Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவுஸ்ரேலியா வெற்றி

 

இந்தியா

அவுஸ்ரேலியா இந்த‌ இர‌ண்டு அணிக‌ளுக் கோப்பை தூக்க‌ கூடாது

 

இதுவ‌ரை கோப்பை தூக்காத‌ நியுசிலாந் அல்ல‌து தென் ஆபிரிக்கா தூக்க‌னும்

 

இங்லாந் பாக்கிஸ்தான் வீர‌ர்க‌ள் நாடு திரும்ப‌ ரெடியா இருக்கின‌ம் லொல் 

  • Like 1
  • Replies 546
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted
31 minutes ago, பையன்26 said:

அவுஸ்ரேலியா வெற்றி

 

இந்தியா

அவுஸ்ரேலியா இந்த‌ இர‌ண்டு அணிக‌ளுக் கோப்பை தூக்க‌ கூடாது

அவுஸ் மேல் ஏன் கோபம் பையா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலக கோப்பை இப்போதுதான் சூடு பிடித்துள்ளது. 😃

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரண்டே பந்துகளில் 21 ரன்: நியூசிலாந்தை நிலைகுலைய செய்த ஆஸ்திரேலியாவின் 'பவர் ப்ளே' உத்தி

ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

உலகக்கோப்பையில் இன்றைய பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 5 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி திரில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் - வார்னர் ஜோடி அதிரடியில் மிரட்ட, நியூசிலாந்து அணிக்காக விளையாடும் இந்திய வம்சாவளி வீரர் ரச்சின் ரவீந்திரா மீண்டும் ஒருமுறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் அவர் நடப்பு தொடரில் தனது சாதனையை தானே முறியடிக்கவும் செய்தார்.

இந்த போட்டியில் நியூசிலாந்தை நிலைகுலையச் செய்த ஆஸ்திரேலியாவின் பலே உத்தி என்ன? இந்தப் போட்டியின் முடிவால் புள்ளிகள் பட்டியலில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது?

இரு அணிகளிலும் என்ன மாற்றம்?

உலகக்கோப்பையில் இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதின. உலகக்கோப்பையில் இதுவரை மோதிய 11 ஆட்டங்களில் 8 போட்டிகளில் வென்றுள்ள ஆஸ்திரேலியா, நடப்பு தொடரில் பெற்ற ஹாட்ரிக் வெற்றியால் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்கியது.

அதேநேரத்தில், நடப்புத் தொடரில் இதுவரையிலான ஆட்டங்களில் இந்தியா தவிர மற்ற அனைத்து அணிகளுக்கு எதிராகவும் வெற்றியை பதிவு செய்த உற்சாகத்தில் நியூசிலாந்து அணி களம் கண்டது.

ஆஸ்திரேலிய அணியில் கேமரூன் கிரீனுக்குப் பதிலாக டிரெவிஸ் ஹெட் மீண்டும் இடம் பெற்றார். நியூசிலாந்து அணியில் காயத்தால் அவதிப்படும் மார்க் சாப்மேனுக்குப் பதிலாக ஜிம்மி நீஷம் வாய்ப்பு பெற்றார்.

ஆஸ்திரேலியா அசத்தல் தொடக்கம்

டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டாம் லாத்தம் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் - டிராவிஸ் ஹெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரில் இருந்தே வார்னர் அதிரடியைத் தொடங்கிவிட்டார். மாட் ஹென்றி வீசிய முதல் ஓவரில் 2 பவுண்டரிகளை அவர் விளாசினார்.

ஒருநாள் போட்டிகளில் சராசரியாக 93 ரன்களை சேர்த்துளள வார்னர் - டிராவிஸ் ஹெட் ஜோடி தங்கள் மீதான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பாக விளையாடிது.

ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 பந்துகளில் 21 ரன் எடுத்த ஆஸ்திரேலியா

டிரென்ட் போல்ட் வீசிய அடுத்த ஓவரில் முதல் பந்தையே டிராவிஸ் ஹெட் சிக்சருக்கு தூக்கினார். அடுத்த இரு பந்துகளையும் போல்ட் நோபாலாக வீச, அதில் ஒரு சிக்சர், ஒரு 2 ரன் என 8 ரன்களை ஹெட் சேர்த்துவிட்டார். அடுத்த பந்தையும் அவர் சிக்சருக்கு விளாசினார். இதன் மூலம், செல்லத்தக்க 2 பந்துகளை வீசியிருந்த போதே போல்ட் 21 ரன்களை வாரியிறைத்திருந்தார்.

நியூசிலாந்து அணி டிரென்ட் போல்ட் - மாட் ஹென்றி ஆகிய தொடக்க பந்துவீச்சு ஜோடி புதிய பந்தில் காட்டும் மாயாஜாலத்தையே நடப்புத் தொடரில் பெரும்பலமாக கொண்டிருந்தது. ஆனால், அவர்கள் இருவரையுமே முதல் ஓவரில் இருந்தே வார்னரும், டிராவிஸ் ஹெட்டும் தடாலடியாக அடித்து விளாசி நியூசிலாந்தின் திட்டத்தை தவிடுபொடியாக்கி விட்டனர். ஹென்றி வீசிய மூன்றாவது ஓவரில் இந்த ஜோடி 22 ரன்கள் குவித்தது.

ஹென்றி வீசிய முதல் 15 பந்துகளில் மட்டும் ஆஸ்திரேலிய 7 பவுண்டரிகளை அடித்து அவரது நம்பிக்கையை முற்றாக குலைத்துவிட்டது. இதனால் சரியான லைன் அன்ட் லெந்தை இழந்துவிட்ட இருவரும் தாறுமாறாக பந்துவீசினர். ஆட்டமிழப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் பேட்ஸ்மேன்கள் அடித்து விளாசும் இறுதிக்கட்ட ஓவர்களில் பந்துவீசும் உத்தியை தொடக்க ஓவர்களிலேயே நியூசிலாந்து பயன்படுத்த தொடங்கிவிட்டது. ஆனாலும் பலன் கிடைக்கவில்லை.

ஃபுல் லென்த், ஷார்ட் பால், ஸ்லோ பால் என பந்துவீச்சில் மாறுதல் காட்டினாலும், சரியான லைனில் பந்துவீச நியூசிலாந்து வீரர்கள் தவறிவிட்டனர். இதனால், ஆஸ்திரேலியாவின் ரன் குவிப்பை அவர்களால் தடுக்க முடியவில்லை.

ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

25 பந்துகளில் ஹெட் அரைசதம்

களத்தில் தொடக்கம் முதலே சரவெடியாக வெடித்த வார்னரும், டிராவிஸ் ஹெட்டும் அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர். ஆஸ்திரேலிய அணி 27 பந்துகளிலேயே அரைசதத்தை கடந்துவிட்டது. எதிர்கொள்ளும் பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசிக் கொண்டிருந்த டிராவிஸ் ஹெட் 25 பந்துகளில் அரைசதம் விளாசினார்.

இருவரின் அதிரடியால் ஆஸ்திரேலிய அணி 10 ஓவர்களில் 118 ரன்களைக் குவித்துவிட்டது. இதில், 21 பவுண்டரிகளை ஆஸ்திரேலியா விளாசியிருந்தது.

அதிரடியை தொடர்ந்த வார்னரும், ஹெட்டும் 15 ஓவர்களிலேயே ஆஸ்திரேலிய அணி 150 ரன்களை கடக்க உதவினர். இருபதாவது ஓவரில்தான் இந்த ஜோடியை நியூசிலாந்து வீரர்களால் பிரிக்க முடிந்தது. வார்னர் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரும் 19 ஓவர்களில் 175 ரன்கள் குவித்தனர்.

ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

59 பந்துகளில் சதம் விளாசிய டிராவிஸ் ஹெட்

மறுபுறம் தொடர்ந்து அதிரடி காட்டிய டிராவிஸ் ஹெட் 59 பந்துகளில் சதம் கடந்து மிரட்டினார். ஆனால் அடுத்த சிறிது நேரத்திலேயே அவர் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் தடாலடியாக 109 ரன்களைக் குவித்ததால் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்திருந்தது.

வார்னர், ஹெட் ஆகிய இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்த பிறகு ஆஸ்திரேலிய அணியின் ரன் குவிக்கும் வேகம் குறைந்தது.

ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆஸ்திரேலியாவுக்கு மிடில் வரிசை ஏமாற்றம்

ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டர் வீரர்கள் யாரும் சரியாக ஆடவில்லை. வார்னர் - டிராவிஸ் ஹெட் தொடக்க ஜோடி அமைத்துக் கொடுத்த வலுவான தொடக்கத்தை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டனர். ஸ்டீவ் ஸ்மித் 18, மிட்செல் மார்ஷ் 36, மார்னஸ் லாபுஷேன் 18 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிளென் மேக்ஸ்வெல் 38வது ஓவரில் இறங்கி தன் அதிரடியால் 24 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார். அதன்பின் ஜோஷ் இங்லிஸ், பாட் கம்மின்ஸ் கடைசியில் அதிரடி ஆட்டம் ஆடினர். இங்லிஸ் 28 பந்துகளில் 38 ரன்களும், கம்மின்ஸ் 14 பந்துகளில் 37 ரன்களும் எடுத்தனர்.

கடைசி ஒரு ரன்னுக்கு 4 விக்கெட்

ஆஸ்திரேலியா 48 ஓவர்களில் 387 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து இருந்தது. எப்படியும் கடைசி இரண்டு ஓவர்களில் 20 முதல் 30 ரன்களை ஆஸ்திரேலியா சேர்த்து ஸ்கோரை 400க்கும் மேல் கொண்டு செல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், அடுத்த எட்டு பந்துகளில் ஆஸ்திரேலியா 1 ரன்னை மட்டுமே சேர்த்து 4 விக்கெட்களை அடுத்தடுத்து இழந்தது. ட்ரென்ட் போல்ட் 49வது ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹென்றி கடைசி ஓவரில் ஒரு விக்கெட் வீழ்த்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 388 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

முதல் 20 ஓவர்களையும், கடைசி 14 ஓவர்களையும் மோசமாக வீசிய நியூசிலாந்து அணி கடைசி 2 ஓவர்களில் ஆஸ்திரேலியாவை ரன் குவிக்க விடாமல் தடுத்து நிறுத்தியது. நியூசிலாந்து பந்துவீச்சு இந்தப் போட்டியில் மோசமாக இருந்தாலும் இந்த கடைசி 2 ஓவர்களால் ஆறுதல் அடைந்தது அந்த அணி.

ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

இமாலய இலக்கை நோக்கி நியூசிலாந்து

ஆஸ்திரேலியா நிர்ணயித்த மிகப்பெரிய இலக்கை நோக்கி களம் கண்ட நியூசிலாந்து வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடி காட்டினர். ஜோஷ் ஹேஸில்வுட் வீசிய முதல் ஓவரிலேயே டெவோன் கான்வே 2 பவுண்டரிகளை விளாசினார். எனினும், இமாலய இலக்கு தந்த நெருக்கடியால் களத்தில் நிலைநிறுத்திக் கொள்ளும் முன்பே பந்துகளை விளாச முற்பட்டதால் நியூசிலாந்து வீரர்கள் பல பந்துகளை விரயம் செய்தனர். முதல் 7 ஓவர்களிலேயே 11 பந்துகளை அவர்கள் இவ்வாறு வீணடித்தனர்.

ஹேஸில்வுட் வீசிய எட்டாவது ஓவரில் நியூசிலாந்து அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது. டெவோன் கான்வே 17 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்து வெளியேறினார். அடுத்த சிறிது நேரத்திலேயே மற்றொரு தொடக்க வீரர் வில் யங்கையும் ஹேசில்வுட் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். நிதானமாக ஆடிய யங் 32 ரன்கள் சேர்த்தார்.

ரச்சின் ரவீந்திராவால் நிமிர்ந்த நியூசிலாந்து

அறிமுக உலகக்கோப்பையிலேயே கலக்கி வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் கைகொடுத்தார். அவரது அதிரடியால் நியூசிலாந்து அணி தலைநிமிர்ந்து, இமாலய வெற்றி இலக்கை நோக்கி நம்பிக்கையுடன் விரைந்தது. ரச்சின் ரவீந்திராவுக்கு டெரில் மிட்செல் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

15 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டினை இழந்து 107 ரன்கள் சேர்த்திருந்தது. ரச்சினுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்ஷெல் 42 பந்துகளில் அரைசதத்தினை எட்டினார்.

ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

மிட்செல் அவுட்

போட்டியின் 24வது ஓவரை வீசிய ஆடம் ஜாம்பா ஓவரில் ரச்சின் ரவீந்திரா அடுத்தடுத்து பவுண்டரிகள் விளாசி மிரட்டினார். ஆனால், அவரது ஓவரிலேயே மறுமுனையில் நின்றிருந்த மிட்செல் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 51 பந்துகளில் 54 ரன்களை எடுத்திருந்தார்.

25 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டினை இழந்து 131 ரன்கள் சேர்த்திருந்தது. அடுத்த 25 ஓவர்களில் அந்த அணி வெற்றி பெற 257 ரன்கள் தேவைப்பட்டன. அதாவது ஓவருக்கு 10 ரன்னுக்கும் அதிகமாக அந்த அணிக்கு தேவைப்பட்டது.

தன் சாதனையை தானே முறியடித்த ரச்சின் ரவீந்திரா

நியூசிலாந்து அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்ததால், களமிறங்கியதும் விக்கெட் வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதில் ரச்சின் ரவீந்திரா கவனம் செலுத்தினார். பொறுப்பாக விளையாடிய அவர், 50 பந்துகளில் அரைசதம் கண்டார்.

அரைசதம் அடிக்கும் வரை நிதானமாக ஆடி வந்த ரச்சின், அணியின் வெற்றிக்கு அதிக ரன்ரேட் தேவைப்பட்டதால் கியரை மாற்றி அதிரடிக்கு மாறினார். 37வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் விளாசி அவர் சதம் விளாசினார். 50 ரன்னில் இருந்து 100 ரன்களை எட்ட அவர் வெறும் 28 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டார்.

உலகக் கோப்பையில் குறைந்த பந்துகளில் சதமடித்த நியூசிலாந்து வீரர் என்ற தன் சாதனையை (82 பந்துகள்) ரச்சின் ரவீந்திரா முறியடித்தார். இந்தப் போட்டியில் 77 பந்துகளில் சதம் அடித்தார்.

ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

திக் திக் 10 ஓவர்கள்

40 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 292 ரன்களை எடுத்திருந்தது. அதன் கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தன. ஆஸ்ரேலிய அணியும் இதே கட்டத்தில் 2 விக்கெட் இழப்பிற்கு 292 ரன்களையே எடுத்திருந்தது. இதனால், நியூசிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு கண்ணில் தென்பட்டது. ரச்சின் ரவீந்திரா நல்ல பார்மில் இருப்பதால் நியூசிலாந்து அணிக்கு அவர் வெற்றி தேடித்தருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், 5 சிக்சர், 9 பவுண்டரிகளுடன் 116 ரன்களை விளாசிய அவர், எதிர்பாராத விதமாக ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் வீசிய பந்தில் லபுஷேனேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால், நியூசிலாந்து அணி அதிர்ச்சி அடைந்தது.

2 ஓவர்களில் 32 ரன் தேவை

48 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டினை இழந்து 357 ரன்கள் சேர்த்திருந்தது. வெற்றி பெற 12 பந்தில் 32 ரன்கள் தேவை என்ற நிலையில் அந்த அணி இருந்தது. கைவசம் 2 விக்கெட்டுகள் இருந்தன.

ரசிகர்களை சீட்டின் நுனிக்கே கொண்டு வந்த இந்த பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து அணியால் கடைசியில் 9 விக்கெட்டுகளை இழந்து 383 ரன்களையே சேர்க்க முடிந்தது. இதனால் ஆஸ்திரேலியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

நியூசிலாந்தை நிலைகுலையச் செய்த ஆஸி.யின் பலே திட்டம்

ஆஸ்திரேலியாவின் பவர்பிளே திட்டத்தால் நியூசிலாந்து அணி நிலைகுலைந்து போனது. நியூசிலாந்து அணி முதல் 13 ஓவர்கள் அனைத்திலும் குறைந்தது ஒரு பவுண்டரியாவது கொடுத்தது. 2002இருந்து ஒரு டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணி, பவுண்டரி கொடுக்காமல் ஒரு ஓவர் வீச அதிக ஓவர்களை எடுத்துக் கொண்ட வரிசையில் நியூசிலாந்து முதல் இடத்தை பிடித்தது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 8.3 ஓவரில் 100 ரன்களை எட்டி, அதிவேகமாக 100 ரன்களை குவித்த அணியானது ஆஸ்திரேலியா. உலகக்கோப்பையில் அதிவேகமாக 100 ரன்களை அடித்த இரண்டாவது அணி என்ற பெருமையும் ஆஸ்திரேலியா பெற்றது. முன்னதாக நியூசிலாந்து அணி 2015இல் இங்கிலாந்து அணிக்கு எதிராக 6.4 ஓவரில் 100 ரன்களை எட்டி இருந்தது.

புள்ளிப் பட்டியலில் மாற்றம் என்ன?

நடப்பு உலகக்கோப்பையில் நியூசிலாந்து அடுத்தடுத்து பெற்ற இரண்டாவது தோல்வி இதுவாகும். அதேபோல், ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்த தோல்விகளுக்குப் பிறகு தொடர்ச்சியாக பெற்ற 4-வது வெற்றி இதுவாகும்.

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து மோதிய ஆட்டத்தின் முடிவால் புள்ளிப் பட்டியலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இரு அணிகளுமே 6 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளை பெற்றிருக்கின்றன.

ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து மூன்றாவது இடத்திலும், ஆஸ்திரேலியா நான்காவது இடத்தில் அப்படியே தொடர்கின்றன.

https://www.bbc.com/tamil/articles/c88m41dp44zo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

wcpt1.jpg

தரவரிசை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பரபரப்பான போட்டியில் நியூசிலாந்தை 5 ஓட்டங்களால் வென்றது அவுஸ்திரேலியா !

28 OCT, 2023 | 09:28 PM
image

இந்தியாவின் தர்மசாலாவில் இன்று சனிக்கிழமை (28) இடம்பெற்ற உலகக்கிண்ணத் தொடரின் 27 ஆவது போட்டியில் நியூசிலாந்து அணியை 5 ஓட்டங்களால் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி அவுஸ்திரேலிய அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

இதன் படி இப் போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுதிஸ்ரேலிய அணி 50 ஓவர்களில் 388 ஓட்டங்களைப் பெற்றது.

அவுஸ்திரேலியா சார்பாக டிராவிஸ் ஹெட் 67 பந்துகளில் 109 ஓட்டங்களையும், டேவிட் வோனர் 81 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். கிளென் மெக்ஸ்வெல் 24 பந்துகளில் 41 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக டிரன் போல்ட் மற்றும் கிளன் பிலிப்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

383 ஓட்டங்களை வெற்றி இலக்காக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து ஆரம்பம் முதலே வேகமாக துடுப்பெடுத்தாடியது.

நியூசிலாந்து அணி சார்பாக ரச்சின் ரவீந்த்ரா 89 பந்துகளில் 116 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார். டரில் மிச்செல் 54 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இறுதி நேரத்தில் அதிரடியாக துடுப்பெடுத்தாடி அணிக்கு நம்பிக்கை கொடுத்த ஜேம்ஸ் நீசம், வெற்றிபெறக்கூடிய தருணத்தில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

இறுதி ஓவரில் 19 ஓட்டங்கள் தேவை என்றிருந்த போது, மிச்சல் ஸ்டார்க் பந்துவீசினார்.

அவர் இறுதி ஓவரின் இரண்டாவது பந்தை அகலப்பந்தாக வீசியதோடு, நான்கு ஓட்டமாகவும் அமைந்தது.  இந்த நிலையில் 5 பந்துகளில் 13 ஓட்டங்கள் தேவை என்ற நிலை இருந்தது.

