Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

நடுநிலையான உலகக்கிண்ண மைதானம் தேவை - பாகிஸ்தான் 

Published By: NANTHINI

13 MAY, 2023 | 10:18 AM
image

(நெவில் அன்தனி)

செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தமது பரம வைரிகள் பாகிஸ்தானுக்கு வருகை தர மறுத்தால், தமது அணியின் உலகக் கிண்ணப் போட்டிகளை வரவேற்பு நாடான இந்தியாவுக்கு வெளியே நடுநிலையான விளையாட்டரங்குகளில் நடத்த வெண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் கோரியுள்ளார்.

அக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐசிசி உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் போட்டிக்காக அட்டவணை, மைதானங்கள் ஆகியவற்றை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை வெளியிடத் தவறியுள்ளது.

இதன் காரணமாக உலகக் கிண்ணப் போட்டி தொடர்பான ஏற்பாடுகள் இன்னும் மர்மமாகவே இருந்துவருகின்றது.

pakistan-cricket-board-najam-sethi.jpg

 

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டி ஆரம்மாவதற்கு இன்னும் 6 மாதங்கள் கூட இல்லாத நிலையில் தற்போதைய சூழ்நிலை ஓர் அசாதரணமானதாக தெரிகிறது.

பாகிஸ்தானுக்கு எவ்வாறு இடமளிப்பது என்பதே இந்தியாவின் இந்த தாமதத்திற்கு முக்கிய காரணம் என தோன்றுகிறது. அணு ஆயுத நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் கிரிக்கெட் வெறிகொண்ட நாடுகள் ஆகும்.

 

pakistan-cricket-board.jpg

அது ஒரு புறம் இருக்க, பிரித்தானியாவிடம் இருந்து 1947இல் சுதந்திரம் கிடைத்த பின்னர் இரண்டு நாடுகளும் பல யுத்தங்களில் ஈடுபட்டதுடன் இன்றும் இராஜதந்திர ரீதியான மோதல்களில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறான சூழ்நிலைகளுக்கு மத்தியில் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை இந்தியாவும் வரவேற்பு நாடுகளாக முன்னின்று நடத்தவுள்ளன.

இந்தியா வழக்கமாக பங்கேற்கும்  ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை  செப்டம்பர் மாதம்  பாகிஸ்தான் நடத்துகிறது.

ஆனால், இராஜதந்திர பதற்றங்கள் மற்றம் நாட்டின் சவால்மிக்க பாதுகாப்பு ஆகியவற்றைக் காரணம் காட்டி உலகில் மிகவும் செல்வந்த மற்றும் சக்திவாய்ந்த அமைப்பான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்  சபை பல வருடங்களாக தனது அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புவதற்கு மறுத்துவருகிறது.

board-of-control-for-cricket-in-india-lo

தனது ஆசிய போட்டிகள் பாகிஸ்தானுக்கு வெளியே கொண்டு செல்லப்படவேண்டும் என இந்தியா விரும்புகிறது.

இந்நிலையில் தி இண்டியன் எக்ஸ்ப்ரஸ் பத்திரிகைக்கு வெள்ளிக்கிழமை (12) அளித்த பேட்டியில், உலகக் கிண்ணப் போட்டிக்கு பரஸ்பர ஏற்பாடு அவசியம் என்ற நிபந்தனையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் நஜாம் சேதி முன்வைத்தார்

'இந்தியா இப்போது ஒரு நடுநிலையான இடத்தைப் பெற விரும்பி, கலவை மாதிரியை ஏற்றுக்கொண்டால், உலகக் கிண்ணப் போட்டியிலும் அதே கலவை  மாதிரியை    பயன்படுத்துவோம்,' என அவர் கூறினார்.

தனது உலகக் கிண்ணப் போட்டிகளை பங்களாதேஷிலோ அல்லது இந்தியா ஏற்கும் வேறு எந்த மைதானத்திலோ விளையாட பாகிஸ்தான் தயாராக இருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், இரு நாடுகளுக்கு இடையேயான 'இந்த அரசியல் முறுகலைத் தீர்ப்பதற்கு இது ஒரு முன்மாதிரியாக இருக்கும்' என்று கூறினார்.

இந்தியாவின் பலம்வாய்ந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவின் தலைமையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை இயங்குகிறது.

ஆனால், பாதுகாப்பு ஒரு பிரச்சினை என இனிமேலும் காரணம் கூறமுடியாது என சுட்டிக்காட்டிய கிரிக்கெட் நிருவாகியாக மாறிய முன்னாள் பத்திரிகையாளர் சேதி, இந்திய அணி பாகிஸ்தானுக்கு விஜயம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என இந்திய அரசிடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை வலியுறுத்தவேண்டும் எனவும் தெரிவித்தார்.

சேதியின் இந்தக் கருத்துக்களுக்கு இந்திய கிரிக்கெட் தரப்பிலிருந்து உடனடியாக எவ்வித பதிலும் வரவில்லை.

https://www.virakesari.lk/article/155183

  • Replies 546
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐ.சி.சி. உலகக்கிண்ண கிரிக்கெட் சுப்பர் லீக் அணிகளின் இறுதி நிலை

Published By: VISHNU

15 MAY, 2023 | 04:37 PM
image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கும் அயர்லாந்துக்கும் இடையில் அயர்லாந்தின் செல்ஸ்போர்ட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியுடன் ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் சுப்பர் லீக் சுற்றுப் போட்டி நிறைவுக்கு வந்தது.

Sport.png

கடைசிவரை பரபரப்பாக நடைபெற்ற அப் போட்டியில் பங்களாதேஷ் 5 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரை 2 - 0 என கைப்பற்றியது.

இதனை அடுத்து ஐசிசியினால் வெளியிடப்பட்டுள்ள அங்குரார்ப்பண உலகக் கிண்ண கிரிக்கெட் சுப்பர் லீக் அணிகளுக்கான புள்ளிகள் பட்டியலில் நியூஸிலாந்து முதல் இடத்தைப் பெற்றது.

இந்த வருட ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டி பிரதான தகுதிகாண் சுற்றாக விளையாடப்பட்டு வந்தது.

இந்த லீக் சுற்று முடிவில் அணிகள் நிலையில் முதல் 8 இடங்களைப் பெற்ற அணிகள் இந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேரடியாக விளையாட தகுதிபெற்றன.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாகத் தகுதிபெற வேண்டுமானால் பங்களாதேஷை 3 - 0 என முழுமையான வெற்றி கொள்வது அவசியம் என்பதை அயர்லாந்து அறிந்த நிலையிலேயே அத் தொடரை எதிர்கொண்டது.

துரதிர்ஷ்டவசமாக அயர்லாந்துக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான முதலாவது போட்டி சிரற்ற காலநிலையால் கைவிடப்பட்டது. இதனை அடுத்து உலகக் கிண்ணத்தில் நேரடியாகப் பங்குபற்றும் வாய்ப்பை அயர்லாந்து இழந்ததுடன் தென் ஆபிரிக்காவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

2020 - 2023 பருவகாலத்திற்கான ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் சுப்பர் லீக் இங்கிலாந்துடனான போட்டியுடன் சௌத்ஹாம்ப்டனில் 2020 ஜூலை 30ஆம் திகதி ஆரம்பித்துவைத்த அயர்லாந்து, கடைசியாக ஞாயிறன்று நடைபெற்ற பங்களாதேஷுடனான போட்டியுடன் முடித்து வைத்தது.

இந்தக் காலப்பகுதியில் 24 போட்டிகளில் விளையாடிய நியூஸிலாந்து 16 வெற்றிகள், 5 தோல்விகள், 3 முடிவற்றவை என்ற பேறுபேறுகளுடன் 175 புள்ளிகளைப் பெற்று  முதலாம் இடத்தைப் பெற்றது.

நடப்பு உலக சம்பியன் இங்கிலாந்து 15 வெற்றிகள், 8 தோல்விகள், ஒரு முடிவில்லை என்ற பெறுபேறுகளுடன் 155 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றது.

பங்களாதேஷும் இதே பெறுகளுடன் 155 புள்ளிகளைப் பெற்ற போதிலும் நிகர ஓட்ட வேக அடிப்படையில் 3ஆம் இடத்தைப் பெற்றது.

இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென் ஆபிரிக்கா ஆகியன அடுத்த 5 இடங்களைப் பெற்றதுடன் முதல் 8 இடங்களைப் பெற்ற அணிகள் இந்தியாவில் அக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேரடியாக பங்குபற்ற தகுதிபெற்றன.

9ஆம் இடத்திலிருந்து 13ஆம் இடம்வரை பெற்ற மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, அயர்லாந்து, ஸிம்பாப்வே, நெதர்லாந்து ஆகியவற்றுடன் நேபாளம், ஓமான், ஸ்கொட்லாந்து, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய 5 அணிகள் ஸிம்பாப்வேயில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் விளையாடவுள்ளன.

நேபாளம், ஓமான், ஸ்கொட்லாந்து ஆகிய 3 நாடுகள் ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் சுப்பர் லீக் 2 இலிருந்தும் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியன கிரிக்கெட் உலகக் கிண்ண ப்ளே ஓவ் சுற்றிலிருந்தும் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுக்கு தெரிவாகின.

தகுதிகாண் சுற்று நிறைவில் முதல் இடங்களைப் பெறும் 2 அணிகள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட தகுதிபெறும்.

உலகக் கிண்ண தகுதிகாண் சுற்று ஸிம்பாப்வேயில் ஜூன் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

https://www.virakesari.lk/article/155339

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகக் கிண்ண தகுதிகாண் சுற்று ஜூன் 18 இல் ஆரம்பம் : 'பி' குழுவில் இலங்கை

Published By: NANTHINI

23 MAY, 2023 | 05:38 PM
image

(நெவில் அன்தனி)

ந்தியாவில் இந்த வருடம் நடைபெறவுள்ள ஐ.சி.சி. ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதிபெறவுள்ள கடைசி இரண்டு அணிகளை தீர்மானிக்கவுள்ள தகுதிகாண் சுற்றுக்கான அட்டவணையை ஐ.சி.சி. இன்று வெளியிட்டுள்ளது.

1996 உலக சம்பியன் இலங்கை, முதல் இரண்டு அத்தியாயங்களில் உலக சம்பியனான மேற்கிந்தியத் தீவுகள்  உட்பட 10 நாடுகள் இரண்டு சுற்றுகளைக் கொண்ட தகுதிகாண் போட்டிகளில் விளையாடவுள்ளன. இந்த இரண்டு அணிகளும் வெவ்வேறு குழுக்களில் விளையாடவுள்ளன.

ஸிம்பாப்வேயில் ஹராரே, புலாவாயோ ஆகிய நகரங்களில் 4 மைதானங்களில் இப்போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், சுப்பர் 6 சுற்று முடிவில் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும் 2 அணிகள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னேறும்.

தகுதிகாண் சுற்று ஜூன் 18ஆம் திகதியிலிருந்து ஜூலை 9ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

download.png

அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, ஓமான், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகளுடன் 'பி' குழுவில் இலங்கை இடம்பெறுகிறது.

வரவேற்பு நாடான ஸிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள், நெதர்லாந்து, நேபாளம், ஐக்கிய அமெரிக்கா ஆகியன 'ஏ' குழுவில் விளையாடவுள்ளன.

இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தை புலாவாயோவில் ஜூன் 19ஆம் திகதி சந்திக்கும். தொடர்ந்து ஓமானை ஜூன் 23ஆம் திகதியும், அயர்லாந்தை ஜூன் 25ஆம் திகதியும், ஸ்கொட்லாந்தை ஜூன் 27ஆம் திகதியும் குவீன்ஸ் ஸ்போர்ட்ஸ் கழக மைதானத்தில் இலங்கை எதிர்த்தாடும்.

ஒவ்வொரு குழுவிலும் இடம்பெறும் அணிகள் ஒன்றையொன்று ஒரு தடவை லீக் சுற்றில் எதிர்த்தாடும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் 3 இடங்களைப் பெறும் அணிகள் சுப்பர் 6 சுற்றில் விளையாட தகுதிபெறும்.

