Jump to content

ரஷ்ய ஆக்கிரமிப்பினால் கிரைமியாவில் அடக்குமுறைக்குட்பட்டோரில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள்: உக்ரேன் ஜனாதிபதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய ஆக்கிரமிப்பினால் கிரைமியாவில் அடக்குமுறைக்குட்பட்டோரில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள்: உக்ரேன் ஜனாதிபதி

Published By: Sethu

21 May, 2023 | 12:23 PM
image

உக்ரேன் மீதான ரஷ்ய படை­யெ­டுப்பின் பயங்­க­ரங்­களை சில அரபுத் தலை­வர்கள் புறக்­க­ணிக்­கின்­றனர் என உக்ரேன் ஜனா­தி­பதி வொலோ­டிமிர் ஸெலென்ஸ்கி குற்றம் சுமத்­தி­யுள்ளார்.

சவூதி அரே­பி­யாவின் ஜெத்தா நகரில் ‍நேற்றுமுன்தினம் நடை­பெற்ற அரபு லீக் உச்­சி­மா­நாட்டில் உரை­யாற்­று­கையில் அவர் இவ்­வாறு குற்­றம்­சு­மத்­தினார்.

இந்த உச்­சி­மா­நாட்டில் ஆச்­ச­ரி­ய­க­ர­மாக, உக்­ரே­னிய ஜனா­தி­பதி ஸெலென்ஸ்­கியும் கலந்து­கொண்டார்.

உக்ரேன் மீதான ரஷ்ய படை­யெ­டுப்பின் பின்னர் மத்­திய கிழக்­குக்கு ஸெலென்ஸ்கி விஜயம் செய்­தமை இதுவே முதல் தட­வை­யாகும்.. ஜனா­தி­பதி ஸெலென்ஸ்கியின் 

பிரெஞ்சு அரச விமா­ன­மொன்றின் மூலம் போலந்­தி­லி­ருந்து சவூதி அரே­பி­யா­வுக்கு ஜனா­தி­பதி ஸெலென்ஸ்கி பய­ணித்தார் என சவூதி அரே­பி­யா­வுக்­கான பிரெஞ்சு தூதுவர் தெரி­வித்­துள்ளார்.

அரபு லீக் மாநாட்டில் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி ஸெலென்ஸ்கி, 2014 ஆம் ஆண்டு ரஷ்­யா­வினால் இணைத்­துக்­கொள்­ளப்­பட்ட கிரை­மி­யா­வி­லுள்ள முஸ்­லிம்­களை இந்த யுத்தம் எந்­த­ளவு பாதித்­துள்­ளது என விளக்­கினார். 

"ரஷ்ய ஆக்­கி­ர­மிப்­பினால் முதலில் கிரை­மி­யாவே பாதிக்­கப்­பட்­டது. ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட கிரை­மி­யாவில் இது­வரை அடக்­கு­மு­றைக்­குள்­ளான பெரும்­பா­லானோர் முஸ்­லிம்கள்" என ஜனா­தி­பதி ஸெலென்ஸ்கி கூறினார். 

"துர­திஷ்­ட­வ­ச­மாக உல­கிலும், இங்கும், உங்கள் மத்­தி­யிலும் உள்ள சிலர் சட்­ட­வி­ரோத இணைப்­பு­களை பாரா­த­வர்­களைப் போல் உள்­ளனர்'" என அவர் கூறிய­துடன் இவ்­வி­ட­யத்தில் நேர்­மை­யான பார்வை வேண்டும் என வலி­யு­றுத்­தினார்.

உக்­ரேனின் பிராந்­திய ஒரு­மைப்­பாட்­டுக்கு அளிக்கும் ஆத­ர­வுக்­காக சவூதி அரே­பிய முடிக்­கு­ரிய இள­வ­ரசர் மொஹம்மத் பின் சல்­மா­னுக்கு; ஜனாதிபதி ஸெலென்ஸ்கி நன்றி தெரிவித்தார். 'ரஷ்யாவின் சிறைக் கூண்டுகளிலிருந்து', மக்களை பாதுகாப் பதில் ஒன்றிணையுமாறும் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி வலியுறுத்தினார்.
 

https://www.virakesari.lk/article/155784

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் புலிகள் மீதும் மேற்குலகம் குற்றம் சுமத்திவிட்டு.. முஸ்லிம் நாடுகளை சுடுகாடாக்கியது. இவ்வளவு சீப்பான நிலைக்கு உக்ரைனை தள்ளி விட்டன.. மேற்கு நாடுகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை அலி  சபரியிடம்  கூறினால்  இலங்கை  அரசின்  மூலமாக  அந்த  முஸ்லிம்களுக்கு  ஏதாவது உதவி செய்வார்.

  • Haha 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.