நீசம் அடித்தாட முனைந்த போதும் அவுஸ்திரேலிய அணியின் சிறப்பான களத்தடுப்பின் காரணமாக பவுண்டரிகள் தடுக்கப்பட்டன.

இரண்டு பந்துகளில் 7 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் நீசம் ரன் அவுட் ஆக நியூசிலாந்தின் வெற்றிக் கனவு தகர்ந்தது. இறுதியில் அவுஸ்திரேலிய அணி 5 ஓட்டங்களால் பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்றது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் தெரிவானார்.

https://www.virakesari.lk/article/167972

  • கருத்துக்கள உறவுகள்
Posted

துல்லியமான பந்துவீச்சினால் பங்களாதேஷை வென்றது நெதர்லாந்து !

28 OCT, 2023 | 09:44 PM
image

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் துல்லியமான பந்துவீச்சினால் நெதர்லாந்து அணி 87 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவின் ஈடன் கார்டனில் இன்று சனிக்கிழமை (28) இடம்பெற்ற உலகக்கிண்ணத் தொடரின் 28 ஆவது போட்டியில் பங்களாதேஷ் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நெதர்லாந்து அணி முதலில் துப்பெடுத்தாட முடிவு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 229 ஓட்டங்களைப் பெற்றது.

நெதர்லாந்து அணி சார்பாக ஸ்கொட் எட்வேட்ஸ் 89 பந்துகளில் 68 ஓட்டங்களையும் வெஸ்லி பாரேசி 41 பந்துகளில் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக ஷரீஃபுல் இஸ்லாம், தஸ்கின் அகமது, முஸ்தபிசுர் ரஹ்மான், மெஹந்தி ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பதிலுக்கு 229 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணிக்கு நெதர்லாந்தின் துல்லியமான பந்துவீச்சுக்கு தக்குப்பிடிக்க முடியாது போக, 42.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ஓட்டங்களைப் பெற்று 87 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

பங்களாதேஷ் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் மெஹ்தி ஹசன் மார்ஸ் 40 பந்துகளில் 35 ஓட்டங்களையும் மஹ்முதுல்லாஹ் 41 பந்துகளில் 20 ஓட்டங்களையும் முஸ்தாபிசுர் ரஹ்மான் 35 பந்துகளில் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

நெதர்லாந்து அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய போல் வான் மீகெரென் 23 ஓட்டங்களைக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார்.

https://www.virakesari.lk/article/167973

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நிழலி said:

அவுஸ் மேல் ஏன் கோபம் பையா?

அந்த‌ கோதாரி பிடிப்பாங்க‌ள் ப‌ல‌ த‌ட‌வை கோப்பைய‌ தூக்கிட்டாங்க‌ள் அண்ணா

இதுவ‌ரை உல‌க‌ கோப்பை தூக்காத‌ அணிக‌ள் தூக்கினா இன்னும் சிற‌ப்பு அதுக்கு தான் அப்படி எழுதினேன்...........ம‌ற்ற‌ம் ப‌டி அவுஸ்ரேலியா அணி மீது என‌க்கு சிறு வெறுப்பு கூட‌ இல்லை🙏

அவுஸ்ரேலியா நாட்டில் ந‌ட‌க்கும் ப‌ல‌ வித‌ விளையாட்டு பார்த்து ர‌சிச்சு இருக்கிறேன் உதார‌ன‌த்துக்கு ( ருக்வி ) ( அவுஸ் பந்து ) (வ‌லை ப‌ந்து ) இப்ப‌டியான‌ அவுஸ்ரேலியா விளையாட்டு  ரொம்ப‌ பிடிக்கும் 🥰🙏

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
39 minutes ago, ஏராளன் said:

துல்லியமான பந்துவீச்சினால் பங்களாதேஷை வென்றது நெதர்லாந்து !

28 OCT, 2023 | 09:44 PM
image

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் துல்லியமான பந்துவீச்சினால் நெதர்லாந்து அணி 87 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவின் ஈடன் கார்டனில் இன்று சனிக்கிழமை (28) இடம்பெற்ற உலகக்கிண்ணத் தொடரின் 28 ஆவது போட்டியில் பங்களாதேஷ் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நெதர்லாந்து அணி முதலில் துப்பெடுத்தாட முடிவு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 229 ஓட்டங்களைப் பெற்றது.

நெதர்லாந்து அணி சார்பாக ஸ்கொட் எட்வேட்ஸ் 89 பந்துகளில் 68 ஓட்டங்களையும் வெஸ்லி பாரேசி 41 பந்துகளில் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக ஷரீஃபுல் இஸ்லாம், தஸ்கின் அகமது, முஸ்தபிசுர் ரஹ்மான், மெஹந்தி ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பதிலுக்கு 229 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணிக்கு நெதர்லாந்தின் துல்லியமான பந்துவீச்சுக்கு தக்குப்பிடிக்க முடியாது போக, 42.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ஓட்டங்களைப் பெற்று 87 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

பங்களாதேஷ் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் மெஹ்தி ஹசன் மார்ஸ் 40 பந்துகளில் 35 ஓட்டங்களையும் மஹ்முதுல்லாஹ் 41 பந்துகளில் 20 ஓட்டங்களையும் முஸ்தாபிசுர் ரஹ்மான் 35 பந்துகளில் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

நெதர்லாந்து அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய போல் வான் மீகெரென் 23 ஓட்டங்களைக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார்.

https://www.virakesari.lk/article/167973

வ‌ங்க‌ளாதேஸ் அணிக்கு என்ன‌ ஆச்சு

 

இப்ப‌டி போய் தோத்து இருக்கின‌ம்............நெத‌ர்லாந் அணி வ‌ர‌ வ‌ர‌ ப‌ல‌மான‌ அணியா வ‌ருது.............

 

அசுர‌ வ‌ள‌ர்ச்சி என்றால் அப்கானிஸ்தான் அணி தான்

 

ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் 2009க‌ளில் அறிமுக‌மான‌ அணி ம‌ற்ற‌ அணிக‌ளை மிர‌ட்டும் அள‌வுக்கு ப‌ல‌மான‌ அணியா வ‌ந்துட்டு.........

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, பையன்26 said:

வ‌ங்க‌ளாதேஸ் அணிக்கு என்ன‌ ஆச்சு

 

இப்ப‌டி போய் தோத்து இருக்கின‌ம்............நெத‌ர்லாந் அணி வ‌ர‌ வ‌ர‌ ப‌ல‌மான‌ அணியா வ‌ருது.............

 

அசுர‌ வ‌ள‌ர்ச்சி என்றால் அப்கானிஸ்தான் அணி தான்

 

ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் 2009க‌ளில் அறிமுக‌மான‌ அணி ம‌ற்ற‌ அணிக‌ளை மிர‌ட்டும் அள‌வுக்கு ப‌ல‌மான‌ அணியா வ‌ந்துட்டு.........

உண்மை தான் பையா, பங்களாதேசிடம் பழைய போராட்ட குணம் இல்லை!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, ஏராளன் said:

உண்மை தான் பையா, பங்களாதேசிடம் பழைய போராட்ட குணம் இல்லை!

எல்லாம் ப‌ழைய‌ அனுப‌வ‌மான‌ வீர‌ர்க‌ள் விளையாடியும் இந்த‌ தோல்வி ஏற்றுக் கொள்ள‌ முடிடிய‌ வில்லை

உந்த‌ மைதான‌த்தில் உந்த‌ ர‌ன்ஸ்ச‌ சிம்பிலா அடிச்சு வென்று இருக்க‌லாம்............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று முதல் தடவையாக இந்தியா தோற்கப் போகிறது.

அட பாவிகளா எழுதி முடிந்து கை எடுக்கிறதுக்கிடையில் இரண்டு விக்கட் போட்டுதே ஆஆஆ.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்று முதல் தடவையாக இந்தியா தோற்கப் போகிறது.

அட பாவிகளா எழுதி முடிந்து கை எடுக்கிறதுக்கிடையில் இரண்டு விக்கட் போட்டுதே ஆஆஆ.

 

39/4. 150 க்குள் இங்கிலாந்து சுருள போகின்றதோ. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்று முதல் தடவையாக இந்தியா தோற்கப் போகிறது.

அட பாவிகளா எழுதி முடிந்து கை எடுக்கிறதுக்கிடையில் இரண்டு விக்கட் போட்டுதே ஆஆஆ.

இந்திய‌ன் இங்லாந் வீர‌ர்க‌ளின் விக்கேட்டை புடுங்கி எறியினம்
இண்டைக்கும் இங்லாந் தோக்க‌ கூடும் அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்
Posted
58 minutes ago, நியாயம் said:

 

39/4. 150 க்குள் இங்கிலாந்து சுருள போகின்றதோ. 

 

51 minutes ago, பையன்26 said:

இந்திய‌ன் இங்லாந் வீர‌ர்க‌ளின் விக்கேட்டை புடுங்கி எறியினம்
இண்டைக்கும் இங்லாந் தோக்க‌ கூடும் அண்ணா

ஆரம்ப ஆட்டத்தைப் பார்த்து ஏமாந்துட்டேன்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, ஈழப்பிரியன் said:

 

ஆரம்ப ஆட்டத்தைப் பார்த்து ஏமாந்துட்டேன்.

