் உள்ள தமிழ் பாடசாலை வீரர்கள் வெற்றிபெற்று வரலாறு படைத்தனர்.

உஸ்பெகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற 5ஆவது ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் கோலூன்றிப் பாய்தலில் (4.70 மீற்றர்) வெள்ளிப் பதக்கம் வென்ற துஷேன் சில்வா, 18 வயதுக்குட்பட்ட கோலூன்றிப் பாய்தலில் 4.50 மீற்றர் உயரம்  தாவி போட்டிக்கான புதிய சாதனையை நிலைநாட்டி தங்கம் வென்றார்.

thushen_silva.JPG

சாவகச்சேரி இந்து கல்லூரி வீரர் ஏ. புவிதரன் 2019இல் நிலைநாட்டிய 4.40 மீற்றர் என்ற சாதனையை துஷேன் சில்வா ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார்.

துஷேன் சாதனை நிலைநாட்டிய போட்டியில் சாவகச்சேரி இந்து கல்லூரி வீரர் எஸ். கஜணன் 3.80 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

I_abinayan.jpg

ஆண்களுக்கான 23 வயதுக்குட்பட்ட  கோலூன்றிப் பாய்தலில் அருணோதயா கல்லூரியின் சுகுமார் திசாந்த் (4.00 மீற்றர்) தங்கப் பதக்கத்தையும் ஐ. அபினயன் (3.90 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.

s_thishanth.jpg

இதேவேளை, 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தட்டெறிதல் போட்டியில்  பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த செல்வகுமார் செவ்வானம் (29.46 மீற்றர்) தங்கப் பதக்கத்தை வென்றார்.

20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியை 16 நிமிடங்கள், 07.14 செக்கன்களில் நிறைவுசெய்த மாத்தளை இந்து தேசிய பாடசாலை வீரர் எஸ். துதிஹர்ஷிதன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

கிளிநொச்சி, முழங்காவில் தேசிய பாடசாலை வீரர் சுமன் கீரண் (16:12.63 செக்.) வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

https://www.virakesari.lk/article/154719

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். ஹாட்லியின் மிதுன்ராஜ் புதிய சாதனை ; திகன மாணவர்கள் 3000 மீற்றரில் அசத்தல்

Published By: VISHNU

08 MAY, 2023 | 06:33 PM
image

(நெவில் அன்தனி)

தியகம விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 63ஆவது தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியின் இரண்டாம் நாளான இன்று திங்கட்கிழமை,  பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி வீரர் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

sivakumar_gowshiya__1_.jpg

18 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 3000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் திகன ரஜவெல்லை இந்து தேசிய கல்லூரிக்கு இரண்டு தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.  

premkumar_mithushan.jpg

23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் 43.61 மீற்றர் தூரத்திற்கு தட்டை எறிந்து புதிய போட்டி நிகழ்ச்சி சாதனையை மிதுன்ராஜ் நிலைநாட்டினார்.

இலங்கை இராணுவம் சார்பாக பங்குபற்றி 2010இல் சரித் கப்புகொட்டுவவினால் நிலைநாட்டப்பட்டிருந்த 42.64 மீற்றர் என்ற போட்டி சாதனையையே மிதுன்ராஜ் புதுப்பித்துள்ளார்.

மிதுன்ராஜின் சக கல்லூரி வீரர் பிரேம்குமார் மிதுஷன் (35.32 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

இதேவளை, 18 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 3000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் திகன ரஜவெல்ல இந்து தேசிய கல்லூரிக்கு இரண்டு தங்கப்  பதக்கங்கள்   கிடைத்துள்ளன.

Abinaya_and_Abinesh_hindu_national_schol

ஆண்களுக்கான 3000 மீற்றர் ஓட்டப் போட்டியை 9 நிமிடங்கள் 26.09 செக்கன்களில் நிறைவுசெய்த ரஜவெல்ல இந்து தேசிய கல்லூரி வீரர் எச். அபினேஷ் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

அப் போட்டியில் பதுளை சரஸ்வதி மத்திய கல்லூரி வீரர் கெ. திவாகர் (9:26.39 செக்.) வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

பெண்களுக்கான 3000 மீற்றர் ஓட்டப் போட்டியில் கண்டி திகன, இந்து தேசிய கல்லூரி வீராங்கனை என். அபிநயா தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

இப் போட்டியை அவர் 11 நிமிடங்கள், 19.07 செக்கன்களில் நிறைவு செய்தார்.