ஒரு குழுவிலிருந்து சுப்பர் 6 சுற்றுக்கு முன்னேறும் 3 அணிகள் மற்றைய குழுவிலுள்ள 3 அணிகளை எதிர்த்தாடும். குழுநிலை லீக் போட்டிகளில் ஈட்டிய வெற்றிப் புள்ளிகளுடனேயே அந்த அணிகள் சுப்பர் 6 சுற்றுக்குள் நுழையும்.

சுப்பர் 6 சுற்று முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடுவதுடன் இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டியிலும் விளையாட தகுதிபெறும்.

முதல் சுற்று லீக் போட்டிகள் ஜூன் 27ஆம் திகதி நிறைவடைந்த பின்னர் சுப்பர் 6 சுற்று ஜூன் 27ஆம் திகதியிலிருந்து ஜூலை 7ஆம் திகதி வரை நடைபெறும். இறுதிப் போட்டி ஜூலை 9ஆம் திகதி நடைபெறும்.

download__1_.png

 

ICC MEN’S CRICKET WORLD CUP QUALIFIER FIXTURES (All matches start at 09h00 local time)

Sunday, 18 June
Zimbabwe v Nepal, Harare Sports Club
West Indies v USA, Takashinga Cricket Club

Monday, 19 June
Sri Lanka v UAE, Queen’s Sports Club
Ireland v Oman, Bulawayo Athletic Club

Tuesday, 20 June
Zimbabwe v Netherlands, Harare Sports Club
Nepal v USA, Takashinga Cricket Club

Wednesday, 21 June
Ireland v Scotland, Queen’s Sports Club
Oman v UAE, Bulawayo Athletic Club

Thursday, 22 June
West Indies v Nepal, Harare Sports Club
Netherlands v USA, Takashinga Cricket Club

Friday, 23 June
Sri Lanka v Oman, Queen’s Sports Club
Scotland v UAE, Bulawayo Athletic Club

Saturday, 24 June
Zimbabwe v West Indies, Harare Sports Club
Netherlands v Nepal, Takashinga Cricket Club

Sunday, 25 June
Sri Lanka v Ireland, Queen’s Sports Club
Scotland v Oman, Bulawayo Athletic Club

Monday, 26 June
Zimbabwe v USA, Harare Sports Club
West Indies v Netherlands, Takashinga Cricket Club

Tuesday, 27 June
Sri Lanka v Scotland, Queen’s Sports Club
Ireland v UAE, Bulawayo Athletic Club

Thursday, 29 June
Super 6: A2 v B2, Queen’s Sports Club

Friday, 30 June
Super 6: A3 v B1, Queen’s Sports Club
Playoff: A5 v B4, Takashinga Cricket Club

Saturday, 1 July
Super 6: A1 v B3, Harare Sports Club

Sunday, 2 July
Super 6: A2 v B1, Queen’s Sports Club
Playoff: A4 v B5, Takashinga Cricket Club

Monday, 3 July
Super 6: A3 v B2, Harare Sports Club

Tuesday, 4 July
Super 6: A2 v B3, Queen’s Sports Club
Playoff: 7th v 8th Takashinga Cricket Club

Wednesday, 5 July
Super Six: A1 v B2, Harare Sports Club

Thursday, 6 July
Super Six: A3 v B3, Queen’s Sports Club
Playoff: 9th v 10th Takashinga Cricket Club

Friday, 07 July
Super Six: A1 v B1, Harare Sports Club

Sunday, 09 July
Final, Harare Sports Club

https://www.virakesari.lk/article/155985

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெஸ்சின்டீஸ் தேசிய‌ அணி 

வெளிய‌ போக‌ கூடும்

 

அதே குருப்பில் இருக்கும் சிம்பாவே அணி முத‌ல் இட‌ம் பிடிக்க‌ கூடும்

 

சிம்பாவே அணிய‌ அவ‌ர்க‌ளின் சொந்த‌ ம‌ண்ணில் வெல்வ‌து க‌ஸ்ர‌ம்................சிம்பாவே அணியில் ந‌ல்ல‌ வீர‌ர்க‌ள் இருக்கின‌ம்....................இல‌ங்கை இட‌ம் பிடித்து இருக்கும் குருப்பில் ப‌ல‌மான‌ அணிக‌ள் இருக்குது...............ஏதும் ஒரு ம‌ச்சில் இல‌ங்கை தோத்தா கூட‌ அவை உல‌க‌ கிண்ண‌ போட்டியில் தெரிவாவ‌து ச‌ந்தேக‌ம்😁...........................

  • Like 1
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகக் கிண்ணம் ஒக்டோபர் 5 இல் ஆரம்பம்: இந்தியா, பாக் ஒக்டோபர் 15 இல் மோதல்?

Published By: SETHU

12 JUN, 2023 | 05:55 PM
image
 

எதிர்வரும் ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான உத்தேச போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தயாரித்துள்ளது. 

இந்த அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் (ஐசிசி) இந்திய கிரிக்கெட் சபை பகிர்ந்துகொண்டுள்ளது. அதன்பின், இச்சுற்றுப்போட்டியில் பங்குபற்றும் நாடுகளின் கருத்தை கேட்பதற்காக அந்நாடுகளுக்கு இந்த அட்டவணையை ஐசிசி அனுப்பியுள்ளது என கிரிக்இன்போ இணையத்தளம் தெரிவித்துள்ளது. 

இந்த உத்தேச திட்டத்தின்படி, ஒக்டோபர் 5 ஆம்  திகதி முதல் போட்டியில் நடப்புச் சம்பியனான இங்கிலாந்தும், கடந்த தடவை 2 ஆம் இடம்பெற்ற நியூஸிலாந்தும் அஹமதாபாத்தில் மோதவுள்ளன. இறுதிப்போட்டி இதே மைதானத்தில் நவம்பர் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்திய அணி தனது லீக் போட்டிகளை இந்தியாவின் 9 நகரங்களில் விளையாடவுள்ளது. இந்தியா ஒக்டோபர் 8 ஆம் திகதி நடைபெறும் தனது முதல் போட்டியில் அவுஸ்திரேலியாவை  எதிர்கொள்ளவுள்ளது. 

இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி அஹமதாபாத்தில் ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது. 

பாகிஸ்தான் அணி இந்தியாவை எதிர்கொள்வற்கு முன்னர், தகுதிகாண் சுற்றிலிருந்து தெரிவாகும் இரு அணிகளுடன் ஒக்டோபர், 6, 12 ஆம் திகதிகளில் மோதவுள்ளது. 5 நகரங்களில் பாகிஸ்தானின் லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன.

நவம்பர் 15, 16 ஆம்  திகதிகளில் அரை இறுதிப் போட்டிகள் நடைபெற வாய்ப்புள்ளது. இப்போட்டிகளுக்கான நகரங்கள் குறிப்பிடப்படவில்லை.  

இலங்கை அணி உலகக் கிண்ண சுற்றுப்போட்டிக்குத் தெரிவாகுவதற்கு, ஸிம்பாப்வேயில் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் நடைபெறவுள்ள தகுதிகாண் சுற்றுப்போட்டியில் இறுதிப் போட்டிக்கு தெரிவாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/157573

Posted

ஐபிஎல்லில் பாகிஸ்தான் வீரர்களை அனுமதிக்கவில்லை. உலககிண்ணத்துக்கு பாகிஸ்தானை எப்படி இந்தியா அனுமதிக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலககிண்ண தகுதிகாண் போட்டிகளை ஆரம்பித்து வைத்தார் சிம்பாப்வே ஜனாதிபதி

17 JUN, 2023 | 12:24 PM
image
 

ஐ.சி.சி. 2023 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டிகளுக்கான ஆரம்ப விழாவை சிம்பாப்வே ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக வெள்ளிக்கிழமை (16) ஆரம்பித்து வைத்தார்.

ஐ.சி.சி. 2023 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (18 ) முதல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

FywpuHKXsAk8Oih.jpg

FywpuHJXsBgWdnS.jpg

https://www.virakesari.lk/article/157898

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகக் கிண்ண தகுதிகாண் சுற்று இன்று ஆரம்பம் : இலங்கை சாதிக்குமா ?

18 JUN, 2023 | 06:38 AM
image
 

(நெவில் அன்தனி)

இந்தியாவில் அக்டோபர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள 13ஆவது ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு   தகுதிபெறப் போகும்  கடைசி இரண்டு அணிகள் எவை என்பதைத் தீர்மானிக்கும் தகுதிகாண் சுற்று ஸிம்பாப்வேயில் ஞாயிற்றுக்கிழமை (18) ஆரம்பமாகவுள்ளது.

தகுதிகாண் சுற்றை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடான ஸிம்பாப்வேயை ஆரம்பப் போட்டியில் நேபாளம் எதிர்த்தாடவுள்ளது.

உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இது கடைசி தகுதிகாண் சுற்றாக அமையும் என கருதப்படுகிறது.

ஏனெனில் 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 14 நாடுகள் பங்குபற்றவுள்ளன.

Captain_s_Photocall_-_ICC_Men_s_Cricket_

முதலிரண்டு உலகக் கிண்ண அத்தியாயங்களில் (1975, 1979) சம்பியனான மேற்கிந்தியத் தீவுகள், 1996இல் உலக சம்பியனான இலங்கை ஆகிய இரண்டு நாடுகளும் தகுதிகாண் சுற்றில் வெற்றிபெற்று பிரதான உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட தகுதிபெறும் என பெரிதும் நம்பப்படுகிறது.

ஆனால், இம் முறை முதல் சுற்று, சுப்பர் 6 என இரண்டு சுற்றுகளைக் கொண்டதாக உலகக் கிண்ண தகுதிகாண் சுற்று அமைவதால் இந்த இரண்டு அணிகளும் அழுத்தங்களை எதிர்கொள்ளும் என கருதப்படுகிறது.

உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெறத் தவறினால் அது மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இலங்கைக்கும் பெரும் பின்னடைவாக அமையும். 

எனவே இந்தத் தகுதிகாண் சுற்றில் என்ன விலை கொடுத்தேனும் இறுதிப் போட்டிவரை முன்னெறி உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெற இலங்கையும் மேற்கிந்தியத் தீவுகளும் முயற்சிக்கும் என நமபப்படுகிறது.

இந்த இரண்டு நாடுகளுக்கு சவால் விடுக்கக்கூடிய அணிகளாக ஸிம்பாப்வேயும் அயர்லாந்தும் திகழ்கின்றன.

இந்த நான்கு அணிகளைவிட சர்வதேச கிரிக்கெட் பேரவையில் இணை உறுப்பு நாடுகளாக அங்கம் வகிக்கும் நேபாளம், நெதர்லாந்து, ஓமான், ஸ்கொட்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம், ஐக்கிய அமெரிக்க ஆகிய நாடுகளும் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் விளையாடுகின்றன.

இந்த பத்து நாடுகளும் 2 குழுக்களாக வகுக்கப்பட்டு முதலாம் சுற்றான லீக் சுற்றில் விளையாடவுள்ளன.

ஏ குழுவில் நெதர்லாந்து, நேபாளம், ஐக்கிய அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், ஸிம்பாப்வே ஆகிய அணிகளும்

பி குழுவில் அயர்லாந்து, ஓமான், ஸ்கொட்லாந்து, இலங்கை, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகளும் இடம்பெறுகின்றன.

ஒவ்வொரு குழுவிலும் இடம்பெறும் அணிகள் ஒன்றையொன்று லீக் சுற்றில் எதிர்த்தாடும்

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் 3 இடங்களைப் பெறும் அணிகள் சுப்பர் 6 சுற்றில் விளையாடும். இந்த அணிகள் முதல் சுற்றில் பெற்ற வெற்றிப் புள்ளிகளுடனேயே சுப்பர் 6 சுற்றில் விளையாடும்.

ஏ குழுவில் முதல் 3 இடங்களைப் பெற்ற 3 அணிகளும் பி குழுவில் முதல் 3 இடங்களைப் பெற்ற அணிகளை எதிர்த்தாடும். சுப்பர் 6 சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடுவதுடன் இரண்டு அணிகளும் உலகக் கிண்ணப் போட்டியிலும் விளையாட தகுதிபெறும்.

Captains_pose_ahead_of_the_ICC_Men_s_Cri

 

Squads:

 

Zimbabwe: Craig Ervine (c), Innocent Kaia, Joylord Gumbie, Wessly Madhevere, Sean Williams, Sikandar Raza, Ryan Burl, Clive Madande, Tadiwanashe Marumani, Wellington Masakadza, Luke Jongwe, Bradley Evans, Tendai Chatara, Blessing Muzarabani, Richard Ngarava.