அண்ணா உந்த‌ மைதான‌த்தில் ர‌ன் அடிப்ப‌து சிர‌ம‌ம்

இங்லாந் வீர‌ர்க‌ள் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் ஆனால் எடுத்த‌தும் அதிர‌டி ஆட்ட‌த்தில் இற‌ங்க‌ கூடாது 50ஓவ‌ர் விளையாட்டுக்கு நிதான‌ம் முக்கிய‌ம்

இங்லாந்தின் தொட‌ர் தோல்வி வ‌ருத்த‌ம் அளிக்குது

இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு அடுத்த‌ முறை இங்கிலாந் தேர்வுக் குழு முக்கிய‌த்துவ‌ம் கொடுப்பின‌ம் என்று நினைக்கிறேன்

சொந்த‌ நாட்டில் ந‌ல்லா விளையாடுவின‌ம்............இந்தியாவில் இப்ப‌டி தோல்வி அடைந்த‌து ஏற்றுக் கொள்ள‌ முடியாது

இப்ப‌ விளையாடும் அனைத்து வீர‌ர்க‌ளும் ஜ‌பிஎல்ல‌ விளையாடி இந்தியா மைதான‌ங்களை ப‌ற்றி ந‌ன்ங்கு தெரிந்த‌வ‌ர்க‌ள்

அதிஷ்ட‌ம் கை கொடுக்க‌ வில்லை இந்த‌ முறை இங்லாந் அணிக்கு 

இல‌ங்கை அணிய‌ விட‌ ப‌டு மோச‌மான‌ விளையாட்டு இங்லாந் வீர‌ர்க‌கின் விளையாட்டு............

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
India FlagIndia                229/9
England FlagEngland          (34.5/50 ov, T:230) 129

India won by 100 runs

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா ஆறாவது வெற்றி: 230 ரன் இலக்கை எட்ட விடாமல் இங்கிலாந்தை சுருட்டியது எப்படி?

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

5 மணி நேரங்களுக்கு முன்னர்

உலகக் கோப்பைத் தொடரின் 29-வது லீக் ஆட்டம் லக்னோவில் இன்று இங்கிலாந்து, இந்தியா இடையே நடந்து வருகிறது. இந்திய அணி இதுவரை ஆடிய 5 போட்டிகளிலும் வென்று 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.

இந்திய அணி இன்னும் 2 வெற்றிகள் பெற்றால், அரையிறுதிச் சுற்றை உறுதி செய்துவிடும், ஆனால், இங்கிலாந்துக்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

டாஸ் வென்ற இங்கிலந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை இந்திய அணி சேஸிங்கை மட்டும் செய்துவந்தது. ஆனால், முதல்முறையாக முதலில் பேட் செய்து, தாங்கள் அடித்த ஸ்கோரை டிபென்ட் செய்ய இருக்கிறது.

லக்னோ ஆடுகளம் எப்படி?

இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாக கூடுதல் வேகப்பந்துவீச்சாளராக முகமது ஷமி சேர்க்கப்பட்டிருந்தார். மற்ற வகையில் அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

ரோஹித் சர்மா, சுப்மான் கில் ஆட்டத்தைத் தொடங்கினர். சுப்மான் கில் தொடக்கத்திலிருந்தே இங்கிலாந்து வேகப்பந்துவீச்சுக்குத் திணறினார். ஆனால் டேவிட் வில்லே வீசிய 3வது ஓவரில் ரோஹித் சர்மா 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்து வெளுத்து வாங்கினார்.

வோக்ஸ் வீசிய 4வது ஓவரில் சுப்மான் கில் 9 ரன்னில்கிளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்துவந்த விராட் கோலி ரன் ஏதும் சேர்க்காமல் டேவிட் வில்லே வீசிய ஓவரில் மிட் ஆப் திசையில் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

இப்படியா ஆட்டமிழப்பீங்க..!

3வது விக்கெட்டுக்கு வந்த ஸ்ரேயாஸ் அய்யர், ரோஹித்துடன் இணைந்தார். ஸ்ரேயாஸ் ஷார்ட் பந்துக்கு தொடர்ந்து திணறி விக்கெட்டை இழந்து வந்ததை இங்கிலாந்து அணி கவனித்தது. நியூசிலாந்துக்கு எதிராகவும் ஸ்ரேயாஸ் ஷார்ட் பந்தில் ஆட்டமிழந்திருந்தார்.

அதேபோன்று இந்த முறையும் வோக்ஸ் வீசிய ஷார்ட் பந்துவீச்சு இரையாகி ஸ்ரேயாஸ் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். வோக்ஸ் வீசிய பந்து சாதாரண பவுன்ஸர் அதை தேவையில்லாமல் தூக்கி அடித்து ஸ்ரேயாஸ் விக்கெட்டை இழந்தது ரசிகர்களால் கடுமையாக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுகிறது.

இந்திய அணி 40 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பவர்ப்ளே ஓவரில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்களைச் சேர்த்தது.

பவர்ப்ளேயில் கடைசி 6 ஓவர்களில் இந்திய அணி, 9 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 5 முதல் 10 ஓவர்களில் குறைவான ரன்கள் சேர்த்த அணியாக 2007ம் ஆண்டுக்குப்பின் இந்திய அணி உள்ளது.

 
இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

தப்பிப் பிழைத்த ரோஹித் சர்மா

4-வது விக்கெட்டுக்கு கேஎல் ராகுல், ரோஹித் ஜோடி இணைந்தது. மார்க் உட் வீசிய 15-வது ஓவரில் ரோஹித் சர்மா கால்காப்பில் வாங்கியதற்கு கள நடுவர் அவுட் வழங்கினார். ஆனால், ரோஹித் 3வது நடுவரிடம் மேல்முறையீடு செய்யவே, ஆய்வுக்குப்பின் அவுட் இல்லை என முடிவு வந்தது. அதன்பின் ராகுல் அமைதி காக்க, ரோஹித் சர்மா ஓவருக்கு ஒரு பவுண்டரி விளாசினார்.

1,000 ரன்களை எட்டிய ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா 42 ரன்களை எட்டியபோது, 2023ம் ஆண்டில் ஒருநாள் தொடரில் ஆயிரம் ரன்களை எட்டிய பேட்டர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்குமுன் இந்த ஆண்டில் இலங்கையின் நிசாங்கா, சுப்மான் கில் ஆயிரம் ரன்களை எட்டியிருந்தனர்.

மந்தமான ஆட்டம்

10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் சேர்த்தது. இந்த 10 ஓவர்களில் 38 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட்டையும் இழந்தது இந்திய அணி, ரன்ரேட் மிகவும் குறைவாக 3.65 என்ற ரீதியில் சென்றது.

ரோஹித் அரைசதம்

மார்க் உட் வீசிய 24-வது ஓவரில் 2 ரன்கள் அடித்து ரோஹித் சர்மா 51 பந்துகளில் அரைசதம் அடித்தார். அடுத்த ஓவரில் லெக் திசையில் சிக்ஸரையும் ரோஹித் விளாசினார். ரோஹித் சர்மா மெதுவாக ஆட்டத்தைத் தொடங்கினார்.

7 பந்துகள் வரை ரன் சேர்க்காத ரோஹித் சர்மா, 11 பந்துகளில் 17 ரன்களாக உயர்த்தினார். விக்கெட் சரிந்தபின் கேப்டன் பொறுப்புடன் நிதானமாக ஆடத் தொடங்கிய ரோஹித், கேஎல்ராகுல் வந்தபின் நங்கூரமிட்டார். இந்திய அணி சேர்த்த 90 ரன்களில் 57 ரன்கள் ரோஹித் சர்மா சேர்த்ததாகும்.

லிவிங்ஸ்டன் வீசிய 25வது ஓவரில் ராகுல் 2 பவுண்டரி உள்ளிட்ட 11 ரன்கள் சேர்த்தார், இதையடுத்து, இந்திய அணி 25 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் சேர்த்தது.

லிவிங்ஸ்டன் வீசிய 26-வது ஓவரில் ரோஹித் சர்மா ரிவர்ஸ் ஸ்வீப்பிலும், தேர்டுமேன் திசையிலும் இரு பவுண்டரிகளை விளாசி 11 ரன்கள் சேர்த்தார். 30ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் சேர்த்திருந்தது.

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரோஹித் சதமடிக்காமல் ஏமாற்றம்

டேவிட் வில்லே வீசிய 31வது ஓவரின் 2வதுப ந்தில் ராகுல் 39 ரன்கள் சேர்த்தநிலையில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு ரோஹித், ராகுல் கூட்டணி 91 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்து வந்த 360 டிகிரி வீரர் சூர்யகுமார் யாதவ், ரோஹித்துடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர், மோசமான பந்துகளை மட்டுமே பவுண்டரிக்கு விரட்டினர்.

சதத்தை நெருங்கிய ரோஹித் சர்மா 87 ரன்களில்(3சிக்ஸர்,10பவுண்டரி) அதில் ரஷித் பந்துவீச்சில் லிவிங்ஸ்டோன் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். 40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்திருந்தது.

இந்தியா மீண்டும் திணறல்

அடுத்து களமிறங்கிய ஆல்ரவுண்டர் ஜடேஜா வந்த வேகத்தில் 8 ரன்களில் ரஷித் பந்துவச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். கடந்த 2020ம் ஆண்டுக்குப்பின் ஜடேஜா, ஒருநாள் போட்டியில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. பெயரளவுக்குத்தான் ஆல்ரவுண்டர் என்று பெயர் இருக்கிறது, ஆனால், இதுவரை அதற்கான தாத்பரியத்துடன் 2 ஆண்டுகளாக ஆடவில்லை.

அடுத்துவந்த ஷமி ஒரு ரன்னில் மார்க் உட் பந்துவீச்சில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 131 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி, அடுத்த 52 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

இங்கிலாந்துக்கு 230 ரன் இலக்கு

கடைசிக் கட்டத்தில் சூர்யகுமார் யாதவ் சற்று கைகொடுத்ததால்தான் இந்திய அணியால் 200 ரன்களை கடக்க முடிந்தது. மற்ற வீரர்கள் யாருமே சொல்லிக் கொள்ளும் படி ஆடவில்லை.

சூர்யகுமார் யாதவ் 47 பந்துகளில் 49 ரன் எடுத்து, டேவிட் வில்லே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்களையே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 87 ரன்னும், சூர்யகுமார் 49 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக டேவிட் வில்லே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த ஆடுகளத்தில் 250 ரன்கள் சேர்த்தாலே சேஸிங் செய்வது கடினம் என்று கணிக்கப்பட்டிருந்தது. இந்திய அணி 20 ரன்கள் குறைவாக சேர்த்துள்ளது. பும்ரா 16 ரன்னில் ரன்அவுட் ஆகினார். இந்திய அணி தரப்பில் பும்ரா சேர்த்ததுதான் 4வது அதிகபட்ச ஸ்கோராகும்.