இந்தப் போட்டிக்கு பெயர்பெற்ற வலல்ல ஏ. ரட்நாயக்க மத்திய கல்லூரி வீராங்கனையை விட கிட்டத்தட்ட 08 செக்கன்கள் வித்தியாசத்தில் அபிநயா வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற 23 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 10 கிலோ மீற்றர் வேகநடைப் போட்டியில் யாழ். மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் சார்பாக போட்டியிட்ட ரவிக்குமார் கௌஷியா (1:03:01.31 செக்.) வெள்ளிப் பதக்கம் வென்றார்.

https://www.virakesari.lk/article/154799

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மாணவன் மிதுன்ராஜுக்கு ஒரே தினத்தில் 2 தங்கப் பதக்கங்கள்

Published By: VISHNU

08 MAY, 2023 | 06:31 PM
image

(நெவில் அன்தனி)

தியகமவில் நடைபெற்றுவரும் 63ஆவது கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில்   புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றெடுத்த ஹாட்லி கல்லூரி வீரர் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ், குண்டெறிதல் போட்டியிலும் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

இந்த இரண்டு தங்கப் பதக்கங்களையும் திங்கட்கிழமை (08) சில மணித்தியாலங்கள் இடைவெளியில் மிதுன்ராஜ் வென்றெடுத்தமை விசேட அம்சமாகும்.

குண்டெறிதல் போட்டியில் மீதன்ராஜ் 13.06 மீற்றர் தூரத்திற்கு குண்டை எறிந்து தங்கப் பதக்கத்தை  சுவீகரித்தார்.

பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். மாவட்டத்திற்கு மேலும் 4 பதக்கங்கள்

பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். மாவட்டத்திற்கு ஒரு தங்கம் உட்பட 4 பதக்கங்கள் இன்று திங்கட்கிழமை (08) கிடைத்தன.

சாவகச்சேரி இந்து கல்லூரிக்கு ஒரு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கமும் யாழ். பல்கலைக்கழகத்திற்கு ஒரு தங்கப் பதக்கமும், விக்டோரியா கல்லூரிக்கு ஒரு வெள்ளிப் பதக்கமும் கிடைத்தன.

18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாவகச்சேரி இந்து கல்லூரியின் பி. அபிஷாலினி 2.90 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தையும் கே. மாதங்கி 2.30 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.

Ch_hindu_p_abishalini_and_k_mathanky_pol

23 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். பல்கலைக்கழக வீராங்கனை என். டக்சிதா 3.40 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

n_daksitha_jf_uni_u_23_pv_women_gold.jpg

20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் எஸ். கிறிஸ்டிகா 2.60 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

kristiga_-_victoria_college_u_20_pv_wome

கனிஷ்ட தேசிய மட்ட கோலூன்றிப் பாய்தலில் விக்டோரியா கல்லூரி பதக்கம் வென்றது இதுவே முதல் தடவையாகும்.

இது இவ்வாறிருக்க, 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி வீரர் கே. தேவமதுமிதன் (12.68 மீற்றர்) வெண்கலப் பதக்கம் வென்றார்.

20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தட்டெறிதல்  போட்டியில்   நெல்லியடி மத்திய கல்லூரி வீராங்கனை விநாயகமூர்த்தி சங்கீதா (30.48 மீற்றர்) வெண்கலப் பதக்கம் வென்றார்.

v_sangeetha_-_nelliady_central_college__

https://www.virakesari.lk/article/154824

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி கீரனுக்கு 10000 மீற்றரில் தங்கம், மிதுன்ராஜ் 3ஆவது தங்கம், அபினயா 2ஆவது தங்கம்

Published By: DIGITAL DESK 5

09 MAY, 2023 | 04:51 PM
image

(நெவில் அன்தனி)

தியகம விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 63ஆவது கனிஷ்ட தேசிய மெய்வல்லநர் போட்டியில் கிளிநொச்சி முழங்காவில் தேசிய பாடசாலையைச் சேர்ந்த சுமன் கீரன் தங்கப் பதக்கம் சுவீகரித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி வீரர் சுரேந்திரகுமார் மிதுன்ராஜ் 24 மணித்தியாலங்களுக்குள் 3 தங்கப் பதக்கதையும் கண்டி திகன ரஜவெல்ல இந்து தேசிய கல்லூரி வீராங்கனை என். அபிநயா ஒரே நாளில் 2 தங்கப் பதக்கங்களையும் வென்று சாதித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை (09) காலை நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 10000 மீற்றர் ஓட்டப் போட்டியை 35 நிமிடங்கள், 44.37 செக்கன்களில் நிறைவு செய்து  சுமன் கீரன் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

suman_keeran_kilinochchi_muzhankavil_u20

கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் அவர் வென்றெடுத்த முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும். முதலாம் நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் சுமன் கீரன் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.

ஆண்களுக்கான 10000 மீற்றர் ஓட்டப் போட்டியில் புசல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி வீரர் எம். டினுஷன் (35:42. 31 செக்.) வெள்ளிப் பதக்கம் வென்றார்.