 

Sri Lanka: Dasun Shanaka (c), Kusal Mendis, Pathum Nissanka, Dimuth Karunaratne, Charith Asalanka, Dhananjaya de Silva, Dushan Hemantha, Wanindu Hasaranga, Sadeera Samarawickrama, Chamika Karunaratne, Lahiru Kumara, Dushmantha Chameera, Kasun Rajitha, Maheesh Thikshana, Matheesha Pathirana.

 

West Indies: Shai Hope (c), Shamarh Brooks, Brandon King, Kyle Mayers, Rovman Powell, Keacy Carty, Roston Chase, Yannic Cariah, Jason Holder, Nicholas Pooran, Akeal Hosein, Gudakesh Motie, Keemo Paul, Romario Shepherd, Alzarri Joseph.

 

Ireland: Andrew Balbirnie (c), PJ Moor, Paul Stirling, Harry Tector, Lorcan Tucker, Mark Adair, Curtis Campher, Gareth Delany, George Dockrell, Graham Hume, Josh Little, Andy McBrine, Barry McCarthy, Ben White, Craig Young.

 

Netherlands: Scott Edwards (c), Max O’Dowd, Vikramjit Singh, Michael Levitt, Wesley Barresi, Bas de Leede, Noah Croes, Teja Nidamanuru, Shariz Ahmed, Saqib Zulfiqar, Logan van Beek, Aryan Dutt, Clayton Floyd, Ryan Klein, Vivian Kingma. Reserve: Kyle Klein

 

Nepal: Rohit Paudel (c), Kushal Bhurtel, Aasif Sheikh, Gyanendra Malla, Kushal Malla, Gulsan Jha, Aarif Sheikh, Dipendra Singh Airee, Sandeep Lamichhane, Sompal Kami, Karan KC, Bhim Sharki, Lalit Rajbanshi, Pratish JC, Arjun Saud, Kishor Mahato

 

UAE:  Mohammad Waseem (c), Ethan D'Souza, Ali Naseer, Vriitya Aravind, Rameez Shahzad, Jawadullah, Asif Khan, Rohan Mustafa, Aayan Khan, Junaid Siddique, Zahoor Khan, Sanchit Sharma, Aryansh Sharma, Karthik Meiyappan, Basil Hameed

 

USA: Monank Patel (c), Steven Taylor, Sushant Modani, Saiteja Mukkamalla, Aaron Jones, Abhishek Paradkar, Gajanand Singh, Jasdeep Singh, Nostush Kenjige, Shayan Jahangir, Usman Rafiq, Nisarg Patel, Saurabh Netravalkar, Ali Khan, Kyle Philip.

 

Scotland: Richie Berrington (c), Matthew Cross, George Munsey, Chris McBride, Brandon McMullen, Tom Mackintosh, Jack Jarvis, Michael Leask, Chris Greaves, Mark Watt, Safyaan Sharif, Chris Sole, Adrian Neill, Alasdair Evans, Hamza Tahir.

 

Oman: Zeeshan Maqsood (c), Aqib Ilyas (vc), Jatinder Singh, Kashyap Prajapati, Shoaib Khan, Mohammed Nadeem, Sandeep Goud, Ayaan Khan, Suraj Kumar, Naseem Khushi, Bilal Khan, Kaleemullah, Fayyaz Butt, Jay Odedra, Samay Shrivastav. Reserves: Rafiullah, Adeel Shafique

 

Schedule

Group stage

18 June: Zimbabwe v Nepal, Harare Sports Club; West Indies v USA, Takashinga Cricket Club

19 June: Sri Lanka v UAE, Queen’s Sports Club; Ireland v Oman, Bulawayo Athletic Club

20 June: Zimbabwe v Netherlands, Harare Sports Club; Nepal v USA, Takashinga Cricket Club

21 June: Ireland v Scotland, Queen’s Sports Club; Oman v UAE, Bulawayo Athletic Club

22 June: West Indies v Nepal, Harare Sports Club; Netherlands v USA, Takashinga Cricket Club

23 June: Sri Lanka v Oman, Queen’s Sports Club; Scotland v UAE, Bulawayo Athletic Club

24 June: Zimbabwe v West Indies, Harare Sports Club; Netherlands v Nepal, Takashinga Cricket Club

25 June: Sri Lanka v Ireland, Queen’s Sports Club; Scotland v Oman, Bulawayo Athletic Club

26 June: Zimbabwe v USA, Harare Sports Club; West Indies v Netherlands, Takashinga Cricket Club

27 June: Sri Lanka v Scotland, Queen’s Sports Club; Ireland v UAE, Bulawayo Athletic Club

 

Super Six stage and Playoffs

29 June: Super 6: A2 v B2, Queen’s Sports Club

30 June: Super 6: A3 v B1, Queen’s Sports Club; Playoff: A5 v B4, Takashinga Cricket Club

1 July: Super 6: A1 v B3, Harare Sports Club

2 July: Super 6: A2 v B1, Queen’s Sports Club; Playoff: A4 v B5, Takashinga Cricket Club

3 July: Super 6: A3 v B2, Harare Sports Club

4 July: Super 6: A2 v B3, Queen’s Sports Club; Playoff: 7th v 8th Takashinga Cricket Club

5 July: Super Six: A1 v B2, Harare Sports Club

6 July: Super Six: A3 v B3, Queen’s Sports Club; Playoff: 9th v 10th Takashinga Cricket Club

7 July: Super Six: A1 v B1, Harare Sports Club

 

Final

9 July at the Harare Sports Club

https://www.virakesari.lk/article/157941

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகக் கிண்ண தகுதிகாண் சுற்று: ஆரம்பப் போட்டிகளில் மேற்கிந்தியத்தீவுகள், ஸிம்பாப்வே வெற்றி

19 JUN, 2023 | 06:15 AM
image
 

(நெவில் அன்தனி)

ஸிம்பாப்வேயில் ஞாயிற்றுக்கிழமை (18) ஆரம்பமான ஐசிசி உலகக் கிண்ண ஏ குழுவுக்கான தகுதிகாண் கிரிக்கெட் போட்டிகளில் ஐக்கிய அமெரிக்காவையும் நேபாளத்தையும் முறையே மேற்கிந்தியத் தீவுகளும் ஸிம்பாப்வேயும் வெற்றிகொண்டன.

ஆனால், ஐக்கிய அமெரிக்காவும் நேபாளமும் 250க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்து எதிர்காலத்தில் சிறந்த அணிகளாக தங்களால் முன்னேற முடியும் என்பதை உணர்த்தின.

ஹராரே, ஹைபீல்ட் டக்காஷிங்கா விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் ஐக்கிய அமெரிக்காவை 39 ஓட்டங்களால் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிகொண்டது.

ஆனால் அப் போட்டியில் அமெரிக்கா சார்பாக ஆட்டம் இழக்காமல் சதம் குவித்த கஜானந்த் சிங் முழு கிரிக்கெட் உலகையும் கவர்ந்தார்.

முதல் இரண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் சம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் முதலில் துடுப்பெடுத்தாடி 49.3 ஓவர்களில் சகல விககெட்களையும் இழந்து 297 ஓட்டங்களைக் குவித்தது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் தடவையாக விளையாடிய ஐக்கிய அமெரிக்கா, அவ்வணியை 50 ஓவர்களுக்குள் சகல விக்கெட்களையும் இழக்கச் செய்ததுடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது 250க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்று அசத்தியது.

அப் போட்டியில் ஆரம்ப வீரர்களான ப்றண்டன் கிங் (0), கய்ல் மேயர்ஸ் (2) ஆகிய இருவரையும் இழந்தபோது மேற்கிந்தியத் தீவுகளின் மொத்த எண்ணிக்கை 6ஆவது ஓவரில் 14 ஓட்டங்களாக இருந்தது.

ஆனால், நான்கு துடுப்பாட்ட வீரர்கள் அரைச் சதங்கள் குவித்து மேற்கிந்தியத் தீவுகள் கணிசமான மொத்த ஓட்டங்களைப் பெற உதவினர்.

ஜோன்சன் சார்ள்ஸ் (7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 66), ஷாய் ஹோப் (6 பவுண்டறிகள். ஒரு சிக்ஸுடன் 54), ரொஸ்டன் சேஸ் (4 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 55), ஜேசன் ஹோல்டர் (2 பவண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 56) ஆகியோர் அரைச் சதங்கள் குவித்தனர்.

அத்துடன் நிக்கலஸ் பூரன் 43 ஓட்டங்களைப் பெற்றார்.

ஜோன்சன் சார்ள்ஸ், ஷாய் ஹோப் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 115 ஓட்டங்களையும் நிக்கலஸ் பூரண், ரொஸ்டன் சேஸ் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களையும் ரொஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களையும் பகிர்ந்தனர்.

அமெரிக்க பந்துவீச்சில் ஸ்டீவன் டெய்லர் 53 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சௌராப் நேத்ராவோல்கர் 53 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும கய்ல் பிலிப் 56 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்கா 50 ஓவர்களில் 7 விக்கெட்ளை இழந்து 258 ஓட்டங்களைக் குவித்தது.

21ஆவது ஓவரில் அமெரிக்காவின் 5ஆவது விக்கெட் வீழந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 97 ஓட்டங்களாக இருந்தது.

எனினும், கஜானந்த் சிங் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 109 பந்துகளில் 8 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்களைக் குவித்து அணியை கௌரவமான நிலையில் இட்டார்.

ஷயன் ஜஹங்கிருடன் 6ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களையும் நொஸ்துஷ் கெஞ்சிகேயுடன் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் 76 ஓட்டங்களையும் கஜானந்த் சிங் பகிர்ந்தார்.

ஷயன் ஜஹங்கிர் 39 ஓட்டங்களையும் நொஸ்துஷ் கெஞ்சிகே ஆட்டம் இழக்காமல் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் கய்ல் மேயர்ஸ் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அல்ஸாரி ஜோசப் 68 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: ஜேசன் ஹோல்டர்.

 

ஸிம்பாப்வேக்கு இலகுவான வெற்றி

 

ஐசிசி உலகக் கிண்ண தகுதி சுற்றுக்கான முதலாவது போட்டியில் அணித் தலைவர் க்ரெய்க் ஏர்வின், சோன் வில்லியம்ஸ் ஆகிய இருவர் குவித்த அபார சதங்களின் உதவியுடன் நேபாளத்தை 8 விக்கெட்களால் மிக இலகுவாக ஸிம்பாப்வே வெற்றிகொண்டது.

எவ்வாறாயினும் இந்தப் போட்டியில் நேபாளம் 290 ஓட்டங்களைக் குவித்தது பாராட்டுக்குரியதாகும்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நேபாளம் 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 290 ஓட்டங்களைக் குவித்தது.

ஆரம்ப வீரர்களான குஷல் புர்டெல் (13 பவுண்டறிகள், 2  சிக்ஸ்களுடன்   99), ஆசிப் ஷெய்க் (7 பவுண்டறிகளுடன் 66) ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்ததுடன் முதலாவது விக்கெட்டில் 171 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நேபாள ஜோடி ஒன்று பகிர்ந்த சகல விக்கெட்களுக்குமான அதிகூடிய இணைப்பாட்டம் இதுவாகும்.

தொடர்ந்து குஷால் மல்லா (41), ரோஹித் பௌடெல் (31) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து நேபாளத்தை மேலும் பலப்படுத்தினர்.

பந்துவீச்சில் ரிச்சர்ட் எங்கராவா 42 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் வெலிங்டன் மஸக்கட்ஸா 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 44.1 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 291 ஓட்டங்களைக் குவித்து 8 விக்கெட்களால் வெற்றிபெற்றது.

ஆரம்ப வீரர் ஜொய்லோட் கும்பி (25) ஆட்டம் இழந்த பின்னர் 2ஆவது விக்கெட்டில் க்றெய்க் ஏர்வின்,  வெஸ்லி மதேவியர் (32) ஆகிய இருவரும் 82 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். (127 - 2 விக்.)

அதனைத் தொடர்ந்து ஏர்வினும் சோன் வில்லியம்ஸும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 164 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை இலகுவாக்கினர்.