28 ஓவர்கள் டாட் பந்துகள்

முதல் 10 ஓவர்கள் பவர்ப்ளே ஓவரில் 2 விக்கெட்டுகளையும் கடைசி டெத் ஓவரில் 4 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. இந்திய அணி பேட்டர்கள் இன்று ஏராளமான டாட் பந்துகளை விட்டனர். ஏறக்குறைய 173 டாட்பந்துகள் அதாவது 28ஓவர்களில் எந்தவிதமான ரன்னும் அடிக்காமல் வீணடித்துள்ளனர்.

இதற்கு முக்கியக் காரணம், கோலி, ஸ்ரேயாஸ், கில் ஆகிய 3 முக்கிய பேட்டர்களும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்ததால், விக்கெட்டை நிலைப்படுத்த வேறுவழியின்றி, ரோஹித், ராகுல் நிதானமாக விளையாட வேண்டிய தேவை இருந்தது.

அது மட்டுமல்லாமல் ஆடுகளமும் வேகப்பந்துவீச்சுக்கும், சுழற்பந்துவீச்சுக்கும் அதிகமாக உதவியது, சற்று பவுன்ஸரும் இருந்ததால், பேட்ஸ்மேன்கள் கடும் சிரமப்பட்டனர்.

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

அஸ்வின் இல்லாத வெறுமை

இன்றைய ஆட்டத்தில் முகமது ஷமிக்குப் பதிலாக அஸ்வின் இருந்திருந்தால், கூடுதலாக ஒரு ஆல்ரவுண்டர் கிடைத்திருப்பார். ஓரளவுக்கு ரன்களையும் சேர்த்திருப்பார். லக்னோ ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு நன்றாக ஒத்துழைக்கும் ஆடுகளத்தில் அஸ்வினின் பந்துவீச்சு இங்கிலாந்து அணிக்கு பெரிய சவாலாக இருந்திருக்கும். அஸ்வின் இல்லாத வெறுமை பேட்டிங்கிலும் தெரிந்தது.

11 ஆண்டுகளுக்குப் பின் குறைந்தபட்ச ஸ்கோர்

ஒருநாள் போட்டியி்ல் 2019ம் ஆண்டு உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 8 விக்கெட்இழப்புக்கு 224 ரன்கள் சேர்த்தது இந்திய அணி. அதன்பின் அடித்த இந்திய அணியின் குறைந்தபட்சஸ்கோர் என்று இங்கிலாந்துக்கு எதிராக 229 ரன்கள் சேர்த்ததுதான்.

அது மட்டுமல்லாமல் உள்நாட்டில் கடைசியாக 2012ம் ஆண்டு சென்னையில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் சேர்த்ததுதான் குறைந்தபட்ச ஸ்கோர். அதன்பின் உள்நாட்டில் இந்திய அணி சேர்த்த குறைந்தபட்ச ஸ்கோர் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 229 ரன்கள் சேர்த்ததுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

டாட் பால் அழுத்தம் கொடுத்த இங்கிலாந்து பந்துவீச்சு

இந்திய அணியின் பேட்டர்களை ரன் ஏதும் அடிக்கவிடாமல் லைன் லென்த்தில் வீசி இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் தொடக்கத்திலிருந்தே நெருக்கடி அளித்தனர். ஆடுகளம் பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைத்து, இங்கிலாந்து ஆடுகளம் போல் இருந்ததால், வோக்ஸ், மார்க்வுட், வில்லே ஆகியோர் பந்தை நன்றாக பவுன்ஸ் ஆகியது. இதனால் தொடக்கத்திலிருந்தே விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் ரன் சேர்ப்புக்கு நெருக்கடி அளித்தனர். இதனால் விக்கெட் வீழ்ச்சியைத் தடுக்கும் முனைப்பில் இந்திய பேட்டர்கள் டாட்பால் அழுத்தத்துக்கு தள்ளப்பட்டு, பந்துகளை வீணடித்தனர்.

வோக்ஸ் 9 ஓவர்கள் வீசி ஒருமெய்டன் 33 ரன்கல் கொடுத்து ஒரு விக்கெட்டையும், டேவிட் வில்லே 10ஓவர்கள் வீசி2 மெய்டன் 45 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.அதில் ரஷித் 10ஓவர்கள் வீசி 35 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் சாய்த்தார். மார்க் உட் 9ஓவர்கள் வீசி ஒரு மெய்டன்46 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

இங்கிலாந்துக்கு தொடக்கமே அதிர்ச்சி

230 ரன்கள் எனும் இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோ ஆட்டத்தைத் தொடங்கினர். பும்ரா பந்துவீச்சை இங்கிலாந்து பேட்டர்களால் தொடக்கூட முடியாத அளவுக்கு துல்லியமாக இருந்தது, ஆனால், சிராஜ் பந்துவீச்சில் மட்டும் மலான், பேர்ஸ்டோ பவுண்டரி, சிக்ஸர் விளாசினர்.

பும்ரா வீசிய 5-வது ஓவரில் பவுண்டரி அடித்த மலான், 5-வதுபந்தில் கிளீன் போல்டாகி 16 ரன்னில் வெளியேறினார். அரவுண்ட் ஸ்டெம்பில் லென்த்தில் துல்லியமாக வந்த பந்தை இடைவெளி கொடுத்து கட்ஷாட் அடிக்க மலான் முயன்றபோது, பந்து ஏமாற்றி பேல்டாகியது. அடுத்துவந்த ஜோ ரூட், வந்த வேகத்தில் பும்ரா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி கோல்டக் அவுட்டாகி வெளியேறினார்.

6-வது ஓவரிலிருந்து ஷமி பந்துவீச அழைக்கப்பட்டார். பும்ராவும், ஷமியும் சேர்ந்து இங்கிலாந்து பேட்டர்களுக்கு கடும் நெருக்கடி அளித்து கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். இதனால் ரன்சேர்க்க பேர்ஸ்டோவும், பென் ஸ்டோக்ஸும் கடும் சிரமப்பட்டனர்.

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

10 ரன்களுக்கு 4 விக்கெட்

ஷமி வீசிய 8-வது ஓவரில் க்ளீன் போல்டாகி பென் ஸ்டோக்ஸ் டக்அவுட்டில் பெவிலியன் திரும்பினார். அடுத்துவந்த பட்லர், பேர்ஸ்டோவுடன் இணைந்தாலும் ஸ்கோரில் பெரிதாக முன்னேற்றமில்லை. ஷமி வீசிய 10-வது ஓவரில் மீண்டும் ஒரு பிரேக் கிடைத்தது. பேர்ஸ்டோ 14 ரன்கள் சேர்த்தநிலையில் ஷமி ஓவரில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார்.

30 ரன்கள் வரை இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி இருந்தநிலையில், 40 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதாவது 10 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.

2007-க்குப் பின்

2007ம் ஆண்டுக்குப்பின் ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணியின் டாப்ஆர்டரில் 4 பேட்டர்கள் போல்ட் அல்லது கால்காப்பில் வாங்கி ஆட்டமிழப்பது இதுதான் முதல்முறையாகும். 2007ம் ஆண்டுக்குப்பின் உலகக் கோப்பையில் முதல் 10 ஓவர்களில் டாப்-3 பேட்டர்களை போல்ட் மூலம் ஆட்டமிழக்கச் செய்தது இதுதான் முதல்முறையாகும்

நிரூபித்த ஷமி

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஷர்துல் தாக்கூர் ஆல்ரவுண்டர், அவரால் பேட்டிங்கும் செய்ய முடியும் என்பதால், அவருக்கு தொடக்கத்தில் வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால், ஷர்துல் தாக்கூர் அளவுக்கு ஷமியால் பேட்டிங் செய்ய முடியாது என்றாலும், விக்கெட் எடுக்கும் வித்தை தெரிந்தவர். ஷர்துலைவிட, அதிகமான விக்கெட்டுகளையும், ரன்களையும் சேமிக்கும் கலை தெரிந்தவர் ஷமி. இந்த போட்டியில்கூட ஷர்துல் இருந்தால் கூடுதலாக 30 ரன்கள் வந்திருக்கும் என்று யாரும் நினைக்காத அளவுக்கு ஷமியின் பந்துவீச்சு அமைந்திருந்தது. பும்ராவும் ஷமியும் இணைந்து எதிரணிக்கு கொடுத்த அழுத்தம் வேறு எந்த பந்துவீச்சாளர்களாலும் இருந்திருக்காது.

11-வது ஓவர் முதல் 15-வது ஓவர்கள் வரை குல்தீப், ஷமி, சிராஜ் மூவரும் சேர்ந்து இங்கிலாந்து பேட்டர்களை ரன் சேர்க்கவிடாமல் திணறவிட்டனர். இதனால் 5 ஓவர்களாக பவுண்டரியே வரவில்லை.

குல்தீப் யாதவ் வீசிய 16-வது ஓவரின் முதல் பந்தில் ஜாஸ் பட்லர் பந்தை தவறாகக் கணித்து ஆட முற்பட்டு 10 ரன்னில் கிளீ்ன் போல்டாகினார். குல்தீப் பந்தை “இன்னர் கட் ஷாட்” ஆட முற்பட்டார் பட்லர் ஆனால், பந்தை கணிக்கத் தவறியதால், க்ளீன் போல்டாகியது.

அடுத்துவந்த லிவிஸ்ஸ்டன், மொயின் அலி கூட்டணி ஓரளவுக்கு நிலைத்து ஆட முற்பட்டனர். 6 ஓவர்களுக்குப்பின் லிவிங்ஸ்டன் பவுண்டரி அடித்தார். 20ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் சேர்த்து மூழ்கிக்கொண்டிருந்தது.