10000 மீற்றர் ஓட்டப் போட்டியில் தவறு நிகழ்ந்ததாக செய்யப்பட்ட ஆட்சேபனை மத்தியஸ்தர் குழுவினரால் நிராகரிக்கப்பட்டதால் போட்டி முடிவில் மாற்றம் ஏற்படவில்லை.

file_photo_mithunraj_hammer_throw.jpg

இது இவ்வாறிருக்க, ஹாட்லி கல்லூரி வீரர் தனது 3ஆவது தங்கப் பதக்கத்தை செவ்வாய்க்கிழமை வென்றெடுத்தார். 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் 38.91 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து மிதுன்ராஜ் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

இவர் புதிய போட்டி சாதனையுடன் பரிதி வட்டம் எறிதலில் தங்கம் வென்றதுடன் குண்டெறிதலிலும் தங்கம் வென்றிருந்தார்.

n_abinaya_u18_w_3000_gold_dr_hns.jpg

இதேவேளை, திங்கட்கிழமை மாலை நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 2000 மீற்றர் தடை தாண்டி ஓட்டப் போட்யில் கண்டி திகன, ரஜவெல்ல இந்து தேசிய பாடசாலையைச் சேர்ந்த என். அபினயா வெற்றிபெற்று ஒரே நாளில் தனது 2 தங்கப் பதக்கதை சுவீகரித்தார்.

2000 மீற்றர் தடை தாண்டி ஓட்டப் போட்டியை 7 நிமிடங்கள், 44.37 சென்கன்களில் ஓடிமுடித்து அபிநயா தங்கப் பதக்கத்தை சுவிகரித்தார். அவர் திங்கட்கிழமை காலை நடைபெற்ற 3000 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் வல்வெட்டித்துறை பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த செல்வகுமார் செவ்வானம் (30.76 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். அப் போட்டியில் நுகேகொடை அநுலா வித்தியாலயத்தைச் சேர்ந்த யுதாரா லிந்துலி ஜயவீர புதிய போட்டி சாதனையுடன் (36.79 மீற்றர்) தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

https://www.virakesari.lk/article/154904

  • கருத்துக்கள உறவுகள்

ஒப்பீட்டளவில்… சிங்களவரை விட தமிழர்கள்
அதிக பதக்கங்களை பெற்றுள்ளார்கள் போலுள்ளது. 
வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். ஹாட்லி வீரர் நிதர்ஷன் புதிய சாதனை; முழுப் போட்டியிலும் அதிசிறந்த ஆற்றல் வீரர் மலித் யசிறு

Published By: VISHNU

10 MAY, 2023 | 06:36 PM
image

(நெவில் அன்தனி)

தியகம விளையாட்டரங்கில் நடைபெற்ற 63ஆவது கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி வீரர் விமலதாஸ் நிதர்ஷன் புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

முழுப் போட்டியிலும் அதிசிறந்த ஆற்றல் வெளிப்பாட்டு வீரருக்கான சவால் கிண்ணத்தை காவத்தை மத்திய கல்லூரி வீரர் மலித் யசிறு வென்றெடுத்தார்.

18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில்  சம்மட்டியை 35.19 மீற்றர் தூரத்திற்கு எறிந்த நிதர்ஷன், அதே கல்லூரியைச் சேர்ந்த எஸ். மிதுன்ராஜ் 2019இல் நிலைநாட்டிய 32.85 மீற்றர் என்ற சாதனையை முறியடித்தார்.

அப் போட்டியில் வவுனியா நெலுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தைச் சேர்ந்த கே. சுபிஸ்கரன் (32.37 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார்.

20 வயதுக்குபட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதலில் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி வீரர் கே. தேவமதுமிதன் 39.56 மீற்றர் தூரத்திற்கு சம்மட்டியை எறிந்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

tr_stjoseph_s_athlete_thevamathmithan__1

இதே நிகழ்ச்சியில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி வீரர் ரகுராஜா சஞ்சய் (31.91 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் நெல்லியடி மத்திய கல்லூரி வீரர் ஜெயமோகன் விஷ்னுபிரியன் (29.13 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.

16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதலில் ஹாட்லி கல்லூரி வீரர் உமாஹரன் தருண் (31.60 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வீரர் ஸ்ரீதரன் ஐங்கரன் (27.45 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.

அதிசிறந்த வீரர்

63ஆவது கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் சகல வயது பிரிவுகளுக்குமான அதிசிறந்த வீரருக்கான ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் தலைவர் கிண்ணத்தை காவத்தை மத்திய கல்லூரி வீரர் கே. வி. மலித் யசுறு வென்றெடுத்தார்.

20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் 15.89 மீற்றர் தூரம் பாய்ந்து புதிய போட்டி சாதனை நிலைநாட்டியதன் மூலம் அதிகூடிய தரவரிசைப் புள்ளிகளைப் பெற்று அதிசிறந்த வீரராக மலித் யசுறு தெரிவானார்.