க்ரெய்க் ஏர்வின் 128 பந்துகளில் 15 பவுண்டறிகள், 1 ஒரு சிக்ஸ் உட்பட 121 ஓட்டங்களுடனும் சோன் வில்லியம்ஸ் 70 பந்துகளில் 13 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 102 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

ஆட்டநாயகன்: க்ரெய்க் ஏர்வின்.

Sean_Williams_of_Zimbabwe_bats_during_th

Craig_Ervine_of_Zimbabwe_bats_during_the

Craig_Ervine_of_Zimbabwe_celebrates_reac

Aasif_Sheikh_of_Nepal_bats_during_the_IC

Richard_Ngarava_of_Zimbabwe_celebrates_w

Gajanand_Singh_of_USA_celebrates_his_cen

Kushal_Bhurtel_of_Nepal_bats_during_the_

Shai_Hope_of_West_Indies_bats_during_the

 

Gajanand_Singh_of_USA_bats_during_the_IC

Roston_Chase_of_West_Indies_bats_during_

Johnson_Charles_of_West_Indies_bats_duri

https://www.virakesari.lk/article/158008

Posted

உலக கிண்ணம் போட்டிகளை மாற்றுமாறு பாகிஸ்தான் வலியுறுத்தல்

உலக கிண்ணம் போட்டிகளை மாற்றுமாறு பாகிஸ்தான் வலியுறுத்தல்

13 ஆவது உலக கிண்ணம் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் நடக்கிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியின் மேலதிக அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இதற்கிடையே உலக கிண்ணம் கிரிக்கெட் போட்டிக்கான வரைவு அட்டவணை சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதன்படி தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து மோதுகின்றன.

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவை அக்டோபர் 8 ஆம் திகதி சென்னையில் மோதுகின்றது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் ஆட்டம் அக்டோபர் 15 ஆம் திகதி அகமதாபாத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் உலக கிண்ணம் கிரிக்கெட் போட்டி நடைபெறும் 2 இடங்களை மாற்ற வேண்டும், என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.), பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் அணி விளையாடும் 2 ஆட்டங்களின் இடத்தை மாற்றுமாறு கூறி இருந்தாலும் அது எந்த இடம் என்று தெரியவில்லை. அகமதாபாத்தில் விளையாட விருப்பம் இல்லை என்று பாகிஸ்தான் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

பாகிஸ்தான் அணி ஐதராபாத், அகமதாபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா ஆகிய 5 இடங்களில் விளையாட போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகக் கிண்ண தகுதிகாண் : சகலதுறைகளிலும் திறமையை வெளிப்படுத்திய இலங்கைக்கு அமோக வெற்றி

19 JUN, 2023 | 09:08 PM
image
 

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிராக புலாவாயோ குவீன்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை நடைபெற்ற பி குழுவுக்கான ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் 175 ஓட்டங்களால் இலங்கை அமோக வெற்றியீட்டியது.

பெத்தும் நிஸ்ஸன்க, திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், வனிந்து ஹசரங்கவின் 6 விக்கெட் குவியல் என்பன இலங்கையின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 355 ஓட்டங்களைக் குவித்தது.

ஸிம்பாப்வேயில் தற்போது நடைபெற்றுவரும் 10 நாடுகளுக்கு இடையிலான உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் அணி ஒன்றினால் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

பெத்தும் நிஸ்ஸன்கவும் திமுத் கருணாரட்னவும் 17 ஓவர்களில் 95 ஓட்டங்களைப் பகிர்ந்து வலுவான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

தொடர்ந்து பெத்தும் நிஸ்ஸன்கவுடன் ஜோடி சேர்ந்த குசல் மெண்டிஸ் 2ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்ததுடன், சதீர சமரவிக்ரமவுடன் 3ஆவது விக்கெட்டில் மேலும் 105 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மேலும் பலப்படுத்தினார்.

தொடர்ந்து சதீர சமரவிக்ரமவும் சரித் அசலன்கவும் 4ஆவது விக்கெட்டில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

தசுன் ஷானக்க, தனஞ்சய டி சில்வா ஆகிய இருவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியபோதிலும் சரித் அசலன்கவும் வனிந்து ஹசரங்கவும் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 20 பந்துகளில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கைக்கு உரமூட்டினர்.

பந்துவீச்சல் அலி நாசர் 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 39 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 180 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

அணித் தலைவர் முஹம்மத் வசீம் (39), ரொஹான் முஸ்தபா (12) ஆகிய இருவரும் 33 பந்துகளில் 36 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

தொடர்ந்து வசீமும் விரித்தியா அரவிந்தும் 2ஆவது விக்கெட்டில் 46 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சுமாரான உற்சாகத்தைக் கொடுத்தனர்.

ஆனால், வசீம், பாசில் ஹமீத் (0), ஆசிவ் கான் (8), விரித்யா அரவிந்த் (39) ஆகிய நால்வரும சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர்.

எனினும் ரமீஸ் ஷாஸாத், அலி நசீர் ஆகிய இருவரும் எதிர்த்தாடுவதே உகந்தது என்பதை உணர்ந்து துணிச்சலுடன் துடுப்பெடுத்தாடினர். ஆனால் அவர்கள் இருவரும் 6ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது அலி நசீரின் விக்கெட்டை மதீஷ் தீக்ஷன நேரடியாகப் பதம் பார்த்து அவர்களது இணைப்பாட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தார்.

அந்த விக்கெட்டுடன் கடைசி 5 விக்கெட்கள் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன.

இலங்கை பந்துவீச்சில் மிகத் துல்லியமாக பந்துவீசிய வனிந்து ஹசரங்க டி சில்வா ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 8 ஓவர்களில் 24 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 6 விக்கெட்களைக் கைப்பற்றினார். இந்த தகுதிகாண் சுற்றில் பதிவான அதிசிறந்த பந்துவீச்சு பெறுதி இதுவாகும்.

 

Pathum_Nissanka_sl_vs_uae.jpg

sadeera_samarwickrama_sl_vs_uae.jpg

kusal_mendis_sl_vs_uae.jpg

wanindu_hasarnga_sl_vs_uae.jpg

dimuth_karunaratne_sl_vs_uae.jpg

https://www.virakesari.lk/article/158105

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகக் கிண்ண தகுதிகாண்: அயர்லாந்தை அசத்தியது டுலீப் மெண்டிஸ் பயிற்றுவிக்கும் ஓமான்

20 JUN, 2023 | 05:56 AM
image
 

(நெவில் அன்தனி)

புலாவாயோ அத்லெட்டிக் க்ளப் விளையாடடரங்கில் திங்கட்கிழமை (19) நடைபெற்ற பி குழுவுக்கான ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் அயர்லாந்தை முற்றிலும் எதிர்பாராத விதமாக 5 விக்கெட்களால் ஓமான் வெற்றிகொண்டது.

ஓமான் கிரிக்கெட் அணியின் பயிற்றுநராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் டுலீப் மெண்டிஸ் செயற்படுகிறார்.

'இந்த வருட உலகக் கிண்ண தகுதிகாண் கிரிக்கெட் போட்டியில் எமது அணி தாக்கத்தை ஏற்படுத்தும்' என தகுதிகாண் சுற்றுக்கு முன்னர் டுலீப் மெண்டிஸ் தெரிவித்திருந்தார்.

அதற்கு அமைய தகுதிகாண் சுற்றில் தனது முதல் போட்டியிலேயே அயர்லாந்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி ஓமான் அபார வெற்றியை ஈட்டியது.

அயர்லாந்துக்கு எதிராக விளையாடிய முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலேயே ஓமான் வெற்றிபெற்றது மற்றொரு விசேட அம்சமாகும்.

காஷியப் ப்ரஜாபதி, ஆக்கிப் இலியாஸ், அணித் தலைவர் ஸீஷான் மக்சூத் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் மற்றும் அவர்களிடையே பகிரகப்பட்ட இணைப்பாட்டங்கள் ஓமானின் எதிர்பாராத வெற்றிக்கு வழிவகுத்தன.

பெங்களூர் எம். சின்னசுவாமி விளையாட்டரங்கில் 12 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை எதிர்பாராத விதமாக வெற்றிகொண்ட அயர்லாந்து, இன்றைய தகுதிகாண் போட்டியில் ஓமானிடம் முற்றிலும் எதிர்பாராத விதமாக தோல்வி அடைந்தது.

அயர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 282 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான், 48.1 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 285 ஓட்டங்களைக் குவித்து வெற்றியீட்டியது.

ஜட்டிந்தர் சிங் (1) மூன்றாவது ஓவரில் ஆட்டம் இழந்தபோதிலும் காஷியப் ப்ரஜாபதி, ஆக்கிப் இலியாஸ், ஸீஷான் மக்சூத், மொஹமத் நடீம் ஆகியோர் திறமையாகத் துடுப்பெடுத்தாடி ஓமானின் வெற்றியை உறுதிசெய்தனர்.

காஷியப் ப்ரஜாபதி 72 ஓட்டங்களையும் ஆக்கிப் இலியாஸ் 52 ஓட்டங்களையும் பெற்றதுடன் 3ஆவது விக்கெட்டில் 94 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். தொடர்ந்து ப்ரஜாபதி, மக்சூத் ஆகிய இருவரும் இணைந்து 3ஆவது விக்கெட்டில் மேலும் 63 ஓட்டங்களைப் பகிர்ந்;தனர்.

மக்சூத் அத்துடன் நின்றுவிடாமல் மேலும் 56 ஓட்டங்களை 4ஆவது விக்கெட்டில் மொஹமத் நடீமுடன் பகிர்ந்தார்.

மக்சூத் 59 ஓட்டங்களையும் நடீம் ஆட்டம் இழக்காமல் 46 ஓட்டங்களையும் அயான் கான் 21 ஓட்டங்களையும் ஷொயெப் கான் ஆட்டம் இழக்காமல் 19 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜொஷ் லிட்ல், மார்க் அடயார் ஆகிய இருவரும் தலா 47 ஓட்டங்களுக்கு தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அயர்லாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 281 ஓட்டங்களைக் குவித்தது.

போல் ஸ்டேர்லிங் (23), அண்டி மெக்பேர்னி (20) ஆகிய இருவரும் 51 ஓட்டங்களைப் பகிர்ந்து  நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், இருவரும் அதே எண்ணிக்கையில் ஆட்டம் இழந்தனர்.

அணித் தலைவர் அண்டி பெல்பேர்னி (7) ஆடுகளம் நுழைந்த சொற்ப நேரத்தில் ஆட்டம் இழந்தார்.

ஹெரி டெக்டர் (52), லோக்கன் டக்கர் (26) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்து வீழ்ச்சியை சீர்படுத்தினர்.

தொடர்ந்து ஹெரி டெக்டர், ஜோர்ஜ் டொக்ரெல் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 79 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு வலு சேர்த்தனர்.

ஜோர்ஜ் டொக்ரெல் 89 பந்களில் 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 91 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

கெரத் டிலேனி 20 ஓட்டங்களையும் மார்க் அடயார் 15 ஓட்டங்களையும் க்றஹாம் ஹியூம் ஆட்டம் இழக்காமல் 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் பிலால் கான் 64 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பிலால் கான் 65 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

1906_Kashyap_Prajapati_of_Oman_vs_irelan

1906_Aaqib_IIyas_of_Oman_vs_ire.jpg

1906_oman_team.jpg

https://www.virakesari.lk/article/158106

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிக்கந்தர் ராஸாவின் சகலதுறை ஆற்றல்களுடன் நெதர்லாந்தை துவம்சம் செய்தது ஸிம்பாப்வே

20 JUN, 2023 | 10:02 PM
image
 

(நெவில் அன்தனி)

நெதர்லாந்துக்கு எதிராக ஹராரே விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் ஏ குழு போட்டியில் சிக்கந்தர் ராஸா வெளிப்படுத்திய சகலதுறை ஆற்றல்களின் பலனான ஸிம்பாப்வே 5 விக்கெட்களால் இலகுவாக வெற்றியீட்டியது.

உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் ஸிம்பாப்வே ஈட்டிய இரண்டாவது வெற்றி இதுவாகும்.