ஷமியிடம் வீழ்ந்த மொயின்அலி

லிவிங்ஸ்டன், மொயின் அலி நங்கூரம் அமைக்க முயன்றனர். சில பவுண்டரிகளையும் லிவிங்ஸ்டன் விளாசினார். இருவரில் ஒருவரை வீழ்த்தினால், இந்தியாவின் வெற்றி எளிதாகும் என்று கணிக்கப்பட்டது. இந்த நேரத்தில் மீண்டும் ஷமி பந்துவீச அழைக்கப்பட்டார். அவர் வருகை நியாயம் என்று முதல் பந்திலேயே ஷமி நிரூபித்தார்.

ஷமி வீசிய 24-வது ஓவரின் முதல் பந்தில் மொயின் அலி “அவுட்சைட் எட்ஜ்” எடுத்து ராகுலிடம் கேட்ச் கொடுத்து 15ர ன்னில் ஆட்டமிழந்தார். 8-வது விக்கெட்டுக்கு வந்த கிறிஸ் வோக்ஸ், லிவிங்ஸ்டனுடன் சேர்ந்தார்.

17 ரன்களுக்கு 3 விக்கெட்

வந்த வேகத்தில் வோக்ஸ் பவுண்டரி அடித்தாலும் நிலைக்கவில்லை. ஜடேஜா வீதிய 29-வது ஓவரின் முதல் பந்தை இறங்கி வந்து தூக்கி அடிக்க வோக்ஸ் முற்பட்டு ராகுலால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு 10 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

29 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் சேர்த்திருந்தது. 30-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். குல்தீப் வீசிய 2வது பந்தை ஸ்வீப் ஷாட் ஆட லிவிங்ஸ்டன் முற்பட்டு கால்காப்பில் வாங்கினார். இந்திய வீரர்கள் தரப்பில் பெரிய அப்பீல் செய்யவே களநடுவர் அவுட் வழங்கினார். ஆனால், லிவிங்ஸ்டன் 3வது நடுவரிடம் அப்பீல் செய்தார். இதை ஆய்வு செய்த 3வது நடுவர் அவுட் வழங்கி உறுதி செய்தார். இதையடுத்து, லிவிங்ஸ்டன் 27 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

81 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து அணி, அடுத்த 17 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிரடி ஆட்டத்துக்கு புகழ்பெற்ற லிவிங்ஸ்டன் பொறுமையாக ஆடியதும் வீணாகியது. இங்கிலாந்து அணி 29.4 ஓவர்களில் 100 ரன்களை போராடி எட்டியது.

ஷமி வீசிய 34-வது ஓவரில் அதில் ரஷித் 2 பவுண்டரிகளை அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால்,அதே ஓவரின் கடைசிப்பந்தை இன்ஸ்விங் முறையில் ஷமி உள்ளே வீசினார். இதுபோன்ற பந்தை ஆடத் தெரியாத டெய்லென்டர் ரஷித் 13ரன்னில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.

ஸ்டார்க் சாதனையை சமன் செய்த ஷமி

2015 முதல் 2023 வரை ஒருநாள் போட்டி உலகக் கோப்பைப் போட்டியில் 4 விக்கெட்டுகளுக்கு மேல் 6 முறை எடுத்த பந்துவீச்சாளர்களில் ஆஸ்திரேலியாவின் மிட்ஷெல் ஸ்டார்க் சாதனையை இந்திய வீரர் ஷமி சமன் செய்தார். உலகக் கோப்பையில் 56 விக்கெட்டுகளை ஸ்டார்க் எடுத்தநிலையில் ஷமி 40 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 4 விக்கெட்டுகளை 4 முறையும், 5 விக்கெட்டுகளை இரு முறையும் ஷமி வீழ்த்தியுள்ளார்.

35வது ஓவரை பும்ரா வீசினார். டேவிட் வில்லே ஒரு சிக்ஸர் விளாசி பரபரப்பு ஏற்படுத்தினார். ஆனால், பும்ராவின் யார்கர் பந்துவீச்சில் டெய்லண்டர் மார்க் உட் க்ளீன் போல்டாகி டக்அவுட்ஆகிய பெவிலியன் திரும்பினார்.

இங்கிலாந்து அணி 34.5 ஓவர்களில் 129 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஷமி, பும்ரா ஹீரோ

இந்தியத் தரப்பில் முகமது ஷமி 8 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளையும், பும்ரா 6.5 ஓவர்கள் வீசிய ஒருமெயன்டன் 32 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

https://www.bbc.com/tamil/articles/c4nl1941v4wo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹிந்தியா அமோக‌ வெற்றி😏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பையன்26 said:

ஹிந்தியா அமோக‌ வெற்றி😏

தென்னாபிரிக்காவுக்கு அடுத்த இரண்டு போட்டிகள் மிகவும் சவாலானவை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
23 minutes ago, ஈழப்பிரியன் said:

தென்னாபிரிக்காவுக்கு அடுத்த இரண்டு போட்டிகள் மிகவும் சவாலானவை.

தென் ஆபிரிக்கா தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் நல்ல‌ தொட‌க்க‌ம் கொடுத்தா இந்தியாவை வெல்ல‌லாம்.............மைதான‌த்துக்கு ஏற்ற‌ போல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை க‌ப்ட‌ன் ச‌ரியா தெரிவு செய்தால் வெற்றி தென் ஆபிரிக்காவுக்கே

 

இந்தியா ஒன்றும் வீழ்த்த‌ முடியாத‌ அணி கிடையாது

 

2016 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பை இந்தியாவில் ந‌டந்த‌து அப்ப‌ இருந்த‌ வெஸ்சின்டீஸ் அணி இந்தியா இங்லாந் அணிக‌ளை வீழ்த்தி கோப்பைய‌ வென்ற‌து

Edited by பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரையிறுதியை நெருங்கும் இந்திய அணி - உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்புகள் என்ன?

இந்திய அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

“2011 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கும் , 2023-இல் விளையாடி வரும் இந்திய அணிக்கும் இரு பெரிய வேறுபாடு இருக்கிறது. 2011-ஆம் ஆண்டு இந்திய அணி மிக ஒற்றுமையாக இருந்தது. சச்சின் டெண்டுல்கருக்காக உலகக் கோப்பையை வென்றுதர வேண்டும் என்று விரும்பியது. ஆனால், இப்போதிருக்கும் அணியைப் பற்றி எனக்குத் தெரியாது. கோலிக்காக யார் உலகக் கோப்பை வென்றுதரப்போகிறார்கள் என எனக்குத் தெரியாது. ஆனால், ‘இந்தியாவுக்காக’ உலகக் கோப்பையை உறுதியாக வெல்வார்கள். இதுதான் பெரிய வித்தியாசம்.”

இந்த வார்த்தைகளைக் கூறியது, 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் ‘கூல் கேப்டன்’ எம்.எஸ்.தோனி.

தோனியின் கணிப்பு, களத்திலும் களத்துக்கு வெளியேயேயும் பெரும்பாலும் தப்பியதில்லை. இந்திய அணி இம்முறை கோப்பையை வெல்லும் அனைத்து தகுதிகளுடனும் இருக்கிறது.

2015, 2019 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதிவரை சென்ற இந்திய அணி இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஏறக்குறைய அரையிறுதியை எட்டிவிட்டது. அடுத்ததாக இரு படிக்கட்டுகள் மட்டுமே கோப்பையை வெல்ல இந்திய அணி கடக்க வேண்டியுள்ளது.

2013-ஆம் ஆண்டுக்குப்பின் ஐசிசி சார்பில் இதுவரை எந்தக் கோப்பையையும் வெல்ல முடியாமல் இந்திய அணி தவித்து வருகிறது. இது இந்தமுறை நிறைவேறும் என ரசிகர்கள் நம்புகிறார்கள்.

 
இந்தியா, இங்கிலாந்து, கிரிகெட் உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

1985-ஆம் ஆண்டு என்ன நடந்தது?

தற்போதிருக்கும் சூழ்நிலையைப் பார்த்தால் 1985-ஆம் ஆண்டின் ‘வோர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் கிரிக்கெட்’ போட்டி நினைவுக்கு வராமல் போகாது. ஆஸ்திரேலியாவில் நடந்த இந்தத் தொடரில் உலக கிரிக்கெட் அணிகள் அனைத்தும் பங்கேற்றன. சுனில் கவாஸ்கர் தலைமையில் சென்ற இந்திய அணி, ‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதி சென்றது. அரையிறுதியில் நியூசிலாந்தை வென் ற இந்திய அணி, இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதியது.

இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் சேர்த்த 176 ரன்களை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது இந்திய அணி. இந்தத் தொடரில் இந்திய அணி வெளிப்படுத்திய ஆட்டம்தான் இப்போதுள்ள இந்திய அணியின் செயல்பாட்டைப் பார்க்கும்போதும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

சிறப்பான ஃபார்மில் இந்திய அணி

பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் என மூன்று பிரிவுகளிலும் இந்திய அணி சமநிலையுடன் இருக்கிறது என்று கிரிக்கெட் நோக்கர்களும் ரசிகர்களும் கூறுகின்றனர். ரோகித் சர்மா விளையாடாவிட்டால், கோலி அணியை தூக்கி நிறுத்துகிறார். கோலி ஆட்டமிழந்துவிட்டால் ரோகித் கேப்டனுக்குரிய பொறுப்புடன் செயல்படுகிறார். நடுவரிசை முன் எப்போதும் இல்லாத வகையில் ஸ்திரமாக இருக்கிறது. ஹர்திக் பாண்டியா காயத்தால் ஓய்விலிருக்கும் போதும், எந்த பாதிப்பும் குறையும் இல்லாத நிலையில் அணி தன்னைச் சரி செய்து கொள்கிறது, என்று பேசப்படுகிறது.

இதுவரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் என 6 அணிகளையும் இந்திய அணி வென்றிருக்கிறது.

பந்துவீச்சில் இதுவரை எந்த உலகக் கோப்பைத் தொடரிலும் இல்லாத வகையில் துல்லியமான, கட்டுக்கோப்பான, உலக அணிகளுக்குச் சவாலான பந்துவீச்சை இந்திய அணி இப்போது வெளிப்படுத்தி வருகிறது. இத்தகைய சமநிலையுடன் இருக்கும் இந்திய அணிக்குக் கோப்பையை வெல்லும் சாத்தியமும், தகுதியும் உள்ளது என்று பரவலாகப் பார்க்கப்படுகிறது.