இதனைவிட 16, 18, 20, 23 ஆகிய வயதுக்குட்பட்ட பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அதிசிறந்த வீரர்கள், வீராங்கனைகள் தெரிவுசெய்யப்பட்டு சவால் கிண்ணங்கள் வழங்கப்பட்டன.

இம் முறை கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் மொத்தமாக 17 புதிய போட்டி சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.

ஆண்கள் பிரிவில் 11 புதிய சாதனைகளும் பெண்கள் பிரிவில் 6 புதிய சாதனைகளும் நிலைநாட்டப்பட்டன.

ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் (இலங்கை மெய்வல்லுநர் சங்கம்) தலைவர் மேஜர் ஜெனரல் (ஒய்வுநிலை) பாலித்த பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு வைபவத்தில் இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் ஆனந்த குலசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பிரதான பரிசில்களை வழங்கினார்.

https://www.virakesari.lk/article/154999

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். வீராங்கனைக்கு புதிய சம்மட்டியை அன்பளிப்பு செய்து அன்பின் மகத்துவத்தை உணர்த்திய பெரும்பான்மையின வீராங்கனை

Published By: VISHNU

11 MAY, 2023 | 03:15 PM
image

(நெவில் அன்தனி)

'அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்' வல்வெட்டித்துறை பொலிகண்டி விளையாட்டு வீராங்கனைக்கு புதிய சம்மட்டி ஒன்றை கொட்டாவ விளையாட்டு விராங்கனை அன்பளிப்பு செய்து அன்பின் மகத்துவத்தை உணர்த்தும் இந்தத் திருக்குறளை மெய்ப்பித்துள்ளார்.

16 வயது பாடசாலை மாணவி ஒருவரின் இரக்கக் குணம் கொண்ட இந்த செயல் அனைவருக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.

இந்த உணர்ச்சிபூர்வ, இரக்கக் குணம் கொண்ட நிகழ்வை கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியின்போது  தியகம விளையாட்டரங்கில் காணக்கூடியதாக இருந்தது.

18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் பங்குபற்றிய பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த செல்வகுமார் செவ்வானம் 30.76 மீற்றர் தூரத்திற்கு சம்மட்டியை எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். அதே போட்டியில் பங்குபற்றிய கொட்டாவ, பன்னிப்பிட்டிய வடக்கு தர்மபால மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சானுமி டில்தினி பெரேரா (21.33 மீற்றர்) ஏழாம் இடத்தைப் பெற்றார்.

செவ்வானமோ துண்டுக் கம்பிகளைப் பிணைத்து செய்யப்பட்ட சம்மட்டியைக் கொண்டே வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். சானுமி டில்தினி பெரேரா புதிய உயர் ரக சம்மட்டியைக் கொண்டு 7ஆம் இடத்தையே பெற்றார்.

பொலிகண்டி மாணவியின் திறமையைக் கண்டு ஆச்சரியமடைந்த சானுமி டில்தினி பெரேரா, தனது சம்மட்டியை அவருக்கு அன்பளிப்பு செய்ய தீர்மானித்தார்.

இது குறித்து பெற்றோரிடமும் பயிற்றுநரிடமும் தனது எண்ணத்தை வெளியிட்டார். அவரது தந்தை, 'மகளே உன் விருப்பப்படி செய், உனக்கு நான் புதிய சம்மட்டி ஒன்றை வாங்கித்தருகிறேன்' என்றார்.

இதனை அடுத்து செவ்வானத்தை நோக்கிச் சென்ற சானுமி டில்தினி பெரேரா தனது புதிய, உயர்ரக சம்மட்டியை அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்து எதிர்காலத்தில் வெற்றிவாகை சூடுமாறு வாழ்த்தினார்.

செவ்வானம் சானுமி டில்தினிக்கு நன்றி கூறியதுடன் இந்த உதவியை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என்றார்.

உண்மையான அன்பையும் இரக்கக் குணத்தையும் யாராலும் அடக்கவும் முடியாது, மற்றையவரால் தடுக்கவும் முடியாது என்பதை 16 வயது பள்ளி மாணவி சானுமி டில்மினி பெரேரா இதன் மூலம் முழு இலங்கையருக்கும் உணர்த்தியுள்ளார். 

செல்வகுமார் செவ்வானத்திற்கு வி. ஹரிஹரனும் பாடசாலை பயிற்றுநர் நிதர்ஷனும் பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/155058

  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2023 at 15:36, ஏராளன் said:

தமிழ் பாடசாலை வீரர்கள் வெற்றிபெற்று வரலாறு படைத்தனர்.

மகிழ்ச்சி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.