நெதர்லாந்து முதலாவதாக துடுப்பெடுத்தாடியபோது 4 விக்கெட்களை வீழ்த்திய சிக்கந்தர் ராஸா, அதன் பின்னர் 54 பந்துகளில் ஆட்டம் இழக்கமால் 102 ஓட்டங்களைக் குவித்து ஸிம்பாப்வேயின் வெற்றியை இலகுவாக்கினார். ஸிம்பாவ்வே வீரர் ஒருவர் குவித்த அதிவேக சதம் இதுவாகும்.

நேபாளத்திற்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் சோன் வில்லியம்ஸ் 70 பந்துகளில் குவித்த சதமே இதற்கு முன்னர் ஸிம்பாப்வே வீரர் ஒருவரால் குவிக்கப்பட்ட அதிவேக சதமாகும்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 50 ஓவர்களில் 6 விக்கெட்களை  இழந்து 315 ஓட்டங்களைக் குவித்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகூடிய மொத்த எண்ணிக்கையை சமப்படுத்தியது. இதற்கு முன்னர் பேர்மூடாவுக்கு எதிராக நெதர்லாந்து  2007இல் 8 விக்கெட்களை இழந்து 315 ஓட்டங்களைக் குவித்திருந்தது.

அத்துடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் நெதர்லாந்து 300க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்தது இது ஐந்தாவது தடவையாகும்.

நெதர்லாந்து துடுப்பாட்டத்தில் விக்ரம்ஜித் சிங் 83 ஓட்டங்களையும் மெக்ஸ் ஓ'டவ்ட் 59 ஓட்டங்களையும் பெற்றதுடன் ஆரம்ப விக்கெட்டில் 120 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். தொடர்ந்து 3ஆவது விக்கெட்டில் விக்ரம்ஜித், அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் ஆகிய இருவரும் 96 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

ஸ்கொட் எட்வேர்ட்ஸ் 83 ஓட்டங்களையும் மத்திய பின்வரிசையில் சக்கிப் ஸுல்பிகார் ஆட்டம் இழக்காமல் 34 ஓட்டங்களையும் பெற்றனர். அத்துடன் உதிரிகளாக 34 ஓட்டங்கள் ஸிம்பாப்வேக்கு கிடைத்தது.

நெதர்லாந்து திறமையாகத் துடுப்பெடுத்தாடியதைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய ஸிம்பாப்வே பந்துவீச்சில் 8 வீரர்களைப் பயன்படுத்தியது. அவர்களில் சிக்கந்தர் ராஸா 55 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் றிச்சர்ட் எங்கராவா 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

316 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 40.5 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 319 ஓட்டங்களைக் குவித்து இலகுவாக வெற்றியீட்டியது.

மூன்று சிறப்பான இணைப்பாட்டங்ள் அவ்வணியின் வெற்றியை இலகுவாக்கின.

ஜோய்லோர்ட் கம்பீ (40), அணித் தலைவர் க்ரெய்க் ஏர்வின் (50) ஆகிய இருவரும் முதலாவது விக்கெட்டில் 80 ஒட்டங்களையும் கம்பீ, சோன் வில்லியம்ஸ் (91) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 62 ஓட்டங்களையும் பகிர்ந்தனர்.

தொடர்ந்து சோன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராஸா ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 84 ஓட்டங்களையும் சிக்கந்தர் ராஸா, ரெயான் பேர்ல் (16 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 73 ஓட்டங்களையும் பகிர்ந்தனர்.

இந்த வெற்றியுடன் ஏ குழுவில் ஸிம்பாப்வே 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று அணிகள் நிலையில் முதலிடத்தில் இருக்கிறது.

2006_Vikram_Singh__Netherlands_vs_Zimbab

2006_Sean_Williams__Zimbabwe_vsNetherlan

2006_Sikandar_Raza_of_Zimbabwe_vs__nethe

https://www.virakesari.lk/article/158190

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐக்கிய அமெரிக்காவை வீழ்த்தியது நேபாளம்

21 JUN, 2023 | 06:05 AM
image
 

(நெவில் அன்தனி)

ஹராரே ஹைபீல்ட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற ஏ குழுவுக்கான மற்றொரு ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவை 6 விக்கெட்களால் நேபாளம் வெற்றிகொண்டது.

ஸிம்பாப்வேயிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தோல்வி அடைந்த நேபாளம் முதலாவது வெற்றிப் புள்ளிகளை செவ்வாய்க்கிழமை பெற்றுக்கொண்டது.

ஐக்கிய அமெரிக்கா சார்பாக கராச்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஷயன் ஜஹாங்கிர் குவித்த சதம் ஈற்றில் பலனற்றுப் போனது.

நேபாளத்தின் வெற்றியில் கரண் காத்ரி சேத்ரியின் 4 விக்கெட் குவியல், பிம் ஷார்க்கி குவித்த ஆட்டம் இழக்காத அரைச் சதம் என்பன முக்கிய பங்காற்றின.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்கா 49 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 207 ஓட்டங்களைப் பெற்றது.

ஷயன் ஜஹாங்கிர் தனி ஒருவராக திறமையாகத் துடுப்பெடுத்தாடி 79 பந்துகளில் 10 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் சரியாக 100 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரைவிட சுஷாந்த் மொடானி (42), கஜானந்த சிங் (26) ஆகிய இருவரே 25 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் கரன் காத்ரி சேத்ரி 3 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 9 ஓவர்களில் 33 ஒட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் குல்சான் ஜா 52 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

208 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் 43 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

துடுபாட்டத்தில் பிம் ஷார்க்கி நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் 77 ஓட்டங்களையும் குஷால் புர்ட்டெல் 39 ஓட்டங்களையும் திப்பேந்த்ரா சிங் அய்ரீ ஆட்டம் இழக்காமல் 39 ஓட்டங்களையும் பெற்றனர்.

2006_Karen_KC_of_Nepal_vs__USA.jpg

2006_Bhim_Sharki_of_Nepal_vs_USA.jpg

2006_Shayan_Jahangir_of_USA_vs_Nepal_and

https://www.virakesari.lk/article/158192

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அயர்லாந்தை கடைசிப் பந்தில் அதிரவைத்தது ஸ்கொட்லாந்து

22 JUN, 2023 | 06:09 AM
image

(நெவில் அன்தனி)

அயர்லாந்துக்கு எதிராக புலாவாயோ குவின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் புதன்கிழமை (21) நடைபெற்ற மிகவும் பரபரப்பான ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண்  பி குழு  போட்டியின் கடைசிப் பந்தில் ஸ்கொட்லாந்து 1 விக்கெட்டால் வெற்றியீட்டியது.

அயர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட கடினமான 287 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நொக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 289 ஒட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

தகுதிகாண் சுற்றில் அயர்லாந்து  இரண்டாவது தோல்வியைத் தழுவியதால் சுப்பர் 6 சிக்ஸ் சுற்றக்கு செல்லும் அதன் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. அயர்லாந்து தனது ஆரம்பப் போட்டியில் ஓமானிடம் தோல்வி அடைந்திருந்தது,

கடைசி ஓவரில் ஸ்கொட்லாந்தின் வெற்றிக்கு 8 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

மார்க் அடயார் வீசிய கடைசி ஓவரின் முதல் 2 பந்துகளில் மைக்கல் லீஸ்க் 5 (4, 1) ஓட்டங்களைப் பெற்றார். ஆனால் அடுத்த பந்தில் சப்யான் ஷெரிப்பின் விக்கெட்டை அடயார் வீழ்த்தினார். (284 - 9 விக்.). 4ஆவது பந்தில் ஓட்டம் பெறப்படவில்லை. வெற்றிக்கு இன்னும் 3 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 5ஆவது பந்தில் இல்லாத உறுதி ஓட்டம் ஒன்றை ஸ்கொட்லாந்து கடும் பிரயத்தனத்துடன் பூர்த்தி செய்தது. கடைசிப் பந்தை பதற்றத்திற்கு மத்தியில் எதிர்கொண்ட லீஸ்க், விசுக்கி அடித்து பவுண்டறியாக்கி ஸ்கொட்லாந்தின் வெற்றியை உறுதிசெய்தார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அயர்லாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றது.

அயர்லாந்தின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. அதன் முதல் 4 விக்கெட்கள் வெறும் 33 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது. 5ஆவது விக்கெட் வீழ்த்தப்பட்டபோது 19ஆவது ஓவரில் அதன் மொத்த எண்ணிக்கை 70 ஓட்டங்களாக இருந்தது.

ஆனால், கேர்ட்டிஸ் கெம்ஃபரும் ஜோர்ஜ் டொக்ரெல்லும் 6ஆவது விக்கெட்டில் 136 பெறுமதிமிக்க ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்தனர்.

கெம்ஃபர் 108 பந்துகளில் 9 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 120 ஓட்டங்களைக் குவித்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் பெற்ற கன்னிச் சதம் இதுவாகும்.

அவருக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய டொக்ரெல் 69 ஓட்டங்களைக் குவித்தார்.

அவர்கள் இருவரை விட ஆரம்ப வீரர் அண்டி மெக்பேர்னி 32 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ப்ரெண்டன் மெக்முலென் 34 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து சார்பாக 2ஆவது விக்கெட்டில் ப்ரெண்டன் மெக்முலென் கிறிஸ்டோபர் மெக்ப்றைட் ஆகிய இருவரும் 50 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். மெக்ப்றைட் 56 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் விக்கெட்கள் சீரான இடைவெளியல் வீழ்த்தப்பட்டன.

36ஆவது ஓவரில் 7ஆவது விக்கெட் வீழ்த்தப்பட்டபோது ஸ்கொட்லாந்தின் மொத்த எண்ணிக்கை 152 ஓட்டங்களாக இருந்தது. அப்போது அயர்லாந்தைவிட 136 ஓட்டங்கள் பின்னிலையில் ஸ்கொட்லாந்து இருந்தது.

ஆனால், மைக்கல் லீஸ்க் இரண்டு முக்கிய இணைப்பாட்டங்களில் பங்காற்றி ஸ்கொட்லாந்து வெற்றிபெறுவதை உறுதிசெய்தார். 8ஆவது விக்கெட்டில் மார்க் வொட்டுடன் 82 ஓட்டங்களைப் பகிர்ந்த மைக்கல் லீஸ்க், 9ஆவது விக்கெட்டில் சப்யான் ஷெரிபுடன் 50 ஓட்டங்களைப் பகிர்ந்தார். ஆனால், ஷெரிப் 6 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.

மைக்கல் லீஸ் 61 பந்துகளில் 9 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 91 ஓட்டங்களையும் மார்க் வொட் 47 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மார்க் அடயார் 57 ஓட்டங்களுக்கு 3 விக்கெடகளையும் ஜோர்ஜ் டொக்ரெல் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜொஷ் லிட்ல் 73 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/158280

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகக் கிண்ண தகுதிகாணில் ஓமானுக்கு இரண்டாவது வெற்றி

21 JUN, 2023 | 09:57 PM
image
 

(நெவில் அன்தனி)

ஸிம்பாப்வேயில் நடைபெற்றுவரும் ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் பி குழுவில் இடம்பெறும் டுலீப் மெண்டிஸின் பயிற்றுவிப்பிலான ஓமான் இரண்டாவது வெற்றியை ஈட்டி சுப்பர் 6 சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை சிறுக சிறுக அதிகரித்துவருகிறது.

அயர்லாந்துக்கு எதிராக முற்றிலும் எதிர்பாராத வெற்றியை ஈட்டிய ஓமான், புதன்கிழமை (21) நடைபெற்ற போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தை 5 விக்கெட்களால் வெற்றிகொண்டது.

ஆக்கிப் இலியாஸ், உபாதைக்கு மத்தியில் ஷொயெப் கான், மொஹமத் நடீம் ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் அயான் கானின் சிறப்பான துடுப்பாட்டமும் ஓமான் வெற்றிபெற உதவின.

புலாவாயோ அத்லெட்டிக் விளையாட்டரங்கில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஐக்கிய அரபு இராச்சியம் 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 227 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப வீரர்கள் இருவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தபோதிலும் விரித்தியா அரவிந்த் (49), ரமீஷ் ஷாஹ்ஸாத் (38), அசிப் கான் (27) ஆகியோர் திறமையாகத் துடுப்பெடுத்தாடியதன் பலனாக ஐக்கிய அரபு இராச்சியம் 29ஆவது ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதனிடையே விரித்தியா அரவிந்த், ரமீஷ் ஷாஹ்ஸாத் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 87 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

தொடரந்து தடுமாற்றத்திற்கு மத்தியில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 32ஆவது ஓவரிலிருந்து விக்கெட்களை சீரான இடைவெளியில் இழந்த வண்ணம் இருந்தது. எனினும் 8ஆம் இலக்க வீரர் அயான் அப்ஸால் கான் திறமையாகத் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் 58 ஓட்டங்களைப் பெற்று தனது அணியை கௌரவமான நிலையில் இட்டார்.