 
இந்தியா, இங்கிலாந்து, கிரிகெட் உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, 20 ஆண்டுகளுக்குப்பின் ஒரு வலுவான வலுவான பதிலிடியை இந்திய அணி வழங்கியிருக்கிறது

20 ஆண்டுகளுக்குப்பின் வெற்றி

கடைசியாக 2003-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியை உலகக் கோப்பையில் இந்திய அணி வென்றது. அதன்பின் 20 ஆண்டுகளாக ஆதிக்கம் செய்து வந்தது இங்கிலாந்து அணி.

இந்நிலையில், லக்னோவில் நேற்று (ஞாயிறு, அக்டோபர் 29) நடந்த உலகக் கோப்பைத் தொடரின் லீக் ஆட்டத்தில், இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, 20 ஆண்டுகளுக்குப்பின் ஒரு வலுவான வலுவான பதிலடியை இந்திய அணி வழங்கியிருக்கிறது.

இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பைத் தொடரில் 6 போட்டிகளிலும் தோல்வி அடையாத அணியாக 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் இந்திய அணி இருக்கிறது. தனது நிகர ரன்ரேட்டை 1.405 ஆக வைத்துள்ளது.

முதல்முறை ‘டிஃபெண்ட்’ செய்து வெற்றி

இந்திய அணி கடந்த 5 ஆட்டங்களில் சேஸிங் செய்துதான் வெற்றி பெற்று வந்தது. அதனால், வலுவான பேட்டிங்கை வைத்துள்ள இந்திய அணியால் சேஸிங் செய்துதான் வெல்ல முடியும், பெரிய ஸ்கோரை அடித்து டிபெண்ட் செய்யும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்றெழுந்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்திருக்கிறது இந்திய அணி.

இந்த உலகக் கோப்பைத் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் முதல்முறையாக முதலில் பேட் செய்து, தாங்கள் சேர்த்த ஸ்கோரை டிபெண்ட் செய்து இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

சவாலான ஆடுகளம்

லக்னோ ஆடுகளம் பேட்டிங் செய்ய மிகவும் சவாலானது. இங்கிலாந்து, இந்தியா ஆகிய இரு அணிகளின் பந்துவீச்சாளர்களுக்குமே ஆடுகளம் ஒத்துழைத்தது.

இந்த ஆடுகளத்தில் தொடக்கத்திலேயே இந்திய அணியின் 3 முக்கிய பேட்டர்களான சுப்மான் கில், கோலி, ஸ்ரேயாஸ் ஆகியோர் விக்கெட்டுகளை இழந்தாலும், கேப்டன் ரோகித் சர்மா அசரவில்லை. அவர் கேப்டனுக்குரிய பொறுப்புடன் பேட் செய்து 87 ரன்கள் சேர்த்தார்.

நடுவரிசையில் ராகுல் 39 ரன்களும், சூர்யகுமார் 49 ரன்களும் சேர்த்து, மொத்தம் 229 ரன்கள் என்ற கவுரமான ஸ்கோரை எட்டினர்.

 
இந்தியா, இங்கிலாந்து, கிரிகெட் உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கோலி ஆட்டமிழந்துவிட்டால் ரோகித் கேப்டனுக்குரிய பொறுப்புடன் செயல்படுகிறார்

டாப்-4 பேட்டர்கள் வரிசையில் ரோகித் சர்மா

பேட்டிங்கில் 3 முக்கிய பேட்டர்கள் ஆட்டமிழந்து சென்றாலும், ரோகித் சர்மா கேப்டனுக்குரிய பொறுப்புடன் ஆடியுள்ளார். கடந்த 6 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் உள்ளிட்ட 398 ரன்கள் சேர்த்து டாப்-4 வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

அதேபோல விராட் கோலியும் தனது பங்களிப்பைச் செய்துள்ளார். இந்த ஆட்டத்தில் கோலி ‘டக்-அவுட்’ ஆகியிருந்தாலும், ஒரு சதம், இரு அரைசதங்கள் உள்ளிட்ட 354 ரன்கள் சேர்த்து வலுவான பங்களிப்பை அளித்துள்ளார். நடுவரிசைக்கு கே. எல். ராகுல் வலு சேர்க்கிறார். இதுவரை 6 இன்னிங்ஸ்களில் 216 ரன்கள் சேர்த்து எதிரணிகளுக்கு சிம்மசொப்னமாக வலம் வருகிறார்.

இந்த ஆட்டத்தில், 8-வது வரிசைக்குப்பின் பேட்டர்கள் இல்லை எனத் தெரிந்தும், சவாலான ஆடுகளத்தில் கூடுதல் பந்துவீச்சாளராக ஷமியுடன் இந்திய அணி பயணித்த முடிவு சரியானது என்று நிரூபணமாகியிருக்கிறது.

பும்ரா-ஷமியின் மிரட்டல்

லக்னோ ஆடுகளத்தைப் பொறுத்தவரை இந்திய அணி சேர்த்த 229 ரன்களை சேஸிங்கை செய்வதுகூட கடினம்தான் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கணித்தனர். ஏற்கெனவே இங்கிலாந்து பேட்டிங்கில் திணறிவந்த நிலையில், பும்ரா, ஷமி ஆகியோரின் பந்துவீச்சில் மேலும் சிதைந்தது.

முதல் 10 ஓவர்களுக்குள் முகமது ஷமியும், பும்ராவும் சேர்ந்து இங்கிலாந்து அணியின் டாப்ஆர்டர் பேட்டர்களை வெளியேற்றினர். முதல் 5 ஓவர்கள் வரை இங்கிலாந்து அணி 30 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி வலுவாகத்தான் இருந்தது.

ஆனால், பும்ரா மற்றும் ஷமி வீசிய 6-வது ஓவரிலிருந்து 9-வது ஓவர் வரை இங்கிலாந்து அணியைப் புரட்டிப்போட்டது. இருவரும் 9 ரன்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணியின் உலகக் கோப்பைக் கனவைக் கேள்விக்குறி ஆக்கியிருக்கின்றனர்.

வேகப்பந்துவீச்சில் பும்ரா-ஷமி கூட்டணி எதிரணிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை விடுத்து வருகிறது. இதுவரை பும்ரா 6 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறார்.

 
இந்தியா, இங்கிலாந்து, கிரிகெட் உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அதிகமான விக்கெட்டுகளையும், ரன்களையும் சேமிக்கும் கலை தெரிந்தவர் ஷமி

தன் அவசியத்தை நிரூபித்த ஷமி

முகமது ஷமி 3 போட்டிகளில் மட்டுமே களமிறங்கினாலும், 9 விக்கெட்டுகளைச் சாய்த்து தனது இருப்பை நிரூபித்து வருகிறார். ஷர்துல் தாக்கூர் ஆல்ரவுண்டர், அவரால் பேட்டிங்கும் செய்ய முடியும் என்பதால், அவருக்கு தொடக்கத்தில் வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால், ஷர்துல் தாக்கூர் அளவுக்கு ஷமியால் பேட்டிங் செய்ய முடியாது என்றாலும், விக்கெட் எடுக்கும் வித்தை தெரிந்தவர்.

ஷர்துலைவிட, அதிகமான விக்கெட்டுகளையும், ரன்களையும் சேமிக்கும் கலை தெரிந்தவர் ஷமி. இந்தப் போட்டியில்கூட ஷர்துல் இருந்தால் கூடுதலாக 30 ரன்கள் அடித்திருப்பார் என்று யாரும் நினைக்காத அளவுக்கு ஷமியின் பந்துவீச்சு கடந்த போட்டிகளில் அமைந்திருந்தது. பும்ராவும் ஷமியும் இணைந்து எதிரணிக்கு கொடுத்த அழுத்தம் வேறு எந்த பந்துவீச்சாளர்களாலும் இருந்திருக்காது.

 

சுழற்பந்துவீச்சின் ஆதிக்கம்

உலகக் கோப்பை முழுவதிலும் ஜடேஜா, குல்தீப் ஆகியோரின் பந்துவீச்சு ஆதிக்கம் செலுத்துகிறது. குறிப்பாக நேற்றைய ஆட்டத்தில், பனிப்பொழிவு துவங்கியபின், இருவரும் இங்கிலாந்து பேட்டர்கள் ரன் எடுக்கவிடாத வகையில் நெருக்கடியாகப் பந்துவீசினர்.

குல்தீப் யாதவ் இந்த உலகக் கோப்பைத் தொடரில் மட்டும் 6 இன்னிங்ஸ்களில் 10 விக்கெட்டுகளையும், ஜடேஜா 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சுழற்பந்துவீச்சுக்கு வலு சேர்க்கிறார்கள். அஸ்வின் உலகக் கோப்பைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிளேயிங் லெவனில் சேர்க்காதது விமர்சிக்கப்பட்டாலும், இருவரும் தங்களின் இருப்பை தங்களின் பந்துவீச்சால் நியாயப்படுத்தி வருகிறார்கள்.

இப்போதுள்ள இந்திய அணி, பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் என எதிலும் தன்மீது பெரிதாகக் குறைகூற முடியாத அளவுக்குச் சிறப்பாக விளையாடி வருகிறது.

இந்திய அணி குறித்து முன்னாள் கேப்டன் எம். எஸ். தோனி கூறுகையில், “இப்போதுள்ள இந்திய அணி சிறந்த அணியாகப் பார்க்கிறேன். பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் சமநிலையுடன் இருப்பதாகப் பார்க்கிறேன். அனைத்தும் சரியாக சிறப்பாக இருக்கிறது, இதைத் தவிர வேறு ஏதும் பெரிதாகக் கூறமாட்டேன். இந்த சமிக்ஞைகளே நமக்குப் போதுமானது,” எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cg607x9g0lgo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையை பாடாய் படுத்திய ஆப்கானிஸ்தான் - நெருக்கடியை சமாளிக்குமா?