பந்துவீச்சில் ஜெய் ஓடேத்ரா 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பிலான் கான் 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பயாஸ் பட் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் 46 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 228 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஐக்கிய இராச்சியத்தைப் போன்றே முதல் 2 விக்கெட்களைக் குறைந்த ஓட்டங்களுக்கு இழந்த ஓமான், பின்னர் திறமையாகத் துடுப்பெடுத்தாடி வெற்றியீட்டியது.

ஆக்கிப் இலியாஸ் (53), ஷொயெப் கான் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 100 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது இலியாஸ் ஆட்டம் இழந்தார்.

மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 2 ஓட்டங்கள் சேர்ந்தபோது ஷொயெப் கான் 47 ஓட்டங்கள் பெற்ற நிலையில் தசை இழுப்பு காரணமாக வீரர்கள் அறைக்கு திரும்பினார்.

அணித் தலைவர் ஸீஷான் மக்சூத் 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

எனினும் மொஹமத் நடீம், அயான் கான் (41) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 76 ஓட்டங்களைப் பகிர்ந்து தமது அணி வெற்றி இலக்கை அண்மிக்க உதவினர்.

கான் ஆட்டம் இழந்த பின்னர் மீண்டும் துடுப்பெடுத்தாட வந்த ஷொயெப் கானுடன் மொஹமத் நடீம் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 30 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றி இலக்கை அடைய ஓமானுக்கு உதவினார்.

ஷொயெப் கான் 52 ஓட்டங்களுடனும் மொஹமத் நடீம் 50 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் ஜுனைத் சித்தீக், ரொஹான் முஸ்தபா ஆகிய இருவரும் தலா 31 ஓட்டங்களுக்கு தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

2106_Aayan_Khan_of_United_Arab_Emirates_

2106_Aaqib_Ilyas_of_Oman_vs_United_Arab_

2106_Ayaan_Khan_of_Oman_vs_United_Arab_E

https://www.virakesari.lk/article/158276

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேற்கிந்தியத் தீவுகளுக்கு 2ஆவது வெற்றி : நெதர்லாந்துக்கு முதலாவது வெற்றி

23 JUN, 2023 | 06:09 AM
image
 

(நெவில் அன்தனி)

ஸிம்பாப்வேயில் நடைபெற்றுவரும் ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் ஏ குழுவில் இடம்பெறும் மேற்கிந்தியத் தீவுகள் தனது இரண்டாவது வெற்றியையும் நெதர்லாந்து தனது முதலாவது வெற்றியையும் வியாழக்கிழமை (22) ஈட்டிக்கொண்டன.

நேபளாத்திற்கு எதிராக ஹராரே விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் அணித் தலைவர் ஷாய் ஹோப், நிக்கலஸ் பூரண் ஆகிய இருவரும் குவித்த சதங்களின் உதவியுடன் மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 339 ஓட்டங்களைக் குவித்ததுடன் அப் போட்டியில் 101 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிபெற்றது.

16ஆவது ஓவரில் 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்கள் என்ற நிலையில் ஜோடி சேர்ந்த ஷாய் ஹோப், நிக்கலஸ் பூரண் ஆகிய இருவரும் நிதனாம் கலந்த அதிரடிகளுடன் 4ஆவது விக்கெட்டில் 216 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

ஷாய் ஹோப் 129 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 132 ஓட்டங்களையும் நிக்கலஸ் பூரண் 94 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 115 ஓட்டங்களையும் குவித்தனர்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஷாய் ஹோப் தனது 15ஆவது சதத்தையும் நிக்கலஸ் பூரண் 2ஆவது சதத்தையும் பெற்றனர்.

அவர்களை விட ப்றெண்டன் கிங் 32 ஓட்டங்களையும் ரோவ்மன் பவல் 29 ஓட்டங்களையும் பெற்றனர்.

நேபாளம் பந்துவீச்சில் லலித் ராஜ்பன்ஷி 52 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் 49.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 238 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ஆரிப் ஷெய்க் (63), குல்சான் ஜா (42), அணித் தலைவர் ரோஹித் பவ்டெல் (30), ஆரிப்பின் சகோதரர் ஆசிவ் ஷெய்க் (28) ஆகிய நால்வரே துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்தினர்.

பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அல்ஸாரி ஜோசப், அக்கீல் ஹொசெய்ன், கீமோ போல் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

 

நெதர்லாந்து வெற்றி

 

ஐக்கிய அமெரிக்காவுக்கு எதிராக ஹராரே, ஹைபீல்ட் விளையாட்டரங்கில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் நெதர்லாந்து 5 விக்கெட்களால் வெற்றிபெற்றது.

டேஜா நிடாமனுரு, அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் நெதர்லாந்தின் வெற்றியை இலகுவாக்கின.

இப் போட்டியில் தனது 3ஆவது நேரடி தோல்வியைத் தழுவிய ஐக்கிய அமெரிக்கா முதலாவது அணியாக தகுதிகாண் சுற்றுடன் வெளியேறுகிறது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்கா 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஷயன் ஜஹாங்கிர் (73), ஜெசி சிங் (38), கஜானந்த் சிங் (33) ஆகிய மூவரே 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் ரெயான் க்லெய்ன் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பஸ் டி லீட் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

219 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 43.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 214 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஸ்கொட் எட்வேர்ட்ஸ் ஆட்டம் இழக்காமல் 67 ஓட்டங்களையும் டேஜா நிடாமனுரு 58 ஓட்டங்களையும் பெற்றதுடன் 5ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

தொடர்ந்து எட்வேட்ஸுடன் ஜோடி சேர்ந்த லோகன் வென் பீக் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்தார். வென் பீக் 12 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

முன்வரிசையில் வெஸ்லி பரெசி 29 ஓட்டங்களையும் மெக் ஓ'டவ்ட் 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜெசி சிங் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

a_match_in_zimbabwe.png

2206_Aarif_Sheikh_Nepal_vs__West_Indies_

2206_Shai_Hope_West_Indies_vs__Nepal.jpg

2206_Nicholas_Pooran_West_Indies_vs__Nep

 

2206_Max_O_Dowd_Netherlands_vs_USA.jpg

2206_Shayan_Jahangir_of_USA__vs_Netherla

https://www.virakesari.lk/article/158376

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹசரங்கவின் சுழற்சியில் கவிழ்ந்தது ஓமான் : இலங்கை 10 விக்கெட்களால் வெற்றி !

Published By: NANTHINI

23 JUN, 2023 | 05:00 PM
image
 

(நெவில் அன்தனி)

புலாவாயோ, குவீன்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற பி குழுவுக்கான ஐ.சி.சி. உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் ஓமானை 10 விக்கெட்களால் மிக இலகுவாக இலங்கை வெற்றிகொண்டது.

தகுதிகாண் சுற்றில் சுழல்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க டி சில்வா 2ஆவது தொடர்ச்சியான தடவையாக பதிவு செய்த 5 விக்கெட் குவியல், லஹிரு குமார் கைப்பற்றிய 3 விக்கெட்கள் என்பன இலங்கையின் வெற்றியை சுலபப்படுத்தின.

2306_Lahiru_Kumara_of_Sri_Lanka_vs_Oman.

தனது முதலிரண்டு போட்டிகளில் அயர்லாந்தையும் ஐக்கிய அரபு இராச்சியத்தையும் வெற்றிகொண்ட ஓமானுக்கு, இலங்கையுடனான போட்டியில் படு தோல்வி அடைந்ததால் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது.

அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஓமான், இலங்கை பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு 30.2 ஓவர்களில் 98 ஓட்டங்களுக்கு சுருண்டது.

முதல் போட்டியில் போன்றே இப்போட்டியிலும் துல்லியமாக பந்து வீசிய வனிந்து ஹசரங்க 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 7.2 ஓவர்களில் 13 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை கைப்பற்றினார்.

லஹிரு குமார 2 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 8 ஓவர்களில் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஓமான் துடுப்பாட்டத்தில் அயான் கான் (41), ஜடிந்தர் சிங் (21), பயாஸ் பட் (13 ஆ.இ.) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

99 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை, 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 100 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி, ஆட்டத்தை வேளையோடு முடிவுக்கு கொண்டுவந்தது.

2306_dimuth_karunaratne_sl_vs_oman.jpg

திமுத் கருணாரட்ன 51 பந்துகளில் 8 பவுண்டறிகள் அடங்கலாக 61 ஓட்டங்களுடனும் பெத்தும் நிஸ்ஸன்க 5 பவுண்டறிகள் உட்பட 37 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

 

திமுத் கருணாரட்ன கடந்த 4 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக அரைச் சதங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

2306_Pethum_Nissanka_of_Sri_Lanka_vs__Om

 

Sri-Lana-vs-USA-.jpg

https://www.virakesari.lk/article/158446

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெறிங்டனின் அபார சதத்தின் உதவியுடன் ஸ்கொட்லாந்துக்கு 2ஆவது வெற்றி

23 JUN, 2023 | 09:44 PM
image
 

(நெவில் அன்தனி)

புலாவாயோ அத்லெட்டிக் க்ளப் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதரான ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் பி குழு போட்டியில் அணித் தலைவர் ரிச்சி பெறிங்டன் குவித்த அபார சதத்தின் உதவியுடன் ஸ்கொட்லாந்து மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.

இந்த  2ஆவது    வெற்றியுடன் பி குழுவுக்கான அணிகள் நிலையில் 4 புள்ளிகளுடன் இலங்கைக்கு அடுத்ததாக 2ஆம் இடத்தில் இருக்கிறது. அத்துடன் 3ஆவது தொடர்ச்சியான தோல்வியைத் தழுவிய ஐக்கிய அரபு இராச்சியம் முதலாவது அணியாக தகுதிகாண் சுற்றுடன் வெளியேறுகிறது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஸ்கொட்லாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 282 ஓட்டங்களைக் குவித்தது.

எவ்வாறாயினும் ஸ்கொட்லாந்தின் ஆரம்பம் மிக மோசமாகவே இருந்தது. 9 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 25 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்த ஸ்கொட்லாந்து, 15ஆவது ஓவரில் 4ஆவது விக்கெட்டை இழந்தபோது 48 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

எனினும் ரிச்சி பெறிங்டன் 2 முக்கிய இணைப்பாட்டங்களில் பங்களிப்பு செய்து அணியை பலமான நிலையில் இட்டார்.

41 ஓட்டங்களைப் பெற்ற மைக்கல் லீஸ்க்குடன் 5ஆவது விக்கெட்டில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்த பெறிங்டன், தொடர்ந்து 44 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்த மார்க் வொட்டுடன் 8ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 110 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

ரிச்சி பெறிங்டன் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 127 ஓட்டங்களைக் குவித்தார்.

பந்துவீச்சில் ஜுனைத் சித்திக் 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அலி நசீர் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

283 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 35.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 171 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

அணித் தலைவரும் ஆரம்ப விரருமான முஹம்மத் வசீம் (36), பாசில் ஹமீத் (30), தமிழகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கார்த்திக் மெய்யப்பன் (23 ஆ.இ.), அயான் அப்ஸால் கான் (21) ஆகிய நால்வரே 20க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் சபியான் ஷெரிப் 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கிறிஸ் சோல் 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெடகளை யும்    கைப்பற்றினர்.

2306_Mark_Watt_Scotland_vs_UAE.jpg

2306_richie_berrington_in_action.png

2306_Richard_Berrington_Scotland__UAE.jp

https://www.virakesari.lk/article/158450

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேபாளத்தை வெளியேற்றி சுப்பர் சிக்ஸில் முதல் அணியாக நுழைந்தது நெதர்லாந்து

24 JUN, 2023 | 07:56 PM
image
 

(நெவில் அன்தனி)

ஸிம்பாப்வேயில் நடைபெற்றுவரும் 10 நாடுகளுக்கு இடையிலான ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் நேபாளத்தை வெளியேற்றி சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முதலாவது அணியாக நெதர்லாந்து தகுதிபெற்றது.

ஹராரே, ஹைபீல்ட் டக்காஷிங்கா விளையாட்டரங்கில் சனிக்கிழமை (24) நடைபெற்ற ஏ  குழுவுக்கக்கான ஐசிசி தகுதிகாண் சுற்றில் நேபாளத்தை 7 விக்கெட்களால் வெற்றிகொண்ட நெதர்லாந்து 6 புள்ளிகளுடன் சுப்பர் 6 சுற்றுக்கு முன்னேறியது.

பந்துவீச்சில் லோகன் வென் பீக் பதிவுசெய்த தனிப்பட்ட அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதி, மெக்ஸ் ஓ'டவ்ட் குவித்த அரைச் சதம் என்பன நெதர்லாந்தின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நேபாளம் 44.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 167 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் ரோஹித் பௌடெல் 33 ஓட்டங்களையும் சந்தீப் லமிச்சான் 27 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் லோகன் வென் பீக் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 9.3 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் விக்ரம்ஜித் சிங் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாஸ் டி லீட் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 27.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஆரம்ப விக்கெட்டில் விக்ரம்ஜித் சிங்குடன் 80 ஓட்டங்களைப் பகிர்ந்த மெக்ஸ் ஓ'டவ்ட், 3ஆவது விக்கெட்டில் பஸ் டி லீட்டுடன் மேலும் 62 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை இலகுபடுத்தினார்.

மெக்ஸ் ஓ'டவ்ட் 90 ஓட்டங்களையும் பாஸ் டி லீட் ஆட்டம் இழக்காமல் 41 ஓட்டங்களையும் விக்ரம்ஜித் சிங் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சந்தீப் லமிசான் 60 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/158508

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது ஸிம்பாப்வே : இரு அணிகளும் சுப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின

24 JUN, 2023 | 09:52 PM
image
 

(நெவில் அன்தனி)

ஸிம்பாப்வேயில் நடைபெற்றுவரும் 10 நாடுகளுக்கு இடையிலான ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் ஏ குழுவில் நெதர்லாந்தை தொடர்ந்து ஸிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளும் சுப்பர் 6 சுற்றில் விளையாட தகுதிபெற்றக்கொண்டன.

ஸிம்பாப்வேயுடனான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் தோல்வி அடைந்தபோதிலும் அக் குழுவில் இடம்பெற்ற நேபாளமும் ஐக்கிய அமொரிக்காவும் ஏற்கனவே வெளியேற்றப்பட்டதால் இந்தத் தோல்வி மேற்கிந்தியத் தீவுகளுக்கு முதல் சுற்றில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

ஸிம்பாப்வேயின் வெற்றியில் சிக்கந்தர் ராஸா, ரெயான் பேர்ல் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் முக்கிய பங்காற்றின.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 268 ஓட்டங்களைப் பெற்றது.

ஜோய்லோர்ட் கம்பி (26), அணித் தலைவர் க்ரெய்க் ஏர்வின் (47) ஆகிய இருவரும் 63 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், முதல் 4 விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்ததால் ஸிம்பாப்வே தடுமாற்றத்தை எதிர்கொண்டது. (112 - 4 விக்.)

எவ்வாறாயினும் சிக்கந்தர் ராஸா, ரெயான் பேர்ல் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 87 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர்.

சிக்கந்தர் ராஸா 68 ஓட்டங்களையும் ரெயான் பேர்ல் 50 ஓட்டங்களையும் சோன் வில்லியம்ஸ் 23  ஓட்டங்களையும்  பெற்றனர்.

பந்துவீச்சில் கீமோ போல் 61 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அல்ஸாரி ஜோசப்  42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அக்கீல் ஹொசெய்ன் 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 44.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 233 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

கய்ல் மேயர்ஸ் (56), ப்றெண்டன் கிங் (20) ஆகிய இருவரும் ஆரமப் விக்கெட்டில் 6.3 ஓவர்களில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

32ஆவது ஓவரில் மேற்கிந்தியத் தீவுகள் 4 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்று சிறந்த நிலையில் இருந்தது. ஆனால், 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கடைசி 6 விக்கெட்களை இழந்து தோல்வியைத் தழுவியது.

மத்திய வரிசையில் ஷாய் ஹோப் (30), நிக்கலஸ் பூரண் (34), ரொஸ்டன் சேஸ் (44) ஆகிய மூவரே ஓரளவு திறமையை வெளிப்படுத்தினர்.

பந்துவீச்சில் டெண்டாய் சட்டாரா 52 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரிச்சர்ட் எங்கராவா, ப்ளெசிங் முஸராபனி, சிங்கந்தர் ராஸா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

2606_sikandar_raza_zim_vs_wi.png

2606_Kyle_Mayers_West_Indies_vs_Zimbabwe

https://www.virakesari.lk/article/158511

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திமுத், சதீர துடுப்பாட்டத்தில் அபாரம் : அயர்லாந்தை வீழ்த்தி சுப்பர் 6 சுற்றுக்குள் நுழைந்தது இலங்கை

25 JUN, 2023 | 09:48 PM
image
 

(நெவில் அன்தனி)

அயர்லாந்துக்கு எதிராக புலாவாயோ, குவீன் ஸ்போர்ட்ஸ் க்ளப் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்ற  பி குழு ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் 133 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இலங்கை, சுப்பர் 6 சுற்றில் விளையாட தகுதி பெற்றது.

அதேவேளை. இக் குழுவில் அயர்லாந்து 3ஆவது நேரடித் தோல்வியைத் தழுவி 2ஆவது அணியாக முதல் சுற்றுடன் வெளியேறியதால் ஸ்கொட்லாந்து, ஓமான் ஆகிய அணிகளும் சுப்பர் 6 சற்றில் விளையாட தகுதி பெற்றுக்கொண்டன.

இன்றைய போட்டியில் திமுத் கருணாரட்ன குவித்த சதம், சதீர சமரவிக்ரம பெற்ற அரைச் சதம் ஆகியன இலங்கையின் வெற்றிக்கு அடிகோலின.

தகுதிகாண் சுற்றில் 3ஆவது தொடர்ச்சியான தடவையாக வனிந்து ஹசரங்க 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்தபோதிலும் இந்தப் போட்டியில் அவர் கணிசமான ஓட்டங்களை அள்ளிக் கொடுத்திருந்தார். இதுவரை அவர் 3 போட்டிகளில் 11 விக்கெட்களை மொத்தமாக கைப்பற்றி அதிக விக்கெட்கள் கைப்பற்றியோரில் அசைக்க முடியாத முதலிடத்தில் இருக்கிறார்.

அயர்லாந்தை 192 ஓட்டங்களுக்கு சுருட்டியதன் மூலம் தகுதிகாண் சுற்றில் தன்னை எதிர்த்தாடிய மூன்று அணிகளையும் 200 ஓட்டங்களுக்குள் இலங்கை ஆட்டம் இழக்கச் செய்தது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 49.5 ஓவர்களில் சகல  விக்கெட்களையும் இழந்து 325 ஓட்டங்களைக் குவித்தது.

திமுத் கருணாரட்ன குவித்த அபார சதம், சதீர சமரவிக்ரம, தனஞ்சய டி சில்வா, சரித் அசலன்க ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்கள் என்பன இலங்கை வெற்றிபெறக்கூடியயை  பலமான நிலையில் இட்டன.

தனது 40ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் தீமுத் கருணாரட்ன தனது முதலாவது சர்வதேச ஒருநாள் சதத்தைப் பூர்த்தி செய்தார்.

இதற்கு முன்னர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவரது அதிகபட்ச எண்ணிக்கை 97 ஓட்டங்களாகும். அவுஸ்திரேலியாவுக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் 2019 ஜூன் மாதம் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலேயே திமுத் கருணாரட்ன 97 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இன்றைய போட்டியில் இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. பெத்தும் நிஸ்ஸன்க (20), குசல் மெண்டிஸ் (0) ஆகிய இருவரும் ஆட்டமிழந்தபோது இலங்கையின் மொத்த எண்ணிக்கை 8.4 ஓவர்களில் 48 ஓட்டங்களாக இருந்தது.

எனினும் திமுத் கருணாரட்ன, சதீர சமரவிக்ரம ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 168 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணியை பலமான நிலையில் இட்டனர்.

சதீர சமரவிக்ரம 86 பந்துகளில் 4 பவுண்டறிகளுடன் 82 ஓட்டங்களைப் பெற்றார். 12 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் பெற்ற அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும்.

மறுபக்கத்தில் தனது 5ஆவது தொடர்ச்சியான அரைச் சதத்தைப் பூர்த்தி செய்த திமுத் கருணாரட்ன மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அதனை சதமாக பரிணமிக்கச் செய்தார். 103 பந்துகளை எதிர்கொண்ட திமுத் கருணாரட்ன 8 பவுண்டறிகளுடன் 103 ஓட்டங்களைப் பெற்றார்.

மத்திய வரிசையில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய தனஞ்சய டி சில்வா ஆட்டம் இழக்காமல் 42 ஒட்டங்களையும் சரித் அசலன்க 38 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கைக்கு 21 வைட்டுகளுடன் 27 உதிரிகள் கிடைத்தன.

அயர்லாந்து பந்துவிச்சில் மார்க் அடயார் 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் பெறி மெக்கார்த்தி 56 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கெரத் டிலேனி 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 31 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 192 ஓட்டங்களைப் பெற்று படுதோல்வி அடைந்தது.

அயர்லாந்து துடுப்பாட்டத்தில் கேர்ட்டிஸ் கெம்ஃபர் (39), ஹெரி டெக்டர் (33), ஜோர்ஜ் டொக்ரெல் (26), ஜொஷ் லிட்ல் (20) ஆகிய நால்வரே 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 79 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இலங்கை தனது கடைசி தகுதிகாண் போட்டியில் ஸ்கொட்லாந்தை செவ்வாய்க்கிழமை (27) சந்திக்கவுள்ளது.

2506_Wanindu_HasarangaSri_Lanka_vs__Irel

2506_Wanindu_Hasaranga__Sri_Lanka_vs_Ire

2506_Sadeera_Samarawickrama_Sri_Lanka_vs

2506_Sadeera_Samarawickrama_and_Dimuth_K

2506_Dimuth_Karunarathana_Sri_Lanka_vs_I

https://www.virakesari.lk/article/158577

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓமானை 76 ஓட்டங்களால் வீழ்த்திய ஸ்கொட்லாந்துக்கு 3ஆவது தொடர்ச்சியான வெற்றி

26 JUN, 2023 | 07:09 AM
image
 

(நெவில் அன்தனி)

ஓமானுக்கு எதிராக புலாவாயோ அத்லெட்டிக் கழக விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்ற பி குழு ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் ப்றெண்டன் மெக்முலென் குவித்த அசத்தலான சதத்தின் உதவியுடன் ஸ்கொட்லாந்து 76 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன் தகுதிகாண் சுற்றில் 3 போட்டிகளில் 3 வெற்றிகளை ஈட்டிய ஸ்கொட்லாந்து சுப்பர் 6 சுற்றில் விளையாட தகுதி பெற்றது.

ஓமான் தோல்வியுற்ற போதிலும் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளைப் பெற்றுள்ளதால் சுப்பர் 6 சுற்றில் விளையாட கடைசியும் 6 ஆவதுமான அணியாகத் தெரிவானது.

ஸ்கொட்லாந்தின் இன்றைய வெற்றியில் அணித் தலைவர் ரிச்சி பெறிங்டன் பெற்ற அரைச் சதம், கிறிஸ் க்றீவ்ஸின் 5 விக்கெட் குவியல் என்பனவும் முக்கிய பங்காற்றின.

ஸ்கொட்லாந்து சார்பாக சதம் குவித்த ப்றெண்டன் மெக்முலென் பெயர் கிட்டத்தட்ட நியூஸிலாந்தின் ப்றெண்டன் மெக்கலத்தின் பெயருக்கு ஒப்பாக இருப்பதுடன் மெக்முலெனின் அதிரடி மெக்கலத்தின் அடியைப் போன்றே இருந்தது.