இலங்கையை பாடாய் படுத்திய ஆப்கானிஸ்தான் - நெருக்கடியை சமாளிக்குமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

புனேவில் நடைபெறும் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஆப்கானிஸ்தான் பெரும் நெருக்கடி கொடுத்து வருகிறது.

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

புனேவில் இன்று நடந்து வரும் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இலங்கையை எதிர்த்து ஆப்கானிஸ்தான் அணி சேஸிங் செய்து வருகிறது.

இரு அணிகளுக்குமே இந்த ஆட்டத்தில் கிடைக்கும் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது. இரு அணிகளும் தற்போது 4 புள்ளிகளுடன் இருப்பதால், அடுத்த கட்டத்துக்குச் செல்ல வெற்றி அவசியம் என்பதால் வெற்றிக்காக கடுமையாகப் போராடுகின்றன.

ஆனால், ஆப்கானிஸ்தானும், இலங்கையும் சம வலிமையுடன் இருக்கின்றனவா என்றால் இல்லை. ஆப்கானிஸ்தானின் வலிமையான பந்துவீச்சுக்கு இணையாக இலங்கை அணி போட்டியிட முடியாமல் முதல் இன்னிங்ஸில் திணறியது.

அதன் விளைவாக ஆப்கானிஸ்தானுக்கு 242 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 
இலங்கை அணி தடுமாற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது.

ஆப்கான் டாஸ் வெற்றி

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. இரவு நேரத்தில் பனிப்பொழிவு இருப்பதால், அதை சாதகமாகப் பயன்படுத்தும் நோக்கில் சேஸிங்கை தேர்ந்தெடுத்தது ஆப்கானிஸ்தான். புனே ஆடுகளம் ஓரளவுக்கு பேட்டர்களுக்கு ஒத்துழைக்கும் என்பதால், ஆப்கானிஸ்தான் குறைந்த ஸ்கோரில் இலங்கையை சுருட்ட முயலும்.

இலங்கை அணி பேட்டர்கள் நிசங்கா, கருணா ரத்னே ஆட்டத்தைத் தொடங்கினர். இதில் திமுத் கருணாரத்னேயின் ஒருநாள் வருகை மிகவும் வேடிக்கையானது.

கடந்த 2015ஆம் ஆண்டு கடைசியாக கருணா ரத்னே ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார், அவர் அதன்பின் விளையாடவில்லை. அவருக்கு 2019ஆம் ஆண்டு கேப்டன்ஷிப் வாய்ப்பு வழங்கப்பட்டது. 2020 முதல் 2021ஆம் ஆண்டு வரை 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கருணாரத்னே விளையாடியிருந்தார்.

ஆனாலும் அவரை அணியில் தேர்ந்தெடுத்து நிசாங்காவுடன் சேர்ந்து தொடக்க வீரராக களமிறக்க இலங்கை அணி முடிவு செய்தது. கடந்த உலகக்கோப்பைத் தொடரிலிருந்து 17 விதமான ஜோடிகளை உருவாக்கி தொடக்க ஆட்டக்காரர்களுக்கு பரிசோதித்துள்ளது இலங்கை அணி. இதில் கருணாரத்னே, நிசாங்கா ஜோடி 14வது முறையாக களமிறங்குகிறது.

 
இலங்கை அணி தடுமாற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஒவ்வொரு தருணத்திலும் ஆப்கானிஸ்தான் அணியினர் தங்கள் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் தொடக்கத்திலேயே பரூக்கியையும், சுழற்பந்துவீச்சாளர் முஜிபுர் ரஹ்மானையும் களமிறக்கி பந்துவீசச் செய்தது.

இலங்கை பேட்டர்கள் ரன் சேர்க்க கடும் சிரமப்பட்டனர். பருக்கி வீசிய 6வது ஓவரில் கருணாரத்னே 15 ரன்னில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார்.

பத்து ஓவர்கள் பவர்ப்ளே முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் சேர்த்திருந்தது. இதில் இலங்கை அணி 4 பவுண்டரிகள் மட்டுமே சேர்த்திருந்தது. குஷால் மென்டிஸ், நிசாங்கா இருவரும் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை எதிர்கொண்டு ரன் சேர்க்க மிகவும் சிரமப்பட்டதால் ரன்ரேட் மந்தமாக இருந்தது.

அசமத்துல்லா ஓமர்ஜாய் வீசிய 19வது ஓவரில் நிசாங்கா 46 ரன்கள் சேர்த்த நிலையில் குர்பாஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 62 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் சேர்த்தது.

 

மந்தமான பேட்டிங்

இலங்கை அணி தடுமாற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இலங்கை அணி ஆமை வேகத்தில் பேட் செய்ததே இந்த நெருக்கடிக்குக் காரணமாக அமைந்தது.

மூன்றாவது விக்கெட்டுக்கு சமரவிக்ரமா வந்து மென்டிஸுடன் சேர்ந்தார். சமரவிக்ரமா வந்தபின் ரன்களை வேகமாகச் சேர்த்தார். 22வது ஓவரில்தான் இலங்கை அணி 100 ரன்களை எட்டியது.

ரஷித் கான், முகமது நபி, ஓமர்ஜாய் என மாறி மாறி நெருக்கடியாகப் பந்துவீசி இலங்கை பேட்டர்களை திணறவிட்டனர். விக்கெட்டுகளை இழந்துவிடக்கூடாது என்ற நோக்கில் இலங்கை பேட்டர்கள் நிதானமாக பேட் செய்ததால் ரன் ரேட் மிகவும் மந்தமாகவே உயர்ந்தது.

ஆமை வேகத்தில் பேட் செய்த மென்டிஸ் 50 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்து முஜிபுர் ரஹ்மான் வீசிய 27வது ஓவரில் விக்கெட்டை இழந்தார். 3வது விக்கெட்டுக்கு மென்டிஸ், சமரவிக்ரமா ஜோடி 50 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

முஜிபுர் வீசிய 29வது ஓவரில் மற்றொரு விக்கெட்டும் வீழ்ந்தது. சமரவிக்ரமா 36 ரன்களுடன் பேட் செய்த நிலையில் முஜிபுர் ரஹ்மான் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி பெவிலியின் திரும்பினார். இலங்கை அணி மிகப்பெரிய விக்கெட்டை இழந்து தடுமாறியது.

முப்பது ஓவர்களில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்தது. 134 ரன்களில் மென்டிஸ் விக்கெட்டையும், 139 ரன்களில் சமரவிக்ரமா விக்கெட்டையும் 5 ரன்கள் இடைவெளியில் இலங்கை இழந்தது.

அசலங்கா, டி சில்வா ஜோடி 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியும் நிலைக்கவில்லை. 35வது ஓவரில், ரஷித் கான் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி டி சில்வா14 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களில் அசலங்கா 22 ரன்னில் பரூக்கி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அடுத்து களமிறங்கிய சமீரா ஒரு ரன் சேர்த்த நிலையில் ஜாத்ரனால் ரன் அவுட் செய்யப்பட்டார். 40 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 185 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 30 ஓவர்கள் முதல் 40 ஓவர்கள் வரை இலங்கை அணி, 41 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இலங்கை அணி இந்த உலகக்கோப்பைத் தொடரில் கடைசி 15 ஓவரில் அதன் ரன்ரேட் 5.78 என வைத்திருந்தது. இது மற்ற எந்த அணிகளையும்விட மிகக் குறைவானது.

 

ரஷித் கானுக்கு 100வது போட்டி

இலங்கை அணி தடுமாற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ரஷித் கான் இன்று தனது 100வது ஒருநாள் ஆட்டத்தில் விளையாடுகிறார்.

ரஷித் கான் இன்று தனது 100வது ஒருநாள் ஆட்டத்தில் விளையாடுகிறார். டி20 போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாளராகக் கருதப்படும் ரஷித் கான் ஒருநாள் போட்டிகளில் 20 ரன்களுக்கும் மேல் சராசரி வைத்துள்ளார்.

ஜிம்பாப்வே, நெதர்லாந்துக்கு அணிகளுக்கு எதிராகத்தான் இவர் பெரும்பாலான விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இந்த உலகக்கோப்பைத் தொடரில்கூட இங்கிலாந்துக்கு எதிராக ரஷித் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், அதில் 2 விக்கெட்டுகள் டெய்லெண்டர்களை வீழ்த்திக் கிடைத்தது.

ரஷித் கான் பந்துவீச்சு சராசரி 2023ஆம் ஆண்டில் 37 முதல் 47 ஆக மோசமாக இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில்கூட இலங்கையின் ரன் சராசரி 4.5 ஆக இருக்கும்போது, ரஷித் கான் ஓவரில் ரன் சராசரி 5.5 ஆக இருக்கிறது.

முதல் இன்னிங்ஸில் இலங்கையைப் பாடாய்ப்படுத்திய ஆப்கானிஸ்தான், தற்போது 242 என்ற இலக்குடன் பேட்டிங் செய்து வருகிறது. அவர்களது பந்துவீச்சை சமாளிக்க முடியாத இலங்கை அணி, ஆப்கன் வீரர்களின் பேட்டிங்கை கட்டுப்படுத்துவார்களா என்ற கேள்வியும் எழுகிறது.

https://www.bbc.com/tamil/articles/c4n814qz90po

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@ஈழப்பிரியன்

ஹ‌லோ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவா

 

அண்ண‌ எப்ப‌ அப்கானிஸ்தான் சிறில‌ங்கா ம‌ச் தொட‌ங்குது லொல்😁

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

5முறை ஆசிய‌ கோப்பை

2முறை உல‌க‌ கோப்பை தூக்கின‌ அணிக்கு 

 

உல‌க‌ கோப்பை போட்டியில் முத‌ல் முறை அப்கானிஸ்தான் அணி இல‌ங்கைய‌ தோக்க‌டிச்சுட்டு😁

அப்கானிஸ்தான் அணிக்கு வாழ்த்துக்க‌ள்

உங்க‌ள் வெற்றி ப‌ய‌ண‌ம் தொட‌ர‌ட்டும் 🥰🙏




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.