முதல் 21 பந்துகளில் 9 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்த மெக்முலென், இறுதியாக 121 பந்துகளில் 14 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 136 ஒட்டங்களைக் குவித்தார். 11ஆவது சரவ்தேச ஒருநாள் போட்டியில் விளையாடிய மெக்முலென் குவித்த முதலாவது சதம் இதுவாகும்.

அவரும் ரிச்சி பெறிங்டனும் 3ஆவது விக்கெட்டில் 138 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்தனர்.

ரிச்சி பெறிங்டன் 7 பவுண்டறிகளுடன் 60 ஓட்டங்களைப் பெற்றார்.

ஸ்கொட்லாந்து ஒரு கட்டத்தில் 13 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 47 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

ஆனால் மெக்முலென், பெறிங்டன் ஆகியோரின் அபார துடுப்பாட்டங்களின் உதவியுடன் எஞ்சிய 37 ஓவர்களில் 273 ஓட்டங்களை மொத்த எண்ணிக்கைக்கு மேலும் சேர்த்தது.

அவர்கள் இருவரைவிட தோமஸ் மெக்கின்டோஷ் 32 ஓட்டங்களையும் மெட் வொட் 25 ஓட்டங்களையம் பெற்றனர்.

ஓமான் பந்துவீச்சில் பிலால் கான் 55 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

மிகவும் கடினமான 321 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான், கிறிஸ் க்றீவ்ஸின் பந்துவீச்சை எதர்கொள்ளமுடியாமல்  50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 244 ஓட்டங்களைப் பெற்றது.

32 ஓவர்கள் நிறைவில் ஓமான் 6 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

இந் நிலையில் ஷொயெப் கான், நசீம் குஷி ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 105 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஒரளவு கௌரவமான நிலையில் இட்டனர். ஆனால் அவர்களால் ஓமானின் தோல்வியைத் தடுக்க முடியவில்லை.

நசீம் குஷி 69 ஓட்டங்களையும் ஷொயெப் கான் 36 ஓட்டங்களையும் ஆக்கிப் இலியாஸ் 31 ஓட்டங்களையும் அயான் கான் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் கிறஸ் க்றீவ்ஸ் 53 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/158579

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐக்கிய அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஸிம்பாப்வே 304 ஓட்டங்களால் சாதனைமிகு வெற்றி

27 JUN, 2023 | 05:56 AM
image
 

(நெவில் அன்தனி)

ஹராரே விளையாட்டுக் கழக விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (26) நடைபெற்ற ஐக்கிய அமெரிக்காவுக்கு எதிரான ஏ குழுவுக்கான ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் 304 ஓட்டங்களால் சாதனைமிகு வெற்றியை ஸிம்பாப்வே ஈட்டியது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஓட்டங்கள் ரீதியில் ஸிம்பாப்வே ஈட்டிய மிகப் பெரிய வெற்றி இதுவாகும். அத்துடன் ஒட்டுமொத்த வெற்றிகளில் இரண்டாவது பெரிய வெற்றி இதுவாகும்.

திருவனந்தபுரத்தில் இந்த வருட முற்பகுதியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 317 ஓட்டங்களால் இந்தியா ஈட்டிய வெற்றியே ஓட்டங்கள் ரீதியில் ஈட்டப்பட்ட மிகப் பெரிய வெற்றியாகும்.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஸிம்பாப்வே 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 408 ஓட்டங்களைக் குவித்தது. இந்த மொத்த எண்ணிக்கையானது ஸிம்பாப்வேயினால் சர்வதேச ஒருநாள் போட்டியில் பெறப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாகும்.

ஆரம்ப வீரர் ஜோய்லோர்ட் கம்பீ மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 78 ஓட்டங்களைப் பெற்றார்.

பதில் அணித் தலைவர் சோன் வில்லியம்ஸ் களம் புகுந்ததும் ஸிம்பாப்வேயின் ஓட்டங்கள் சரளமாக குவிந்ததுடன் ஓட்ட வேகமும் அதிகரித்தது.

121 பந்துகளை எதிர்கொண்ட சோன் வில்லியம்ஸ் 21 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் அடங்கலாக 174 ஓட்டங்களைக் குவித்தார். ஸிம்பாப்வே சார்பாக சார்ள்ஸ் கொவென்ட்றி குவித்த ஆட்டம் இழக்காத 194 ஓட்டங்கள் (2009இல் எதிர் பங்களாதேஷ்), ஹெமில்டன் மஸக்கட்ஸா குவித்த ஆட்டம் இழக்காத 178 ஓட்டங்கள் (2009இல் எதிர் கென்யா) ஆகியவற்றுக்கு அடுத்ததாக தனி ஒருவரால் பெறப்பட்ட 3ஆவது அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும்.

கம்பீ, வில்லியம்ஸ் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 160 ஓட்டஙகளைப் பகிர்ந்தனர். தொடர்ந்து சிக்கந்தர் ராஸாவுடன் 3ஆவது விக்கெட்டில் 88 ஓட்டங்களையும் ரெயான் பேர்லுடன் 4ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களையும் வில்லியம்ஸ் பகிர்ந்தார்.

கம்பீ, வில்லிம்ஸ் ஆகியோரைவிட சிக்கந்தர் ராஸா (48), ரெயான் பேர்ல் (47), இனசன்ட் காலா (32) ஆகியோரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி  சாதனைமிகு மொத்த எண்ணிக்கையைப் பெற ஸிம்பாப்வேக்கு உதவினர்.

பந்துவீச்சில் அபிஷேக் பரத்கார் 78 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெசி சிங் 97 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

409 ஓட்டங்கள் என்ற நினைத்துப் பார்க்க முடியாத வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்கா 25.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 104 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படுதோல்வி அடைந்தது.

துடுப்பாட்டத்தில் அபிஷேன் பரத்கார் (24), ஜெசி சிங் (21), கஜானந்த் சிங் (13) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

சிக்கந்தர் ராஸா 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் றிச்சர்ட் எங்கராவா 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

2606_Sean_Williams_Zimbabwe_vs_USA..jpg

2606_sean_williams_zimb_vs_usa.png

https://www.virakesari.lk/article/158658

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேற்கிந்தியத் தீவுகளை சுப்பர் ஓவரில் பதம் பார்த்த நெதர்லாந்து

27 JUN, 2023 | 05:58 AM
image
 

(நெவில் அன்தனி)

நெதர்லாந்துக்கு எதிராக ஹராரே ஹைபீல்ட் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (26) நடைபெற்ற ஏ குழுவுக்கான ஐசிசி உலகக் கிண்ண தகதிகாண் சுற்றின் கடைசிப் போட்டியில் சுப்பர் ஓவரில் மெற்கிந்தியத் தீவுகள் தோல்வி அடைந்தது.

2 தடவைகள் உலக சம்பியனான மேற்கிந்தியத் தீவுகளுக்கு இந்தத் தோல்வியினால் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதிபெறுவது பெரும் தர்மசங்கடமாகியுள்ளது.

தகுதிகாண் சுற்றில் நிக்கலஸ் பூரண் குவித்த இரண்டாவது சதத்தின் உதவியுடன் மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 374 ஓட்டங்களைக் குவித்தது. ஆனால், டேஜா நிடமானுரு குவித்த 111 ஓட்டங்களின் உதவியுடன் மேற்கிந்தியத் தீவுகளின் மொத்த எண்ணிக்கையை சமப்படுத்திய நெதர்லாந்துக்கு கடைசிப் பந்தில் வெற்றிக்கு ஒரு ஓட்டம் தேவைப்பட்டது.

லோகன் வென் பீக்கின் மிகவும் சிரமமான பிடியை ஜேசன் ஹோல்டர் எடுத்ததால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.

ஆனால் சுப்பர் ஓவரில் ஜேசன் ஹோல்டரின் பந்துவீச்சைப் பதம்பார்த்த லோகன் வென் பீக் (4, 6, 4, 6, 6, 4) 30 ஓட்டங்களை விளாசினார்.

31 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு சுப்பர் ஓவரை எதிர்கொண்ட மேற்கிந்தியத் தீவுகளுக்கு முதல் 3 பந்துகளில் 8 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்த லோகன் வென் பீக், 4ஆம, 5ஆம் பந்துகளில் ஜோன்சன் சார்ள்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோரின் விக்கெட்களை கைப்பற்றி நெதர்லாந்துக்கு மிகவும் அவசியமான 2 வெற்றிப் புள்ளிகளை ஈட்டிக்கொடுத்தார்.

இதில் விசேடம் என்னவென்றால் 10 ஓவர்ளில் 77 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்த லோகன் வென் பீக், 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 10 ஓவர்களில் 59 ஓட்டங்களுக்கு  ஒரு  விக்கெட்டை கைப்பற்றிய ஜேசன் ஹோல்டர் ஆகிய இருவரும்  சுப்பர் ஓவர்களை வீசியதாகும்.

'இந்தத் தருணத்தில் என்னால் எதையும் விபரிக்க முடியாதுள்ளது. நாங்கள் ஏதாவது விசேஷமாக செய்யவேண்டும் என விரும்பினோம்' என வென் கீக் போட்டி முடிவில் தெரிவித்தார்.

'நான் மிக நீண்டகாலமாக விளையாடி வருகிறேன். அப்போதேல்லாம் நான் அடைந்த தோல்விகள் எண்ணற்றவை. இப்போது இந்த வெற்றி திருப்தி தருகின்றது' என்றார் அவர்.

இன்றைய போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக ப்றெண்டன் கிங் (76), ஜோன்சன் சார்ள்ஸ் (54) ஆகிய இருவரும் 101 ஓட்டஙகளைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

நிக்கலஸ் பூரண் 65 பந்துகளில் 9 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 104 ஓட்டங்களைக் குவித்ததுடன் 47 ஒட்டங்களைப் பெற்ற ஷாய் ஹோப்புடன் 4ஆவது விக்கெட்டில் 108 ஓட்டங்களைப பகிர்ந்தார்.

ரொமாரியோ ஷெப்பர்ட் (0), ஜேசன் ஹோல்டர் (8) ஆகியோர் ஆட்டம் இழந்த பின்னர் நிக்கலஸ் பூரண், கீமோ போல் (46 ஆ.இ.) ஆகிய இவரும் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 79 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

பந்துவீச்சில் சக்கிப் ஸுல்பிகார் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாஸ் டி லீட் 72 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 374 ஓட்டங்களைப் பெற ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.

ஜோன்சன் சார்ள்ஸ், ஷம்ரா ப்றூக்ஸ் (25) ஆகியோரைத் தொடர்ந்து ப்றெண்டன் கிங்கும் ஆட்டம் இழந்தார்.

துடுப்பாட்டத்தில் விக்ரம்ஜித் சிங் (37), மெக்ஸ் ஓ'டவ்ட் (36), வெஸ்லி பரேசி (27), பாஸ் டி லீட் (33) ஆகிய நால்வரும் ஆட்டம் இழந்த பின்னர் ஜோடி சேர்ந்த டேஜா நிடாமனுரு, அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (67) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 143 ஓட்டங்களைப் பகிர்ந்து நெதர்லாந்துக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

மொத்த எண்ணிக்கை 327 ஓட்டங்களாக இருந்தபோது டேஜா நிடாமனுரு 111 ஓட்டங்களுடன் வெளியேறினார். 76 பந்துகளை எதிர்கொண்ட அவர் 11 பவுண்டறிகளையும் 3 சிக்ஸ்களையும் விளாசினார்.

தொடர்ந்து லோகன் வென் பீக் (28), அரியான் டட் (16) ஆகிய இருவரும் 8ஆவது விக்கெட்டில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர். ஆனால் இருவரும் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழக்க மொத்த எண்ணிக்கை சமமானது.

அதன் சுப்பர் ஓவரில் நெதர்லாந்து வெற்றிபெற்றது.

பந்துவிச்சில் ரொஸ்டன் சேஸ் 77 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அல்ஸாரி ஜோசப், அக்கீல் ஹொசெய்ன் ஆகிய இருவரும் தலா 73 ஓட்டங்களுக்கு தலா 2 விக்கெட்க ளையும்   கைப்பற்றினர்.

 

2606_logan_van.png

2606_Nicholas_Pooran_West_Indies_vs_Neth

2606_Logan_van_Beek_Netherlands_vs_West_

https://www.virakesari.lk/article/158659




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.